Translate

Tuesday, 14 June 2016

நாகூரும் நானும். -பூமராங்





நான் முதன்முதல் சவூதி செல்ல விசா வந்த பொழுது, எனது தாயார் என்னையழைத்து,


'' நீ வெளிநாடு செல்கிறாய்.. நாகூர் அவுலியாவின் துவா பரக்கத் பெற்று தான் பயணம் செல்ல வேண்டும்.. அப்படித் தான் உங்கத்தாவும் ஆரம்பத்தில் சிங்கப்பூர் சென்ற பொழுது நாகூர் தர்காவில் வியாழன் இரவு தங்கி பாத்திஹா ஓதி விட்டு சென்றார்கள்.. அதே போல நீயும் போய் தங்கி விட்டு வா..!" என்று எனக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்..


நானும் அம்மாப் பேச்சை தட்டாமல், பஸ் ஏறி நாகூரில் இறங்கி.. தர்காவை விசாரித்து அங்கு சென்றேன்.. இதெல்லாம் தான் இஸ்லாமென்று நினைத்திருந்த காலமது.


நான் தர்காவினுள் நுழைந்ததும் நுழையாததுமாக அங்கிருந்த சேவிங் செய்த, தாடி வைத்த முல்லாக்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் 'பாத்திஹா' ஓதிக் கொள்ளுமாறு என்னை போட்டு இழுத்தார்கள்..


நான் ஒன்றும் புரியாமல்..பயத்தில் அவர்களிடமிருந்து என்னை உருவிக்கொண்டு உள்ளறைக்கு சென்றேன்.. அங்கே ஒருவர் பச்சை தலைப்பாகை, நீண்ட ஜிப்பா, ஆட்டுக்கு இருப்பது போன்ற தாடி, கையில் நீண்ட மயிலிறகு தோகை சகிதமாக.. ஏதோ ஒரு பையன் பரிச்சையில் பாஸாக 'பாத்திஹா' ஓதி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.. நான் ஒரு ஓரத்தில் நின்று நான் ஏற்கனவே கற்று வைத்திருந்த பாத்திஹாவை ஓதி விட்டு இரா தங்குவதற்காக வெளியே வந்தேன்.


அங்கே மேலும் எனக்கு அதிர்ச்சி.. ஆண்கள்-பெண்களெல்லாம் ரொம்ப சகஜமாக ஒன்றோடு ஒன்றாக கிடந்தார்கள்..


என்னை பாத்திஹா ஓத கையைப் பிடித்து இழுத்து கலவரப்படுத்தியதும், உள்ளே ஒரு முல்லா அவ்லியாவுக்கு இடைத்தரகராக நின்று கொண்டு புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்ததும் எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.. அதோடு அங்கு நிலவிய சூழலும் பிடிக்க வில்லை.. நான் உடன் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்து விட்டேன்.


'' இரா தாங்காமல் ஏன் திரும்பி வந்தாய்..?'' என்ற எனது தாயாரின் கேள்விக்கு மார்க்கரீதியாக பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை.. 'எனக்கு பிடிக்க வில்லை' என்று மட்டும் சொன்னேன்.


ஆனால்.. சில காலம் ஓடி.. பீஜே என்றொருவர்.. இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கிறார் என்று கேள்வி பட்டு.. வேண்டா வெறுப்பாக அவரது பேச்சை கேட்டேன்..


அல்ஹம்துலில்லாஹ்.. என்னுடைய குழப்பங்களுகெல்லாம் தெளிவு பிறந்தது.. தூய்மையான இஸ்லாம் எனது இயல்புக்கு முரண்படாமல் இருப்பதை உணர்ந்தும் மிகவும் அகமகிழ்ந்தேன்..


எல்லா புகழும் அல்லாஹுவிற்கே..

No comments:

Post a Comment