Translate

Showing posts with label பீஜே. Show all posts
Showing posts with label பீஜே. Show all posts

Sunday, 19 June 2016

ஷஹீத் பழனிபாபாவும், பீஜே அவர்களும்



கருணாநிதியின் மீது அன்றைக்கு முஸ்லிம் சமூகம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக, காயல்பட்டிணம் வந்த எம்ஜிஆரின் மீது முஸ்லிம்களில் சிலர் செருப்பு வீசினார்கள்.. அதில் மிகவும் அவமானப்பட்ட-ரோசப்பட்ட எம்ஜிஆர், காவி கபோதி ராமகோபாலன் தலைமையில் இந்து முன்னணி அமைய வழி வகுத்தார்.. தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் திமுக-கருணாநிதிக்கு பூர்ண ஆதரவை நல்கி வந்த நிலையில், முஸ்லிம்கள் மீது எழுதப்படாத அடக்குமுறைகளை எம்ஜிஆர் கட்டவிழ்த்து விட்டார்.

அந்த சூழலில் சிங்கம் போல வீறு கொண்டு எழுந்தவர் தான், தமிழக முஸ்லிம் மக்களால் மறக்க முடியாத மாமனிதர் தலைவர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்கள்.

காந்தியார் கொலைக்குப் பிறகு அடங்கி கிடந்த பார்ப்பன இந்துத்துவாவாதிகள், எண்பதுகளுக்குப் பிறகு தங்களை புதுப்பித்துக் கொள்ள.. பாபரே மஸ்ஜித் உள்ளிட்ட பிரச்சனைகளை கையிலெடுத்த நேரம். முஸ்லிம்களை எதிரிகளாக காட்டி பார்ப்பனர்கள் பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்ட துவக்கிய காலம்.

அது போன்ற நிலையில் தான், ஷஹீத். பழனிபாபா அவர்கள், எந்த அரசு தீவிரவாதத்தையும், அடக்குமுறைகளையும் ஆண்மையுடன் எதிர்கொள்ள வேண்டுமென்று சொல்லி முஸ்லிம் இளைஞர்களை தட்டியெழுப்பினார். அரசியல் ரீதியில் இந்துத்துவாவிற்கு எதிராக அன்றைக்கு செயல்பட்டு வந்த கருணாநிதியோடும், அவர் முதுகில் குத்தினப் பிறகு டாக்டர் ராமதாஸோடும் மேடைகளில் முழங்கினார்.. அந்த ராமதாஸும் பின்பு முதுகில் குத்தினார் என்பது தனி கதை.

அன்றைக்கு தனியொரு மனிதனாக-முஸ்லிமாக நம்முடைய சமுதாயத்திற்காக பாடுபட்டு.. அதற்காகவே கொல்லப்பட்ட பழனி பாபா அவர்களை கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் மௌத்தாகி போனவரை இழிவு படுத்துவதும் கொச்சைப் படுத்துவதும் நன்றியுள்ள சமுதாயத்திற்கு அழகா.? என்பதை சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பின் தொடர்ச்சியாக பீஜே அவர்களின் தலைமையில் தமுமுக தொடங்கி செயல்பட ஆரம்பித்தது.. யாராக இருந்தாலும் முஸ்லிம்கள் என்ற அளவில் யாவரையும் ஒன்றிணைத்து போராடி வந்த பழனிபாபாவின் செயல்பாடுகளுக்கு மத்தியில்.. பீஜே அவர்கள் மக்களை ஷிர்க்'கிலிருந்து தூய்மைப்படுத்தி.. இஸ்லாத்தின் அடிப்படையில் அவர்களை அணி திரட்டினார்.. பழனிபாபா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து குரல் கொடுத்து வந்த நிலையில்.. பீஜே அவர்கள் யாருடைய ஆதரவுமில்லாமல் களத்தில் நின்றார்..

பிறகு ஒரு கட்டத்தில் ராமதாஸ் பிஜேபியுடன் இணைய முயற்சி செய்த பொழுது, பழனிபாபா அவர்கள் தனியாளாக விடப்பட்டார்.. பீஜேயுடன் இனி இணைந்து செயல்படுவார் என்ற செய்திகள் வந்தன.. பழனிபாபா அவர்கள் அது தொடர்பாக பீஜே அவர்களுக்கு தூது அனுப்பியதாகவும்.. இடையில் சிலர் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால்.. அல்லாஹுவின் நாட்டம், பழனிபாபா அவர்கள் காவிக் கயவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்..

இது தான் பழனிபாபா மற்றும் பீஜே அவர்களின் கதை.

இங்கே சில சகோதரர்கள் உண்மை விளங்காமல் மாற்றி மாற்றி பீஜே அவர்களையும் பழனிபாபா அவர்களையும் திட்டுவதையும், தரம்தாழ்ந்து வசை பாடுவதையும் சகித்துக் கொள்ள முடியாமல் தான் இந்த பதிவை எழுதினேன்.

பழனிபாபா அவர்களை சந்தித்த பொழுதை..நான் இன்னும் மறக்க வில்லை.. சகோ. காமில் அவர்கள் என்னை அறிமுகம் செய்துவித்த பொழுது நாற்காலியிலிருந்து எழுந்து நின்று பழனிபாபா அவர்கள் எனது கைகளை குலுக்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.. அவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை விட.. இன்றைக்கு அவர் மீதும்.. அதற்கு பதிலடியாக சகோதரர் பீஜே அவர்கள் மீதும் சகதி வாரி எறிவது.. மிகவும் கொடூரமானது.. இதயத்திலே ஈட்டியை பாய்ச்சுவது போன்றது.


-பூமராங். 



[][][]

Tuesday, 14 June 2016

நாகூரும் நானும். -பூமராங்





நான் முதன்முதல் சவூதி செல்ல விசா வந்த பொழுது, எனது தாயார் என்னையழைத்து,


'' நீ வெளிநாடு செல்கிறாய்.. நாகூர் அவுலியாவின் துவா பரக்கத் பெற்று தான் பயணம் செல்ல வேண்டும்.. அப்படித் தான் உங்கத்தாவும் ஆரம்பத்தில் சிங்கப்பூர் சென்ற பொழுது நாகூர் தர்காவில் வியாழன் இரவு தங்கி பாத்திஹா ஓதி விட்டு சென்றார்கள்.. அதே போல நீயும் போய் தங்கி விட்டு வா..!" என்று எனக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்..


நானும் அம்மாப் பேச்சை தட்டாமல், பஸ் ஏறி நாகூரில் இறங்கி.. தர்காவை விசாரித்து அங்கு சென்றேன்.. இதெல்லாம் தான் இஸ்லாமென்று நினைத்திருந்த காலமது.


நான் தர்காவினுள் நுழைந்ததும் நுழையாததுமாக அங்கிருந்த சேவிங் செய்த, தாடி வைத்த முல்லாக்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் 'பாத்திஹா' ஓதிக் கொள்ளுமாறு என்னை போட்டு இழுத்தார்கள்..


நான் ஒன்றும் புரியாமல்..பயத்தில் அவர்களிடமிருந்து என்னை உருவிக்கொண்டு உள்ளறைக்கு சென்றேன்.. அங்கே ஒருவர் பச்சை தலைப்பாகை, நீண்ட ஜிப்பா, ஆட்டுக்கு இருப்பது போன்ற தாடி, கையில் நீண்ட மயிலிறகு தோகை சகிதமாக.. ஏதோ ஒரு பையன் பரிச்சையில் பாஸாக 'பாத்திஹா' ஓதி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.. நான் ஒரு ஓரத்தில் நின்று நான் ஏற்கனவே கற்று வைத்திருந்த பாத்திஹாவை ஓதி விட்டு இரா தங்குவதற்காக வெளியே வந்தேன்.


அங்கே மேலும் எனக்கு அதிர்ச்சி.. ஆண்கள்-பெண்களெல்லாம் ரொம்ப சகஜமாக ஒன்றோடு ஒன்றாக கிடந்தார்கள்..


என்னை பாத்திஹா ஓத கையைப் பிடித்து இழுத்து கலவரப்படுத்தியதும், உள்ளே ஒரு முல்லா அவ்லியாவுக்கு இடைத்தரகராக நின்று கொண்டு புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்ததும் எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.. அதோடு அங்கு நிலவிய சூழலும் பிடிக்க வில்லை.. நான் உடன் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்து விட்டேன்.


'' இரா தாங்காமல் ஏன் திரும்பி வந்தாய்..?'' என்ற எனது தாயாரின் கேள்விக்கு மார்க்கரீதியாக பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை.. 'எனக்கு பிடிக்க வில்லை' என்று மட்டும் சொன்னேன்.


ஆனால்.. சில காலம் ஓடி.. பீஜே என்றொருவர்.. இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கிறார் என்று கேள்வி பட்டு.. வேண்டா வெறுப்பாக அவரது பேச்சை கேட்டேன்..


அல்ஹம்துலில்லாஹ்.. என்னுடைய குழப்பங்களுகெல்லாம் தெளிவு பிறந்தது.. தூய்மையான இஸ்லாம் எனது இயல்புக்கு முரண்படாமல் இருப்பதை உணர்ந்தும் மிகவும் அகமகிழ்ந்தேன்..


எல்லா புகழும் அல்லாஹுவிற்கே..