என்னமோ தெரியல.. வாழ்க்கை வரலாறுகளை படித்துக் கொண்டிருந்த எனக்கு நாவல்கள் மீது திடீர் ஆசை வந்து விட்டது..
நூலகம் போய் தேடினதில் இரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டது.. ஒன்று பாலகுமாரனின் 'கனவு கண்டேன் தோழி.. இன்னொன்று எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் பிரபஞ்சனின் 'மகாநதி'
நூலகத்தில் இரண்டு நூல்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.. [அதிலும் அந்த கண்ணாடி போட்ட பொம்பளை ரொம்ப மோசம்..!]
இதுவா.. அதுவா என்று மனது பெண்டுலம் ஆடிக் கொண்டிருந்தது.. இறுதியில் பிரபஞ்சன் தான் ஜெயித்தார்..
'கனவு கண்டேன் தோழி'யை நூலக செல்பிலேயே ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டு.. வீட்டுக்கு வந்து புத்தகத்தை புரட்டுகிறேன்..
பிரபஞ்சனின் வார்த்தைகள் மகாநதியாக ஓடுகிறது..
"வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கி பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா.?
நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலை நடுங்க, மேனிபுளகமுற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோசத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்..? "
மீதி வாசித்தப் பிறகு..!
[][][]
No comments:
Post a Comment