Translate

Showing posts with label திருக்குர்ஆன். Show all posts
Showing posts with label திருக்குர்ஆன். Show all posts

Thursday, 23 June 2016

இறைவனது பண்புகளாக குர்ஆன் குறிப்பிடும் 99 பெயர்கள்.!





"நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்," என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் – "அதனை மனனம் செய்தவர்" – என்று வந்துள்ளது. (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)

"அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான –பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.!'’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6410. அபூஹூரைரா (ரலி).

99 Names of Allah with English & Tamil meanings...

1 Allah (الله) The Greatest Name -

2 Ar-Rahman (الرحمن) The All-Compassionate- அளவற்றஅருளாளன்



3 Ar-Rahim (الرحيم) The All-Merciful-நிகரற்ற அன்புடையோன்



4 Al-Malik (الملك) The Absolute Ruler-உண்மையான அரசன்



5 Al-Quddus (القدوس) The Pure One-தூய்மையாளன்



6 As-Salam (السلام) The Source of Peace-சாந்தி அளிப்பவன்



7 Al-Mu'min (المؤمن) The Inspirer of Faith-அபயமளிப்பவன்



8 Al-Muhaymin (المهيمن) The Guardian-இரட்சிப்பவன்



9 Al-Aziz (العزيز) The Victorious-மிகைத்தவன்



10 Al-Jabbar (الجبار) The Compeller-அடக்கியாள்பவன்



11 Al-Mutakabbir (المتكبر) The Greatest-பெருமைக்குரியவன்



12 Al-Khaliq (الخالق) The Creator-படைப்பவன்



13 Al-Bari' (البارئ) The Maker of Order-ஒழுங்கு செய்பவன்



14 Al-Musawwir (المصور) The Shaper of Beauty-உருவமைப்பவன்



15 Al-Ghaffar (الغفار) The Forgiving-மிக மன்னிப்பவன்



16 Al-Qahhar (القهار) The Subduer-அடக்கி ஆள்பவன்



17 Al-Wahhab (الوهاب) The Giver of All-கொடைமிக்கவன்



18 *Ar-Razzaq (الرزاق) The Sustainer *-உணவளிப்பவன்



19 Al-Fattah (الفتاح) The Opener-வெற்றியளிப்பவன்



20 Al-`Alim (العليم) The Knower of All-நன்கறிந்தவன்



21 Al-Qabid (القابض) The Constrictor-கைப்பற்றுபவன்



22 Al-Basit (الباسط) The Reliever-விரிவாக அளிப்பவன்



23 Al-Khafid (الخافض) The Abaser-தாழ்த்தக்கூடியவன்



24 Ar-Rafi (الرافع) The Exalter-உயர்வளிப்பவன்



25 Al-Mu'izz (المعز) The Bestower of Honors - கண்ணியப்படுத்துபவன்



26 Al-Mudhill (المذل) The Humiliator-இழிவுபடுத்துபவன்



27 As-Sami (السميع) The Hearer of All-செவியுறுபவன்



28 Al-Basir (البصير) The Seer of All-பார்ப்பவன்



29 Al-Hakam (الحكم) The Judge-அதிகாரம் புரிபவன்



30 Al-`Adl (العدل) The Just-நீதியாளன்



31 Al-Latif (اللطيف) The Subtle One-நுட்பமானவன்



32 Al-Khabir (الخبير) The All-Aware-உள்ளூர அறிபவன்



33 Al-Halim (الحليم) The Forbearing-சாந்தமானவன்



34 Al-Azim (العظيم) The Magnificent-மகத்துவமிக்கவன்



35 Al-Ghafur (الغفور) The Forgiver and Hider of Faults-மன்னிப்பவன்



36 Ash-Shakur (الشكور) The Rewarder of Thankfulness-நன்றி அறிபவன்



37 Al-Ali (العلى) The Highest-மிக உயர்ந்தவன்



38 Al-Kabir (الكبير) The Greatest-மிகப்பெரியவன்



39 Al-Hafiz (الحفيظ) The Preserver-பாதுகாப்பவன்



40 Al-Muqit (المقيت) The Nourisher-கவனிப்பவன்



41 Al-Hasib (الحسيب) The Accounter-விசாரணை செய்பவன்



42 Al-Jalil (الجليل) The Mighty-மகத்துவமிக்கவன்



43 Al-Karim (الكريم) The Generous-சங்கைமிக்கவன்



44 Ar-Raqib (الرقيب) The Watchful One-காவல் புரிபவன்



45 Al-Mujib (المجيب) The Responder to Prayer-அங்கீகரிப்பவன்



46 Al-Wasi (الواسع) The All-Comprehending-விசாலமானவன்



47 Al-Hakim (الحكيم) The Perfectly Wise-ஞானமுள்ளவன்



48 Al-Wadud (الودود) The Loving One-நேசிப்பவன்



49 Al-Majid (المجيد) The Majestic One-பெருந்தன்மையானவன்



50 Al-Ba'ith (الباعث) The Resurrector-மறுமையில் எழுப்புபவன் 

51 Ash-Shahid (الشهيد) The Witness -சான்று பகர்பவன்



52 Al-Haqq (الحق) The Truth-உண்மையாளன்



53 Al-Wakil (الوكيل) The Trustee-பொறுப்புள்ளவன்



54 Al-Qawiyy (القوى) The Possessor of All Strength-வலிமை மிக்கவன்



55 Al-Matin (المتين) The Forceful One-ஆற்றலுடையவன்



56 Al-Waliyy (الولى) The Governor-உதவி புரிபவன்



57 Al-Hamid (الحميد) The Praised One-புகழுடையவன்



58 Al-Muhsi (المحصى) The Appraiser- கணக்கிடுபவன்



59 Al-Mubdi' (المبدئ) The Originator-உற்பத்தி செய்பவன்



60 Al-Mu'id (المعيد) The Restorer-மீளவைப்பவன்

61 Al-Muhyi (المحيى) The Giver of Life-உயிரளிப்பவன்



62 Al-Mumit (المميت) The Taker of Life-மரிக்கச் செய்பவன்





63 Al-Hayy (الحي) The Ever Living One-என்றும் உயிரோடிருப்பவன்



64 Al-Qayyum (القيوم) The Self-Existing One-உள்ளமையுள்ளவன்,என்றும் நிலையானவன்,



65 Al-Wajid (الواجد) The Finder-பெருந்தகை மிக்கவன்



66 Al-Majid (الماجد) The Glorious-தனித்தவன்



67 Al-Wahid (الواحد) The One, the All Inclusive, The Indivisible-அவன் ஒருவனே



68 As-Samad (الصمد) The Satisfier of All Needs-தேவையற்றவன்



69 Al-Qadir (القادر) The All Powerful-ஆற்றலுள்ளவன்



70 Al-Muqtadir (المقتدر) The Creator of All Power-திறமை பெற்றவன்



71 Al-Muqaddim (المقدم) The Expediter-முற்படுத்துபவன்



72 Al-Mu'akhkhir (المؤخر) The Delayer-பிற்படுத்துபவன்



73 Al-Awwal (الأول) The First-ஆதியானவன்



74 Al-Akhir (الأخر) The Last-அந்தமுமானவன்



75 Az-Zahir (الظاهر) The Manifest One-பகிரங்கமானவன்



76 Al-Batin (الباطن) The Hidden One-அந்தரங்கமானவன்



77 Al-Wali (الوالي) The Protecting Friend-அதிகாரமுள்ளவன்



78 Al-Muta'ali (المتعالي) The Supreme One-மிக உயர்வானவன்



79 Al-Barr (البر) The Doer of Good-நன்மை புரிபவன்



80 At-Tawwab (التواب) The Guide to Repentance-மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்



81 Al-Muntaqim (المنتقم) The Avenger-பழி வாங்குபவன்



82 Al-'Afuww (العفو) The Forgiver-மன்னிப்பளிப்பவன்



83 Ar-Ra'uf (الرؤوف) The Clement-இரக்கமுடையவன்



84 Malik-al-Mulk (مالك الملك) The Owner of All-அரசர்களுக்கு அரசன்



85 Dhu-al-Jalal wa-al-Ikram(ذو الجلال و الإكرام)The Lord of Majesty and Bounty-கண்ணியமுடையவன் சிறப்புடையவன்

86 Al-Muqsit (المقسط) The Equitable One-நீதமாக நடப்பவன்



87 Al-Jami' (الجامع) The Gatherer-ஒன்று சேர்ப்பவன்



88 Al-Ghani (الغنى) The Rich One-சீமான்-தேவையற்றவன்



89 Al-Mughni (المغنى) The Enricher-சீமானாக்குபவன்



90 Al-Mani'(المانع) The Preventer of Harm-தடை செய்பவன்



91 Ad-Darr (الضار) The Creator of The Harmful-தீங்களிப்பவன்



92 An-Nafi' (النافع) The Creator of Good-பலன் அளிப்பவன்



93 An-Nur (النور) The Light-ஒளி மிக்கவன்



94 Al-Hadi (الهادي) The Guide-நேர்வழி செலுத்துபவன்



95 Al-Badi (البديع) The Originator-புதுமையாக படைப்பவன்



96 Al-Baqi (الباقي) The Everlasting One-நிரந்தரமானவன்



97 Al-Warith (الوارث) The Inheritor of All-உரிமையுடைவன்



98 Ar-Rashid (الرشيد) The Righteous Teacher-வழிகாட்டுபவன்



99 As-Sabur (الصبور) The Patient One-மிகப்பொறுமையாளன்


நமது இந்து நண்பர்கள் இறைவனின் பண்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு உருவத்தைக் கற்பித்து விட்டார்கள். எனவே தான் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள் உண்டானது. இந்து மதத்தை நன்கு ஆய்வு செய்தவர்கள் ஏகத்துவ சிந்தனையில்தான் இருப்பர்.

நன்றி:  Nazeer Ahamed





[][][]

Tuesday, 14 June 2016

எழுதுகோலால் எழுத கற்றுக்கொடுத்தது யார்.?






மனிதன் ஒரு பிரத்தியேக படைப்பு. நம்முடைய எண்ணங்களை பரிமாறிக் கொள்கிற பேசும் திறன் எப்படி மனிதனுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள நுண்ணறிவோ.. அதே போல எழுதுகோல் மூலமாக பரிமாறிக் கொள்வதும் ஒரு நுண்ணறிவு. இது மனிதனுக்கு மாத்திரமானது. இதனை வழங்கியவன், நமக்கு காணும்திறனை, செவிப்புலனை வழங்கிய இறைவன். அது தான் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, வீட்டை கொத்தனார் தானே கட்டினான்.? ஏன் நீங்கள் கட்டிய வீடு என்கிறீர்கள்..? உங்கள் குழந்தையை உங்கள் மனைவி தானே மிகுந்த சிரமத்திற்கிடையே பெற்றெடுக்கிறார். ஆண்களாகிய நீங்கள் ஏன் நான் பெற்ற குழந்தை என்கிறீர்கள்..?

உங்கள் சாந்திமிஸ்ஸும், தமிழ்வாத்தியாரும் மனிதனல்லாத ஜீவராசிகளுக்கு எழுத்தறிவு பயிற்றுவிக்க முடியுமா..?


-பூமராங் 


[][][]

Sunday, 29 May 2016

மதம் மாறினால் மரண தண்டனையா?





இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது சட்டமா...? இது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன..?ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக,



''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர் (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)

இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை. ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா... கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா... அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன. 

உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..? மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன? இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும். மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியல்ல. ஹதீஸ்களில் வரும் வாசகங்களை மட்டும் கருத்தில் கொண்டு எந்த சட்டமும் வகுக்க முடியாது. மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இந்த மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும். மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும், அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும். உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணியவில்லை. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.

وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاء فَلْيُؤْمِن وَمَن شَاء فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا


(நபியே!) நீர் கூறுவீராக "இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அல் குர்ஆன் 18:29)

இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..

ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்தவர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய சட்டமாக இருக்க முடியும்?

إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ

எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள். (அல் குர்ஆன் 3:90)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில், இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.

إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ


எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். 
(அல் குர்ஆன் 3:91)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான். ஈமான் கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.." என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை விளங்கலாம்.


இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற "ஆழமான ஆய்வற்ற கருத்தால்" இஸ்லாம் குறித்து பலர் (குறிப்பாக மாற்று மதத்தவர்கள்) தவறான நம்பிக்கையை கொண்டு விடுகிறார்கள். சிந்தனை ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்களை வென்றெடுக்க வந்த ஒரு மார்க்கத்தில், "இஸ்லாத்தை விட்டு வெளியேறினால கொல்லப்பட வேண்டும்" போன்ற தவறான ஆளுமைச் சட்டங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அளவிலான உரிமைகளில் ஒன்று இஸ்லாத்தில் கடைசி வரை நீடிப்பது சம்பந்தப்பட்டதாகும். அறிவார்ந்த முறையில் இஸ்லாத்தை விளங்கி ஏற்பதுதான் இஸ்லாம் மக்களுக்கு முன் வைக்கும் அறிவுரையாகும். விளங்கி ஏற்றப்பின் அதிலிருந்து வெளியேறினால் அது இறைவனையும் இறைவனின் மார்க்கத்தையும் கேலி செய்வதாகி விடுவதால் இதன் தண்டனையை மதம் மாறியவர்கள் மரணத்திற்கு பிறகு நிரந்தரமாக சுவைப்பார்கள். மாறாக "மதம் மாறியதற்காக" அவர்களுக்கு தண்டனை வழங்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை. நாம் முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அடுத்த வசனங்களையும் படியுங்கள்.

إِنَّ الَّذِينَ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّمْ يَكُنِ اللّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلاً


எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)

இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்......... இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். 

*நம்பிக்கைக் கொள்கிறார்
*பிறகு மறுக்கிறார்
*மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
*அதையும் மறுத்து வெளியேறுகிறார்

பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது. 'கொல்லப்பட வேண்டும்" என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.

كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ


அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
(அல் குர்ஆன் 3:86)


இந்த வசனத்தையும் ஊன்றி கவனிப்போம். ஈமான் கொண்டு நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் அதை தெளிவாக இறைவன் சொல்ல வேண்டிய இடம் இது. ஆனால் கொல்லப்படுவதைப் பற்றி சொல்லாமல் அவர்கள் நேர்வழிக்கு அப்பாற்பட்டவர்கள், இறைவன் அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான் என்று எச்சரிக்கிறான். அதாவது இஸ்லாத்தை ஏற்று பிறகு வெளியேறினால் நீ உயிரோடு இருக்கலாம் உனக்கு வாழ்நாள் அவகாசம் அளிக்கபட்டாலும் அடுத்து நீ நேர்வழிப் பெறும் வாய்ப்பு இல்லை என்பதை இந்த வசனம் கூட்டிக் காட்டுகின்றது.

இந்த மார்க்கம் மனிதர்கள் மீது திணிக்கப்படுவதற்காக அருளப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள இன்னும் ஆதாரங்களைப் பார்த்து விட்டு நாம் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள "கொல்லப்பட வேண்டும்" என்ற ஹதீஸின் விளக்கம் என்னவென்பதை காண்போம்.


இஸ்லாத்தை ஏற்று பின்னர் அதிலிருந்து விலகியவர்களை கொல்ல வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை சொல்லி வருகிறோம். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்துமே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தை மறுக்கின்றது.

அடுத்த வசனம்.

لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ


(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது (அல்குர்ஆன் 2:256)

மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படையை விளக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரித்தறிவிக்கப்பட்டு தெளிவாகி விட்டதால் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமுமில்லை என்பது இந்த வசனம் முன் வைக்கும் அறிவார்ந்த வாதம்.

இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவரை "நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் கொல்லப்படுவாய்" என்று மிரட்டுவது அவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் வைக்கும் காரியமாகும். பிறரது மிரட்டலுக்கு பயந்து, கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இஸ்லாத்தில் இருப்பவர்களால் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் எப்படிப்பின்பற்ற முடியும். 

உயிருக்கு பயந்து நிர்பந்தமான நிலையில் இஸ்லாத்தின் உள்ளே இருக்கும் ஒருவரிடம் இஸ்லாம் எந்த மாற்றத்தையும் செய்து விடப் போவதில்லை. நேர்வழியையும், வழிகேட்டையும் பிரித்தறிவித்து விட்டு இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை என்று இறைவன் குறிப்பிட்டு விட்டதால் அவன் மார்க்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை.மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்ற சட்டமே ஒருவர் வெளியேறினால் வெளியேறிக் கொள்ளலாம் என்ற அனுமதியை முன் வைக்கின்றது. அவரை கொல்லும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் - நயவஞ்சகர்கள் - என்று இஸ்லாம் இவர்களை அடையாளப்படுத்துகின்றது. இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரைக் கூட நபி(ஸல்) அவர்கள் "கொன்றார்கள்" என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அப்படியானால்,

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய ஹதீஸின் விளக்கம் தான் என்ன..?மதம் மாறினால் மரணதண்டனை பொது சட்டமா? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 4

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போதுவான ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது "இது ஒரு முரட்டு மார்க்கம்" என்ற பழிசொல்லிலிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுகின்றது.உபதேசம், பிரச்சாரம் செய்வதில் கூட நளினத்தை, இலகுவை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு மார்க்கத்தில் மனிதனின் சிந்தனை சுதந்திரமும், வாழ்வியல் சுதந்திரமும் வலுக்காட்டாயமாக அகற்றப்பட்டு இருக்குமா என்பதை "கொல்லப்பட வேண்டும்" என்ற கருத்துள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து எந்த ஒரு வசனத்தையும் முன் வைக்க முடியாதவர்கள் - கொல்லப்படுவதை மறுக்கும் வசனங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் - ஹதீஸ்களின் பக்கம் திரும்பி "ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கின்றது" என்று தங்கள் வாதத்தை வைக்கத் துவங்கி விடுகின்றார்கள்.ஹதீஸ்களிலிருந்து ஒரு வாதத்தை நாம் எடுத்து வைக்குமுன் ஒன்றை மிக ஆழமாக நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், குர்ஆனை விளக்குவதற்கும், குர்ஆனாக வாழ்வதற்கும் தான் அனுப்பப்பட்டார்களே தவிர குர்ஆன் வேறு, தான் வேறு என்று வாழ்ந்துக் காட்டுவதற்காக அல்ல. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பு "நபி(ஸல்) குர்ஆன் விளக்கவுரையாகவே வாழ்ந்துள்ளார்கள்" என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்லி விடுகின்றது. எனவே குர்ஆனுக்கு முரண் பட்டு ஒரு கருத்தை நபி(ஸல்) சொல்லி இருப்பார்கள் என்று நாம் கற்பனைக் கூட செய்யக் கூடாது.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை நபி(ஸல்) பொதுவான கருத்தாக வைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்த கருத்தை குர்ஆன் அடியோடு மறுக்கின்றது.அப்படியானால் கொல்லப்பட வேண்டும் என்ற ஹதீஸின் நிலவரம் என்ன..?


மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 5

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொது சட்டமல்ல. இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இஸ்லாதத்தை விட்டு வெளியேறியதற்காக எந்த இஸ்லாமிய அரசாங்கமும் மரண தண்டனை விதிக்காது - விதிக்கக் கூடாது.நபி(ஸல்) காலத்தில் இத்தகைய எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. அப்படியானால் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டவர்களைக் கொல்லுங்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதே என்ற சந்தேகம் இப்போது மி்ச்சமிருக்கின்றது.

‏ابن عباس ‏ ‏فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏من 
بدل دينه فاقتلوه

[ஆன்லைனில் இந்த ஹதீஸை பார்க்க]

''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் - புகாரி)

‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث ‏ ‏الثيب ‏ ‏الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.


3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன்(அப்தல்லாஹ் - முஸ்லிம்)

(ஆன்லைனில் இந்த ஹதீஸின் மூலம்)

‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان ‏ ‏محصن ‏ ‏يرجم ‏ ‏أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ‏ ‏ينفى من الأرض

''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)


மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.

புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.

//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல. வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும். இதை தெளிவாக்கும் விதமாகவே "அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்" என்று நபி(ஸல்) குறிப்பிடுகிறார்கள்.

நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன.

மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி) என்று நபி(ஸல்) கூறி இருக்க மாட்டார்கள். நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான்.நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

"நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது. நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو


قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا ‏ ‏بويع ‏ ‏لخليفتين فاقتلوا الآخر منهما
ஹதீஸ்களை கவனமாக ஆராயும் போதும், அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதும் இந்த முடிவுக்கே நம்மால் வர முடிகின்றது.

குழப்பம் ஏற்படுத்துதல் என்று ஒன்று நடக்கவில்லை என்றால் அவரும் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவர்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கான குர்ஆன் வசனங்களை நாம் முந்தைய தொடர்களில் பார்த்தோம்.

குழப்பம் கொலையைவிட கொடியது. 

குழப்பம் கொலையை விட பெரியது என்று குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ள போது குழப்பம் செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை விளங்கலாம். குழப்பம் ஏற்படுத்தும் தனி மனிதனின் உயிரை விட நாட்டு மக்களின் நிம்மதியும், அமைதியும் முக்கியம் என்பதால், இஸ்லாமிய அரசுகள் இதை செயல்படுத்தும்.அல்லாஹ் எல்லாவற்றையும் நுணுககமாக அறிபவன் என்பதை நம்புகிறோம்.


நன்றி :
http://www.thuuyavali.com/2012/12/blog-post_11.html



[][][]

Saturday, 30 April 2016

இஸ்லாத்திலிருந்து வெளியேறும் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களா??




இஸ்லாத்திலிருந்து வெளியேறும் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களா.?


----------------------------------------------------------------------------



*இஸ்லாம் மனிதனுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது; மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை! 

[திருக்குர்ஆன் 2:256] "மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமில்லை.." 


[திருக்குர்ஆன் 
18:29] "நீர் கூறுவீராக: உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள இது சத்தியமாகும்; ஆகவே, எவர் நாடுகிறாரோ அவர் விசுவாசிக்கட்டும்; இன்னும் எவர் நாடுகிறாரோ அவர் நிராகரித்துவிடட்டும்.." 


[திருக்குர்ஆன் 
10:99] "மேலும் உமது இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவருமே முற்றிலும் விசுவாசித்திருப்பாரர்கள்; எனவே மனிதர்களை_ அவர்கள் விசுவாசிகளாகிட வேண்மென்று நீர் நிர்பந்திருக்கிறாரரா?" 


இந்த வசனங்கள் மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்பதை தீர்க்கமாக தெரிவிக்கின்றன!

. . . .


*ஒருவர் குழப்பம் விளைக்காமல் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் தண்டனை இல்லை!


[திருக்குர்ஆன் 
4:137]"நிச்சயமாக விசுவாசங்கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னரும் நிராகரித்து, பின்னரும் நிராகரிப்பை அதிகப்படுத்தி கொண்டனரே அத்தகையோர்_ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டுபவனாகவும் இல்லை." 

இந்த வசனத்தின்படி, சிலரை பற்றி இறைவன் கூறும் போது, 2 தடவை இஸ்லாத்திருந்து வெளியேறியோர் என்கிறான்! 

இஸ்லாத்திலிருந்த வெளியேறிய ஒரே காரணத்துக்காக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் 2வது தடவை இஸ்லாத்திலிருந்து வெளியேற முடியுமா?? 


Saheeh Bukhari (tamil) Book 29 Number 1883, (english) 1784 & Muslim 1383 


"ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறுநாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கபட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கிவிடுங்கள்! என்று கேட்டார். நபி (ஸல்) 3 முறை அதை மறுத்தார்கள். "மதீனா உலையை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்று திகழ்வார்கள்."

இங்கே இஸ்லாத்திலிருந்து வெளியேறிய அந்நபரை நபி கொல்ல கட்டளையிடவில்லை! 

இதன்படி இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒரே காரணத்திற்காக எவரும் கொல்லப்படுவதில்லை!! 

. . . . .

*இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவரை கொல்ல வேண்டுமானால், அந்த நபர் இஸ்லாமிய ஜமாத்தில் பிரிவினையை ஏற்படுத்தியவராக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் செய்தவராக இருக்கவேண்டும்!! 

¤ஒரு முஸ்லிமை மூன்று காரணங்களுக்காகவே தவிர கொல்லக்கூடாது. அதில் மூன்றாவது

(والتارك لدينه المفارق للجماعة)

மார்க்கத்தை விட்டு வெளியேறி ஜமாத்தில் பிரிவினையை ஏற்படுத்தல். 

(அறிவிப்பவர் ஆயிஷா (r).  
Muslim 1676 (eng))


இதன்படி கூட்டமைப்பை பிரித்து மேயும் முர்தத்தையே கொல்ல வேண்டும்  என்று இதன் மூலம்  விளங்கலாம்..!!


¤இதே போன்ற செய்தியில் ஒரு முஸ்லிமை கொல்லும் மூன்றாவது காரியம்! 

(رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله)

ஒரு மனிதர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் யுத்தம் செய்தல். 

(Sunan Nasai book 37 number 4048 Sunan abu dawud book 38 number 4339) 


இவற்றின்படி ஒரு மதம் மாறியவரை கொல்ல வேண்டுமானால், அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக யுத்தம் செய்தவனாக இருக்க வேண்டும்!! 


மதம் மாறிய ஒரே காரணத்துக்காக ஒருவரை கொல்ல முடியாது! அவர் கொல்லப்பட வேண்டுமானால், அவர் கூட்டமைப்பில் பிரிவினை ஏற்படுத்துபவராகவோ அல்லது இஸ்லாத்திற்கு எதிராக யுத்தம் பண்ணுபவராக இருக்க வேண்டும்!! 

. . . . . .


*இஸ்லாத்திலிருந்து வெளியேறி அதோடு நின்றுவிடாமல் இவற்றை செய்த ஒருவருக்கு , ஒரு முஸ்லிம் அடைக்கலம் கொடுத்தால் அவரும் பாதுகாக்க படுவார்!! 


(كان عبدالله بن سعد بن أبي سرح يكتب لرسول الله <صلى > فأزله الشيطان فلحق بالكفار فأمر به رسول الله <صلى> أن يقتل يوم الفتح فاستجار له عثمان بن عفان فأجاره رسول الله <صلى>) 


அப்துல்லாஹ் பின் ஸஅது பின் அபூஸர்ஹ் இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு எழுதி கொண்டிருந்தார். ஆனால் ஷைத்தான் அவரை வஞ்சித்துவிட அவர் நிராகரிப்போரிடம் இணைந்து கொண்டார். மக்கா வெற்றியின் நாளில் அல்லலாஹ்வின் தூதர் அவரை கொன்றுவிடும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் உஸ்மான் பின் அப்பான் அவருக்காக அபயம் தேடினார். எனவே அல்லாஹ்வின் தூதர் அபயம் வழங்கினார்கள்.

(sunan abu dawud book 38 number 4358) 


இதன்படி கொல்லப்பட வேண்டிய இஸ்லாத்திலிருந்து வெளியேறியவருக்கு ஒரு முஸ்லிம் அபயம் கொடுத்தாலும் அபயம் பெறுவார் என்று இதன் மூலம் விளங்கலாம்!! 

. , . . .



*இஸ்லாத்தை ஏற்பது போல அதை நிராகரிக்கவும் ஒருவருக்கு சுதந்திரமுண்டு! 

*ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒரே காரணத்திற்காக அவரை கொல்வதற்கு குர்ஆனோ ஏற்றுகொள்ளத்தக்க சரியான ஹதீஸ்களோ கூறவில்லை.

*ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி அதோடு நின்றுவிடாமல் இஸ்லாத்திற்கெதிராக யுத்தம் செய்தாலோ அல்லது கூட்டமைப்பில் பிரிவினை ஏற்படுத்தினாலோ அப்போது அவர் கொல்லப்பட வேண்டியவர்! 


*இப்படிப்பட்ட மதம் மாறியவனுக்கு ஒரு உண்மையான முஸ்லிம் அபயம் கொடுத்தால் அவன் பாதுகாக்கப்படுவான்!!

- - - - 

 நபியவர்கள் காலத்தில் 
இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவப்பட்டிருந்தது. 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க பல நிராகரிப்போர் நேரம் பார்த்து காத்திருந்தனர். இஸ்லாத்திலிருந்து வெளியேறி இஸ்லாமிய அரசின் எதிரிகளோடு சேருவார் என்றால், எதிரகளுக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன. இப்படிபட்ட துரோகிகளை கொல்வது மிக சரியானதே! 


இதை அமெரிக்கா, இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளன!!


உதாரணமாக அமேரிக்காவில் வாழும் ஒருவன் அமெரிக்காவை தாக்க அதன் எதிரிகளுக்கு இரகசியங்களை வழங்கினால் அவனை அமெரிக்கா என்ன செய்யும்?
 

இந்தியாவின் இரகசியங்களை தீவிரவாதிகளுக்கு ஒரு படைவீரன் வழங்கினால் அவனை என்ன செய்வார்கள்??


இதை இஸ்லாம் செய்தால் தவறாம்.. இந்த நாடுகள் செய்தால் நியாயமாம்!!


நன்றி: இஸ்லாமும் கிறிஸ்தவமும். 



[][][]

Wednesday, 6 April 2016

மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!






மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!

------------------------------------------------------------

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.


ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தினத் தந்தி
05-04-2016

-----------------------------------------------------------

'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'

-குர்ஆன் 37: 143,144,145

யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.

அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.

ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.

மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.

இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.

திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.

ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.

திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.

ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.

இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.




[][][]