Translate

Friday, 4 March 2016

ஜிப்ரால்டர்-தாரிக் இப்ன் ஜியாத்






ஜிப்ரால்டர் இந்த பெயரை எங்கேனும் கேள்விப்பட்ட ஞாபகம் உள்ளதா?.
ஸ்பெயின் ஸியூட்டா மாகாண கவனராகக் கடமையாற்றிய ஜூலியன் அவர் தனது மகள் புளோரிந்தாவை கல்வி பயில்வதற்காக தலைநகரான தொலதோவில் உள்ள அரச கல்வி நிலையத்துக்கு நிலையத்துக்கு அனுப்பி வைத்தார் . அங்கு ஆட்சி செய்த ஸ்பானிய மன்னன் ரொட்ரிக், ஒரு நாள் அவளது கற்பைச் சூறையாடினான். 
.
தனது குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய மன்னனே அறநெறி தவறி ஒழுக்க ஈனமாக‌ நடந்து தனக்கு அவமானத்தைத் தேடித் தந்த ரோட்ரிகை எதிர்த்து போர் புரிய ,வடக்கு ஆப்ரிக்காவின் மொரோக்கோவின் இஸ்லாமிய ஆட்சியின் கவர்னரான மூஸாவிற்கு அழைப்பு விடுத்தார். 
.
மூஸா தனது போர் வீரர் தாரிக் இப்ன் ஜியாத் என்பவர் தலைமையில் கி பி 711 ஆம் ஆண்டு சுமார் 7000 வீரர்களுடன் கடல் வழியாக ஸ்பெயினை வந்தடைந்தார். தாரிக்கின் படை வருவதை அறிந்த மன்னர் ரோட்ரிக் கிட்டத்தட்ட 35000 ஆயிரம் படை வீரர்களுடன் காத்துக் கொண்டிருந்தார். 
.
ஐரோப்பாவின் ஸ்பெயினை வந்தடைந்ததும் தங்களை விட 5 மடங்கு பெரிய படை என்ற போதிலும் தாரிக் தாங்கள் வந்த அணைத்து கப்பல்களையும் தீயிட்டு கொளுத்த உத்தரவிட்டார். 
,
ஒன்று ஸ்பெயின் வீரர்களை வெல்ல வேண்டும் அல்லது போரில் மரணமடைய வேண்டும் இந்த இரண்டு வாய்ப்புகள் தான்.தாரிக் படையை வழிநடத்தினார். ரொட்ரிக்கின் பெரும் படையைக் கண்டு முஸ்லிம் வீரர்கள் அதிர்ந்துவிடாதிருப்பதற்காக தளபதி தாரிக் வீராவச்மூட்டும் வகையிலான உரையொன்றை நிகழ்த்தினார்.
.
"குமுறும் கடலின் பொங்கி எழும் அலைகளை நிகர்த்த எண்ணிலடங்கா எதிரிகள் உங்கள் முன்னே உள்ளனர். பின்புறமோ பெருங்க்கடல் உள்ளது. தப்பியோட வழியில்லை. ..அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதைத் தவிர்த்து உண்பதற்கு வேறு உணவுமில்லை. நீங்கள் இருக்கும் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்! உலகில் சிதறியுள்ள அநாதைகள் போன்று நீங்களும் இவ்விடத்தில் அரவணைப்போர் எவரும் இல்லாதோராய் இருக்கின்றீர்கள். அச்சத்தைத் தவிருங்கள்! எதிரியோடு போரிடுங்கள். வெற்றி உங்களுடையதே என்று நம்புங்கள். எதிரிகள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள். ஆதலால் எமது படையை எதிர்த்து அவர்களால் வெற்றி கொள்ள முடியாது. ரொட்ரிக் இங்கு வந்திருப்பதே அவனது மாளிகைகளையும் நாட்டையும் வளங்களையும் உங்கள் கையில் ஒப்படைப்பதற்கே. மரணத்துக்கு அஞ்சாது போராடி அவ்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
.
உங்களைத் தூண்டிவிட்டு நான் ஒதுங்கிவிடமாட்டேன். எனது பொறுப்பு உங்களைவிட அதிகமானது. எனது ஆவலோ ரொட்ரிக்கை எனது கையால் கொலை செய்வதுதான். ஆதலால் நான் முன்னே செல்வேன். நீங்கள் என்னைத் தொடருங்கள். நீங்கள் அல்லாஹ்வின் தீனை நிலை நாட்ட முயற்சித்தால் அல்லாஹ்வின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். அவ்வருள் உங்கள் முயற்சியில்தான் தங்கியுள்ளது. 
.

உங்கள் முயற்சிக்கான கூலியை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தருவான். இம்முயற்சியில் உங்களுக்கு முன்மாதிரியாக நான் போராடுவேன். நீங்கள் என்னைத் தொடருங்கள். நான் ரொட்ரிக்கை இலக்கு வைப்பேன். அவனை நான் கொன்றால் வெற்றி எமதே. 
.
அதற்கு முன் நான் கொலை செய்யப்பட்டாலோ அதனைப்பற்றிக் கவலைப்படாது போரைத் தொடருங்கள். ரொட்ரிக்கைக் கொலை செய்தபின் நான் கொலை செய்யப்பட்டால் தீரமும் துணிவும் அனுபவமும் உள்ள ஒருவரைத் தள்பதியாகத் தெரிவு செய்து போரைத் தொடருங்கள், இவ்வறிவுறுத்தல்களை நீங்கள் பின்பற்றினால் வெற்றி நமதே."

8 நாட்கள் நடந்த கடுமையான யுத்தத்தின் முடிவில் தாரிக்கின் படை வீரர்கள் குறைவாக இருப்பினும் ஸ்பெயின் வீரர்களை வெற்றி கொண்டு ஐரோப்பாவின் ஸ்பெயினில் முதல் இஸ்லாமிய ஆட்சியை நிறுவியது.
.
தாரிக்கின் படை ஐரோப்பாவின் பல பகுதிகளை வெற்றி கொண்டனர். வெற்றி பெற்றும் கூட ஸ்பெயினில் உள்ள கிரிச்துவர்களுக்கோ அல்லது யூதர்களுக்கோ அவர்களின் மதங்களை பின்பற்ற எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. 
.
மாறாக ஐரோப்பா இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட அந்நாளில் ஸ்பெயின் மட்டும் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கியது. ஸ்பெயினின் கடல் மற்றும் மலைபகுதி ஜிப்ரர்ல்டர் என்று அழைக்கப்படுகிறது இதன் அர்த்தம் தாரிக்கின் மலை என்று பொருள் ..
.
THANKS TO :Nsa Khadir

[][][]

No comments:

Post a Comment