ஒரு தத்துவஞானி பட்டப்பகலில் ஒரு அரிக்கன் விளக்கை ஏற்றிக் கொண்டு கடைத்தெருவில் எதையோ, யாரையோ தேடுவது போல சென்றுக்கொண்டிருந்தார்.
மக்களுக்கு பயங்கர ஆச்சரியம். அந்த ஞானியை பைத்தியமேன்றோ, முட்டாளென்றோ அழைக்க எவருக்கும் துணிவு வரவில்லை. அதிலொருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. அந்தப் பெரியவரை பார்த்து.. “என்ன தேடுகிறீர்கள்..?” என்று கேட்டான், கிண்டலாக. அதற்கவர், ‘’நான் மனிதனை தேடிக் கொண்டிருக்கிறேன்..! என்று சொன்னார். அது கேட்டு அங்கே இருந்த மக்களெல்லாம் அதிர்ந்தார்கள்.
அந்தப் பெரியவர் என்ன சொல்ல வருகிறார்..? அவரைச் சுற்றி கூடியவர்களெல்லாம் மனிதர்களில்லையா..?
ஆடை அணிந்திருப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லிவிட முடியுமா..? இரண்டுக் கால்களில் செங்குத்தாக நடப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? ஏதாவதொரு மத அடையாளங்களுடன் சுற்றித் திரிபவனை எல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? கடவுளுமில்லை.. பாப-புண்ணியங்களும் இல்லையென்று சொல்பவனெல்லாம் மனிதனென்று சொல்லி விட முடியுமா..?
கொலைகாரன், காமுகன், திருடன், நயவஞ்சகன், அயோக்கியன், இவர்களெல்லாம் தோற்றத்தில் மிருகம் மாதிரியா இருக்கிறார்கள்..?
மனிதனை ஏன் எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை..?
அதிலுள்ள சிக்கலே.. எல்லாப் பயல்களும் மனித ரூபத்தில் திரிவதால் தான்..
இதில் ஆத்திகனென்ன.. நாத்திகனென்ன..
[][][]
No comments:
Post a Comment