Translate

Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts

Thursday, 7 July 2016

பறவையும் விமானமும் -சிந்திக்க மறுக்கும் "பகுத்தறிவாதி".!!




21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, 20 மணிநேரம் கூட தொடர்ச்சியாக பறக்க முடியாத விமானத்தின் மதிப்பு 1250 கோடி.

இந்த விமானத்தை தயாரிப்பதற்கு பல மாதங்கள், பல மனிதர்களின் கடின உழைப்புகள் தேவைப்படுகின்றது.

மிகச் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் Frigate பெயரைக் கொண்டு அழைக்கப் படும்  பறவையோ (Frigate Birds) ஒரு நாளைக்கு 255 மைல்கள் வீதம் பல மாதங்கள் தொடர்ச்சியாக பறக்கக்கூடியது.

ஆனால் இந்தப் பறவை யாராலும் படைக்கப்பட வில்லை என்று நாத்திகத் தோழர்கள் சொல்கின்றார்கள்.




பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. இவ்வளவு சக்தி வாய்ந்த, பல நூற்றாண்டுகளாக உள்ள ஒரு பறவை யாராலும் படைக்கப்படவில்லை, இதில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாத விமானத்திற்கு இவ்வளவு செலவும், மனித ஆற்றலும் தேவைப்படுகின்றது.

உண்மையான பகுத்தறிவை உபயோகித்தால் கணக்கு இடிக்குதே.. நாத்திகத்  தோழர்கள் சிந்திப்பார்களா.?

"அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்." [திருக்குர்ஆன்  67:49]

"ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன." [திருக்குர்ஆன் 16:79]


நன்றி: Nadodi Tamilan


[][][] 

Monday, 17 August 2015

தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தி கூப்பாடு போடுகிற நாத்திகர்களுக்கு எதற்காக மதுவிலக்கு சட்டம்..?







பாப-புண்ணியத்தை சொல்லி, மதம் மனிதனை முடமாக்குகிறது.. நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிக்கின்ற வேதம் தேவையில்லை.. மனிதனுக்கு இருக்கின்ற பகுத்தறிவாலேயே யாவற்றையும் அறிந்து கொண்டு தவறின்றி வாழ முடியும் என்று சொல்லும் நாத்திகர்கள் எங்கே போய் விட்டார்கள் ..?


மது ஒரு கொடுந்தீமை என்றும் அதனை திறந்து விட்டால் மக்களுக்கு தீமை செய்யுமென்றும் நாத்திகரான கருணாநிதிக்கு ஏன் முன்பே தெரியவில்லை..? தற்பொழுது மட்டும் ஏன் மது விலக்கு சட்டம் கோருகிறார்..? அவருக்கு பகுத்தறிவு அன்றைக்கு வேலை செய்ய வில்லையா..? இன்றைக்கு வேலை செய்ய வில்லையா..?


இஷ்டம் போல வாழ விரும்புகிறவர்கள், தனி மனித சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய கத்துகிறவர்கள் எதற்காக இப்பொழுது மட்டும்..இதில் மட்டும்.. கட்டுப்பாடு வேண்டும் என்று கோருகிறார்கள்..?


பெண்கள் ஆபாசமாக உடை உடுத்தக் கூடாது என்று நாம் சொல்லும் பொழுது, ஆதாரமில்லாமல் கண்டதையும் எழுதுகிறவர்களை , பேசுகிறவர்களை நாம் கண்டிக்கும் பொழுது.. நாட்டில் குற்றங்களை குறைக்க கடுமையான சட்டங்கள் தேவையென்று நாம் வலியுறுத்தும் பொழுது.. தனி மனித சுதந்திரம் குறித்தும் கருத்து சுதந்திரம் குறித்தும் பாடம் நடத்துகிறவர்கள், மதுவிற்கு மட்டும் சட்டம் போட்டு தடுக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்..இந்த நாத்திகர்கள்.. ?

Sunday, 12 October 2014

இந்த உலகத்தின் சாபக்கேடு, நாத்திகம்..!



இந்த உலகத்தின் சாபக்கேடு, நாத்திகம்..!

கால் போன போக்கில், மனம் போன போக்கில் வாழ முற்படுவதே நாத்திகம்..! தான் எனும் அகம்பாவமும், மனோ இச்சையை வழிபடுவதால் தோன்றும் சுயநல உணர்வும் மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளி மிருகமாக்கி விடுகிறது..!

ஒருவனது உள்ளத்தில் நாத்திக எண்ணம் குடிகொண்டு விட்டால், அவன் பிசாசாக மாறிவிடுகிறான். அதன்பிறகு அவனைப் பொறுத்தவரை விபச்சாரத்திற்கும் சமூக ஒழுக்கத்துடன் புரிகின்ற திருமணத்திற்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது.!! திருடிய காசில் வாங்கின ரொட்டிக்கும், நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த காசில் வாங்கின ரொட்டிக்கும் வித்தியாசம் ஒன்றும் தோன்றாது..!

உண்மையில் நாத்திகர்கள் என்போர் யார்..? யாரெல்லாம் தங்களை நாத்திகர்கள் என்று விளம்பரப் படுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் மட்டுமா நாத்திகர்கள்..?

இல்லை.. கண்டிப்பாக இல்லை..!

ஒருவகையில் தங்களை வெளிப்படையாக நாத்திகர்கள் என்று கூறிக் கொள்பவர்களை கூட ஓரளவுக்கு பாராட்டி ஏற்றுக் கொள்ளலாம்.! ஆனால் வெளியே பலர் பார்க்க பழுத்தப் பழமாக ஆன்மீக வேடமிட்டுக் கொண்டு.. ரகசியமாக பஞ்சமாபாதகங்கள் புரிய கொஞ்சமும் அஞ்சாமல் திரிகிறார்களே..வெளியே ஆத்திகர்களாகவும் உள்ளே நாத்திகர்களாகவும் இருக்கிறார்களே..அவர்களே மிக்க ஆபத்தானவர்கள்..!! 

உண்மை ஆன்மீகமான இஸ்லாத்தைப் பொறுத்தவரை.. முஸ்லிம் பெயரை சூட்டியிருந்தாலும், இஸ்லாம் கூறும் அத்தனை வழிபாடுகளையும் விழுந்து, விழுந்து செய்தாலும்.. எண்ணங்களைப் பொறுத்தே கூலி கிடைக்கும்..

படைத்த ஏக இறைவனை நம்புவதும், அவனது கட்டளைகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கீழ்படிவதும், மறுமையில் அவனது சந்திப்பை நம்புவதும் தான் ஒருவனை முஸ்லிமாக ஆக்கும். அஃதல்லாமல் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்து விடுவதாலோ, முஸ்லிம் சமூகத்திலிருப்பதாலோ அவன் இறைவனிடத்தில் ஒருகாலும் முஸ்லிமாகி விட மாட்டான்.!


அதனால் தான் நபிகள் நாயகம் அவர்கள், 

“விபச்சாரி மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக்கொண்டு விபச்சாரம் செய்வதில்லை. மது அருந்தும் போது மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக் கொண்டு மது அருந்துவதில்லை. திருடுகிற பொழுது மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக் கொண்டு திருடுவதில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, கொள்ளையடிக்கும் போது மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக் கொண்டு கொள்ளையடிப்பதில்லை..!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..

அறிவிப்பவர்; அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி-5784, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயி, இப்னு மாஜா.
...................................................................
...................................................................

நாத்திகம் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு..!

[][][]