கடந்த 25.9.2015 அன்று தந்தி டிவியில் ஆபாசம்..பார்வையிலா.? உடையிலா.? எனும் தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய பெண்ணியவாதிகள் முன்வைத்த இயல்புக்குப் பொருந்தாத, செயற்கையான வாதங்களை-கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. தொட்டதற்கெல்லாம் ஆணாதிக்கம் என்கிறார்கள். பெண்களின் அரைகுறை ஆடைகளைப் பற்றி தொடர்ந்து ஆண்கள் விமர்சனம் செய்தால், ஒருவேளை எல்லாவற்றையும் அவிழ்த்து போட்டுவிட்டு அம்மணமாக சாலையில் இறங்கி விடுவார்களோ, என்கிற அச்சம்தான் அவர்களது வார்த்தைகளை கேட்கும்பொழுது நமக்கெல்லாம் உண்டாகிறது.!
முதலில் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள்(!) சிலவற்றைப் பார்ப்போம்.
# ஆடை என்பது அணியும் அந்தப் பெண்ணின் சௌகரியத்தை பொறுத்தது. இப்படித் தான் ஆடை அணிய வேண்டுமென்று வற்புறுத்துவது ஆணாதிக்க சிந்தனை.
# ஆடையில் ஆபாசம் என்பது பார்க்கின்றவர் பார்வையில் தான் இருக்கிறது.
# வெளிவேலைகளில் ஈடுபடுகிற பெண்கள், பதினெட்டு முழ புடவையை உடல் முழுக்க சுற்றிக் கொண்டு சாலைகளில் நடக்க முடியுமா..? ஓடிச் சென்று பஸ் ஏற முடியுமா..?
# முழுமையான ஆடை அணிந்த பெண்கள் யாரும் பாலியல் வன்முறைகளுக்கு பலியாக வில்லையா.? செக்ஸியாக உடை அணிந்து வெளியே செல்லும் பெண்கள்தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றார்களா.? வீட்டில் சொந்த இரத்த உறவுகளாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் இருக்கிறார்களே.? தந்தையே மகளைக் கற்பழித்த கதைகளை நாம் செய்திகளாக கேள்விப் பட்டதில்லையா.? இவற்றிற்கெல்லாம் செக்ஸியாக அணியும் உடைதான் காரணம் என்று கூறமுடியுமா.?
# சிறு குழந்தைகள் கூட கற்பழிக்கப் படுகிறார்களே.. அதற்கும் ஆடை தான் காரணமா.?
# பாலியல் தொந்தரவு, பாலியல் வன்முறைகளை செய்கின்ற ஆண்களை கட்டுப்படுத்தாமல் அதனால் பாதிக்கப்படும் பெண்களையே குற்றம் சாட்டுவது ஆணாதிக்க சிந்தனை. பிரச்சனையை திசை திருப்புகிற ஆணாதிக்க அயோக்கியத்தனம்.
# எங்கள் ஆடைகளில் நாங்கள் அழகாக தெரிவது தான் எங்களுக்கு முக்கியம்.. அது எங்களுடைய சுதந்திரம். அதில் ஆண்களின் கவனம் சிதைந்தால், பாதிக்கப்பட்டால், அதற்கு ஆண்களுக்குள் இருக்கும் வக்கிரப் புத்தி தான் காரணம்.
# தனிமனித சுதத்திரமான ஆடை சுதந்திரத்தை பெண்களிடமிருந்து பறிக்கப் பார்ப்பது ஆணாதிக்க ஒடுக்குமுறை. தாங்கள் சொல்கிற ஆடைகளை மாத்திரம் அணிந்துக் கொண்டு, பெண்கள் தங்களுக்குக் கீழ் ஒரு போகப் பொருளாக இருக்க வேண்டுமென்ற ஆண்களின் பழமைவாத எண்ணங்களின் வெளிபாடு..!
நடுநிலையுடன் இந்த விஷயங்களை ஆராய்வோம்.!
முதலில் ஆண்களின் உளவியலை புரிந்துக் கொள்வோம். ஆண் என்பவன் அடிப்படையில் பெண்ணின்பத்தை பெரிதும் விரும்பக் கூடியவனாக இருக்கிறான். கண்ணால் காமுறுபவனாகவும், கண்டதை கற்பனை செய்து அதனை வளர்த்துக் கொள்பவனாகவும் இருக்கிறான். உணவு, உறக்கம் என எதையும் மறக்கச் செய்து எதிர்பார்த்து ஏங்க வைப்பது தான் அவனது செக்ஸ் உணர்வு. (பெண்ணின் காமம் அது போன்றதல்ல. ஆண்களைப் போல சதா சர்வநேரமும் காமஉணர்வை தலையில் சுமந்து இருப்பவர்களல்ல. ஆடை அலங்காரம், சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற காரியங்களிலேயே பெரும்பாலும் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர்கள் அவர்கள்.!) “The man's desire is for the woman. but the woman's desire is rarely other than for the desire of the man." என்று முன்பு ஒரு அறிஞர் சொன்னார். அதன் காரணமாகவே ஆண்களுக்கான செக்ஸ் தேவைக்காக மாத்திரம் விபச்சார விடுதிகள் நடத்தப் படுகின்றன. அங்கே விலை கொள்ளப்படும் பொருளாக பெண் இருக்கிறாள். காமத்தின் தேவை இரு பாலாருக்கும் சமமாக இருந்திருந்தால், உலகத்தில் ஆணும் சந்தைப் பொருளாக்கப் பட்டிருக்கவேண்டும்.
ஆண் காம வயப்படுகிற பொழுது சிந்தனாசக்தியை இழந்து விடுகிறான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறையச்சமோ, சட்டத்தின் மீதான பயமோ, சமூக நாணமோ இல்லாத ஒருவன் தனிமையில் இருக்கும் பெண்ணுக்கு மிகவும் ஆபத்தானவன். அதோடு அவன் மதுவும் அருந்தியிருந்தால் கேட்கவே வேண்டாம்.
'காதல் ஹார்மோன்' என்றே சொல்லப்படுகின்ற ஆக்ஸிடோஸின்கள் பாலுணர்வு வழிந்தோடும் வேளைகளில் ஒருவரது நடவடிக்கைகளை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. மூளையின் மேற்பரப்பில் முன்பகுதியில் ப்ரிஃப்ரண்டல் கார்ட்டெக்ஸ் என்று சொல்லப்படும் இடத்தில் ஆக்ஸிடோஸின் வயப்படும் இந்த நியூரான்கள் அமைந்திருக்கின்றன. ஒருவரது குணாதிசயம், கற்கும் ஆற்றல், சமூக நடத்தை போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி இது.
How arousal affects decision-making
The importance stopping the process of sexual arousal in the very earliest stage becomes clear when we consider that the activity of the brain’s limbic system (which deals with emotions like fear and sexual arousal, and is involved in the release of hormones like adrenaline) tends to shut down the activity of the prefrontal cortex, which ‘is responsible for higher-level cognitive functions like decision-making’.
The limbic system operates by influencing the endocrine system and the autonomic nervous system. It is highly interconnected with the nucleus accumbens, the brain’s pleasure center, which plays a role in sexual arousal and the “high” derived from certain recreational drugs.
…adrenaline shuts down the pre-frontal cortex, thereby inhibiting it from thinking. The body is further readied for action…One way to understand the relationship between the limbic brain and the prefrontal cortex is by way of ratio: the degree of limbic activity is usually inversely proportional to prefrontal activity. The more reactive (limbic) we are, the less we are in thinking (pre-frontal cortex) mode, and vice versa.
So as I understand it, when the mind and body are in a state of sexual arousal, the limbic system is in full swing, which results in the shutting down of the prefrontal cortex, which is that higher part of the brain that makes decisions (Should I look at porn? Is this really a wise thing to do?). Contrary to common thought, sexual temptation is not a battle between the pleasure centre and the rational part of the mind. The rational part is already dead – it’s not even fighting. Is it any wonder that we fail to make the right decision 80% of the time?
இயற்கை ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாகத்தான் படைத்துள்ளது. அறிவு, வீரம், உடல் திண்மை, உணர்வு போன்றவற்றில் இருவரும் ஒன்றாக இல்லை. ஆணின் ஆண்ரோஜன் (ANDROGEN) ஆக்ரோசம், வீரம் போன்ற குணங்களை கொடுக்கும். பெண்ணின் ஈஸ்ட்ரோஜன்(OESTROGEN) மென்மை, எளிதில் உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்களை தரும். கவர்ந்திழுக்க கூடியவளாக பெண்ணையும் கவரப்படக் கூடியவனாக ஆணையும் இயற்கை அமைத்திருக்கிறது. உடல் வலிமையினாலும் மனோபலத்தாலும் ஆணை ஒரு புலிக்கு ஒப்பிட்டால் ஆணை விட பலவீனமான பெண்ணை மானுக்கு ஒப்பிடலாம். பெண்ணை பஞ்சாகவும் ஆணை நெருப்பாகவும் ஒப்பிடலாம்.
‘’பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சு, உரசல், ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும்பாடாக இருக்கிறது..!’’ என்று 4-4-99 தினமணி கதிரில் பெருமூச்சு விட்டிருந்தார், பெண்ணிய எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள். ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பது சிறந்தது என்பதே அவருடைய தீர்க்கமான கருத்து.
ஆணையும் பெண்ணையும் எத்தனை தான் சமதளத்தில் வைத்து பார்த்தாலும் மிகைத்த உடல் வலிமையின் காரணமாக ஆண்களால் பெண்களுக்கு எப்பொழுதும் ஆபத்து இருக்கிறது என்பதை பகுத்தறிவுள்ள எவரும் புரிந்துக் கொள்ள முடியும். இந்நிலையில் ஆண்களின் உணர்ச்சிகளை சீண்டுகிற, தூண்டுகிற வேலையை எந்த அறிவுள்ள பெண்ணும் செய்ய துணியலாமா..? முள்ளின் மீது இலை பட்டாலும், இலையின் மீது முள் பட்டாலும் பாதிக்கப்படப் போவது இலைதான் என்கிற பொழுது இலை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா..?
இது தொடர்பாக எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சிலப் பகுதிகள்..!
“இயல்பில் ஆண் முரட்டுத் தசைவலிமையில் பெண்ணைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும், மனவலிமையில் பெண்ணைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான். பெண்ணின் உடல் சார்ந்த வலுவின்மையை ஆண் தனக்குச் சாதகப் படுத்திக் கொண்டு பெண்களை வெற்றி கொள்ளுவதைப் பெண் எவ்வாறு நியாயமென்று ஒப்புக்கொள்ள மாட்டாளோ, அவ்வாறே மனம் சார்ந்த தனது வலுவின்மையைப் பெண் சீண்டுவது கூடாது என்று நினைக்கவும், அதனைப் பெண்ணுரிமை என்று ஒப்புக்கொள்ளாதிருப்பதற்கும் ஆணுக்கு உரிமை உண்டு..!”
@@
“அண்மைக்காலமாய்ப் பெண்களில் சிலர், நல்ல வேளை.! சிலர்தான்.! அருவருக்கத்தக்க முறையில் வெளிப்பாடாய் உடுக்கத் தலைப் பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் அணியும் பனியன்களிலும், டி-ஷர்ட்டுகளிலும் உள்ள வாசகங்களை இங்கே எடுத்து எழுதி, இந்தக் கண்ணியமான நாளிதழின் பக்கத்தை மாசுபடுத்த விரும்பவில்லை. வம்புக்கு இழுக்கும் இந்த வாசகங்களைப் படிக்கும் ஆண் அருவருப்பான முறையில் எதிரொலிக்கவே செய்வான். அவனது படைப்பு அப்படி! குச்சிக்குச் சேலை கட்டிவைத்தாலும் அதைப் பார்த்ததும் எச்சில் ஊறும் வாய் அவனுடையது. ‘அவன் என்னை இடிக்காமல் விலகிப் போகட்டுமே? அவன் இடிப்பான் அல்லது அசிங்கமாய் ஏதேனும் விமர்சிப்பான் என்பதற்காக நான் என் உடையணியும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ன?’ எனும் பெண்ணின் பதில் கேள்வியில் அசட்டுத்தனமமே ததும்புகிறது..!”
@@
“கொஞ்ச நாள்களுக்கு முன்னால்; பெண்களுக்கான ஓர் ஆங்கில இதழில் அதன் ஆசிரியை, பெண்களின் எறிபந்து/ கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு ஆண்களின் கூட்டம் அலைமோதுவதையும், பெண்கள் விளையாடுகையில் ஆபாசமான விமரிசனத்துடன் அவர்கள் ஊளை இடுவதையும் பற்றி அங்கலாய்த்துக் கட்டுரை எழுதியிருந்தார். உறுப்புகள் வெளித்தெரியும் வண்ணம் உடையணிந்து குதித்தால் இயல்பில் மோசமான மனநிலையுள்ள அவர்கள் அப்படித்தான் எதிரொலிப்பார்கள். அப்படி எதிரொலித்த ஆண்களை “மலம் தின்னும் பன்றிகள்” என்று அந்த ஆசிரியர் விமர்சித்திருந்தார். ‘அவர்கள் பன்றிகள் என்பது தெரிகிறதல்லவா.? அப்படி இருக்கும்போது, ஏன் வெளிப்பாடான உடை அணிந்து ஆண்களைப் பன்றிகளாக்கும் “மலம்” ஆகப் பெண்கள் மாற வேண்டும்’ என்று நான் எழுதிய பதில் கடிதத்தை அவர்கள் வெளியிடவில்லை என்பது வேறு விஷயம்..!”
@@
“அண்மையில் பெண்ணிய இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் பெண்களின் உடைக்கட்டுப்பாடு பெண்களின் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டிருந்தது. அதே கட்டுரையின் ஓரிடத்தில், ‘உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்கள் உடைகளைக் கால்கள் தெரிய, தூக்கிச் செருகிக்கொண்டால்தான் வேலை செய்ய முடியும். நம் நாட்டில் வயலில் உழைக்கும் பெண்களும், கட்டட வேலை செய்யும் பெண்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பெண்கள்தான் பாலியல் கொடுமைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லப்பட்டிருந்தது. கண்கூடான நிலை என்பது இதுதான். இது ஆண்களின் பொதுவான, மாறாத மனப்பான்மையையே காட்டுகிறது..!”
நன்றி – தினமணி – 2008
ஆண் பெண் உளவியல் குறித்து மனோதத்துவ மருத்துவர் ஷாலினி அவர்கள் விவரிப்பதை இங்கே எடுத்துக் காட்டுவது சிறப்பாக இருக்கும். கவர்ச்சியான, அரைகுறை ஆடைகளுடன் பொது இடங்களுக்கு வரும் பெண்கள், ‘புணர்ச்சிக்கு தான் தயார்.! என்பதை தான் சமிக்கையாக ஆண்களுக்கு சொல்கிறார்கள்..’’
வீடியோ லிங்க்.
ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக இருப்பதைக் கண்ட டி.ஜி.பி கில், உணர்ச்சி மேலீட்டால் அவரது பின்புறத்தை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது, சில வருடங்களுக்கு முன்னால். படித்த, உயர் பதவியில் இருந்த, இளமையை கடந்த ஒருவரே இப்படி..!!
இன்றைய சமூகத்தில் ஆண் எங்கேயும் எப்பொழுதும் பாலுணர்ச்சி தூண்டுதல் பெற்றவனாகவே இருக்கிறான். அவன் விரும்பி பார்க்கின்ற சினிமா, தொலைக்காட்சி, அதில் வரும் ஆபாச காட்சிகள்.. பேசப்படும் இரட்டை அர்த்த வசனங்கள்..அரைகுறை ஆடைகளில் பெண்ணுடலின் நளினங்களை விருந்து படைக்கின்ற நடனங்கள், கொச்சையான பாடல்கள், திரும்புகிற பக்கமெல்லாம் ஆண்களை ஈர்க்கும் வகையில் தெரிகிற கவர்ச்சியான பெண்களை கொண்ட விளம்பரங்கள்.. பத்திரிக்கைகளை புரட்டினால், முன்பக்கம், நடுப்பக்கம், பின்பக்கமென செக்ஸ்பாம்’களின் கவர்ச்சி படங்கள்.. அதோடு கிசுகிசு எனும் பெயரில் காமரசம் சொட்டும் நடிகைகளின் அந்தரங்க செய்திகள்.. இவையெல்லாம் ஆண்களை பொறுத்தவரை பெண்ணென்றால் சிவந்த உதடு, ஏக்கத்தில் காமப்பார்வையை கக்கும் கண்கள், திமிறிய மார்பகங்கள், வளைந்த ஒடுங்கிய இடையின் நளினம், அதில் கவர்ச்சியான தொப்புள், அதற்கும் கீழே அவிழ்த்து விடுமோ என்று அஞ்சத் தக்க ஆடை.. பருத்த தொடை, வெளுத்த தேகம்..இவைதான்.
ஏற்கனவே பெண்ணை ஜடமாகவும், ஆணுக்கான போகப்பொருளாகவும், கவர்ச்சி பிண்டமாகவும் சமூகம் வடிவமைத்துள்ள நிலையில்.. அத்தகைய பாலுணர்வு கொந்தளித்த மனதுடன் உள்ள ஆணுக்கு முன்னால் கைக்கெட்டிய தூரத்தில், கண் முன்னே.. அரைகுறை ஆடையுடன், தனிமையில் ஒரு பெண் நின்றால் என்னாவாகும்..?
ஆபாச படங்கள், அரைகுறை ஆடைகளில் பெண்களின் தன்னிச்சையான போக்கு, மீடியா மற்றும் சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை ஆகியவையே பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு காரணம். இத்தகைய சூழ்நிலையில் சட்டங்களை வைத்துக்கொண்டு அரசு ஒன்றும் செய்ய முடியாது.
சில வருடங்களுக்கு முன்னால் லண்டனில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு குற்றம் குறித்து ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட செய்தி 21-02-2010 தினமலர் நாளேட்டில் வெளியானது. 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் கற்பழிக்கப் படுகின்றனர் என்றும் இந்த சம்பவம் நடப்பதற்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக உள்ளனர் என்றும் பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர். இளம்பெண்கள் தொடை தெரியுமளவிற்கு குட்டை பாவாடை போன்ற கவர்ச்சியான ஆடைகள் அணிவதும், சிலர் ஆண் நண்பர்கள் வீட்டில் தங்குவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும், வம்பை அவர்களே விலை கொடுத்து வாங்குவது போலாகி விடுகிறது. விருந்து நிகழ்ச்சிகளில் மேலாடை விலகுவது கூட தெரியாமல் நடனமாடுவதும் ஆண்களை சபலத்திற்குள்ளாக்கி விடுகிறது. இவற்றால் தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன என்று அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவதற்கு மீடியாக்களும், ஆபாச படங்களுமே காரணம். ஆபாச கருத்துக்களுடன் வெளியாகும் பத்திரிக்கைகளை படிக்கும் இளம் வயதினர் அதனால் பாதிக்கப் படுகின்றனர். மீடியாக்களில் வக்கிரமான, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றது. சமூக பொறுப்பற்றத்தன்மையே இத்தகைய குற்றங்களுக்கு காரணம்.
கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு காரணம்’: பிரபல பாடகரின் கருத்தால் வெடிக்கும் சர்ச்சை
பெண்கள் கற்பழிப்பிற்கு உள்ளாவதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல பெண் பாடகர் ஒருவரின் கருத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த கிரைஸ்சி ஹைண்டே(63) என்ற பெண் பாடகர் வார பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
கிரைஸ்சி அளித்த பேட்டியில், ‘காம உணர்வுகள் என்பது மனிதர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். ஆனால், அதனை தூண்டிவிட்டு கற்பழிப்பிற்கு முதல் காரணமாக அமைவது பெண்கள் உடுத்தும் ஆபாச ஆடைகள் தான்.
சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணின் ஆடை அறைகுறையாகவும், மிக மிஞ்சிய கவர்ச்சியுடன் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு மோகத்தை தூண்ட தான் செய்யும்.
ஆபாச ஆடைகள் மட்டும் இன்றி, குடித்துவிட்டு தள்ளாடியவாறு சாலையில் செல்லும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு தவறு செய்ய தான் எண்ணம் வரும். இது முழுக்க முழுக்க பெண்களின் தவறு தான்.
பெரும்பாலான கற்பழிப்பு சம்பவங்கள் பெண்கள் குடித்துவிட்டு, போதை பொருள் அருந்திவிட்டு இரவு நேரங்களில் சாலையில் செல்லும்போது தான் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
ஒருவேளை, நாகரீகமாக, மற்றவர்களின் முகம் சுழிக்காதவாறு உடை உடுத்திக்கொண்டு செல்லும்போதும் கற்பழிப்பு நிகழ்ந்தால், அது மட்டுமே அந்த ஆணின் குற்றம் ஆகும்.
மேலும், தனக்கு 21 வயது இருந்தபோது போதையில் இருந்த என்னை சில நபர்கள் அழைத்து சென்று மிகவும் கொடுமைப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் என்னுடைய தவறு தான்.
இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என கிரிஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.
சிலருக்கு ஆபாசமான செயல்களை பார்ப்பது கிளர்ச்சியை ஏற்படுத்தும். காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் காட்சிப்படுத்தி வெளிவரும் பாலுணர்வுக் கிளர்ச்சி நிகழ்படங்களை பார்ப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொப்புளை பார்ப்பது மட்டுமே கிளர்ச்சியை ஏற்படுத்தும். இதனை பார்வைக் காமம் என்று குறிப்பிடுவர். பெண்களின் தொப்புள் பல வடிவங்களில் இருந்தாலும் ஆங்கில எழுத்து "T" போன்ற செங்குத்தான வடிவம் கொண்ட தொப்புளே மிக கவர்ச்சியானது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இளம் பெண்கள், இடை ஆட்டக்களைஞர்கள், நடிகைகள் மற்றும் பாப் இசை பாடகிகள் போன்றோர் தொப்புளில் தோடு மாட்டிக்கொள்கின்றனர். இவைகளும் தொப்புளை நோக்கி பார்வைகளை ஈர்க்க காரணமாகின்றது. ஆண்களுக்கு, தொப்புளை வெளிகாட்டும் பிக்கினி(BIKINI), லோ ஹிப் ஜீன்ஸ் போன்ற உடைகளில் பெண்களை காண்பதும், பெண்களுக்கு மேல்சட்டை உடுத்தாத ஆண்களை காண்பதும் காம உணர்வைத் தூண்டும்.
பிரபல மனோதத்துவ நிபுணரும், இஸ்ரேல் ‘டெல்ஹாய் கல்லூரி’யின் பெண் கல்வித்துறைத் தலைவருமான “அவிகைல் மூர்” என்பவர் “பெண்ணின் ஆடைக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஓர் ஆய்வை நடத்தினார்.
உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் காணும் போது ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் உணர்வு எவ்வளவு என்று கண்டுபிடிப்பது தான் அந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். அந்த ஆய்வை நடத்தி முடித்த பின்னர் மக்கள் மன்றத்தில் அவர் தமது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
Journal Of International Women`s Studies, என்று பெயரிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் பாகம் 2 பக்கம் 4இல் “ஆய்வில் பங்கெடுத்த ஆண்களில் 29.8 சதவீதம் பேருக்கு பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கும் போதெல்லாம் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். 58.1 சதவீதம் பேருக்கு பெரும்பாலான சமயங்களில் உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் கண்டால் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்”. (Journal Of International Women`s Studies, Vol. II 4 May 2010) மேற்கோள் காட்டப்பட்ட நூல்:”இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்” இலக்கியச் சோலை வெளியீடு. பக்கம் 27.)
ஆண்கள் பலரின் எண்ணத்தில் பெண்ணென்றாலே அவளுடைய சில அங்க அவயங்கள் தான். மார்பு, உதடு, தொப்புள், உடல் வளைவுகள், அவளது கூந்தல்.. இவையெல்லாம் சேர்ந்து தான் பெண்ணென்ற பிம்பம் மனதில் உரக்க ஒலிக்கிறது. பெண் என்பவள் வெறும் அங்கங்களின் சேர்க்கையாக ஆண்களின் மனதில் வியாபிக்க காரணமென்ன..?
“ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்..! என்று எழுத்தாளர் ஞானி கூட ஒரு தடவை சொன்னார்.
கவர்ச்சி, ஆபாசமான அரைகுறை ஆடை தான் காரணமென்றால் காமத்திற்கேதுவான உடல் வளைவுகளோ, கவர்ச்சியான அங்க அவயங்களோ இல்லாத பச்சிளம் குழந்தைகளும் மனித மிருகங்களால் கற்பழிக்கப்படுகிறார்களே..என்று சிலர் கேட்கின்றனர். அது போன்ற வக்கிர மிருகங்களுக்கு இந்த உலகத்தில் இடமில்லை என்று பிரகடனப் படுத்தும் வகையில் அரசு அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதோடு அத்தகைய கொடுஞ்செயல் புரிந்தவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினால், அவர்களது வக்கிரம் தூண்டப்படுவதற்கு மேற்குறிப்பட்ட நவநாகரீக பெண்களும், அவர்களை வியாபாரப்படுத்தும் மீடியாக்களும், ஆபாச விளம்பரங்களும் தான் காரணம் என்பது கண்டிப்பாக தெரிய வரும். . காமம் மேலிட்ட ஒருவன் நிராசையடைகிற பொழுது, இது போன்ற எளிதில் கிட்டுகிற சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறான் என்பது தான் நிஜம்.
பத்திரிக்கைகளில் பெண்களின் ஆபாச படங்களை முன்பக்கம் நடுப்பக்கம் கடைசி பக்கமென்று இட்டு காசாக்க முடிவது போல், ஏன் டூ பீஸில்..சிங்கிள் பீஸில் ஆண்களின் படங்களை இடுவதில்லை..?
சினிமாவில் கூட ஆண்களை இந்த நாட்டுக்கு பொருந்தாத கோட்..சூட் போட்டு நடிக்க வைக்கின்ற பொழுது, பெண் கதாநாயகிகளை மாத்திரம், கடும் குளிர் பிரதேசங்களில் நடிக்க வைத்தாலும், டூபீசிலும், அரை நிர்வாணத்திலும் படமாக்கும் சூட்சுமம் என்ன..?
வாகனமாக இருந்தாலும், ஆண்கள் உபயோகிக்கும் சேவிங் பிளேடோ, ஜட்டியோ, நறுமண குப்பியோ. எதுவாக இருந்தாலும் அவற்றின் விளம்பரங்களில் சம்பந்தமில்லாமல் செக்ஸ் பாம்’களின் காமரசம் சொட்டும் படங்கள் ஏன்.? அதிலும் ஆணுறை விளம்பரத்திற்கு கேட்கவே வேண்டாம்.
முன்பு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மீறி மார்பை மறைக்க விரும்புவோர் சீலைவரி செலுத்தவேண்டும். அது போன்ற நிலையில் பெண்கள் ஆடை சுதந்திரம் வேண்டுமென்று எந்த பெண்ணியவாதியாவது போராடினால் வரவேற்கலாம், பாராட்டலாம். ஆனால் கேவலம், அரைகுறை நிர்வாணத்தில் செல்லும் விருப்பத்தையே ஆடை சுதந்திரம் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் உரிமை கோரிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது..?
ஆடை சுதந்திரம் கோருபவர்கள் யாரென்று ஆராய்ந்தால், அவர்களுக்கு பின்னால் சதை வியாபாரிகள் ஒளிந்துக் கொண்டிருப்பது தெரியும். இன்றைய உலகமயமாக்களில் குடிக்கின்ற தண்ணீர் முதல் சுவாசிக்கின்ற காற்று வரை சந்தைப் பொருளாக மாறிக் கொண்டிருக்கிற நிலையில் அவற்றையெல்லாம் சந்தைபடுத்த இளமையான, கவர்ச்சியான பெண்களின் உருண்ட விழிகளும், சிவந்த உதடுகளும், திரண்ட மார்பகங்களும், ஒடிந்த இடைகளும், ஒட்டின வயிற்றில் ஒட்டி வைத்தது போன்ற தொப்புளும், வழுவழு தொடைகளும் தேவை.. அதற்காகவே அழகு போட்டி நடத்துகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இந்த விபச்சாரத்தை கருத்தியல்ரீதியாக பிரச்சாரம் செய்பவர்களுக்கு புரட்சிப் பெண் எனும் பட்டம் தருகிறார்கள்.!
உடை அரசியல்
ஆடை என்பது தனிமனித சுதந்திரத்தின் பாற்பட்டது எனவும், அரைகுறையாக, கவர்ச்சியாக ஆடை அணிந்தாலும் சமூகம் அதற்காக கவலைப்படக் கூடாது. அதனை ஆபாசம் என்று சொல்லி தங்களை கட்டுப்படுத்த முயலக் கூடாது. தங்களை காண்பதன் மூலம் ஆண்களுக்கு உண்டாகிற அந்தத் தீய எண்ணங்களுக்கு ஆண்களே தான் காரணம். அதனை அவர்கள் தான் திருத்திக் கொள்ள வேண்டுமேத் தவிர, தங்களது ஆடை சுதந்திரத்தை தடுக்கக் கூடாது என்று குமுறுகிற குமரிகள், ஆடை என்பது மனித நாகரீகத்தின் உயரிய அடையாளம் என்பதும், அது அணிபவர்களுடைய மனநிலையை, அவர்களது தனித்துவத்தை, சமூகத்தின் பல்வேறு நிலைகளை பிரதிபலிக்கின்ற கண்ணாடி என்பதும் தெரிய வேண்டாமா.? சும்மாவா சொன்னார்கள், ஆள் பாதி, ஆடை பாதி என்று.
சமீப காலம் வரை உடையும் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக நிலவி வந்ததை மறக்க முடியுமா.? அதன் மூலம் நடைபெற்று வந்த சாதிய அடக்குமுறைகளை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். சாதாரண மேல் துண்டை இடுப்பில் கட்ட வேண்டுமா.? தோளில் இட வேண்டுமா.? அல்லது அக்குளில் இடுக்கிக் கொள்ள வேண்டுமா.? என்பதை உயர் சாதிகள் எனப்பட்ட ஈனச் சாதிகள் தீர்மானித்தன. தாழ்ந்த சாதிக்காரன் சட்டை அணியக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. குடை பிடித்துச் செல்லக் கூடாது. அவர் வீட்டுப் பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது. மீறி மறைக்க விரும்பினால் சீலை வரி அரசுக்கு செலுத்த வேண்டும் என்பன போன்ற வன்கொடுமைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் அவற்றையெல்லாம் பெரியார், அண்ணா, ஜோதிபா பூலே, வைக்கம் முகம்மது பஷீர் போன்ற எண்ணற்றவர்கள் போராடியதன் விளைவாகவே எவருக்கும் சமமாக ஆடை அணிகின்ற சுதந்திரத்தையே நாம் பெற்றிருக்கிறோம். அந்த சுதந்திரத்தை பாழ்படுத்தும் வகையில் அல்லது கேலி செய்திடும் வகையில் அரைகுறை ஆடை அணிய பெண்கள் சுதந்திரம் கேட்பது என்ன நியாயம்.?
நாம் அணியும் ஆடையில் தன்மானம், குடும்ப மானம் இருக்கின்றது, அதிகாரத்தையும், சமூகத்தின் பொதுவான நாகரீகத்தையும் அரசியலையும் கொண்டிருக்கிறது. காக்கியுடையில் மிடுக்குடன் வருகின்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கின்றோம். ராணுவத்திற்கென்று பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வரும் வீரனை நேசிக்கின்றோம். அணிகின்ற ஆடை மூலமாகவே தொழிலாளர்களை, முதலாளிகளை, அரசியல் வாதிகளை, இன்னபிற மக்களை உணர்கிறோம், அறிகிறோம். சமூக அநீதிகளுக்கு எதிரான கலகங்களும் உடை வடிவத்தில் பிரதிபலித்ததை வரலாற்றில் படிக்கின்றோம்.
காந்தியும் அம்பேத்கரும்
மகாத்மா காந்தியும் சரி, சட்டமேதை அம்பேத்கரும் சரி, சமூகத்தை சீர்படுத்த நிறைய எழுதினார்கள். தங்கள் வாழ்நாளில் எண்ணற்ற மக்கள் திரள்களில் பங்கேற்று சமூக மாற்றத்திற்கான கணக்கில்லாத போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இதற்கெல்லாம் அச்சாணியாக தங்களுக்கான ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். உயர் குலத்தில், உயர்வான கல்வி பயின்று, கை நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த மகாத்மா காந்தியவர்கள், இந்த நாட்டின் ஏழை எளிய மக்களை பிரதித்துவப் படுத்தும் வகையில் மேலாடை தவிர்த்து அரையாடையில் வலம் வந்தார். நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆடை அணியுமளவிற்கு அவர்களது வாழ்க்கைத்தரம் உயரும் வரை தான் முழுமையான ஆடை அணிவதில்லை என்று சங்கல்பம் கொண்டிருந்தார். அவரது அந்தக் கோலம் அவரது கொள்கையை, நாட்டின் நிலைமையை பிரதிபலித்தது. சுதந்திர போராட்டக் காலத்தில் மக்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மனிதனுக்குரிய அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் அவர்கள், வாழ்நாள் முழுக்க ஆங்கிலேயர் போல கோட், சூட் அணிந்து முழு ஆடையை அணிந்து வந்தார். அதற்கு காரணம், அவர் பிறந்து வளர்ந்த சமூக மக்கள் மானத்தை மறைக்க சிறிய ஆடை தவிர வேறேதும் அணியக் கூடாதென்று மேல்சாதிக்காரர்களால் நிர்பந்திக்கப்பட்டார்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன் எதிர்வினையாகவே ஒடுக்கும் மக்களின் ஆடையை தன்னுடைய ஆடையாக அணிந்து கலகம் செய்தார், அம்பேத்கர். இங்கேயும் ஆடையே சமூக மாற்றத்திற்கான போர்கருவியாக செயல்பட்டதை காண முடிகிறது.
தோள்சீலைப் போராட்டம் தொடங்கி அம்பேத்கர் வரை நிலப்பிரபுத்துவ மற்றும் பார்ப்பனிய வர்ணாசிரம அடக்குமுறைகளுக்கு எதிரான நீண்ட நெடிய ‘ஆடைப் போராட்டத்தை’ இந்த பெருவாரி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களால் நடைபெற்று வந்துள்ளதை வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் தான் நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்தப்பிறகு, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமத்துவமான சீருடை அணிந்திடும் நடைமுறையை அரசு கொண்டு வந்தது. இவை தான் ஆடை சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டம் என்பதை நவீன நாரிமணிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஏமன் நாட்டைச் சார்ந்த ‘தவக்குல் கார்மன்’ (Tawakkul Karman) எனும் இஸ்லாமியப் பெண்மணியின் பெயரை பிரபல டைம் மாத இதழ் 2011–ஆம் ஆண்டிற்கான (Person Of The Year) சிறந்த பெண்மணிக்கான விருதுக்கு பரிந்துரை செய்தது. அதே ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கான அவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
உலக நாடுகளின் தலைவர்கள், தலைசிறந்த விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் ஆகியோர் முன்பு இஸ்லாமிய ஹிஜாப்’பில் வந்து பரிசை பெற்றுக் கொண்டு மேடையிலிருந்து கீழிறங்கிய ‘தவக்குல் கார்மனை’ உலக ஊடகங்களின் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அதில் ஒரு நிருபர்: “நீங்கள் ஏன் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களின் அறிவாற்றலுக்கும், உயர்ந்த சிந்தனைக்கும் பொருந்துகின்றது.?” என்று தவக்குல் கார்மனை கேட்டார். அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல்,
“ஆதி மனிதன் ஆடையில்லாதவனாகவே இருந்தான். அவனின் அறிவுப் பெருகப் பெருக ஆடைகளை அணிய ஆரம்பித்தான். நான் இன்றைக்கு யார்.? என்ன உடுத்தியிருக்கின்றேன்.? என்பது என் சமூகம் எத்தனை தூரம் அறிவிலும், நாகரீகத்திலும் முன்னேறி இருக்கிறது என்பதற்கான அடையாளமே தவிர பின்னடைவுக்கானதல்ல. ஆடைக் குறைப்பே மனிதனை மீண்டும் ஆதிகாலத்திற்கே அழைத்துச் செல்லும் பின்னடைவாகும்.” என்றார். (Nobel Peace Prize winner "Tawakkul Karman," 'The mother of Yemen's revolution,' when asked about her Hijab by journalists and how it is not proportionate with her level of intellect and education, replied: “Man in early times was almost naked, and as his intellect evolved he started wearing clothes. What I am today and what I’m wearing represents the highest level of thought and civilization that man has achieved, and is not regressive. It’s the removal of clothes again that is a regression back to the ancient times.''
ஹிஜாப் (ஆடை நிர்ணயம்) குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது.?
அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்;
يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ [الأعراف:27,26]
“ஆதமுடைய மக்களே.! உங்கள் வெட்கஸ்தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். இன்னும், இறை அச்சம் எனும் ஆடையே மிகச் சிறந்தது. அவர்கள் (மக்கள்) சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.!'’
'’ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் (ஆதம், ஹவ்வா) இருவரையும் ஷைத்தான் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் சோதனைக்குள்ளாகி விடவேண்டாம். அவர்கள் வெட்கஸ்தலங்களை அவர்களுக்குக் காண்பிக்க ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் காணாத வகையில் அவனும் அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நாம் ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக ஆக்கி விட்டோம்.!’'
(திருக்குர்ஆன்- 7:26,27)
வெட்க உணர்வு மனிதனுக்கே உரிய குணமென்பதையும், அது தான் மனிதனை மிருகத்திலிருந்தும் பிரித்து தனி அந்தஸ்தைத் தருகிறது என்பதையும், மனிதனை வெட்கம் கெட்டவனாக மாற்ற சைத்தான் அயராது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையும் இந்த வசனங்கள் மூலம் புரிந்துக் கொள்ள முடியும். ஆடை மனிதனுக்கு ஒரு அத்தியாவசிய தேவை எனும்பொழுது, இஸ்லாம்-திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆண் பெண் இருவருக்குமாக ஆறு அம்சங்களில் ஆடையை வரையறை செய்கிறது.
ஆடை என்பது மனித உடலை முழுமையாக மறைத்திருக்க வேண்டும். இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு. ஆண் தொப்புளிலிருந்து முழங்கால் வரை குறைந்த பட்சம் மறைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணோ முகமும் முன்கைகளும் தவிர்த்து மற்ற பாகங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். இது தவிர உள்ள மற்ற ஐந்து அம்சங்களும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானவையே.
அணிகின்ற ஆடை இறுக்கமில்லாமலும், உடலின் வடிவத்தை வெளிகாட்டாதவாறும் இருக்க வேண்டும்.
உடலின் பாகங்கள் வெளியே தெரிகிறவாறு மெல்லிய ஆடைகளை அணியக் கூடாது.
எதிர்பாலினரை கவரும் வகையில் கவர்ச்சியான ஆடைகளை அணியக் கூடாது.
எதிர்பாலினர் அணிவது போன்ற ஆடைகளை அணியக் கூடாது. ஆண், ஆணுக்குரிய ஆடையையும், பெண், பெண்ணுக்குரிய அடையையும் தான் அணிய வேண்டும்.
மாற்று மதத்தை பிரதிபலிக்கின்ற அடையாளங்களை கொண்ட ஆடைகளை அணியக் கூடாது.
இதுகாறும் கற்புநெறியை பெண்களுக்கு மாத்திரம் வலியுறுத்தி வந்த உலக நடைமுறைக்கு மாற்றாக இஸ்லாம் இருபாலருக்கும் பொதுவில் அதனை வைக்கிறது. திருக்குர்ஆன் ஆண்களுக்குத் தான் முதலில் கற்பை போதிக்கின்றது. பிறகு தான் அதனை பெண்கள் பேண சொல்கிறது. பெண்களை காணுகிற பொழுது ஆண்கள் முதலில் பார்வைகளை தாழ்த்திக் கொண்டால், அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டு விடும் என்று இஸ்லாம் சமூக ஒழுக்கத்தை அறிவுறுத்துகிறது.
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا [النور: 30، 31]
“நபியே, விசுவாசமுள்ள ஆண்களுக்கு நீர் கூறுவீராக..’ அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் மர்மஸ்தானத்தை(கற்பை)யும் பேணிக் காத்துக் கொள்ளட்டும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை நன்கு உணர்பவன்.!” (திருக்குர்ஆன்-24:30)
என்று ஆண்களுக்கு இறைவன் முதலில் கட்டளையிட்டு விட்டுத் தான் பிறகு வரும் அடுத்த வசனத்தில் பெண்களுக்கான கற்புநெறியை போதனை செய்கிறான்.
நபியே, விசுவாசமுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக.. அவர்களும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் மர்மஸ்தானத்தை(கற்பை)யும் பேணிக் காத்துக் கொள்ளட்டும். அன்றி (தங்கள் தேகத்தில்) வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் அழகையும், அலங்காரத்தையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளட்டும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளட்டும்.!” (திருக்குர்ஆன்-24: 31)
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا } [الأحزاب: 59]
'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க, இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிகக் கிருபையுடையவன்.!” (திருக்குர்ஆன்- 33:59)
இஸ்லாத்தில் கற்பின் மாண்பை ஆண்களுக்கு போதனை செய்த பின்பு தான் பெண்களுக்கு அது பற்றிப் போதிக்கிறது. சமூகத்தில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திய போதனைகளை சற்று காண்போம். இவை இன்றைய உலகத்திற்கு எந்த அளவு தேவைப்படுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
صحيح مسلم (4/
2047)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَا، مُدْرِكٌ ذَلِكَ لَا مَحَالَةَ، فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ»
“(ஒருஆண் செய்யும்) இரு கண்களின் விபச்சாரம், அன்னிய பெண்ணைப் பார்த்தல், இரு காதுகளின் விபச்சாரம், அவள் பேசுவதை கேட்டல், நாவின் விபச்சாரம், அவளுடன் பேசுதல், கையின் விபச்சாரம், அவளைப் பிடித்தல், காலின் விபச்சாரம், (அவளைத்தேடி) நடத்தல், மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன. அல்லது பொய்யாக்குகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..!” (நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (2/ 978)
عَنْ أَبِي مَعْبَدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَقُولُ: «لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ، وَلَا تُسَافِرِ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
“உங்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன், அவளுடைய திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட உறவினர் (அவளுடைய தந்தை, சகோதரன்,மகன் போன்றோர்) இருந்தாலேயன்றி தனித்திருக்க வேண்டாம் உங்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன், அவளுடைய திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட உறவினர் இருந்தாலேயன்றி பயணிக்க வேண்டாம் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..!” (நூல்: முஸ்லிம்)
صحيح مسلم (1/ 266)
عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ»
“ஒரு ஆண் மற்றொரு ஆணின் மறைவிடத்தைப் பார்க்கவேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறைவிடத்தைப்பார்க்கவேண்டாம். ஓர் ஆண் மற்றொரு ஆணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம். ஒருபெண் மற்றோரு பெண் ணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம்.!” என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்முஸ்லிம். )
صحيح البخاري (7/ 37)
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ»
فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ:
«الحَمْوُ المَوْتُ»
“பெண்களிடம் நீங்கள் செல்வதற்கு உங்களை நான் எச்சரிக்கிறேன்.!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “கணவனின் சகோதரர் (அப்பெண்ணிடம்) செல்லலாமா.?” என்று மதீனாவாசிகளில் ஒருவர் கேட்டார். “கணவனின் சகோதரர்; மரணம் (போன்று தான்)..!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்)
صحيح مسلم (3/
1680)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»
“சில பெண்கள் ஆடைகள் அணிந்தும் நிர்வாணமாகவும், ஆண்களைச் சுண்டி இழுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்களது தலை முடி ஒட்டகத்தின் திமில் போன்று இருக்கும். (இப்படியான ஒரு கூட்டம் இனி தோன்றுவார்கள்) இவர்களை நான் பார்த்ததில்லை. இவர்கள் நரகவாதிகளாக இருப்பார்கள்'.!” என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)
ஆண்-பெண் கற்பு நெறி, பெண்ணின் பாதுகாப்பு, கட்டிக்காக்கப்பட வேண்டிய குடும்ப அமைப்பு, அதில் பேண வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் குறித்து நபிகளாரைப் போன்று விரிவாக இந்த அளவு நடைமுறை சாத்தியத்துடன் எடுத்துக் சொன்ன, வாழ்ந்தும் காட்டிய மற்றொரு சமூகச் சீர்திருத்தவாதியையோ, நாட்டுத்தலைவரையோ, ஆன்மீகவாதியையோ எங்கும் காண முடியாது.
முஸ்லிமான ஆண்-பெண் இருபாலரும் தங்களது பார்வையையும் ஆடையையும் பேணிக் கொள்வதன் மூலம், கற்பு, ஒழுக்க விழுமியங்களை வளர்த்து குடும்ப அமைப்பை உயிர் போல கட்டிக் காப்பது அவரவர் தலையாய கடமை என்பதை நபிகளாரின் பொன்மொழிகளில் எங்கும் பரந்து காணலாம். அன்னியப் பெண்ணை ஏறிட்டுப் பார்ப்பதும் தவறு, கவர்ச்சியான தோற்றத்துடன் ஒரு பெண் ஆணின் முன் தோன்றுவதும் தவறு என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
இஸ்லாமிய சட்டம் இரண்டு வழிமுறைகளில் செயல்படும். ஒன்று தனிமனித ஒழுக்கத்தை போதனைகள்,அறிவுரைகள் மூலம் புகட்டி சமூகத்தை ஆரோக்கியமானதாக வார்த்தெடுக்க முயலும். இரண்டாவதாக சமூகத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் வரம்பு மீறுபவர்களை கடுமையாக அது தண்டிக்கும். அதன்படி யாராவது பெண்களை கற்பழித்தால், கற்பழிக்க முயன்றால் அவர்களுக்கு மரணதண்டனை கண்டிப்பாக வழங்கப்படும். இதன் மூலம் பெண்களின் சுதந்திரம் இஸ்லாமிய சமூகத்தில் நிலைநாட்டப்படுகிறது.
பெண்கள் ஹிஜாப்(ஆடை நிர்ணயம்) அணிய வேண்டுமென்பதை இஸ்லாம் மட்டும் கூறவில்லை. இந்து, கிறித்துவ வேதங்களும் கூறுகின்றன.
ஹிஜாப் பற்றி இந்து மதம்..
உனக்காகப் படைத்த உன் சீமாட்டிக்குக் கூறு.! உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள்.! பார்வையை மேல் நோக்காதே.! அது உன் பாதத்தை நோக்கி இருக்கட்டும்.! பிறர் எவரும் உன் வெளித்தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்!” (ரிக்வேதம் 8:33:19)
ஹிஜாப் குறித்து கிறிஸ்துவ மதம்..
“ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ண வெளியே போயிருந்த போது தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக் கண்டான். ஒட்டகத்தில் வந்த ரெபெக்காள் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை பார்த்த போது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள்.” (ஆதியாகமம் 24:62-65)
“தூதர்களினிமித்தம் பெண்கள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்” என்று பவுல் கூறுகின்றார். (கொரிந்தியா 11:10)
For Further Readings
No comments:
Post a Comment