Translate

Showing posts with label இந்துத்துவா. Show all posts
Showing posts with label இந்துத்துவா. Show all posts

Sunday, 27 March 2016

சிவ சேனாவுக்காக நிதி திரட்டினேன் - டேவிட் ஹெட்லி







நேற்று [
25-03-2016]
 அமெரிக்காவில் கைதாகி சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லியோடு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக மும்பையில் விசாரணை நடைபெற்றது.


அப்துல் வஹாப் கான் என்ற வழக்கறிஞர் இவனை குறுக்கு விசாரணை செய்தார். அதில் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளான் டேவிட் ஹெட்லி.
'அமெரிக்காவில் சிவ சேனைக்காக நிதி திரட்டினேன். அந்நிகழ்வுக்கு பால தாக்கரேயை கவுரவ விருந்தினராக அழைக்கத் திட்டமிட்டிருந்தேன். இதற்காக சிவசேனாவின் ராஜாராம் ரெகேயை தொடர்பு கொண்டேன். தாக்கரே உடல் சுகவீனமாக இருப்பதாகவும். அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்றும் அவருக்கு பதிலாக அவரது மகன் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த நிகழ்வு குறிப்பிட்ட நாளில் நடைபெறவில்லை.எஃப்பிஐ நான் சொல்லாததை எல்லாம் நான் சொன்னதாக செய்தி வெளியிடுகிறது. இஸ்ரத் ஜஹான் லஸ்கர் தொய்பாவோடு தொடர்பு எடையவர் என்று நான் சொல்லவில்லை. அவருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பத்து பேரில் எவரையும் நான் நேரில் சந்தித்ததில்லை. அஜ்மல் கசாபை போட்டோவில் பார்த்திருக்கிறேன்'
என்று பல திடுக்கிடும் உண்மைகளை தொடர்ந்து கூறி வருகிறான். டேவிட் ஹெட்லிக்கும் சிவ சேனாவுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்காக இவன் ஏன் பொருளாதாரம் திரட்ட வேண்டும்?
இன்னும் தொடர்ந்து விசாரணை நடந்தால் ஹேமந்த் கர்கரேயை கொல்வதற்காக சிவ சேனா, பிஜேபி, நம் உளவுத் துறையில் உள்ள இந்துத்வாக்கள், பாகிஸ்தானில் உள்ள இந்துத்வாக்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய சதி வேலை என்ற உண்மை வெளி வரும்.

பாரத மாதாவின் புத்திரர்கள் செய்த செயலைப் பாருங்கள். எவனெல்லாம் 'வந்தே மாதரம்' என்றும் 'பாரத் மாதாகீ ஜே' என்றும் அடிக்கடி கூறி வருகிறானோ அவனெல்லாம் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவனாக இருக்கிறான்.
தகவல் உதவி
என்டிடிவி
25-03-2016

MUMBAI: Pakistani-American terrorist David Coleman Headley today claimed in a Mumbai court that he had "arranged" a fund-raising programme for the Shiv Sena in the US and had planned to invite the then party supremo Bal Thackeray to the event.
The 55-year-old, who has turned approver in the 26/11 attacks case, said this during cross-examination on the third day by Abdul Wahab Khan, the lawyer of Abu Jundal -- an alleged key plotter of the 2008 Mumbai siege, via a video-link from the US.



[][][]

Friday, 4 March 2016

JNU மாணவ தலைவர் கன்ஹையா குமாரின் உரை- 4.3.2016






இன்றைய தேதியில் அனைவரையும் கவர்ந்த உரையாக அமைந்து விட்டது டில்லி நேரு பல்கலைக்கழக மாணவர் கன்ஹையா விடுதலைக்குப் பின்னர் ஆற்றிய உரை. அரசியல் ரீதியாக தன்னை ஒருவர் எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும். என்பதை இந்த உரை நமக்கு உணர்த்துகிறது. மாணவர் கன்ஹையாவின் உரையை முழுமையாக தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம்!


தோழர்களே,

எல்லாவற்றுக்கும் முதலாக, ஜேஎன்யூவின் மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், கடைக்காரர், கடையில் வேலை பார்க்கும் தொழிலாளி, வாயிற்காவலாளி என ஜேஎன்யூவின் அனைத்து அங்கத்தினருக்கும் எனது புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நாட்டின் அனைத்து பிரிவு மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஜேஎன்யூவோட போராட்டத்தில் துணை நின்ற உலகளவிலான பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஊடகம், சிவில் சமூகம், அரசியல், அரசியலற்ற என ஜேஎன்யூவை காப்பதற்கான போராட்டத்திலும், ரோஹித் வெமுலாவிற்கு நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்திலும் துணை நிற்கிறவர்களுக்கும் எனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு நாட்டிற்கு எது சரி, எது தவறு என்று பாடமெடுக்கும் மகான்களுக்கும், அவர்களது காவல்துறைக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.ஜேஎன்யூ அவமானப்படுத்துவதற்காகவேனும், பிரைம் டைமில் இடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

யார் மீதும் எங்களுக்கும் வெறுப்பில்லை. குறிப்பாக, ஏபிவிபியை சொல்ல வேண்டுமென்றால், கிஞ்சித்தும் வெறுப்பில்லை. ஏன் தெரியுமா? நம் வளாகத்தின் ஏபிவிபி வெளியே இருக்கும் ஏபிவிபியை விட முற்போக்கானது. மேலும், யாரெல்லாம் தங்களை அரசியல் பண்டிதர்களாக கருதிக் கொள்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் கடந்த ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவருக்கான தேர்தல் விவாதத்தின் போது, ஏபிவிபி தலைவருக்கு நேர்ந்ததை காணொளியில் பார்த்துவிடுங்கள். ஏபிவிபியில் இருப்பதிலேயே கூடுதல் அறிவாளியான, ஜேஎன்யூவின் ஏபிவிபியை தண்ணீர் குடிக்க வைத்தோம் எனும் போது, நாட்டின் பிற பகுதிகளில் ஏபிவிபியின் நிலையை சிந்தித்து பாருங்கள். ஆகையால், ஏபிவிபிக்கு எதிராக எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லை. ஏனென்றால், நாங்கள் உண்மையிலேயே ஜனநாயக சக்திகள், நாங்கள் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், ஆகையால், ஏபிவிபியை எதிரியாய் அல்ல, மாறாக, எதிர்கட்சியாக மட்டுமே பார்க்கிறோம். நாங்கள் உங்களை துர்தேவதைகளைப் போல நடத்த மாட்டோம். ஏனென்றால், வேட்டையும் கூட வேட்டைக்கு தகுதியானதையே செய்யப்படும். நடந்தவை எல்லாமே, காணாததை கண்டு திக்கித்து சொல்வதாக நினைக்க வேண்டாம்.. உண்மையாக சொல்கிறேன், உண்மையை உண்மை என்றும், பொய்யை பொய் என்றும் சொல்ல துணிச்சலாக நின்ற ஜேஎன்யூவை வணங்க விரும்புகிறேன்.

வேடிக்கையான விசயம் என்னவென்றால், இது உடனடி நிகழ்வாகும். ஏன் இதை சொல்கிறேன் என்றால், அவர்களுடைய செயல்கள் எல்லாம் திட்டமிட்டதாக இருக்க, நம்முடையவை எல்லாமே அனிச்சையாக நிகழ்ந்தன. இந்த தேசத்தின் அரசியல் சாசனத்தின் மீதும், சட்டத்தின் மீது, நீதி வழங்கல் முறையின் மீதும் கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. மாற்றம்தான் உண்மையானது. நாங்கள் மாற்றத்தின் பக்கம் நிற்கிறோம். எங்களுக்கு இந்த சாசனத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல சோசலிசம், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய சாசனத்தின் லட்சியங்களின் பக்கம் நிற்கிறோம். நான் இங்கே உரையாற்ற வரவில்லை, என் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முன்னர் அதிகம் படிப்பேன்.

ஜேஎன்யூவில் நிறைய ஆய்வு செய்கிறார்கள். முதற்கட்ட நேரடி தகவல்களைத்தான் நானும் கூற இருக்கிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது எனக்கு இப்போதைக்கு சொல்ல ஒன்றுமில்லை. அரசியல் சாசனத்தின் மீது யாரெல்லாம் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ, அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை யாரெல்லாம் மெய்பிக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவதை, ஜாடைகளிலேயே புரிந்து கொள்வார்கள். நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் பேச இல்லை.

பிரதமர் அவர்கள் ட்வீட் செய்திருக்கிறார். சத்யமேவ ஜெயதே என்று ட்வீட் செய்திருக்கிறார். உங்களோடு ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், சத்யமேவ ஜெயதே உங்களுடையது கிடையாது, இந்த நாட்டினுடையது, சாசனத்தினுடையது, நானும் கூறுகிறேன் சத்யமேவ ஜெயதே. வாய்மையே வெல்லும். வாய்மையே வெல்லும். இந்த போரில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் ஒன்றை கூறிக் கொண்டு எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த ஒரு விசயம் என்னவென்றால், சில மாணவர்கள் மீது அரசியல் கருவி போல தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எங்களைப் போன்றவர்கள் கிராமங்களிலிருந்து வருகிறோம். என்னுடைய குடும்பத்தை பற்றி இப்போது நீங்களும் அறிந்திருப்பீர்கள். எங்கள் ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் அங்கே கண்கட்டி வித்தைகள் காண்பிப்பார்கள். மந்திர வித்தை காண்பித்து மோதிரம் விற்பார்கள். மனதுக்கு விருப்பமான மோதிரம். யாருக்கு என்ன விருப்பமோ, அந்த மோதிரம் அதை பூர்த்தி செய்யும் வல்லமை பெற்றதென்று அந்த மந்திரவாதி சொல்வான்.

இந்த தேசத்திலும் சில கண்கட்டி வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கருப்பு பணம் வந்துவிடும் என்றார்கள். ஹர் ஹர் மோதி. விலைவாசி கடுமையாக ஏறிவிட்டது, இனியும் சகித்துக் கொண்டிராதீர்கள். எல்லோருடன் சேர்ந்து, எல்லோருடைய முன்னேற்றம். இந்த அனைத்து மந்திரங்களும் மக்களின் மனங்களில் இன்றும் இருக்கிறது. இந்தியர்கள் விரைவாக மறந்துவிடக் கூடியவர்கள் என்றாலும், அபாரமான கோமாளித்தனங்களால் அந்த மந்திரங்கள் மறக்க முடியாததாகியிருக்கிறது. நமது முயற்சி என்னவென்றால், அந்த மந்திரங்களை மறக்க செய்ய வேண்டும். எப்படி மறக்க செய்வது? இந்த நாட்டின் ஆய்வு மாணவர்களின் உதவித் தொகையை ரத்து செய்து விடுங்கள். மாணவர்கள் என்ன செய்வார்கள், உதவித் தொகையை வழங்கிடுங்கள், வழங்கிடுங்கள் என்று கோரிக்கை எழும். சரி, ஏற்கனவே தந்து கொண்டிருந்த 5000, 8000 ரூபாயை தருகிறோம், அதுவே தொடரும் என்று கூறிவிடுவார்கள். அதாவது, உதவித்தொகையை அதிகரித்து தாருங்கள் என்ற கோரிக்கை காணாமல் போய்விடும். யார் கூறுவார்கள்? ஜேஎன்யூ. உங்கள் மேல் வசவுகள் பொழியப்படும் பொழுது, கவலை கொள்ளாதீர்கள். எதை ஈட்டினீர்களோ, அதையே நீங்கள் உண்கிறீர்கள்?

இந்த நாட்டில் தேசவிரோதி அரசு அமைந்திருக்கிறது. அந்த மக்கள் விரோதி அரசுக்கு எதிராக பேசுவீர்கள் என்றால், அவர்களுடைய சைபர் செல் என்ன செய்யும். போலி வீடியோக்களை வெளியிடும். அவர்கள் உங்களுக்கு வசவுகளை அனுப்பி வைப்பார்கள். உங்கள் குப்பை தொட்டியில் எத்தனை காண்டம் இருந்தது என்பதையும் கணக்கெடுப்பார்கள். இது மிகவும் கடினமான சூழல். அதனாலேயே, இந்த சூழலில் நாமும் தீவிரமாக சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஜேஎன்யூ மீது நடத்தபட்ட தாக்குதலானது, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும். நீங்கள் நடத்திய Occupy UGC என்று நடத்திய போராட்டத்தை காலி செய்துவிட திட்டமிட்டார்கள். எதற்காக இந்த தாக்குதல் என்றால், நீங்கள் ரோஹித் வெமுலாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், அவனுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காகவும் போராடினார்கள். அதை அவர்கள் முறியடிக்க விரும்பினார்கள். ஜேஎன்யூவை பற்றிய விவாதங்களுக்கு மதிப்பிற்குரிய முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஏன் பிரைம் டைமில் நேரம் ஒதுக்குகிறார் என்றால், நீங்கள் இந்த நாட்டின் மக்களின் வங்கி கணக்குகளுக்கு 15 லட்சம் வந்து சேரும் என்று இன்றைய பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பதை மறக்கடிக்க வேண்டும். ஆனால், ஒரு விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஜே என்யூவில் அட்மிசன் கிடைப்பது கஷ்டமானது. ஆனால், ஜேஎன்யூ-க்காரர்களுக்கு மறக்க செய்வது என்பதோ அதைவிட கடினமானது.

நீங்கள் மறக்கடித்துவிட முடியும் என்ற நினைத்தால் நாங்கள் உங்களுக்கு மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்த தேசத்தை ஆள்பவர்கள் எப்பொழுதெல்லாம் ஊழலில் ஈடுபட்டிருக்காங்களோ, அப்போதெல்லாம், ஜேஎன்யூ மிக துணிச்சலாக தன்னுடைய குரலை வெளிப்படுத்தியிருக்குது. நாங்கள் அதை மீண்டும், மீண்டும் செய்வோம். நாங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்போம். உங்களால் எங்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய முடியாது.

ஒரு பக்கம் இராணுவ வீரர்கள் எல்லையில் மடிகிறார்கள். எல்லையில் உயிர் துறக்கும் வீரரக்ளுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சிறையில் நான் ஒருவிசயத்தை கற்றுக் கொண்டேன். அது என்னவென்றால்,

போராட்டம் கருத்தியலுக்கானதாக இருக்கும் போது தனிநபர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. எல்லையில் இராணுவ வீரரக்ள் உயிரிழப்பதை குறித்து பாஜக தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.

யார் அவர்கள், உங்கள் சகோதரர்களா?

இராணுவ வீரர்களுக்காகவும், நமக்காகவும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த நாட்டிற்குள் தற்கொலை செய்து கொள்கிறார்களே...அந்த இராணுவ வீரர்களின் தந்தைகளான அந்த விவசாயிகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

என் அப்பன்தான் சேற்றில் உழைக்கிறான், என் சகோதரன்தான் இராணுவத்தில் இணைந்து எல்லையிலும் உழைக்கிறான், உயிர் துறக்கிறான். எங்கள் உறவுகள்தான் நாட்டிற்குள்ளும், எல்லையிலும் இறக்கிறார்கள். சூழ்ச்சி செய்து நாட்டிற்குள் போலியான விவாதத்தை உண்டு பண்ணாதீர்கள். என்னுடைய கேள்வி இதுதான்..நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு, நீங்கள் யாருக்கெதிராக அரசியல் செய்கிறீர்கள்?

இறக்கும் எங்கள் உறவுகளின் உயிர்களுக்கு யார் பொறுப்பு? இறப்பவர்களா? சண்டையிட வைப்பவர்கள்தானே பொறுப்பு.

(ஷாந்தி நஹி தப்தக், ஜப்தக்

சுக்பாக் ந சப்கா ஷுக்பாக் ந சப்கா ஸம் ஹோகா

நஹி கிஷி கோ பகூத் அதிக், நஹி கிஷி கோ கம் ஹோகா- ஹிந்தி)

வளம் எல்லோருக்கும் எதுவரை சமமாகாதோ

அமைதி அப்போது வரை வாராது

சிலருக்கு வளம் பெறுக, சிலருக்கு வயிறு காய

என நிலை இருக்க

அமைதி என்பது வாராது)

போருக்கு யார் காரணம்? யார் மக்களை சண்டையிட வைப்பது? என் அப்பா எப்படி இறக்கிறார்? என் சகோதரன் எப்படி இறக்கிறான்? என்று இந்த பிரைம்டைம் ஸ்பீக்கர்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம். நாட்டிலிருக்கும் பிரச்சினையிலிருந்து விடுதலை வேண்டுவது பிழையா? எதிலிருந்து விடுதலை வேண்டும் உங்களுக்கு இவர்கள் என்ன கேட்கிறார்கள்? நீங்களே கூறிவிடுங்கள். இந்தியா யாரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். சரி, எங்களுக்கு பாரதத்திலிருந்து விடுதலை வேண்டாம். இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை, இந்தியாவில் விடுதலை கேட்கிறோம். ’இருந்து’ என்பதற்கும் ’இல்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. அந்த விடுதலையை இந்த நாட்டின் மக்கள் போராடி பெற்றிருக்கிறார்கள். நான் இப்போது என் அனுபவத்திற்கு வருகிறேன். காவல்துறையினர் என்னிடம் விசாரித்தனர். அது என்ன செவ்வணக்கம், செவ்வணக்கம் என்று கூறுகிறீர்கள்? இந்த கேள்வி விசாரணையின் அங்கம் கிடையாது. உணவு கொடுக்க, மருத்துவ உதவி செய்ய என காவல்துறையினர் அழைத்து செல்லும் போது...ஜேஎன்யூ ஆட்களில் நான் பிரம்ம புத்திரன் இல்லையா? பேசாமல் எப்படி இருப்பது? நாங்கள் அவர்களோடு பேச தொடங்கினேன். அவரும் என்னை போன்றவராகவே இருந்தார். இந்த நாட்டில் காவல்துறையில் பணி புரிவது யார்? யாருடைய தந்தை விவசாயியோ, யாருடைய தந்தை கூலியோ, யாருடைய தந்தை விளிம்பு நிலை வர்க்கத்தை சேர்ந்தவரோ அவர்கள்தானே காவல்துறையில் பணி புரிகிறார்கள்.

நானும், இந்த நாட்டின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக பீகாரிலிருந்துதான் வருகிறேன். நானும் ஒரு ஏழை குடும்பத்திலிருந்துதான் வருகிறேன். நானும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்துதான் வருகிறேன். காவல்துறையிலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் வேலை பார்க்கிறார்கள். நான் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களை குறித்துதான் பேசுகிறேன். ஐபிஎஸ் ஆபிசருக்கும் எனக்கும் இடையே அதிக உரையாடல் ஏதும் நிகழவில்லை. அந்த காவலரோடு நான் உரையாடினேன்.அவர் கேட்டார் “லால் சலாம், லால் சலாம் (செவ்வணக்கம்) என்றால் என்ன?”

நான் சொன்னேன் “சிவப்பு என்றால் புரட்சி, ஆக, செவ்வணக்கம் என்றால் புரட்சிக்கு வணக்கம்.” என்றேன்

”புரியவில்லை” என்றார்

”இன்குலாப் ஜிந்தாபாத்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ”என்றேன்

“ ம் தெரியும்” என்றார்.

“புரட்சிக்கு உருதுவில் இன்குலாப்” என்று கூறுவார்கள் என்றேன்

”இன்குலாப் ஜிந்தாபாத் என்று ஏபிவிபி காரர்களும் கூறுகிறார்களே.” என்றார் ஆச்சரியத்தோடு

”இப்போது புரிகிறதா? அவர்கள் போலி புரட்சிக்காரர்கள், நாங்கள் அசல் புரட்சிக்காரர்கள்” என்று என்றேன்.

அந்த மனிதன் 18 மணி நேரம் வேலை செய்கிறார், அவரிடம் ”நீங்கள் ஓவர் டைம் பார்ப்பதற்கு பணம் கிடைப்பதில்லையா? என்றேன்.“லஞ்சம் என்று நீங்கள் கூறுகிறீர்களே, அதிலிருந்து எடுத்துக் கொள்கிறோம்.” என்றார்

”சீருடைக்கு அவர்களுக்கு 110 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் உள்ளாடைகள் கூட கிடைக்காது எனும் போது சீருடை எங்கிருந்து வரும். இதை அந்த கான்ஸ்டபிள்தான் கூறுகிறார். நான் சொன்னேன் இதிலிருந்துதானே விடுதலையை கோருகிறோம். பட்டினிச்சாவிலிருந்து, ஊழலிருந்து ” என்றேன்

இதற்கிடையில் அரியானாவில் ஒரு போராட்டம் தொடங்கிவிட்டது. உங்கள் எல்லோருக்கும் தெரியும், தில்லி காவல்துறையில் பெரும்பாலும் மக்கள் ஹரியானாவிலிருந்துதான் வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் கடின உழைப்புக்காரர்கள். ஆகவே, அவர்களை நான் பாராட்டுகிறேன்.

”இட ஒதுக்கீடு” என்றேன்....”அது சாதியவாதம் மிகவும் கொடுமையானது.” என்றார் அந்த கான்ஸ்டபிள்

“இந்த சாதியவாதத்திலிருந்துதானே விடுதலை வேண்டும் என்கிறோம்” என்றேன்

”இதில் ஏதும் தேசத்துரோகம் இல்லையே” என்றார் அவர்

நான் அவரிடம் “ சிஸ்டத்தில் அதிக பலம் யாருக்கு இருக்கிறது” என்றேன்

”அவர் என் தடிக்குதான் அதிகம் சக்தி உள்ளது. “என்றார்.

”உங்களால் இந்த தடியை உங்கள் விருப்பத்தின்படி சுழற்ற முடியுமா?” என்று மறுபடியும் கேட்டேன்.

“இல்லை” என்று சோகமாக தலையாட்டினார்.

”எல்லா சக்தியும் யாரிடம் போனது?” என்றேன்

“தினமும் போலி ட்வீட் செய்கிறவரிடம் போய்விட்டது.” என்றார்

‘இப்படி போலி ட்வீட் செய்யும் சங் பரிவார கும்பலிடமிருந்துதான். நாங்கள் விடுதலையை கோருகிறோம்.” என்றேன்

“உண்மையை சொன்னால், நாம் இருவரும் ஒன்றாக நிற்பது போன்ற உணர்வு வருகிறது.” என்றார்

இதில் ஒரு இக்கட்டு இருக்கிறது. அனைத்து ஊடகங்களையும் பார்த்து கூறவில்லை. தாழ்மையாக சொல்கிறேன். எல்லோரும் அங்கிருந்து சம்பளம் வாங்குவதில்லை. சிலருக்கு அங்கிருந்துதான் ஊதியம் வருகிறது, ஊடகங்களில் வேலை பார்த்துக் கொண்டெ, நாடாளுமன்றத்தில் ரிப்போர்ட் செய்து கொண்டே, உள்ளே செல்ல முயன்று கொண்டிருப்பவர்கள்தான் பதட்டமான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தனி தனியாக நாம் பேசி கொண்டாலும் ’பரபரப்பு” செய்தியை பாருங்கள் என்று பீதியூட்டுகிறார்கள்.

அந்த காவல்துறை ஊழியல் மேலும் சொன்னார் “நண்பா, உண்மையை சொன்னால், எப்.ஐ.ஆரில் உங்கள் பெயர் வந்துவிட்டதால் நீ வருவாய் என்று தெரியும்.” நான் குறுக்கிட்டு, “ எப்.ஐ.ஆரில் பெயர் வருவதற்கு முன், ஏபிவிபியின் பட்டியலில் வந்துவிட்டோம். ஏபிவிபியின் பட்டியலில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் அனைவரது பெயரும் முதலில் வந்துவிட்டது, பின்னர்தான் எப்.ஐ.ஆரில் பெயர் வந்தது.” என்றேன். அவர் தொடர்ந்தார், “ நீ வந்தால் உன்னை நன்றாக உதைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில், அவர்களை நான்கு சாத்து, சாத்தலாம் போல இருக்கிறது.” என்றார்

மிகவும் முக்கியமான விசயத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஊடகங்களின் வழியாக பொதுமக்களின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகிறேன். என்னை போல, சாதாரண குடும்பத்தை இளைஞன் அவன், அவனும் ஆய்வு மாணவனாக விரும்பினான் ஆனால், அவனுக்கு ஜேஎன்யூ கிடைக்கவில்லை. அவனும் என்னை போலவே, இந்த நாட்டின் நிலையை புரிந்து கொண்டு போராட விரும்பினான். படித்தவனுக்கும், கற்றவனுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள விரும்பினான். அவன் இன்று காவல்துறையில் பணி புரிகிறான். இங்கேதான் ஜேஎன்யூ தனித்து நிற்கிறது. அதனால்தான், நீங்கள் ஜேஎன்யூவில் குரல்வளையை நெறிக்க விரும்புகிறீர்கள்.

அப்போதுதான், சாதாரண இளைஞன் ஆய்வு மாணவனாக வர முடியாது. ஏனென்றால், வெளியே கல்வி லட்சக்கணக்கில் விற்பனையாகிறது. அவனால் கல்வியை விலை கொடுத்து வாங்கிட இயலாது. எல்லையில் நின்றாலும், விவசாயத்தில் தன் உயிரை இழந்தாலும் அல்லது ஜேஎன்யூவில் விடுதலைக்காக போராடுகிறானோ நீங்கள் அந்த குரல்களை நசுக்க விரும்புகிறீர்கள், அந்த குரல்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் ஜனநாயகத்தால் பலனில்லை என்று அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறார். ஆகவே, நாங்கள் சமூக ஜனநாயகத்தை நிறுவுவோம். அடிக்கடி அரசியல் சாசனத்தை பற்றி பேசுகிறார்கள். ஜனநாயகம் என்பது சோசலிசத்தின் பாதையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் லெனின் கூறுகிறார். இதனால்தான் நாங்கள் ஜனநாயத்தை பற்றி பேசுகிறோம். இதனால்தான், நாங்கள் பேச்சுரிமையை பற்றி பேசுகிறோம். இதனால்தான், நாங்கள் சமத்துவத்தை பற்றி முழங்குகிறொம், இதனால்தான் நாங்கள் சோசலிசத்தை பற்றி பேசுகிறோம். ஒரு செருப்பு தைக்கிறவனின் மகனும், ஜனாதிபதியின் மகனும் ஒரே பள்ளியில் படிக்கும் சமத்துவ நிலைக்காக நாங்கள் பேசுகிறோம். ஆனால், நீங்கள் இந்த குரலை நசுக்க விரும்புகிறீர்கள்.

எவ்வளவு அழுத்தம் கொடுப்பீர்களோ, அவ்வளவு மேலெழும் என்று அறிவியலில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்களுக்கு அறிவியலுக்கு தொடர்பேயில்லை. ஏனென்றால், அறிவியலை படிப்பது ஒரு துருவம் என்றால், விஞ்ஞானி மறு துருவம். அறிவியல் மனப்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களோடு உரையாடல் நிகழ்த்தினால் இந்த நாட்டில் பட்டினிசாவிலிருந்தும், வறுமையிலிருந்தும், சுரண்டல் மற்றும் ஊழலிலிருந்து தலித், பழங்குடி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் அதிகாரத்திற்காக என நாங்கள் கோரும் விடுதலையை சாதித்தே தீருவோம். இதே சாசனத்தின் கீழ், இதே நாடாளுமன்றத்தில் கீழ், இதே நீதிவழங்கும் முறையின் கீழ் நின்றே சாத்தியமாக்குவோம்.

அது எங்கள் கனவு. இதுதான் அண்ணல் அம்பேத்கரின் கனவாக இருந்தது. இதுதான் தோழன் ரோஹித்தின் கனவும் கூட.. ஒரு ரோஹித்தை கொன்று விட துணிந்தீர்கள். அவனுக்கான நியாயத்திற்கான போராட்டத்தை நசுக்கிவிட நினைத்தீர்கள். ஆனால், பாருங்கள், எவ்வளவு பெரியதாய் கூட்டம் பரவிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு விசயம் இருக்கிறது, என்னுடைய சிறை அனுபவத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன். இது என்னுடைய சுய விமர்சனம். உங்களுக்கான சுயவிமர்சனமாக உங்களுக்கு தோன்றினால், இதை நீங்களும் பரிசீலியுங்கள். நாம் ஜேஎன்யூவை சார்ந்தவர்கள் அறிவுப்பூர்வமாகத்தான் பேசுகிறோம். ஆனால், சாதாரண மொழியில் பேசுவதில்லை. கடினமான மொழியையே கையாள்கிறோம். அது சாதாரண மக்களுக்கு புரிவதில்லை. அது அவர்களுடைய குற்றம் இல்லை. அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மை கொண்ட நேர்மையான மக்கள்தான். நீங்கள்தான் அவர்களுடைய தளத்திற்கு சென்று அவர்களோடு உரையாடுவதில்லை.

அவர்களிடம் சென்றடைவதுதான் என்ன? அதிகத்துக்கு அதிகமான க்ரூப்புகளுக்கு அனுப்புங்கள். ஓ.எல்.எக்ஸில் உங்கள் பொருட்களை விற்பனை செய்யுங்கள் என்று விற்பனை செய்யும் மனநிலை பரவலாக நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.அது குறித்து நாம் உரையாட வேண்டும். சிறைச்சாலையின் அனுபவத்திலிருந்து இங்கே கூற விரும்புகிறேன். அது என்னவென்றால், எனக்கு சிறையில் இரண்டு குவளைகள் கிடைத்தன, ஒன்று நீல வணத்தில் இருந்தது, மற்றது சிவப்பு வண்ணத்தில் இருந்தது, அதை பார்த்து நான் மீண்டும், மீண்டும் சிந்தித்தேன். எனக்கு விதியின் மீது நம்பிக்கை கிடையாது. கடவுளையும் தெரியாது. ஆனால், இந்த நாட்டில் ஏதோ நல்லது நடக்க இருக்கிறது. நீலம் மற்றும் சிவப்பு வண்ண குவளை வைக்கப்பட்டிருந்த தட்டு இந்தியா போல தெரிந்தது. நீல வண்ண குவளை அம்பேத்கரிய இயக்கமாக எனக்கு தோன்றியது, சிவப்பு வண்ணம் பொதுவுடமை இயக்கமாக தோன்றிற்று. இவற்றின் ஒற்றுமை இந்த நாட்டில் உருவாக்கப்பட்டால், உண்மையை கூறுகிறேன், விற்பது என்பது, விற்கும் கும்பலை துரத்துவதுதான் நடக்கும் என்று அவற்றை பார்த்து எனக்கு தோன்றியது.

விற்கும் கும்பல் நமக்கு தேவையில்லை. எல்லோருக்குமான நீதியை உறுதிப்படுத்துபவர்களின் அரசை நாம் நிறுவுவோம். அனைவரோடும் இணைந்து, அனைவருக்குமான மேம்பாடு என்பதை எதார்த்தத்தில் உறுதி செய்வோம்.

மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜேஎன்யூ மாணவர்களை சிறையிலடைத்திருக்கிறார்கள். ஏனென்றால், நீண்ட நாட்களுக்கு பிறகு....

அதற்கு முன் இதனோடு தொடர்புடையது, ஒரு சுவாரஸ்யமான செய்தியை சொல்லிவிடுகிறேன்.

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களின் பெருமதிப்பு கொண்ட...(சொல்ல வேண்டியிருக்கிறதல்லவா?) யாருக்கு தெரியும். இதையும் திரித்து ஒரு வீடியோ வெளியிட்டாலும் வெளியிட்டுவிடுவார்கள். ஆகையால், மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்கள், ஸ்டாலின் மற்றும் குருசேவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதை கேட்ட மாத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்து விடும் ஆர்வம்தான் மேலிட்டது. அவருடைய சூட்டை பிடித்துக் கொண்டு “ மோடிஜி கொஞ்சம் ஹிட்லரை பற்றியும் பேசிவிடுங்களேன். ஹிட்லர் இல்லையென்றால், கருப்பு தொப்பு அணியும் முசோலினியை பற்றியாவது பேசிவிடுங்களேன். அவரைத்தானே உங்கள் குருஜி கோல்வால்கள் சந்திக்க சென்றிருந்தார். பாரதிய உணர்வை புரிந்து கொள்ள ஜெர்மனிலிருந்து தத்துவ தரவிறக்கம் செய்ய கூறியிருந்தார் ” என்று சொல்ல தோன்றியது.

ஆனால், அவர் மன் கி பாத்(மனதின் செய்தி) கேட்பதில்லை, அவர்கள் மனதில் தோன்றியதை செய்கிறார்கள். இது ரொம்பவும் தனிப்பட்ட விசயம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று என் தாயோடு பேசினேன். ஜேஎன்யூவில் இருந்த தருணங்களில் அவரோடு அதிகம் பேசியதில்லை. சிறைக்கு சென்று வந்ததற்கு பிறகு, சீரான இடைவெளியில் பேச வேண்டும் என்று தோன்றியது. நீங்களும் உங்கள் வீட்டாரோடும் அவ்வப்போது பேசிக் கொண்டிருங்கள். நான் என் தாயிடம் ”நீ மோடியை பயங்கரமாக கேலி செய்து விட்டாயே” என்றேன். அதற்கு அவர் “ கேலி செய்வது, வேடிக்கை காண்பிப்பது எல்லாம் அவர்கள் வேலை. நான் என் வலியை மட்டும்தான் சொன்னேன். யாருக்கு இந்த வலி புரிகிறதோ அவர்கள் அழுவார்கள், புரியாதவர்கள் மட்டுமே சிரிப்பார்கள்.” மேலும் அவர் “ எனக்கு வலித்தது, அதற்காகத்தான் மோடியும் ஒரு தாயின் பிள்ளைதானே, என் பிள்ளையும் தேசத்துரோக வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள். எப்பொழுதும் மன் கி பாத் செய்ற அவர், எப்போதாவது தாயின் பேச்சையும் எப்பொழுதாவது கேட்கட்டும்.”

(குரல் தளுதளுத்துவிட்டது)

என்னிடம் அவருக்கு சொல்ல சொற்களே இல்லை. ஏனென்றால், இந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறதோ, அதில் ரொம்பவும் பயங்கரமான விசயம் உட்பொதிந்து இருக்கிறது. அதனால்தான், நான் ஏதேனும் ஒரு கட்சியை பற்றி பேசவில்லை. குறிப்பிட்ட தொலைக்காட்சியை பற்றி பேசவில்லை. அதனால்தான், இராணுவ வீரர்களை குறித்து மட்டும் பேசவில்லை. உண்மையில் நான் முழு நாட்டை குறித்து பேசுகிறேன். நாட்டின் மக்களே இல்லாத நாடு, எப்படியாபட்ட நாடாக இருக்கும்.

சிந்தியுங்கள்!

ஜேஎன்யூ சார்பாக மக்கள் எழுந்து நின்றார்கள் என்றால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களால் வலியை புரிந்து கொள்ள முடிகிறது, ஜேஎன்யூவில் எப்படியான இளைஞர்கள் படிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இங்கே 60 விழுக்காடு பெண்கள் படிக்கும் நாட்டின் ஒரே பல்கலைக்கழகம் இதுதான். ஏராளமான அயோக்கியர்களையும் தாண்டி, இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தும் பல்கலைக்கழகம் ஜேஎன்யூதான். வளாகத்தின் எந்த பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட வில்லையோ, அங்கே நடைமுறைப்படுத்த நாங்கள் போராடுகிறோம். நான் இதுவரை உங்களிடம் கூறியதில்லை. என் குடும்பம் 3000 ரூபாயில்தான் இயங்கி வருகிறது. நான் ஏதாகிலும் பெரிய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இணைந்திருக்க முடியுமா?

எனக்கு எந்த அரசியல் கட்சியின் மீதும் அனுதாபம் கிடையாது, எனக்கென்று நான் நம்பும் சித்தாந்தம் இருக்கிறது. இது போன்று, ஜேஎன்யூவில் தாக்குதல் தொடுக்கப்படும் போது, ஆனால், பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் தேசத்துரோகி முத்திரை குத்தப்படுகிறதே? சீத்தாராம் யெச்சூரியையும் என்னோடு இணைத்து தேசத்துரோக முத்திரை குத்திவிட்டிருக்கிறார்கள். ராகுல் காந்தி, டி..ராஜா, கெஜ்ரிவால் என பலர் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஊடகங்களின் வழியாக ஜேஎன்யூவின் சார்பாக, இன்னும் சொல்லப்போனால் ஜேஎன்யூ சார்பாக அல்ல, உண்மையை உண்மையென்றும், பொய்யை பொய்யென்றும் கூறுகின்றனர். அவர்களுக்கு வசவுகள் அனுப்பப்படுகின்றன. அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் முழக்கங்கள் எழுப்பினீர்களா? என்று சில காவல்துறை ஊழியர்கள் கேட்டார்கள். நான் ,மீண்டும் சென்று எழுப்புவோம் என்றேன்.

பகுத்தறிவுங்கிறது மொத்தமாக முடிந்து போய்விட்டதென்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த அரசு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகள் சகித்துக் கொள்ள வேண்டும். இரண்டே ஆண்டுகளில் மக்கள் தங்கள் பகுத்தறிவை இழந்துவிட மாட்டார்கள். ஏனென்றால், 69 விழுக்காடு மக்கள் அந்த இந்து மனோநிலைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். வெறும், 31 விழுக்காட்டை மட்டும்தான் இவர்களுக்கு ஆதரவு. அதில் சிலரை ஹர், ஹர் என்று பேசி ஏமாற்றிவிட்டார்கள். இன்று அனைத்திலும் (ஹர் என்றால் அனைத்தும் என்று பொருளுண்டு) மக்கள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். இது உங்களுடைய நிரந்தர வெற்றி என்று கருதாதீர்கள். ஆயிரம் முறை பொய்யை திரும்ப, திரும்ப சொல்வதன் மூலம் அதை மெய்யாக்கிவிடலாம்தான். ஆனால், அது பொய்யோடு மட்டுமே நிகழும், உண்மையோடு இல்லை.

சூரியனை நூறு முறை நிலா என்று அழைப்பதால், அது நிலவாகுமா? நீங்கள் ஆயிரம் முறை கூறினாலும் அது சூரியனாகத்தான் இருக்கும். நீங்கள் பொய்யைத்தான் உண்மையை போல திரிக்க முடியும். ஆனால், உண்மையை பொய்யாக்க முடியாது. இவர்களுடைய செயல்கள் என்பது மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில்தான் இருக்கிறது. மக்களுடைய அன்றாட பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புகிற வேலை அது.

மக்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் புது, புது திட்டம் வைத்திருக்கிறார்கள். இங்கே பல்கலைக்கழகத்தில் உதவித்தொகைக்கான போராட்டம் நடந்தால், அங்கே ரோஹித் கொலை செய்யப்பட்டான். ரோஹித்துக்காக போராட தொடங்கினோம், தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பரவ தொடங்கின. ஜேஎன்யூவை தேசத்துரோகிகளின் கூடாரம் போல சித்தரித்தார்கள். இதுவும் நீண்ட நாள் நடக்காது. அடுத்த தயாரிப்பில் இறங்கியிருப்பார்கள். ராமனுக்கு கோவில் கட்டுவதற்கு கிளம்பியிருக்கிறார்கள். இன்றைய செய்தியை குறிப்பிடுகிறேன். இன்று சிறையிலிருந்து மீண்டு வரும் போது நிகழ்ந்தது.

மதம் தெரியுமா? என்றார் ஒரு காவலர். ”மதம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றேன் நான்.

“ முதலில் என்னவென்று கற்றுக் கொள், பின்னர் ஒத்துக் கொள்வாய்” என்றார்

”எந்த குடும்பத்திலாவது பிறந்திருப்பாய்தானே?” என்றார்

”கெடுவாய்ப்பாய், இந்து குடும்பத்தில் பிறந்துவிட்டேன்” என்றேன்

”அதை பற்றி எதாவது தெரியுமா?” என்று மீண்டும் கேட்டார்

”எனக்கு தெரிந்த வரையில், கடவுள் அண்டத்தை படைத்தார். ஆனால், கடவுளுக்காக ஏதோ ஒன்றை படைக்க விரும்புகிறார்கள், அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றேன்.

“சிறந்த ஐடியாதானே” என்றார்

இன்னும் எவ்வளவு உயரம், வாயில் ராமனும், கக்கத்தில் அரிவாளையும் வைத்துக் கொண்டு ஏற்கனவே 80லிருந்து 180 ஆக ஆக்கி கொண்டீர்கள். ஆனால், இனி நடக்காது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.

நாட்டின் முக்கியமான பிரச்சினைகளின் மீது முக்கியமான கேள்விகள் ஏதும் எழும்பிவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நான் இங்கே நிற்கிறேன், நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மீது ஏதோ தாக்குதல் நடந்ததாக உணர்கிறீர்கள். உண்மையில் இது பெரிய தாக்குதல்தான். ஆனால், இந்த தாக்குதல் இன்று தொடங்கியதில்லை.

உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆர்.எஸ்.எஸின் பத்திரிக்கை ஆர்கனைசரில் ஜேஎன்யூவை பற்றி ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். சுப்பிரமணிய சுவாமி ஜேஎன்யூவை பற்றி பேசியிருந்தார். ஒருவேளை ஏபிவிபியின் எனது நண்பர்கள் கேட்பீர்களேயானால், அவர்களிடம் எனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கிறது. ஒருமுறை சுப்பிரமணியசுவாமியை இங்கே அழைத்து வாருங்கள். நேருக்கேர் விவாதிக்கலாம். தர்க்க முறையில், குதர்க்க வழிமுறையில் அல்ல, ஜேஎன்யூவை நான்கு மாதங்களுக்கு மூடிவிட வேண்டும் என்று நிருபிப்பாரேயானால், நான் அவரது கருத்தை ஆமோதிக்க தயார். இல்லையென்றால், முன்னர் எப்படி நாட்டை விட்டு வெளியே இருந்தீர்களோ, அப்படியே நாட்டை விட்டு வெளியே போய்விடுங்கள் என்று தாழ்மையான வேண்டுகோள் வைப்பேன்.

சுவாரஸ்யமான செய்தி ஒன்றை கூறுகிறேன். நீங்கள் வளாகத்திற்குள் இருப்பதால் உங்களுக்கு இந்த விசயங்கள் தெரிந்திருக்காது. எவ்வளவு திட்டமிடல், முதல் நாளிலிருந்து திட்டமிடல். இங்கிருக்கிற ஏபிவிபிகாரர்களை குறிப்பிடவில்லை, வெளியே இருக்கிற ஏபிவிபி காரர்களை குறிப்பிடுகிறேன்.

எந்த பதாகையோடு ஹிந்து கிராந்தி சேனா போராடுகிறதோ, அதே பதாகையோடுதான் ஏபிவிபிகாரர்களும் போராடுகிறார்கள், முன்னாள் இராணுவ வீரர்களும் அதே பதாகையோடுதான் போராடுகிறார்கள். இதன் பொருள், எல்லோருடைய நிகழ்ச்சி நிரலும் நாக்பூரில்தான் திட்டமிடப்படுகிறது. இவர்களுடைய போராட்டங்கள் எதுவும் தன்னிச்சையாக நடப்பவை அல்ல. அரசியல் ரீதியாக ஊக்கம் பெற்றது அது. அதன் நோக்கம் இந்த நாட்டில் இருக்கும் போராட்ட குரலை முற்றும், முழுதாக நசுக்குவது.

மக்களின் அடிப்படை விசயங்களிலிருந்து கவனத்தை திசை திருப்பி, இந்த வளாகத்தில் போராடக்கூடிய அநிர்பான் ஆகட்டும், உமர் ஆகட்டும், அசுதோஷ் ஆகட்டும், கண்ணையாவாகட்டும், உங்கள் அனைவரிலும் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்களுக்கு தேசத்துரோக முத்திரை குத்தி, ஜேஎன்யூவின் குரலை நசுக்கி , ஜேஎன்யூவின் நீர்த்து போகச் செய்து, இந்த போராட்டத்தை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். எவ்வளவு அழுத்தினாலும், நாங்கள் முன்னிலும் வேகமாக எழுவோம். இது ஒரு நீண்ட போராட்டம்.

நிற்காமல், மூச்சுவிடாமல் ஒரு தொடர்ச்சியோடு இந்த போராட்டத்தை நாம் முன்னகர்த்த வேண்டும். இந்த வளாகத்திற்குள், நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் சக்திகள், அது ஏபிவிபியாகட்டும், இந்த வளாகத்திற்கு வெளியே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலாகட்டும் நாம் ஒருங்கிணைந்து எழுந்து நிற்போம். ஜேஎன்யூ எழுந்து நிற்கும் ,வரலாறு படைக்கும்

எந்த போராட்டம் பல்கலைக்கழக ஊக்கத்தொகக்காக, ரோஹித்துக்கான போராட்டத்தில் நாட்டின் விளிம்பு நிலை மக்களின் போராட்டத்தில் தொடர்ந்து நின்ற உங்களுக்கு நன்றி. தொடர்ந்து போராடுங்கள்!

மாணவர்கள் ஒற்றுமை ஓங்குக, சமூக ஒற்றுமை ஓங்குக.

இன்குலாப் ஜிந்தாபாத் செவ் வணக்கம் ஜெய் பீம்!

Sunday, 21 February 2016

பா.ஜ.க.வின் பொய்ப் பிரச்சாரம்; இந்துக்களுக்கு இலவச உதவிகள் இல்லையா.?





முஸ்லீம்கள், கிருத்தவர்கள், சீக்கியர் உள்பட சிறுபான்மையினருக்கு மத்திய அரசு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இந்துக்களுக்கு கல்வி உதவி வழங்கப்படாமல் சிறுபான்மையினருக்கு கல்வி உதவி வழங்கப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது பா.ஜ.க. 

இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களை விடவும் முஸ்லீம்கள் கல்வியிலும் பொருளாதாரத் திலும் மிகவும் பின் தங்கி உள்ளார்கள் என்ற உண்மையை வெளியிட்ட நீதிபதி சச்சார் அறிக்கை யின் அடிப்படையிலேயே மத்திய அரசு ஒரு சிறு தொகையை (தமிழகத்துக்கு ரூ.35 கோடி) குறிப்பிட்ட எண்ணிக்கையில் 2008 ஆம் ஆண்டிலிருந்து கல்வி உதவியாக வழங்குகின்றது. 2010 ஆம் ஆண்டு தமிழகத்தில் முஸ்லீம்களில் தொழில் கல்வி படிப்பிற்கு 1383 பேர். பிற பட்ட படிப்புகள் - 3202 பேர். பள்ளி படிப்பிற்கு - 36600 பேர்களுக்கு மட்டுமே அரசு வழங்குகின்றது. விண்ணப்பிக்கும். அனைவருக்கும் இந்த தொகையை அரசு வழங்குவதில்லை.

இந்தக் கல்வி உதவித் தொகையை பெறுவோர் வேறு எந்த மத்திய, மாநில அரசின் உதவி தொகையை பெற முடியாது. இந்த கல்வி உதவி தொகை எல்லா சிறுபான்மையினருக்கும் கொடுக்கப்படுவது கிடை யாது. பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மை யினருக்கே வழங்கப்படுகின்றது. விண்ணப்பித்த எவ்வளவோ முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைக்க வில்லை. இதிலும் அரசு அதிகாரிகளின் முஸ்லீம் விரோத போக்கினாலும், ஊழலினாலும் அரசு தரும் பணமும் முழுமையாக முஸ்லீம்களுக்கு போய் சேர்வதில்லை.

அதே நேரத்தில் இந்துக்களுக்கும் மத்திய அரசு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டே வருகின்றன.

1. பொருளாதாரத்தில் பின் தங்கிய இந்துக்கள் உட்பட அனைவருக்கும் கல்வி உதவி தொகையாக மத்திய அரசு மாதம் ரூ.1000 வழங்குகின்றது. சிறுபான்மை கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சிறுபான்மையின மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உதவி கிடைக்காது. எனவே, இது இந்துக்களுக்கே உள்ளது. இந்த கல்வி உதவித் திட்டத்தின் முழு விவரமும் மத்திய அரசின் உயர் கல்வித் துறை இணைய தளத்தில்  www.education.nic.in உள்ளது.

2. இந்தியை விருப்ப மொழியாக தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.3500 முதல் ரூ.12000 வரை மத்திய அரசு வழங்குகின்றது. சிறுபான்மை கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சிறு பான்மையின மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உதவி கிடைக்காது. எனவே இது இந்துக்களுக்கே உள்ளது. இந்த கல்வி உதவித் திட்டத்தின் முழு விவரமும் www.education.nic.in இணையதளத்தில் உள்ளது. 

3. இது தவிர எஸ்.சி./எஸ்.டி. சமுதாயத்தினருக்காக சிறப்பான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்தி வருகின்றது. இதை இந்துக்களை தவிர யாரும் வாங்க இயலாது. இந்தக் கல்வி உதவித் திட்டத்தின் முழு விவரமும் www.education.nic.in இணையதளத்தில் உள்ளது.

இது தவிர இந்துக்களுக்கு மாநில அரசு வழங்கும் உதவித் தொகை:

1. தலித் சமுதாயத்தினரின் கல்விக்காக மட்டும் இந்த வருட 2011 தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை இந்துக்களை தவிர வேறு யாரும் வாங்க இயலாது.

2. மேலும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வருடா வருடம் தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகின்றது.

எனவே, இந்துக்களுக்கு கல்வி உதவி வழங்காமல், சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகின்றது என்று கூறி, பா.ஜ.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையில்லை!


 - ‘உணர்வு’




Tuesday, 9 February 2016

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !






பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி.

அயோத்திக்கு பாபர்; சோமநாதபுரத்திற்கு கஜினி.

அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.
.
இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
..
அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.
.
ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.
.
கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான்.

இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.


.
ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு சுமார் 50(தற்போது 65 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.
..
ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை.

எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை.

அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?
.
இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள்.

அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?
.
இது வேடிக்கையான வாதமோ, குதர்க்கவாதமோ அல்ல. இந்து தேசியக் கண்ணோட்டத்திலிருந்து நமக்குக் கற்பிக்கப்படும் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முயற்சி.
.
பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார்.

‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.
.
சோமநாதபுரம் – அரேபியர்களுடன் இருந்த கடல் வர்த்தகத் தொடர்பு காரணமாக செல்வச் செழிப்புடன் விளங்கிய துறைமுக நகரம். இந்த அராபிய வர்த்தகத் தொடர்பு பல நூற்றாண்டுகள் முந்தையது.

அரேபிய வர்த்தகர்கள், மாலுமிகளில் பலர் இங்கேயே திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு மேற்குக் கடற்கரை ஓரமாக நிரந்தரமாகவே தங்கி விட்டனர். கி.பி 8, 9 நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிரகூட ஆட்சியில் கடலோரப் பகுதிகளில் தாஜிக்கிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்கள் ஆளுநர்களாகக் கூடப் பணியாற்றியிருக்கின்றனர். அதே போல கஜினி நகரத்தில் இந்து வியாபாரிகள் செல்வாக்குடன் இருந்திருக்கின்றனர்.
.
சோமநாதபுரம் கோயில் அத்தனை செல்வச் செழிப்புள்ளதாக விளங்கச் சில காரணங்கள் இருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் யாத்திரை வரி வசூலிக்கப்பட்டது. (ஜஸியா எனும் யாத்திரை வரி முசுலீம் மன்னர்களால் இந்து யாத்தீகர்களிடம் வசூலிக்கப்பட்டதாக மட்டுமே கூறுகிறது பாடநூல்). இதில் கிடைத்த பெரும் வருவாயைக் கொண்டு அரேபியக் குதிரை இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது கோயில் நிர்வாகம்.
.
கோயில் நிர்வாகத்திற்கும், சோலங்கி ஆட்சிக்கும் அன்றைக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொள்ளையடித்த குறுநில மன்னர்கள்தான்.

யாதவர்கள், சுடாசாமர்கள், அபிரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தக் குறுநில மன்னர்கள் வர்த்தகர்களையும் பக்தர்களையும் வழிமறித்து அவர்கள் கொண்டுவரும் காணிக்கைகளை வழிப்பறி செய்தனர். இவர்களைச் சமாளிப்பதுதான் சோலங்கி அரசின் தலையாய பணியாக இருந்தது.
.
இந்தப் பின்புலத்தில் கி.பி 1025-ம் ஆண்டு நடந்தது கஜினியின் படையெடுப்பு. அது குறித்த வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களை இனிக் காண்போம்.
.
துருக்கிய – பாரசீகக் குறிப்புகள்:
.
மன்னர்களின் வீரபராக்கிரமங்களை மிகைப்படுத்திக் கூறும் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள தன்மை இவற்றிலும் உண்டு. கீழை இசுலாமிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞரான பரூக்கி சிஸ்தானி என்பவர் கஜினியின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கிறார்.
.
சிஸ்தானியின் கூற்றுப்படி சோமநாதபுரத்தில் கஜினியால் உடைப்பக்கட்ட சிலை இந்துக் கடவுள் அல்ல; இசுலாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் வழிப்பட்டு வந்த வாத், உஸ்ஸா, மானத் என்ற பெண் தெய்வங்களில் ஒன்றான மானத் என்ற பெண் கடவுளின் சிலை.
.
உருவ வழிபாட்டை எதிர்த்த முகமது நபி இச்சிலைகளை உடைத்தெறியுமாறு ஆணையிட்டதாகவும் மற்ற இரண்டு கடவுள்களின் சிலையும் உடைக்கப்பட்டு விட்டதாகவும், மானத்தின் சிலை மட்டும் குஜராத்திற்கு ரகசியமாகக் கடத்தி வரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார் சிஸ்தானி.
.
‘’சு-மானத்’ என்றால் ’’மானத் கடவுளின் உறைவிடம்’’ என்று பொருள். இந்தச் சிலையை உடைத்ததன் மூலம் நிறைவேற்றப்படாமலிருந்த ஒரு இசுலாமியக் கடமையை கஜினி நிறைவேற்றிவிட்டார்’’ என்று அவர் எழுதுகிறார்.
.
மன்னனைக் ‘குளிப்பாட்டுவதற்கு’ வழக்கமாக அரசவைப் புலவர்கள் புனையும் கதைதான் இது என்றும், பல்வேறு இசுலாமிய மன்னர்களைக் காட்டிலும் தன்னை ஒரு மதக்கடமையை நிறைவேற்றிய மாவீரனாகச் சித்தரித்துக் கொள்ள கஜினி செய்த முயற்சி என்றும் கூறி வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையை நிராகரிக்கின்றனர்.
.
கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.
.
இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.
.
சோமநாதபுரத்தின் மீதான தாக்குதல், ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றை மதக் கடமையை நிறைவேற்றும் செயல்களாக அன்று இசுலாமிய உலகத்திடம் (கலீபாவிடம்) கஜினி சித்தரித்திருக்கலாம். எனினும் அடிப்படை உண்மை அதுவல்ல.
.
இந்தியாவின் பல்வேறு அரசுகளுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகத்தில் அரேபியாவுடன் கஜினி (ஆப்கான்) போட்டியிட்டுக் கொண்டிருந்தது. சோமநாதபுரத்தின் போரா முஸ்லீம் மற்றும் இந்து வணிகர்கள் மூலமாகவும், சிந்து மாகாணத்தின் (மூல்தான்) இசுமாயிலி, ஷியா வியாபாரிகள் மூலமாகவும் நடைபெற்ற இந்த வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம்தான் கஜினியின் வர்த்தகம் பெருகும் என்பது யதார்த்த நிலையாக இருந்தது.
.
வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை போர்த்திக் கொண்டது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.
.
சமண நூல்களின் குறிப்புகள்:
.
இனி, அக்காலத்தில் நாடெங்கும் செல்வாக்குடன் திகழ்ந்த சமண மத்ததினரின் குறிப்புகளைக் காண்போம். 
.
கோயில்களை அழித்து முனிவர்களையும் பார்ப்பனர்களையும் துன்புறுத்துகின்ற ராட்சதர்களுக்கெதிராக சாளுக்கிய மன்னன் போர் தொடுத்ததை 12-ம் நூற்றாண்டின் சமண நூல் குறிப்பிடுகிறது.
.
ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த கஜினியின் படையெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
.
இதே சாளுக்கிய மன்னன் காம்பே பகுதியில் முசுலீம்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
.
13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் குமாரபாலன் என்பவன் சாகாவரம் பெற விரும்பிய கதையை இன்னொரு சமண நூல் கூறுகிறது:
.
சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். 
.
சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப் புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன், உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.
.
கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூலிலும் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.
.
11-ம் நூற்றாண்டில் (அதாவது கஜினி முகமதுவின் படையெடுப்பின் போது) வாழ்ந்த மால்வா அரசவையின் சமணக் கவிஞர் தனபாலன் என்பவர் சோமநாதபுரம் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சிலை உடைப்பு பற்றி ஏதும் இல்லை. 
.
மாறாக மகாவீரரின் சிலைகளை கஜினி முகமதுவால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை விரிவாகக் கூறுவதன் மூலம் சைவத்தைக் காட்டிலும் சமணத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.
.
சைவத்திற்கு எதிராகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமணர்கள், ‘’தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சிவபெருமானைப்’’ பற்றி எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
..
சோமநாதபுரத்தின் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்:
.
12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.
.
ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி ஒரு கல்வெட்டும் இல்லை.
.
கல்வெட்டைக் காண்பவர்கள் ‘’சிவனுக்கே இந்தக் கதியா’’ என்று நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்ற சங்கடமா?
.
அப்படியானால் உள்ளூர் மன்னர்கள் கோயிலைத் தாக்கியதை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்? 
.
அல்லது கோயிலைக் கொள்ளையடிப்பது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சாதாரண விசயமாக இருந்ததா? – என்ற பல கேள்விகளை இக்கல்வெட்டுகள் கிளப்புகின்றன.
.
1264-ம் ஆண்டின் இன்னொரு கோயில் கல்வெட்டு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்திலும் அராபிய மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, ஹார்மூஸ் நகரைச் சேர்ந்த ஒரு முசுலீம் வியாபாரிக்கு மசூதி கட்டுவதற்காக சோமநாதபுரத்திலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டது பற்றியதாகும்.
.
கோஜா நூருதீன் பெரூஸ் என்ற வியாபாரிக்கு ஸ்ரீசாதா என்ற உள்ளூர் மன்னன் அனுமதியுடன் செய்த இந்த நிலவிற்பனைக்கு இரண்டு உள்ளூராட்சி அமைப்புகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.
.
சோமநாதபுரம் கோயிலின் அர்ச்சகர் வீரபத்ரனின் தலைமையில் வர்த்தகர்கள், அதிகாரிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள் அடங்கிய ‘பஞ்சகுலா’ என்ற பஞ்சாயத்து ஒரு உள்ளூர் அமைப்பு.
.
கப்பல் முதலாளிகள், கைவினைஞர்கள், மாலுமிகள், மதகுருமார்கள் ஆகியோரடங்கிய ‘ஜமாதா’ என்ற ஜமாத் இரண்டாவது அமைப்பு. இந்த ஜமாத்தின் உறுப்பினர்களாக வாணிபர்கள், கொத்தனார்கள், முசல்மான் குதிரை லாயக்காரர்கள் ஆகியோரும் அவர்களது சாதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் இசுலாத்திற்கு மாறிய உள்ளூர் சேவைச் சாதியினராக இருக்கக்கூடும்.
.
மசூதிக்கான நிலம் யார் யாரிடமிருந்தெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது என்ற பட்டியல் தெளிவாக உள்ளது. அதில் பெரும்பகுதி நிலம் சோமநாதபுரம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதும், அதை விற்பனை செய்தவர் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
மொத்தக் கல்வெட்டையும் பரிசீலிக்கும் போது, எவ்வித நிர்jfபந்தமுமின்றி மிகச் சுமுகமாகவே இந்த விற்பனை நடந்துள்ளதென தெரிகிறது.
.
கஜினி முகமதுவின் படையெடுப்பு நடைபெற்று சுமார் இருநூறே ஆண்டுகளில் அந்தக் கோயில் நிலத்தையே மசூதிக்கு விற்க அர்ச்சகர்களும், ‘இந்து’ வியாபாரிகளும் எப்படிச் சம்மதித்தனர்? 
.
1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களின் நினைவில் கல்வெட்டாகப் பதிந்து அவமான உணர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் என்று பாரதீய ஜனதா கூறுகிறதே, அந்த கஜினியின் படையெடுப்பை அதே சோமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மறந்தது எப்படி? அதுவும் இருநூறே ஆண்டுகளில்!
.
ஞாபக மறதியா? அல்லது பலநூறு படையெடுப்புகளில் அதுவும் ஒன்று என்பதால் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவு முக்கியமானல்ல என்பதாலா?
.
அல்லது தங்களுடன் “சுமூகமான வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள் வேறு, ஆக்கிரமித்த துருக்கியர்கள் வேறு; இருவரும் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களிருவரையும் ‘முசல்மான்கள்’ என்று ஒரே மாதிரியாகக் கருத முடியாது’’ என எண்ணினார்களா – இந்தக் காரணம்தான் அடிப்படையானதாகத் தெரிகிறது.
.
அதுமட்டுமல்ல, குதிரை வர்த்தகத்திற்குப் பெயர்போன ஹார்மஸ் நகர முசுலீம் வியாபாரிக்குத்தான் நிலம் விற்கப்பட்டிருக்கிறது. எனவே வர்த்தக நலன் இதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கக் கூடும். கோயில் நிர்வாகிகள் கோயில் பணத்தில் குதிரை வர்த்தகம் செய்து கணிசமாக லாபம் ஈட்டியிருக்கக் கூடும் என்பதும் இந்தப் ‘பெருந்தன்மைக்கு’க் காரணமாக இருந்திருக்கலாம்.
.
‘அர்ச்சகர்களின் பெருந்தன்மை’
.
இந்திய மன்னர்களுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகம் அரேபியா, சிந்து பகுதிகளைச் சேர்ந்த ஷியா, இசுமாயிலி பிரிவு முஸ்லீம் வியாபாரிகள் கையில் இருந்தது. இந்த வர்த்தக வழியைத் தடுத்து, ஆப்கான் மூலம் வர்த்தகம் செய்ய வைப்பதன் மூலம் தனது அரசின் செல்வாக்கை பெருக்குவதே கஜினி முகமதுவின் நோக்கம். வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை அணிந்தது இப்படித்தான்.
.
அதேபோல கஜினி முகமது சோமநாதபுரதிதன் மீது படையெடுத்து 200 ஆண்டுகளுக்குள், அந்த கோயில் நிலத்தையே மசூதி கட்டுவதற்காக விற்றிருக்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். இவர்களும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுதான் இந்தப் ‘பெருந்தன்மை’க்கு காரணமாக இருக்கும்.
.
சோமநாதபுரத்திலேயே காணப்படும் 15-ம் நூற்றாண்டின் கல்வெட்டொன்று இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகப் பயன்படுகிறது.
.
சமஸ்கிருத மொழியில் உள்ள அக்கல்வெட்டு ‘’பிஸ்மில்லா ரஹ்மானி ரஹீம்’’ என்ற இசுலாமிய வாழ்த்துச் சொல்லுடன் தொடங்குகிறது. 
.
‘’போராபரீத்’’ என்பவருடைய அராபிய வம்சாவளியை விவரமாகக் கூறி துருக்கியர்களால் (கஜினி) சோமநாதபுரம் தாக்கப் பட்டபோது அதை எதிர்த்து உள்ளூர் மன்னன் பிரம்ம தேவன் சார்பாக போரா பரீத் போரிட்டு மடிந்ததாகவும், அவரது நினைவாக அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
படையெடுப்புக்கு ஆளான சோமநாதபுரம் நகரைச் சேர்ந்தவர்களே கஜினியின் படையெடுப்பைப் பற்றி அப்போதும், அதையடுத்த சில நூற்றாண்டுகளிலும் எத்தகைய கருத்தும் கண்ணோட்டமும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டோம். 
.
அப்படியானால் இந்த ‘’ஆயிரம் ஆண்டு அவமானம்’’ என்ற கதை எப்போது உருவானது? இந்தக் கதையின் முதல் ஆசிரியர்கள் வெள்ளையர்கள்.
.
பிரிட்டிஷ் காமன்ஸ் அவை விவாதம்:
.
“சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த கஜினி முகமது அந்தக் கோயிலின் சந்தனமரக் கதவுகளை கொண்டு சென்று விட்டான். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவம் கஜினிக்குச் சென்று அங்கிருந்து அந்தக் கதவைக் கொண்டு வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று 1842-ல் அறிவித்தார் லார்டு எல்லன்பரோ.
.
(1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்கு 15 ஆண்டுகள் முன்னர்தான் அந்த விவகாரம் தொடங்குகிறது என்பதையும், இந்து-முசுலீம் மன்னர்களையும் மக்களையும் பிளவுபடுத்துவது அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வாழ்வுக்கே அவசியமானதாக இருந்தது என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)
.
ஆப்கானை வெல்ல முடியாத பிரிட்டன் இக்கதவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஆப்கான் மீதான தனது மேலாண்மையைக் காட்டலாம்; அதே நேரத்தில் இந்துக்களையும் கவர முடியும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.
.
இந்நடவடிக்கையை ஆட்சேபித்த காமன்ஸ் அவையின் எதிர்த் தரப்பினர், “இது முசுலீம்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதில் முடியும்; மேலும் லிங்க வழிபாடு போன்ற காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளுக்கு நாம் துணை போவதாக அமையும்” என்று கூறினர்.
.
இந்த எதிர்ப்பை முறியடிக்க எல்லன் பரோவின் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு வாதிட்டார்கள்:
.
“முசுலீம் மன்னர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாடு, அந்தத் துன்புறுத்தும் நினைவுகளால் ஆயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது. இந்துஸ்தானத்தின் மீதான மிக மோசமான ஆக்கிரமிப்பின் சின்னமாக அந்தச் சந்தனக் கதவுகள் இந்துக்களின் நினைவில் பதிந்திருக்கின்றன. எனவே இந்நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும்” என்றனர்.
.
கஜினியின் படையெடுப்பு – கொள்ளைக்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய நூல் பிரிஷ்டா என்ற பாரசீகக் கவிஞன் 17-ம் நூற்றாண்டில் எழுதியது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
.
11-ம் நூற்றாண்டில் சிஸ்தானி எழுதியதைக் காட்டிலும் பிரிஷ்டாவின் கட்டுக்கதை மிகக் கவர்ச்சிகரமானது. 
.
சோமநாதபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான கடவுள் சிலை இருந்ததாகவும், அதன் வயிற்றைத் தன்னுடைய வாளால் கஜினி முகமது கிழித்தவுடன் அதிலிருந்து தங்கமும் நகையும் கொட்டத் தொடங்கியதாகவும் புராணப் புளுகுகள் கணக்கில் அளக்கிறார் பிரிஷ்டா.
.
ஒரு வழியாக இந்த ‘’வரலாற்று ஆதாரத்தை’’ வைத்துக் கொண்டு கஜினியிலிருந்து இரண்டு கதவுகளைத் தூக்கிக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ராணுவம். வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள். அதற்கும் சோமநாதபுரத்திற்கும் சம்பந்தமில்லை. எனவே அவை ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. ‘இந்துக்களின் நினைவில் பதிந்த அந்த சந்தனக் கதவுகளை’ இப்போது கரையான்கள் தின்று கொண்டிருக்கும்.
.
காங்கிரசும் கஜினி முகமதுவும்:
.
இந்திய தேசிய விடுதலை இயக்கம் மறைமுகமாக முன்வைத்த இந்து தேசிய அரசியல் சோமநாதபுரம் விவகாரத்தைப் பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
.
குஜராத்தைச் சேரந்த கே.எம்.முன்ஷி சோமநாதபுரம் கோயிலை திரும்பக் கட்டுவதை தேசிய இயக்கத்தின் கடமையாக முன்னிறுத்தினார். இவர் கல்கி பாணியிலான ‘வரலாற்று’ நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியத்தை பிரச்சாரம் செய்த பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் நாவலைப் படித்து, அதன் தாக்கத்தில் அதே பாணியில் “ஜெய சோமநாதா’’ எனும் நாவலை இவர் 1927-ல் எழுதி வெளியிட்டார். “சோமநாதா – அழிவில்லா ஆலயம்” என்ற இவரது இன்னொரு நூல் 1843-ல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையில் நடைபெற்ற விவாதக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
.
“இசுலாமிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆரியப் பெருமிதத்தை மீட்பதே நமது லட்சியம்” என்று பகிரங்கமாகப் பேசி வந்த முன்ஷி மத்திய அமைச்சரும் ஆனார். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்திய அரசாங்கம் சோமநாதபுரம் கோயிலைக் கட்டி 1951-ல் ஜனாதிபதி ராசேந்திர பிரசாத்தை வைத்துக் குடமுழுக்கு நடத்தியது.
.
“இந்திய அரசாங்கம் இதுவரை செய்த, செயது கொண்டிருக்கிற அனைத்துப் பணிகளைக் காட்டிலும் இந்தக் கோயிலைக் கட்டியதுதான் முக்கியமானது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம் குளிரச் செய்யும்” என்றார் அமைச்சர் முன்ஷி.
.
இப்படியாக ஒரு வரலாற்றுப் புரட்டு மதரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டதுடன், “அரசு அங்கீகாரம் பெற்றது” என்ற முத்திரையும் அதன்மீது இடப்பட்டு விட்டது.
.
பாடநூல் புரட்டு!
.
மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறோம். ரோமிலா தபாரின் ஆ்ய்வுடன் இதனைப் பொருத்திப் பார்க்கவும்.
.
“கஜினி முகமது ஒரு முஸ்லீம் வெறியன். சோமநாதபுரத்தில் அவன் சிவபெருமான் சிலையைத் துண்டு துண்டாக உடைத்தான்; குவியல் குவியலாக வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்தான். ஏராளமான பேரைப் படுகொலை செய்தான்”
.
“கஜினி முகமதுவிம் படையெடுப்பின் விளைவாக பஞ்சாப், முஸ்லீம்களின் கைக்குப் போய் விட்டது, இந்திய நாடிடன் பொருளாதார, இராணுவ வல்லமைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.”
.
‘மதவெறியன்’, பஞ்சாப் போன கதை இவையெல்லாம் பிரிஷ்டாவின் கட்டுக் கதையையும், முன்ஷியின் நாவலையும் வைத்து எழுதப்பட்டவை. இந்த ‘வரலாற்றை’ப் படித்த படிப்பாளிகள் மதவெறிக்கு ஆளாவதில் என்ன வியப்பு!
.
.
ஏராளமான நூல்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி இந்த ஆய்வுரையை நிகழ்த்தியிருக்கிறார் ரோமில்லா தபார். 
.
ஆனால் எந்தக் கோயிலை பாதுகாப்பதற்காக ஒரு முசுலீம் உயிர் துறந்தாரெனக் கல்வெட்டு இருக்கிறதோ அதே கோயிலிலிருந்து முசுலீம் மக்களுக்கெதிரான நாடு தழுவிய கலவரத்தைத் துவக்கி வைக்கிறார் அத்வானி.
.
இத்தகைய வரலாற்றுப் புரட்டு என்பது இந்துமத வெறியர்களால் மட்டும் செய்யப்படுவதல்ல. தத்தம் அரசியல் தேவைக்கு ஏற்ப இசுலாமிய, கிறித்தவ மதவெறியர்களும், இன வெறியர்களும், சாதி வெறியர்களும் இதையே தான் செய்கிறார்கள். 
.
கட்டபொம்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மன்னன் அல்ல – கொள்ளைக்காரத் தெலுங்கன் எனகிறது ஒரு தமிழின வெறிப் பத்திரிகை; ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்; 
.
.கான்சாகிபுவா மருதநாயகமா என்ற தகராறு

கமலஹாசனுடைய படத்தின் வசூலுக்கு வலிமை சேர்க்கிறது. வரலாற்றின் பெயரால் சாதி, மத, இனவாதிகள் நடத்தும் இந்த மோதலை முறியடிக்க வேண்டுமானால் நமக்குத் தேவை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டமிருந்தால் நாம் கஜினியையும் புரிந்து கொள்ளலாம்; கார்கிலையும் புரிந்து கொள்ளலாம்.
.
மன்னனின் பெருந்தன்மை
.
கஜினி முகமதுவால் தோற்கடிக்கப்பட்ட ஆனந்த பாலன் என்றும் மன்னன் கஜினி முகமதுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை அல்பரூனி தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார்.
.
“உங்களுக்கெதிராகத் துருக்கியர்கள் கலகம் செய்வதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் 500 குதிரைப் படையினர், 10,000 காலாட்படையினர், 100 யானைகளுடன் நான் உங்கள் உதவிக்கு வருகிறேன். அல்லது இரண்டு பங்குப் படையுடன் என் மகனை அனுப்புகிறேன். ஏனென்றால் நான் உங்களால் தோற்கடிக்கப்பட்டவன், நீங்கள் வேறொருவனால் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”
.
முஸ்லீம் மக்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆனந்தபாலனின் வாரிசுகள் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுவார்களா?
.
– அஜித்
.

. By ஹாரிஸ் அஹ்மது on November 2, 2014 • 
.

Wednesday, 13 January 2016

அந்த நாள், மீனாட்சிபுரம் -ஆனந்த விகடன்





அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!...

திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!

அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!

இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!



மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…

”நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு. ‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க. நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.

”நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
—————————

மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.

மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.

”அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, ‘நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை ‘யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க ‘கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”

தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.

”நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்… ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, ‘நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. ‘உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், ‘ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!” என்கிறார் ஆறுமுகச் சாமி.

மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

‘பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி :ஆனந்த விகடன்

Saturday, 7 November 2015

புராண இதிகாச மனுதரும ஒழிப்பு..! -அறிஞர் அண்ணா





கம்ப ராமாயணம் பெரிய புராணம், மனுநீதி முதலிய புத்தகங்களைச் சுயமரியாதைக்காரர்கள் தீ வைக்கப் போவதை குறித்து, இந்து பத்திரிகை 17.01.43-ல் ஓர் உபதலையங்கத்தில் ஓர் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறது.

இவ்விதம் சுயமரியாதைக்காரர்கள் செய்கையைக் கண்டிக்க இந்துப் பத்திரிகைக்கு யோக்கியதையுண்டா?

காங்கிரஸ்காரர்கள் பரதேசித் துணியை மூட்டை மூட்டையாய்க் கழுதைபோல் சுமந்து போய்த் தீ வைத்துக் கொளுத்தினபோது, இந்து பேப்பரின் புத்தி புல் மேயப் போயிருந்ததோ? துணிகளை மட்டும கொளுத்தலாமா? அது அறிவுடையவர்கள் செய்கைதானா? தனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்தினால் அது குற்றமாகாதென்பது இந்துவுன் கருத்தா?

உனக்கு வேண்டாதவைகளைக் கொளுத்த உனக்குச் சுதந்திரமிருக்கும்போது, எனக்கு வேண்டாதவைகளை நான் கொளுத்தினால் நீ என்ன கேட்பது, பாலம் கட்னால் இருகரைக்கும்தானே? உனக்கொரு வழக்கு மற்றவர்களுக்கு ஓர் வழக்கா? இதற்குச் சர்க்கார் உதவி தேடுவது வேறா? நிற்க! சுயமரியாதைக்காரர்கள் கம்பராமாய ணத்தையும், பெரியபுராணத்தையும், தமிழ் அபிமானம் கருதித் தீக்கிரையாக்குவதினின்றும் விலக்கிவிட்டு மனுஸ்மிருதியை மட்டுமூ எரியவிடுவார்களா; அதை தீக்கிரையாக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம். அதற்காக ஜெயிலுக்குப் போகவேண்டியது நேரிட்டால் ஜெயிலுக்குப் போகும் போதும பின் விடுதலையாய் வந்த உடனும் இந்தப் புண்ணிய கைங்கரியத்தைத் தமிழ் இரத்தம் ஓடும ஒவ்வொருவனும் செய்யவேண்டியதே.

நாய், கழுதை, பன்றி முதலியவை களுடன் நம்மை ஒப்பிட்டுப் பேசும் புத்தகத்தை எது செய்தால் என்ன?

தமிழர்களேசுயமரியாதை எந்தக் காரியமானாலும அதன் விஷய உண்மைகளை ஆராய்ந்து அலசிப்பார்த்து காங்கிரஸ் பத்திரிகைக் கூற்றுகளில் மயங்கி உங்கள் சித்தத்தைச் சிதறவிடாதீர்கள்.
அ.வ.முத்தையா பிள்ளை, தலைவர் எஸ்.ஐ.எல்.எப். திருநெல்வேலி ஜில்லா.

குறிப்பு:- இவ்வறிக்கை, மனுதர்ம நூலைக் கொளுத்துவதை வண்மையாய் ஆதரித்தும், பெரிய புராணம், கம்ப ராமாயணமாகிய இரண்டினையும் தமிழ்ப் பற்றின் காரணமாகக் கொளத்த வேண்டாமென்றம் வற்புறுத்துகிறது.

மனுஸ்மிருதியில் தமிழ் மக்களை நாய், கழுதை, பன்றி முதலியவைகளுக்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதால் அதனை கொளுத்த வேண்டும்.

கம்இராமாயணத்தில், தமிழ மக்களைக் குரங்குகள் என்று தமிழ் மன்னனான இராவணனை அரக்கனென்றும் அயோத்தி அரசனான இராமனைக் கடவுள் என்றும் பேசப்பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு?

பெரியபுராணத்தில், தமிழ் மக்களைச் சற்சூத்திரர் அதாவது நல்ல அடிமைகள் என்றம், ஒழுக்கங் கெட்டவர்கள் என்றும், கொலைக்கஞ்சாக் கொடியவர்கள் என்றும், முட்டாள்கள் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறதே! இதைக் கொளுத்துவதில் என்ன தவறு? மொழிப்பற்று ஒன்றை மட்டும் கருதினால் போதுமா? தமிழ் மக்களை முட்டாளாக்கியும் மிருகத்தன்மை கற்பித்தும் உள்ள இத்தகைய நூல்களைக் கொளுத்தாது விடுவது உண்மையான மொழிப்பற்றாகுமா?
ஒரு மொழியினிடத்துப் பற்றுவைப்பது வேறு; அந்த மொழி கற்பிக்கும் அறிவுக் கொவ்வாக் கருததுக்களை ஆதரிப்பது வேறு, தாயைப் போற்றுவதும் தாயை விலைமகளாக்குவதும் ஒன்றுதானா?

இயற்கை அமைப்பும், இனிமையும், சொற்சுவை பொருட்சுவையும் வாய்ந்துள்ள நமது அருமைத் தமிழ்மொழியின் கண், மணியிடையே பவளம் போல் வந்து கலந்துள்ள ஆரிய மொழியையும் அது கற்பிக்கும் அறிவிக்கும் இயற்கைக்கும் பொருந்தாக் கதைகளையும் நுழைத்துத்தானோ தமிழ்ப்பற்றை உணர்த்துவது?

தம் மனைவியை இன்னொருவனுக்கு விட்டுக கொடுத்தால்தான், அந்த சிவனாரின் திருவருள் கிடைக்கும் என்று கூறும் ஒரு புராணத்தை இன்னும் கொளுத்தாமல் இருப்பது தமிழ் மக்களின் தவறென்பதே பகுத்தறிவாளரின் கருத்தாகும்.

சென்னை நக்கீரர் கழக எழுத்தாளர் ஒருவர், மனு தர்ம நூல் இறந்துவிட்டதென்றும், ஆங்கிலேயர்களே மனு தர்ம நூலைத் தள்ளிவிட்டார்கள் என்றும்; கம்பராமாயணத்தை மதக்கண் கொண்டு பார்க்காமல் அறிவுக்கண் கொண்டு பார்க்க முடியும், பெரியபுராணத்தைச் சரித்திரக்கண் கொண்டு பார்க்கும் படியும் எழுதுகிறார்.

சமூக சம்பந்தமான வழக்குகள் முறை மன்றங்களில் நடக்கும்போதெல்லாம் நீதி வழங்குவோர், மனுதர்ம நூலையும் பராசஸ்மிருதி நூலையுமே மேற்கோள் காட்டி வழக்குகளை முடிவு செய்து வருவதை இந்நண்பர் அறியாதிருப்பது பெரிதும் வருந்தத்தக்கதே.

மைசூர் திருவாங்கூர் முதலான ஊர்களில் இருக்கும் குறுநில மன்னரைப்போன்ற ஒரு அயோத்தி அரசனைக் கடவுளாக்கு வதற்காகப் பாடப்பெற்ற கம்பராமாயணத்தை மதக்கண் கொண்டு பார்க்காமல் அறிவுக்கண் கொண்டு பார்த்தாலும் இராமனைக் கடவுளாக வணங்கு என்ற மத முடிவைத்தான் அது கற்பிக்கிறது. எனவே மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் துணை செய்யாத இதில் அறிவுக் கண்ணுக்கு வேலை எங்குளது?

இனிப் பெரியபுராணத்தைத் சரித்திரக் கண்கொண்டு பார்க்கும்படி எழுதும் இந்நண்பர்க்குச் சரித்திரமே தெரியாதென்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒன்று மட்டுமூ உண்மை. அதாவது, ஒரு காலத்திலே தமிழ்நாட்டில் 63 முட்டாள்கள் இருந்தார்கள். அவர்களின் சரித்திரத்தைக் கூறுவதுதான் பெரியபுராணம் என்று சொன்னால் அதை நாம் வரவேற்கிறோம். மற்றும் பெரியபுராணத்தில், மக்களின் அறிவைப் பாழாக்கும் முட்டாள்தனமான கதைகளைத் தவிர, வேறு சரித்திர சம்பந்தமான உண்மை நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்பதைப் பகுத்தறிவுக்கண் கொண்டு பார்க்கும்படி, நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்ற கூறிய நக்கீரன் பெயரால் கழகம் நிறுவி, அதன் எழுத்தாளனாக இருக்கும் நண்பரைக் கேட்டுக்கொள்கிறோம்.

(திராவிடநாடு - 31.01.1943)

[][][]

பாகிஸ்தான்! 24- ஆண்டுகளுக்கு முன்பு!! -அறிஞர் அண்ணா.




கூண்டிலடைபட்ட பஞ்சவர்ணக்கிளிக்கு, பழமுதிர்சோலை, பசும்புற்றரைக் கடுத்த பரிமளச்சாலை, பழைய கட்டடத்தின் சாளரம், தளிர், பூ, செங்கனி, ஆகியவற்றின்மீது தானே கருத்து இருக்கும்! சிறகை அடித்தடித்து கூண்டுக்குள் பறந்துவிழும் தத்தை நித்தநித்தம் தான் பிடிபடுமுன் குலவிய இன்பக்காட்சிகளைக் காணவேண்டுமே என்பதை எண்ணியே எங்கும் கொவ்வைக் கனியும் சுவைமிகு பண்டமும் தந்து, பாவையர் அதனெதிர் நின்று முல்லைச்சிரிப்புடன் கொஞ்சிடினும், கிளியின் கருத்து அந்தக்காட்சியிலே இலயிக்காது, பழய நினைவுகொண்டு பதறும், துடிக்கும், விடுதலை என்றோ என்று ஏங்கும். துஷ்டமிருகங்களோ கூட்டிலடைபடினும், காட்டிலே உலவிக்கண்டபடி போரிட்டு, இரத்தத்தைக்குடித்து வெறி பிடித்தாடியதை எண்ணியும், எதிரே தோன்றுவோர்மீது பாய்வதற்கின்றி பாழான இரும்புக்கம்பிகள் தடை செய்கின்றனவே என்று கலங்கியும் பற்களைக்காட்டி வாலைச்சுழற்றி அடித்து, வளைந்தும் நிமிர்ந்தும் ஓடியும் உலவியும், தமது குரூரகுணத்தையே காட்டும். தையலர் மகிழ்ந்திடும் தத்தையும், மானிடர் மருண்டிடும் கொடுமை செய்யும் துஷ்டமிருகங்களும் இங்ஙனம் கூண்டிலடைபட்டபோது இருக்கும். நரியின் நிலை எனில்! கூண்டிலிருக்கையில் தந்திரத்தால், வஞ்சணையால், தான் வலிவுள்ள மிருகங்களையும் ஏய்த்து பாடுபடாது ருசியுள்ள இறைச்சியை உண்டு மகிழ்ந்ததை எண்ணி ஏக்கமுற்று, சூதும் பசியும் சுடர்விடும் கண்களுடன், பரமசாதுபோல் பாசாங்கு செய்து கொண்டு, “என்னை ஏனோ வீணாகச் சிறையிலேயிட்டீர்கள். நான் என்ன கொடுமை செய்யவல்லேன். எளியேனைச் சற்றே வெளியே விடுமின்” என்று கெஞ்சுவதுபோல், கூண்டுக்கு வெளியே நிற்போரை நோக்குவதைக் காணக்கூடும். சிறையிலே அடைபட்ட மிருகங்களின் சிந்தனையும் செயலும் இருக்கட்டும், மனிதர்களின் நினைப்பும் நடவடிக்கையும் எப்படி இருந்திருக்கும்.

அமாவாசை! சிறுதூறலும் பெய்கிறது! அந்த நேரத்திலே, சிறையிலே இருக்கும் கருப்புக்குல்லாவின் கவனம், தோட்டத்தில் புகுந்து, தூறல் சந்தடியோடு கலந்து சுவரேறிக் குதித்து, கன்னமிடும் செயலிலேதானே போகும்! முடிச்சவிழ்ப்பவனோ, தூறல் வந்து விட்டதால் துரிதமாக நடந்து வீடு செல்வோமென்று செல்வோரைப் பின்தொடர்ந்து மெல்ல மோதி, முடிச்சை அவிழ்க்க இது சரியான சமயம் என்ற எண்ணமே கொள்வர். கியற்கைதிகளோவெனில், “அடுத்த ஆறாம் மாதம் விடுதலை, அதற்கடுத்த ஆறாம் மாதம் ஜில்லாபோர்டு மெம்பர்ஸ்தானம் நமக்குத்தான் கிடைக்கும்” என்ற மனப்பால் குடிப்பர்! மாஜி மந்திரிகள், மீண்டும் மந்திரிகளாகும் மார்க்கம் வகுப்பர்! மாசு நீக்கிக்கொள்ள மக்களிடமிருந்து தலைமறைவாகச் சின்னாட்கள் இருந்துவிட்டால், மீண்டும் புகழுடன் விளங்கலாம் என்று எண்ணுபவருண்டு. இந்த ஆறுமாத காலத்திலே, இன்னின்னாரைப் பிடித்து இத்தனை இத்தனை “கண்டிராக்டுகளை” எடுத்துப் பணம் திரட்டிவிட்டிருப்போமே, அது கெட்டுவிட்டதே என்று மனக்குறைபட்ட மகானுபவர்கள் எனக்குத் தெரியும். மருந்துக் கடை நிலைமை, மளிகைக்கடை நிலைமை, புத்தக வியாபார நிலைமை, புதுக்கம்பெனி நிலைமை முதலிய வற்றினைப்பற்றியே எண்ணிக்கொண்டு, பாரதமாதா, சுயராச்யம், காங்கிரஸ், முதலியவற்றைப்பற்றியும் எண்ணாதிருந்த எத்தனையோ காங்கிரஸ் சிறைபுகுந்தோரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சிலர், சிறைச்சாலையைப், படிப்பகமாக்கியுள்ளனர். ஆச்சாரியார், இராமாயணத்தைப் படித்துப்படித்து ரசித்தது அங்கு தான். பெரியார் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தமது வேலைத்திட்டத்தைத் தயாரித்தது சிறைச்சாலையிலேதான். புதிய பாஷைபயில, புதிய புத்தகம் படிக்க, புது உறவுகொள்ள, புதுப்பழக்கம்பெற, பலருக்குச் சிறைச்சாலை, ஆரம்பப்பள்ளியாக இருந்திருக்கிறது. சிறைச் சாலையிலே இருந்து, உலகுக்கு நன்மையும், நம்மவர் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் தரும் உன்னதமான காரியத்தை ஒருவீர இஸ்லாமியத் தோழர் செய்தது பற்றிய சிறு குறிப்பை முஸ்லீம்லீகின் ஆங்கில வாரத்தாளாகிய டான் பத்திரிகையிலே நான் படித்துப் பரமானந்தமடைந்தேன். நீங்களும் மகிழ்வீர்கள் என்றே அதனையும் அது எழுப்பும் எண்ணங்களையும் உங்களுக்குக் கூறுகிறேன்.
டேராடன் சிறை, 22-8-1941.

அன்புள்ள அட்லி அவர்களே!
இத்துடன் இணைத்துள்ள கடிதத்தைத் தாங்கள் படித்துவிட்டு, சர்வதேச சமதர்ம சங்கத் தலைவரும், பெல்ஜிய நாட்டுப் பிரமுகரும், தற்போது பிரிட்டனில் உள்ளவருமான தோழர் காமிலி ஹ்யூஸ்மான்ஸ் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பிரிட்டிஷ் சர்க்கார், மிஸ்டர் அமெரி, ஜனாப் ஜின்னா ஆகியவர்களின் நிலைமையை உள்ளபடி தெளிவாக்க இதனைத் தெரிவிக்கிறேன். இந்தியாவிலுள்ள தனித்தனி பிரதேசங்களும் தத்தமக்கு ஏற்றதான அரசியல் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிப்பதே, இந்தியப் பிரச்சனையைத் தீர்க்கும் வழியாகும்.

இங்ஙனம்
மகமத் அப்துஸ் சத்தார் கெயிரி

1941ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு மாதம் 22ந் தேதி டேராடன் சிறைச்சாலையிலே, மேற்படி கடிதத்தை எழுதினார் ஜனாப் மகமத் அப்துஸ் சத்தார். அவர் பேராசிரியர், பலநாட்டு மனவளமறிந்தவர், சமதர்மி. எம்.ஏ. பிஎச்.டி, பட்டம் பெற்றவர், ஐரோப்பாவுக்குச் சென்றிருந்து நேரடியாக அம்மக்களின் நினைப்பையும், நிலைமை யையும் கண்டறிந்தவர். சமதர்மத்தின் பொருட்டே சிறைபுகுந்தவர். சிந்தனையைச் சிறைச்சாலை என்ன செய்யும்? இரும்புக் கம்பிகள், இருதயத்தை மாற்றிவிடாதன்றோ! சிறைப்பட்ட சிலர், வெளியே உள்ள மக்கள், விஷமப் பிரசாரமெனும் வெஞ்சிறையில் கிடந்துழலுவதுகண்ட உளம் வெதும்பி, இக்கடிதத்தை விடுத்தார்.
ஜனாப் ஜின்னா பேசும் பாகிஸ்தான், ஓர் பிரிட்டிஷ் சிருஷ்டி! என்று ஆச்சாரியார் உள்பட காங்கிரஸ் வாதிகள் அனைவரும் கர்ஜனை புரிகின்றனர். பத்திரிகைகளோ, இந்த விஷமத்தனமான பொய்யை, அலங்காரத்தோடு வெளியிட்டு, ஆணவத்தோடு ஆர்ப்பரிக்கின்றன. பாமர மக்களோ, பாகிஸ்தான் பிரிட்டிஷ் சூழ்ச்சிதான் போலும் என்று கருதி மனம் புழுங்குகின்றனர். ஜனாப் ஜின்னாவை, நாக்கைப் பறையாக்கி நடமாடும் பேர்வழிகள் தூற்றுகின்றனர். இத்தகைய இரைச்சல் வெளியே! உள்ளே, சிறையில் இருந்த ஜனாப் சத்தாருக்கு, இந்த இழிந்த பிரசாரம் எரிச்சலை உண்டாக்கிற்று. ஜனாப் ஜின்னாமீது வீண்பழி சுமத்துபவர்மீது கோபம் கொதித்தது. பிரிட்டிஷார் சிருஷ்டித்தது இந்தப் பாகிஸ்தான் திட்டம் என்ற பெரும் புளுகு பேசிடுவோரின் போக்கிரித்தனத்தைப் போக்க விரும்பினார். அதற்காகவே இரு கடிதங்கள் விடுத்தார். ஒன்று பெல்ஜிய நாட்டவரும் பிரபல சமதர்மியுமான காமிலி ஹ்யூமான்ஸ் என்பாருக்கு. மற்றொன்று, அந்தக் கடிதத்தை அவரிடம் சேர்க்குமாறு மிஸ்டர் சி.ஆர். அட்லி அவர்களைக் கேட்டுக்கொண்டு எழுதப்பட்டது. அட்லி அவர்களுக்கு அனுப்பிய கடிதமே நான் முதலில் குறிப்பிட்டது. அத்துடன் இணைக்கப் பட்டிருந்ததும், காமிலிக்குத் தரப்பட வேண்டுமென்று குறிக்கப் பட்டதுமான மற்றோர் கடிதத்தின் சாரத்தைக் கீழே காணவும்.
* * *

அன்பரே! ஹியூஸ்மான்ஸ்!
இருபத்துநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவோர் சம்பவத்தைத் தாங்கள் நினைவில் நிறுத்தியிருக்கிறீரோ யாதோ நானறியேன்.

கடந்த ஜெர்மன் சண்டையின்போது, சமாதானம் ஏற்படு மென்ற எண்ணம் எழுந்தபோது, சர்வதேச சமதர்மிகள் கூட்டம் ஸ்டாக்கோம் நகரிலே நடைபெற்றது. அது போது நீரே, அந்தச் சமதர்மிகள் கழகத்தின் பொதுக்காரியதரிசியாக இருந்தீர். 1917ம் ஆண்டு. செப்டம்பரோ அக்டோபரோ, நினைவில்லை. இந்திய நாட்டபிமானிகள் கழகத்தினரான இரு இந்தியர்கள், உம்மைக் கண்டு கலந்துரையாடினர். நீர், அவர்கள் பேச்சை அக்கறையுடன் கேட்டுவிட்டு, ""உமது கருத்தைத் தெளிவாக, எழுதிக்கொள்வது" என்றுரைத்தீர். சின்னாட்களுக்கெல்லாம், நீர் கேட்டபடியே, அவர்கள், இந்தியப் பிரச்னையைத் தீர்க்க வழி யாது என்பதுபற்றி எழுதித் தந்தனர்.

இந்தியாவை; முஸ்லீம் இந்தியா இந்து இந்தியா என்று இரண்டு அரசுகளாகப் பிரித்து அமைக்கவேண்டும் - என்பதே அவர்கள் எழுதித்தந்த திட்டம். தாங்கள் அதுபோது அந்தத் திட்டத் தைக்கண்டு ஆச்சரியமுற்றீர். நினைவிற்கு வரும் என்று நம்புகிறேன்.

இந்தியாவைப் பிரித்து வைத்து ஆளவேண்டும் என்ற சூட்சிகரமான கருத்தோடு, பாகிஸ்தான் திட்டத்தைப் பிரிட்டிஷார், ஜனாப் ஜின்னாவுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்று இங்கு பேசப்பட்டு வருகிறது, இது ஓர் அபாண்டம், பெரும் புளுகு!

இதனைத் தாங்கள் விளக்கிவிட்டால், வீணாக வளர்ந்துள்ள ஒரு தப்பபிப்பிராயம் அகற்றப்பட்டுவிடும்.

இங்ஙனம்
அப்துஸ் சத்தார்

இந்தக் கடிதத்தை மிஸ்டர் அட்லி படித்துவிட்டு, தோழர் காமிலிக்கு அனுப்பிவிட்டு, கீழ்க்காணும் கடிதத்தை ஜனாப் அப்துஸ் சத்தாருக்கும் அனுப்பினார்.

11 டவுனிங் தெரு
ஒயிட்ஹால்
5-1-1942

அன்புள்ள பேராசிரியர் கெயிரி அவர்களே!
தோழர் காமிலி ஹ்யூஸ்மான்ஸ், தங்களுக்கும் தங்கள் சகோதரருக்கும் அனுப்புமாறு இக்கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். பெற்றுக்கொள்க.

இங்ஙனம்
சி.ஆர். அட்லி.
* * *

மிஸ்டர் அட்லிமூலம், ஜனாப் அப்துஸ் சத்தாரிக்கு தோழர் காமிலி அனுப்பிய கடிதம் இதோ, காணவும்.

லண்டன்
5, ஹொபார்ட்பிளேஸ்
30-12-1941.

எனதருமை மந்திரியாரே,
இந்தியப் பிரதிநிதிகள் இருவர் விடுத்த கடிதத்தை எனக்கு அனுப்பினமைக்கு வந்தனம். அவர்கள் இருவரும், என்னைச் சந்தித்துப்பேசியது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. பிரன்ச்சு மொழியில் நான், அவர்கள் குறிப்பிடும் ஸ்டாக்கோம் மாநாடு பற்றி எழுதியுள்ள புத்தகத்தில் 407-408ம் பக்கங்களில், அவர்கள் பேச்சு, திட்டம் ஆகியவற்றின் சுருக்கத்தைக் காணலாம்.

இந்தியாவை முஸ்லீம்நாடு. இந்து நாடு என்று இரு பிரிவுகளாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் திட்டத்திலே கண்டிருக்கிறார்கள். அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது உண்மையே.

நான் அந்தத் திட்டத்தைக்கண்டு ஆச்சரியமடைந்ததாக அவர்களுக்குத் தோன்றிற்று, ஆனால் நான் ஆச்சரியமடையவில்லை. நான், இந்தப் பிரச்னை, ஐரோப்பாவில் காணப்படும் சில பிரச்னையோடு, ஒப்பாக இருப்பதைக்கண்டு மட்டுமே ஆச்சரியமுற்றேன்.

அவர்களின் அறிக்கையைக் கண்டால்போதும், பாகிஸ்தான் பிரிட்டிஷ் சிருஷ்டி அல்ல என்பதைத் தெரிந்துகொள்ள. இந்த என் அறிக்கை, வீணாக வளர்ந்துள்ள தப்பெண்ணத்தைப் போக்குமென்று நம்புகிறேன்.

இந்தக் கடிதத்தை என் வாழ்த்துடன், அன்பருக்கு அனுப்பவும்.

இங்ஙனம்,
காமிலி ஹ்யூஸ்மான்ஸ்.

இருபத்திநாலாண்டுகளுக்கு முன்பு, அலைகடல்கள் தாண்டி, ஐரோப்பாக்கண்டத்திலே, அறிஞர்கள் முன்னிலையில், பாகிஸ்தான் திட்டத்தைப் பிரேரபித்த இரு முஸ்லீம் வீரர்களில் ஒருவர்தான், ஜனாப் ஜின்னாவின்மீது காங்கிரசார் சுமத்தும் வீண்பழியைக்கண்டு மனம் துடித்து, உண்மை வெளிவரட்டும் என்பதற்காக, மிஸ்டர் அட்லிக்கும் காமிலி ஹ்யூஸ்மான்சுக்கும் கடிதமெழுதினார். ஸ்டாக்கோமில் சர்வதேச சமதர்மிகள் மாநாட்டில் 1917ல் பிரேரேபிக்கப்பட்ட பாகிஸ்தானை இன்னமும் எதிர்க்கவும், அது பிரிட்டிஷ் சூழ்ச்சி என்றுரைக்கவும் முன்வரும் மரமண்டைகளுக்கு இந்தச் செய்தியை, மெள்ள மெள்ளவாகிலும் விளக்கிக் கூறுங்கள் தோழர்களே! யாரோ ஒரு சாயபு, கொரானிலே பாகிஸ்தானுக்கு ஆதாரம் இல்லை என்றுரைத்தாராம், அவருக்குக் கூறுங்கள், அவரைவிட தெளிவாக கொரானைப்படித்து, இஸ்லாத்தையும் உணர்ந்து முஸ்லீம் இன முன்னேற்றத்திலே அக்கரையுங் கொண்ட அறிஞர்கள் கூறும் ஆதாரம், பாகிஸ்தான், என்பதை!

இருவிழிகளும் கெட்டு, இஸ்லாமியரின் எழில் குன்றிவிட்டதே என்பதனால் மனஅமைதியுங்கெட்டு, பட்டுவரும் மரம்போல் இருந்த ஷா ஆலம், அதற்கு முன்பிருந்த அவரது மூதாதையர், முடிதரித்துச் ஜொலித்ததை எண்ணி, ""எவ்வளவு உச்சியில் இருந்தது பிறைக்கொடி! எவ்வளவு கீழே தாழ்ந்துவிட்டது இன்று" என்று ஏங்கி, தூங்குகையில் கனவுகண்டு கலங்கியிருப்பாரன்றோ. அதுபோல், ஷா ஆலமும் இன்றில்லை, ஆளும் இடமே இல்லையே என்று இன்று எட்டுக்கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியத் தோழர்கள் ஏங்கித் தவிக்கின்றனர். இதனை அறியாது, பாகிஸ்தான் திட்டத்தை எதிர்ப்பது பேதைமை, பாதகம், அறிவீனம், ஆணவம்! இந்தக் கெட்ட குணங்களின் கூட்டுச் சரக்கு வெகுவிரைவிலே குப்பைக் கூடைக்குச் சென்றே தீரும், இதிலே சந்தேகம் வேண்டாம். இந்துக்கள் வேறு, முஸ்லீம்கள் வேறு என்ற கருத்தே காந்தியாருக்குக் கசக்கிறதாம்! இருவரும் ஒரே இனமாம்! உண்மையிலேயே இக்கருத்து, காந்தியாருக்கு இருக்குமேயானால், அவரது முதல் புதல்வன் ஹீராலால் காந்தி, இஸ்லாம் புகுந்தபோது, ஏன் அவ்வளவு கொதித்தார், குதித்தார், குளறினார்! இஸ்லாமியரானதும், ஏன் காந்தியார், காயவேண்டும். இஸ்லாமியர்மீது எவ்வளவு துவேஷமும், வெறுப்பும், கோபமும் இருந்தால், தன் மகன், முஸ்லீம் மார்க்கத்தைத் தழுவியதும் காந்தியார் தத்தோம் என்றாடி, தகாது, கூடாது என்று எதிர்த்திருப்பார் என்பதை எண்ணிப் பாருங்கள். இந்துவும் முஸ்லீமும் ஒரே இனமானால், ஏன், வட நாடு, இந்து முஸ்லீம் கலக இரணகளமாக இருக்கிறது? ஏன் இன்றும், இந்து உணவுச்சாலைகளிலே முஸ்லீம் வடநாட்டிலே நுழைய முடிவதில்லை? ஏன் இன்றுவரை, ரயில்வே நிலையங்களிலே, இந்துசாயா (டீ) முஸ்லீம்சாயா (டீ) என்று தனித்தனியாக விற்கப்படுகிறது! இந்துப்பானி (தண்ணீர்) முஸ்லீம் பானி (தண்ணீர்) என்று ஏன் தண்ணீர் தருவதிலேகூடப் பேதம் காட்டப்படுகிறது? இந்தக் ""கண்கண்ட கடவுள்" ""அரையாடை அண்ணல்" ""அந்தராத்மாவின் அன்பர்" ""முனிபுங்கவர்" வாழும் வார்தாவிலேகூட இந்த வக்கிர புத்தி காட்டுகிறார்களளே, அது ஏன்? இவர்களைக் கேட்டால், பதில்கூற வக்கு இல்லை! அத்தகைய அதிகாரம் பெற்றுள்ள காந்தியார், ஏன் இந்தப் பேதத்தைப் போக்க முன்வரவில்லை. கையாலாக வில்லையா! கருத்து இல்லையா! ஏனய்யா, என்னால் இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்தமுடிய வில்லை என்று இருகையை விரித்துக் கூறிவிட்டவர், இன்னமும், இந்து வேறு முஸ்லீம் வேறு அல்ல என்று சொல்கிறார், இது பொருந்துமா என்றுதான் கேட்கிறேன். இந்துவும் முஸ்லீமும் ஒன்றாக வாழவேண்டும் என்பதற்காக அக்பர் எவ்வளவோ அரும்பாடு பட்டார். ரஜபுத்திர ரமணிகளை மணஞ்செய்து கொண்டது மட்டுமல்ல. ரஜபுத்திர வீரர்களுக்குத் தர்பாரில், பலப்பல பொறுப்பான பதவிகள் தந்தார், படைத்தலைவர்களாக்கினார். கண்டபலன் என்ன? மொகலாய மன்னர்கள் சற்றுச் சோர்ந்து களைத்து உட்கார்ந்தால் போதும். இந்து சிற்றரசர்களும், சீமான்களும், மதாசிரியர்களும் கிளம்பி, கலகம் குழப்பம் விளைவித்து, மொகலாய அரசைக் கவிழ்க்கவே முயற்சித்து வந்தனர். இராமதாசர் என்ற பார்ப்பன குரு, சிவாஜி என்ற மராட்டிய மன்னரை மொகலாயர்மீது ஏவியது ஏன்? ஆங்கலி ஆட்சி ஏற்பட்டதும், இந்துக்கள் அந்த நிழலின்கீழ் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டத்தானே பாடுபட்டு வந்தார்கள் - வருகிறார்கள். இந்துக் கூட்டம், முஸ்லீம்களை எவ்வளவோ தூற்றிக்கொண்டு வருகிறதே, காந்தியார், ஒரு வார்த்தை இதைத் தடுக்கக் கூறினாரா! ஏன், பாமரரைப் பதைக்க வைக்கும் பாதகக் கூட்டத்தைக் காந்தியார் தட்டிக் கொடுக்கிறார். இவைகளைக் கேட்டால், கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆகவேதான், இனி இத்தகைய ஆட்சியிலே இருக்கமுடியாது என்று முஸ்லீம்கள் கூறிவிட்டனர். ஏன் அதை எதிர்க்கிறார்கள்? எதிர்த்து இந்த ஏமாளிகள் காணப்போவதென்ன! இந்துக்கூட்டமோ, எண்ணாயிரம் பிளவு, ஏழாயிரம் இழிவுகளைத் தாங்கிக்கொண்டு பலப்பல வகுப்பு, வகுப்புக்குள் வகுப்பு, பல குலம், என்று சின்னாபின்னமாகி இருக்கிறது. இந்து மார்க்கமோ, இன்னதென்று வரையறுத்துக் கூறமுடியாத குப்பைமேடு! அதிலே நெளிகின்றன புராணங்கள் எனும் புழுக்கள்! இந்தக்கூட்டம், ஏகதெய்வம், ஒரே நபி, ஒரே கொரான் கொண்டு, மேட்டுப்பாளையத்திலே இருந்தாலும் மெக்காவில் இருந்தாலும் ஒரே ஒற்றுமையுடன் விளங்கும் வீரக் கூட்டமான இஸ்லாமியரையா எதிர்க்கமுடியும்! முயல் கூட்டங்கள் முகாமிட்டு புலிக்கூட்டத்தைப் போருக்கழைப்பதுபோன்றதன்றோ இது. நாட்டின் நிலைமையை நன்குணரின், இத்தகைய நினைப்புகளைக் கைவிட்டு, நாட்டிலே உள்ள வீரமரபினரின் விரோதத்தைக் கிளப்பாமல் ஆரியர் இருப்பர். இன்றும் ஏதோ தங்களின் சூதும் வாதும் சூழ்ச்சியும் செல்லுபடியாகும் என்று கருதினால் ஏமாற்றமே அடைவர். வீர இனங்களாகிய இஸ்லாமியரும் திராவிடரும் விழித்துக்கொண்டனர், இனி அவர்கள் இலட்சியத்தைப் பெறும்வரை ஓயமாட்டார்கள். கடல் அலையைக் கைத்தடி கொண்டு தாக்கியவர்கள் காங்கிரசார், தமது பத்திரிகைகளில் இனிச்செல்லாது உமது செல்லா சாத்திரங்கள்! விலகி நில்லுங்கள், விடுதலைப் போர் கிளம்பிவிட்டது! பந்திக்கு முந்துவீர், படை எனிலோ பயந்தோடுவீர், சூது செய்யவல்லீர், சூரர் எதிர்ப்படின் சுலோகமுரைக்க அறிவீரேயன்றி சூளுரைக்கவுமறியீர், ஏன் வீணில், நெருப்புடன் விளையாடுகிறீர், என்று நான் எச்சரிக்கிறேன்.

சிறைச்சாலையிலே இருந்து சீலர்கள் வெளியிட்ட உண்மை, பாகிஸ்தான் என்ற கருத்து 24 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தது என்பதை விளக்கிவிட்டது. இன்று அந்தப் போர்வீரன், 24 வயதுள்ள வாலிபன், வெளியே வருகிறான், வீறுகொண்டு! அவன் கண்டது என்னை? எங்கும் முஸ்லீம்களின் உணர்ச்சி! அந்த வீரவாலிபனைக் கைலாகு கொடுத்து வரவேற்று, ‘ஆற்றல் படைத்த தோளுடைய அருமை தோழா! அஞ்சாநெஞ்சு படைத்த குமாரா! பஞ்சாபும் சிந்தும், எல்லையும் வங்கமும், எங்கும் உனது எழிலாட்சி எழச்செய்வேன்," என்று ஜனாப் ஜின்னா கூறிவிட்டார்.

""இதோ காணீர் உமது ரட்சகனை! கேளீர் இவன் புகழை! இவன் கோரி கில்ஜி, லோடி, சையத், மொகல், ஆகிய நமது பரம்பரையிலு தித்தவன்! பாராளும் திறம்படைத்தவன்! படைக்கஞ்சான், பயங்கொள்ளான், பச்சை இரத்தம் பரிமாறவும் தயங்கமாட்டான். இந்தப் பாகிஸ்தான் வீரனுக்கு உமது வணக்கத்தைக் கூறுவீர்" என்று ஜனாப் ஜின்னா, முஸ்லீம்களுக்குக் கூறிவிட்டார். முஸ்லீம்களும், தமது கனவு நனவு ஆகும் காலம் பிறந்துவிட்டதென்று களித்து, தோள்கட்டி, கச்சையை வரிந்து கட்டிக்கிளம்பத் தயாராகிவிட்டனர்! ஆரியனே நீ தயாரா போருக்கு? முடியுமா உன்னால்! உன் சரிதத்திலே உண்டா, வீரத்துக்குச் சான்று. கிடையாது! முடியாது! எனவே, உன் நிலையை உணர்ந்து சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று ஆரியருக்கு நான் அறிவுறுத்துகிறேன். கேட்டால் பிழைப்பர், இல்லையேல் கெடுவர். இரண்டில் எது தேவையோ அதை அவர்கள் கேட்கட்டும்!

(திராவிடநாடு - 7.6.1942)


[][][]