Translate

Showing posts with label மனிதன். Show all posts
Showing posts with label மனிதன். Show all posts

Thursday, 9 June 2016

மனிதன் எங்கே.?




ஒரு தத்துவஞானி பட்டப்பகலில் ஒரு அரிக்கன் விளக்கை ஏற்றிக் கொண்டு கடைத்தெருவில் எதையோ, யாரையோ தேடுவது போல சென்றுக்கொண்டிருந்தார்.

மக்களுக்கு பயங்கர ஆச்சரியம். அந்த ஞானியை பைத்தியமேன்றோ, முட்டாளென்றோ அழைக்க எவருக்கும் துணிவு வரவில்லை. அதிலொருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. அந்தப் பெரியவரை பார்த்து.. “என்ன தேடுகிறீர்கள்..?” என்று கேட்டான், கிண்டலாக. அதற்கவர், ‘’நான் மனிதனை தேடிக் கொண்டிருக்கிறேன்..! என்று சொன்னார்.  அது கேட்டு அங்கே இருந்த மக்களெல்லாம் அதிர்ந்தார்கள்.

அந்தப் பெரியவர் என்ன சொல்ல வருகிறார்..? அவரைச் சுற்றி கூடியவர்களெல்லாம் மனிதர்களில்லையா..? 

ஆடை அணிந்திருப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லிவிட முடியுமா..? இரண்டுக் கால்களில் செங்குத்தாக நடப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? ஏதாவதொரு மத அடையாளங்களுடன் சுற்றித் திரிபவனை எல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? கடவுளுமில்லை.. பாப-புண்ணியங்களும் இல்லையென்று சொல்பவனெல்லாம் மனிதனென்று சொல்லி விட முடியுமா..? 

கொலைகாரன், காமுகன், திருடன், நயவஞ்சகன், அயோக்கியன், இவர்களெல்லாம் தோற்றத்தில் மிருகம் மாதிரியா இருக்கிறார்கள்..? 

மனிதனை ஏன் எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை..? 

அதிலுள்ள சிக்கலே.. எல்லாப் பயல்களும் மனித ரூபத்தில் திரிவதால் தான்.. 

இதில் ஆத்திகனென்ன.. நாத்திகனென்ன..


[][][]

Wednesday, 6 April 2016

மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!






மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!

------------------------------------------------------------

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.


ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தினத் தந்தி
05-04-2016

-----------------------------------------------------------

'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'

-குர்ஆன் 37: 143,144,145

யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.

அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.

ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.

மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.

இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.

திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.

ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.

திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.

ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.

இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.




[][][]


Saturday, 5 December 2015

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா.?


கேள்வி: மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டானா? Molecular Biology வளர்ந்து குளோனிங் மூலம் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதனை உருவாக்குகிறார்கள். மனிதனின், டி.என்.ஏ. வரிசையை மாற்றியமைத்து ஐன்ஸ்டீன் போன்று அறிவுடைய, ஜஸ்வர்யாராய் போன்ற அழகுடைய மனிதனை உருவாக்க முடியும் என்கிறார்கள். இந்த Bio-Technology யுகத்தில் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்பதை எவ்வாறு நம்ப முடியும்? விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் உண்டா? என எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்.!

-ஏ.சம்சுதீன்,அருப்புக்கோட்டை.

பதில்: உங்கள் பாணியிலேயே கூறுவது என்றால் நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம். மனிதனின் கண்டுபிடிப்புகளில் தலை சிறந்தது கம்ப்யூட்டர் தான். இதில் படம் பார்க்கலாம்! எழுதலாம்! வாசிக்கலாம்! ஏராளமான நூல்களைப் பதிவு செய்யலாம்! பேசலாம்! வரையலாம்! வடிவமைக்கலாம்! உலகை எல்லாம் வலையில் இணைக்கலாம்! இருந்த இடத்திலிருந்து கொண்டே விற்கலாம்! வாங்கலாம்! இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்! அதன் உறுப்புகளைப் பல வகைகளில் வகைப்படுத்தலாம்!

அதன் ஜீவனாக இருக்கின்ற சிலிக்கானும் இன்ன பிற பாகங்களும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா?

இப்போது மண் வடிவத்தில் அவை இல்லாவிட்டாலும் மண்ணிலிருந்து அவை தோன்றியதை மறுக்க முடியுமா?

நீங்கள் வாசிக்கின்ற பேப்பர் தனி ஒரு பொருள் என்றாலும், அதுவும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா? மரக்கூழிலிருந்து இது தயாரிக்கப் பட்டாலும் மரம் மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட சக்தியால் தான் வளர்ந்தது.

எனவே மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை மறுக்க முடியாது.

இப்போது உலகில் 600 கோடிப் பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தலா 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். 30,000 கோடி கிலோ மொத்த எடையாகிறது.

ஒரு மனிதனும் இல்லாத போது பூமியின் மொத்த எடை எவ்வளவோ அதே அளவு எடை தான் 600 கோடி மக்கள்  அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது.

600 கோடி மக்கள் இப்பூமியில் அதிகமான போதும் 30 ஆயிரம் கோடி கிலோ எடை அதிகமாகவில்லை.

600 கோடி மக்களையும் சேர்த்து பூமியின் எடை எவ்வளவோ அதே எடை தான் ஒரு மனிதனும் படைக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி தன்னில் 30 ஆயிரம் கோடி கிலோவை மனிதனாக மாற்றியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாம் உண்ணுகிற உணவுகள் மண்ணின் சத்தினால் உருவானதாகும். எனவே நாம் உண்மையில் மண்ணைத் தின்று தான் உடல் வளர்க்கிறோம். இதனால் தான் நம்மால் பூமியின் எடை அதிகரிக்கவில்லை.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 50 கிலோ எடை பூமிக்கு அதிகமானால் பூமியின் எடை அதிகரித்து வேறு கோள்களுடன் மோதி பூமி சிதறிப் போய் விடும். எனவே முதல் மனிதர் மட்டும் அல்ல. நீங்களும், நானும் கூட மண் தான் என்பதை பூமியின் எடை நிரூபிக்கிறது.

நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தால் போதுமே! எதிலிருந்து படைக்கப்பட்டார்களோ அதுவாகவே அவர்கள் மாறியிருப்பதைக் காணலாம்! ஈரக் களிமண்ணால் படைக்கப்பட்டவன் தான் முதல் மனிதன். அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டவன். உங்கள் உடம்பில் இவைதாம் உள்ளன. கார்பன் அது'இது' என்றெல்லாம் வகைப் படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்தபின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுவோம்.

முதல் மனிதன் நேரடியாக மண்ணிலிருந்தே படைக்கப் பட்டான் என்பதும் அவனது வழித்தோன்றல்கள் மறைமுகமாக மண்ணிலிருந்து தான் பிறப்பெடுக்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதன் பொருள்.

அறிவியல் பூர்வமாக விளக்கம் கேட்கிறீர்கள்.

மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அங்கம் வகிக்கும் மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன.
70 கிலோ கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்த போது, உடலின் மூலப்பொருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.
ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள்:

1.ஆக்ஸிஜன் -43 கிலோ.கிராம்.
2.கார்பன்     -16 கிலோ.கிராம்
3.ஹைட்ரஜன் -7 கிலோ.கிராம்
4.நைட்ரஜன்   -1.8 கிலோ.கிராம்.
5.கால்சியம்   -1.0 கிலோ.கிராம்
6.பாஸ்பரஸ்   -780 கி.கிராம்
7.பொட்டாசியம் -140 கி.கிராம்
8.சோடியம்     -100 கி.கிராம்
9.குளோரின்    -95 கி.கிராம்
10.மக்னீசியம்  -19 கி.கிராம்.
11.இரும்பு      -4.2 கி.கிராம்
12.ஃப்ளூரின்    -2.6 கி.கிராம்.
13.துத்தநாகம்   -2.3 கி.கிராம்.
14.சிலிக்கன்  -1.0 கி.கிராம்.
15.ருபீடியம்  -0.68 கி.கிராம்
16.ஸ்ட்ரோன்ட்டியம் -0.32 கி.கிராம்
17.ப்ரோமின்   -0.26 கி.கிராம்
18.ஈயம்  -0.12 கி.கிராம்.
19.தாமிரம் -72 மில்லி கிராம்.
20.அலுமினியம் -60 மில்லி கிராம்
21.காட்மியம்  -50 மில்லி கிராம்
22.செரியம்  -40 மில்லி கிராம்
23.பேரியம்  -22 மில்லி கிராம்.
24.அயோடின் -20 மில்லி கிராம்
25.தகரம்  -20 மில்லி கிராம்
26.டைட்டானியம் -20 மில்லி கிராம்
27.போரான்  -18 மில்லி கிராம்
28.நிக்கல்  -15 மில்லி கிராம்
29.செனியம் -15 மில்லி கிராம்
30.குரோமியம்  -14 மில்லி கிராம்
31.மக்னீசியம்  -12 மில்லி கிராம்
32.ஆர்சனிக்  -7 மில்லி கிராம்
33.லித்தியம் -7 மில்லி கிராம்
34.செஸியம் -6 மில்லி கிராம்
35.பாதரசம்  -6 மில்லி கிராம்
36.ஜெர்மானியம்  -5 மில்லி கிராம்
37.மாலிப்டினம்  -5 மில்லி கிராம்
38.கோபால்ட்  -3 மில்லி கிராம்
39.ஆண்டிமணி -2 மில்லி கிராம்
40.வெள்ளி  -2 மில்லி கிராம்
41.நியோபியம் -1.5 மில்லி கிராம்
42.ஸிர்கோனியம்  -1 மில்லி கிராம்
43.லத்தானியம்  -0.8 மில்லி கிராம்
44.கால்ஷியம்  -0.7 மில்லி கிராம்
45.டெல்லூரியம்  -0.7 மில்லி கிராம்
46.இட்ரீயம்  -0.6 மில்லி கிராம்
47.பிஸ்மத் -0.5 மில்லி கிராம்
48.தால்வியம்  -0.5 மில்லி கிராம்
49.இண்டியம்  -0.4 மில்லி கிராம்
50.தங்கம்  -0.4 மில்லி கிராம்
51.ஸ்காண்டியம் -0.2 மில்லி கிராம்
52.தண்தாளம் -0.2 மில்லி கிராம்
53.வாளடியம் -0.11 மில்லி கிராம்
54.தோரியம்  -0.1 மில்லி கிராம்
55.யுரேனியம்  -0.1 மில்லி கிராம்
56.சமாரியம்  -50 மில்லி கிராம்
57.பெல்யம் -36 மில்லி கிராம்
58.டங்ஸ்டன் -20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

(பீஜே எழுதிய ‘அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்’ எனும் நூலில் இருந்து..)

எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகள்

மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறலாம்.



ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் 'ஜான் நம்ஸ்லே' வெளியிட்ட 'தி எலமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 இல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.


எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:


1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்


மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.