Translate

Monday, 17 August 2015

தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தி கூப்பாடு போடுகிற நாத்திகர்களுக்கு எதற்காக மதுவிலக்கு சட்டம்..?







பாப-புண்ணியத்தை சொல்லி, மதம் மனிதனை முடமாக்குகிறது.. நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிக்கின்ற வேதம் தேவையில்லை.. மனிதனுக்கு இருக்கின்ற பகுத்தறிவாலேயே யாவற்றையும் அறிந்து கொண்டு தவறின்றி வாழ முடியும் என்று சொல்லும் நாத்திகர்கள் எங்கே போய் விட்டார்கள் ..?


மது ஒரு கொடுந்தீமை என்றும் அதனை திறந்து விட்டால் மக்களுக்கு தீமை செய்யுமென்றும் நாத்திகரான கருணாநிதிக்கு ஏன் முன்பே தெரியவில்லை..? தற்பொழுது மட்டும் ஏன் மது விலக்கு சட்டம் கோருகிறார்..? அவருக்கு பகுத்தறிவு அன்றைக்கு வேலை செய்ய வில்லையா..? இன்றைக்கு வேலை செய்ய வில்லையா..?


இஷ்டம் போல வாழ விரும்புகிறவர்கள், தனி மனித சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய கத்துகிறவர்கள் எதற்காக இப்பொழுது மட்டும்..இதில் மட்டும்.. கட்டுப்பாடு வேண்டும் என்று கோருகிறார்கள்..?


பெண்கள் ஆபாசமாக உடை உடுத்தக் கூடாது என்று நாம் சொல்லும் பொழுது, ஆதாரமில்லாமல் கண்டதையும் எழுதுகிறவர்களை , பேசுகிறவர்களை நாம் கண்டிக்கும் பொழுது.. நாட்டில் குற்றங்களை குறைக்க கடுமையான சட்டங்கள் தேவையென்று நாம் வலியுறுத்தும் பொழுது.. தனி மனித சுதந்திரம் குறித்தும் கருத்து சுதந்திரம் குறித்தும் பாடம் நடத்துகிறவர்கள், மதுவிற்கு மட்டும் சட்டம் போட்டு தடுக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்..இந்த நாத்திகர்கள்.. ?

No comments:

Post a Comment