அத்தியாயம் 6
நாள்தோறும் நடைபெறும் இராப்பகல் மாற்றம்
நாம் வாழும் இந்தப் பூமியில் எண்ணிலடங்காத உயிரினங் கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்கு பூமியின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றம் மிகவும் அவசியமாகும். பூமியில் நடை பெறும் இராப்பகல் மாற்றத்தைக் குறித்து பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அவை பிரதானமாக இராப்பகல் மாற்றத்தால் உயிரினங்கள் அடையும் பயன்பாடு பற்றியதும், இராப்பகல் மாற்றம் நடைபெறச் செய்கின்ற அதன் அமைப்பைப் (குரஉவடி) பற்றியதுமாகும்.
இராப்பகல் மாற்றங்களால் நாம் அடையும் பயன்பாடுக ளில் சிலவற்றைத் திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
இராப்பகல் மாற்றங்களும் அதன் பயன்பாடுகளும்
நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்கக்கூடிய நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்களின் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிக மானோர் நன்றி செலுத்துவதில்லை.
(40:61)
அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.
(25:47)
இராப்பகல் மாற்றத்தால் மனிதர்கள் அடையும் பயன் பாடுகளை இது போன்ற சில வசனங்களில் குறிப்பிடும் திருக் குர்ஆன் இராப்பகல் மாற்றத்திற்கான அதன் இயக்கத்தை நேரம் குறிப்பிடுவதற்காக சில வசனங்களில் கூறுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு:-
“சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலைநாட்டுவீராக!
(17:78)
இந்த வசனத்தில் மனிதர்களின் பேச்சு வழக்கில் (உடிடடடிளூரயைட டயபேரயபந) திருக்குர்ஆன் பேசுவதால் அது கூறும் அறிவுரையைப் புரிந்து கொள்வதில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படவில்லை. மனிதர்கள் விளங்கிப் பணியாற்ற வேண்டிய விபரங் களைக் கூறும் இது போன்ற இடங்களில் திருக்குர்ஆன் அறிவியலை நுழைத்து குழப்பத்தை உருவாக்குவதில்லை என்பதையும், மற்ற இடங்களில் அறிவியலோடு தொடர் பில்லாத ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் போது கூட அறிவியலைப் பயன்படுத்தி உள்ளது என்பதையும் திருமறையின் ஆய்விலிருந்து மிக அழகாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இராப்பகல் மாற்றத்தின் அறிவியலை உட்படுத்துவ தற்காக திருக்குர்ஆன் கையாண்ட மற்றொரு வார்த்தைத் தந்திரம் துல்கர்னைன் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியில் காணப்படுகிறது. இந்த வசனத் தொடரில் திருக்குர்ஆன் பயன்படுத்திய இரண்டு செய்திகளை நினைவு கூர்வோம். முதலாவது செய்தி, “சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது….. என்பதும் இரண்டாவது செய்தி, “…. சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்த போது…. என்பதுமாகும்.
மேற்கண்ட இரண்டு செய்திகளில் சூரியன் உதிப்பதற் கென்று ஒரு இடமும், சூரியன் மறைவதற்கென்று மற்றொரு இடமும் இருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுவதைத் தெளிவாகக் காண்கிறோம். சூரியனின் உதயமும், மறைவும் விண்ணில் நடைபெறும் நிகழ்ச்சியே என்பது நமக்குத் தெரியும். எனவே பூமியைச் சூரியன் சுற்றி வருவதாக இருந்தால் சூரியன் உதிக்கும் இடம் என்றோ அல்லது சூரியன் மறையும் இடம் என்றோ ஏதேனும் இடங்கள் விண்ணிலோ அல்லது பூமியிலோ இருக்க முடியுமா எனத் தேடிப் பார்ப்போம்.
உதிக்கும் இடமும் மறையும் இடமும்?
தேடலின் துவக்கமாக நாம் இப்போது சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் ஒளி வீசிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். சூரியனின் ஒளிக்கதிர்கள் இப்போது பூமியின் அரைக்கோளத்தில் விழுகின்றன. எனவே அப்பகுதி பகலாக இருக்கிறது. அப்பகலின் ஒரு எல்லை சீனாவிலும் மற்றொரு எல்லை அமெரிக்காவிலும் இருக்கின்றன. சூரியன் இப்போது அமெரிக்கா இருக்கும் திசையை நோக்கி நகர்வதாகக் கற்பனை செய்தால் சூரியன் உதிக்கும் இடம் அமெரிக்காவிலும் சூரியன் மறையும் இடம் சீனாவிலும் இருக்கும். அதன் பொருள் அமெரிக்க மக்களுக்கு சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் என்பதும் சீனத்து மக்களுக்கு சூரியன் மறைந்து கொண்டிருக்கும் என்பதுமாகும்.
சூரியன் நகரத் துவங்கி பூமியைச் சுற்றி வரத் துவங்கியதும் உதிக்கும் இடமும் மறையும் இடமும் சூரியனுடன் நகரத் துவங்கி விடுகிறது. பூமியிலும் சரி ஆகாயத்திலும் சரி உதிக்கும் இடமும் மறையும் இடமும் எந்தவோர் இடத்திலும் நிலைத்து நிற்காமல் சூரியனுடன் நகரத் துவங்கி விடுகிறது. ஆனால் திருக்குர்ஆன் இராப்பகல் இயக்கத்தில் உதிக்கும் இடமும், மறையும் இடமும் இருக்கிறது என தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனின் வார்த்தை உண்மையாக வேண்டுமாயின் உதிப்பதற்கும், மறைவதற்கும் தனித்தனி இடங்கள் இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். எனவே இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமானால் இராப்பகலின் இயக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதே இப்போது நம்முன் இருக்கும் வினாவாகும்.
கட்டுண்டு நிற்கும் உதயமும் மறைவும்!
இது வரை நாம் செய்து பார்த்த கற்பனைக் காட்சிகள் புவி மையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது திருக்குர்ஆனுடைய கூற்றை மெய்பிக்கக் கூடிய உதிக்கும் இடமும் மறையும் இடமும் விண்ணில் உருவாகவில்லை என்பதால் இந்தச் சிந்தனை திருக்குர்ஆனுக்கு எதிரான சிந்தனை என்பதை எளிதாக விளங்க முடிகிறது. எனவே இப்போது இராப்பகல் இயக்கத்தை நடத்துவதற்கு நம் முன்னால் ஒரே ஒரு வழி மட்டுமேயாகும். அது சூரியனை நகராமால் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டு பூமியைச் சுழற்றிப் பார்ப்பதே ஆகும். எனவே நாம் இப்போது அந்தச் சோதனையைக் கற்பனை செய்து பார்ப்போம்.
இப்பவும் சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் மீது ஒளி வீசிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். எனவே பசிபிக்கின் மீதுள்ள பகலின் இரண்டு ஓரங்கள் முன் போலவே அமெரிக்காவிலும் சீனாவிலும் இருக்கும். இப்போது பூகோளம் மேற்கிலிருந்து கிழக்காக சுழல ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக பூமியின் மீதுள்ள பகல் பகுதி கிழக்கிலிருந்து மேற்காக நகரத் துவங்கும். எனவே முன் போன்றே அமெரிக்க மக்கள் சூரிய உதயத்தையும், சீனத்து மக்கள் சூரியனின் மறைவையும் பார்ப்பார்கள். பூமி மேலும் சுழலச் சுழல அமெரிக்காவில் இருந்த சூரியனின் உதயத்தையும் சீனாவில் இருந்த சூரியனின் மறைவையும் பூமியின் வெவ்வேறு பகுதிகள் பெற்றுக் கொள்கின்றன. ஆயினும் இப்போது ஆகாயத்தைப் பார்த்தால் அற்புதமான மற்றொரு காட்சியை நாம் காண்கிறோம்.
ஆம்! அமெரிக்காவிலும், சீனாவிலும் இருந்த உதயமும் மறைவும் பூமியின் வெவ்வேறு பகுதிகளால் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் ஆகாயத்தைப் பொருத்த வரை உதிக்கும் இடமும் மறையும் இடமும் எள்ளளவும் நகராமல் ஒரே இடத்தில் நிலைபெற்று இருக்கின்றன. பூமி சூரியனை முழுமையாக ஒரு சுற்று சுற்றி வந்த போதும் உதயமும் மறைவும் ஆகாயத்தில் நகராமல் நிலை நின்றதே அன்றி எங்குமே நகர்ந்து செல்லவில்லை. பூமியின் மீது கூட உதயமும் மறைவும் நகர்வதாகத் தோன்றுவதற்குக் காரணம் உண்மையில் ஆகாயத்தில் நிலைபெற்றிருக்கும் உதயம் மற்றும் மறையும் இடங்களுக்கு பூமியின் வெவ்வேறு பகுதிகள் சுழன்று வந்து அவை தாமாகவே உதயத்தையும் மறைவையும் பெற்றுக் கொள்வதனாலேயே அன்றி பூமியின் மீது கூட உதயமோ மறைவோ நகரவில்லை. எனவே பூகோளம் சுழல்வதால் பூமியின் மீது இராப்பகல் இயக்கம் நடைபெறுவதாக நாம் செய்து கொண்ட கற்பனை திருக்குர்ஆன் கூறும் இராப்பகல் அறிவியலை மிக அழகாகவும் அற்புதமாகவும் நிரூபித்து விட்டது.
இராப்பகலைத் தேடிச் செல்லும் நிலப் பகுதிகள்
சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக நம்பிக் கொண்டிருக் கும் ஒருவர் புவிஈர்ப்பு விசை தம்மைப் பாதிக்காத உயரத்தில் நின்று பூமியின் மீது நடைபெறும் இந்த அற்புதமான காட்சியை (ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்கும் உதயம் மற்றும் மறைவுக் காட்சிகளைக்) காண்பது விந்தை மிகு காட்சியாக இருக்கும்.
சூரியன் நகராமல் ஒரே இடத்தில் நின்றிருக்க (சூரியன் நகர்கிறது என்பதை மற்றொரு அத்தியாயத்தில் விளக்கி யுள்ளோம். ஆயினும் சூரியன் சூரியக் குடும்பத்திற்குள் நகர்வதில்லை என்றும் சூரிய குடும்பத்தைப் பொருத்தவரை சூரியன் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது என்பதையும் கருத்தில் கொள்க) பூமி தன்னைத் தானே சுற்றி இராப்பகல் மாற்றத்தைத் தோற்றுவிப்பதே விந்தைகள் தோன்றுவதற்குக் காரணமாகும்.
சூரியன் நகராமல் நின்று விடுவதால் இராப்பகல்களும் நகராமல் நின்று விடுகின்றன. இராப்பகல்கள் நகராமல் நிற்பதால் உதயமும் மறைவும் நகராமல் அதனதன் இடத்தில் கட்டுண்டு நின்று விடுகின்றன. ஆயினும் பூமியின் ஒவ்வொரு நிலப்பகுதிகளும் நகர்ந்து சென்று நகராமல் கட்டுண்டு நிற்கும் உதயம், மறைவு, இரவு மற்றும் பகல் ஆகியவைகளை அவைகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்கிறது.
சான்றாக பூமியின் ஏதோ ஒரு நிலப்பகுதி. இதை லண்டன் மாநகர் எனக் கொள்வோம். இப்பிரதேசம் சூரியன் உதிக்கும் இடத்திற்கு வருவதற்கு சில வினாடிகளுக்கு முன்னால் வரை லண்டன் மாநகரில் சூரியோதயம் இல்லை. ஆயினும் உதயம் நகராமல் கட்டுண்டு நிற்கும் இடத்திற்கு வந்ததும் லண்டனில் சூரியோதயம் நிகழ்கிறது. சில நிமிடங்களில் லண்டன் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது. உடனே லண்டன் சூரியோதயத்தை இழந்துவிட்டு முற்பகலாகி விடுகிறது.
இப்போது லண்டனைத் தொடர்ந்து அது வரை இரவாக இருந்த பெல்ஜியம் பூமியின் சுழற்சியால் சூரியன் உதிக்கும் இடத்தை அடைகிறது. உடனே அது வரை பெல்ஜியத்தில் இல்லாத சூரியோதயத்தை பெல்ஜியம் பெற்று விடுகிறது. சில நிமிடங்களில் பூமியின் சுழற்சி பெல்ஜியத்தையும் அந்த இடத்திலிருந்து நகர்த்தி விடுவதால் பெல்ஜியம் சூரியோதயத்தை இழந்து முற்பகலைப் பெறுகிறது. அதன் பின் பூமியின் சுழற்சி ஜெர்மெனியின் பான் (க்ஷடி ஊவைல) மாநகரை அங்கு கொண்டு வருகிறது. அப்போது பான் நகரமும் அது வரை இல்லாத சூரியோதயத்தைப் பெற்று விடுகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு இவ்வாறே தொடர்கிறது.
சூரியனின் மறைவிடத்தையும் மேற்கூறியவாறே பூமியின் சுழற்சியால் பூமியின் ஒவ்வொரு பிரதேசங்களும் தேடிவந்து பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு சூரியனுக்கு உதிக்கும் இடமும் உண்டு, மறையும் இடமும் உண்டு எனத் திருக்குர்ஆன் கூறிய இயற்பாடு பூமி அதன் அச்சில் சுழன்று இராப் பகல்களைத் தோற்றுவிக்கும் போதே ஏற்படுகின்றன என ஐயத்திற்கிடமின்றி நாம் கண்டு தெளிந்தோம்.
திருமறையில் வேரூன்றி நிற்கும் வானியல் ஆழம்!
எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மைகளைத் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே தமக்குள் ஆழமாக வேரூன்றச் செய்துள்ளது பார்த்தீர்களா? இந்த அற்புதத் திருமறை சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனும் பிழையான அறிவியலை ஆதரிக்கும் நூலாக இருக்க முடியுமா?
சூரியன் பூமியைச் சுற்றுகிறது எனும் கருத்தை ஆதரிக்கும் நூலே திருக்குர்ஆன் என யாரேனும் கூறினால் அவர் எவ்வளவு தான் உலகப் புகழ் வாய்ந்தவராகப் போற்றப் பட்டாலும் அவரது நேர்மையை, அல்லது அவரது ஆய்வுத் திறமையை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்பதை விளக்கத் தேவையில்லையல்லவா?
சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் திருக்குர்ஆன் கூறியவாறு சூரியதோயத்திற்கென்றும் சூரிய மறைவிற்கென்றும் தனித்தனி இடங்களைத் தோற்றுவிக்கும் இயற்பாட்டை அந்த இயக்கம் தோற்றுவிக்காது என்பதை நாம் விளக்கி விட்டோம். எனவே சூரியன் பூமியைச் சுற்றுவதாகக் கூறப்பட்ட பிழையான கருத்தை திருக்குர்ஆன் ஏற்கவில்லை என்பதையும் பூமி தன்னைத்தானே சுற்றுவதாலேயே இராப்பகல் ஏற்படுகின்றன என்பதே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பதையும் திருக்குர்ஆனை ஆய்வு செய்யும் ஆய்வாளர்க்கு புலப்படுத்தவே இப்படிப்பட்ட தந்திரச் சொற்களை திருக்குர்ஆன் பயன்படுத்தியது என்பதையே இது காட்டுகிறது.
அறிவியல் கலவா பொருள் விளக்கம்
இதை மேலும் விளங்கிக் கொள்ள நாம் இங்கு ஆய்விற் கெடுத்துக் கொண்ட இரு வகையான சொற்றொடர்களி லிருந்தும் நாம் இங்கு விளக்கிய அறிவியல்களை நீக்கி விட்டுப் பார்த்தால் அவைகளின் பொருள் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம். முதல் சொற்றொடராம் “….. சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது ….. என்பது “(அவருடைய பயணத்திற்கிடையில்) ஒரு நாள் சூரியன் மறையும் நேரத்தில் தமது இலட்சியத் தானங் களில் ஒன்றை அவர் சென்றடைந்தார் எனும் செய்தியை மட்டுமே அது தெரிவிப்பதாக அமையும். அவ்வாறே இரண்டாவது சொற்றொடராம் “சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார் என்பது “மீண்டும் அவர் பயணம் செய்து ஒரு நாள் சூரியன் உதிக்கும் நேரத்தில் தன்னுடைய மற்றொரு இலட்சியத் தானத்தை அவர் சென்றடைந்தார் எனும் தகவலை மட்டுமே அது அளிக்கக்கூடியதாக அமையும்.
இவ்வாறு அறிவியலை அகற்றி விட்டுப் பார்த்தால் “சூரியன் உதிக்கும் இடம் என்பது சூரியன் உதிக்கும் நேரம் என்றும் “சூரியன் மறையும் இடம் என்பது சூரியன் மறையும் நேரம் என்றும் சாதாரணமான பொருள் கொண்ட வார்த்தை களாகவே தோன்றுகின்றன. இது இறைவனின் நல்லடியார் ஒருவரைப் பற்றியும் இறைவன் அவருக்குச் செய்த உதவிகள் குறித்தும் அக்காலத்தில் அரபு நாட்டில் நிலவி வந்த பழங்கதை ஒன்றின் உண்மை நிலையை அறிய அரபு மக்கள் இறைத் தூதரிடம் கேள்வி கேட்டபோது அப்பழங்கதையின் சுவைக்கும், பாணிக்கும் ஏற்ற விதத்திலேயே திருக்குர்ஆன் பதில் சொல்வதாக அமைந்துள்ளது. இருப்பினும் சூரியன் உதிக்கும் நேரம் என்றும் சூரியன் மறையும் நேரம் என்றும் கூறவேண்டிய இடத்தில் திருக்குர்ஆனின் தோற்றுவாயின் ஆழம் காணமுடியாத அதி அற்புத சர்வ சம்பூரண ஞானத்தி லிருந்து ஒரு துளியின் துளியாம் இராப்பகல் இயக்கத்தின் அறிவியலை அதில் கலந்துவிட்ட போது சூரியன் உதிக்கும் நேரம் என்பது “சூரியன் உதிக்கும் இடம் என்றும் சூரியன் மறையும் நேரம் என்பதும் “சூரியன் மறையும் இடம் என்றும் மாறிவிட்டதாக திருக்குர்ஆனின் ஆய்வாளர்களுக்குப் புலப்படுவது மிகப் பொருத்தமானதும் ஏற்கத்தக்கதுமாகும்.
திருக்குர்ஆன் மெய்யாகவே இறைவனிடமிருந்து வரப் பெற்றதா? அல்லது இறைவனின் பெயரால் புனைந்துரைக்கப் பட்டதா? என ஆய்வு செய்து பார்க்கும்படித் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. இதன் அழைப்பிற்கிணங்க அறிவியல் பார்வை கொண்ட ஒருவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்ய முயல்வதோடு உலகில் மிகப் பெரிய வாக்குவாதத்தை உருவாக்கி மிகச் சிறந்த அறிவியலாளர்கள் சிலரைக் கொடுமைப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த இராப்பகல் மாற்றத்தின் அறிவியலைக் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது எனப் பார்க்க முயன்றால் அவருடைய ஆய்வுக் கண்களுக்குப் புலப்படுவதற்காகவே இப்படிப்பட்ட அறி வியல்களை இந்த விதத்தில் (எக்காலத்திலும் திருக்குர்ஆன் பெற்றிருக்க வேண்டிய நம்பிக்கையைத் தகர்க்காத விதத்தில்) திருக்குர்ஆன் கூறி வைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
உதிக்கும் இடங்களும் மறையும் இடங்களும் ஏராளம்!
உதிக்கும் இடத்தைப் பற்றியும் மறையும் இடத்தையும் இது வரை நாம் விவாதித்த விபரங்களைக் கவனமாக பார்வையிட்டவர்களிடம் இப்போது மற்றொரு கேள்வி எழலாம். சூரியன் நகராமல் ஓரிடத்தில் இருக்க பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் பூமிக்கு உதிக்கும் இடமும், மறையும் இடமும் உருவாகி விடுகிறது. அப்படிப் பார்த்தால் சூரியனுக்கு மேலும் சில கோள்களும் துணைக் கோள்களும் இருக்கின்றன. அவைகளும் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. எனவே அவை ஒவ்வொன்றுக்கும் பூமிக்கு இருப்பதைப் போன்று உதிக்கும் இடங்களும் மறையும் இடங்களும் இருக்க வேண்டும். எனவே நமது சூரியக் குடும்பத்திற்குள்ளேயே பல உதிக்கும் இடங்களும் பல மறையும் இடங்களும் இருந்தாக வேண்டும். இதைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறியுள்ளதா? என்பதே அக்கேள்வியாகும்.
மிக அற்புதமாக இந்த விபரத்தையும் திருக்குர்ஆன் கூறுகிறது என்பதே அதற்குரிய பதிலாகும். அந்த பதில் வருமாறு :
“உதிக்கும் இடங்களுக்கும் மறையும் இடங்களுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்…..
(70:40)
மேற்கண்ட வசனத்தில் உதிக்கும் இடத்தையும் மறையும் இடத்தையும் பன்மையில் கூறியதிலிருந்து திருக்குர்ஆனுடைய பதில் கூடுதல் விளக்கமின்றித் தெளிவாக விளங்குகிறது. ஆயினும் இங்கு கூடுதலாக மற்றொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பேரண்டத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங் களும் அவைகளில் பலவற்றிற்கு கோள் குடும்பங்களும் உண்டு என்பதையும் சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகம் கண்டுபிடித்ததன் பின்னணியில் மேற்குறிப்பிடப் பட்ட திருக்குர்ஆனறிவியல் மேலும் விரிவான பொருட் செறிவுடையதாகும். ஏனெனில் அங்கிங்கெனாதபடி பேரண்டம் எங்குமே ஏராளமான உதிக்கும் இடங்களும் ஏராள மான மறையும் இடங்களும் உள்ளதாக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி அளிப்பதாலும் இச்செய்தியையும் உள்ளடக்கியதாக மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் காணப்படுவதாலும் அது விரிவான பொருட்செறிவுடைய திருக்குர்ஆன் வசனமாகும் என்பது தெளிவாகும்.
பகலை மூடும் இரவு!
சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை. தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியே இராப்பகலைத் தோற்றுவிக்கிறது எனும் அறிவியலை மற்றொரு வசனத்தில் இவ்வாறு காணலாம்.
“…. அவன் பகலை இரவால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன.
(13:3)
இதைத்தாம் நாம் முன்னரே கூறினோம். இம்மாமறைக் குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாமா? அல்லது இறைவனின் பெயரால் புனைந்துரைக்கப்பட்டதா? என ஆய்வு செய்யப் புகும் ஓர் ஆய்வாளர் அறிவியல் பார்வை உ டையவராக இருந்து விட்டால் உலகில் மிகப் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிய கோபர் நிக்க மற்றும் டார்வின் போன்றவர்களின் சித்தாந்தங்களைப் பற்றிய திருக்குர்ஆ னுடைய கருத்து என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்காமல் இருக்க மாட்டார். எனவே அப்படிப்பட்ட ஆய்வாளர்களுக்குள்ள சான்று களாக இருக்கும் பொருட்டே இப்படிப்பட்ட வசனங்களில் அறிவியல் உண்மைகளைத் திருக்குர்ஆன் உட்புகுத்தி உள்ளது. இப்போது இந்த வசனத்திலுள்ள அறிவியலுக்கு வருவோம்.
இந்த வசனத்தில் பகலை இரவு மூடுவதாகக் கூறப் பட்டுள்ள செய்தி உள்ளபடியே வியப்பைத் தருவதாகும். பகல் என்பது வெளிச்சமாக இருக்கும் என்பதும், இரவு என்பது இருட்டாக இருக்கும் என்பதும் நமக்குத் தெரியும். எனவே வெளிச்சமாக இருக்கும் பகலை மூடுவதற்கு இருட்டாக இருக்கும் இரவு வந்தால் இரவு அழிந்து போகும். உண்மை நிலை இவ்வாறு இருக்க பகலை இரவால் எவ்வாறு மூட முடியும்? எடுத்த எடுப்பிலேயே இது சாத்தியமில்லை என்று தோன்றினாலும் நாம் இதை ஆய்வுக் கண்களோடு அணுகிப் பார்ப்போம்.
இரவை மூடும் பகல்!
பகலை இரவால் மூடவேண்டுமானால் முதலாவதாக பகல் ஓரிடத்தில் கட்டுண்டு நிற்க வேண்டும். அதன் பிறகு இரவு நகர்ந்து வந்து பகலின் மீது படிய வேண்டும். அதன் பிறகு இரவால் பகலை மூட முடிகிறதா எனப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் பகலின் இயற்பியல் நகராமல் நிலையானதாகவும் இரவின் இயற்பியல் நகர்வதாகவும் இருக்க வேண்டும். ஆனால் சூரியன் பூமியைச் சுற்றுவதாக இருந் திருந்தால் இரவு, பகல் இரண்டுமே நகரக் கூடியதாகவே இருந்திருக்கும். எனவே இந்த நிலையில் பகலை இரவால் மூட முடியாது என்பது தெளிவாகும். திருக்குர்ஆன் தன் னுடைய மற்றொரு வசனத்தில் மேலும் இவ்வாறு கூறுகிறது:
“…..இரவை அவன் பகலால் மூடுகிறான்…
(7:54)
இந்த வசனத்தில் கூறப்பட்டவாறு இராப்பகல் இயக்கம் நடைபெற வேண்டுமானால் இரவு நகராமல் கட்டுண்டு இருக்க பகல் மட்டும் நகரக் கூடியதாக இருக்க வேண்டும். இப்போது மேற்கண்ட இரண்டு வசனங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விதத்தில் இரவும் பகலும் நகராமல் இருக்க வேண்டுமென்றாலும் மற்றொரு விதத்தில் இரவும் பகலும் நகர்ந்தே ஆக வேண்டும். ஆனால் சூரியன் பூமியைச் சுற்றி வருவதாலேயே இராப்பகல்கள் நடைபெறுவதாக இருந்திருந் தால் இராப்பகல்கள் எந்த இடத்திலும் எந்த நிலையிலும் ஒரே இடத்தில் கட்டுண்டு இருக்காமல் நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதையும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் மட்டுமே இப்படிப்பட்ட இயற்பாடுகள் சூரியக் குடும்பத்தின் இயக்கத்தில் தோன்றும் என்பதையும் நாம் முன்னரே கண்டுள்ளோம். இருப்பினும் மேல் விளக்கத்திற் காக அதை மீண்டும் ஒரு முறை சுருக்கமாகக் காண்போம்.
சூரியன் நகராமல் ஒரே இடத்தில் இருக்க பூமி சூரியனுக்கு முன் சுழன்று வருகிறது. சூரியன் நகராத காரணத்தால் விண்ணில் உள்ள இராப்பகல்களும் நகர்வதில்லை. ஆனால் பூமியின் மீது பகலாக இருக்கும் நிலப்பகுதிகள் பூமியின் சுழற்சியால் நகர்ந்து சென்று ஆகாயத்தில் நிலைபெற்றிருக்கும் இரவிற்குள் நுழைந்து தன்னை மூடிக் கொள்கிறது. இதைப் போலவே பூமியில் இரவாக இருக்கும் நிலப்பகுதிகள் பூமியின் சுழற்சியால் நகர்ந்து சென்று ஆகாயத்தில் நிலை பெற்றிருக்கும் பகலுக்குள் நுழைந்து பகலால் தன்னை மூடிக் கொள்கிறது.
பூகோளத்தின் அச்சில் சுழற்சி எவ்வளவு ஆழமாகவும் அற்புதமாகவும் திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்து நிற்கிறது!
பகலில் நுழையும் இரவும், இரவில் நுழையும் பகலும்
பூகோளத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றத்தின் மிகச் சரியான பிழையற்ற அறிவியலை இப்போது நாம் கண்ட விளக்கத்தின்படியே எடுத்துக் கூறும் மற்றொரு வசனத் தொடர் இதோ :
“அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
(31:29)
இந்த வசனம் பூமியில் நடைபெறும் இராப்பகல் இயக்கம் என்பது பகலை இரவில் நுழைப்பதனாலும் இரவைப் பகலில் நுழைப்பதனாலும் ஏற்படுவதாகும் எனக் கூறியதிலிருந்து இராப்பகல் இயக்கத்தைத் தோற்றுவிப்பது புவி மையக் கோட்பாட்டின்படி அன்றி சூரியமையக் கோட்பாட்டின்படி ஆகும் என்பதை மீண்டும் ஐயத்திற்கிடமின்றித் திருக்குர்ஆன் நிரூபிக்கிறது!
புவிமையக் கோட்பாடு என்பது சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது எனும் பிழையான கருத்தாகும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் இரவு எப்போதும் பகலுக்குப் பிறகு ஓடிக் கொண்டிருக்குமே அன்றி அது எங்குமே நகராமல் நிற்பதில்லை. இரவை நகராமல் நிறுத்த முடியாவிடில் அதற்குள் பகலை எவ்வாறு நுழைக்க முடியும்? அவ்வாறே பகலை நகராமல் நிறுத்த முடியாவிடில் பகலுக்குள் இரவை எவ்வாறு நுழைக்க முடியும்? ஒரே ஒரு வழியே உண்டு. பகலை விட இரவை விரட்டினால் பகல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதற்குள் இரவை நுழைத்து விட முடியும். அப்படிச் செய்தால் இரவானது திரும்பத் திரும்ப பகலுக்குள் நுழையுமே அன்றி பகல் எப்போதுமே இரவுக்குள் நுழையாது! ஆனால் திருக்குர்ஆனோ பகலுக்குள் இரவு நுழைவது போல் இரவுக்குள் பகலும் நுழைவதாகக் கூறுகிறது.
எவ்வளவு சிறந்த கவனத்தோடு துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் இவை! இப்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் மட்டும் பகலோ இரவோ ஏதேனும் ஒன்று ஏதேனும் ஒன்றுக்குள் நுழைய முடிகிறதா? இல்லவே இல்லை! ஏன்? ஏனெனில் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகலும் இரவும் ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த இரண்டு பொருட்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒரு போதும் நுழையாது. எனவே பூமி அதன் அச்சில் சுழலும் போது மட்டுமே பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல்கள் நகராமல் ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்க முடிகிறது.
பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல்கள் கட்டுண்டு நிற்கும் போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப் போல் மறுபக்கம் பூமி யின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது.
“பகலுக்குள் நுழையும் இரவு! இரவுக்குள் நுழையும் பகல்! எவ்வளவு சிறப்பான அறிவியல் ஞானத்தை திருக்குர்ஆனின் மேற்கண்ட வார்த்தைப் பிரயோகங்கள் அதனை ஆய்வு செய்வோரின் கண்களுக்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டித் தருகிறது! இந்த சொற்பிரயோகங்கள் எவ்வளவு அற்புதமாக புவி மையக் கோட்பாட்டை மறுத்து விட்டு எவ்வளவு துல்லியமாக சூரிய மையக் கோட்பட்டை உண்மைப்படுத்துகிறது! இதற்கு மேலும் இம்மாறைக் குர்ஆன் புவிமையக் கோட்பாட்டை ஆதரிக்கும் நூல் என்றோ அல்லது இராப்பகல் மாற்றத்தின் பிழையற்ற அறிவியல் திருக் குர்ஆனுக்குத் தெரியாது என்றோ ஒருவரால் கூற முடியுமா?
பின் வாங்கிச் செல்லும் இரவு
சூரியக் குடும்பத்தின் இயக்கம் பற்றிய திருக்குர்ஆனின் அறிவியல் ஆழத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு வசனம் வருமாறு :
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீது ஆணையாக! வெளிச்சம் தரும் காலைப் பொழுதின் மீது ஆணையாக!
(74:33-34)
இந்த அற்புதமான திருமறை வசனம் இரவின் ஒரு இயற்பியல் குணத்தை இங்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இரவு என்பது பின்வாங்கிச் செல்லும் குணத்தையுடையது என்பதே அந்த இயற்பியல் குணமாகும். இந்த வசனத்தில் கூறப்படிருக்கும் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் “பின் வாங்கிச் செல்லுதல் என்றால் என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பின்வாங்கிச் செல்லுதல் என்பது ஒரு இயக்கம் எந்த திசையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்த திசையில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் முன்னேற இயலாமல் அது வரை அந்த இயக்கம் எந்த திசையில் சென்று கொண்டிருந்ததோ அத்திசைக்கு எதிர் திசையில் இயங்குவதையே “பின் வாங்கிச் செல்லுதல் என்று கூறுகிறோம். இப்போது வழக்கம்போல் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவு எந்த இடத்திலாவது பின் வாங்கிச் செல்லும் நிலை ஏடற்படுகிறதா? எனப் பார்ப்போம். அவ்வாறு இரவு பின்வாங்கிச் செல்லும் நிலை அதில் காணப்பட்டால் இதுவே இராப்பகல் மாற்றத்தைப் பற்றிய திருக்குர்ஆனின் கருத்தாக முடிவு செய்யலாம். எனவே அந்த ஆய்விற்குள் செல்வோம்.
இப்போது சூரியன் பூமியைச் சுற்றுவதாக வைத்துக் கொண்டு இரவின் இயக்கம் எத்திசையில் எவ்வாறு நடைபெறும் எனப் பார்ப்போம். சூரியன் இப்போதும் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் இருப்பதாகக் கொள்வோம். சூரியனின் எதிரில் உள்ள பூமியின் அமெரிக்கா முதல் சீனா வரையிலான அரைக்கோளம் பகலாகவும் அந்த அரைக் கோளத்திற்கு மறுபக்கம் உள்ள பூமியின் அரைக்கோளம் இரவாகவும் இருக்கும். சூரியன் நகரத் துவங்கியதும் இரவும், பகலும் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்றாக நகரத் தொடங்கு கிறது. சூரியன் ஒரே திசையில் சுழல்வதால் இரவும் பகலும் ஒரே திசையில் பூமியின் மீது சுழன்று வருகிறது. சூரியன் திசைமாறிச் சுழலாத காரணத்தால் இரவோ அல்லது பகலோ ஒரு போதும் பின்வாங்கிச் செல்ல இயலவில்லை. எனவே சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக இருந்தால் இரவுக்குப் பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் பண்பு ஒரு போதும் தோன்றுவதில்லை என்பதால் திருக்குர்ஆன் புவி மையக் கோட்பாட்டை ஒரு போதும் ஆதரிப்பதில்லை என்றும் இரவுக்கு பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் பண்பைத் தோற்றுவிக்கும் இராப்பகல் இயக்கம் எதுவோ அதுவே இதைப் பற்றிய திருக்குர்ஆனுடைய அறிவியல் கோட்பாடா கும் என்பதையும் ஐயத்திற்கிடமின்றி விளங்குகிறோம். எனவே வழக்கம் போல் பூமி தன்னைத்தானே சுற்றி இராப்பகலைத் தோற்றுவிக்கும் போது இரவுக்கு பின்வாங்கிச் செல்லும் இயற்பியல் குணம் ஏற்படுகிறதா? எனப் பார்ப்போம்.
பின்வாங்கல் என்பதன் அற்புதக் காட்சி
ஆய்வின் தொடக்கத்தில் சூரியன் நகராமல் ஒரே இடத்தில் இருப்பதாவும் இதன் காரணமாக பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இராப்பகல் நகராமல் கட்டுண்டு நிற்பதாகவும் பூமி அதன் அச்சில் சுழல்வதாகவும் வைத்துக் கொள்வோம். பூமியின் சுழற்சி அதன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை – இதை இந்தியா எனக் கொள்வோம் – இரவுக்குள் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக ஒரே திசையில் நகரச் செய்துவிட்டு சூரியன் உதிக்கும் இடத்திற் குள் இந்தியாவை நுழையச் செய்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த இரவின் நிலைமை இப்போது நாம் கவனித்தால் இரவின் “பின்வாங்கல் மிக அற்புதமாக நடைபெறுவதை நம்மால் பார்க்க முடியும்!
ஆம்! உதய எல்லையை இந்தியா தொட்ட பிறகும் எந்தத் திசையில் பூமி சுழன்று வந்ததோ அதே திசையிலேயே இந்தியா தொடர்ந்து முன்னேறிய போதும் இந்தியாவில் உள்ள இரவு இந்தியா செல்லும் திசைக்கு நேர் எதிர் திசையில் பின்வாங்குகிறது. இந்தியாவைப் பின்தொடர்ந்து பாக்கி தான் வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலிருந்து பின்வாங் கிய இரவு பாக்கிதானுக்குச் செல்கிறது. ஆனால் சில வினாடிகளில் பாக்கிதானும் உதய எல்லைக்குள் நுழையத் தொடங்குகிறது. எனவே பாக்கிதானுக்குப் பின்வாங்கிய இரவு ஈரானுக்குப் பின்வாங்கத் தொடங்குகிறது. இவ்வாறே ஈரானுக்குப் பிறகு படிப்படியாக எகிப்து, அட்லாண்டிக், அமெரிக்கா, பசிபிக், சீனா போன்ற இடங்களுக்குப் பின்வாங்கி திரும்பவும் இந்தியாவிற்கும், பிறகு பாக்கிதானுக்கும் பின்வாங்கிக் கொண்டே செல்கிறது!
இக்காட்சி எவ்வளவு அற்புதமாக திருக்குர்ஆனின் அறிவியலை நிரூபித்துக் காட்டுகிறது!
சூரியனின் உதய எல்லையில் நடைபெறும் பின் வாங்கும் இயற்பியல் குணம் இப்போது எளிதாக நம்மால் விளங்க முடிகிறது. ஆயினும் இரவின் இந்த இயற்பியல் குணம் பூகோளத்தில் இரவாக இருக்கும் அரைக்கோளம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிப் போக்கே என்பதை இதற்கு மேல் வாசகர்கள் சுயமாகவே புரிந்து கொள்ள முடியும்.
இயற்கையின் நேர்முக வர்ணனை!
இரவு என்பது பின்வாங்கும் இயல்பைக் கொண்டது எனும் திருமறை அறிவியலின் விளக்கத்தை கோபர் நிக்க, கெப்ளர், கலீலியோ போன்ற சிறந்த அறிவியலாளர்கள் அறிவியல் உலகிற்கு வழங்கிய பங்களிப்புகளின் துணையால் இன்று நாம் சரியாக விளங்கிக் கொண்டோம். ஆயினும் இந்த அறிவியலாளர்கள் பிறப்பதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இரவு பின்வாங்கும் நிலையைக் கொண்டது எனக் கூற வேண்டுமாயின் அவர் யாராக இருக்க வேண்டும்? குறைந்த பட்சம் அவர் பூமியின் சுற்றுப் பாதைக்கு (டீசவை) அப்பால் நின்று கொண்டு அதே நேரத்தில் பூமியில் இராப்பகல் மாற்றம் நடைபெறுவதை மிகத் துல்லியமாகப் பார்த்தறியும் ஆற்றல் மிகு கண்களைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதோடு எந்தக் காட்சியையும் கற்பனை வளத்துடன் அதே நேரத்தில் பொய்யக் கலப்பின்றியும் வர்ணனை செய்யும் இலக்கிய அறிவும் பெற்ற ஒருவராகவே அவர் இருக்க வேண்டும்!
அப்படிப்பட்ட ஒருவர் இருந்தார் என நம்மால் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா? ஒருகாலும் முடியாது என்பதே நமது பதிலாக இருக்கும். உண்மை நிலை இதுவே என்றால் சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்றும் அதற்கு மாறாக பூமியே தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இராப்பகலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை உள்ளடக்கிய இதைப் போன்ற வசனங்களைத் திருக் குர்ஆனால் எப்படிக் கூற முடிந்தது?
திருக்குர்ஆன் மானிடப் படைப்பன்றி இறைவனின் வார்த்தைகளே என நம்புவதில் இதற்கு மேலும் என்ன பிரச்னை?
அத்தியாயம் 7
சுழற்றும் பூமி
சென்ற அத்தியாயத்தில் பூமியில் நடைபெறும் இராப்பகல் மாற்றம் சூரிய மையக் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டதே எனத் திருக்குர்ஆன் கூறுவதை ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாகக் கண்டு விட்டோம். இருப்பினும் எந்த அறிவியல் உண்மையை நவீன அறிவியல் உலகின் விஞ்ஞானிகள் கூறிய போது உலகில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியதோ அந்த அளவிற்கு உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியல் உண்மை; எந்த அறிவியல் கண்டுபிடிப்பு நவீன அறிவியல் உலகின் படைப் பிற்கு ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் அமைந்ததோ அந்த அளவிற்கு வினை வீரியம் கொண்ட அறிவியல் உண்மையாம் சூரிய மையக் கோட்பாடு கூடவா வெறும் ஒரு வேத நூலில், அதிலும் தொன்மையான ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய வேத நூலில் இருக்க முடியும் என்ற பிரமிப்பில் இப்போதும் சிலர் தயங்கி நிற்கக் கூடும். அவர்களின் தயக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக நாம் இங்கு ஒரு வினாவை எழுப்புவோம்.
விமானத்தை விஞ்சும் புவியின் வேகம்
இரண்டு விமானங்கள் முறையே ஒன்று டில்லியில் இருந்து ஹாங்காங்கிற்கும் மற்றொன்று ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கும் ஒரே வேகத்தில் ஒரே நேரத்தில் பறந்தால் அவை ஒரே நேரத்தில் தரை இறங்குமா? இக்கேள்விக்கு “ஆம் என்றே அனைவரும் பதில் சொல்வார்கள். ஆயினும் அதைத் தொடர்ந்து “எவ்வாறு? என்று மற்றொரு கேள்வியை எழுப்பினால் “அவ்விரு விமானங்களும் பறக்கும் தூரமும், பறக்கும் வேகமும் ஒன்றாக இருப்பதால் அவை இரண்டும் ஒரே நேரத்திலேயே தரை இறங்கும்! என்று பதில் கூறப்படும். இந்தப் பதில் முறையான பதிலாகாது; குறை உடைய பதிலாகும்.
பூமியின் மீது மேற்கொள்ளப்படும் பயணமாக இருந்திருந்தால் இந்தப் பதில் போதுமானதே. ஏனென்றால் பூமி சுழன்ற போதிலும் பூமியின் மீது செய்யப்படும் பயணங்களை அது பாதிப்பது இல்லை. ஆயினும் விமானங்கள் தரையை விட்டு கிளம்பிய உடன் பூமியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. எனவே பூமியின் சுழற்சி விமானப் பயணத்தைப் பாதிக்க வேண்டும்.
சான்றாக டில்லி விமானம் (டில்லி வடி ஹாங்காங் விமானம்) ஹாங்காங்கை நோக்கி மணிக்கு 650 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதே நேரத்தில் பூமியின் சுழற்சி விமானம் செல்லும் அதே திசையில் டில்லியை சுழற்றுகிறது. இப்போது விமானம் பறக்கும் அதே வேகத்தில் பூமியும் சுழலுவதாக இருந்தால் டில்லி விமானம் எப்போதுமே (டில்லியின் வானில் எங்கும் நகராமல் எப்போதும்) டில்லியின் வானத்திலேயே நின்றிருக்கும். இதிலிருந்து விண்ணில் பறக்கும் ஒருவர் கிழக்குத் திசையில் பறப்பதாக இருந்தால் பூமி சுழலும் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்க வேண்டும் என்றும் அப்போது மட்டுமே அவர் போக வேண்டிய இலக்கை எளிதாக அடைய முடியும் என்பதையும் அறியலாம்.
ஆனால் உண்மை என்னவெனில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1675 கிலோமீட்டர் என்பதாகும். இந்த நிலையில் டில்லி விமானம் ஒருமணி நேரம் பறப்பதாக இருந்தால் ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியும்? கீழ்க்கண்டவாறு இதை நாம் கணக்கிடலாம்.
விமானப் பயணங்களின் விபரீத விந்தைகள்
பூமியின் சுழற்சி வேகம் 1675 கிலோமீட்டர்கள். ஆயினும் விமானத்தை முந்தும் போது அதனுடைய சார்பியல் (சநடயவஎந யயீநநன) வேகம் (1675-650) 1025 கிலோமீட்டர்/மணி என்பதாகும். இதிலிருந்து டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்த போதும் அந்த விமானத்தால் டில்லியிலிருந்து முன்னேறிச் செல்ல முடியாமல் டில்லியிலிருந்து 1025 கிலோமீட்டர் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது என்பதைப் பார்க்கிறோம். இதை மற்றொரு விதத்தில் கூறுவதாக இருந்தால் டில்லி விமானம் புறப்படுவதற்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்ததோ அதைவிட 1025 கிலோமீட்டர் அதிக தூரத்திற்கு விமானம் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும்.
இப்போது ஹாங்காங் விமானத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். இந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து டில்லி நோக்கிப் பறக்கிறது. வேறு விதத்தில் கூறினால் பூமி சுழலும் திசைக்கு எதிர் திசையில் ஹாங்காங் விமானம் பறக்கிறது. எனவே இந்த விமானம் டில்லியை நோக்கி ஒரு மணி நேரத்தில் 650 கிலோ மீட்டர் முன்னேறிய போது டில்லியானது அதே நேரத்திற்குள் 1675 கிலோமீட்டர் தூரம் அந்த விமானத்தை நோக்கி முன்னேறுகிறது. எனவே இந்த விமானத்தின் சார்பியல் வேகம் இப்போது (650+1675) மணிக்கு 2325 கிலோ மீட்டர்களாகும். பூகோளத்தின் சுழற்சியால் இப்படிப்பட்ட விபரீத விளைவுகள் உள்ளபடியே ஏற்படுவதாக இருந்தால் ஹாங்காங் விமானம் 100 நிமிடத்தில் டில்லியை அடைய நேர்ந்திருக்கும்.
அதே நேரத்திலேயே டில்லி விமானமும் தரை இறங்குவதாக இருந்திருந்தால் அந்த விமானம் ஹாங்காங்கில் தரை இறங்கி இருக்க முடியாது. அந்த விமானம் தரை இறங்கிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5,500 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஹாங்காங் இருந்திருக்கும். இப்படிப்பட்ட விபரீத விந்தை (ஞயசயனடிஒ) நடைபெறுமாயின் டில்லி விமானம் 39 மணி நேரம் கழிந்த பிறகே ஹாங்காங்கை அடைய முடியும்! எவ்வளவு கேலிக்குரிய முடிவாக இருக்கும் இந்த முடிவு! ஆனால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நமது விமானப் பயணத்திற்கு ஏற்படுகிறதா? இல்லவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் பூமி சுழலவில்லை என்பது இதன் பொருளாகுமா? ஒருக்காலும் இல்லை! பூமி சுழல்கிறது என்பதை ஐயத்திற்கிடமின்றி நாம் திருக் குர்ஆனிலிருந்து விளங்கினோம். பூமி சுழலும் என்பது திருக்குர்ஆனுக்குத் தெரியும் என்பது உண்மையாக இருந்தால் அந்த சுழற்சியால் ஏற்பட வேண்டிய மேற்குறிப்பிட்ட விந்தை வினோதங்களும், அப்படிப்பட்ட பிரச்சனை எதுவும் நமது விமானப் பயணத் திற்கு ஏற்படாதவாறு இயற்கையின் ஏதோ ஒரு இயற்பாடு அதைத் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் திருக் குர்ஆனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? எனவே அதற்குரிய அறிகுறிகள் இங்கு காணப்படுகிறதா? என்பதே இங்கு எழும் நியாயமான வினாவாகும்.
இந்த வினாவிற்குக் கூட திருக்குர்ஆனில் பொருத்தமான பதில் கிடைத்ததென்றால் அதன் பிறகு சூரியன் பூமியைச் சுற்றவதாலேயே இராப்பகல் தோன்றுவதாகத் திருக்குர்ஆன் கூறுவதாக எவ்வளவு பலவீனமான அறிவுஜீவி கூறினாலும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்ததாகக் கூறுவது பொய். அல்லது ஆய்வில் அறிந்ததை அவர் நேர்மையாகக் கூறுவதாகச் சொல்வது பொய். இவ்விரண்டும் இல்லை யென்றால் அவர் அறியாதவர். அவருக்கு இந்த நூலைப் படிக்கத் தருவது நன்று.
பிரச்சனைகளைப் போக்கும் பூமியின் இயற்பாடு
இது வரை பூமியின் அச்சில் சுழற்சியால் நேரிட வேண்டிய விபரீத விளைவுகளைக் கண்டோம். அடுத்த படியாக பூமி தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றுகிறது என்பது நமக்குத் தெரியும். அதே நேரத்தில் பூமியின் சுற்றுப்புறங்கள் யாவிலும் விமானங்கள் பறக்கவும் செய்கின்றன. விமானங்கள் பூமியைச் சுற்றிப் பறக்கின்ற அதே நேரத்தில் பூமி மணிக்கு 1,08,000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வரும் பணியையும் செய்வதாக இருந்தால் பூமியைச் சுற்றிப் பறக்கும் விமானங்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே இருக்க முடியும்.
சான்றாக பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருவதற்காக நகர்ந்து செல்கிறதோ அந்தத் திசையில் பறக்கும் விமானங்கள் பூமியின் மீது மோதி நொறுங்கிப் போக வேண்டும். இதைப் போல் பூமி எந்தத் திசையில் நகர்கிறதோ அந்தத் திசையில் பறக்கும் விமானங்கள் ஒரு சில வினாடிகள் பூமியிலிருந்து தவறிப் போக வேண்டும். பூகோளத்தின் சூரியவலம் இப்படிப்பட்ட பிரச்சனைகளைத் தோற்றுவிக்கு மாயின் இந்தத் பூமியில் நமக்கு விமானப் பயணம் சாத்தியமாகுமா? ஆனால் நாம் இவ்விதப் பிரச்சனைகள் ஏது மின்றி விமானப் பயங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது விளக்கத் தேவையில்லை. இது உள்ளபடியே ஒரு வியப்பைத் தரும் உண்மை யாகும். இந்த வியப்பைத் தரும் உண்மையை நடத்தி வைக்கும் இயற்பியல் இயற்பாடு யாது? பூமியின் அச்சில் சுழற்சியும், சூரியவலமும் திருக்குர்ஆனுக்குத் தெரிந்திருக்கும் போது அவைகளினால் ஏற்படும் விபரீத விளைவுகளைத் தவிர்க்கும் இயற்பியல் இயற்பாடு குறித்து திருக்குர்ஆனுக்கு ஏதேனும் தெரியுமா? என்று ஒரு வினா எழுமானால் நாம் இது வரை கூறிய பிரச்சனைகளும் அந்தப் பிரச்சனைகளைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு மற்றொரு இயற்பியல் நிகழ்ச்சிப் போக்கு அதில் வடிவமைப்புச் செய்து நமது எதிர்கால விமானப் பயணங்களை சாத்தியமாக்குகிறது எனும் செய்தியைக் கூட விளங்கச் செய்யும் வகையில் திருக்குர்ஆன் எடுத்துக் கூறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
திடுக்கிடச் செய்யும் திருமறை அறிவியல்!
விமானங்களை உருவாக்க மனிதன் கற்றுக் கொள்வதற்கு ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன் இறங்கியது. எனவே பூமியின் சுழற்சியாலும், சூரியவலத்தாலும் ஏற்படும் பிரச்சனையை நாம் இங்கு விமானத்தை உதாரணம் காட்டி விளக்கியதைப் போன்று விளக்க முடியாது. எனவே இதற்காக திருக்குர்ஆன் விமானத்தை விடப் பொருத்தமான மற்றொன்றை சான்று காட்டி இப்பிரச்சனையை மிக அழகாக விளக்குகிறது. அந்த வசனங்கள் இதோ :
“சிறகுகளை விரித்தும் சுருக்கியும் தங்களுக்கு மேல் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? கருணைமிக்க இறைவனைத் தவிர அவைகளை (இடையூறுகளிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கவில்லை (ஆம்!) திண்ணமாக அவன் யாவற்றின் மீதும் பார்வை உடையவன்!
(67:19)
விமானம் என்றால் என்னவென்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலகட்டத்தில் இறங்கிய திருக்குர்ஆன் அக்கால மக்களுக்கும் எளிதாக விளங்கும் விதத்தில் பறவைகளைச் சான்று காட்டி அவை பூமியுடன் தடுத்து வைக்கப்பட வேண்டி உள்ளது என்பதை எடுத்துக் கூறியது எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மை என்பது இப்போது மிகத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறதன்றோ! பூமியானது ஆகாயத்தில் நகராமல் நின்றிருப்பதாகக் கற்பனை செய்யப்பட்டால் ஒரு ஆய்வாளனின் கண்களுக்கு இந்த வசனம் வெறும் பிதற்றலாகவே தென்படும். ஆனால் பூகோளத்தின் சுழற்சியும், நகர்வும் பற்றி போதிய அறிவைப் பெற்றுக் கொண்ட நவீன உலகில் வாழும் ஒருவர் இம்மாறையை ஆய்வு செய்யும் போது மேற்கண்ட வசனத்தில் உள்ளடங்கிய அறிவியலின் ஆழம் அவரது உள்ளத்தை திடுக்கிடச் செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதை இப்போது நம்மால் உணர முடிகிறதன்றோ!
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கும் நாம் பூமியின் சுழற்சியாலும் அதன் நகர்வாலும் அதன் மீது பறக்கும் பறவைகளுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பூமியின் ஈர்ப்பு விசையானது காற்று மண்டலத்திலும் பரவி இருப்பதால் பூமி காற்று மண்டலத்தையும் தன்னுடன் இணைத்தவாறே சுழல்கிறது. மேலும் சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே காற்று மண்டலத்தின் மிக பலம் வாய்ந்த கீழடுக்கில் பறக்கும் பறவைகளாயினும் விமானங்களாயினும் அவைகளின் நகர்வு (பறத்தல்) பூமியின் மீது ஓடும் வாகனங் களைப் போன்று பூமியுடன் பிணைக்கப்பட்டதைப் போல் நடைபெறுகின்றன.
பூமியின் ஈர்ப்பாற்றல் அதன் மீது பறக்கும் பறப்பவை களை நேரடியாக ஈர்ப்பதுடன் அவை பறப்பை நிகழ்த்தும் புலமாம் (குநைடன) காற்று மண்டலத்தையும் பூமியுடன் பிணைத் திருக்கும் விதத்தில் அவைகள் வடிவமைப்பு செய்யப்பட்ட காரணத்தால் பூமியின் மீது பறப்பவைகள் பூமியின் சுழற்சி மற்றும் அதன் நகர்வு போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வடிவமைப்பை இறைவன் தாமே செய்த காரணத்தால் இப்பறவைகளை பூமியின் சுழற்சியாலும் நகர்வாலும் ஏற்பட இருந்த இடையூறு களிலிருந்து இறைவன் தாமே தடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது மிகப் பொருத்தமான அதே நேரத்திமல் மிக சீரியஸான (ளுநசடிரள) நினைவூட்டல் என்பதும் இந்த வசனத்திலிருந்து நன்கு விளங்க முடிகிறது.
திருக்குர்ஆன் ஒரு அறிவியல் நூல் இல்லை என்பதும் அது ஒரு வேத நூலே என்பதும் நமக்குத் தெரியும். அவ்வாறிருந்தும் இவ்வளவு அபூர்வமான அறிவியல் உமைகளையெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே திருக் குர்ஆன் கூறியுள்ளது எனில் நாம் முன்னர் கூறியது போன்று திருமறையின் தோற்றுவாய் யார் எள்பதை அணு அளவும் ஐயத்திற்கிடமில்லாத வகையில் அடையாளம் காட்டு வதற்காகும்.
உதாரணங்களின் அபாரமான பொருட் செறிவு
இப்போது மற்றொரு அறிவியல் வசனம் இந்த அறிவிய லுடன் மிகத் துல்லியமாகப் பொருந்துவதைப் பார்க்கலாம். பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயம் காற்று மண்டலமாகும். திருக்குர்ஆ னில் ஒரு வசனம், “அல்லாஹ்வே பூமியை உங்களுக்கு வீடாகவும், வானத்தைக் கூரையாகவும் அமைத்தான் (40:64) எனக் கூறுகின்றது. திருக்குர்ஆன் கூறியவாறு பூமி ஒரு வீடாகவும் அதைச் சூழ்ந்துள்ள ஆகாயம் (காற்று மண்டலம்) அந்த வீட்டிற்குக் கூரையாகவும் இருந்து விட்டால் வீடாகிய பூமி சுழலும் போது அதன் கூரையும் அதனுடன் சுழன்றாக வேண்டும்! அவ்வாறே அந்த வீடு நகரும் போது அதன் கூரையும் அதனுடன் நகர்ந்தாக வேண்டும்!
திருக்குர்ஆனின் ஒவ்வொரு உதாரணமும் எவ்வளவு விரிவான ஆழமான பொருட்செறிவைத் தருகின்றது என்பதை இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறதன்றோ!
பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தும் பூமி சுழல்வதை யும் நகர்வதையும் ஏன் உணர முடியவில்லை என இந்த இடத் தில் மீண்டும் ஒரு முறை நாம் ஒரு வினா எழுப்பினாலும் இந்த வசனத்திலிருந்தே அதற்குரிய பதிலைப் பெற முடியும். ஆம்! ஒரு இரயில் வண்டியில் நாம் பயணம் செய்யும் போது வண்டியின் உள்ளே உட்கார்ந்து கொண்டு அதன் கூரையைப் பார்த்தால் வண்டி நகர்வதை நம்மால் உணர முடியாது. இதைப் போன்று காற்று மண்டலம் பூமிக்குக் கூரையாக இருப்பதால் நாம் பூமிக்கு அப்பால் எங்கு பார்த்தாலும் அதன் கூரைக்கு உள்ளேயே பார்க்கிறோம். சன்னலே இல்லாத கூரையாக காற்று மண்டலம் இருப்பதால் வெளிச்சம் இருக்கும் போது (பகல் நேரத்திலோ, நிலா வெளிச்சத்திலோ) நம்மால் நமது கூரைக் கப்பால் பார்க்க முடிவதில்லை. பூமியின் நகர்வுகளை நாம் அறியாதிருப்பதற்கு இது ஒரு பிரதான காரணமாகும். இவ்வாறு திருக்குர்ஆன் தேர்ந்தெடுத்த இந்த அரிய உதாரணம் பற்பல அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
யாராலும் இட்டுக்கட்ட இயலாதது
இந்த அத்தியாயத்தில் பூமிக்கு மேல் பறக்கும் எதுவும் பூமியிலிருந்து விலகிப் போகாமல் தடுக்கப்பட வேண்டும் எனும் திருமறை அறிவியலை நாம் விளக்கமாகக் கண்டோம். இந்தச் செய்தியை ஏழாம் நூற்றாண்டில் ஒருவர் கூற வேண்டுமானால் அவர் யாராக இருக்க வேண்டுமென்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த வேதம் இறைவனின் வார்த்தைகள் இல்லை யென்றால் இறைத் தூதர் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) இதை இறைவனின் பெயரால் இட்டுக் கட்டினார் என்றே பொருள்படும். ஆனால் ஒருவர் இவ் வேதத்தை இட்டுக்கட்ட வேண்டுமானால் இவ்வேதத்தில் கூறப்பட்டுள்ள நவீன விஞ்ஞான உலகில் மட்டும் கண்டு பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அறிவியல் உண்மை களையும், பூமி சுழல்கிறது; அது சூரியனைச் சுற்றி வருகிறது; மேலும் அதற்கு ஈர்ப்பாற்றல் உண்டு; அந்த ஈர்ப்பாற்றலால் அது அதனைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தையும் தன்னுடன் சுழற்றுகிறது என்பன போன்ற அறிவியல் உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய ஒருவரால் இந்த அறிவியல் உண்மைகளையெல்லாம் எப்படித் தெரிந்து கொள்ள முடிந்தது என்பதையும் திருக்குர்ஆன் இட்டுக் கட்டப்பட்டது எனக் கூறுபவர்கள் தெரிவிக்க வேண்டி யிருக்கும். இது சாத்தியமா? ஒருகாலும் சாத்தியமில்லை என்பதை விளக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட பற்பல நியாயமான காரணங்களாலேயே திருக்குர்ஆன் “இதை அவர் இட்டுக்கட்டி விட்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை… (32:3) என ஆணித்தரமாகப் பறைசாற்று கிறது! எனவே காய்தல் உவத்தலின்றி சிந்திப்பீர்களாக!
அத்தியாயம் 8
பேரண்டத்திற்குக் கடவுளின் தேவை
நாம் இது வரை பண்டைகால உலகை அடியோடு மாற்றி அமைத்த அறிவியல் உலகில் அறிவுப்புரட்சியை (ஐவேநடடநஉவரயட சநஎடிடரவடி) ஏற்படுத்திய சில அதி மகத்தான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்த்தோம். இதன் விளைவாகப் பேரண்டம் என்றால் என்ன? என்றும் அது எவ்வாறு தோன்றி யது? எவ்வாறு செயல்படுகிறது? என்பதையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் பேரண்டம் எதற்காகத் தோன்றியது? என்ற வினாவை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.
ஒரு விதத்தில் இந்த வினா சிலருக்கு விரும்பத்தகாத தாகவே தோன்றும். பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு உணவாக பூமியில் என்னென்ன இருக்கின்றன என்றும் அவைகளை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்றும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டிய போதும் இவைகளையெல்லாம் பூமி ஏன் உற்பத்தி செய்தது என்ற வினாவை புறக்கணிப் பதையே வசதியாகக் கருதுகிறார்கள். மழையின்றி வாழ இயலாதவர்கள் மழை ஏன் பொழி கிறது என்றோ காற்றில்லாமல் வாழ முடியாதவர்கள் காற்று மண்டலம் ஏன் தோன்றியது என்றோ சிந்தித்துப் பார்க்காமல் தவிர்த்து விடுவதையே வசதியாகக் கருதுகிறார்கள். எனவே இத்துறை தத்துவஞானிகளின் குத்தகையாக மாறியது. இவர்களின் கூற்றுகள் எதுவும் சர்ச்சைக்கு இடமில்லாமல் ஏற்கப்பட்டு வந்தன. ஆயினும் சமீபத்தில் தோன்றிய அறிவியலாளர்கள் சிலர் பேரண்டம் எதற்காகத் தோன்றி யது? என்ற கேள்வியை மட்டும் அறிவியலாளர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்? எனச் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று சில செய்திகள் தெரியாமல் போயினும் நாளையும் அவை தெரியப் போவதில்லை என ஏன் முடிவு செய்ய வேண்டும்? என சிந்திக்கின்றனர். அறிவியலாளர் ஷேப்லி அப்படிப்பட்ட ஒருவராகத் தெரிகிறார். அவர் ஓரிடத்தில் தமது கருத்தை இவ்வாறு தெரிவிக்கிறார்.
அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பு
பேரண்டம் என்பதென்ன? அது எவ்வாறு செயல்படு கிறது? பேரண்டம் எதற்காக?
முதல் கேள்வி பேரண்டம் என்பது என்ன? இந்த வினாவிற்கு அடிப்படையான வழிமுறையில் (நுடநஅயவேயசல றுயல) பொருட்கள், ஈர்ப்பு விசை, காலம், செல்களிலுள்ள உயிர்மப் பொருட்கள் (ஞசடிவடி ஞடயளஅ) போன்ற சிலவற்றைக் குறித்து முழுமையற்றதாயினும் ஓரளவு துணிச்சலான பதிலை (ய செயஎந யீயசவயைட யளேறநச) உருவாக்கி முணுமுணுக்கலாம்.
“எவ்வாறு? எனும் கேள்விக்கு இயற்கை விதிகளைப் பற்றியும், வெப்பத்தின் இறப்பையும் (னநயவா) காலக்சிகளின் விலகி ஓட்டத்தையும் விளக்க முயற்சிக்கலாம். ஆனால் மூன்றாவது கேள்வி பேரண்டம் “எதற்காக? என்பதற்கு “கடவுளே அறிவார்! என்று கூறி எங்களுக்கு வியக்கவே தோன்றுகிறது என்பதோடு இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட (சநளவசஉவநன) செய்தியே என்பது வெளிப்படையாகும். ஏதோ சில திருத்த முடியாத காரணத்திற்காக “பேரண் டம் எதற்காக? என்பது மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்? என எங்களை நாங்களே வினவ ஆரம்பிக்கிறோம். மேலும் இப்போதுள்ள தொலை தூரப் புதிர்கள் எக்காலமும் இரகசியங்களின் பட்டியலிலேயே நிலைநிற்கும் எனும் கருத்தை நாம் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? முன்னோர் களால் விளங்க முடியாமலிருந்த பலவும் நம்மைப் பொருத்த வரை நியாயமான பொதுப்படை சத்தியங்களாகவோ, இயக்கங்களாகவோ மாறி விட்டன. புதிர்களின் அடிப்படை மறைந்து விட்டது. நாம் கடினமாகப் பணியாற்றவும், சரியாக மற்றும் ஆழமாக சிந்திக்கவும் தொடர்ந்து முயற்சித்தால் பேரண்டத்தின் “பல பிரதான எதற்காக? களில் சிலவற்றிற்கு நாம் விடையளிப் பவர்களாக மாட்டோமா? தத்துவ ஞானிகள் இல்லை என்றே கூறக் கூடும். ஆயினும் நான் இந்த வினாவை நிலை நிறுத்து கிறேன். (பக்கம் – 5)
இயற்கையும் சில அடிப்படை உண்மைகளும்
இயற்கையும் படைப்பும் (படைப்புப் பணி) ஒரு நாணயத்திற்கிருப்பதைப் போன்று ஒரு படைப்பினத்தின் இரு புறங்களாகும். எனவே அவை இரண்டும் ஒரே நேரத்தி லேயே தோன்றுகின்றன. இந்த விளக்கத்திலிருந்து இரண்டு உண்மைகள் வெளிப்படுகின்றன. முதலாவது உண்மை பொருள் இல்லையேல் அப்பொருளின் இயற்கையும் இல்லை என்பதாகும். எனவே பொருட்கள் எதுவும் இல்லையென்றால் `இயற்கை என எதுவும் இல்லை என்பதும் அதன் பொருளா கும். இரண்டாவது பொருள் தோன்றுவதற்கு முன் அதன் இயற்கை ஒரு போதும் தோன்ற முடியாது என்பதாகும்.
மேற்கண்ட அடிப்படை உண்மைகளோடு கூட்டி வாசிக்க வேண்டிய மற்றொரு அடிப்படை உண்மை யாதெனில் எப்பொருளுக்கெல்லாம் `தோற்றம் என்ற ஒன்று உண்டோ அவை அனைத்திற்கும் `தோற்றுவாய் என்ற ஒன்றும் உள்ளது என்பதாகும். இந்த உண்மையில் உள்ளடங்கி நிற்கும் மற்றொரு செய்தி “தோன்றிய பொருட்கள் தோற்ற மடைவதற்கு முன்பே அதன் தோற்றுவாய் இருந்துள்ளது என்பதாகும். இப்போது நாம் எடுத்துச் கூறிய அடிப்படை உண்மைகளை ஓர் உதாரணத்தில் பொருத்திப் பார்த்து விளங்க முயற்சிப்போம்.
ஆகாயப் புரட்டு
பூமியில் உணவுப் பொருட்கள் தோன்றச் செய்வது யார்? என்ற கேள்விக்கு “அது பூமியின் இயற்கை என ஒருவர் பதில் கூறுகிறார் எனக் கொள்வோம். இக்கூற்று பூமியில் உணவுப் பொருட்களைத் தோற்றுவிப்பது பூமியின் குணமாகும் என்பதே அதன் பொருளாகும். இதையே இயல்பு என்றும் கூறுகிறோம்.
உணவுப் பொருட்களைத் தோற்றுவிப்பது பூமியின் இயற்கையே (பூமியின் குணமே) என பதிலளிக்கப்பட்டால் அதன் மறு பக்கத்தை நாம் “(பூமியின் இயற்கையே உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது என்றால்) பூமி தோன்றுவ தற்கு முன் (உணவைத் தோற்றுவிக்கும்) அதன் இயற்கையும் இருந்ததில்லை என வாதிக்கலாம்.
உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது பூமியின் இயற்கை எனக் கூறியவரிடம் நாம் தொடர்ந்து மற்றொரு வினாவை எழுப்புகிறோம். “உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது இயற்கையே என்றால் அந்த பூமியைத் தோற்றுவித்தது யார்? இந்த வினாவிற்கு அந்த நபர் “பூமியைத் தோற்றுவித்தது அது உள்ளடங்கி இருக்கும் காலக்சியின் இயற்கை! என பதிலளிப்பார். நாம் உடனே அந்த சங்கிலித் தொடரிலிருந்து அடுத்த கேள்விக்குச் செல்கிறோம். பூமியைத் தோற்றுவித்தது காலக்சியின் இயற்கையே என்றால் காலக்சியைத் தோற்றுவித்தது யார்? இந்த விளாவிற்கு அது “பேரண்டத் தின் இயற்கை என பதிலளிக்கப்படும். கடைசியாக “அனைத்தையும் தோற்றுவித்தது பேரண்டத்தின் இயற் கையே என்றால் பேரண்டத்தை தோற்றுவித்தது யார்? என்று கேட்கிறோம். இக்கேள்விக்கு பேரண்டம் தோற்றுவிக்க வேண்டிய தேவையே இல்லை! ஏனெனில் அது தோற்றமோ அழிவோ இல்லாதது என்றே பதிலளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இவ்வளவு நாளும் உலகில் பெருவாரியான மக்களை ஏமாற்றி வந்த அகில உலக ஆகாயப் புரட்டை பெரு வெடிப்புக் கோட்பாடு பச்சைப் பொய் என நிரூபித்து பேரண்டத்திற்கு தோற்றமும் முடிவும் உண்டு என உறுதி செய்து விட்டது. எனவே இதற்கு மேல் பேரண்டத்தைத் தோற்றுவித்தது யார்? என்ற கேள்விக்கு என்ன பதில் கூற முடியும்?
இயற்கையின் அழிவு
விடைகிட்டா வினாக்களின் ஒரே பதிலாக நாத்திகக் கோயில்கள் பூஜை செய்யப்பட்டு வந்த ஏக விக்கிரகமாம் “இயற்கையில் சரடைந்தால் இந்த வினாவிற்கு பதில ளிக்க முடியுமா? ஒரு காலும் முடியாது! ஏனென்றால் பேரண்டம் தோன்றியது பெரு வெடிப்பி லிருந்தே என்றும் அந்த பெருவெடிப்புக்கு முன்னால் எதுவுமே இருந்ததில்லை என்றும் அறிவியல் நிரூபித்து விட்டது. பெருவெடிப்புக்கு முன் ஒன்றுமே இல்லை யென்றால் பெருவெடிப்புக்கு முன் இயற்கையும் இல்லை என்பதே அதன் பொருளாகும். இல்லாத இயற்கையால் பெருவெடிப்பை எவ்வாறு நிகழ்த்த முடியும்? எனவே இயற்கை வாதம் இங்கு முற்றிலும் அழிவைத் தழுவி விட்டது. எனவே பேரண்டத்தைப் படைத்தது இயற்கை அன்றி ஆற்றல் மிகு படைப்பாளன் இருந்தாக வேண்டும் என்பது சர்ச்சைக்கு இடமில்லாத பேருண்மையாகும்.
இறக்கைகள் இல்லாமல் இராக்கெட் எவ்வாறு பறக்கிறது? எனக் கேட்டால் இறக்கைகளால் பறப்பது பறவைகளின் இயற்கை; இறக்கைகள் இல்லாமல் பறப்பது இராக்கெட்டின் இயற்கை என பதில் கூறப்படலாம். இதற்காக இராக்கெட்டைப் படைத்தது இயற்கை எனக் கூற முடியுமா? ஒரு பொருள் அது உயிருள்ளதாயினும், உயிரற்றதாயினும் அப்பொருளின் இயற்கைக் குணங்கள் யாவும் அப்பொருளின் படைப்பில் உடன் நிகழ்வுகளாகும். பொருள் இல்லாமல் இயற்கையும் இல்லை; இயற்கை இல்லாமல் பொருளும் இல்லை. பொருள் இல்லாத இயற்கை என்பது அர்த்தமற்ற வெற்று வார்த்தையாகும். எனவே பொருள் படைப்பினமே (படைக்கப்பட்டதே) எனில் அதன் இயற்கையும் படைப்பின மாகும். பொருளின் இயற்கைக்கு ஒரு போதும் அதன் படைப் பாளனாக இயலாது. பேரண்டம் என்பதும் ஒரு பிரமாண்டமான பொருட்குவியலாக இருப்பதால் அதற்கு ஒரு படைப்பாளன் இருந்தே ஆக வேண்டுமென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மீண்டும் பழைய பல்லவி
பெருவெடிப்புக் கோட்பாடும் இயற்கை பற்றி கூறப்பட்ட பொருள் விளக்கமும் உள்ளபடியே நாத்திகக் கோட்பாட்டிற்கு பலத்த அடியாகும். இந்தத் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள அவர்களிடம் எஞ்சி இருப்பது ஆதிகாலம் தொட்டு அவர்கள் எழுப்பி வந்த வெறும் ஒரு பாவனை வாதம் (அர்தமற்றதே ஆயினும் அர்த்தமுள்ளதைப் போன்று போலித் தோற்றத்தை உருவாக்கும் வாதம்) மட்டுமேயாகும். அந்த வாதம் இதோ : அனைத்தையும் தோற்றுவித்தது கடவுளேயானால் கடவுளைத் தோற்றுவித்தது யார்? கடவுளுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளங்காததால் அல்லது புறக்கணிப்பதால் எழும் வினாவே இதுவாகும்.
பேரண்டமும் இதிலுள்ள உயிருள்ளதும் இல்லாதது மான பொருட்கள் யாவும் சில அடிப்படைத் துகள்களால் உருவானவைகளே என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு உருவாகியுள்ள பொருட்களின் இயற்பியல் குணங்கள் பேரண்டத்தில் நிலவும் விதிகளுக்கு உட்பட்டவை யாகும் என்பதும் நமக்குத் தெரியும். மேலும் இப்பேரண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் இப்பேரண்டத்தின் விதிகளால் ஆளப்படுகின்றன என்பதும் அந்த விதியின் ஆளுகையி லிருந்து அவைகளால் தப்பிச் செல்ல முடியாது என்பதும் நமக்குத் தெரியும். இந்த விளக்கத்திலிருந்து பேரண்டமும் அதிலுள்ளவை யாவும் இப்பேரண்டத்தில் நிலை நிற்கும் விதிகளுக்கு அடிமைப்பட்டவை என்பது ஐயமறத் தெரிய வருகிறது.
எப்பொருளின் தோற்றமும் முடிவும் அதற்கிடைப்பட்ட காலத்தில் அதனுடைய வாழ்க்கையும் மீறமுடியாத விதி களுக்கு அடிமைப்பட்டுள்ளதோ அவை யாவும் படைப் பினங்களே என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை. ஆகவே இப்பொருட்களின் படைப்பாளன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதும் அப்படைப்பாளன் யார்? என்ற கேள்வியும் அர்த்தமுள்ளதாகும். ஆனால் படைப்பாளனுக்கும் கூட மற்றொரு படைப்பாளனைக் கற்பளை செய்யும் அறியாமையிலிருந்து எழும் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்ற கேள்வி மிகவும் அர்த்தமற்ற கேள்வியாகும்.
படைப்பாளனின் நிலை பப்பினங்களின் நிலையி லிருந்து ஒப்பிட முடியாத அளவிற்கு வேறு பட்டதும் உயர் நிலைத் தகுதி உடையதுமாகும். இதன் காரணமாக அவன் படைக்கும் ஆற்றலைக் கொண்டவனாகவும் அவனன்றி வேறு யாருமே எதையும் படைக்க இயலாதவர்களாகவும் இருக்கிறார் கள். (மனிதர்கள் நிறையவே படைத்துக் கொண்டிருந்தாலும் அப்படைப்பினங்களின் மிக இன்றியமை யாத மூலப் பொருட்களை (சயற அயவநசயைடள) அவர்கள் படைப்பதில்லை என்பதைக் கருத்தில் கொள்க) படைப்பினங்களிலிருந்து இவ்வாறு வேறுபட்டு இருப்பதாலேயே அவன் படைப்பினங் களாலும் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்பியல்பில் நிலை கொள்கிறான். அவனுடைய மாட்சிமை பொருந்திய “திரு உடல் படைப்பினங்களின் உடலைப் போன்று பேரண்டத் தில் உள்ள ஏதேனும் அடிப்படைத் துகள்களிலிருந்து தோன்றி யது இல்லை. ஏனெனில் பேரண்டத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்புக்கும் முன்னிருந்தே அவன் இருக்கிறான்.
படைப்பாளனாகிய இறைவன் எப்போதும் உள்ளவனா வான். அவனுக்கு தோற்றமோ முடிவோ இல்லை. அவனே அனைத்திற்கும் தோற்றுவாயாகவும் அவைகளின் வாரிசாகவும் இருக்கின்றான். மேலும் பேரண்டத்தில் செயல்படும் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்கும் படைப்பினங்களைப் போலன்றி அந்த விதிகளுக்கே தோற்றுவாயாகவும் அவைகளை ஆள்பவனாகவும் இருக்கிறான். ஆகவே எந்தெந்த காரணங்களால் படைப்பாளன் இல்லாமல் படைப்பினங்கள் தோன்ற முடியாதோ அவ்வகை காரணங்கள் அனைத்திலிருந்தும் அப்பாற்பட்டவனாகவும் தூய்மையான வனாகவும் இருக்கின்றான். எனவே படைப்பாளன் ஒரு போதும் படைக்கப்பட்டவனாக இருத்தல் இயலாத தாகும். இதையே வேறு வார்த்தையில் கூறினால் படைக்கப்பட்டவை எதுவும் படைப்பாளனாக முடியாது என்பதாகும்.
மேற்கண்ட விளக்கத்திலிருந்து படைப்பினங்களைப் பற்றி கேட்பதைப் போல் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்று கேட்பது முழு அபத்தமாகும் என்பதை எளிதாக விளங்கலாம்.
நாத்திக வாதத்தின் கணிதப் பிழை
படைப்பாளனைத் தோற்றுவிக்க மற்றொரு படைப் பாளன் தேவை என்ற வாதம் பிழையானதும் நகைப்பிற்குரிய தாகும் என்பதை மேலும் நுட்பமாக கீழ்க்கண்டவாறு விளங்கலாம்.
பேரண்டத்தைப் படைத்த படைப்பாளன் தோன்ற வேண்டுமானால் அவனைத் தோற்றுவிக்க மற்றொரு படைப்பாளன் தேவையென்று கூறினால் அந்த இரண்டாவது படைப்பாளனுடன் பிரச்சனை தீரப் போவதில்லை. அந்த வாதம் இரண்டாவது படைப்பாளனைத் தோற்றுவித்த மூன்றாவது படைப்பாளன் தேவையென்றும் அந்த மூன்றா வது படைப்பாளனைத் தோற்றுவித்த நான்காவது படைப் பாளன் தேவையென்றும் வாதிடத் தொடங்கி முடிவற்ற (கேவைந) படைப்பாளர்கள் தோன்ற வேண்டிய நிர்பந்தத்தை அந்த வாதம் ஏற்படுத்தும். வேறு வார்த்தையில் கூறினால் இப்பேரண்டம் தோன்ற வேண்டுமானால் அதற்கு முன் முடிவற்ற படைப்பாளர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். ஆனால் முடிவற்ற நிகழ்ச்சிக்கு முடிவு என்பதே இல்லையென்பதால் படைப்பாளர்கள் தோற்றுவிக்கப்படும் நிகழ்ச்சி இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாளையும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாலாயிரம் கோடானு கோடி வருடங்களுக்குப் பிறகும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு விதத்தில்!
ஆம்! படைப்பாளனால் தோற்றுவிக்கப்பட வேண்டிய பேரண்டம் இப்போது தோன்றி விட்டது! இது ஒரு மறுக்க முடியாத சத்தியமாகும். படைப்பாளர்களின் தோற்றத்திற்கே முடிவில்லையென்றால் அதன் பிறகு தோன்றி இருக்க வேண்டிய பேரண்டம் இப்போதே எவ்வாறு தோன்றி இருக்க முடியும்? எனவே “யாவையும் தோன்றுவித்தது கடவுளே என்றால் கடவுளைத் தோற்றுவித்தது யார்? எனும் கேள்வி ஒரு கணிதப் பிழையிலிருந்து உருவானதாகும். பேரண்டத் தைத் தோற்றுவித்தது கடவுள் என்றால் அந்தக் கடவுளைத் தோற்றுவிப்பதற்கும் ஒருவர் வேண்டும் எனும் வாதமும் கணித முறைப்படி பிழையான வாதமாகும்.
இரட்டை வேடம்
கடவுளின் தோற்றுவாய் பற்றி கேள்வி எழுப்புவது அபத்தமாகும் என்பதற்கு மற்றும் ஓர் காரணத்தைக் காண்போம். கடவுளின் இறைமை குணங்களில் `நிரந்தரன் (ஆதி அந்தம் இல்லாமல் என்றும் உள்ளவன்) என்பதும் ஒன்றாகும். நிரந்தரனான (நுவநசயேட) கடவுளை யாரேனும் தோற்றுவித்து இருப்பின் கடவுளுக்கு தோற்றம் (தோற்ற மெடுத்த நாள்) உண்டு எனப் பொருளாகி விடும். தோற்றம் உண்டென்றால் தோற்றமெடுத்த நாளுக்கு முன் கடவுள் இல்லை எனப் பொருளாகி விடும். கடவுள் என்றாலே `நிரந்திரன் (என்றும் உள்ளவன்) என்றிருக்கையில் அக் கடவுளைத் தோற்றுவித்தவர் யார் என்ற கேள்வி அபத்தமோ அபத்தமாகும்.
இங்கு நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு செய்தி நாத்திகத்திற்கு கடவுளைப் பற்றி பேசும் போது மட்டுமே இது போன்ற அபத்தங்கள் ஏற்படுகின்றன என்பதும் மற்றவை களைப் பற்றிப் பேசும் போது இப்படிப்பட்ட அபத்தங்கள் ஏற்படுவதில்லை என்பதுமாகும். சான்றாக நாத்திகர்கள் பேரண்டம் நிலையானது; என்றும் உள்ளது என்ற எண்ணத்தில் இருந்தவர்கள். எனவே பேரண்டம் எப்படித் தோன்றியது? என்று ஆத்திகர்கள் வின வினால் “பேரண்டம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை; ஏனெனில் அது என்றும் உள்ளது என பதில்கூறுவார்கள். ஆனால் என்றும் உள்ளவனான கடவுளைப் பற்றி கூறும் போது மட்டும் “கடவுள் மட்டும் எப்படி தோற்று விக்கப்படாமல் தோன்ற முடியும்? முடியவே முடியாது! என அடம் பிடிப்பார்கள்.
நமது அன்றாடக் காட்சி வழக்கில் ஒவ்வொரு நாளும் புதியன தோன்றி பழையன அழிந்து கொண்டிருக்கும் பொருட் குவியலால் தோன்றிய இப்பேரண்டம் தோற்றமோ முடிவோ இல்லாதது எனக் கூறி கடவுளைப் புறக்கணிப்பது அபாரமான அசட்டுத் துணிச்சலே என்றால் மிகையாகாது. இவ்வளவு நாளும் பேரண்டத்திற்கு ஒரு தொடக்கம் இருந்துள்ளது என்பதை அறிவியலால் நிரூபிக்க இயலாது போனதால் பேரண்டத்திற்கு கடவுள் இல்லை என அறிவியலின் பெயரால் பறை சாற்றிக் கொண்டிருந்த நாத்திகம் ஆத்திகர்களின் ஒழுக்க நெறியிலிருந்து (ஆடிசயடவைல) சமுக நெறிமுறை மற்றும் சம்பிரதாயங்கள் (நுவாஉள யனே சுவைரயடள) வரை யாவையும் கேலி செய்து கொண்டிருந்தது. ஆயினும் அக்கேலிச் சொற்கள் யாவையும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பெருவெடிப்புக் கொள்கை பூமராங் (க்ஷடிடிஅநசயபே) ஆக மாற்றி விட்டது. அறிவியலே தங்கள் மதம் என்று கூறிக் கொண்டிருந்த இவர்கள் இதற்கு மேல் கடவுட் கோட்பாட்டைத் தாக்க எந்த ஆயுதத்தைத் தேடப் போகிறார்கள்?
மானிடனின் விளங்கு திறன்
கடவுளை ஏற்பதில் நாத்திக சித்தாந்தத்திடம் இரண்டு பெரும் பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுள் முதலாவது பொய்யான குட்டிக் குட்டிக் கற்பனை தெய்வங் களைப் போலன்றி மெய்யான ஏக இறைவன் என்பது எந்த நபராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடிகாத அளவு அறிவும் ஆற்றலும் பொருந்திய ஒருவனாவான். இப்படிப்பட்ட ஒருவன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்? இப்படிப்பட்ட எந்த ஒன்றும் எந்த ஒருவரும் எங்குமே இருப்பதாக யாரும் பார்க்கவோ, கேள்விப்படவோ செய்யாத போது அதிலிருந்து விதிவிலக்காக கடவுள் மட்டும் அப்படிப்பட்ட அறிவோடும் ஆற்றலோடும் என்றென்றும் இருக்கிறார் எனச் சிலர் கூறு வதை மானிட அறிவால் புரிந்து கொள்ள முடியவில்லையே?
அறிவால் புரிந்து கொள்ள இயலாததை ஏற்பது முட்டாள்தனமாகும் என்பன போன்ற எண்ணங்கள் கடவுளை ஏற்பதில் நாத்திகத்தின் முதலாவது முட்டுக்கட்டையாகத் தெரிகிறது.
மானிட அறிவால் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தப்பெண்ணமே இந்த முட்டுக்கட்டைக்குக் காரணமாகும். மனிதனுடைய சிந்தனையும், அவனுடைய கற்பனையும் ஒரு எல்லைக்குட் பட்டதே அன்றி அந்த எல்லைக்கப்பால் உள்ளதைப் பற்றி சிந்திக்கவோ, கற்பனை செய்து பார்க்கவோ முடியாது என்பதை அறிவியலாளர்கள் பல உதாரணங்களால் எளிதாக விளங்கச் செய்கிறார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரம் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்கிறோம்; கற்பனையும் செய்கிறோம். ஆனால் ஒரு கோடி கிலோ மீட்டர் என்பதை எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை ஒரு போதும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. இதைப் போல பத்து அங்குல நீளமும், ஒரு அங்குல பருமனும் உள்ள மரக்கட்டையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். பருமனே இல்லாத பத்து அங்குல கட்டையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை.
அறிவியலாளர்கள் தரும் மேற்கண்ட உதாரணங்களி லிருந்து நமது சிந்தனைக்கும் விளங்கிக் கொள்ளும் ஆற்றலுக்கும் எல்லை உண்டென்பதை நன்கு விளங்கு கிறோம். நாம் பெற்றுள்ள விளங்கு திறன் (ருனேநசளவயனேபே யடைவைல) எல்லைக்குட்பட்டதாகும் என்பதையும் சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.
ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம்
வார்னர் ஹைசன் பர்க் (றுயசநேச ழநளைந க்ஷநசப) எனும் அறிவியலாளர் 1926ல் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை உருவாக்கினார். அநிச்சய தத்துவம் (ருஉநசவயவைல ஞசஉயீடந) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணு (நுடநஉவசடி) எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வேகமும் அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடத்தை யும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து அறிவியலாளர் ஹைசன் பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கி யுள்ளார். அணுவில் நடத்தப்பட்ட அந்த சோதனையை அறிவியலாளர் ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
“ஒரு துகளின் எதிர்கால இடம் மற்றும் அதன் வேகம் ஆகியவைகளை ஒருவர் முன்னறிவிக்க வேண்டுமென்றால் அந்த நபரால் அந்தத் துகள்களின் தற்போதைய இடமும், வேகமும் நுண்மையாக அளக்க இயல வேண்டும். இதைத் தெளிவாகச் செய்வதற்குரிய ஒரே வழி இப்பொருளின் மீது ஒளியைப் பாய்ச்சி பிராகாசிக்கச் செய்வதாகும். ஒளிக் கதிர்களில் சிலவற்றை அத்துகள் சிதறடித்து அது இருக்கும் இடத்தை அது அடையாளங்காட்டும். இருந்த போதிலும் ஒளிக் கதிர்களின் அலை முகடுகளுக்கு (றுயஎந ஊசநளவள) இடையிலுள்ள தூரத்தை விட நுண்மையாக அத்துகள் இருக்கும் இடத்தை ஒருவரால் அளக்க இயலாது. ஆகவே ஒரு துகளின் இருப்பிடத்தை நுண்மையாக ஒருவர் அளப்பதற்கு குறுகிய அளைநீளம் கொண்ட ஒளி அலைகள் தேவையாகிறது. இப்போது ப்ளாங்கின் குவாண்டம் கருது கோளின் படி (ணுரயவேரஅ ழலயீடிவாநளளை) ஒருவர் அவருக்குத் தோன்றியபடி குறைந்த அளவு ஒளியைப் பயன்படுத்த முடியாது. அவர் குறைந்த பட்சம் ஒரு குவாண்டம் ஒளியைப் பயன்படுத்த வேண்டும் . இந்த குவாண்டம் அத்துகளைத் தொல்லைப்படுத்தி அதன் வேகத்தை அனுமானிக்க முடியாத படி மாற்றி விடுகிறது. அதுவும் தவிர துகளின் இருப்பிடத்தை மேலும் நுண்மையாக அளப்பதற்காக ஒருவர் மேலும் குறுகிய அலைநீளம் கொண்ட ஒளியைப் பயன்படுத்தும் போது அது தனி குவாண்டத்தின் ஆற்றலை அதிகமாக்கும். இதன் விளைவாகத் துகளின் வேகம் அதிக அளவு பாதிக்கப்படும். இதையே வேறு வார்த்தையில் “துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும் எனக் கூறலாம். (பக்கம் : 58-59)
துகளின் இருப்பிடத்தை அளக்க முயன்றால்அதே நேரத்தில் அத்துகளின் வேகத்தை துல்லியமாக அளந்தறிய முடியாது. எனவே இச்சோதனையிலிருந்து ஹைசன் பர்க் அவர்கள் மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு என்பதை நிரூபித்தார்.
லாப்லாசின் கொள்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி
மனிதனின் புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு என அறிவியல் வாயிலாக நிரூபித்த வெர்னர் ஹைசன் பர்க் அவர்களின் அநிச்சய தத்துவத்தின் கண்டுபிடிப்பு உண்மையிலேயே புரட்சிகரமான தத்துவமாக அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயினும் பிரான்சு தேசத்து அறிவியலாளர் எம்.டி. லாப்லா (ஆயசளூரளை னந டுயயீடயஉந) என்பவரின் அதுவரை புகழ்வாய்ந்த கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அறிவியல் தீர்மானக் கோட்பாட்டால் (ளுஉநைவேகைஉ னநவநசஅளைஅ) கவரப்பட்ட சிலர் அநிச்சய தத்துவத்தில் வெறுப்புடனேயே எதிர்கொண்டனர். லாப்லாசின் கோட்பாடு இப்பேரண்டத்தை முற்றிலுமாக தீர்மானிக்கின்ற (விவரிக்கின்ற) விதிகள் இருக்கின்றன என்றும் அந்த விதிகளை நாம் நெருங்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறியது. எனவே இக்கோட்பாடு டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு போன்று இறைமறுப்பாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் பேரண்டம் என்பது முற்றிலுமாக நம்மால் விளங்கிக் கொள்ளக் கூடிய விதிகளால் உருவாகியுள்ளது. எனவே இதைப் படைப்பதற்கு இயற்கையை மீறிய மற்றொரு சக்தி தேவையில்லை என வாதிட்டனர். இந்த வாதத்தைத் தகர்த்து எறிகிறது ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம். இதைப் பற்றி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“நாம் பேரண்டத்தைப் பார்க்கின்ற விதத்திலேயே அநிச்சய தத்துவத்திற்கு ஆழமான சம்பந்தங்கள் (தாக்கங்கள்) உண்டு. இப்போது 50 வருடங்கள் கழிந்த பிறகும் கூட அவை பல தத்துவ ஞானிகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் கூட இது பெரும் விவாதத்திற்குக் கருப்பொருளாகவே இருக்கிறது. பேரண்டத்தின் தற்போதைய நிலையை ஒருவரால் சரியாக அளக்க முடியாவிடில் எதிர்காலத்தில் பேரண்டத்தில் நிகழப் போவதையும் அவரால் துல்லியமாகக் கூற முடியாது எனக் கூறும் அநிச்சய தத்துவம் அறிவியல் விதிகளால் முற்றிலும் தீர்மானிக்கப்பட்ட பேரண்டமாதிரி எனும் லாப்லாசின் அறிவியல் கனவை முடிவுக்குக் கொண்டு வந்தது. நம்மால் இப்போதும் கூட தற்போதைய பேரண்டத்தைத் தெல்லைப் படுத்தாமல் அதைப் பார்த்தறியும் (டீளெநசஎந) இயற்கையை மீறிய ஒருவர் (ளுடிஅந ளரயீநச யேவரசயட நெபே) இருக்கிறார் என்றும் அவருக்கு அனைத்தையும் தீர்மானிக்கும் விதிகள் உண்டென்றும் கற்பனை செய்யலாம். இருப்பினும் அப்படிப்பட்ட பேரண்ட மாதிரியில் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அக்கறை (ஐவேநசநளவ) கொள்வதற்கு ஒன்றுமில்லை. (பார்க்க பக்கம் : 59)
நமது அறிவால் அறிய முடியாததும், இயற்கையை மீறிய அறிவின் அதிபதியால் மட்டும் செய்யப்படுவதுமாகிய பணியில் நாம் அக்கறை காட்டுவதால் எவ்விதப் பயன்பாடும் இல்லை என வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டில் மேலும் முக்கியமான இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.
முதலாவது செய்தி பேரண்டத்தைப் புரிந்து கொள்ள நாம் செய்யும் முயற்சிகளே பேரண்டத்தின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி அதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள இயலாத நிலையை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. இதன் விளைவாக அநிச்சய தத்துவம் அனுமதிக்கும் எல்லைக்கப் பால் பேரண்டத்தைப் புரிந்து கொள்ள நாம் தீவிரமாக முயற்சி செய்தால் நம்மால் பேரண்டத்தைப் புரிந்து கொள்ள இயலாத நிலையும் தீவிரமடையும்.
எனவே பேரண்டத்தைப் புரிந்து கொள்வதில் நமக்கு மிகுதியான தவறுகள் ஏற்படுவதால் பேரண்டத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் செய்கின்ற தீவிர முயற்சிகளும் தோல்வி கண்டு பேரண்டத்தை அதன் யதார்த்த நிலையில் முற்றிலும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நமது எண்ணம் (அல்லது லாப்லாசின் அறிவியல் தீர்மானக் கனவு) ஒருகாலும் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகிறது.
இரண்டாவதாக ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம் நாம் வசித்துக் கொண்டிருக்கும் இப்பேரண்டம் நம்மால் முற்றிலும் விளங்கிக் கொள்ள முடிகின்ற விதிகளால் நிர்ணயிக்கப்பட்டதே எனும் லாப்லாசின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததில் பிரபஞ்சம் சாரா ஒருவனின் (பிரபஞ்சாதிதமானவன் – ளுரயீநச யேவரசயட நெபே) தலையீடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே கால இடத்தின் எல்லை அற்ற அடர்த்தி மற்றும் வளைவில் (ஐகேவைந னநளேவைல யனே ஊரசஎயவரசந டிக ளுயீயஉந-கூஅந) சிங்குலாரிட்டிக்குப்பதில் அநிச்சய தத்துவத்தின் செயற்பாடே நடைபெறுவதாக இருந்தாலும் கூட பேரண்டப் படைப்பில் கடவுளின் தேவை தவிர்க்க முடியாதது ஆகும் என்பதும் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து தெரிய வருகிறது. இருப்பினும் அநிச்சய தத்துவம் மெய்யான அறிவியல் கோட்பாடாக ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரு சிலர் கடவுள் பிரச்சனை வரும்போது அத்தத்துவத்திற்கு எதிராகச் சிந்தித்துக் கடவுளை மறுக்கும் போக்கைக் கடைபிடிக்கின்றனர் என்பது அபத்தமும் நகைப்பிற்குரிய முரண்பாடும் (ஞசயனடிஒ) ஆகும்.
அபத்தமோ அபத்தம்
நமது உள்ளங்கைகளால் அள்ளக் கூடியதும் நமது ஆய்வுக் கூடங்களில் சோதிக்கப்படக் கூடியதுமாகிய அற்பப் பொருளாம் அணுவின் இயற்பியலைக் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் அந்த அணுவையே படைத்தவனும் உள்ளங்கைகளால் மட்டுமன்றி ஐம்புலன் களால் கூட உணர்ந்து பார்க்க முடியாதவனுமாகிய இறை வனின் இயற்பியல் – படைக்கப்படுதலுக்கு உட்படாம லிருக்கும் அவனது இயற்பியல் – தனக்கு விளங்கியே ஆக வேண்டுமென அடம் பிடிப்பது அறிவுடமையாகுமா?
கடவுளின் உள்ளமை முழுமையாக எனக்கு விளங்காத வரை (யாராலும் படைக்கப்படாமல் எப்படித் தோன்றினான்) அப்படி ஒரு கடவுள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாதவரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதன்றோ?
மனித உடல் செல்களால் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதையும் அந்தச் செல்கள் பற்பல விதமான அணுக்களால் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதையும் நாம் அறிவோம். எனவே மனித உடலும் கூட அணுக்களால் தோற்றுவிக்கப் பட்டவை யாகும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மனிதனுடைய சொந்த உடலை உருவாக்கிய பொருளைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக அவன் படைக்கப்பட்டுள்ளதை அறிவியல் அவனுக்கு நிரூபித்துக் காட்டிய பிறகும் அவனைப் படைத்தவ னாக ஒருவன் இருக்க வேண்டுமானால் அப்படைப்பாளனின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பதை அவனால் முழுமையாக விளங்கிக் கொள்ளும் விதத்திலேயே இருக்க வேண்டுமென வாதிடுவது அபத்தத்திலும் அபத்தமன்றோ!
அற்பப் பொருளாம் அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப் படைத்த இறைவன் மனிதனைப் படைத்த தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் ஆற்றலுடன் மனிதனைப் படைத்திருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதை விட பேதமை வேறு என்ன இருக்க முடியும்?
பிரதான செய்திகள்
இத்தலைப்பில் நாம் இதுவரை விவாதித்தவைகளி லிருந்து மிக முக்கியமான 4 செய்திகளை ஐயமற விளங்கிக் கொண்டோம். அவற்றுள் முதலாவது பேரண்டம் முழுவதும் அறிவியல் விதிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்பதும் ஆளும் விதிகளுக்கு பேரண்டம் அடிமைப் பட்டிருப்பதால் அது ஒரு படைப்பினமே அன்றி வேறில்லை என்பதாகும்.
இரண்டாவதாக இயற்கை என்பது பொருட்கள் அனைத் திற்குமுள்ள இயற்பியல் குணங்கள் யாவையும் உள்ளடக்கிய பெயராகும். எனவே பொருட்கள் எதுவும் இல்லையேல் இயற்கையும் இல்லை. இதிலிருந்து பேரண்டம் தோன்றுவ தற்கு முன் எதுவும் இருக்கவில்லையென பெருவெடிப்புக் கோட்பாடு கூறுவதால் பேரண்டம் தோன்றுவதற்கு முன் இயற்கை என்ற ஒன்று இருந்தது என்றும் பேரண்டத்தைத் தோற்றுவித்தது இயற்கையே என்ற வாதமும் பிழையானது; மேலும் அது பெருவெடிப்புக் கோட்பாட்டால் முறியடிக்கப் பட்டு விட்டது.
மூன்றாவதாக பெருவெடிப்புக்கு முன் ஏதாவது இருந்ததாக வைத்துக் கொண்டால் கூட அதற்கும் பெரு வெடிப்பிற்கும் இடையில் எத்தொடர்பும் இருக்க முடியாது என பெருவெடிப்புக் கோட்பாடு கூறுவதால் (பக்கம் – 50, எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம்) பேரண்டத்தைத் தோற்றுவித்தது இயற்கையே என்ற வாதம் எவ்வகையிலும் செல்லத்தக்க தில்லை என்பது.
நான்காவதாக மனிதன் விளங்குதிறனுக்கு ஒரு எல்லை உண்டு என்றும் அதற்கப்பால் உள்ளதை நம்மால் விளங்க முடியாது என்பதையும் ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம் நிரூபித்துள்ளது. ஆகவே கடவுளின் `நிரந்தரன் (நுவநசயேட – தொடக்கமோ, முடிவோ இன்றி என்றென்றும் நிலைத் திருத்தல்) எனும் இயல்பு எவ்வாறு என நமக்கு விளங்க வில்லை என்பதற்காக இறைவளைன ஏற்க மறுப்பது அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரானதாகும். இவைகளை இந்த அத்தியாயத்தில் இது வரை நாம் விவாதித்தவை களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொண்டோம்.
மேற்கண்ட காரணங்களைத் தவிர கடவுளை ஏற்க வேண்டிய மற்றொரு இன்றியமையாத காரணத்தை முதல் இரண்டு அத்தியாயங்களில் நாம் கண்டுள்ளோம். நம்மால் புரிந்து கொள்ளப்படுகின்ற அறிவியல் விதிகளால் ஆளப்படுகின்ற இப்பேரண்டத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்பே கூட எவ்வாறு நிகழ்ந்தது என்பது இப்போது மட்டுமின்றி இனி எப்போதுமே நம்மால் தெரிந்து கொள்ள முடியாது என அறிவியல் வலியுறுத்தியும் கூட பெருவெடிப்பு நிகழ்ந்ததை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் நாம் அறிந்த அறிவியல் விதிகள் ஒன்றுக்குக் கூட கட்டுப்படாத வனும் அதற்கு மாறாக அவ்விதிகளையே தோன்றுவித்து நிர்வகிப்பவனுமாகிய இறைவனை நம்ப வேண்டுமானால் மட்டும் இறைவனுடைய உள்ளமையின் (நுஒளைவநஉந) அறிவியல் தமக்கு விளங்க வேண்டுமென வாதிடுவது சமானமில்லாத ஈடு இணையற்ற பேதமையாகும் என்பதை யும் ஐயமறக் கண்டு விட்டோம்.
அத்தியாயம் 9
மனிதனின் சுயரூபம்
சென்ற அத்தியாயத்தில் நாம் விவாதித்தது பேரண்டம் படைக்கப்பட்டதா? அல்லது தாமாகத் தோன்றியதா? என்பதைப் பற்றியதாகும். பேரண்டம் படைக்கப்பட்டதே என்றும் நாம் அந்த அத்தியாயத்தில் ஐயமறக் காண்டோம். பேரண்டம் தாமாகத் தோன்றியதாக இருந்திருப்பின் பேரண்டம் ஏன் தோன்றியது? என்பதை நாம் கண்டுபிடிப்பது அரிதாகும். ஏனெனில் இந்த ஆய்வில் தத்துவ ஞானிகள் மற்றும் அறிவியலாளர்கள் எனப் பலரும் ஈடுபட்டு ஆளுக் கொரு காரணத்தைக் கூறி அவற்றுள் எந்தக் காரணம் சரி என்று விளங்கிக் கொள்ள இயலாத சூழலை ஏற்படுத்தி விடும்.
சான்றாக ஒரு மோட்டார் கார் தாமாகவே உலகில் தோன்றி அதில் சிலர் பயணம் செய்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பாக்க நேரிட்டாலும் அந்த மோட்டார் கார் எதற்காகத் தோன்றியது என்பதை அப்போதும் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. அதே நேரத்தில் அந்த மோட்டார் கார் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்டிருந்தால் அக்கார் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை முற்றிலும் தவறில்லாமல் அக்காரை உருவாக்கிய நபரால் கூற முடியும். ஆயினும் மோட்டார் கார் என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது? என்பதை அறிவியலால் பிழையின்றி பதில் கூற முடிவதைப் போன்று மோட்டார் கார் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? எனும் வினாவிற்கு அறிவியலால் பதில் கூற முடியாது. எனவே பேரண்டம் என்பது இறைவனால் உருவாக்கப் பட்டது என்பதை ஐயமற விளங்கிக் கொண்ட நாம் பேரண்டம் என்பது என்ன? அது எவ்வாறு இயங்குகிறது? என்பதை அறிவியலிருந்து விளங்கிக் கொண்ட போதிலும் அது ஏன் தோற்றுவிக்கப்பட்டது எனும் வினாவை அதைப் படைத்த இறைவனைக் கேட்பதைத் தவிர வேறு வழியின்றி இருக்கிறோம்.
வானமும் பூமியும் மனிதனுக்காக
இறைவன் ஒருவனைத் தவிர இதற்கு பதில் சொல்லக் கூடிய தகுதி வேறு யாருக்கும் இல்லை என்ற நம்பிக்கையில் இறைவனின் நூலாகிய திருக்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் இதைக் குறித்து ஆணித்தரமாகப் பதிலளிக் கின்ற பற்பல வசனங்களை அதில் காண்கிறோம். சான்றாக சில வசனங்கள் வருமாறு :
“அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (சீரமைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான்.
(2:29)
“வானங்களில் உள்ளதையும் பூமியில் உள்ளதையும் உங்களுக்கு அல்லாஹ் வசப்படச் செய்ததையும் தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் விசாலமாக்கி இருப்பதையும் நீங்கள் காணவில்லையா?…
(31:20)
“வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தை யும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இதில் சிந்திக்கும் சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.
(45:13)
மேற்கண்ட திருமறை வசனங்கள் இப்பேரண்டம் மொத்தமும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டுள்ளதாக ஐயத்திற்கிடமின்றி கூறிவிட்டது. ஆயினும் வாசகர்கள் பலருக்கும் இந்த அறிவிப்பு அவ்வளவு எளிதாக – ஓர் ஆப்பிள் பழம் ஜீரணமாவதைப் போன்று ஜீரணமாகாது என்பது தெரிந்ததே. ஆப்பிள் பழம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது எனக் கூறினால் அதை எளிதாக விளங்க முடிகிறது. ஆயினும் துருவ நட்சத்திரம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது எனக் கூறினால் கடற்பயணம் பற்றிப் போதிய அறிவில்லாதவர் களால் அதை விளங்கிக் கொள்ள முடியாது.
இறைவனுக்கு இழப்பு இல்லை
பேரண்டம் படைக்கப்பட்டது மனிதனுக்காகவே என்பது எவ்வகையில் சரி என விளங்காமல் போனதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலாவது காரணம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளங்காமற் போனதாகும்.
இறைவனுக்கு தாம் படைத்த யாவும் அடிமைகளாக இருந்த போதிலும் மனிதனை மட்டும் மிக அழகிய கோலத்தில் (நௌவ ளவயவரசந) படைத்ததை திருமறை (95:4) யில் காணலாம். எனவே மனிதனின் மீது இறைவனுக்கு விசேஷ கவனம் உண்டு என்பது தெளிவாகிறது. இருப்பினும் இப்பேரண்டம் என்பது அளவிடற்கரிய மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடாக இருப்பதால் பொதுவாக மானிட உள்ளங் களில் ஓர் ஐயம் ஏற்படலாம். யாரேனும் ஒருவர் தன்னுடைய வெறும் அடிமைகளின் பயன்பாட்டிற்காக இவ்வளவு பெரிய ஆற்றலைச் செலவிடுவார்களோ என்பதே அந்த ஐயமாகும். இறைவன் என்ற படைப்பாளனை மனிதன் என்ற படைப்பினத்தோடு ஒப்பிட்டதே இந்த ஐயத்திற்குரிய முதற் காரணமாகும்.
மனிதன் செலவு செய்யும் எதையும் அவன் இழந்து விடுகிறான். ஆனால் இறைவனின் கஜானாவில் எதுவுமே குறைவதில்லை. ஆற்றல் யாவும் இறைவனுக்கே சொந்தம். நம்மால் அதை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது என்பதை விளக்கும் ஐன்டீனுடைய “ஆற்றலின் அழிவின்மை விதி கூறுகிறது. அனைத்திற்கும் அவனே வாரிசாக இருப்பதால் அவன் செலவிட்ட ஆற்றல் யாவும் முடிவாக அவனிடமே திரும்புகிறது. எனவே `இழப்பு என்பதே இல்லாத பாக்கியம் நிறைந்தவனே இறைவனாவான்.
ஒருவர் என்ன செலவு செய்தாலும் அவருடைய கஜானாவிலிருந்து எதுவும் குறைவதில்லை எனில் அவருக்கு செலவு செய்வதில் தயக்கம் இருக்காது. எனவே மானிடனின் பயன்பாட்டிற்காக இறைவன் இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்தான் என்று கூறினால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லை.
மானிடனின் மீதுள்ள இறைவனின் பரிவு
இதைத் தொடர்ந்து மக்கள் மனதில் ஏற்படும் இரண்டாவது ஐயம் யாதெனில் இறைவன் தன்னுடைய ஆற்றலிலிருந்து என்ன தான் செலவிட்டாலும் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்படுவதில்லை என்பது உண்மையே. ஆயினும் மனிதனுக்காக இவ்வளவு பெரிய ஆற்றலைச் செலவிடும் அளவிற்கு மனிதர்களின் மீது இறைவன் பரிவு கொண்டவனாக இருக்க முடியுமா? என்பதே அந்த ஐயமாகும். இந்த ஐயத்தைப் போக்கும் வசனங்களும் திருக்குர்ஆனில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சில வருமாறு :
“…. எனது அருள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது…
(7:156)
“நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோனுமாவான்.
(2:143)
“….. அருள் புரிவதை அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்…
(6:12)
மேற்கண்ட திருமறை வசனங்கள் இறைவன் தனது படைப்பினங்கள் மீது பொதுவாகக் கருணை உள்ளவன் என்பதையும், அதிலும் குறிப்பாக மனிதர்களின் மீது தனிப்பட்ட விதத்தில் பரிவும், கருணையும் கொண்டவன் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இறைவன் தனது படைப்பினங்களின் மீது காட்டும் அன்பின் ஆழத்தைப் பற்றி விளக்கம் அளிக்கும் போது “அல்லாஹ் தனது அன்பை நூறு பாகங்களாகப் பிரித்து அவற்றுள் ஒன்றை மட்டும் பூமிக்கு இறக்கி தொண்ணூற்றொன்பது பங்கை தன்னிடமே வைத்துக் கொண்டான். அந்த ஒரு பங்கைக் கொண்டே பப்பினங்கள் தங்களுக்கு இடையில் அன்பு காட்டு கின்றனர். என இறைத்தூதர் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) கூறியுள்ளார்.
(நூல் : சஹீஹ் புகாரி, எண் : 6000, 6469)
மேற்கண்ட நபி மொழியிலிருந்து ஒரு குழந்தையின் மீது அதன் தாய் காட்டும் அன்பைக் காட்டிலும் நூறு மடங்கு அன்பு நம் மீது இறைவனுக்கு உண்டு எனத் தெரிய வருகிறது. பொதுவாகப் படைப்பினங்களின் மீதும், குறிப்பாக மனிதர்களின் மீதும் இவ்வளவு அபாரமான ஆழம் காண முடியாத அளவு அன்புடையவனே இறைவன் எனில் இப்பேரண்டம் மிகமிக பிரமாண்டமானதாக இருந்த போதிலும் இதை மனிதனுடைய பயன்பாட்டிற்காக இறைவன் படைத்திருப்பின் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே அன்றி அதிலும் எவ்வித முரண்பாடும் காண்பதற்கில்லை.
மனிதன் ஒரு சமூக விலங்கு?
பேரண்டம் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டது எந்த வகையில் சரி என விளங்காமற் போனதற்கு மூன்றாவது காரணம் இம்மாபெரும் பேரண்டம் எந்த வகையில் மனிதனுக்குத் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிய அறியாமையாகும். இந்த அறியாமை நீங்க வேண்டுமாயின் மனிதன் யார்? என்பதை முதலில் மனிதர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மானிடனின் தோற்றத்திற்கு இம்மாபெரும் பேரண்டம் தேவையற்றது என்பதே அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் கருத்தாகும். இது எந்த அளவுக்குச் சரி என்பதற்கு எதிர்கால அறிவியல் உலகம் பதிலளிக்கட்டும். ஆயினும் மானிடனின் தோற்றத்திற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை யாயினும் அவன் தன்னுடைய வாழ்வின் குறிக்கோளை அடைய இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையாகும்!
கேட்டவுடன் சிலருக்காவது சிரிப்பை வரவழைக்கும் மேற்கண்ட பதிலைப் புரிந்து கொள்வதற்கு மனிதன் என்றால் யார்? என்பதைப் பிழையின்றி விளங்கிக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகும். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பெரும்பாலான கல்வியாளர்கள் கூட மனிதனுடைய தேவைகளைப் பற்றி பேசும் போது மனிதன் என்றால் யார்? என்பதைக் கருத்தில் கொள்ளமால் பேசுவதையே நம்மால் பார்க்க முடிகிறது.
உயிரியல் கலையில் உயிரினங்களை வகைப்படுத்தும் போது மனிதனை விலங்கினங்களின் பேரினத்திலுள்ள (ஹஅயட முபேனடிஅ) ஒரு சிற்றினமாக (ளுயீநஉநைள) சேர்க்கப் பட்டுள்ளது. மேலும் மனிதனுடைய வாழ்க்கை சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. எனவே மனிதன் ஒரு சமூக விலங்காகவே (ளுடிஉயைட ஹஅயட) அடையாளம் காணப்படுகிறான். மனிதனின் புறத் தோற்றமாகிய உடலமைப்பு மற்றும் வாழ்க்கை அமைப்பு ஆகியவைகளிலிருந்து மனித அமைப்பு மிகவும் வேறுபட்டதாகும். எனவே மிகச் சில சந்தர்ப்பங்களில் அவன் ஒரு சமூக விலங்கைப் போன்று காணப்படினும் அவனுடைய ஆன்மீக குணங்களில் (ளுயீசவைரயட ஊயசயஉவடிசள) அவன் எப்போதுமே தனித்தன்மை உடையவனாக காணப்படுகிறான்.
மானிடனின் தனிச்சிறப்பு
மனிதனைத் தவிர மொத்த விலங்கினங்களும் அவைகளின் இந்திரிய சுகங்களுக்காக (ளுநளேரடிரள ஞடநயளரசந) வாழும் போது மனிதர்கள் மட்டும் ஆத்ம சந்தோஷத்திற்கு அதிகமாக மதிப்பளிக்கிறார்கள். மனிதன் அவனுடைய படைப்பிலேயே பெற்ற கல்வித் திறனே அவனுக்கு இந்தக் குணத்தை ஏற்படுத்தியது. மனிதன் அவனுடைய ஆத்மாவைப் புரிந்து கொண்டு அதனுடைய மகிழ்ச்சிக்காக உழைப்பதனாலேயே அவன் ஏனைய உயிரினங்களிலிருந்து உயர் தகுதி பெற்றவனாகத் திகழ்கிறான். அவனுடைய இந்த உயர் தகுதியைப் பற்றி மெய்யான இறைவனின் கலப்பற்ற நூலாம் திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனைக் கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்! ஓதுவீராக! உமது இறைவன் பெரும் தயாள (குணமுடையவ)ன்! அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்! மனிதன் அறியாதவை களை (அவனுக்குக்) கற்றுத் தந்தான்!
(96:1-5)
அவன் (இறைவன்) மனிதனைப் படைத்தான். விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
(55:3-4)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதன் எவ்வாறு வேறுபடுகிறான் என்பதை அழகாக விளக்குகிறது. உலகில் இதுவரை அறியப்பட்டிருக்கும் முப்பது இலட்சம் உயிரின வகைகளில் வேறு எந்த ஒன்றுக்குமே வழங்கப்படாத சிறப்பம்சமே கற்கும் திறன் (புத்திமதி – ஐவேடடநஉவ) ஆகும். கல்வியை அவன் கலைக் கூடங்களிலிருந்தோ அல்லது வாழ்க்கை அனுபவங்களிலிருந்தோ பெற்றுக் கொள்கிறான். மனிதன் நினைவு திரும்பிய நாளிலிருந்து அந்த நினைவு நிலை நிற்கும் நாள் வரை கற்றுக் கொண்டே இருக்கிறான். ஏனெனில் கற்கும் திறன் அவனுடைய பிறவிக் குணமாகும். இறைவனால் அவனுக்கென்று தனிச் சிறப்பாக வழங்கப்பட்ட மாபெரும் கொடையாம் இந்தக் கற்கும் ஆற்றலைப் (புத்திமதி) பயன்படுத்துவதன் தரத்தைப் பொருத்தும் அதன் பிறகு கற்றபின் நிற்கும் தரத்தைப் பொருத்தும் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களிலிருந்து சிற்றில குணங்களில் வேறுபட்டு தனித்த மனிதர்களாக மாறுகின்றனர். மனிதர் களின் இந்த தனிச் சிறப்பான குணமாம் “தனித்துவமே அவனை ஏனைய உயிரினங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்துகிறது.
மனிதன் ஒரு அடையாளச் சின்னம் இல்லை
சான்றாக ஒரு நாய் அந்த இனத்தைச் சார்ந்த அனைத்து நாய்களுக்கும் ஓர் எடுத்துக் காட்டும் அடையாளமுமாகும். இதைப் போன்றே ஒரு நீர்வாழ் உயிரினம் அதன் இனத்தைச் சார்ந்த அனைத்து உயிரினங்களுக்கும் ஓர் அடையாளமாகும். இவ்வாறே ஒர் பறவை அதன் இனத்தைச் சார்ந்த அனைத்து பறவைகளுக்கும், ஒரு மரமோ, செடியோ அதனதன் இனத் தைச் சார்ந்த அனைத்து மரம், செடிகளுக்கும் எடுத்துக்காட்டு களும், அடையாளங்களுமாகும். ஏனெனில் அவை யாவும் அவற்றின் இனங்களுக் கிடையில் ஒன்றுக்கு ஒன்று சமமானவை; ஒரே மாதிரியானவை. ஆனால் மிகப் பெரிய வியப்பிற்குரிய செய்தி யாதெனில் இவ்வுலகில் இது வரை தோன்றியவர்களாயினும் இனி மேல் தோன்றப் போகிறவர்களாயினும் அவர்களில் ஒருவர் கூட மனிதனுக்கு எடுத்துக் காட்டாகவோ அடையாள மாகவோ இருக்க முடியாது என்பதாகும். மிகக் குறைந்த பட்சம் ஒரே பெற்றோருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்களில் ஒருவர் மற்றவருக்கு மாற்றாக, அடையாள மாக, எடுத்துக் காட்டாக முடியுமா எனக் கேட்டால் அப்போதும் கூட முடியவில்லை என்பதே அதற்குப் பதிலாக உள்ளது.
பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம் போன்றவற்றின் சிந்தனை மற்றும் செயல் வடிவங்களில் சமமானவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர் என்பது உண்மையே. இருப்பினும் அவர்களுக்கிடையிலுள்ள சமமற்ற சிந்தனை மற்றும் செயலின் தாக்கம் குறிப்பிட்ட சந்தர்ப்பங் களில் அவர்களை ஒருவரில் இருந்து மற்றவரை வேறு படுத்திக் காட்டும் அளவிற்கு பெரிதாகவே இருக்கும். எனவே எந்த மனிதரையும் மனிதர்களின் அடையாளமாக எடுத்துக் காட்ட இயலாது. மனிதர்களுக்கிடையிலான இந்த வேறு பாட்டைப் பற்றிய சிற்சில குறிப்புகள் திருக்குர்ஆனிலும் (39:9, 8:22, 2:171 நவஉ) காணமுடிகிறது.
மனிதனைத் தெரிந்து கொள்ளாத மாமேதைகள்
மானிடனுக்கு வழங்கப்பட்ட கற்கும் திறன் அவர்களை மந்தை வெளியிலிருந்து (ஊயவவடந குநைடன) தனித்தவர்களாக (ஐனேஎனைரயடள) ஆகும் திறனை வழங்கியதோடு மட்டுமன்றி இறைவனின் படைப்பினங்கள் அனைத்தையும் விட உயர் தகுதிக்கு உயர்த்தப்பட்டதையும் திருக்குர்ஆன் (2:30-34) சுட்டிக் காட்டுகிறது. மானிட வாழ்க்கைக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை. சூரியக் குடும்பமே போதுமானதாகும் எனச் சிலர் கூறுவதற்குக் காரணம் மானிடனின் மேற்கண்ட உயர் தகுதிகளைக் கருத்தில் கொள்ளாததன் விளைவேயாகும். தனித்த மனிதனை மனித இனத்திற்கு அடையாளமாகக் கொள்ளும் தவறிலிருந்து விஞ்ஞானிகளும் விடுபடவில்லை என்பதை நோபல் பரிசு பெற்ற டாக்டர். அலக்சி காரல் (னுச. ஹடயஒளை ஊயசசநட) கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“உண்மைகளின் உலகம் மற்றும் அவைகளின் அடையாளங்களின் உலகம் ஆகிய இரு உலகங்களில் நாம் வாழ்கிறோம். நம்மைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காக சீரான கவனம் மற்றும் அறிவியல் வாயிலான வேறுபடுத்தல் கள் ஆகியவைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அக்கருத்து மறுக்க முடியாத உண்மைக்கு தவறாக இருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உண்மைகள் அடையாளங்களாகக் கொள்ளப்படுவதோடு தனிமனிதனை (ஐனேஎனைரயட) மனித இனமாகவும் கருதப்படுகிறது. படித்தவர்கள், மருத்துவர்கள் சமூகவியலாளர்கள் ஆகியவர்களால் செய்யப்படும் பெரும்பாலான தவறுகள் இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து வருவனவாகும். விஞ்ஞானிகள் என்பவர்கள் இயந்திரவியலின் தொழில் நுணுக்கம், இரசாயணம், இயற்பியல் மற்றும் உடலியல் போன்ற துறைகளில் பழக்கப்பட்டவர்களாகவும், தத்துவம் மற்றும் புத்திமதியின் கலாச்சாரம் (ஐவேநடடநஉவரயட ஊரடவரசந) போன்றவை களில் பழக்கமில்லாதவர்களாகவும் இருப்பது வெவ்வேறு ஒழுக்க எண்ணங்களின் கலப்புக்கும் பொதுவானதைக் குறிப்பிட்டதில் இருந்து அடையாளம் காணாமற் போனதற்கும் பொறுப்பாகும்.
(பார்க்க : பக்கம் 176, மேன் தி அன்னோன், வில்கோ பப்ளிஷிங் ஹெவ், மும்பை, 1959)
பொதுவானதைக் குறிப்பிட்டதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாமற்போனதாலேயே தனி மனிதன் எனும் குறிப்பிட்டதை மனித இனம் எனும் பொதுவானதற்குரிய அடையாளமாக்கும் தவறுகள் நடைபெறுகிறது என்பதை டாக்டர் காரலின் எடுத்துக் காட்டிலிருந்து விளங்குகிறோம்.
மானிடனின் அறிவு எக்காலமும் வளர்ந்து வரும்
மனிதனை ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளமாக இருப்பதிலிருந்து உயிரினங்கள் யாவற்றையும் விட மேலான தகுதிக்கு அவனை உயர்த்திய அவனுடைய கற்கும் திறனைப் பற்றி முன் பக்கங்களில் கண்ட திருக்குர்ஆன் வசனங்களின் கருத்து நம் கண் முன்னால் நிறைவேறி வருகிறது. திருக்குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் மிருகங்களின் மீதே பயணம் செய்து கொண்டிருந்தனர். இன்று உலகில் காணப்படும் வாகனங் களை அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க இயலாதவர் களாகவே இருந்தனர். ஆனால் இன்றைய உலகம் மிருகங் களில் பயணம் செய்வதை விட வசதியாக அவர்களின் மோட்டார் கார்களில் பயணம் செய்கிறார்கள் என்பதோடன்றி இதுவரை தங்களை சுமந்து கொண்டிருந்த மிருகங்களைக் கூட தங்கள் பார ஊர்திகளிலும் இரயில்களிலும் சுமந்து செல்லும் ஆற்றலைப் பெற்று விட்டார்கள்
மானிட வரலாற்றில் அவன் பெற்ற இந்த மாபெரும் முன்னேற்றம் எழுதுகோலின் உதவியைக் கொண்டு மனிதன் அறியாதிருந்ததை இறைவன் அவனுக்குக் கற்றுத் தந்தான் எனக் கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தின் நிறைவேற்றமே அன்றி வேறில்லை. அவ்வாறே மனிதனால் ஆகாயத்தில் எவ்வாறு பறக்க முடியும் என்ற கலையையும் நமது முன்னோர் கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்றைய உலகின் விமானங்களும், இராக்கெட்களும் மனிதன் அறியாதிருந் ததை கல்வியின் துணை கொண்டு இறைவன் அவனுக்குக் கற்று தருகிறான் என்று திருக்குர்ஆன் கூறிய வார்த்தைகளின் நிறைவேற்றமாகும்.
ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள பூமியின் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்து கொண்டு மனிதர்களால் நேருக்கு நேர் பேசும் கலையையும் நம் முன்னோர்கள் அறிந்திருக்கவில்லை. ஆயினும் மனிதனின் கல்வித் திறன் அதை அவனுக்கு சாத்தியமாக்கியது.
இதைப் போன்று மானிட அறிவின் சாதனைகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் கூறமுடியும். மேலும் இன்று நம்மால் அறிந்து கொள்ள முடியாமலிருந்தும் பல கலைகளை திருக்குர்ஆனின் வெளிச்சத்தில் (96:3-4) பார்க்கும் போது நாளைய மனிதர்கள் அறிந்து கொள்ளப் போகிறார்கள் என்பது திண்ணம். எனவே மனிதனின் அறிவு என்பது எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் இயல்பைப் பெற்றதாகும்.
மனிதனின் அறிவை அவனுடைய புத்திமதியின் (ஐவேநடடநஉவ) உற்பத்திப் பொருளாகக் கருதினால் அதனுடைய உற்பத்திப் பணிகளே `கற்றல் (டநயசபே) ஆகும். (இந்த விதத்தில் பார்த்தால் அவனுடைய அறிவுக்கு மூலப் பொருள் யாது? மூலப் பொருள் இல்லாமல் உற்பத்தி நடைபெறா தன்றோ?) இதன் காரணமாகவே இறைவன் மனிதனுக்கு எழுதுகோலின் உதவியைக் கொண்டு கற்றுத் தந்தான் எனக் கூறினான். `எழுது கோல் என்பது கல்வியின் அடையாளம் என்பதை நாம் அறிவோம்.
எழுதுகோல்களின் மதிப்பு
ஐன்டீனுடைய சார்பியல் தத்துவங்கள் பெரும் மூளையைக் குழப்பும் (அடிளவ அனே டிபபடபே) கோட்பாடாகும் என்பதை நாம் அறிந்துள்ளோம். மிகச் சில அறிவியலாளர் களைத் தவிர மிகப் பெரும்பாலான அறிவியலாளர்களுக்குக் கூட அவருடைய கோட்பாடுகள் விளங்காதவைகளாகவே இருந்தன. இருந்த போதிலும் அந்த கோட்பாடுகள் முழுமை யாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவரை உலகின் தலை சிறந்த விஞ்ஞானியாக ஒப்புக் கொள்ளச் செய்ததற்குக் காரணம் அவர் வரைந்து காட்டிய அவரது தத்துவங்களி லிருந்து வெளிப்பட்ட அவரது அறிவுத் திறனாகும்.
அணுகுண்டு தயாரிப்பது சாத்தியமே என்பதை விளக்கும் சில தாள்களை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரூவெல்டுக்கு (சுடிடிளந ஏநடவ) ஐன்டீன் 1939, ஆகட் மாதத்தில் எழுதிய போது அமெரிக்க ஜனாதிபதிக்கு இருநூறு கோடி டாலர் செலவில் மன்ஹாட்டன் திட்டத்தை ஆரம்பிப்பதில் எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. அணுகுண்டு தயாரிப்பது சாத்தியமே என்பதற்கு உலகின் எந்த ஒரு விஞ்ஞானியாலும் உத்தரவாதம் தர முடியாமலிருந்தும் அது மட்டுமன்றி ஐன்டீன் எழுதிய சமன்பாடுகளைக் கூட விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தும் ஐன்டீன் உடைய பேனாவிற்கு ரூவெல்ட் வழங்கிய மாபெரும் கண்ணியமே 200 கோடி டாலர் செலவிலான மன்ஹாட்டன் திட்டம் எனக் கூறினால் அது மிகையாகாது.
மன்ஹாட்டன் திட்டம் நிறைவேற்றப்பட்ட போது ஐன்டீனின் அறிவாற்றலைப் புகழ்ந்து பலரும் பாராட்டினர். ஜராம். எ. மெயர் (துநசடிஅந. ளு. ஆநலநச) எனும் அறிவியல் எழுத் தாளர் (ருளுஹ) தன்னுடைய நூல் ஒன்றில் “இந்த யுகத்தின் மாபெரும் அறிவாளியின் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு சில சமன்பாடுகளின் (ஐஉடிஅயீசநாநளேடெந நுளூரயவடிளே) முகவிலைக்கென்றே முற்றிலும் இருநூறு கோடி டாலர் செலவிடப்பட்டது (பக்கம் 73 டீக ஹக்ஷஊ டிக ஞாளைஉள, யீலசயஅனை ஞரடெஉயவடிளே, ஐஉ, சூநற லுடிசம, ருளுஹ, 1944) எனப் புகழ்ந்துரைத்தார்.
பேரண்டத்தில் அறிவை விடச் சிறந்தது எதுவுமே இல்லை என்பதற்கு இது வரை கூறியவை சில உதாரணங் களாகும். இந்த உதாரணங்கள் மனிதன் அறிவுக்காக உழைக்கிறான் என்பதையும் அந்த அறிவு மனிதர்களை பூமியின் மீது அதிகாரம் படைத்தவர்களாக ஆக்கியுள்ளது என்பதையும் நிருபித்த போதிலும் மனிதனுக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் எப்படித் தேவைப்படுகிறது எனும் கேள்வி இப்போதும் நம்முன் நிலை பெற்றுள்ளது.
சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லும் மானிடத் தேவைகள்
பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு பூமியைத் தவிர சூரியனும் சந்திரனுமே போதுமானதாக இருந்தது. கடற்பயணயம் செய்யக் கற்றுக் கொண்ட போது வழிகாட்டுவதற்காக சில நட்சத்திரங்கள் தேவைப்பட்டன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கலீலியோ தொலை நோக்கியை உருவாக்கிய போது சூரியனைப் பற்றியும் சூரியனைச் சுற்றி வரும் கோள்களைப் பற்றியும் அதிகமான செய்திகளைச் சேகரிக்க முடிந்தது. கலீலியோ விட்டுச் சென்ற அறிவு அவர் இறந்த அதே வருடத்தில் பிறந்த நியூட்டனுக் குள் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இதன் விளை வாக பூமியை நிலைபெறச் செய்வதற்கு சூரியக் குடும்பம் தேவை; எனவே மனிதன் வாழ வேண்டுமானால் அதற்காக ஒரு சூரியக் குடும்பமே தேவை என விளங்கிக் கொள்ள முடிந்தது.
அவன் மனிதனாக இருந்ததால் அறிவுக்கான வேட்கை அவனை இடைவிடாமல் உழைக்கச் செய்தது. இதன் விளை வாக அவனுக்கு அவனுடைய படைப்பாளனாம் இறைவன் வழங்கிய எக்காலமும் வளர்ந்து செல்லும் (நஎநச நேசநயளபே) அறிவு நட்சத்திரங்களைப் பற்றியும் காலக்சியின் தோற்றத் தைப் பற்றியும் பற்பல முக்கியமான செய்திகளை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அவனுக்குக் கற்றுத் தந்தது.
இந்தச் செய்திகளின் உதவியால் மானிடனின் தோற்றத் திற்கு வெறும் சூரிய குடும்பம் மட்டும் போதாது என்றும் மனிதன் பூமியில் தோன்ற வேண்டின் அதற்காக கோடிக் கணக்கான நட்சத்திரங்களையும் கருங்குழி (க்ஷடயஉம ழடிடநள) களையும் குவாசர்களையும் (ணுரயளநசள) வால் நட்சத்திரங் களையும், நெபுலாக்களையும், எண்ணிலடங்காத விண் கற்களையும், இன்ன பிற பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான காலக்சியே தேவைப்படும் என அறிந்து கொண்டான். இதைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்.
“நமது வாழ்க்கைக்கு சூரியக் குடும்பம் நிச்சயமாக ஒரு பிரதான தேவையாகும். ஒருவர் இந்தப் பிரதான தேவையை மொத்த காலக்சிவரை விரிவடையச் செய்யலாம். ஏனெனில் கனமான தனிமங்களைத் தோற்றுவித்த முற்கால நட்சத்திரங் கள் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் மற்ற காலக்சி கள் யாவும் எந்த வகையிலும் தேவையானதாகத் தோன்ற வில்லை. மேலும் பேரண்டம் பேரளவில் எல்லா திசைகளி லும் இவ்வளவு சீராக இருக்க வேண்டிய தேவையும் இல்லை
(பக்கம் : 133)
மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் எடுத்துக்காட்டில் மானிட வாழ்க்கைக்கு மொத்த காலக்சியும் தேவை எனக் குறிப்பிடப்பட்டது மானிடனின் தோற்றத்தைக் கருத்தில் கொள்ளப்பட்டதனால் ஆகும். மனித உடலில் பேரளவிலும் (ஆயஉசடி நடநஅநவேள) சிற்றளவிலும் (ஆஉசடி நடநஅநவேள) ஏராளமான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றுள் சிற்றளவு தனிமங் களில் கனமான தனிமங்களாம் தங்கம், பிளாட்டினம் போன்றவைகளும் இருக்கின்றன. இக்கனமான தனிமங்கள் தோன்ற வேண்டுமாயின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் அழிவுற்று அந்த அழிவிலிருந்து பிறக்கும் இரண்டாம் அல்லது முன்றாம் தலைமுறை நட்சத்திரங்கள் தோன்ற வேண்டுமென நாம் முன்னர் கண்டுள்ளோம். இவ்வாறு ஒரு தலைமுறை நட்சத்திரங்கள் அழிந்து அவைகளின் அழிவிலிருந்து மற்றொரு தலைமுறை நட்சத்திரங்கள் பிறக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற வேண்டுமாயின் காலக்சியின் அமைப்பு இன்றியமையாததாகும். எனவே மானிடனின் உடலைத் தோற்றுவித்த பொருட்களைக் கருத்தில் கொண்டே மனித வாழ்க்கைக்கு இந்த மொத்த காலக்சியும் ஒரு பிரதானத் தேவையாகும் எனக் கூறப்பட்ட தற்குக் காரணமாகும்.
மானிட வாழ்க்கை நடைபெறுவதற்கு ஒரு காலக்சியே தேவையாகும் என இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவை ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள விஞ்ஞானிகளால் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆயினும் திருக்குர்ஆன் கூறியதற் கிணங்க மனிதன் பெற்றுள்ள வளர்ந்து கொண்டே இருக்கும் அவனது அறிவு இருபதாம் நூற்றாண்டில் ஒரு காலக்சியே அவனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும் என அறிவுறுத்தியது. இதற்கு மேல் வருங்காலத் தலைமுறை யினரின் வளர்ந்து கொண்டிருக்கும் அறிவு இக்கூற்றை உறுதிப்படுத்துகிறதா அல்லது மாற்றியமைக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும். ஆயினும் நமது நிலை இதிலிருந்து வேறுபட்டதாகும்.
சமூக வாழ்க்கை மனிதனின் குத்தகை இல்லை
மனிதனின் தேவை யாது என நிர்ணயம் செய்யும் போது குறைந்த பட்சம் முதலாவதாக “மனிதன் என்பது என்ன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே அவனுடைய தேவை என்ன என்பதை சரியாக நிர்ணயிக்க முடியும் என்பது விளக்கத் தேவையில்லை. பெரும் கல்விமான்கள் கூட இந்த இடத்தில் தவறி விடுகிறார்கள் என்பதை டாக்டர் காரலின் எடுத்துக் காட்டில் நாம் கண்டோம். கற்றவர்கள் மத்தியில் வழக்கமாக மனிதன் ஒரு சமூக விலங்காக (ளுடிஉயைட ஹஅயட) குறிப்பிடப்படுகிறான். உள்ளபடியே மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதற்கப்பால் எதுவும் இல்லை எனில் இம்மாபெரும் பேரண்டம் அவனுக்குத் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் ஒரு சமூக விலங்கு எனும் நிலைக்கு அப்பால் அவனிடம் ஏராளமான குணங்கள் நிறைந்துள்ளன. இந்தக் குணங்களே அவனை `மனிதன் எனும் பெயருக்குத் தகுதி வாய்ந்தவனாக இருக்கச் செய்கிறது. எனவே மனிதனைப் பொருத்தவரை `சமூக விலங்கு எனும் சொல் அவனைக் குறிப்பாக அடையாளம் காட்டுவதில்லை.
மனிதன் பெற்றுள்ள எக்காலமும் வளரும் அறிவு அவனைத் தவிர வேறு சில உயிரினங்களும் சமூக வாழ்க்கையை மேற்கொள்வதைக் கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவைகள் தங்களது இராச்சியத்தில் (தேன்கூடுகளில்) தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தி பணிகளை ஈடுபட்டு ஒரு ஆட்சித் தலைவிக்கு (இராணித் தேனீ) கீழ் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே. இதைப் போன்று எறும்புகளின் பேரினத்தில் ஒரு குறிப்பிட்ட சிற்றினம் தேனீக்களினும் சிறந்த முறையில் சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பீட்டர் ஃபார்ப் (ஞநவநச குயச, ருளுஹ) எனும் அறிவியல் எழுத்தாளர் நிலத்தை உழுது உணவு உற்பத்தி செய்யும் ஒரு வகை எறும்புகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“இவைகள் காளான் (குரபேரள) வளர்க்கும் எறும்பு களாகும். சில செல் எறும்புகளையும் (கூநசஅவைநள) மனிதர் களையும் தவிர இந்த உலக உருண்டையின் மீது தங்களின் அன்றாட உணவை உற்பத்தி செய்யும் ஒரே உயிரினம் இது ஆகும். அவைகள் காளான் பாத்திகளை உருவாக்குகின்றன; விதைக்கின்றன; களை எடுக்கின்றன; உரம் இடுகின்றன; விளைச்சல் நன்றாக இருக்கும் போது கூடுதல் தோட்டங் களுக்காக புதிய நிலத்தைச் சீர்படுத்துகிறது. 5,00,000 எறும்புகளின் விருத்தி அடைந்த ஒரு நகரத்திற்கான ஏக உணவாக இருக்கக் கூடிய அதன் விளைச்சலை அவை அறுவடை செய்கிறது. மனிதன் தோன்றுவதற்கு பத்து லட்சம் வருடங்களுக்கு முன்னிருந்து மண்ணின் விவசாயிகளாக வந்த இவைகள் அவைகளின் விவசாயத்தை குற்றமற்ற முறையில் செய்கின்றன
(பக்கம் : 72, லிவிங் எர்த், பிரமிட் பப்ளிகேஷன், யு.எ.ஏ)
மேற்குறிப்பிடப்பட்ட விபரங்களிலிருந்து சமூக வாழ்க்கை என்பது மனிதனின் தனிச் சிறப்பான அடையாளக் குறியீடு இல்லை என்றும் உலகைப் பொருத்தவரை அவனு டைய அடையாளக் குறியீடு (ஐனநவேகைஉயவடி) `புத்தியுள்ள உயிரி னம் (ஐவேநடடபைநவே க்ஷநபே) என்பதாகும் எனத் தெரிய வருகிறது.
மானிடனின் வரைவிலக்கணத்தின் முக்கியத்துவம்
வாசகர்கள் பலரும் இப்போதும் கூட `மனிதன் என்ற சொல்லின் வரைவிலக்கணம் கூறுவது நமது தலைப்போடு எந்த வகையில் தொடர்பு கொள்கிறது என்ற ஐயத்தில் இருக்கக் கூடும். ஆனால் `கடவுள் இருப்பது உண்மை யானால் இவ்வளவு பெரிய பேரண்டத்தை ஏன் படைத்தார்? இப்பேரண்டம் ஏதேனும் விதத்தில் மனிதனுக்குத் தேவைப்படுகிறதா? என்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்குரிய பதில் `மனிதன் என்ற சொல்லில் வரைவிலக்கணத்திலேயே புதைந்து கிடக்கிறது. எனவே மனிதன் என்ற சொல்லின் வரைவிலக்கணம் ஐயத்திற்கிட மின்றி விளங்கிக் கொண்ட பின்னரே இங்கு எழுப்பப் பட்டிருக்கும் சர்வதேச பிரசித்தி பெற்ற கேள்வியின் விடைக்குள் நாம் செல்ல முடியும்.
மனிதனின் வரைவிலக்கணத்திற்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் உண்டானதற்குக் காரணம் மனிதன் ஒரு சமூக விலங்காக அறிமுகப்படுத்தப்படுவதும் ஒரு குறிப்பிட்ட ஏதேனும் மனிதனை மனித இனத்திற்கு அடையாளமாக (ளுலஅடிட) கூறப்படுவதுமாகிய தவறான போக்குகளுமாகும். டாக்டர். காரல் தன்னுடைய அதே புத்தகத்தில் மேலும் கூறுகிறார்.
“மனித இனம் என்பது இயற்கையில் எங்குமே காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் தனிமனிதர்கள் மட்டுமே உள்ளனர். மனித இனத்திலிருந்து தனி மனிதன் வேறுபட்டவனாவான். ஏனெனில் `அவன் என்பது ஒரு உறுதிவாய்ந்த உண்மை நிகழ்ச்சியாகும். அவன் செயலாற்று கிறான்; நேசிக்கிறான்; துன்புறுகிறான்; சண்டையிடுகிறான்; செத்துப் போகிறான். இதற்கு மாறாக மனித இனம் என்பது நமது மனங்களிலும், புத்தகங்களிலும் வாழுகின்ற அர்த்தமற்ற (ஞடயவடிஉ ஐனநய) கருத்தாகும்.
(பக்கம் : 175, மேன் தி அன்னோன்)
டாக்டர் காரல் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டு ஒரு எளிய உண்மையாகும். சான்றாக உங்கள் கார் ஓட்டுநரை விட ஐசக் நியூட்டனையோ, உங்கள் சகோதரனை விட உங்கள் தேசப் பிதாவையோ நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால் நியூட்டனும், தேசப்பிதாவும் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக இல்லையென்றும் அவர்களுக்குள் குடியிருந்த அவர்களின் தனித்துவத்திற்காகவே (ஐனேஎனையைடவைல) என்பதும் விளக்கம் தேவைப்படாத எளிய உண்மைகளாகும். இன்றைய அறிவியல் உலகின் முடிசூடா மன்னராக ஹாக்கிங் அவர்களை ஏனைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வது அவர் ஒரு சமூக விலங்கு என்பதற்காகவோ அல்லது அவர் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவோ இல்லை என்பதும் அவருக்குள் இருக்கும் தனி நபர் சிறப்பே (ஞசநளடியேடவைல) அதற்குக் காரணம் என்பதும் விளக்கம் தேவையற்றதாகும்.
மனிதனும் அவனது தனிநபர் சிறப்பியல்பும்
மரத்திலிருந்து பழங்கள் விழுவதை நியுட்டனுக்கு முன்னரும் ஏராளமான அறிவு ஜீவிகள் பார்க்கத்தாம் செய்தனர்.ஆயினும் நியூட்டனின் புத்தியிலிருந்து தோன்றிய கற்க வேண்டும் எனும் ஆர்வத்தை அவர் செயல்படுத்தத் துணிந்ததே ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவரை ஈடுபடச் செய்தது. இது நியூட்டனின் தனிநபர் சிறப்பு (ஞநசளடியேடவைல) ஆகும். இதற்கு மாறாக மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் (ஐனநவேஉயட) ஆகவும், அவர்களில் தனிநபர்கள் (ஐனேஎனைரயடள) யாரும் இல்லாமலும் இருந்திருந்தால் நியூட்டன் ஒருபோதும் தனிசிறப்பிற்குரியவராக ஆகியிருக்க முடியாது என்பது திண்ணம். இந்த நிலையே உலகில் வாழும் மனிதர்கள் பெற்று இருந்தார்கள் எனில் உலகில் எந்த கண்டுபிடிப்பையும் மனிதர்கள் நிகழ்த்தி இருக்க முடியாது. இதன் பொருள் மனிதனும் ஏனைய விலங்குகளைப் போன்று பகுத்தறிவில்லாமலே படைக்கப்பட்டனர் என்பதே ஆகும். அந்த நிலையில் மனிதனும் விலங்கைப் போன்றவனாகவே மாறி இவ்வளவு பெரிய பேரண்டம் அவனுக்கு தேவையற்ற தாகவே கருதப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நடப்பதோ வேறு விதமாக. இங்கு ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு தனிநபர் சிறப்புக்கு உரியவர்களாக உள்ளனர். டாக்டர் காரல் அதே நூலில் மேலும் கூறுகிறார் :
“நவீன சமூகம் தனிமனிதனைப் புறக்கணிக்கின்றது. அது மனித இனமாக மட்டுமே மனிதனை எடுத்துக் கொள்கிறது. அது ஒட்டு மொத்தமான எதார்த்தங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டு மனிதர்களை வேறுபட்டவர் களாவே நடத்துகிறது. தனி மனிதன் மற்றும் மனித இனம் எனும் கருத்துருவங்களில் உள்ள குழப்பம் தொழிலியல் சமூகத்தை (ஐனேளேவசயைட ஊஎடைணையவடி) மனிதர்களை தரம் பிரிக்கும் தவறுக்கு இட்டுச் செல்கிறது. நாம் அனைவரும் முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்திருந்தால் ஒருபெரும் மந்தையில் வாழ்ந்து பணியாற்றும் நாற்காலி விலங்குகளைப் போன்று வளர்க்கப்பட்டிருப்போம். ஆயினும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான தனிநபர் சிறப்பு (ஞநசளடியேடவைல) உண்டு. அவன் ஒரு அடையாளக் குறியாக நடத்தப்படக் கூடாது.
(பக்கம் : 198, மேன் தி அன்னோன்)
தொழிலியல் சமுதாயத்தில் மனிதர்கள் தொழிலாளி வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கம் எனத் தரம் பிரிக்கப் பட்டதை தனிமனிதனை புறக்கணித்துவிட்டு மனிதர்களை மனித இனமாக மட்டுமே எடுத்துக் கொண்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த நடவடிக்கையில் மனிதர்கள் நாற்காலிக்கு ஒப்பாகவே நடத்தப்படுகின்றனர். ஆனால் மனிதர்கள் அனைவரும் தனிநபர்களே (ஐனேஎனைரயடள) என்பதும் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் தனிநபர் சிறப்பும் (ஞநசளடியேடவைல) உண்டு என்றும் எனவே மனிதர்களை மனித இனமாக பாவித்து நடத்தப்படக் கூடாது என்பதே டாக்டர் காரல் அவர்களின் கருத்தாகும். அறிவியலாளரும், தத்துவ ஞானியுமான டக்டர் காரலை நாம் மேற்கோள்காட்டி இருப்பது உலகில் தோன்றியுள்ள இலட்சக் கணக்கான உயிரினங்களில் ஒன்றாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் ஏனைய உயிரினங்கள் எதற்குமே இல்லாத பிறவிக் குணம் மனிதர்களுக்குள் இருக்கும் “தனிநபர் சிறப்பியல்புகள் ஆகும் என்பதையும் மேலும் மனிதன் எப்போதும் ஒரு சமூக விலங்காகக் குறிப்பிடப்படுவது தவறான அணுகுமுறை யாகும் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கே அன்றி டாக்டர் காரல் அவர்களின் கருத்துகள் யாவையும் ஏற்றுக் கொள்வதாக இதற்கு அர்த்தமில்லை.
பிரதான செய்திகள்
இந்த அத்தியாயத்திலிருந்து இதுவரை ஐந்து பிரதானமான தகவல்களை அறிந்து கொண்டோம். அவற்றுள் முதலாவது இப்பேரண்டம் படைக்கப்பட்டது மனிதர்களுக் காவே ஆகும் என்ற திருக்குர்ஆனின் பிரகடனம். இரண்டாவ தாக இவ்வளவு பெரிய பேரண்டத்தை இறைவன் மனிதர் களுக்காக படைத்த போதிலும் அவனுடைய ஆற்றலில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதால் இறைவன் தன்னுடைய அடியார்களுக்காக இப்பேரண்டத்தைப் படைத்ததில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பது.
மூன்றாவதாக மனிதர்களுக்கென இப்பேரண்டத்தைப் படைத்ததைக் காட்டிலும் மிகுதியான பரிவு மனிதனின் மீது இறைவனுக்கு உண்டு எனும் திருக்குர்ஆனின் விளக்கம். நான்காவதாக இவ்வளவு பெரிய பேரண்டம் எந்த வகையிலும் மனிதனுக்குத் தேவைப்படவில்லை எனும் அறிவியலாளர் களின் கருத்து மனிதனை வெறும் ஒரு சமூக விலங்காக மட்டும் கருத்தில் கொண்டதன் விளைவே என்பது. ஐந்தவாதாக மனிதனின் ஏனைய உயிரினங்கள் எதற்கும் இல்லாத எக்காலமும் வளர்ந்து கொண்டே செல்லும் இயல்புடைய அறிவைப் பிறவிக் குணமாகப் பெற்றவன் என்பதும் இப்பிறவிக் குணம் மனிதர்கள் ஒவ்வொருவரையும் தனிநபர் சிறப்புக்கு உரியவர்களாக ஆக்கியது என்பதுமாகும்.
அடுத்ததாக இம்மாபெரும் பேரண்டம் மனிதனுக்கு எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
அத்தியாயம் 10
பேரண்டம் படைக்கப்பட்டது எதற்காக?
சென்ற அத்தியாயத்தில் மனிதனை ஒரு சமூக விலங்காக கொள்வது தவறு எனக் கண்டோம். மனிதன் தன்னுடைய உயிரியல் அமைப்பில் விலங்கைப் போன்ற வனாக இருப்பினும் அவனுடைய வாழ்கையைப் பொருத்த வரை இரண்டு இலட்சியங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அவனுடைய உலகியல் வாழ்க்கையை அமைதிக்கு அடிப் படையாக அமைத்தலாகும். அவனுடைய சமூக வாழ்க்கை இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட தாகும். மனித வாழ்க்கையின் மற்றொரு இலட்சியம் அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப் படுத்தலாகும். இந்த இரண்டாவது இலட்சியமே ஆன்மீகத் தலத்தில் ஒரு உயிரினத்திற்கு மனிதன் எனும் தகுதியை வழங்குகிறது.
(உயிரியல் அடிப்படையில் ஓர் உயிரினத்தின் மனிதனாகும் தகுதிக்கு “பகுத்தறிவே (புத்திமதி – ஐவேநடடநஉவ) போதுமானதாகும் என முன்னர் கண்டோம்.)
உலகில் தோன்றும் பகுத்தறிவுள்ள உயிரினங்கள் யாவுக்கும் உயிரியல் அடிப்படையில் மனிதனாகும் தகுதி உண்டென்றாலும் அவர்களில் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே ஆன்மீகத் தலத்தில் மனிதனாகும் தகுதியை உருவாக்கிக் கொள்கின்றனர். மனிதனுக்குள் இருக்கும் தனிநபர் சிறப்பில்பே அவர்களை ஆன்மீக தலத்தில் மனிதனாக ஆக்கும் தகுதியையோ அல்லது மனிதனாக அல்லாமல் (விலங்கினும் கீழானதாக) ஆக்கும் தகுதியையோ உருவாக்குகிறது. இம்மாபெரும் பேண்டம் என்பது ஓர் உயிரினத்தை மேற்கூறிய இலண்டு தலங்களிலும் மனிதனாக்குவதில் இன்றியமையாத பங்களிக்கிறது. அதோடு உயிரியல் தலத்தில் மனிதனாக இருப்பவரை ஆன்மீக தலத்தில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் மிக மிக இன்றியமையாததாகும்.
மனிதனின் படைப்புத் திறன்
நாம் இப்போது உயிரியல் தலத்தில் மனித வாழ்க்கைக்கு பேரண்டம் எவ்வாறு இன்றியமையாத வகையில் பயன் படுகிறது என்பதைப் பார்ப்போம். உயிரியல் தலத்தில் மனிதனின் வரைவிலக்கணம் அவனொரு “பகுத்தறிவுள்ள உயிரினம் (ஐவேநடடபைநவே க்ஷசபே) என முன்னர் கண்டோம். அவன் பெற்றுள்ள இந்த பகுத்தறிவு எனும் பிறவிக்குணம் அவனை ஓயாமல் கற்கச் செய்து கொண்டிருக்கிறது. கல்வியின் மீது அவன் கொண்டுள்ள இந்த அடக்க முடியாத ஆர்வம் அவனை எப்போதும் புதியபுதிய விபரங்களை – அதுவரை அவன் அறியாதிருந்தவைகளைக் – கற்பவனாக மாற்றி முடிவில் ஏனைய உயிரிங்கள் எதற்கும் இல்லாத படைக்கும் திறனைப் பெற்றவனாக (மெய்யான படைப்பாளன் – ஒருபொருளை முழுமையாகப் படைக்கும் திறனுள்ளவன் – இறைவன் ஒருவனே என்பதை கவனத்தில் கொள்க) அவனை உயரச் செய்கிறது.
அவன் இதுவரை படைத்துள்ள இலட்சக் கணக்கான வெவ்வேறு பொருட்களில் தொலை நோக்கி என்பதும் ஒன்றாகும். இந்த தொலை நோக்கியின் உதவியைக் கொண்டு எந்த காலக்சி மனித வாழ்க்கைக்கு போதுமானது எனக் கூறிக் கொண்டிருக்கிறார்களோ அந்த காலக்சியையும் தாண்டி அதற்கப்பால் உள்ள கோடிக் கணக்கான காலக்சி களில் இப்போதே ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறான். அவன் படைத்த நிறமாலை நோக்கி எனும் கருவியைக் கொண்டு அந்த காலக்சியிலுள்ள நட்சத்திரங்களில் என்னென்ன தனிமங்கள் இருக்கின்றன என்பதை இந்த பூமியில் இருந்து கொண்டே ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஹார்வர்டு ஆராய்ச்சிக் கல்லூரியைச் (ழயசறயசன ஊடிடடநபந டிக டீளெநசஎயவடிசல) சார்ந்த திருமதி. ஹென்ரிட்டா எ. லெவித் (ஆளைள. ழநனேசவைவய ளு. டுநஎவை) என்பவரின் கற்கும் திறமை நட்சத்திரங்களின் ஒளியில் காணப்படும் ஏற்றஇறக்கங்களும் (குடரஉவரயவடி) அததற்குரிய காரணமும் கண்டுபித்ததின் வாயிலாக விஞ்ஞானிகளின் தொலைநோக்கியில் சிக்கும் ஏனைய காலக்சிகளின் நட்சத்திரங்கள் கூட எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை அளவுநாடாவைப் (ஆநயளரசபே வயயீ) பயன்படுத்தாமலே அல்லது தலையைச் சுற்ற வைக்கும் கணித விதிகளையோ சமன்பாடுகளையோ பயன்படத்தாமல் மிக எளிதாகக் கண்டுபிடிப்பதற்கு ஒரு பிழையற்ற நடைமுறை சாத்தியமான வழிமுறையைக் கண்டுபிடித்துத் தந்தது.
எட்வின் ஹப்பிள் எனும் அறிவியலாரின் கல்வித் திறன் பேரண்டத்திலுள்ள காலக்சிகளெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று ஒயாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவைகளின் நகர்வுக்கான விதியையும் (காலக்சிகள் நம்மிடமிருந்து தொலைவாகச் செல்லச் செல்ல அத்தொலை களுக்கேற்ற நேர்விகிதத்தில் (னுசைநஉவடல ஞசடியீடிசவடியேட) அவற்றின் நகரும் வேகம் அதிகரிக்கிறது எனும் விதி) கண்டுபிடித்தது.
மானிடனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் திருக்குர்ஆன் கூறிய கல்வித்திறனை அடையாளம் காண்பதற்காக கூறப்பட்ட சில உதாரணங்களே இவைகளாகும். இதைப் போன்று ஏராளமான ஆய்வுகள் பால்வழி மண்டலத்திற்கு அப்பாலுள்ள காலக்சிகளில் இப்போதே நடந்து வருகின்றன. இந்த நிலையில் நமது பேரண்டம் ஒரேஒரு காலக்சியை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்திருப்பின் மேற்கூறப் பட்டதும் கூறப்படாததுமாகிய ஆய்வுகள் பலவும் மனிதனால் நிகழ்த்த முடிந்திருக்குமா?
மானிடனின் கல்வித்திறன் எக்காலமும் முன்னேற்றப் பாதையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளிலேயே பூமியில் தோன்றப் போகும் எதிர்காலச் சந்ததியினர் எவ்வளவு கண்டுபிடிப்புகளை சிகழ்த்தக் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு சிந்ததித்தால் நமது பேரண்டம் ஒரேஒரு காலக்சியோடு முவுற்று இருந்திருப்பின் எதிர்காலச் சந்ததியினர்களால் கூட அவர்களின் கல்வித் திறனை நமது காலக்சிக்கு அப்பால் செயல்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை. இந்த விளக்கங்கள் யாவும் இம்மாபெரும் பேரண்டத்திற்கு பதில் ஒரே ஒரு காலக்சி மட்டுமே இருந்திருந்தால் அந்த காலக்சி மானிடனின் கல்வித் திறனை முழுமையாகப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை என்பதே அதன் பொருளாகும். மானிடனுக்கு வழங்கப் பட்டுள்ள கல்வித் திறனே உயிரியல் அடிப்படையில் மனிதனை மனிதானாக்குகிறது என்பதை முன் அத்தியாயத் தில் நாம் மிக மிக விளக்கமாக ஐயத்திற்கிடமின்றி கண்டுள் ளோம். எனவே சுருங்கக் கூறின் ஓர் உயிரினத்தை இப்போது மட்டுமின்றி அந்த உயிரினம் உலகில் உள்ளளவும் அதை மனிதனாக வாழச் செய்வதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இப்போது எதிர்கால அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என நிரூபித் தாலும் எக்காலமும் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதனின் கல்வித் திறன் வெளிப்படுவதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் இன்றியமையாததாகும் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. மேலும் அந்த அறிவின் மூலப் பொருட்களில் ஒன்றாக இப்பேரண்டம் தவிர்க்க முடியாதபடி இடம் பெற்றுள்ளது என்பதும் அதற்குரிய காரணமாகும்.
கல்வித் திறனின் முக்கியத்துவம்
மனிதனின் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்பதை பரிசீலனை செய்யும் போது கல்வியாளர்களில் கூட பலரும் செய்யும் தவறு மனிதனின் உடல் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்பது மட்டுமே சிந்திக்கிறார்கள் என்பதாகும். மனிதனைத் தவிர ஏனைய முப்பது இலட்சம் உயிரினங்களும் (உலகில் இன்றுவரை கண்டுபிடிக்கப் பட்டவை) அவைகளின் உடலமைப்பிற்குரிய அடையாளங் களாக (உடல் அமைப்பிற்கப்பால் எதையும் செய்ய முடியாதவைகளாக) வாழ்வதால் அவைகளின் தேவை களைப் பற்றி சிந்திக்கும் போது அவைகளின் உடல் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதைப் பற்றி சிந்தித்தால் போதுமானதாகும். ஆனால் மனிதனையும் அந்த பட்டியலில் சேர்ப்பது அவனை வெறும் ஒரு சமூக விலங்காக மட்டும் கருத்தில் கொள்வதால் ஏற்படும் தவறாகும். மனிதனுக் கென்று ஒரு உடலமைப்பு உண்டு என்பது உண்மையே எனினும் அவனுக்குள் `கற்கும் திறன் எனப்படும் ஒன்று உண்டு என்பது மனிதனுக்கு உடலமைப்பு உண்டு என்பதை விட பெரிய உண்மையாகும். எனவே மனிதனின் தேவை களைப் பற்றி சிந்திக்கும் போது அவனுடைய உடல் வளர்ச்சிக்கு தேவையானவைகளைப் பற்றி சிந்திப்பதை விட மிகுதியாக அவனுடைய கற்கும் திறமையைச் செயல்படுத்து வதற்கு தேவையானவைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகும். இந்தச் சிந்தனைக்கு மட்டுமே மனிதனுக்கும் இம்மாபெரும் பேரண்டத்திற்கும் இடையிலுள்ள உறவையும் மானிட வாழ்க்கை இம்மாபெரும் பேரண்டத்தின் இன்றியமையா தேவையையும் புரிந்து கொள்ள முடியும்.
மனிதனின் கல்வித் திறனுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா? என இப்போதும் கூட சிலர் ஐயுறக் கூடும். அனால் மனிதனிலிருந்து கற்கும் திறனை எடுத்துவிட்டால் அவன் ஒரு விலங்கைப் போன்றவனாக அன்றி அவன் ஒரு விலங்காகவே மாறி விடுகிறான். ஏனெனில் விலங்கின் உடலமைப்பிலிருந்து மனிதனின் உடலமைப்பு எவ்வகையிலும் சிறப்படைவ தில்லை. அனால் ஏனைய உயிரினங்கள் அவைகளின் உடலமைப்பின் இயற்கை நிலைக்கு (இயல்புக்கு) அடிமைப்பட்டு வாழும் போது மனிதனை மட்டும் அவனுடைய உடலின் இயற்கைக்கு பலவிதத்திலும் கட்டுப்படாமல் வாழச் செய்யும் ஆற்றலை வழங்குவது அவனுக்குள் இருக்கும் கல்வித் திறனாகும் என்பதை அடிவரை இட்டு கருத்தில் கொள்ள வேண்டும்.
இயற்கையை வெல்லும் மனிதன்
மனிதனின் உடலமைப்பு அவனை இயற்கையாகவே நீரில் வாழ அனுமதிப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் கடலிலேயே வாழும் இயற்கை அமைப்பை உடலில் பெற்றுக் கொண்ட மீன்களால் கூட செல்ல முடியாத ஆழ்கடலின் அடிமட்டங்களுக்கு மனிதன் சென்று வந்து அவன் அவனுடைய உடலமைப்பின் இயற்கைக்கு கட்டுப்பட்டவன் இல்லை என்பதை நிலைநாட்டுகிறான். பறவைகளைப் போன்று காற்றில் பறக்கும் உடலமைப்பை அவன் பெற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் பறவைகளால் கூட செல்லமுடியாத உயரத்தில் அவன் ஆய்வுக் கூடங்களை (ளுமலடயளெ) அமைத்துப் பணியாற்றுகிறான். மிகப் பெரும் உடல் வலிமையைப் பெற்ற யானைகள் கூட அற்பமான உடல் வலிமையுள்ள மனிதனை மட்டும் தன் முதுகிலேற்றி அவனுடைய கட்டளைக்கு அடிபணிவது யானையின் இயற்கைக் குணத்தால் இல்லை. அதுவும் கூட மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வித் திறனின் ஆற்றலே அன்றி வேறில்லை.
மனிதன் சிறுகச் சிறுக இயற்கையை அடிமைப்படுத்தி தனது ஆற்றலை படிப்படியாக பெருக்கிக் கொண்டே வருகிறான் என்பதற்கு மேற்கண்டவை வெறும் உதாரணங் களாகும். மனிதனை மனிதன் என்ற சொல்லுக்கு தகுதியான வனாக ஆக்குவது அவனுக்குள் இருக்கும் கல்வித் திறமையே என்பதற்கு மேற்கண்டவை போன்று நூற்றுக் கணக்கான உதாரணங்கள் நம் கண்ணெதிரே இருக்கும் போது மனிதனின் கல்வித் திறனுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி அறியாமையாகும் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கங்கள் தேவையில்லை எனக் கருதுவோம். எனவே ஒரு உயிரினத்தை அவனுடைய உயிரியல் தலத்தில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் இன்றியமையாத பங்கு செலுத்துகிறது என்பதிலும் இதற்கு மேல் ஐயம் ஏற்பட வாய்ப்பிருக்காது.
மானிடப் படைப்பின் நோக்கம்
இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை கூறியதையும் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாம் விவாதித்தவை களையும் கவனமாகப் பார்வையிடும் ஒருவரால் இறைவன் படைத்த இலட்சக் கணக்கான வெவ்வேறு வகை உயிரினங் களில் ஒன்றை மனிதனாக ஆக்கும் ஒரே நோக்கத்திற்காகவே இம்மாபெரும் பேரண்டம் படைக்கப்பட்டது என்பதைக் காண முடியும். எனவே இயல்பாகவே அவனிடத்தில் கேள்வி ஒன்று எழக்கூடும். ஓர் உயிரினத்தை மனிதனாக்குவதன் வாயிலாக (இதை வேறு வார்த்தைகளில் கூறினால் “மனிதனைப் படைப்பதன் வாயிலாக) அவனிடமிருந்து இறைவன் என்ன எதிர்பார்க்கிறான்? என்பதே அக்கேள்வியாகும். உள்ளபடியே கேள்விகளுக்கெல்லாம் பிரதானமாக இருக்கும் தகுதி பெற்ற கேள்வியே இக்கேள்வியாகும். இக்கேள்விக்கு விளக்கமான பதிலை அடுத்த அத்தியாயத்தில் கூறியுள்ளோம். இருப்பினும் இந்த இடத்திற்கு ஒரு சுருக்கமான பதிலை இப்படிக் கூறலாம். “பரலோக வெற்றி பெற்று அழிவிலா இன்பத்தைப் பெற்று என்றென்றும் வாழ்வதற்குத் தகுதி வாய்ந்தவனாக அவன் ஆவதையே அவனிடமிருந்து அவனது இறைவனின் எதிர்பார்ப்பாகும்.
பரலோகத்தில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமாயின் இவ்வுலக வாழ்க்கையில் அவர் தமது ஆத்மாவைத் தூய்மைப் படுத்த வேண்டும். ஆத்தைத் தூய்மைப்படுத்துதல் என்றால் ஆத்மாவைப் படைத்தவனும் அது குடியிருக்கும் உடலைப் படைத்தவனும் அந்த உடலுக்குத் தேவையானதை நிறைவேற்ற இவ்வுலகைப் படைத்தவனுமாகிய இறைவன் எதை எதைத் தின்மை என்று கூறுகிறானோ அவைகளின் பால் அணுகாமல் இருத்தலும் எவை எவை நன்மை எனக் கூறியுள்ளானோ அவைகளைக் கடைபிடிப்பதில் முழு முயற்சி செய்வதுமாகும்.
ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவது எவ்வாறு எனப் புரிந்து கொண்டோம். ஆயினும் அதற்கும் பேரண்டம் இவ்வளவு பிரமாண்டமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று இன்னமும் விளங்காதிருக்கலாம். ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குத் தடங்கலாக இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது மட்டுமே இப்பேரண்டத்தின் கற்பனையில் அடங்காத பிரமாண்டப் பேருருவம் மனிதனின் பரலோக வெற்றிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை விளங்க முடியும். எனவே அவை களைப் பற்றிய சில சுருக்கமான செய்திகளைப் பார்ப்போம்.
மறுமையின் நம்பிக்கையில் பேரண்டத்தின் பணி
ஆத்மாவைத் தூய்மைப்படுத்துதல் என்பதை இறைவ னின் கட்டளைக்கு அடிபணிதல் என சுருங்கக் கூறலாம். இதை ஒருவர் செய்ய வேண்டுமானால் அவர் முதலாவதாக தம்மைப்படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்ப வேண்டும். அதை நம்புவதற்கு இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என்பது உண்மையாகும். ஏனெனில் இப்பேரண்டத்தைப் போன்று கோடிக் கணக்கான பேரண்டங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் இறைவனை நம்பாதவர்கள் அப்போதும் இருக்கதாம் செய்வார்கள். அதற்குரிய காரணத்தை (இறைவனை நம்புவதில் நாத்திகச் சிந்தனைகளுக்குத் தடையாக இருப்பவைகளை) முன்னர் நாம் கண்டுள்ளோம். ஆயினும் ஒருவர் இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டுமென்றால் அவருக்குப் பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். இந்தப் பிரச்சனையில் தாம் நமது பேரண்டத்தின் கற்பனைக் கெட்டா பேருருவம் தொடர்பு கொண்டுள்ளது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகிற்கு முடிவு காலம் ஒன்று உண்டு என்றும் அப்போது இப்பேரண்டத்தை அழித்துவிட்டு இதை விடச் சிறந்த மற்றொரு பேரண்டத்தை இறைவன் படைப்பான் என்றும் அப்பேரண்டத்திலேயே சொர்க்கமும், நரகமும் இறைவனின் விசாரணை மன்றமும் அமைய இருக்கிறது என்றும் அப்பேரண்டமே பரலோகமாகும் என்றும் ஒருவர் நம்ப வேண்டும். அங்கு நடைபெறும் இறைவனின் நீதிமன்ற விசாரணையில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் முடிவே இல்லாத சொர்க்கத்தின் சுக வாழ்விற்கும் இறைவனுக்குக் கட்டுப்படாதவர்கள் முடிவே இல்லாத நரக வாழ்க்கைகும் ஆளாக்கப்படுவார்கள் என்பதையும் அவர் நம்ப வேண்டும். ஆனால் உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் இறைவனை நம்புகின்ற போதிலும் பரலோக வாழ்க்கையில் அவர்களில் பெரும் பாலானோர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே உண்மை யாகும். இறைவனிடம் நம்பிக்கை கொண்ட பிறகும் பரலோகத்தில் நம்பாமலிருப்பதற்கு இறைவனின் அபாரமான ஆற்றலைப் புறக்கணிப்பது ஒரு பிரதான காரணமாகும்.
மனிதனுடைய விஞ்ஞான அறிவு வளர்ச்சி அடையாமல் இருந்தபோது இறைவனுடைய ஆற்றல் அபாரமானது என்பதில் நம்பிக்கை கொள்வதற்கு அவன் வாழும் பூமியும் அந்த பூமியில் உள்ளவைகளும் அவனுடைய வெறும் கண்களால் அவன் கண்ட வானமும், சூரியன், சந்திரன், நட்சத்திராதிகளுமே போதுமானதாக இருந்தது. ஆயினும் மனிதனின் கல்வித் திறன் அவனுடைய விஞ்ஞான அறிவை படிப்படியாக வளரச் செய்து அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்சியையும் ஊடுருவிப் பார்க்கும் ஆற்றலைப் பெறும் போது அந்த காலக்சிக்கப்பால் ஒன்றுமே இல்லாதிருப்பின் இறைவனின் ஆற்றலை விளங்கிக் கொள்வதில் அவனுக்குப் பெரும் பிழை ஏற்பட்டு விடக் கூடும். அந்தப் பிழையான எண்ணம் மறுமைக்கான நேரம் வரும்போது இறைவன் இப்பேரண்டத்தை அழித்துவிட்டு இதனினும் சிறந்த மற்றொரு பேரண்டத்தைப் படைக்க ஆற்றல் பெற்றவன் எனும் நம்பிக்கையையும் பாதிக்கக் கூடியதாகவே இருக்கும். இதற்கு மாறாக மனிதனின் விஞ்ஞான அறிவு வளர வளர அவன் உருவாக்கும் தொலைநோக்கிகளின் பார்வைத் திறனும் வளர வளர பேரண்டங்களில் உள்ள காலக்சிகளின் எண்ணிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே சென்றால் இறைவனின் ஆற்றலைப் பற்றிய அறிவியல் சமுதாயத்தின் மதிப்பீட்டில் கூட பிழை ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பு ஏற்படப் போவதில்லை. இறைவனின் ஆற்றலைப் பற்றிய இந்த பிழையற்ற சிந்தனை பரலோக வாழ்க்கையி லுள்ள நம்பிக்கைக்கு அறிவியல் சமுதாயத்திற்கு பலமான அடிப்படையும் அத்தாட்சியுமாகும்.
இம்மையினும் மறுமை பெரிது
மேற்கண்ட இரத்தினச் சுருக்கமான விளக்கத்திலிருந்து இப்பேரண்டத்தை இவ்வளவு பிரமாண்டமான பேருருவத் துடன் படைத்தன் வாயிலாக இறைவனின் ஆற்றல் அபார மானது என்றும் இப்பேரண்டத்தை அவன் அழித்துவிட்டு இதனினும் சிறந்த ஒன்றைப் படைப்பதற்கு அவன் ஆற்றல் பெற்றவன் என்பதற்கு மிக வலுவான ஆதாரமாக அதை ஆக்கியுள்ளான் என்பதையும் ஐயமறத் தெரிந்து கொள் கிறோம். இறைவனின் இந்த நடவடிக்கை உள்ளபடியே மனிதனுக்கு பரலோக வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி அவனை இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கச் செய்து அவனுடைய ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறதன்றோ! இதன் காரணமாகவே ஓர் உயிரினத்தை உயிரியல் அடிப்படையில் மனிதனாக்குவதற்கு இம்மாபெரும் பேரண்டம் தேவையான போதிலும் உயிரியல் அடிப்படையில் மனிதனாக இருப்பவனை ஆன்மீக அடிப்படையில் மனிதனாக ஆக்குவதற்கு இப்பேரண்டம் மிகமிகத் தேவை என்று கூறியதற்குக் காரணமாகும்.
மேலும் பரலோகத்தில் மனிதன் அனுபவிக்கப் போகின்ற இன்ப வாழ்க்கையாயினும் துன்ப வாழ்க்கையாயினும் அதன் தரத்தோடும் எல்லையற்ற அதன் கால அளவோடும் ஒப்பிடும் போது உலக வாழ்க்கை என்பது புறக்கணிக்கத்தக்க வீரியமற்ற சொற்ப நேர நிகழ்ச்சியாகும். எனவே பரலோக வாழ்க்கையில் வெற்றிக்குதவும் நம்பிக்கையை மனிதனுக்குள் உருவாக்கும் அபாரமான இறையாற்றலின் வெளிப்பாடாக இப் பேரண்டத்தை இறைவன் படைத்திருப்பது பரலோக வாழ்க்கையில் மனிதனை வெற்றி அடையச் செய்வதில் பெரிதும் உதவுகிறது என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
பரலோக வெற்றிக்கு உழைக்கும் குணமே ஆத்மீக அடிப்படையில் ஒருவரை மனிதனாக்கும் காரணியாகும். மனிதனால் சுயமாகத் தீர்மானிக்க முடியாத பரலோக வெற்றிக்குரிய காரியங்களை மனிதனுக்கு ஆத்மாவை வழங்கிய (தனி நபர் சிறப்பியல்பைத் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் இயல்பை அவனுடைய படைப்பில் அமைத்த) இறைவனால் மட்டுமே தீர்மானிக்க முடியும். அந்த செய்திகளை மனிதனுக்கு அறிவித்து அவனது படைப்பின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே அவனுடைய கலைக் கல்லூரிகளாக இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்து அவன் படிக்க வேண்டிய பாட புத்தகங்களாக வேதங்களை இறக்கி அவனது பேராசிரியர்களாக தூதரையும் வழங்கி மனித குலத்தை இறைவன் மிக மிகக் கண்ணியப் படுத்தினான். ஆனால் மனிதர்களில் ஒரு குழுவினர் இதைப் பற்றியயெல்லாம் சிந்திக்காமல் `ஆகாயங்களும் பூமியும் எல்லாம் மனிதர்களுக்காகவே இறைவன் படைத்தான் எனில் பேரண்டம் ஏன் இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது? என வினவிக் கொண்டிருக்கின்றனர்.
இக்கேள்விக்கு மனிதனுக்காக படைக்கப்பட்ட பேரண்டம் இவ்வளவு பிரமாண்டமானதாகவே இருக்க வேண்டும் எனும் பதிலை ஐயத்திற்கிடமில்லாமல் கண்டு விட்டோம். எனவே அறிவியல் சமூகம் எழுப்பும் அதிமுக்கிய மான வேறு சில கேள்விகளின்பால் இப்போது கவனம் செலுத்துவோம்.
அத்தியாயம் 11
கேள்விக் கணைகள்!
“கடவுளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதே மனிதர்களிடமிருந்து கடவுள் எதிர்பார்ப்பதாக இருந்தால் எல்லா மனிதர்களையும் அப்படிப்பட்டவர்களாகவே கடவுள் படைத்திருக்கலாமே! ஏன் கடவுள் அவ்வாறு செய்ய வில்லை?
ஆத்திகர்களை விமர்சிப்பதற்காக நாத்திகர்கள் பரவலாக எழுப்பி வரும் தாத்வீகமான கேள்வியே இதுவாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது நியாயமாகத் தோன்றும் இக்கேள்வி குறையுள்ளதாகும். ஏனெனில் இறைவனுடைய கட்டளைக்கு ஒரு போதும் ஒரு விதத்திலும் மாறு செய்யாமல் வாழக் கூடியவர்களை இறைவன் ஏராளமாகப் படைத் துள்ளான். ஆனால் அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப் படுவதில்லை. அவ்வாறு அழைப்பது தவறாகும். ஏனெனில் பொருட்களின் இயல்புகள் வேறுபடும் போது பெயர்களும் வேறுபட வேண்டும். மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குக் கற்றுத் தந்த முதல் கலையே பெயர்சூட்டும் கலையாகும் என்பது இறைவனின் வேதநூலாம் திருக் குர்ஆனில் காணலாம் (2:31). இறைவனின் கட்டளைகளை மட்டுமே சிரமேற்கொண்டு இம்மியளவும் அவனுக்கு மாறு செய்யாமல் செயற்படும் அப்படைப்பினங்களின் பெயர் `வானவர்கள் (ஹபேநடள) என்பதாகும். எனவே இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே கொண்டவர்களாக மனிதர்களை இறைவன் படைத்திருக்கக் கூடாதா? எனும் நாத்திகக் கேள்வி அர்த்தமற்றதாகும். அப்படியானால் உண்மையிலேயே மனிதர்களிடமிருந்து இறைவன் எதை எதிர்பார்க்கிறான்?
சுயமாக விரும்பி கட்டுப்படுதல்
இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழவும், கட்டுப்படாமல் வாழவும் கூடிய இயல்புடன் தான் நாடிய அளவு படைப்பினங் களைப் படைத்து அவர்களில் சுய விருப்பப்படி இறைவ னுக்குக் கட்டுப்பட்டு வாழ விரும்புகின்றவர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டுவதற்காகவும் யார் இறைவனுக்குக் கட்டுப் படாமல் தான் தோன்றிகளாக வாழ விரும்புகிறார்களோ அவர்கள் அதற்கேற்றபடி வாழ்ந்து காட்டுவதற்காகவும் படைக் கப்பட்டவர்களே மனிதர்கள் என்ற பெயரில் அறியப்படுபவர் கள் ஆவார்கள். எனவே மனிதர்களில் இறைவனுக்குக் கட்டுப் பட்டு வாழாமல் இருப்பவர்கள் தோன்றுவது ஒருகாலும் இறைவனுடைய இயலாமைக்குக் காரணமாகாது.
இதைப் போன்று இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர் களை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதும், இறைவனை நிராகரித்து வாழ்பவர்களை நரகத்திற்கு இட்டுச் செல்வதும் அவர்கள் தேர்ந்து கொண்ட வாழ்க்கை நெறிகளின் இயல்பே அன்றி இறைவன் யாருக்கும் அநீதி செய்வதானால் இல்லை.
சுருங்கக் கூறின் சுயமாக விரும்பி இறைவனுக்கு அடி பணிந்து தங்கள் வாழ்க்கையை அர்பணிக்கத் தயாரானவர் களுக்கு அதைச் செயல்படுத்தவும் இறைவனை நிராகரித்து விட்டு விருப்பம் போல் உலக சுகங்களை அனுபவிக்க விரும்பு கின்றவர்களுக்கு அதைச் செயல்படுத்தவும் படைக்கப்பட்ட இனமே மனித இனமாகும். அவர்களுக்காகவே இப்பேரண்ட மும் படைக்கப்பட்டது. இதற்குப் பிறகு பரலோகமும் படைக் கப்பட போகிறது. இவ்விரண்டு உலங்களிலும் இறைவன் இடுகிற பணிகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நிறைவேற் றும் இயல்பைக் கொண்ட மற்றொரு படைப்பினத்தையும் இறைவன் படைத்தான். அப்படைப்பினமே இறைவன் இட்ட பணிகளை இம்மியளவும் பிசகாமல் செய்யும் இயல்புடன் படைக்கப்பட்ட வானவர்களாவர்.
அர்த்தமுள்ள சோதனை
நமது பகுத்தறிவின் நோக்கு நிலையிலிருந்து பார்க்கும் போது வானவர்களைப் போல் இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே பெற்றவர்களாக மனிதன் படைக்கப் படாமல் இருந்ததற்கு இரண்டு பிரதானமான காரணங்களைக் கூறலாம். முதலாவதாக இறைவனுக்குக் கட்டுப்படும் இயல்பை மட்டுமே குணமாகக் கொண்டு ஓர் உயிரினம் படைக்கப்பட்டால் இறைவனுக்குக் கட்டுப்படும் விஷயத்தில் அவையாவும் மில்லிமீட்டருக்கு மில்லி மீட்டர் ஒரே மாதிரி யாகவே இருந்து விடும். அதன் பிறகு இவைகளுக்கிடையில் சோதனைகளை இறக்குவதில் அர்த்தமில்லை. ஆனால் இறைவன் தமக்குக் கட்டுப்படுவோரையும் கட்டுப்படாதவர் களையும் சோதித்தறிய நாடியதால் அதற்கேற்ற குணத்தை இயல்பாகக் கொண்டவனாக மனிதனைப் படைத்தான்.
இரண்டாவதாக எந்த உயிரினங்களின் இயல்பு இறைவனுக்குக் கட்டுப்படுதல் என்பதை மட்டுமே செய்யக் கூடியதாக இருக்குமோ அந்த உயிரினங்கள் மேற்கொள்ளும் கட்டுப்படுதல் வெறும் யாந்த்ரீகத் தன்மை வாய்ந்ததாக இருக்குமே அன்றி மானசீகமானதாக இருக்க முடியாது. ஆனால் மானசீகமாக (மனப்பூர்வமாக விரும்பி) இறைவனின் கட்டளைக்கு அடிபணியும் உயிரினங்கள் தோன்றுவதை சாத்தியமாக்க வேண்டும் என இறைவன் நாடியதால் மனித இனத்தை அவன் படைத்தான். இதன் காரணமாகவே இறைவனுக்குக் கட்டுப்பட்டோ அல்லது கட்டுப்படாமலோ வாழும் இயல்பை அவன் மனிதனுக்கு வழங்கினான்.
நாத்திக உலகிலிருந்து பரவலாக எழுப்பப்படும் “மனி தனை இறைவனுக்குக் கட்டுப்பட்டவனாகவே படைக்கும் ஆற்றல் இறைவனுக்கு இல்லையா? எனும் கேள்விக்கு சுருக்கமாக விடை கண்டோம். இப்போது ஹாக்கிங் அவர்கள் எழுப்பும் ஓரிரு முக்கியமான வினாக்களைப் பார்ப்போம்.
எதிர்காலத் தலைமுறையினரின் பணி
பேரண்டப் படைப்பு நடைபெற்ற போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி ஒரு பெரும் புதிராக இருந்ததை ஹாக்கிங் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அது இவ்வாறு:
“இப்பேரண்டம் பேரளவில் ஏன் இவ்வளவு சீராக இருக்கிறது? ஏன் இது எல்லா திசைகளிலும் விண்வெளியின் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரியாக உள்ளது? குறிப்பாக வெவ்வேறு திசைகளில் நாம் பார்க்கும் போதும் நுண்ணலை வெப்பப் பின்னணியில் கதிர்வீச்சு கிட்டத்தட்ட ஏன் இந்த அளவு ஒரே மாதிரியாக உள்ளது? இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலுள்ள மாணவர்களிடம் தேர்வு அறையில் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு ஓரளவு ஒத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் சரியாக ஒரே பதிலைத் தந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் செய்தித் தொடர்பு கொண்டார்கள் என்பது உறுதி. இருந்த போதிலும் மேலே விவரிக்கப்பட்ட மாதிரியில் முற்காலப் பேரண்டத்தின் பகுதிகள் (சுநபடிளே) மிக நெருக்கமாக இருந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தொலைவான மற்றொரு பகுதிக்கு பெருவெடிப்பிலிருந்து ஒளி செல்வதற்குறிய நேரத்தை பெற்றிருக்க முடியாது. சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒளியானது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாது என்றால் வேறு எந்தத் தகவலாலும் செல்ல முடியாது. எனவே முற்காலப் பேரண்டத்தின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றைப்போல் மற்றொன்று ஒரே வெப்ப அளவைக் கொண்டதாக இருப்பதற்கு விவரிக்கப்படாத ஏதோ ஒரு காரணம் இல்லாமல் அவை ஒரே வெப்பநிலையைக் கொண்டு ஆரம்பம் செய்யப்பட்டிருக்க முடியாது. (பக்கம் : 127-128)
கற்பனைக் கெட்டாத அளவு அதி, அதி விசாலமான இப்பேரண்டம் பேரளவில் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை இதற்குமுன் இப்புத்தகத்தில் நாம் விளங்கியுள்ளோம். பேரண்டம் இவ்வாறு அமையவேண்டு மென்றால் தேர்வு எழுதும் மாணவர்கள் சில நேரங்களில் ஒரு மாணவனைப் பார்த்து அனைத்து மாணவர்களும் காப்பி அடித்தால் விடைகள் யாவும் ஒரே மாதிரி அமைவதைப் போன்று பேரண்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தகவல் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஒளியை விட அதிக வேகத்தில் தகவல் சென்றால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதாலும் ஒளியை மீறுகின்ற எந்த வேகமும் பேரண்டத்தில் இல்லை என்பதாலும் பேரண்டம் இவ்வாறு அமைந்ததற்கு நமக்குத் தெரியாத ஏதோஒரு காரணம் இருக்கிறது என்பதே ஹாக்கிங் அவர்களின் மேற்கோளில் காணப்படும் செய்தியாகும்.
இன்றைய மனிதனின் கல்வித்திறனால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் பேரண்டத்தின் பற்பல இரகசியங்களில் ஒன்றே ஹாக்கிங் அவர்களின் மேற்கோளில் நாம் காண்கி றோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத இரகசியங்கள் எதிர் காலத் தலைமுறையினரின் எக்காலமும் வளர்ந்து கொண்டி ருக்கும் கல்வித் திறனைப் பயன்படுத்தி அறிவைப் பெறுக்கு வதற்காக காத்திருப்பவையாகும். அவ்வாறு பெறப்படும் அறிவிலிருந்து பேரண்டதைப் படைத்த இறைவனின் ஆற்றல் அளவிடற்கரியது என்பதை உணர்ந்து அதற்கேற்ப இறைவனை கண்ணியப்படுத்துவதற்கு இப்பேரண்டத்தின் பிரமாண்டமும் அதன் முடிவுறாத இரகசியங்களும் உதவி செய்கிறது. அதற்கு மாறாக இப்பேரண்டத்தின் தோற்றத் தையும் இதில் தோன்றியுள்ள அனைத்தையும் பற்றிய அறிவையும் இப்போதே நாம் பெற்றுவிட்டால் எதிர்கால சந்ததியினரின் அறிவு வளர்ச்சிக்கு வழியில்லாமல் போய் விடும். இந்த நிலை இறைநூலாம் திருக்குர்ஆனின் கூற்றுக்கு மாற்றமானதாகும். எனவே பேரண்டத்தில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் அறிவியல் உண்மைகள் மட்டு மின்றி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் உண்மைகளும் இறைமறையாம் திருக்குர்ஆனை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறது என்பதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.
நவீன அறிவியல் யுகத்தின் பிரதான வினாக்கள்
இப்போது ஹாக்கிங் அவர்கள் தமது நூலில் எழுப்பி யுள்ள மற்றொரு முக்கியமான வினாவைப் பார்ப்போம். அது கீழ்க்கண்டவாறு போகிறது.
“நமது பேரண்டம் ஏதேனும் ஒரு நேரத்தில் எவ்வாறு இருந்தது என்பது நமக்குத் தெரிந்து விட்டால் காலத்தினுடன் அது எவ்வாறு முன்னேற்றமடையும் என்பதை அநிச்சய தத்துவத்தின் (ருஉநசவயவைல ஞசஉயீடந) எல்லைக்குள் நின்று கொண்டு நமக்குச் சொல்லித்தரும் ஒரு ஜோடி விதிகளை அறிவியல் திறந்து கட்டி இருப்பதாகக் தோன்றுகிறது. இந்த விதிகள் உண்மையிலேயே கடவுளால் கட்டளையிடப்பட்ட தாக இருக்கலாம். ஆனால் கடவுள் அந்த விதிகளுக்கேற்ப பேரண்டத்தை முன்னேறும்படி விட்டுவிட்டதாகவும் இப்போது அதில் தலையிடுவதில்லை எனவும் தோன்றுகிறது. ஆனால் பேரண்டத்தின் ஆரம்ப நிலையை அல்லது வடி வத்தை அவர் எவ்வாறு தேர்ந்தெடுத்தார். ஆரம்ப நேரத்தின் “எல்லைக் கோட்டு நிலைகள் (க்ஷடிரனேயசல ஊடினேவைடிளே) என்னவாக இருந்தன?
ஒரு சாதகமான பதில் சொல்வதென்றால் பேரண்டத் தின் ஆரம்ப வடிவம் கடவுள் தேர்ந்தெடுத்ததற்கான காரணங் களை நம்மால் தெரிந்து கொள்ளக் கூடிய எதிர்பார்ப்பிற்கு இடமில்லை. இது நிச்சயமாக எல்லாம் வல்லவனாக இருக்கும் ஒருவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். ஆனால் அவர் இப்பேரண்டத்தை இதைப் போன்று நம்மால் புரிந்து கொள்ள முடிகின்ற விதிகளுக்கு ஏற்ப அதை பரிணாமம் அடைய விட்டது எதற்காக? (பக்கம் : 129)
ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டில் இரண்டு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. ஒரு மகா, மகா பெரிவெடிப்பு சிங்குலாரிட்டி (பெருவெடிப்பு வினோதம்) யிலிருந்தே நமது பேரண்டம் உருவாகி வந்தது என்பதும் பெருவெடிப்பு சிங்குலாரிட்டி என்பது நாம் அறிந்திருக்கும் அனைத்து அறிவியல் விதிகளையும் பயனற்றதாக்கிவிடும் வினோதத் தன்மை வாய்ந்தது என்பதையும் நாம் முதல் அத்தியாயத்தில் கண்டுள்ளோம். இந்தப் பின்னணியில் ஹாக்கிங் அவர்கள் கேட்க விரும்பும் முதலாவது கேள்வி என்னவெனில் தொடக்கத்தில் இவ்வளவு பிரமாண்டமான பேரண்டத்தை உருவாக்கும் விதிகளை எல்லாம் கட்டளையிடும் அளவிற்கு மாபெரும் ஆற்றலைக் கொண்ட இறைவன் ஒருவன் இருந்திருந்தால் அதன் பிறகு தன் படைப்பாகிய இப்பேரண்டத்தின் பரிணாமப் போக்கில் தலையிடாமல் விதிகளின்படி பரிணமிப்பதற்காக விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டது ஏன்? இரண்டாவதாக படைப்பின் தொடக்க நிகழ்ச்சிகள் எந்தெந்த விதிகளால் எப்படி எப்படி நடைபெற்றன என்பதை முற்றிலும் நம்மால் அறிந்து கொள்ள முடியாத விதத்தில் நடைபெறச் செய்த கடவுள் அதன் பிறகு பேரண்டத்தில் நடந்து கொண்டிருப் பவை யாவும் மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ளும் அறிவியல் விதிகளின்படி நடைபெறச் செய்வது ஏன்?
இருபதாம் நூற்றாண்டின் கடைசி பகுதியைத் தாண்டி விட்டநாம் இதுவரை பெற்ற விஞ்ஞான அறிவின் பின்னணியில் பார்க்கும் போது இக்கேள்விகள் இரண்டும் பிரதானமானவைகளே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இக்கேள்விகளுக்கான விடைகள் இதுவரை நாம் கூறிய செய்திகளிலேயே இறைந்து கிடப்பதை சிலரேனும் கவனித் திருக்கக் கூடும். அவைகளை விளக்கமாகக் காண்போம்.
இறை ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு
பேரண்டத்தின் படைப்பில் இறைவன் அதற்கான விதிகளைக் கட்டளை இட்டதைத் தவிர வேறு எதிலும் தலையிடாமல் இருப்பது அவனுடைய தலையீடு அதில் தேவையில்லை என்பதனால் ஆகும். ஏனெனில் அவனுடைய ஆற்றல் அவ்வளவு மகத்தானது. சாலையில் ஓடிக் கொண்டி ருக்கும் கார் சாலையில் விலகிப் போகாமல் இருப்பதற்காக கார் ஓட்நரின் தலையீடு டீரிங் சக்கரத்தின் மீது (ளுவநநசபே றுநநட) எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இரயில் வண்டியின் ஓட்டுநருக்கு இரயில் வண்டிணயின் மீது இப்படிப்பட்ட தலையீடு தேவையில்லை. இரயில் ஓட்டுன ரின் தலையீடு இல்லாததால் இரயில் வண்டி பாதை விலகுவ தும் இல்லை. இது இரயில் வண்டி ஓட்டத்திற்கான பணிகள் அந்த விதத்தில் சீரமைக்கப்பட்டதன் விளைவாகும். இதைப் போன்று இப்பேரண்டம் மகா பிரமாண்டமானதாக இருந்த போதிலும் அதன் இயக்கத்தை தனது தலையீடு தேவைப்படா மலே நடைபெறச் செய்யும் அளவிற்கு சீரான விதிகளைத் தோற்றுவிக்கும் அதி மகத்தான அபார ஞானம் பெற்றவனாக இறைவன் இருப்பதால் அவன் தொடக்கத்தில் இட்ட விதி களுக்கான கட்டளையே இப்பேரண்டத்தை எப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே அவனது கட்டளை யால் நிலைபெற்று நின்று கொண்டிருக்கும் இப்பேரண்டத் தில் அதன் பிறகு அவனது தலையீடு தேவையும் இல்லை. எனவே அவன் தலையிடுவதும் இல்லை.
பேரண்டத்தின் இயக்கத்தில் இறைவன் ஏன் தலையிட வில்லை? எனும் கேள்வி எந்த அளவிற்கு பிறர் கவனத்தை ஈர்க்கிறதோ அதை விடப் பன்மடங்கு அக்கேள்வியின் வாசகங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் உண்மை திருக்குர்ஆன் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும். அதை விளக்குவோம்.
பேரண்டத்தை நிலைநிறுத்தும் ஈடற்ற கட்டளை
ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட வினாவில் இரண்டு அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று பேரண்டத்தின் இயக்கத்தில் இறைவனின் தலையீடு காணப்படவில்லை என்பது. மற்றொன்று இறைவன் இருப் பது உண்மையானால் அந்த இறைவன் கட்டளையிட்ட விதி களே பேரண்டத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது.
இருபதாம் நூற்றாண்டு வரையிலான அறிவியல் வளர்ச்சியிலிருந்து ஹாக்கிங் அவர்களைப் போன்ற அறிவியல் மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை மனிதக் கரங்களால் மாசுபடாத இறைவனின் பரிசுத்தமான வேதநூலாம் திருக்குர்ஆன் 1400 வருடங் களுக்கு முன் கூறியிருப்பதைப் பார்க்கும் போது உண்மையில் சில கணங்களுக்காவது நம்மை நாமே இழந்து விடுகிறோம். அந்த வசனங்கள் வருமாறு :
“அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலைபெற்று இருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது நீங்கள் பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.
(30:25)
மேற்கண்ட வசனங்கள் ஆகாயத்தையும் பூமியையும் நிலைபெறச் செய்திருப்பது (இயங்கச் செய்து கொண்டி ருப்பது) இறைவனின் கட்டளையே அன்றி அதை நிலைபெறச் செய்யும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் அவனே அவ்வப்போது செய்து கொண்டிருப்பதில்லை என்று கூறுகிறது. இதிலிருந்து பேரண்டத்தை நிலைநிறுத்தும் யாவும் – மிகப் பிரதானமாக விதிகளையும் – அந்தக் கட்டளை உள்ளடக்கி இருந்தது என்பதையும் ஐயத்திற்கிடமின்றி விளங்க முடிகிறது. இதே செய்தியைத்தாம் ஹாக்கிங் அவர்களும் தமது கேள்வியின் வாசகத்தில் கடவுள் பேரண்டத்தை விதிகளுக்கேற்ப முன்னேற விட்டு விட்டதாகவும் இப்போது அதில் தலையிடுவதாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.
மேலும் ஹாக்கிங் அவர்களின் கேள்விக்கு அடிப்படை யாக அமைந்த வாசகம் பேரண்டப் படைப்பைப் பற்றி முதல் அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு நிரூபணமாக அமைந்துள்ளது. அந்த வசனம்,
“அவன் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து “ஆகு! என்றே கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
(2:117)
மேலும் மற்றொரு வசனத்தில்,
“ஏதேனும் ஒரு பொருளை அவன் படைக்க நாடும் போது `ஆகு! என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகிவிடும்.
(36:82)
எதைப் படைப்பதாக இருந்தாலும் இறைவனைப் பொருத்தவரை தொடக்கத்தில் இடுகின்ற ஒரேஒரு கட்டளையே போதுமானது என்று கூறும் திருக்குர்ஆனின் அறிவியலை எந்த அளவிற்கு வார்த்தைக்கு வார்த்தை அதி நவீன அறிவியல் உண்மைகள் நிரூபிக்கிறது என்பதற்கு ஹாக்கிங் அவர்களின் கேள்வியின் வாசகங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவ்வளவு அதிமகத்தான அறிவியல் உண்மைகள் எல்லாம் 1400 வருடங்களுக்கு முன் உலகில் வாழ்ந்த ஒரு மனிதனின் சுய அறிவைக் கொண்டு கூறப்பட்டவைகளே என நம்புவதற்கு மானிடர் சிலரின் பகுத்தறிவால் எவ்வாறு சாத்தியமாகிறது என்பது உள்ளபடியே பெரும் வியப்பிற்குரிய செய்தியாகும்.
மனித அறிவுக்கு எட்டாததன் முதற் காரணம்
இப்போது ஹாக்கிங் அவர்களின் இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம். பேரண்டத்தின் தொடக்கமாகிய பெருவெடிப்பும் ஆரம்ப வடிவம் மற்றும் எல்லைக்கோட்டு நிலைகளும் நம்மால் விளங்கிக் கொள்ள இயலாத விதத்தில் படைத்த இறைவன் அதன் பிறகு நம்மால் புரிந்து கொள்ளும் விதிகளின்படி இப்பேரண்டத்தை இயக்குவது ஏன்? என்பது அவருடைய இரண்டாவது கேள்வி. நாம் இதை இரண்டு கேள்விகளாக மாற்றி அமைத்து விடை காண்போம். எனவே முதல் கேள்வியாக, “பேரண்டப் படைப்பின் தொடக்கம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாத படி இறைவன் செய்தது எதற்காக? என்பதாக வைத்துக் கொள்வோம். இறைவன் அவ்வாறு செய்ததற்கு இரண்டு காரணங்களை திருக் குர்ஆனிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
முதல் காரணம் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள வேற்றுமையை அடிப்படையாகக் கொண்ட தாகும். பெருவெடிப்பும் ஏனைய ஆரம்ப நிகழ்ச்சிகளும் ஒரு பொருளை சூனியத்திலிருந்து படைக்கும் படைப்பின் முழுமையான பணியாகும். இந்த ஞானம் இறைவனின் அடையாளமாகவே திருக்குர்ஆன் கூறுகிறது. சான்றாக :
“அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் தெய்வங் கள் பூமியில் அதனைப் படைத்தன என்பதை எனக்குக் காட்டுங்கள்……!
(35:46)
“…… அவர்கள் அல்லாஹ் படைத்தது போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார் என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன். அடக்கியாள்பவன்.
(13:16)
மேற்கண்ட வசனங்கள் ஒரு அணுவைக் கூட அல்லது அணுவிற்கே அடிப்படையாக அமைந்த “குவார்க்குகளைக் (ணுரயசமள) கூட (இதற்கு மேல் நுண்மையாக இந்தத் தேதி வரை மனிதனால் சொல்ல முடியவில்லை) முழுமையாகப் படைக்கும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே அன்றி வேறு எவருக்கும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. ஆற்றலின் தோற்றுவாய் ஞானமாகும் என்பதை நாம் முன்னர் கண்டுள்ளோம். எனவே ஒரு பொருளை முழுமையாகப் படைக்கும் ஆற்றல் என்பது இறைவனின் ஞானத்தைச் சார்ந்ததாகும். அந்த ஞானம் படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நிலை நிறுத்துவதில் பிரதான பங்கேற்பதால் படைப்பின் தொடக்கப் பணிகள் நாம் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இறைவன் நடைபெறச் செய்திருக்க வேண்டும் என்பது நடைபெறக் கூடாததாகும்.
இரண்டாவது காரணம்
இரண்டாவது காரணம் இறைவனின் நாட்டத்தைச் சார்ந்ததாகும். மனிதனின் அறிவுக்கு ஒரு எல்லை உண்டு என நாம் முன்னர் கண்டுள்ளோம். இப்பேரண்டததில் இப்போது நிலைநிற்கும் அனைத்து விதிகளையும் அறியும் ஆற்றல் மனிதனுக்கு இருந்தும் கூட அந்த ஆற்றலால் பேரண்டத்தின் தொடக்க நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது மனிதனின் அறிவாற்றலின் எல்லைக்கப்பால் உள்ளதாகப் பொருள்படுகிறது. இந்த நிலையில் மனிதனுக்கு அதை இறைவன் ஏன் விளங்கச் செய்யவில்லை என்று கேட்டால் இறைவன் மனிதனை மனிதனை விட முன்னேறிய மற்றொரு படைப்பினமாக ஏன் படைக்கவில்லை? என்பதே அதன் அர்த்தமாகும். எந்தெந்த உயிரினங்களை எந்தெந்த ஆற்றலுடன் படைக்க வேண்டும் என்பது படைப்பின் நோக்கத்தை தீர்மானிக்கும் படைப்பாள னின் நாட்டத்தைப் பொருத்ததே என்பதால் மனிதனை இவ்வாறு (அநிச்சய தத்துவம் அனுமதிக்கும் எல்லைக்குட் பட்ட – இதைப் பற்றி நாம் முன்னர் விளக்கியுள்ளோம் – விதத்தில்) படைத்ததும், படைப்பின் முன்தொடக்க நிகழ்ச்சி களை அறியும் அறிவாற்றல் இல்லாமல் மனிதன் இருப்பதும் இறைவனின் நாட்டப்படி நடைபெறுவதாகும்.
மேற்கண்ட காரணங்கள் இரண்டும் அறைவனின் ஆற்றல் எல்லையற்றது என்பதை தெளிவாக்குகிறது. மனித னின் அறிவுக்கு எட்டியவரை பார்க்கும் போது இம்மாபெரும் பேரண்டத்தையே தமது ஒரேஒரு கட்டளையைக் கொண்டு படைக்கும் ஆற்றலையும் அதன் பிறகு அக்கட்டளையி லிருந்து தோன்றிய விதிகளாலேயே இப்போதும் பேரண்டத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அளவிற்கு இறைவனின் ஆற்றல் ஈடுஇணையற்றது என்பதும் தெரிய வருகிறது. ஆயினும் இறைவனின் ஆற்றல் நமது அறிவுக்கு எட்டியதை விட மிகப் பெரிதாகும் என்பதே பேரண்டப் படைப்பின் தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதை மனித அறிவால் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாமற்போனதிலிருந்து தெரிய வருகிறது.
எனவே இறைவனின் எல்லையற்ற ஆற்றலைப் பற்றிய மேற்கூறப்பட்ட அறிவியல் உண்மைகள் இப்பேரண் டத்தை அறைவன் அழித்து விட்டு மற்றொரு பேரண்டத்தையும் அதில் நம்மையும் தோன்றச் செய்வது இறைவ னுக்கு மிக மிக எளிதான விஷயம் என்பதை அறிவியல் பூர்வமாக நம்மை நம்பச் செய்கிறது. எனவே படைப்பின் முன் தொடக்கப் பணிகளில் நம்மால் விளங்கிக் கொள்ள இயலாத விதிகளை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? என்ற கேள்விக்கு நாம் விடை கண்டு விட்டதால் ஹாக்கிங் அவர்களின் அடுத்த கேள்விக்குச் செல்வோம்.
குருடன் கை சித்திரம்?
பேரண்டப்படைப்பின் முன் தொடக்கப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை நாம் அறியாத விதிகளால் இறைவன் நடைபெறச் செய்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற யாவும் நாம் அறிந்து கொள்ளும் விதிகளைப் பயன்படுத்தி நடைபெறச் செய்தது ஏன்? என்பதற்கு பிரதானமான மூன்று காரணங்களைத் திருக்குர்ஆனிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அவற்றுள் முதலாவது காரணம் நாம் இந்த புத்தகத்தில் முன்னர் கூறிபடி இப்பேரண்டம் மனிதனின் உபயோகத்திற்காகப் படைக்கப் பட்டது என்பதாகும். இப்பேரண்டத்தை இயங்கச் செய்யும் விதிகளை எந்த அளவிற்கு மனிதன் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைச் சிந்தித்தால் இக்கேள்விக்கு நிறைவான பதிலை அச்சிந்தனையிலிருந்து பெறமுடியும் என்பதில் ஐயமில்லை.
மனிதன் எப்போது நெருப்பைப் பற்ற வைக்கக் கற்றுக் கொண்டானோ அதுவே இயற்கை சக்திகளை மனிதன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியதன் முதல் கல்வைப்பாகும் என்பது அறிவியலாளர்களின் பரவலான ஒரு கருத்தாகும் என்பதை நாம் அறிவோம். பருப்பொருளை ஆற்றலாக மாற்றும் வினையே “எரிதல் ஆகும். பருப் பொருளை ஆற்றலாக்குவது எப்படி என மனிதன் அறியாமல் இருந்திருந்தால் அவனால் நெருப்பை உருவாக்கியிருக்க முடியாது. எனவே நெருப்பின் பயன்பாட்டையும் அவனால் அறிந்திருக்க முடியாது. நெருப்பு மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் கூற வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அனைவரும் அறிந்ததே! சுருங்கக் கூறின் நெருப்பை உருவாக்கும் கலையை நம்மால் கற்றக் கொள்ள இயலாத வகையில் இறைவனே அதன் விதியை வடிவமைப்பு செய்திருந்தால் நாம் இன்றும் கூட விலங்குகளாகவே (சமூகப் பிராணிகளாக – ளுடிஉயைட ஹஅயேடள) இருந்திருப்போம் என்பதில் ஐயமில்லை.
மனிதனின் அறிவு படிப்படியாக முன்னேறி நீராவியின் ஆற்றலைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டு தமது வாழ்க்கை வசதிகளை பற்பல வகையில் பெருக்கிக் கொண்டான். காலம் செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே வந்த மானிடனின் கல்வித் திறன் நியூட்டனின் கண்டுபிடிப்புகளால் உலகின் போக்கையே திருப்பி விட்டது. இயந்திரவியல் தலத்தில் (ஆநஉயஉயட குநைடன) மனிதன் நுழைவதற்கான ஆற்றலை நியுட்டனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு உருவாக்கித் தந்தது.
ஐன்டீன் அவர்கள் இயற்கை விதியிலிருந்து கண்டு பிடித்த நு = ஆஉ2 எனும் சமன்பாடு நமது ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. தொலை பேசி கள், ராடார்கள், இராக்கெட்கள், செயற்கைத் துணைக்கோள் கள் மற்றும் மின்சாரம் போன்றவை யாவும் இயற்கை விதிகளை மனிதன் தனக்கு சாதகமாக வசப்படுத்திக் கொள் கிறான் என்பதற்கு வலுவான சான்றுகளாக இருக்கின்றன. இந்த நிலையில் நம்மால் புரிந்து கொள்ள இயலாத விதிகளால் இறைவன் இப்பேரண்டத்தை இயங்கச் செய்திருப் பின் நாம் அவைகளை நமது வசதிக்காக எவ்வாறு பயன்படுத்தி இருக்க முடியும்? எனவே அது குருடன் கை சித்திரம் போன்று பயனற்றதாகும். இதுவரை நாம் கண்ட அறிவியல் ஆதாரங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய விதிகளால் இப்பேரண்டத்தை இறைவன் இயங்கச் செய் திருப்பது திருக்குர்ஆனிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொண்டதைப் போன்று இந்த வானங்களும் பூமியும் இதிலுள்ளவைகளும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டது என்பதை உண்மை என நிரூபித்துக் கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் ஆதாரமாகும்.
இறைவனுக்குத் தேவைகள் இல்லை
இப்பேரண்டத்திலுள்ள காலக்சிகள் எவ்வளவு என்பது இப்போதும் தெரியவில்லையாயினும் இதுவரை கண்டுபிடிக் கப்பட்டவைகளே பத்தாயிரம் கோடிக் கணக்கானவைகளா கும். அவை ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் கோடிக் கணக்கான நட்சத்திரங்கள். இவ்வளவு பிரமாண்டமான பேரண்டத்தைக் கண்ணுறும் அறிவியலாளர்களில் ஒரு சாராருக்கு இவ்வளவு பெரிய பேரண்டம் எவ்வகையிலும் மனிதனுக்குத் தேவையில்லை என்ற பிரமிப்பு ஏற்படுவதும் அதனால் இறைவன் உண்டென்றால் அந்த இறைவனுக்கு ஏதோ ஒரு வகையில் இப்பேரண்டம் தேவைப்படக் கூடும் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. மனிதன் வெறும் சமூகப் பிராணியாகக் கருதப்படுவதால் தோன்றுகின்ற இந்த எண்ணத்தை இதற்கு மேல் கைவிட வேண்டும் என்பதற் குரிய நியாயமான காரணங்களை இந்நூலில் பல இடங்களில் விளக்கியுள்ளோம். அறிவியல் சமுதாயத்தையும் கருத்தில் கொண்டு இப் பேரண்டத்தின் படைப்பாளன் இறக்கி வைத்த அவனுடைய கடைசி நூலில் கடுகளவும் ஐயத்திற்கும் இடமின்றி அவனுடைய தேவையைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:
“உமது இறைவன் தேவைகளற்றவன்; இரக்கமுள்ளவன்.
(6:133)
“அல்லாஹ் தன் படைப்பினங்களின் தேவையற்றவன்
(3:97)
“அல்லாஹ் தேவைகளற்றவன்
(2:112)
இப்பேரண்டத்தின் படைப்பாளனாம் அல்லாஹ்விற்கு எவ்விதத் தேவைகளும் இல்லை எனக் கூறும் வசனங்கள் திருக்குர்ஆனில் பற்பல இடங்களில் காணப்படுகின்றன. தேவையோடு இருத்தலும் அது நிறைவேறாத போது அழிவுறுதலும் படைப்பினங்களின் குணமாகும். தேவையற்ற சுயம் சம்பூரணனாக (ளுநடக ளுரககஉநைவே) இருத்தல் இறைமையின் பண்பாகும். எனவே ஹாக்கிங் அவர்கள் தன் நூலின் இறுத்தியில் எழுப்பிய “டீச னடிநள வை நேநன ய உசநயவடிச, யனே கை ளடி, னடிநள ந யஎந யலே டிவாநச நககநஉவ டி வாந ரஎநசளந? ஹனே றாடி உசநயவநன அழூ (அல்லது அதற்கு ஒரு படைப்பாளன் தேவையா? அப்படியானால் அவருக்கு இப்பேரண்டத்தின் மீது வேறு ஏதேனும் விளைவுண்டா? மேலும் அவரைப் படைத்தது யார்?) வினாவிற்கு திருக்குர்ஆனிலிருந்தும் அதை நிரூபிக்கும் அறிவியல் ஆதாரங்களைக் கொண்டும் நாம் நிறைவான பதிலைக் கண்டு விட்டோம். (கடவுள் உண்டென்றால் அவரைப் படைத்தது யார்? என்ற கேள்விக்கு நாம் இதற்கு முன் மற்றொரு இடத்தில் பதிலளித்துள்ளோம்) எனவே இறைவனின் பிரமாண்டமான படைப்பினமாகிய இப்பேரண்டத்தை இறைவனுக்கு ஏதோ தேவைகள் இருந்து அவைகளை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டது இல்லை என்றும் இது மனித இனத்திற்கு வசப்படுத்தப்பட்டு அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதற்காகவே படைக்கப் பட்டது என்பதில் இதற்கு மேல் ஐயத்திற்கு இடமில்லை.
நாம் இதுவரை கூறியதிலிருந்து நமது அறிவியல் ஞானத்திற்கு எட்டிய அறிவியல் விதிகளால் இறைவன் இப்பேரண்டத்தை இயங்கச் செய்திருப்பது இப் பேரண்டத்தை திருக்குர்ஆன் கூறியபடி மனித இனத்திற்கு வசப்படுத்தித் தருவதற்காகவே என்பதையும் நம்மால் புரிந்தது கொள்ள முடியாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப் படுமாயின் இப்பேரண்டம் நமக்கு வசப்படாது என்பதையும் ஐயமற விளங்கிக் கொண்டோம்.
இரண்டாவது காரணம்
நம்மால் புரிந்து கொள்ள முடியாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப்பட்டால் கவலைக்கிடமான மற்றொரு பிரச்சனையை அது தோற்றுவித்து விடும். உயிரியல் நோக்கில் அதுஒரு பிரச்சனையாகவே தோன்றாவிடினும் ஆன்மீகப் பார்வையில் அது மிக மோசமான பிரச்சனையாகும்.
இப்பேரண்டத்தை இயக்கும் விதிகள் எதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் இப்போதுள்ள பகுத்தறிவு நமக்கு இருக்கவும் செய்தால் இப்பேரண்டம் இறைவனின் தேவைகளுக்காவே படைக்கப் பட்டதன்றி மனிதனுக்காக அது படைக்கப்படவில்லை என மனிதனை நம்ப வைக்கும். மனிதனுக்காக இப்பேரண்டம் படைக்கப்பட்வில்லை என்றால் ஏனைய உயிரினங்களைப் போன்றே மனிதனிடமிருந்தும் இறைவன் எதையும் நாடவில்லை என்ற எண்ணத்தை அது தோற்றுவிக்கும். இறைவனுக்குக் கீழ்படிந்து வாழவே மனிதன் படைக்கப் பட்டான் என்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லாமல் போனால் மனிதன் மனம் போன போக்கில் விலங்குகளைப் போன்று வாழ்வதற்கு உரிமம் (டுஉநஉந) வழங்கப்படுவதாக அது அமைந்து விடும். இது மனிதனின் ஆன்மீக வாழ்க் கையை சீரழிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.
இப்பேரண்டத்தின் படைப்பு இறைவனின் சொந்தத் தேவையை பூர்த்தி செய்யப் படைக்கப்பட்டது என்ற எண்ணம் மற்றொரு விதத்திலும் மனிதனுக்கு ஆன்மீக சீரழிவை உண்டாக்கும். எவ்வாறெனில் பேரண்டம் இறைவனின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் படைக்கப் பட்டது என்ற தப்பெண்ணம் இறைவன் தேவையால் கட்டுண்டவனாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒப்பான தாகும். இறைவனைப் பற்றி இவ்வாறு கூறுவது ஒரு மனிதனைப் பார்த்து நாய் என்றும், கழுதை என்றும் வசைச் சொல் கூறுவதை விட பெரும் குற்றமாகும். ஏனெனில் ஒரு மனிதனை விட நாயும், கழுதையும் எவ்வளவு கீழ்தரமானவை களோ அதை விட இறைவனோடு ஒப்பிடும் போது தேவை களால் கண்டுண்டிருக்கும் ஒருவர் மிகமிக கீழ்தரமானவரா வார். இறைவனைப் பற்றி இவ்வாறு எண்ணம் கொள்வது ஆன்மீகத் தலத்தில் மனிதனைச் சீரழித்து விடக் கூடியதாகும். எனவே மனித அறிவுக்கு எட்டாத விதிகளால் இப்பேரண்டம் இயக்கப்பட்டால் அது மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கு எதிரான நடவடிக்கையாக இருந்திருக்கும். அறிவுக்கே தோற்றுவாயாம் இறைவனிடமிருந்து இது போன்ற அபத்தங்கள் ஒரு போதும் நிகழ்வதில்லை.
மூன்றாவது காரணம்
நாம் அறிந்த அறிவியல் விதிகளின் படி இப்பேரண்டம் இயக்கப்படுவதால் நாம் அடையும் மற்றொரு மாபெரும் பயன்பாடு அறிவியல் யுகம் தொடங்கிய பிறகு அதில் வாழும் மக்களுக்கு மெய்யான இறைவனையும் அவனது போதனை களையும் மிகச் சரியாக அடையாளம் காட்டப் பயன்படுகிறது என்பதாகும். பொதுவாக அறிவியல் சமுதாயத்தின் பகுத்தறிவைக் கொண்டு இப்பேரண்டத்திற்கு ஒரு படைப்பாளன் உண்டு என்பதையும் அவனது அறிவும் ஆற்றலும் எல்லையற்றது என்பதையும் வேறு சில இறைமைப் பண்புகளையும் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இறைவன் எதற்காக நம்மைப் படைத்தான் என்பதையும் நாம் நிறைவேற்ற வேண்டிய கடமை என்ன என்பதையும் இறைவனுடைய வேதங்களே கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால் வேதங்கள் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை முன்னுரையில் கூறியுள்ளோம். (தேவைப்படுவோர் மீண்டும் அதைப் பார்வையிடுக)
மனிதக் கரங்களால் தூய்மையற்ற நிலையில் வேதங்கள் (திருக்குர்ஆனைத் தவிர) இருக்கும் நிலையில் மனிதக் கரம் தொடாத தூய்மையான வேதம் உண்டா என்பதைக் கண்டறிய அறிவியல் சமுதாயம் அறிவியல் பார்வையை அளவுகோலாகக் கொள்கிறது. எனவே இந்தச் சமுதாயத்திற்கு அறிவியல் ஆதாரங்களைத் தரும் பொருட்டு ஏராளமான அறிவியல் உண்மைகளை கலப்படமற்ற இறைவனின் தூய்மையான வேதநூல் தன்னகத்தே கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத தேவை ஏற்படுகிறது. ஆனால் அந்த அறிவி யல் உண்மைகள் அந்தச் சமுதாயத்தின் அறிவியல் அறிவுக்கு எட்டாததாக இருந்தால் அந்த அறிவியல் உண்மைகளை கூறுவதால் எப்பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இறை வனின் தூய்மையான வேதநூல் எது என்பதை அறிவியல் சமுதாயம் அறிய வேண்டுமானால் வேதநூல் கூறும் அறிவி யல் உண்மைகள் அறிவியல் சமுதாயத்திற்கு எட்டியதாக இருக்க வேண்டும். அறிவியல் சமுதாயத்திற்கு அவை எட்ட வேண்டுமானால் இப்பேரண்டம் அறிவியல் சமுதாயத்திற்கு விளங்கும் விதிகளால் இயக்கப்படவும் வேண்டும். இதற்கு ஏராளமான சான்றுகளை நாம் திருமறையில் கண்டுள்ளோம். அவற்றுள் சில : “வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டடையும் நாமே பிரித்தோம் என் பதையும் உயிரிள்ள ஒவ்வொரு பெருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (இத்திருமறை நமது வார்த்தைகள் இல்லை என்று கூறி) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? (21:30) என ஓரிடத்திலும், “சிறகுகளை விரித்தும் சுருக்கியும் தங்களுக்கு மேல் பறக்கும் பறவை களை இவர்கள் பார்க்கவில்லையா? கருணை மிக்க இறைவனைத் தவிர அவைகளை (இடையூறுகளிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கவில்லை. (ஆம்!) திண்ணமான அவன் யாவற்றின் மீதும் பார்வையுள்ளவன் (67:19) என மற்றொரு இடத்திலும் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசனங்களைப் போன்று மேலும் பற்பல வசனங்களை திருக்குர்ஆனில் நாம் பார்க்க முடியும். இந்த வசனங்களில் ஒரு தனிச்சிறப்பான வார்த்தைப் பிரயோகத்தை திருக்குர்ஆன் பயன்படுத்தி இருப்பது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். “(திருக்குர்ஆனை) மறுப்பவர் சிந்திக்க வேண்டாமா?; “அவர்கள் பார்க்கவில்லை? என்பன போன்ற பிரயோகங்கள் அறிவியல் சமுதாயத்தையே குறிப்பாக சுட்டுகிறது என்பதையும் அந்த வசனத்தில் கூறப்படுகின்ற அறிவியல் தகவல்கள் உண்மையானால் அந்த அறிவியல் உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு திருக்குர்ஆன் இறைவனின் வேதநூல் என்பதை அச்சமுதாய மக்கள் நம்ப வேண்டும் என்பதே அவ்வசனங்களின் பொருளாகும். ஆனால் அந்த வசனங்களில் கூறப்பட்ட செய்தி உண்மைதாமா என அறிவியல் சமுதாயம் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் பேரண்டத்தின் முன் தொடக்க நிகழ்ச்சி களுக்குப் பிறகு பேரண்டத்தின் இயக்கம் எவ்வாறு நடைபெற்றது என்பதையும் அந்த இயக்கத்தைத் தோற்று விக்கும் விதிகள் எவை என்பதையும் அறிவியல் சமுதாயத் தின் அறிவுக்குப் புரியும்படி இருக்கவேண்டுமல்லவா? எனவே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மை கள் உலக மக்களுக்கு படிப்படியாக நிரூபித்துக் காட்டி அறிவியல் பார்வையில் அணுகினாலும் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதை அறிவியல் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டுமாயின் மனிதனுக்குப் புரிந்து கொள்ளும்படியான விதிகளின்படி இப்பேரண்டம் இயக்கப் படவேண்டும் என்பது இன்றியமையாததாகும்.
இதர வேதங்கள் பாதுகாக்கப்படாதது ஏன்?
இம்மாறையால் அதை வழங்கிய இறைவன் தற்போதும் செய்து காட்டிக் கொண்டிருக்கும் மற்றொரு அற்புதம் யாதெனில் இந்த வேதநூலைப் பாதுகாக்கும் பணியை இறைவனே செய்து கொண்டிருப்பதாகும். (பார்க்க 15:9) இதைக் கேள்விப்படும் சகோதர மதங்களைச் சார்ந்த சிலர், “நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் குர்ஆனுக்கு முன் இறங்கிய வேதங்கள் எதையும் இறைவன் பாதுகாக்காமல் குர்ஆனை மட்டும் பாதுகாப்பது ஏன்? எனக் கேட்கின்றனர். அவர்களின் நியாயமான இக்கேள்விக்கு அதை விட நியாய மான பதிலைக் கூறுவது இந்த இடத்தில் பொருத்தமான தாகும்.
திருக்குர்ஆனுக்கு முன் இறக்கப்பட்ட இறைவனின் ஏனைய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினருக் காகவும், ஒரு குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே செயல்பட வேண்டிய நிலைகளைக் கொண்டவையுமாகும். எனவே இவ்வேதங்களின் பாதுகாப்பை இறைவனே ஏற்றுக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவ்வேதங்களில் அவனே மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அவனே மாற்றப் போகும் வேதங்களை அவன் எதற்குப் பாதுகாக்க வேண்டும்? மேலும் விரிவஞ்சிச் சுருங்கக் கூறினால் இறைவனே பாதுகாப்பதாக ஒரு வேதம் அறிவிக்கப்பட்ட (அல்லது கருதப்பட்ட) பிறகு அந்த வேத புத்தகத்தில் கூறப்பட்டதற்கு மாற்றமான மற்றொரு சட்டத்தை மற்றொரு தூதர் வாயிலாக மற்றொரு வேதநூலில் கூறப்படுவது அந்த இறைத்தூதரையும் அவர் கொண்டு வந்த இறைவேதத்தையும் மக்கன் நிராகரிப்பதற்கு துணைபுரியுமே அன்றி அப்புதிய வேதத்தைப் பின்பற்றுவதற்குத் துணை புரியாது.
ஆனால் திருக்குர்ஆன் வேதங்களின் பட்டியலில் கடைசியானது. இது உலகிற்கிறங்கி 1400 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நூற்றாண்டுகள் இவ்வுலகம் இருக்கப் போகின்றதோ அவ்வளவு காலத்திற்கும், உலக மக்கள் அனைவருக்கும் இது இறைவனின் வேதநூலாக நிலைநிற்க வேண்டியது. எனவே இந்நூல் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் கலப்படங்கள் கலந்து விடாமல் அந்த நூல் தூய்மையாக, பரிசுத்தமாக, பரிசுத்தம் என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். இப்பணியைச் செய்யும் ஆற்றல் இவ்வுலக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருக்குர்ஆனை நாம் களங்கப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும் அவர்களால் அது இயலாத காரிமாகும். ஏனெனில் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர் மறைந்து போய் அவர்களுக்குப் பின் வரக்கூடியவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்குத் தெரியும்? எனவே அப்பணியைச் செய்யும் பொறுப்பை அல்லாஹ்வே எடுத்துக் கொண்டான். இதுவே இறைவன் பல வேதநூல்களை உலகிற்குத் தந்திருந்த போதும் அந்நூல்கள் எதன்மீதும் செய்யாத இம்மாபெரும் அற்புதத்தை திருக் குர்ஆன் மீது செய்துகாட்டியிருப்பதற்குரிய காரணமாகும்.
திருக்குர்ஆனைப் பற்றிய திருத்தூதரின் மதிப்பீடு
திருக்குர்ஆனைப் பெற்றுத் தந்த இறைத்தூதர் முஹம்மத் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) பற்பல அற்புதங்களைக் காட்டிய வரலாற்றை நபிமொழி நூல்களில் காணலாம். ஆனால் திருக்குர்ஆனுக்கு முன்னால் அந்த அற்புதங்கள் குறிப்பிடும்படியாக இல்லை என உணர்த்தும் அவருடைய அறிவிப்பு ஒன்று இவ்வாறு கூறுகிறது.
“மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக அற்புதங்கள் வழங்கப்படாமல் தூதர்களுக்கிடையில் ஒரு தூதரும் இருந்ததில்லை. ஆனால் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் அல்லாஹ் எனக்குத் தந்த இறைவெளிப்பாடாகும். எனவே மறுமை நாளில் வேறு எந்தத் தூதரையும் விட என்னுடைய பின்பற்றாளர்கள் அதிகமாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்
(ஸஹீஹ் புகாரி 4981, 7274)
தமக்கு வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாக திருக் குர்ஆனை திருத்தூதர் அவர்கள் குறிப்பிடும் போது திருக் குர்ஆனின் பெயரோடு தம்மால் செய்து காட்டப்பட்ட எந்தஒரு அற்புதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அவரோ ஏனைய தூதர் களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற அற்புதங்கள் வழங்கப் பட்டிருந்தார் என்பது நபிமொழிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து திருக்குர்ஆன் எனும் அற்புதம் அவ்வளவு மக்கதத்தானதும் ஈடுஇணை அற்றது மாகும் என்பதை அறியலாம். திருக்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அற்புதங்கள் சிலவற்றையே இந்நூலில் நாம் இதுவரை கண்டுவந்தோம். அவைகளை காய்தல் உவத்தலின்றி சிந்திப்பீர்களாக! இந்த நூலின் முதல் தொகுதி (குசைளவ ஏடிடரஅந) முடிவுரையுடன் நிறைவடைகிறது.
-: முடிவுரை :-
திருக்குர்ஆனில் காணப்படும் அதிஅற்புதமான ஞானமாம் பேரண்டவியல், வானியல் மற்றும் வான் இயற்பியல் போன்ற வற்றிலிருந்து சில செய்திகளை மட்டுமே நாம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் ஆய்வுக்கண் கொண்டு இம் மாமறையை ஆராய்பவர்களுக்கு அறிவியலின் பிரதான துறைகளைச் சார்ந்த ஏராளமான அறிவியல் உண்மைகளை அதில் அவர்கள் காணமுடியும். அச்செய்திகள் யாவும் திருக் குர்ஆன் ஒருக்காலும் மனித சக்தியால் இயற்ற முடியாதததும் இறைவனால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியாதாகும் என்பதற்கு வலுவான ஆதாரங்களாகும்.
அறிவியல் ஆதாரங்கள் மட்டுமன்றி வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற பல்துறை சான்றுகளையும் இம்மாமறை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் காரணமாகவே திருக் குர்ஆனில் அதன் தோற்றுவாயாம் அகிலங்களின் அதிபதி கீழ்க்கண்டவாறு அறைகூவல் விடுத்துள்ளான். அது வருமாறு:
“இந்தக் குர்ஆனைப் போன்று (ஒருநூலை) கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இதைப் போன்றதைக் கொண்டுவர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே என்று (துதரே தாங்கள்) கூறுவீராக! (17:88)
இதைப் போன்ற அறைகூவல்கள் திருக்குர்ஆனில் அவ்வப்போது விடப்பட்டுள்ளன. (பார்க்க : 2:23, 10:38, 28:49, 52:34, 11:13) இருப்பினும் இந்நாள் வரையிலும் திருக் குர்ஆனுடைய இந்த அறைகூவலை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
திருக்குர்ஆனைத் தவிர வேறுசில வேதநூல்களிலும் ஒருசில அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றனவே. இவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவைகளையும் இறைவனின் தூய்மையான வேதங்களே என ஏன் கூறக் கூடாது? என சிலர் வினவக் கூடும். அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய அறிவியல் உண்மைகள் அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு நூற்றாண்டு களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாகக் கூறும் ஞானம் இறைவனைச் சார்ந்ததாகும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அதைக் கூறிய நூல்களில் மனிதக் கரங்கள் புகாமல் தூய்மைகாகப் பாதுகாக்கப் பட்டுள்ளனவா என்பதைத் தீர்மானிப்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிரான செய்தி ஒன்று கூட அந்நூலில் இல்லாமலிருப்பதாகும். இந்த நிபந்தனையை நிறை வேற்றும் வேதநூல்கள் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. மெய்யும் பொய்யும் இரண்டறக் கலந்த அறிவியல் அறிவிப்புகள் ஒரு போதும் பாதுகாக்கப்பட்ட நூலாக இருக்க இயலாது. அதே நேரத்தில் பொய்யும், மெய்யும் இரண்டறக் கலந்த வேத நூல்கள் இருப்பது மனிதக் கரங்களால் முன் வேதங்கள் தூய்மை இழந்து விட்டதாகக் கூறும் திருக்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பதற்கு ஆதாரமாகவே அமையும்.
ஏனைய வேதநூல்களில் நிலை இவ்வாறு இருக்கும் போது அந்த நூல்கள் எதிலும் கூறப்படாத ஏராளமான அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் கூறப்பட் டுள்ளது. ஆயினும் அவைகளில் ஒன்று கூட இன்றைய தேதிவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளால் பொய்ப்பிக்கப் படவில்லை என்பதோடு அந்த அறிவியல் கண்டு பிடிப்புகள் திருக்குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை மெய்ப்பிக்கும் பணியையே செய்து வருகின்றன.
திருக்குர்ஆனில் நாம் கண்ட மற்றொரு அற்புதம் அறிவியல் உலகில் தலைசிறந்து விளங்கிய அறிவியலாளர் களுக்குக் கூட தவறுகள் நேரும் அளவிற்கு மிகமிக சிக்கலான அறிவியல் செய்திகளைக் கையாளும் போது கூட திருக் குர்ஆனுக்கு மட்டும் எவ்விதத் தங்கு தடைகளோ. தயக்கமோ, தவறுகளோ எள்ளளவும் நேர்ந்து விடவில்லை என்பதாகும். சான்றாக இப்பேரண்டம் தோற்றமோ, முடிவோ இல்லாதது; பேரண்டம் நிலையானது (ளுவயவஉ); விண்ணகத்தின் ஓட்டைகள் உருவானது; பூமி நகராமல் ஒரே இடத்தில் நிலைபெற்றுள்ளது மற்றும் ஐன்டீனையும் அடிசறுக்கச் செய்த அவருடைய `எதிர் ஈர்ப்பு (யவேபைசடிறவைல) என அறிவியலாளர்களைத் தவறான முடிவிற்கு இட்டுச் சென்ற பிரச்சனைகளில் கூட திருக்குர்ஆன் அடிசறுக்காமல் மிகச் சரியான அறிவியல் தகவல்களையே தந்தது என்பதும் முடிவில் அறிவியல் உலகம் தவறுகளைத் திருத்திக் கொண்டு திருக்குர்ஆனின் அறிவியலையே ஒப்புக் கொள்ள நேர்ந்தது என்பதாகும்.
ஒரு எளிய அறிவியல் வாசகனால் அறிவியலின் மிகச் சில துறைகளைத் தனது சக்திக்கேற்ப ஆய்வு செய்ததிலேயே திருக்குர்ஆன் இறைஞானத்தால் வெளிப்படுத்தப்பட்டு பரிசுத்தமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இவ்வளவு வலுவான, ஆழமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதை வாசகர்கள் தேவையான கவனத்துடன் பரிசீலனை செய்யும்படி வேண்டுகிறேன். இந்நூலில் என்னிடமிருந்து தவறுகள் நேர்ந்திருந்தால் மன்னித்தருளுமாறு முதற்கண் இறைவனிடம் மன்றாடுகிறேன். மேலும் வாசகர்களின் கவனத்திற்கு ஏதேனும் தவறுகள் தென்படின் இவைகளைச் சுட்டிக் காட்டுமாறு சகோதரப் பாசத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நன்றி அறிதலோடு அவைகளை ஏற்றுக் கொள்வேன்.
அண்ட சராசரங்களையும் அதில் நம்மையும் படைத்த இறைவன் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய வர்களாக நம்மை ஆக்குவானாக! அப்பணியில் இந்த எளியோனின் புத்தகத்தையும் பயன்படச் செய்வானாக!
தொடரும்..
No comments:
Post a Comment