Translate

Tuesday, 14 June 2016

யார் இந்த PJ ? -Rasmin MISc





பி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜெய்னுல் ஆபிதீன் தென்னிந்தியாவின் தொண்டி நகரில் பிறந்தவர்.


தமிழகத்தின் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.

அரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர். அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.

அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜெய்னுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.

கடந்த 2005ம் வருடம் இலங்கை அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்துக்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காக திரண்டார்கள்.

கொழும்பு, புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிட்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

பி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்?
---------------------------------------------------

பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதே நேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்கும் நிலை பி.ஜெயின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.

அப்படி இவர் என்ன தான் செய்தார்?

அனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?

ஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.

கடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.

கப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள். அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது. அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரைமட்டமாக்கும் நிலை உருவாகியது.

• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா?
• இறைவனுக்கு உருவம் உண்டா?
• இணை கற்பிப்பவர் யார்?
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா?
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – துத்துக்குடி

போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.

குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன.

• சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம்

• ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா ? சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு

போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள், ஷீயாக்கள், அஹ்லுல் குர்ஆன் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.

அரபியின் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன.

முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது.

• மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா?

போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது.

• பைபிள் இறைவேதமா?
• குர்ஆன் இறைவேதமே!
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம்.

போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும்.

கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா? என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ.

• இறைவன்இருக்கின்றானா?
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா?

போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக்களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.

இப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ.

அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயணத்தினால், பாதிப்பு அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இவருடைய அனைத்து விவாதங்களையும் ஆன்லைன் பி.ஜெ டாட் காம் என்ற தளத்தில் அனைவரும் பார்க்க முடியும்.

எழுத்துப் பணியில் ஜெய்னுலாப்தீன்
--------------------------------------------------

தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

• புரட்சி மின்னல்,

• அல்-ஜன்னத்,

• அல்-முபீன்,

• அந்-நஜாத்,

• ஏகத்துவம்,

• தீன்குலப் பெண்மணி

ஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.

“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜெய்னுலாப்தீன் அவர்கள். இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.

• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.

• accusations-and-answers

• அர்த்தமுள்ள இஸ்லாம்

• மாமனிதர் நபிகள் நாயகம்

• PROPHET MUHAMMAD THE MAN SUPREME

• அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்

• வருமுன் உரைத்த இஸ்லாம்

• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

• Does Islam snatch the Rights of Women?

• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

• வேதம் ஓதும் சாத்தான்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும்.

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா? என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும்.

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.

• இது தான் பைபிள்.

• இதுதான் பைபிள் ஆங்கிலம்.

• இயேசு இறை மகனா?

• Is jesus the son of god

• பைபிளில் நபிகள் நாயகம்.

• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)

• கப்ஸா நிலைக்குமா?

போன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார்.

ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா?” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா?” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார்.

இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

• பேய் பிசாசு உண்டா?

• இஸ்லாமியக் கொள்கை.

• இறைவனிடம் கையேந்துங்கள்.

• யாகுத்பா ஓர் ஆய்வு

• ஜின்களும் ஷைத்தான்களும்

• சுப்ஹான மவ்லித்

• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

• Was Allah’s Apostle Affected by Black Magic ?

• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

• தர்கா வழிபாடு

• திருமறையின் தோற்றுவாய்

• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

• கொள்கை விளக்கம்

• இறைவனைக் காண முடியுமா

• கியாமத் நாளின் அடையாளங்கள்

• தராவீஹ் ஓர் ஆய்வு

• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா

• குர்ஆன் மட்டும் போதுமா

• பிறை ஓர் விளக்கம்

• நபித்தோழர்களும் நமது நிலையும்

• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

• தொப்பி ஓர் ஆய்வு

• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது)

போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள் 
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்

• தொழுகை சட்டங்கள்.

• நோன்பு

• ஜகாத் ஓர் ஆய்வு

• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)

• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)

• நபிவழியில் நம் ஹஜ்

•குர்பானியின் சட்டங்கள்

• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

• ஜனாஸாவின் சட்டங்கள்

• நேர்ச்சையும் சத்தியமும்

• ஜனாஸா தொழுகை

• விலக்கப்பட்ட உணவுகள்

• சந்திக்கும் வேளையில்

• when-we-meet

• துஆக்களின் தொகுப்பு

• dua-book

• இஸ்லாமியத் திருமணம்

• islamic-marriage

மேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.

இந்த ரமழானில் தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இவர் உரையாற்றி வந்தார். இடையில் ஏற்பட்ட உடல் நிலை ஆரோக்கிய குறைவு காரணமாக அந்த உரையை ஜமாஅத்தின் மற்ற பிரச்சாரகர்கள் தொடர்கிறார்கள். சகோ. பி.ஜெ அவர்கள் உடல் நிலை சரியாகி இன்னும் அதிகமான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என இந்த ரமழான் மாதத்தில் பிரார்த்திப்போமாக!


[][][]

1 comment:

  1. Free and open-source tv games. - Videodl.cc
    With our free games and software, we can turn your gaming on youtube mp3 with the fastest and most powerful tools and applications. The more you

    ReplyDelete