சனாதன பார்ப்பன வெறியன் வாஞ்சிநாதன் அய்யர் சுதந்திரப் போராட்ட தியாகியா.?
வீர வணக்கங்கள் சனாதன பார்ப்பன வெறியன் வாஞ்சிநாதனுக்கா அல்லது மாமனிதன் ஆஷ்துரைக்கா?
இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள்.
அரசியல், அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்.?
"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலே ஆஷ் எனும் கயவன் திருநெல்வேலி கலெக்டராக இருந்த போது இந்தியர்கள் மீது மேற்கொண்ட கொடிய அடக்குமுறை கண்டு வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன் எனும் தேசபக்தி மிகுந்த பார்ப்பன இளைஞன் மணியாச்சி ரயில் நிலையத்தில் அந்த ஆஷ் கயவனை சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து போனான்.!"
-என்று அந்த பார்ப்பன இளைஞனின் வீரத்தை மெச்சி அவனுடைய நினைவு தினத்திலே பத்திரிக்கைகள் எல்லாம் அவனை பெருமையுடன் நினைவு கூர்வதைக் கண்டு அந்த வீர வாஞ்சியைப் பற்றி தெரிந்து கொள்ள பழைய சேதிகளை எல்லாம் புரட்டி தேடிப் பார்த்தால் அவை வேறு ஒன்றைத் தெரிவிக்கின்றனவே.!
பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.
மேலும் அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் தனது "தமிழன்" பத்திரிக்கையில் "சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்.!” என்பதாக அயோத்திதாச பண்டிதர் குறிப்பிட்டதை கவனிக்கலாம்.
.
''குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.
குற்றால அருவிகளில் சாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ் என்பது நம்மில் எத்தணை பேருக்கு தெரியும்.?
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு.
ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைப்பயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர், காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு, "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை'' என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்கிறான்.
ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து, ''நீ போய் பார்த்து வா.!" என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து,
"மொத பிரசவம் துரை. சின்ன பொண்ணு. ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம் எங்கிட்டு துரை பொழைக்க போகுது.!" என்றான்.
"ஏன். மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே.!" என்று துரை கேட்க , "அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க. அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது.?" என்றான் முத்தா ராவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறார்.
என்ன விடயம் என்பதைச் சொல்லி விட்டு ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தான்.
மருத்துவமனை செல்ல அக்கிரஹாரத்தை தாண்டி தான்
வண்டி
சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டு வண்டி மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப் போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விட மறுக்கிறார்கள்.
வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்து விடுவோம் என எச்சரிக்கிறார்கள்.
வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் .
இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்கிறான் ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்கிறார்கள்.
வழி விட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே, வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார்.
மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கபடுகிறது.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன்.
அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,
சனாதான காவலனாக, மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.
இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவணக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது.
சரி வாஞ்சி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தானே, அது என்ன கூறுகிறது என்று பார்த்தால்..
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”
1911-ம் ஆண்டு ஜீன் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தின் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கலெக்டர் ஆஷ்-ஐ சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன், ஆஷ் கொலைக்கான காரணமாக தன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த ஆவணமே மேற்கண்ட கடிதம்.
ஆக, இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல, இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது,
மாபெரும் வீரனாக, புரட்சியாளனாக, சுதந்திர தாகம் கொண்டவனாக விடுதலைப் போரில் வெள்ளையரின் அநீதி கண்டு கொதித்தெழுந்தவனாக வாஞ்சிநாதனை உருவகப்படுத்தி இது நாள் வரையிலும் வரலாறுகள் எழுதப்பட்டு வந்து கொண்டிருந்தன.
தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஆஷ்-ன் கொலையே முதலும் கடைசியுமானது.
இக்கடிதத்தின் பின்னணியில் பார்த்தோமானால் சுதந்திரம் என்பதை விட சனாதனமும், ”எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்” எனும் வரிகள் வெள்ளையர்களின் ஆளுகையிலிருந்த இந்த தேசத்தை மீண்டும் பிராமணீய ஆட்சிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கையே முன்னணியில் நிற்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
”கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை” எனும் வரிகள் மாட்டுக்கறி உண்ணும் உழைக்கும் வர்க்கத்தினரின் மீதான உச்சபட்ச வெறுப்பை உமிழும் இடமாகவும், இன்றளவும் திட்டுவது என்றால் கூட குறிப்பிட்ட சிலசாதிப் பெயர்களை பயன்படுத்தி திட்டும் வழக்கத்தின் முன்னோடியாக ஜார்ஜ்-ஐ பஞ்சமனாக வரிந்து எழுதியதில் காண முடிகிறது.
புஷ்யமித்ர சுங்கன் துவங்கி காலந்தோறும் பிராமணீயம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கொலை செய்யவும் சூழ்ச்சிகள் செய்யவும், தேவைகளை பொறுத்து தன் எதிரிகளுடன் இணங்கியும், எதிர்த்தும், வளைந்து நெளிந்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதே வரலாறு.
ஆனால் எழுதப்பட்ட வரலாறுகள் பெரும்பாலும் பிராமணீயத்திற்கு ஆதரவாகவே எழுதப்பட்டு நம்மை நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
சரிங்க, என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரன் நம்மள அடிமைப்படுத்திதானே வச்சிருந்தான், அதனால அவன கொன்னது புரட்சி தானே என்று நீங்கள் நியாயப்படுத்த முயலலாம்.
ஆனால் காலனி ஆட்சி நிலை கொள்வதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இங்கே உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் நாய்களை விட பூனைகளை விட பன்றிகளை விட தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதே நீங்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் நிதர்சனமான உண்மை.
அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் சம்மாக நடத்த வேண்டும் என கலெக்டர் ஆஷ் வலியுறுத்தியதாக தெரிகிறது.
வ.உ.சி யை கைது செய்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கை என்று காலப் போக்கில் நம்ப வைக்கப்பட்டாலும் வ.உ.சி கைது குறித்து எந்த குறிப்பும் மேற்குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மேற்படி செய்திகளை அயோத்திதாச பண்டிதரும் தன்னுடைய பத்திரிக்கையில் அப்போது எழுதி இருக்கிறார்.
1934-ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு.
சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதும், பிராமணீய ஆதிக்கம் என்றும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதே வாஞ்சிநாதனின் குறிக்கோள்.
“நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனியம்; மற்றது முதலாளித்துவம்” என்கிற அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை சரியான முறையில் உள்வாங்கி வரலாறு அணுகப்பட வேண்டும்.
ஆஷ்துரை சமதர்மத்தை காக்க முனைந்திட்ட மனிதநேயம் போற்றிய மாமனிதன்.
ஆஷ் எனும் மாமனிதருக்கு வீர வணக்கங்கள்.
By Beemarao, மு.செ. பாதுஷா , Meena , முத்தழகன்
[][][]
Casino - MapyRO
ReplyDeleteFind 통영 출장마사지 Casinos Near Me 정읍 출장마사지 in WV near you - Use our MapYRO Real-time 계룡 출장샵 If you're looking 출장안마 for a casino near you, you've come 경상남도 출장안마 to the right place.