Translate

Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts
Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts

Tuesday, 23 February 2016

ஹஜருல் அஸ்வத்தை [ கறுப்புக் கல்லை] சுற்றி வருவது மூட நம்பிக்கையில்லையா.?






Pravin Vinu இன் கேள்வி: 

கருங்கல்லை ஏன் சுத்துறீங்கன்னு கேட்டால்,  அது கருங்கல்லுதான்'ன்னு எனக்கே திருப்பி சொல்றீங்க.. அது கருங்கல்லுன்னு எனக்கு தெரியாதா..? அதை ஏன் சுத்துறீங்க..?
முகமது சுத்துனாரு அதனால சுத்துறோம்'ங்கிறீங்க.. இதுக்கு பேர்தான் மூடநம்பிக்கை என்று நாங்கள் சொல்கிறோம். 

---------------------------------------------------------
---------------------------------------------------------
பதில்: 

உண்மையில் மூடநம்பிக்கை என்பது என்ன.?

அனாமதேயமாக யாரோ, எவரோ செய்த எந்தவித அர்த்தமுமில்லாத விசயங்களை புனிதப் படுத்துவது.. புனிதமாக கருதப்படும் அவை மனிதனுக்கு நன்மையோ தீமையோ செய்து விடும் என்று கருதுவது.. ஆகியவை தான் மூட நம்பிக்கை..

கருங்கல்லை சுற்றுவது உள்பட உள்ள முஸ்லிம்களின் ஹஜ் கிரியைகள்.. முஹம்மது அவர்கள் செய்தார்கள்.. தன்னைப் பின்பற்றுபவர்களை செய்யச் சொன்னார்கள். பகுத்தறிவு மார்க்கத்தை தந்த நபிகளாரை தங்களுடைய ஆன்மீக வழிகாட்டியாக, தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டப் பிறகு, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்வது தான் நல்ல முஸ்லிம்களுக்கு அழகு..

தன்னுடைய நோயை தீர்ப்பார் என்று நம்பினால் மருத்துவர் சொல்வதையெல்லாம் அனுசரிப்பது தான் நல்ல நோயாளிக்கு அழகு.!

அப்படியானால் அந்த ஹஜ் கிரியைகள் எதற்காக..?

கடவுள்களை ஒன்று படுத்தினால் தான் மனிதன் ஒன்று பட முடியும் என்ற தலையாய கொள்கையை-தத்துவத்தை கொண்டிருக்கிற மார்க்கம் இஸ்லாம். அந்த இறை ஏகத்துவத்தை நிலை நாட்ட.. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மூடநம்பிக்கைகளை எல்லாம் அடித்து நொறுக்கியவர் இப்ராஹீம் அவர்கள். அந்த இப்ராஹீம் தனிமனிதராக இருந்து மக்களின் மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றையும் தன்னுடைய அயராத உழைப்பால், தளராத உறுதியால் போக்கி மக்களை சீர்திருத்தம் செய்தார்கள்.

அத்தகைய அவர்களை நினைவு கூறும் விதமாகத் தான் ஹஜ் கிரியைகள் யாவும் அமைந்திருக்கின்றன. இப்ராஹீம் அவர்களை பின்பற்றி முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறை ஏகத்துவத்திற்காக, மனித குல ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்ற மகத்தான சிந்தனை அங்கே தோற்றுவிக்கப் படுகிறது.

மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக நடைபெறும் உறுதியேற்பு நிகழ்ச்சிகள் எப்படி மூடநம்பிக்கை என்றாகும்.?

-பூமராங் 


[] [] []

Tuesday, 20 October 2015

முஹர்ரம் 10 துக்க நாளா..? இஸ்லாத்தில் இல்லாத மூட நம்பிக்கை.


தூய இஸ்லாத்தை பிளந்து தவறான மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கும் ஸியாக்களே..!

முஹர்ரம் 10 அன்று துக்கம் அனுஷ்டிக்கிறோம் எனும் பெயரில் ரத்தம் வழிய வழிய உடலை கிழித்துக் காயப்படுத்திக் கொள்கிறீர்களே..இது நபிகளார் காட்டித் தந்த வழியா..? சிந்திக்க மாட்டீர்களா..?

சத்திய மார்க்கத்தை எடுத்துரைக்கும் பாதையில் எத்தனையோ இடர்பாடுகளை, இழப்புகளை நபிகளார் சந்தித்தார்களே.. அவர்கள் காட்டிய பொறுமை, சகிப்புத்தன்மை உங்களிடம் எப்படி இல்லாமல் போனது..?

பத்ரு போர்க்களத்தை விடவா..? உஹத் போர்க்களத்தை விடவா..? அங்கே தாக்கப்பட்ட நபிகளாரை விடவா..? அதில் கொல்லப்பட்ட எண்ணற்ற சஹாபிகளை விடவா..? ஹம்சா(ரலி) அவர்களை விடவா..?

எல்லாவற்றையும் இழந்து நபிகளார் மதீனாவிற்கு துரத்தப்பட்டார்களே..அதனை விடவா..? தாயிப் நகரிலே ஏளனத்திற்கும் இழிவுக்கும் அவர்கள் ஆளானார்களே அதனை விடவா..? அங்கிருந்து ரத்தம் வழிய..வழிய கல்லால் அடித்தே துரத்தப்பட்டார்களே.. அதனை விடவா..? திரும்பவும் மக்காவிற்கே தஞ்சம் கேட்டு வந்தார்களே.. அதனை விடவா..?

பிறந்த ஆண்மக்கள் துள்ளிவிளையாடும் பருவத்திலேயே இறந்தார்களே அதை விடவா.. இறுதியில் நபிகளாரே இறந்தார்களே அதை விடவா..உங்களுக்கு துக்கம்..?

நீங்கள் துக்கம் கொண்டாடும் அதே நாள் தான்.. பண்டு இறைவன் (மோசே) மூஸா அவர்களையும் அன்றைய முஸ்லிம்களையும்  கொடுங்கோலன் பிரஅவுனிடமிருந்து காப்பாற்றிய உன்னதமான நாள். மகத்தான இறையருளின் நாள். அந்த நாளை துக்க நாளாக இழிவு படுத்துகிறீர்களே.. நியாயமா..?

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எதற்காக ? என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்என்றார்கள். இதனை கேட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள்..! என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்
(ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

இந்த ஹதீஸை உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்..!

$$$$$$$$$$$$$

இன்ஷா அல்லாஹ் வருகிற ஆஷூரா நோன்பை நோற்று அனைவரும் அல்லாஹுவின் அருளை பெறுவோம்..!
ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அது அமையும்..! என்று அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்..! என நபி அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)