Translate

Sunday, 19 June 2016

ஷஹீத் பழனிபாபாவும், பீஜே அவர்களும்



கருணாநிதியின் மீது அன்றைக்கு முஸ்லிம் சமூகம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக, காயல்பட்டிணம் வந்த எம்ஜிஆரின் மீது முஸ்லிம்களில் சிலர் செருப்பு வீசினார்கள்.. அதில் மிகவும் அவமானப்பட்ட-ரோசப்பட்ட எம்ஜிஆர், காவி கபோதி ராமகோபாலன் தலைமையில் இந்து முன்னணி அமைய வழி வகுத்தார்.. தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் திமுக-கருணாநிதிக்கு பூர்ண ஆதரவை நல்கி வந்த நிலையில், முஸ்லிம்கள் மீது எழுதப்படாத அடக்குமுறைகளை எம்ஜிஆர் கட்டவிழ்த்து விட்டார்.

அந்த சூழலில் சிங்கம் போல வீறு கொண்டு எழுந்தவர் தான், தமிழக முஸ்லிம் மக்களால் மறக்க முடியாத மாமனிதர் தலைவர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்கள்.

காந்தியார் கொலைக்குப் பிறகு அடங்கி கிடந்த பார்ப்பன இந்துத்துவாவாதிகள், எண்பதுகளுக்குப் பிறகு தங்களை புதுப்பித்துக் கொள்ள.. பாபரே மஸ்ஜித் உள்ளிட்ட பிரச்சனைகளை கையிலெடுத்த நேரம். முஸ்லிம்களை எதிரிகளாக காட்டி பார்ப்பனர்கள் பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்ட துவக்கிய காலம்.

அது போன்ற நிலையில் தான், ஷஹீத். பழனிபாபா அவர்கள், எந்த அரசு தீவிரவாதத்தையும், அடக்குமுறைகளையும் ஆண்மையுடன் எதிர்கொள்ள வேண்டுமென்று சொல்லி முஸ்லிம் இளைஞர்களை தட்டியெழுப்பினார். அரசியல் ரீதியில் இந்துத்துவாவிற்கு எதிராக அன்றைக்கு செயல்பட்டு வந்த கருணாநிதியோடும், அவர் முதுகில் குத்தினப் பிறகு டாக்டர் ராமதாஸோடும் மேடைகளில் முழங்கினார்.. அந்த ராமதாஸும் பின்பு முதுகில் குத்தினார் என்பது தனி கதை.

அன்றைக்கு தனியொரு மனிதனாக-முஸ்லிமாக நம்முடைய சமுதாயத்திற்காக பாடுபட்டு.. அதற்காகவே கொல்லப்பட்ட பழனி பாபா அவர்களை கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் மௌத்தாகி போனவரை இழிவு படுத்துவதும் கொச்சைப் படுத்துவதும் நன்றியுள்ள சமுதாயத்திற்கு அழகா.? என்பதை சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பின் தொடர்ச்சியாக பீஜே அவர்களின் தலைமையில் தமுமுக தொடங்கி செயல்பட ஆரம்பித்தது.. யாராக இருந்தாலும் முஸ்லிம்கள் என்ற அளவில் யாவரையும் ஒன்றிணைத்து போராடி வந்த பழனிபாபாவின் செயல்பாடுகளுக்கு மத்தியில்.. பீஜே அவர்கள் மக்களை ஷிர்க்'கிலிருந்து தூய்மைப்படுத்தி.. இஸ்லாத்தின் அடிப்படையில் அவர்களை அணி திரட்டினார்.. பழனிபாபா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து குரல் கொடுத்து வந்த நிலையில்.. பீஜே அவர்கள் யாருடைய ஆதரவுமில்லாமல் களத்தில் நின்றார்..

பிறகு ஒரு கட்டத்தில் ராமதாஸ் பிஜேபியுடன் இணைய முயற்சி செய்த பொழுது, பழனிபாபா அவர்கள் தனியாளாக விடப்பட்டார்.. பீஜேயுடன் இனி இணைந்து செயல்படுவார் என்ற செய்திகள் வந்தன.. பழனிபாபா அவர்கள் அது தொடர்பாக பீஜே அவர்களுக்கு தூது அனுப்பியதாகவும்.. இடையில் சிலர் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால்.. அல்லாஹுவின் நாட்டம், பழனிபாபா அவர்கள் காவிக் கயவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்..

இது தான் பழனிபாபா மற்றும் பீஜே அவர்களின் கதை.

இங்கே சில சகோதரர்கள் உண்மை விளங்காமல் மாற்றி மாற்றி பீஜே அவர்களையும் பழனிபாபா அவர்களையும் திட்டுவதையும், தரம்தாழ்ந்து வசை பாடுவதையும் சகித்துக் கொள்ள முடியாமல் தான் இந்த பதிவை எழுதினேன்.

பழனிபாபா அவர்களை சந்தித்த பொழுதை..நான் இன்னும் மறக்க வில்லை.. சகோ. காமில் அவர்கள் என்னை அறிமுகம் செய்துவித்த பொழுது நாற்காலியிலிருந்து எழுந்து நின்று பழனிபாபா அவர்கள் எனது கைகளை குலுக்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.. அவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை விட.. இன்றைக்கு அவர் மீதும்.. அதற்கு பதிலடியாக சகோதரர் பீஜே அவர்கள் மீதும் சகதி வாரி எறிவது.. மிகவும் கொடூரமானது.. இதயத்திலே ஈட்டியை பாய்ச்சுவது போன்றது.


-பூமராங். 



[][][]

Saturday, 18 June 2016

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன் தேசத் தியாகியா ?




பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என்.திருமலாச்சாரியும் அங்கு சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910 இல் ‘இந்தியா இதழை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று. இந்தக் காலகட்டத்தில் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார். அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு. அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார். இவர்களை பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாக செல்லம்மாள் கூறுகிறார்.

புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911ல் வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராக குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு.அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர். “புதுச்சேரி கிருஷ்ணப்பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதை பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. “இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தார்” என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார்.

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது.பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது:

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்”

என்ற கடிதம் அவனது சட்டைப்பையில் இருந்தது.

ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சிநாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும்.

- வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் இரண்டாம் அத்தியாயம் பக்கம் -13-29

நன்றி : "கீற்று" இணையதளம்


[][][]

வாஞ்சிநாதன் தியாகியா?




7.6.1911 அன்று வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற பொது அவனுக்கே தெரியாது, நமக்கு இப்படி தியாகி என்ற பட்டம் கிடைக்கும் என்று.! 


அப்போது சனாதன தர்மம் என்று ஓன்று இருந்தது. (இன்றும் இருக்கிறது). அதாவது நால்வகை வர்ணம். மக்களை அவர்கள் பிறப்பின் மூலம் வகைப் படுத்துவது. ஆங்கில துரையான ஆஷ் இதை கடுமையாகவே எதிர்த்து வந்தார். மக்களுக்கு சம உரிமையை அளிக்க பல மாற்றங்களை செய்தவர். அப்போதெல்லாம் குற்றாலத்தில் கடவுள் சிலையும், பார்ப்பனர்களுமே குளிக்க சட்டம் இருந்தது. அதை உடைத்தெறிந்து அனைத்து பிரிவினரையும் அருவியில் குளிக்க வைத்தவர். இது உயர் சாதியினருக்கு சற்றே வெறுப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒரு நிகழ்வு அவர்களை வெறுப்பின் உச்சத்திற்கே இட்டு சென்றது. அது ..


அது ஒரு மழைக்கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த "தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது. ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான். ''வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து.!" என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று. ஆஷ் கேட்கிறான், "மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள் திருடும் இனமா.?" என்றான். "இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான் வண்டிக்காரன். வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான். "அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தொணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான். அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும் வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள். சுற்றிலும் நான்கைந்து பெண்களும், தூரத்தில் சில ஆண்களும். ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், "என்ன ஆனது.?" என்று. பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று. அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், "பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே.?" என்று. அதற்கு அவர்களில் ஒருவன் சொன்னான், "அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும். வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும். ஆனால், அது இயலாத காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம்.!" ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், "இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான், ஆஷ். 


அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டாள்  என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி. வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிரவாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து. 


அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது நண்பர்களே, மணியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து. 


ஆஷ் துரையின் இறுதி கடிதம் 



``ஆங்கிலச் சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத `சனாதன தருமத்தை காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வோர் இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருவாகிய ஆங்கிலேயரை துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சித்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராஸிகள் பிரத்தியக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை - 

-இப்படிக்கு ஆர். வாஞ்சி அய்யர். 


இக்கடிதம் வாஞ்சி நாதன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த போது அவருடைய சட்டைப் பையில் இருந்ததாக அறியப்படுகிறது.


- சுடர் தென்னரசு கரூர் (`தினமணி 26.5.2008 பக்கம் 6)



ஆக தீண்டாமையை எதிர்த்த ஆஷ் துறைக்கு நாங்கள் கொடுக்கிறோம் தியாகி பட்டம். 


நன்றி :- கீற்று வலைப்பக்கம்


[][][]

Wednesday, 15 June 2016

பலதார மணம் இஸ்லாத்தில் மட்டும் உள்ளதா..?



கேள்வி: 

இஸ்லாமிய பெண்கள் இஸ்லாத்தை பின்பற்றினாலும் அவர்கள் நபியின் எல்லா செயல்களையும் ஆதரிப்பவர்களாக இருப்பதில்லை... வேண்டுமானால் சவால் விடுகின்றேன்... என் கணவன் விபச்சாரம் போன்ற தவறான வழியில் செல்லாமல் இருக்க அவருக்கு 4 திருமணங்கள் தேவைப்பட்டால் தாராளமாக செய்து கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறோ, ஒழுக்கக்கேடோ இல்லவே இல்லை, என்று கூறும் ஒரே ஒரு பெண்ணை உங்களால் காட்ட முடியுமா? 



நமது பதில்: 

இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் அத்தனை பெண்களும் நபிகளாரின் பலதார மணத்தை ஆதரித்தவர்கள் தான்.. 


வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியருடன் வாழ்ந்த முருகன் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் தமிழர்களால் வணங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். [நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட] 


ஏக பத்தினி விரதம் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபது ஆயிரம் மனைவியர் இருந்ததாக பார்ப்பனிய இந்துப் புராணங்கள் கூறுகின்றன.


கிருஷ்ணனுக்கு பாமா, ருக்மணி எனும் இரு மனைவியர் இருந்ததாகவும் புராணங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவரும் நமது நாட்டில் இந்துக்களால் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறார். 


எத்தனையோ மன்னர்களும், மற்றவர்களும் இந்த மண்ணில் பல மனைவியரை மணந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 


அது போல் கிறித்தவர்களும், யூதர்களும் பெரிதும் போற்றும் தாவீது ராஜா, ஆப்ரகாம், யாக்கோபு மற்றும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பல மனைவியருடன் வாழ்ந்ததாக பைபிளிலும், யூத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூத கிறித்தவ சமுதாயத்தினர் அவர்களை வெறுக்கவில்லை. 


இஸ்லாம் தான் பலதார மணத்தை முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தது போல் பிரச்சாரம் செய்யப் படுவது அடிப்படையில்லாதது என்பதை இதன் மூலம் அறியலாம். 


தி.மு.க தலைவர் கருணாநிதி முஸ்லிமாக இல்லாதிருந்தும் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துகிறார். இது சட்டப்படி குற்றம் என்றால் பல தடவை அவர் தமிழகத்தின் முதல்வராக ஆனது எப்படி?


இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கா.காளிமுத்து பல தடவை அமைச்சராகவும், சபாநாயகராகவும் ஆனது எப்படி?


பலதாரமணம் புரிந்து அறந்தாங்கி திருநாவுக்கரசு பலதடவை மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனது எப்படி? 


பெண்ணியத்திற்காக வரிந்து வரிந்து எழுதுகிற எழுத்தாளர் பாலகுமாரன் இரண்டு மனைவிமார்களை ஏககாலத்தில் கொண்டிருப்பவர் தானே..? அதிலும் ஒரே படுக்கையை இருவருடனும் சமமாக பகிர்ந்துக் கொள்வதாக சொல்லியிருப்பவர் தானே.?


இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்.


இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதிமன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.


மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது ரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு ஆஒத 1965 நஈ 1566) 



சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.
(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திரகோஷ் AIR 1971 sc 1153)


ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். 
(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848) 


காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105) 


இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. இதன் மூலம் பலதார மணம் செய்வது  தான் தவறு, திருமண பந்தத்திற்கு வெளியே வைப்பாட்டி வைத்துக் கொள்வதோ, விபச்சாரம் செய்வதோ சட்டப்படி தவறில்லை என்றாகிறது. அதுவும் போக, யார் அதிக பலதார மணங்களை செய்கிறார்கள் என்று பார்த்தால் 
யாருக்கு பலதார மணத்திற்கு அனுமதியுள்ளதோ அவர்களை விட 
யாருக்கு பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் தான் அதிக அளவில் பலதார மணம் புரிந்துள்ளனர்.


1951 முதல் 1960 வரை பலதார மணம் புரிந்தவர்கள் பற்றிய புள்ளி விபரம் 
தயாரிக்கப்பட்டது. அந்தப் புள்ளி விபரப்படி இந்துக்கள் 5.06 சதவிகிதமும் 
முஸ்லிம்கள் 4.31 சதவிகிதமும் பழங்குடியினர் 17.98 சதவிகிதமும் பலதாரமணம் புரிந்துள்ளனர். 


அதாவது 1951 முதல் 1960 வரை நூறு முஸ்லிம்களில் நான்கு பேர் பலதாரமணம் செய்துள்ளனர். ஆனால் நூறு இந்துக்களில் ஐந்து பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர். நூறு பழங்குடியினரில் 18 பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர் என்று இந்தப் புள்ளி விபரம் கூறுகிறது. சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற தலைப்பில் 1974-ல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 


பழங்குடியினரும் இந்துக்கள் தான். அவர்களையும் இந்துக்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால் பலதார மணம் புரிந்த இந்துக்கள் பலதார மணம் புரிந்த முஸ்லிம்களை விட மிக அதிக சதவிகிதமாக இருப்பார்கள்.


இந்நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.?  
[][][]

Tuesday, 14 June 2016

யார் இந்த PJ ? -Rasmin MISc





பி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜெய்னுல் ஆபிதீன் தென்னிந்தியாவின் தொண்டி நகரில் பிறந்தவர்.


தமிழகத்தின் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.

அரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர். அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.

அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜெய்னுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.

கடந்த 2005ம் வருடம் இலங்கை அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்துக்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காக திரண்டார்கள்.

கொழும்பு, புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிட்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

பி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்?
---------------------------------------------------

பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதே நேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்கும் நிலை பி.ஜெயின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.

அப்படி இவர் என்ன தான் செய்தார்?

அனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?

ஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.

கடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.

கப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள். அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது. அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரைமட்டமாக்கும் நிலை உருவாகியது.

• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா?
• இறைவனுக்கு உருவம் உண்டா?
• இணை கற்பிப்பவர் யார்?
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா?
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – துத்துக்குடி

போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.

குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன.

• சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம்

• ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா ? சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு

போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள், ஷீயாக்கள், அஹ்லுல் குர்ஆன் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.

அரபியின் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன.

முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது.

• மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா?

போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது.

• பைபிள் இறைவேதமா?
• குர்ஆன் இறைவேதமே!
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம்.

போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும்.

கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா? என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ.

• இறைவன்இருக்கின்றானா?
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா?

போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக்களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.

இப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ.

அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயணத்தினால், பாதிப்பு அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இவருடைய அனைத்து விவாதங்களையும் ஆன்லைன் பி.ஜெ டாட் காம் என்ற தளத்தில் அனைவரும் பார்க்க முடியும்.

எழுத்துப் பணியில் ஜெய்னுலாப்தீன்
--------------------------------------------------

தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

• புரட்சி மின்னல்,

• அல்-ஜன்னத்,

• அல்-முபீன்,

• அந்-நஜாத்,

• ஏகத்துவம்,

• தீன்குலப் பெண்மணி

ஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.

“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜெய்னுலாப்தீன் அவர்கள். இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.

• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.

• accusations-and-answers

• அர்த்தமுள்ள இஸ்லாம்

• மாமனிதர் நபிகள் நாயகம்

• PROPHET MUHAMMAD THE MAN SUPREME

• அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்

• வருமுன் உரைத்த இஸ்லாம்

• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

• Does Islam snatch the Rights of Women?

• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

• வேதம் ஓதும் சாத்தான்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும்.

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா? என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும்.

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.

• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.

• இது தான் பைபிள்.

• இதுதான் பைபிள் ஆங்கிலம்.

• இயேசு இறை மகனா?

• Is jesus the son of god

• பைபிளில் நபிகள் நாயகம்.

• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)

• கப்ஸா நிலைக்குமா?

போன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார்.

ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா?” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா?” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார்.

இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

• பேய் பிசாசு உண்டா?

• இஸ்லாமியக் கொள்கை.

• இறைவனிடம் கையேந்துங்கள்.

• யாகுத்பா ஓர் ஆய்வு

• ஜின்களும் ஷைத்தான்களும்

• சுப்ஹான மவ்லித்

• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

• Was Allah’s Apostle Affected by Black Magic ?

• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

• தர்கா வழிபாடு

• திருமறையின் தோற்றுவாய்

• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

• கொள்கை விளக்கம்

• இறைவனைக் காண முடியுமா

• கியாமத் நாளின் அடையாளங்கள்

• தராவீஹ் ஓர் ஆய்வு

• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா

• குர்ஆன் மட்டும் போதுமா

• பிறை ஓர் விளக்கம்

• நபித்தோழர்களும் நமது நிலையும்

• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

• தொப்பி ஓர் ஆய்வு

• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது)

போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள் 
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்

• தொழுகை சட்டங்கள்.

• நோன்பு

• ஜகாத் ஓர் ஆய்வு

• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)

• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)

• நபிவழியில் நம் ஹஜ்

•குர்பானியின் சட்டங்கள்

• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

• ஜனாஸாவின் சட்டங்கள்

• நேர்ச்சையும் சத்தியமும்

• ஜனாஸா தொழுகை

• விலக்கப்பட்ட உணவுகள்

• சந்திக்கும் வேளையில்

• when-we-meet

• துஆக்களின் தொகுப்பு

• dua-book

• இஸ்லாமியத் திருமணம்

• islamic-marriage

மேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.

இந்த ரமழானில் தீய குணங்களும் தீர்க்கும் வழிகளும் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இவர் உரையாற்றி வந்தார். இடையில் ஏற்பட்ட உடல் நிலை ஆரோக்கிய குறைவு காரணமாக அந்த உரையை ஜமாஅத்தின் மற்ற பிரச்சாரகர்கள் தொடர்கிறார்கள். சகோ. பி.ஜெ அவர்கள் உடல் நிலை சரியாகி இன்னும் அதிகமான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என இந்த ரமழான் மாதத்தில் பிரார்த்திப்போமாக!


[][][]

மனோவேகமும்-செயல் வேகமும்





நாம் மிகுந்தப் பசியோடும் தாகத்தோடும் இருக்கும் பொழுது ஒரு சட்டி சோற்றையும் ஒரு பானை தண்ணீரையும் உண்ண, பருக ஆவேசம் உண்டாகும்.

ஆனால்.. உண்ண அமரும் பொழுது ஒரு தட்டு உணவுக்கு மேல் உள்ளே செல்லாது.. இரண்டு மூன்று குவளை தண்ணீருக்கு மேல் பருக முடியாது.

அது தான் மனிதனின் மனோவேகத்திற்கும்.. உடலின் இயலாமைக்கும் உள்ள வேறுபாடு.

-பூமராங் 

மகாநதி - பிரபஞ்சன்



என்னமோ தெரியல.. வாழ்க்கை வரலாறுகளை படித்துக் கொண்டிருந்த எனக்கு நாவல்கள் மீது திடீர் ஆசை வந்து விட்டது..

நூலகம் போய் தேடினதில் இரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டது.. ஒன்று பாலகுமாரனின் 'கனவு கண்டேன் தோழி.. இன்னொன்று எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் பிரபஞ்சனின் 'மகாநதி'


நூலகத்தில் இரண்டு நூல்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.. [அதிலும் அந்த கண்ணாடி போட்ட பொம்பளை ரொம்ப மோசம்..!]

இதுவா.. அதுவா என்று மனது பெண்டுலம் ஆடிக் கொண்டிருந்தது.. இறுதியில் பிரபஞ்சன் தான் ஜெயித்தார்..

'கனவு கண்டேன் தோழி'யை நூலக செல்பிலேயே ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டு.. வீட்டுக்கு வந்து புத்தகத்தை புரட்டுகிறேன்..

பிரபஞ்சனின் வார்த்தைகள் மகாநதியாக ஓடுகிறது..

"வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கி பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா.?

நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலை நடுங்க, மேனிபுளகமுற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோசத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்..? "

மீதி வாசித்தப் பிறகு..!


[][][] 

நாகூரும் நானும். -பூமராங்





நான் முதன்முதல் சவூதி செல்ல விசா வந்த பொழுது, எனது தாயார் என்னையழைத்து,


'' நீ வெளிநாடு செல்கிறாய்.. நாகூர் அவுலியாவின் துவா பரக்கத் பெற்று தான் பயணம் செல்ல வேண்டும்.. அப்படித் தான் உங்கத்தாவும் ஆரம்பத்தில் சிங்கப்பூர் சென்ற பொழுது நாகூர் தர்காவில் வியாழன் இரவு தங்கி பாத்திஹா ஓதி விட்டு சென்றார்கள்.. அதே போல நீயும் போய் தங்கி விட்டு வா..!" என்று எனக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்..


நானும் அம்மாப் பேச்சை தட்டாமல், பஸ் ஏறி நாகூரில் இறங்கி.. தர்காவை விசாரித்து அங்கு சென்றேன்.. இதெல்லாம் தான் இஸ்லாமென்று நினைத்திருந்த காலமது.


நான் தர்காவினுள் நுழைந்ததும் நுழையாததுமாக அங்கிருந்த சேவிங் செய்த, தாடி வைத்த முல்லாக்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் 'பாத்திஹா' ஓதிக் கொள்ளுமாறு என்னை போட்டு இழுத்தார்கள்..


நான் ஒன்றும் புரியாமல்..பயத்தில் அவர்களிடமிருந்து என்னை உருவிக்கொண்டு உள்ளறைக்கு சென்றேன்.. அங்கே ஒருவர் பச்சை தலைப்பாகை, நீண்ட ஜிப்பா, ஆட்டுக்கு இருப்பது போன்ற தாடி, கையில் நீண்ட மயிலிறகு தோகை சகிதமாக.. ஏதோ ஒரு பையன் பரிச்சையில் பாஸாக 'பாத்திஹா' ஓதி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.. நான் ஒரு ஓரத்தில் நின்று நான் ஏற்கனவே கற்று வைத்திருந்த பாத்திஹாவை ஓதி விட்டு இரா தங்குவதற்காக வெளியே வந்தேன்.


அங்கே மேலும் எனக்கு அதிர்ச்சி.. ஆண்கள்-பெண்களெல்லாம் ரொம்ப சகஜமாக ஒன்றோடு ஒன்றாக கிடந்தார்கள்..


என்னை பாத்திஹா ஓத கையைப் பிடித்து இழுத்து கலவரப்படுத்தியதும், உள்ளே ஒரு முல்லா அவ்லியாவுக்கு இடைத்தரகராக நின்று கொண்டு புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்ததும் எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.. அதோடு அங்கு நிலவிய சூழலும் பிடிக்க வில்லை.. நான் உடன் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்து விட்டேன்.


'' இரா தாங்காமல் ஏன் திரும்பி வந்தாய்..?'' என்ற எனது தாயாரின் கேள்விக்கு மார்க்கரீதியாக பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை.. 'எனக்கு பிடிக்க வில்லை' என்று மட்டும் சொன்னேன்.


ஆனால்.. சில காலம் ஓடி.. பீஜே என்றொருவர்.. இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கிறார் என்று கேள்வி பட்டு.. வேண்டா வெறுப்பாக அவரது பேச்சை கேட்டேன்..


அல்ஹம்துலில்லாஹ்.. என்னுடைய குழப்பங்களுகெல்லாம் தெளிவு பிறந்தது.. தூய்மையான இஸ்லாம் எனது இயல்புக்கு முரண்படாமல் இருப்பதை உணர்ந்தும் மிகவும் அகமகிழ்ந்தேன்..


எல்லா புகழும் அல்லாஹுவிற்கே..

எழுதுகோலால் எழுத கற்றுக்கொடுத்தது யார்.?






மனிதன் ஒரு பிரத்தியேக படைப்பு. நம்முடைய எண்ணங்களை பரிமாறிக் கொள்கிற பேசும் திறன் எப்படி மனிதனுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள நுண்ணறிவோ.. அதே போல எழுதுகோல் மூலமாக பரிமாறிக் கொள்வதும் ஒரு நுண்ணறிவு. இது மனிதனுக்கு மாத்திரமானது. இதனை வழங்கியவன், நமக்கு காணும்திறனை, செவிப்புலனை வழங்கிய இறைவன். அது தான் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, வீட்டை கொத்தனார் தானே கட்டினான்.? ஏன் நீங்கள் கட்டிய வீடு என்கிறீர்கள்..? உங்கள் குழந்தையை உங்கள் மனைவி தானே மிகுந்த சிரமத்திற்கிடையே பெற்றெடுக்கிறார். ஆண்களாகிய நீங்கள் ஏன் நான் பெற்ற குழந்தை என்கிறீர்கள்..?

உங்கள் சாந்திமிஸ்ஸும், தமிழ்வாத்தியாரும் மனிதனல்லாத ஜீவராசிகளுக்கு எழுத்தறிவு பயிற்றுவிக்க முடியுமா..?


-பூமராங் 


[][][]

Thursday, 9 June 2016

மனிதன் எங்கே.?




ஒரு தத்துவஞானி பட்டப்பகலில் ஒரு அரிக்கன் விளக்கை ஏற்றிக் கொண்டு கடைத்தெருவில் எதையோ, யாரையோ தேடுவது போல சென்றுக்கொண்டிருந்தார்.

மக்களுக்கு பயங்கர ஆச்சரியம். அந்த ஞானியை பைத்தியமேன்றோ, முட்டாளென்றோ அழைக்க எவருக்கும் துணிவு வரவில்லை. அதிலொருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. அந்தப் பெரியவரை பார்த்து.. “என்ன தேடுகிறீர்கள்..?” என்று கேட்டான், கிண்டலாக. அதற்கவர், ‘’நான் மனிதனை தேடிக் கொண்டிருக்கிறேன்..! என்று சொன்னார்.  அது கேட்டு அங்கே இருந்த மக்களெல்லாம் அதிர்ந்தார்கள்.

அந்தப் பெரியவர் என்ன சொல்ல வருகிறார்..? அவரைச் சுற்றி கூடியவர்களெல்லாம் மனிதர்களில்லையா..? 

ஆடை அணிந்திருப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லிவிட முடியுமா..? இரண்டுக் கால்களில் செங்குத்தாக நடப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? ஏதாவதொரு மத அடையாளங்களுடன் சுற்றித் திரிபவனை எல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? கடவுளுமில்லை.. பாப-புண்ணியங்களும் இல்லையென்று சொல்பவனெல்லாம் மனிதனென்று சொல்லி விட முடியுமா..? 

கொலைகாரன், காமுகன், திருடன், நயவஞ்சகன், அயோக்கியன், இவர்களெல்லாம் தோற்றத்தில் மிருகம் மாதிரியா இருக்கிறார்கள்..? 

மனிதனை ஏன் எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை..? 

அதிலுள்ள சிக்கலே.. எல்லாப் பயல்களும் மனித ரூபத்தில் திரிவதால் தான்.. 

இதில் ஆத்திகனென்ன.. நாத்திகனென்ன..


[][][]

Monday, 6 June 2016

நோன்பு - கவிக்கோ அப்துல் ரஹ்மான்




அருளின் தேவதை
ஆண்டுக்கொரு முறை
கால வீதியில் காலெடுத்து
வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக !

அவள்தான் ரமழான் !

அவள் புன்னகையில்
ஆயிரம் பூர்ணிமைகள் ! கண்களிலே
கருணைச் சுடர்கள் !

அவள்
நான்கு வேதங்களை
ஈன்றளித்த புனிதத் தாய் !

பாவக் கறைகளை
அவள் பரிவோடு
துடைக்கின்றாள் !

நரகக் கூண்டுகளில்
அடைபட்ட பறவைகளை
விடுதலை செய்கின்றாள் !
பிறைச் சுடர் கொண்டு
அக அகல்களில் எல்லாம்
ஆன்மீக வெளிச்சம்
ஏற்றி வைக்கின்றாள் !

பசியென்ற அமுதம்
பரிமாறிப் பூமியையே
சொர்க்கமாய் ஆக்குகிறாள் !

பணத்தைப்
பகிர்ந்து கொள்ள
ஏழை வரி !
பசியைப் பகிர்ந்து கொள்ள
உண்ணா நோன்பு !
எதுவுமே தேவையற்ற
இறைவன்
நோன்பை மட்டும்
தனக்கென்று கேட்கின்றான் !
தருவதற்கு கொடுத்து
வைக்க வேண்டாமா ?

�

அடடா !
எத்தகைய பெருமை !
இறைவனே நம்முன்
இரக்கின்ற ஏழை !

கொடை வள்ளல் நாமெல்லாம் !
வேலைக்கே கூலியுண்டு !
ஓய்வுக்கு யார் தருவார் ?
ஆனால்-வயிற்றின்
இந்த ஓய்வுக்கு
வல்லோன் இறைவன்
தன்னையே சம்பளமாய்த்
தந்து விடுகின்றான் !

உபவாசம் இருப்போரின்
வாய் வாசம் இறைவனுக்கு
கஸ்தூரி வாசம் !
இதுதான் அவன்
ஆலயத்தின்
நறுமணத் தூபம் !

இல்லாமல் பசிக்கின்ற
ஏழையரின் துயருணர
இருப்பவனைப்
பசிக்க வைக்கும் இணையற்ற
தத்துவமே நோன்பு !அங்க ரதத்தை
அங்கிங்கே அலை கழிக்கும்
ஐந்து குதிரைகளை
அடக்கும் கடிவாளமிது !

மனிதன்ஆசைகளின்
எடுபிடியாய் ஆடாமல்
அவைகளைத் தன்  
எவலராய் மாற்றும்
அதிகார வலிமையிது !

உதிர வீதிகளில்
உலா வரும் சாத்தானும்
சிந்தை நடுங்கும்
சிகப்பு விளக்கு இது !

சொர்க்க வாசல்களைத்
திறக்கின்ற சாவியிது !

நரக வாசல்களையோ
அடைத்து விடும் பூட்டும் இது !

ஆன்மாவுக்கு
இது கூட்டுப் புழு பருவம் !

ஞான மலர் தேடி
தேனெடுக்க உதவுகின்ற
வண்ணச் சிறகுகள்
வளர்வது இதிலே தான் !

பருகாமல் உண்ணாமல்
பட்டினி கிடந்து விட்டால்
நோன்பாகி விடாது !

ஐம்பொறியும் உறுதியுடன்
அனுஷ்டிக்கும் விரதமிது !

புறம்பேசல் என்னும்
இறந்த சகோதரனின்
இறைச்சி உண்ணும்
அநாகரீகம் நடத்தாமல்
இருப்பதே நாவின் நோன்பு !

அழுகிய வார்த்தைகளை
அருந்தாமல் இருப்பதே
செவியின் நோன்பு !

ஆபாசம் கண்டால்
அருவெருப்பதே
கண்ணின் நோன்பு !

ஆசைகள் பரிமாறும்
அறுசுவை விருந்தை
மறுப்பதே மனத்தின் நோன்பு !

இந்த உலகத்தின்
இன்பங்கள் என்ன அந்தக்
கதிர் நிலவைக்
கொண்டு வந்து
கைகளிலே கொடுத்தாலும்
சொர்க்கத்தின் எல்லா சுகங்களையும்
கொண்டு வந்து காலடியில்
வைத்தாலும்  இறைவா !
உன்அன்பின் முன்
இவையெல்லாம்  தூசு என்று
எட்டி உதைக்கின்ற
ஏற்றத்தைப் பெற்று விட்டால்
அது தான்ஆன்மாவின் நோன்பு !

இந்தப் பக்குவம் எய்தி விட்டால்
பின்  உறக்கமும்
வணக்கமாகி விடும் !

சுவாசமே தஸ்பீஹு
ஆகி விடும் !

பிரார்த்தனை
பிறகு தேவை இல்லை -தனியாக !
ஏனென்றால்-நாமே
பிரார்த்திக்கப்படும்
பொருளாய் ஆகிவிடுகிறோம் !


[][][]

பித்தன் -கவிக்கோ அப்துல் ரஹ்மான்


பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்…

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.

சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

[][][]

Sunday, 29 May 2016

மதம் மாறினால் மரண தண்டனையா?





இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது சட்டமா...? இது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன..?ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக,



''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர் (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)

இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை. ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா... கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா... அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன. 

உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..? மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன? இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும். மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியல்ல. ஹதீஸ்களில் வரும் வாசகங்களை மட்டும் கருத்தில் கொண்டு எந்த சட்டமும் வகுக்க முடியாது. மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இந்த மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும். மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும், அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும். உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணியவில்லை. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.

وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاء فَلْيُؤْمِن وَمَن شَاء فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا


(நபியே!) நீர் கூறுவீராக "இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அல் குர்ஆன் 18:29)

இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..

ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்தவர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய சட்டமாக இருக்க முடியும்?

إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ

எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள். (அல் குர்ஆன் 3:90)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில், இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.

إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ


எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். 
(அல் குர்ஆன் 3:91)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான். ஈமான் கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.." என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை விளங்கலாம்.


இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற "ஆழமான ஆய்வற்ற கருத்தால்" இஸ்லாம் குறித்து பலர் (குறிப்பாக மாற்று மதத்தவர்கள்) தவறான நம்பிக்கையை கொண்டு விடுகிறார்கள். சிந்தனை ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்களை வென்றெடுக்க வந்த ஒரு மார்க்கத்தில், "இஸ்லாத்தை விட்டு வெளியேறினால கொல்லப்பட வேண்டும்" போன்ற தவறான ஆளுமைச் சட்டங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அளவிலான உரிமைகளில் ஒன்று இஸ்லாத்தில் கடைசி வரை நீடிப்பது சம்பந்தப்பட்டதாகும். அறிவார்ந்த முறையில் இஸ்லாத்தை விளங்கி ஏற்பதுதான் இஸ்லாம் மக்களுக்கு முன் வைக்கும் அறிவுரையாகும். விளங்கி ஏற்றப்பின் அதிலிருந்து வெளியேறினால் அது இறைவனையும் இறைவனின் மார்க்கத்தையும் கேலி செய்வதாகி விடுவதால் இதன் தண்டனையை மதம் மாறியவர்கள் மரணத்திற்கு பிறகு நிரந்தரமாக சுவைப்பார்கள். மாறாக "மதம் மாறியதற்காக" அவர்களுக்கு தண்டனை வழங்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை. நாம் முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அடுத்த வசனங்களையும் படியுங்கள்.

إِنَّ الَّذِينَ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّمْ يَكُنِ اللّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلاً


எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)

இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்......... இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். 

*நம்பிக்கைக் கொள்கிறார்
*பிறகு மறுக்கிறார்
*மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
*அதையும் மறுத்து வெளியேறுகிறார்

பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது. 'கொல்லப்பட வேண்டும்" என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.

كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ


அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
(அல் குர்ஆன் 3:86)


இந்த வசனத்தையும் ஊன்றி கவனிப்போம். ஈமான் கொண்டு நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் அதை தெளிவாக இறைவன் சொல்ல வேண்டிய இடம் இது. ஆனால் கொல்லப்படுவதைப் பற்றி சொல்லாமல் அவர்கள் நேர்வழிக்கு அப்பாற்பட்டவர்கள், இறைவன் அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான் என்று எச்சரிக்கிறான். அதாவது இஸ்லாத்தை ஏற்று பிறகு வெளியேறினால் நீ உயிரோடு இருக்கலாம் உனக்கு வாழ்நாள் அவகாசம் அளிக்கபட்டாலும் அடுத்து நீ நேர்வழிப் பெறும் வாய்ப்பு இல்லை என்பதை இந்த வசனம் கூட்டிக் காட்டுகின்றது.

இந்த மார்க்கம் மனிதர்கள் மீது திணிக்கப்படுவதற்காக அருளப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள இன்னும் ஆதாரங்களைப் பார்த்து விட்டு நாம் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள "கொல்லப்பட வேண்டும்" என்ற ஹதீஸின் விளக்கம் என்னவென்பதை காண்போம்.


இஸ்லாத்தை ஏற்று பின்னர் அதிலிருந்து விலகியவர்களை கொல்ல வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை சொல்லி வருகிறோம். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்துமே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தை மறுக்கின்றது.

அடுத்த வசனம்.

لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ


(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது (அல்குர்ஆன் 2:256)

மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படையை விளக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரித்தறிவிக்கப்பட்டு தெளிவாகி விட்டதால் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமுமில்லை என்பது இந்த வசனம் முன் வைக்கும் அறிவார்ந்த வாதம்.

இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவரை "நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் கொல்லப்படுவாய்" என்று மிரட்டுவது அவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் வைக்கும் காரியமாகும். பிறரது மிரட்டலுக்கு பயந்து, கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இஸ்லாத்தில் இருப்பவர்களால் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் எப்படிப்பின்பற்ற முடியும். 

உயிருக்கு பயந்து நிர்பந்தமான நிலையில் இஸ்லாத்தின் உள்ளே இருக்கும் ஒருவரிடம் இஸ்லாம் எந்த மாற்றத்தையும் செய்து விடப் போவதில்லை. நேர்வழியையும், வழிகேட்டையும் பிரித்தறிவித்து விட்டு இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை என்று இறைவன் குறிப்பிட்டு விட்டதால் அவன் மார்க்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை.மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்ற சட்டமே ஒருவர் வெளியேறினால் வெளியேறிக் கொள்ளலாம் என்ற அனுமதியை முன் வைக்கின்றது. அவரை கொல்லும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் - நயவஞ்சகர்கள் - என்று இஸ்லாம் இவர்களை அடையாளப்படுத்துகின்றது. இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரைக் கூட நபி(ஸல்) அவர்கள் "கொன்றார்கள்" என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அப்படியானால்,

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய ஹதீஸின் விளக்கம் தான் என்ன..?மதம் மாறினால் மரணதண்டனை பொது சட்டமா? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 4

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போதுவான ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது "இது ஒரு முரட்டு மார்க்கம்" என்ற பழிசொல்லிலிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுகின்றது.உபதேசம், பிரச்சாரம் செய்வதில் கூட நளினத்தை, இலகுவை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு மார்க்கத்தில் மனிதனின் சிந்தனை சுதந்திரமும், வாழ்வியல் சுதந்திரமும் வலுக்காட்டாயமாக அகற்றப்பட்டு இருக்குமா என்பதை "கொல்லப்பட வேண்டும்" என்ற கருத்துள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து எந்த ஒரு வசனத்தையும் முன் வைக்க முடியாதவர்கள் - கொல்லப்படுவதை மறுக்கும் வசனங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் - ஹதீஸ்களின் பக்கம் திரும்பி "ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கின்றது" என்று தங்கள் வாதத்தை வைக்கத் துவங்கி விடுகின்றார்கள்.ஹதீஸ்களிலிருந்து ஒரு வாதத்தை நாம் எடுத்து வைக்குமுன் ஒன்றை மிக ஆழமாக நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், குர்ஆனை விளக்குவதற்கும், குர்ஆனாக வாழ்வதற்கும் தான் அனுப்பப்பட்டார்களே தவிர குர்ஆன் வேறு, தான் வேறு என்று வாழ்ந்துக் காட்டுவதற்காக அல்ல. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பு "நபி(ஸல்) குர்ஆன் விளக்கவுரையாகவே வாழ்ந்துள்ளார்கள்" என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்லி விடுகின்றது. எனவே குர்ஆனுக்கு முரண் பட்டு ஒரு கருத்தை நபி(ஸல்) சொல்லி இருப்பார்கள் என்று நாம் கற்பனைக் கூட செய்யக் கூடாது.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை நபி(ஸல்) பொதுவான கருத்தாக வைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்த கருத்தை குர்ஆன் அடியோடு மறுக்கின்றது.அப்படியானால் கொல்லப்பட வேண்டும் என்ற ஹதீஸின் நிலவரம் என்ன..?


மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 5

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொது சட்டமல்ல. இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இஸ்லாதத்தை விட்டு வெளியேறியதற்காக எந்த இஸ்லாமிய அரசாங்கமும் மரண தண்டனை விதிக்காது - விதிக்கக் கூடாது.நபி(ஸல்) காலத்தில் இத்தகைய எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. அப்படியானால் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டவர்களைக் கொல்லுங்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதே என்ற சந்தேகம் இப்போது மி்ச்சமிருக்கின்றது.

‏ابن عباس ‏ ‏فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏من 
بدل دينه فاقتلوه

[ஆன்லைனில் இந்த ஹதீஸை பார்க்க]

''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் - புகாரி)

‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث ‏ ‏الثيب ‏ ‏الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.


3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன்(அப்தல்லாஹ் - முஸ்லிம்)

(ஆன்லைனில் இந்த ஹதீஸின் மூலம்)

‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان ‏ ‏محصن ‏ ‏يرجم ‏ ‏أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ‏ ‏ينفى من الأرض

''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)


மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.

புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.

//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல. வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும். இதை தெளிவாக்கும் விதமாகவே "அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்" என்று நபி(ஸல்) குறிப்பிடுகிறார்கள்.

நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன.

மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி) என்று நபி(ஸல்) கூறி இருக்க மாட்டார்கள். நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான்.நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

"நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது. நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو


قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا ‏ ‏بويع ‏ ‏لخليفتين فاقتلوا الآخر منهما
ஹதீஸ்களை கவனமாக ஆராயும் போதும், அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதும் இந்த முடிவுக்கே நம்மால் வர முடிகின்றது.

குழப்பம் ஏற்படுத்துதல் என்று ஒன்று நடக்கவில்லை என்றால் அவரும் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவர்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கான குர்ஆன் வசனங்களை நாம் முந்தைய தொடர்களில் பார்த்தோம்.

குழப்பம் கொலையைவிட கொடியது. 

குழப்பம் கொலையை விட பெரியது என்று குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ள போது குழப்பம் செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை விளங்கலாம். குழப்பம் ஏற்படுத்தும் தனி மனிதனின் உயிரை விட நாட்டு மக்களின் நிம்மதியும், அமைதியும் முக்கியம் என்பதால், இஸ்லாமிய அரசுகள் இதை செயல்படுத்தும்.அல்லாஹ் எல்லாவற்றையும் நுணுககமாக அறிபவன் என்பதை நம்புகிறோம்.


நன்றி :
http://www.thuuyavali.com/2012/12/blog-post_11.html



[][][]