Translate

Thursday, 31 March 2016

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடுகள்....!!



முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடுகள்....!!

முஸ்லிம்களின் சகிப்புத்தன்மை பற்றி மதவெறி பிடித்த இந்துத்துவாக்கள் பாடம் நடத்த தேவையில்லை.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடுகளாக திகழும் நாடுகளை பற்றி இப்பதிவில் காண்போம்...

துருக்கி 96% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது.


இந்தோனேஷியா 90% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 10% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது.


வங்கதேசம் 89% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 11% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 


அசர்பைஜான் 93% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 7% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

கஜகஸ்தான் 70% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 30% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

அல்பேனிய 58% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 42% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

லெபனான் 54%இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட அரபு நாடு, ஆனால் இன்றும் 46% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

தஜிகிஸ்தான் 98%இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 2% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

துர்க்மெனிஸ்தான் 89% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 11% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

கிரிகிஸ்தான் 86% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 14% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

உஸ்பெக்கிஸ்தான் 96% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

கொசோவோ 95% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு, ஆனால் இன்றும் 5% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

டிஜபௌடி/Djibouti 96% இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது. 

ஆதாரம் இதோ : 

இந்த நாடுகள் அனைத்தும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் மதசார்பற்ற ஜனநாயக நாடுகளாக அறிவித்து அதன்படி செயல்பட்டு வருகிறது.

முஸ்லிம்களின் சகிப்புத்தன்மை பற்றி மதவெறி பிடித்த இந்துத்துவாக்கள் பாடம் நடத்த தேவையில்லை

Religion in Turkey - Wikipedia, the free encyclopedia


[][][]

Tuesday, 29 March 2016

கண்ணியமிகு காயிதே மில்லத் வரலாற்றுச் சுருக்கம்..!







காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் ஜனஸாத் தொழுகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். 

முஸ்லிம் தலைவர்களுடன் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இடம்பெற்றுள்ளனர்.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் :

காயிதே மில்லத் அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.

1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.

1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.

1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.

மறைவு :

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடல் புண் நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

1972, ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் காலமானார். அவரது உடல் அன்று காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. 

திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் உட்படப் பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. 

ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 

திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மசூதியில் இசுமாயில் சாகிபின் உடல், இசுலாமிய மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது.

[][][]

Sunday, 27 March 2016

மக்கள் நல கூட்டணியும் குருட்டுப் பூனைகளும்







மக்கள் நல கூட்டணியை குருட்டுப் பூனையை போல பிராண்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

1] தே.மு.தி.க வுடன் இணைந்தாலும், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தாலும், தனிநபர், தனிக்கட்சி ஆட்சி என்பதை உடைத்தெறியும் கூட்டணி மந்திரிசபை எனும் உயர்ந்த ஜனநாயக தத்துவம் தமிழகத்திற்கு ஏற்றம் தரும் நல்ல கொள்கையாக நீங்கள் பார்க்க வில்லையா..?

2] திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக எனும் அரசியல் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர, இப்போதைக்கு கிடைக்கின்ற வாய்ப்பை தானே எவரும் பயன்படுத்த முடியும்.? அந்த வகையில் தே.மு.தி.க உடன் ம.ந கூட்டணி இணைந்தது எவ்வாறு தவறாகும்.?

3] தே.மு.தி.க, திமுக வுடன் இணைந்து கலைஞர் தலைமையில் ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பொம்மையாட்சி நடைபெறுவதையும், பாஜக வுடன் இணைந்து தமிழகத்தில் மதவாத சக்திகள் தலை தூக்குவதையும், தே.மு.தி.கவை தன் பக்கம் இழுத்ததன் மூலம் தடுத்த ம.ந. கூட்டணியின் ராஜதந்திரம் பாராட்டுக்குரியதில்லையா.?

4] மக்களின் ஓட்டை பொறுக்கி ஜெயித்துவிட்டு, ஒட்டு போட்ட மக்களை சந்திக்காமல் முதலமைச்சர் நாற்காலியில் திமிருடன் ஒரு சர்வாதிகாரியைப் போல அமர்ந்திருக்கிற ஜெயலலிதா..

சிலை வைப்பது, மணிமண்டபம் கட்டுவது, மறைந்த தலைவர்களின் பெயர்களை சூட்டுவது அதன் மூலம் சாதி,மத ஒட்டு வங்கிகளை உருவாக்கி வைத்துக் கொண்டு, நாட்டை குடும்பத்தினர் கொள்ளையடிக்க அனுமதிப்பது என்பது போன்ற கயமைத்தனம் கொண்ட திமுக..கருணாநிதி..

வன்னியர் ஒட்டு அன்னியருக்கில்லை என்று முழங்கி விட்டு அன்னியர் ஓட்டை வன்னியருக்கு தேடும் பாமக..

காந்தியின் தேசத்தை கோட்சேயின் தேசமாக மாற்றத் துடிக்கும் பாஜக..

சிங்களவனுக்கு ராஜபக்சே என்றால் தமிழனுக்கு சீமான் என்பது போல பாசிசத்தின் பாதையில் இனத்தூய்மை பேசும் நாம் தமிழர் கட்சி..

இத்தகையோர் மத்தியில் தான்.. ம.ந. கூட்டணி-தே.மு.தி.க கூட்டணி இந்தளவுக்காவது நல்ல கொள்கைகளுடன் எழுந்துள்ளது.. இதனை தூற்றுவது நியாயமா..?


பூமராங் 

28.3.2016


[][][]

சிவ சேனாவுக்காக நிதி திரட்டினேன் - டேவிட் ஹெட்லி







நேற்று [
25-03-2016]
 அமெரிக்காவில் கைதாகி சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லியோடு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக மும்பையில் விசாரணை நடைபெற்றது.


அப்துல் வஹாப் கான் என்ற வழக்கறிஞர் இவனை குறுக்கு விசாரணை செய்தார். அதில் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளான் டேவிட் ஹெட்லி.
'அமெரிக்காவில் சிவ சேனைக்காக நிதி திரட்டினேன். அந்நிகழ்வுக்கு பால தாக்கரேயை கவுரவ விருந்தினராக அழைக்கத் திட்டமிட்டிருந்தேன். இதற்காக சிவசேனாவின் ராஜாராம் ரெகேயை தொடர்பு கொண்டேன். தாக்கரே உடல் சுகவீனமாக இருப்பதாகவும். அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்றும் அவருக்கு பதிலாக அவரது மகன் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த நிகழ்வு குறிப்பிட்ட நாளில் நடைபெறவில்லை.எஃப்பிஐ நான் சொல்லாததை எல்லாம் நான் சொன்னதாக செய்தி வெளியிடுகிறது. இஸ்ரத் ஜஹான் லஸ்கர் தொய்பாவோடு தொடர்பு எடையவர் என்று நான் சொல்லவில்லை. அவருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பத்து பேரில் எவரையும் நான் நேரில் சந்தித்ததில்லை. அஜ்மல் கசாபை போட்டோவில் பார்த்திருக்கிறேன்'
என்று பல திடுக்கிடும் உண்மைகளை தொடர்ந்து கூறி வருகிறான். டேவிட் ஹெட்லிக்கும் சிவ சேனாவுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்காக இவன் ஏன் பொருளாதாரம் திரட்ட வேண்டும்?
இன்னும் தொடர்ந்து விசாரணை நடந்தால் ஹேமந்த் கர்கரேயை கொல்வதற்காக சிவ சேனா, பிஜேபி, நம் உளவுத் துறையில் உள்ள இந்துத்வாக்கள், பாகிஸ்தானில் உள்ள இந்துத்வாக்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய சதி வேலை என்ற உண்மை வெளி வரும்.

பாரத மாதாவின் புத்திரர்கள் செய்த செயலைப் பாருங்கள். எவனெல்லாம் 'வந்தே மாதரம்' என்றும் 'பாரத் மாதாகீ ஜே' என்றும் அடிக்கடி கூறி வருகிறானோ அவனெல்லாம் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவனாக இருக்கிறான்.
தகவல் உதவி
என்டிடிவி
25-03-2016

MUMBAI: Pakistani-American terrorist David Coleman Headley today claimed in a Mumbai court that he had "arranged" a fund-raising programme for the Shiv Sena in the US and had planned to invite the then party supremo Bal Thackeray to the event.
The 55-year-old, who has turned approver in the 26/11 attacks case, said this during cross-examination on the third day by Abdul Wahab Khan, the lawyer of Abu Jundal -- an alleged key plotter of the 2008 Mumbai siege, via a video-link from the US.



[][][]

Sunday, 20 March 2016

பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது !!! திருக்குர்ஆன் ஒரு ஆச்சரியம்






விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று (17:37) சொல்கின்றது.

இவ்வசனம் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.


இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.

மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான். பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும்.

அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.

உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத் திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை. உலகின் மிக உயரமான இமயமலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டாலே காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை. மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது.

இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது. இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறை வேதம் என்பது நிரூபணமாகின்றது.


[][][]

தமிழில் கலந்துள்ள அரபு மற்றும் பாரசீக மொழி சொற்கள். [ஆட்சியியல்]






தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் ஆட்சியியல் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

ஆட்சியியல்
வ.எண்தமிழில் பயன்படுத்தும் சொல்இடம் பெற்றிருந்த மொழி
1அசல்அரபு
2அத்துஅரபு
3அமுல்அரபு
4அகேர்அரபு
5அனாமத்துஅரபு
6அயன்அரபு
7ஆசாமிஅரபு
8ஆசில்அரபு
9இனாம்அரபு
10இருசால்அரபு
11உசூர்அரபு
12ஐவேசுஅரபு
13கஜானாஅரபு
14கவுல்அரபு
15காயம்அரபு
16சிபாயத்துஅரபு
17கிஸ்துஅரபு
18கைதுஅரபு
19ஷரத்துஅரபு
20தணிக்கைஅரபு
21தபசில்அரபு
22தஸ்திஅரபு
23தாக்கீதுஅரபு
24தாக்கல்அரபு
25தாசில்அரபு
26பசலிஅரபு
27பாக்கிஅரபு
28நகதுஅரபு
29மசராஅரபு
30மராமத்துஅரபு
31மாசூல்அரபு
32மாமூல்அரபு
33மிராசுஅரபு
34முகாம்அரபு
35ரயத்துஅரபு
36ரொக்கம்அரபு
37வசூல்அரபு
38வஜாஅரபு
39வாரிசுஅரபு
40வாய்தாஅரபு
41ஜப்திஅரபு
42ஜமாபந்திஅரபு
43பராசீகம்அரபு
44ஜாரிஅரபு
45ஜாமீன்அரபு
46ஜாஸ்திஅரபு
47ஷராஅரபு
48அமீனாஅரபு
49ஆஜர்அரபு
50இஸ்தியார்அரபு
51கைதிஅரபு
52தகராறுஅரபு
53தகதாஅரபு
54தரப்புஅரபு
55தாணாஅரபு
56பைசல்அரபு
57நாசர்அரபு
58முனிசிப்புஅரபு
59ரத்துஅரபு
60ராசிஅரபு
61ருஜூஅரபு
62ரோக்காஅரபு
63வக்காலத்துஅரபு
64வக்கீல்அரபு
65இலாக்காஅரபு
66கஸ்பாஅரபு
67சன்னதுஅரபு
68தாக்கீதுஅரபு
69தாலுக்காஅரபு
70பிதிஷிஅரபு
71பிர்க்காஅரபு
72மசோதாஅரபு
73மாகாணம்அரபு
74மாசர்அரபு
75மாப்புஅரபு
76மாஜிஅரபு
77ரஜாஅரபு
78அம்பாரிஅரபு
79லாயம்அரபு
80கசரத்துஅரபு
81அம்பாரம்பாரசீகம்
82அர்ஜிபாரசீகம்
83ஆப்காரிபாரசீகம்
84ஜமாசுபாரசீகம்
85கம்மிபாரசீகம்
86கார்வார்பாரசீகம்
87கானூகோபாரசீகம்
88குமாஸ்தாபாரசீகம்
89கொத்துவால்பாரசீகம்
90கோஸ்பாராபாரசீகம்
91சரகம்பாரசீகம்
92சராசரிபாரசீகம்
93சிரஸ்தார்பாரசீகம்
94தர்க்காஸ்துபாரசீகம்
95பந்தோபஸ்துபாரசீகம்
96பாவத்துபாரசீகம்
97பினாமிபாரசீகம்
98நவுக்கர்பாரசீகம்
99ரசீதுபாரசீகம்
100வாபீசுபாரசீகம்
101ஜமீன்பாரசீகம்
102டபேதார்பாரசீகம்
103டவாலிபாரசீகம்
104தஸ்தாவேஜூபாரசீகம்
105பிராதுபாரசீகம்
106சர்க்கார்பாரசீகம்
107சிப்பந்திபாரசீகம்
108தர்பார்பாரசீகம்
109திவான்பாரசீகம்
110மொகர்பாரசீகம்
111யதாஸ்துபாரசீகம்
112ரோந்து, லோந்துபாரசீகம்
113சிப்பாய்பாரசீகம்
114துப்பாக்கிபாரசீகம்
115லகான்பாரசீகம்
116பாராபாரசீகம்
117பீரங்கிபாரசீகம்
118சர்தார்பாரசீகம்
119சவாரிபாரசீகம்
120சவுக்குபாரசீகம்
121சுபேதார்பாரசீகம்
122சேணம்பாரசீகம்

Wednesday, 16 March 2016

வானம்-வளி மண்டலம் பற்றி குர்ஆன்





வளி மண்டலம் பற்றி குர்ஆன்


அரபியில் வானம் என்பதற்கு ஸமாஃ என்ற பதம் உபயோகிக்கப்பட்டாலும் அந்த வார்த்தைக்கு வானம் என்று மட்டும் பொருளல்ல. நமக்கு மேலே உள்ள எல்லாவற்றிற்கும் ஸமாஃ என்று சொல்லப்படும். இதன்படி இந்த வார்த்தை விசாலமான கருத்தைக் கொண்டுள்ளது. எனவே தான் குர்ஆனில் வீட்டு முகட்டிற்கும் ஸமாஃ என்ற சொல் வந்துள்ளது. வீட்டின் முகடும் நமக்கு மேலே தான் உள்ளது.

நமது பூமியைச் சுற்றி வளிமண்டலம் என்ற போர்வை போர்த்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அதுவும் நமக்கு மேலே இருப்பதால் ஸமாஃ என்ற வார்த்தையை வளிமண்டலம் என்ற பொருளிலும் உபயோகிக்கலாம். 

''மேலும் நாம் வானத்தை (வளிமண்டலத்தை) பாதுகாக்கப்பட்ட முகடாக அமைத்தோம்.'' (21:32) குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள இந்த  வசனத்தில் வரும் ஸமாஃ என்ற வார்த்தைக்கு வளிமண்டலம் என்ற பொருளும் பொருந்தும்.

வளிமண்டலம்:

பூமியைச் சுற்றி காற்று மற்றும் வாயுக்கள் நிரம்பிய போர்வை தான் வளிமண்டலம். இது பல அடுக்குகளைக் கொண்டது. ஏறத்தாழ 1000 கி. மீ. வரை இந்த முகடு - பாதுகாப்பு மண்டலம் பரவியிருக்கிறது. அதற்கு மேலும் அடர்த்தி குறைந்த வாயுக்கள் பரவியுள்ளன. அல்லாஹ் இப்படியொரு வளிமண்டலத்தை ஏன் படைத்திருக்கிறான்? இதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன, என்பது மட்டுமல்ல, எத்தனையோ ஆபத்துகளை விட்டும் இந்த மண்டலம் மூலம் பாதுகாப்பு பெறுகிறோம், என்பதைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

இன்ஜினியர்கள் வீட்டுக்கு கான்கிரீட் முகடு வேண்டுமானால் போடலாம். ஆனால் வளிமண்டலத்தைப் போல பிரமாண்டமான முகட்டை உலகின் அனைத்து பொறியாளர்கள் சேர்ந்தாலும் உண்டாக்கிட முடியாது. கண்ணுக்குத் தெரியாத இந்த வளிமண்டலம் இல்லையென்றால் பூமியில் எதுவும் உயிர் வாழ முடியாது.

வெளிச்சம் எதனால்?:

பகலின் பளிச்சிடும் வெளிச்சத்திற்கும் இரவின் இருட்டுக்கும் என்ன காரணம் என்றால் சூரியன் என்று கூறிவிடுவோம். ஆனால் இது கண்டிப்பாக சரியான - முழுமையான பதிலாக இருக்கமுடியாது.

பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் சூரியக் கதிர்கள் பட்டு சிதறுவதால் தான் இந்த வெளிச்சத்தைப் பார்க்கிறோம். இல்லையென்றால், ஏறத்தாழ 200 கி.மீ.க்கு அப்பால் நாம் சென்று பார்த்தால் சூரியன் இருக்கும். ஆனால், வானம் கருப்பாகத்தான்  தெரியும். சூரியன் இருக்கும்போதே நட்சத்திரங்களும் தெரியும். ஆனால் நம்முடைய வானம் நாம் பார்க்கும் பொழுது நீல நிறமாக இருக்கிறது. அது ஏன்? சூரிய ஒளி பூமியை அடையும் முன்பு வளிமண்டலத்திலுள்ள காற்றில் புகுந்து சிதறடிக்கப் படுகிறது. சூரிய ஒளியை சிதறடிக்கும் போது ஒளியிலுள்ள பிற நிறங்களை விட நீல நிறமே நமக்கு அதிகமாகத் தெரிகிறது.

குர்ஆன் கூறும் இருட்டு:

20 நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் யாவும்,  அறிவியல் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்தில் இறக்கியருளப்பட்ட குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. ''வானத்தில் வாயிலொன்றை அவர்களுக்கு திறந்துவிட்டு அதன் வாயிலாக அவர்கள் மேலேறத் தொடங்கினாலும், எங்கள் பார்வைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (எதையும் பார்க்க முடியவில்லை) இல்லை. நாங்கள் சூனியம் செய்யப்பட்டிருக்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள்.'' திருக்குர்ஆன்  (15: 14, 15)

இந்த வசனத்தில், வானத்தில் ஏற்றிவிட்டாலும் கூட இறைநிராகரிப்பாளர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் வளிமண்டலத்திற்கு வெளியே போனால் வானம் கருப்பாக இருக்கும், என்பதும் சூசமாக விளக்கப்பட்டுள்ளது. எனவே தான் வளிமண்டலத்திற்கு வெளியே இருட்டு இருப்பதற்கு இவ்வசனத்தில் ஆதாரம் இருப்பதாக தஃப்ஸீருல் முனீரில் கூறப்பட்டுள்ளது.

சந்திரனில்:

பூமியைப்போல் சந்திரனுக்கு வளிமண்டலம் ஏதும் கிடையாது. மனிதன் அங்கு சென்ற போது திருமறை சொன்ன உண்மை கண்கூடாக தெரிந்தது. பூமியில் சூரிய உதயத்திற்கு முன்னரும் அஸ்தமனத்திற்குப் பின்னரும் பொழுது புலருவதையோ பொழுது சாய்வதையோ காண்பதைப் போல நிலவில் காண முடியவில்லை.

சந்திரனில் திடீரென இரவும், திடீரென பகலும் தோன்றுகின்றன. மரத்தின் நிழலில் நாம் நின்றால், அவரின் மீது சூரிய ஒளி விழாது. எனினும் நிற்கும் நபரைத் தெளிவாகப் பார்க்க முடியும் அளவுக்கு வெளிச்சம் இருக்கும். ஆனால் சந்திரனில் ஒரு மலைக்குப் பின்னாலுள்ள நிழலில் எந்த வெளிச்சமும் இருக்காது. அந்த இடம் இரவின் இருட்டைப் போல் கடும் இருட்டாக இருக்கும்.

வளிமண்டலத்தின் மூலம் அல்லாஹ் இவ்வுலகை பேராபத்திலிருந்து பாதுகாக்கிறான். 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை ஓசோன் வாயு பரவியுள்ளது. இதன் மூலம் ஆபத்தான கதிர்வீச்சுகள் உடலைத் தாக்குவதை விட்டும் பாதுகாக்கப்படுகிறது. 50 கி. மீ. முதல் 80 கி. மீ. வரை உள்ள வளிமண்டல அடுக்கு விண்கற்கள் பூமியின் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கிறது. இல்லையானால் எப்பொழுதும் பூமியில் விண்கற்கள் விழுந்து கொண்டே இருக்கும். பூமிக்கடியில் சுரங்கம் அமைத்துத் தான் வாழ வேண்டும். சந்திரனில் இவ்விரண்டு ஆபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற முடியாது.

இரத்தம் வராத துவாரங்கள்:

மனித உடலில் பல துவாரங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த துவாரம் வழியாகவும் இரத்தம் வெளியாவதில்லை. மூன்றரை கோடி ரோம துவாரங்களும் எட்டு கோடி வியர்வை துவாரங்களும் நம் உடலில் இருக்கின்றன.

சிறிய ஊசி குத்தினாலும் இரத்தம் வெளியாகும். ஆனால் கோடிக்கணக்கான துவாரங்களிலிருந்து இரத்தம் வெளியேறாமல் அல்லாஹ் பாதுகாக்கிறானென்றால் இந்த வளிமண்டலம் மூலம் தான். பாதுகாப்பு சாதனமின்றி வளிமண்டலத்தைத் தாண்டி வெளியே சென்று விட்டால் வியர்வை துவாரம் முதற்கொண்டு அனைத்து துவாரங்களிலிருந்தும் இரத்தம் கொட்ட ஆரம்பித்துவிடும். சந்திரனுக்குப் போய் பார்த்த பிறகு தான் மனிதனுக்கு வளிமண்டலத்தின் அருமை தெரிந்தது.

நன்றி: நிசாம் யூசுபி


[][][]

Sunday, 13 March 2016

திப்பு சுல்தான் கதை.!






ஹைதர் அலிக்கும், ஃபக்ர் உன்னிஸாவுக்கும் 1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் மகனாகப் பிறந்தவரே திப்புசுல்தான்!


போரும், கருணையும்

ஹைதர் அலி, அனைத்து மதத்தவர்களையும் அன்போடும், மரியாதையோடும் சமமாகவும் மதிக்கக்கூடியவர். அதனாலேயே, தனது மகன் திப்புவையும் இறைப்பணிக்காக அர்ப்பணித்தார்.

ஹைதர் அலியை, பெத்தனூர் ராஜா சண்டைக்கு இழுத்தார். பாலம் என்ற நகரில் போர் நடைபெற்றது. போர் நடப்பதை நேரில் களத்தில் நின்று பார்ப்பதற்காகத் தன் மகன் திப்புசுல்தானை, ஹைதர் அலி அழைத்துச் சென்றார். போர் உக்கிரமாக நடைபெற்றது. பெத்தனூர் ராஜா தோல்வியடைந்தார். பெத்தனூர் ராஜாவின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் திப்புவிடம் வந்து கலங்கிய கண்களுடன் அடைக்கலம் கோரி மன்றாடினர். அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, மரியாதையுடன் நடத்தினார். கப்பம் செலுத்தச் சொல்லாமல், கனிந்த உள்ளத்துடன் அவர்களை விடுதலை செய்தார்.! அதைக் கண்ட பெத்தனூர் ராஜா திப்புவின் முன்னிலையில் கண்கலங்கினார்; தலை தாழ்த்தி மண்டியிட்டார்.

திப்புவின் வீரம்

திண்டுக்கல் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்தார் ஹைதர் அலி.! அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். பொருளாதாரத் தடைகளை நீக்கினார். ‘மக்களுக்காகவே எனது அரசாங்கம் உள்ளது. மக்களின் வாழ்க்கையை மேன்மைப் படுத்தவே அது செயல்படும்; எனது அரசாங்கத்தில் மக்கள் சுதந்திரமாக வாழலாம்! ‘ என்று அறிவித்தார்.

திப்பு தனது தந்தை ஹைதர் அலியிடம் போர்க்கலையையும், போர்ப் பயிற்சிகளையும், போர் முறைகளையும் கற்றுக் கொண்டார்.

மைசூர் மீது ஆங்கிலேயர்களுக்குத் தீராத தாகம் எப்போதும் உண்டு. ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிஜாம், மராத்தியர்கள் மூவரும் இணைந்து 1767 ஆம் ஆண்டு ரகசியமாக மைசூரைத் தாக்கிட நாள் குறித்தனர். செய்தி அறிந்து, நிஜாமையும், மராத்தியரையும் திப்பு சந்தித்தார். எச்சரிக்கை செய்தார். அந்நிய ஆங்கிலேயர்களுடன் ஒன்று சேர்ந்து அவர்கள் போரிடக் கூடாது என்பதை எடுத்துரைத்து தடுத்துவிட்டார்.

சென்னைக்கு அருகில், ஆங்கிலேயர்களுடன் நடந்த போர், மிகக் கடுமையாக மாறிக் கொண்டிருந்தது. ஆகவே, திப்புவின் படை சென்னை நோக்கி விரைந்தது. அங்கே, ஹைதர் அலி திருவண்ணாமலை அருகில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டுக் கொண்டு இருந்தார். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்ற தகவல் அறிந்து, சென்னையிலிருந்து வெற்றி முழக்கோடு திருவண்ணாமலைக்குத் திரும்பி வந்து சேர்ந்தார் திப்பு! கர்னல் டோட், மேஜர் கிரால்ட் ஆகியோர் தலைமையிலான வெள்ளைப் படைகளைத் தோற்கடித்து தூள் துளாக்கினார்!

திருப்பத்தூர் கோட்டை, வாணியம்பாடி கோட்டை இரண்டையும் கைப்பற்றினார்கள். கர்னல் ஸ்மித், காலின் வாட்ஸன் ஆகியோர்களின் தலைமையிலான படைகளையும் திப்பு சிதறடித்தார். மங்களுரை முற்றுகையிட்டு, அங்கிருந்த ஆங்கிலேயப் படைகளையும் விரட்டியடித்தார். 1766 ஆம் ஆண்டு முதல் 1769 வரை போர் நீடித்தது. இதையே, 'முதல் மைசூர் போர் ' என்று பிற்காலத்தில் வரலாறு பதிவு செய்தது.

போர்ப்படைக்கு புலிச்சின்னம்

திப்பு சுல்தானின் போர்ப்படைக்கு புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியே வடிவமைக்கப்பட்டது. எல்லாம் போர்களிலும் வீரர்கள் புலியாய்ப் பாய்ந்து சென்று வென்றனர்! ஹைதரும், திப்புவும் இணைந்து போர் தொடுத்து வென்றனர்!

காஞ்சிபுரம் அருகில் பேரம்பாக்கத்தில் செப்டம்பர் 1780ல் போர் நடத்தி, கேப்டன் ரூம்லே தலைமையிலான ஆங்கிலேயப் படையை வென்றனர். கர்னல் வில்லியம் பெய்லி சிறைபிடிக்கப்பட்டு, ஹைதர் அலியின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தப்பட்டார். அப்போது அவர், "உங்கள் மகன் எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக எங்களை நாசப்படுத்திவிட்டார்" என்று புலம்பினார்.! ஆங்கிலேயர்களுக்கு திப்பு சுல்தான் சிம்மசொப்பனமாகவே விளங்கினார்.

ஆங்கிலேயர்களைத் தாக்கிய ராக்கெட் ஆயுதம்

திப்பு ராக்கெட்டுகளைப் போரில் பயன்படுத்தினார். தனது முக்கியத் தளபதிகளுக்கு ராக்கெட் இயக்கம் குறித்த அடிப்படை ஆவணப் பிரதி ஒன்றையும் கொடுத்திருந்தார். ஃபத்துல் முஜாஹதின் என்பது அவர் பெயர். அந்த ராக்கெட்டுகள் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குகளை குறிபார்த்து அழிக்கும் வல்லமை பெற்றவை. முதன்முதலாக ராக்கெட் இந்தியாவில் (உலகில்) பயன்படுத்தப்பட்டது. ‘நாஸா’வில் திப்புவின் ராக்கெட் தான் ஓவியமாக தீட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹைதர் அலி 1782 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். 'பெரிய புலி மறைந்துவிட்டது' என்று ஆங்கிலேயர்கள் எக்காளமிட்டனர். ஆனால், திப்பு சுல்தான் பதவியேற்றார். பெரிய புலியின் இடத்தில் சிறிய புலி!

அனந்தபூரை ஆண்டு கொண்டிருந்தவர் நாராயணராவ். ஆங்கிலேயர்கள் அனந்த்பூர் கோட்டையைச் சுற்றி வளைத்து நாராயணராவைக் கைது செய்தனர்.

ஆனால், திப்பு சுல்தான் 1783, ஏப்ரல் 28 ஆம் தேதி அனந்த்பூரை நோக்கிப் படையெடுத்து ஆங்கிலேயரை விரட்டியடித்தார்; அனந்த்பூரை விடுவித்தார்!

மங்களுர் கோட்டையில் நடைபெற்ற போரிலும் ஆங்கிலேயக் கமாண்டர் காம்ப்பெல் படையைத் திப்பு சுல்தான் தோற்கடித்தார். மங்களுர் ஒப்பந்தம் 1784 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் மைசூர் ராஜ்ஜியமும், கிழக்கிந்திய கம்பெனியும் கையெழுத்திட்டன.

திப்புவின் நூலகம்

போர்க்களத்தில் வீரம் விளைந்தாலும், ஈர இதயத்தைப் பூக்கச் செய்யும் ஆற்றல் புத்தகங்களுக்கே உண்டு.! திப்பு தனது திருமணப் பரிசாக தனக்கு ஒரு நூலகம் வேண்டும் என்றே தந்தையிடம் கேட்டார். அதில், உலகின் அனைத்துப் பிறமொழி நூல்களையும் மொழிபெயர்த்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அரசியல், விவசாயம், மதம் - தத்துவம் - ராக்கெட் தொழில்நுட்பம் - என்று அறிவு வெளிச்சம் பரவச் செய்தார். சுருக்கமாகச் சொல்வதானால், சூரியனுக்கு கீழே உள்ள அத்துணை பொருள்கள் பற்றிய நூல்களும் திப்புவின் ஆசைக்கேற்ப அவரது நூலகத்தில் இடம்பெற்றன.! குறுகிய காலத்தில் மிகப் பெரிய நூலகமாக அது வளர்ச்சி பெற்றது. நூருல் அமீன் என்பவர் தலைமை நூலகராக அமர்த்தப்பட்டார். தகவல்களைத் தேடிக் கொண்டுவர, வரிசைப்படுத்த, ஆய்வு செய்ய என உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். உலகின் பல பாகங்களிலிருந்தும் மொழிபெயர்ப்பாளர்கள் வரவழைக்கப்பட்டனர். லத்தீன், ஜெர்மன், கிரேக்கம் முதலான பல்வேறு மொழிகளிலிருந்தும் சிறந்த நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

மைசூர் முழுவதும் பல கிளை நூலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார். உலகெங்குமுள்ள புத்தகக் கடைகளிலிருந்தும் புத்தகங்களை வரவழைத்தார் திப்பு.

தாமஸ் ஜெபர்ஸனின் "சுதந்திரத்துக்கானப் பிரகடனம்" என்னும் ஆங்கில நூல் திப்புவுக்கு அமெரிக்காவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை கற்பித்தது. திப்புவும் பல நூல்களைத் தானே மொழிபெயர்த்தார். நாடு பிடிப்பதிலும், தங்கம், வைரங்களை கொள்ளையடிப்பதிலும், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், அழகிய ஆடம்பரமான அரண்மனைகளைக் கட்டுவதிலும் பேராசை பிடித்து அலைந்த மன்னர்களையே அதுவரை வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால், நூல் நிலையம் அமைத்தும் அறிவை வளர்க்கும் பணியில் திப்பு சுல்தான் ஈடுபட்டுப் புதிய வரலாற்றைப் படைத்து உள்ளார்!

மத நெறியும், போர் முறையும்

மதம் குறித்து 1789 ஆம்ஆண்டு திப்பு வெளியிட்டப் பிரகடனத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

மதங்களிடையே நல்லுறவு வேண்டும். பிற மதத்தவர்களின் விக்கிரகங்களை அவமதிக்கக் கூடாது. பிற தெய்வங்களை வழிபடுகிறவர்களைப் பழித்தல் கூடாது.

திப்பு இஸ்லாமியர்களுக்கான மசூதிகளைக் கட்ட மட்டும் நிதி உதவி செய்யவில்லை. ஆனால், இந்துக் கோயில்கள் மற்றும் கிருத்துவ தேவாலயங்கள் கட்டவும் அனுமதி அளித்தார். தாராளமாக நிதி உதவியும் செய்தார்.

'மதம் மக்களைப் பிளவுப்படுத்தக் கூடாது. மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும்' என்னும் உயரிய கொள்கையுடையவராய்த் திகழ்ந்தார்.

திப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர் பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:-

“போரிடும் போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள் மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளை சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. “

நீதிபரிபாலனத்தில் திப்பு

முழுமையான விசாரணைக்குப் பிறகே குற்றவாளியா.? எனத் தீர்மானிக்க வேண்டும்; பின்புதான் குற்றத்துக்குரிய தண்டனையை அளிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

குற்றம் இழைத்தவர்களும், துரோகம் செய்தவர்களும் திருந்துவதற்குரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்.

நாட்டைக் காக்கும் போரில் மக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும. அப்போதுதான் போரில் வெல்ல முடியும். ஆதிக்கக்காரர்களுக்கு எதிராகப் போராட மக்கள் முன் வர வேண்டும். ஆட்சியாளர்களைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கக் கூடாது. மக்களைப் பயமுறுத்தி ஆட்சி செய்வது பிற்போக்குத்தனமானது.

திப்புவின் நிலச் சீர்திருத்தம்

வளமான நிலத்தை யாரும் தரிசாகப் போடக்கூடாது. நிலத்தின் உரிமையாளர் பயிரிட வேண்டும் அல்லது நியாயமான குத்தகைக்கு விட்டுப் பயிர் செய்ய வேண்டும். குறிப்பிட்டக் காலத்துக்கு மேல் நிலத்தை தரிசாகப் போட்டு வைத்திருந்தால், அரசாங்கத்தால் அந்நிலம் பறிமுதல் செய்யப்படும்.

நிலக்குத்தகை நியாயமானதாக இருக்க வேண்டும். தன் விருப்பப்படி குத்தகைத் தொகையை அடிக்கடி உயர்த்தக் கூடாது. மழையில்லாவிட்டாலும், அதிக மழை பொழிந்து பயிர் மகசூல் பாதிப்படைந்தாலும் குத்தகைத் தொகையை குறைத்து வாங்கிட வேண்டும். திப்புவின் ஆட்சிக் காலத்தில் மூன்று இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. தலித் மக்களுக்கு தனியே நிலம் அளிக்கப்பட்டது.

அதிகாரிகளின் ஆட்டத்துக்கு வேட்டு

ஏழைகளையும், விவசாயிகளையும் துன்புறுத்தமாட்டோம். சுரண்ட மாட்டோம். ஏமாற்ற மாட்டோம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டாய உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

திப்புவின் பொதுவான சீர்திருத்தங்கள்

வாணிபத்துக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் ஊக்கம் அளித்தார். கடலிலிருந்து முத்து எடுத்தல், கால்நடைகள் வளர்த்தல், பட்டு உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.

ஆதரவற்ற ஏழைச் சிறுமிகளை தேவதாசிகளாகக் கோயிலுக்கு விற்கும் கொடுமைக்கு தடை விதித்தார்.

பூரி ஜெகந்நாதர் கோயில் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் தேர்க்காலில் விழுந்து உயிர்விடும் மடைமையை கண்டித்தார்.

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும், அரசாங்க ஊழியர்கள் மக்களுக்கு ஊழியம் செய்யவே உள்ளனர் என்பதையும் தனது கட்டளையாக அறிவித்தார் திப்பு!

மதுவிலக்கு கொள்கை

திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.

மது உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் சட்டப்படி குற்றம் என அறிவித்தார். மது விற்பனையினால் அரசாங்கத்திற்கு நிதி வரவு உண்டு என்பதற்காக, மக்களின் அறிவை மழுங்கக்கூடிய மதுவை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்தார். மது உற்பத்தியாளர்களின் உரிமங்களை நீக்கம் செய்தார். மக்கள், மதுவை நாடக் கூடாது என்றும், மதுவுக்கு அடிமையாகக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

சமூகச் சீர்திருத்தங்கள்

மலபாரில் வாழும் பெண்கள் தோள் சீலை அணிவதற்கான உரிமை குறித்து தெளிவாக உணர்ந்திருந்தார். அவ்வுரிமையை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அது தொடர்பாக, திப்பு சுல்தான், 1785 ஆம் ஆண்டு மலபார் கவர்னருக்குக் கடிதமும் எழுதினார். இதிலிருந்து பெண் உரிமையிலும், பெண் விடுதலையிலும் உறுதியாகச் செயல்பட்டவர் திப்பு சுல்தான் என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

தண்டனை அளிப்பதில் மாறுபட்ட உத்தி

குற்றம் புரியும் விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வாழும் கிராமத்தில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவற்றுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவை மூன்று அடி உயரத்துக்கு மரமாக வளரும் வரை வளர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இவ்வாறெல்லாம் கூட சுற்றுச் சூழலைப் பேணிட முயன்றார் திப்பு!

தாவரக் கூடாரம் : லால்பாக் தோட்டம்

‘லால்பாக் தோட்டம்’ - திப்புவின் ஆராய்ச்சிக் கூடமாகியது! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரம், செடி, கொடி வகைகளைக் கொண்டு வரச் செய்து பராமரித்தார். மூலிகை, யுனானி மருந்து முறைகளையும் பெருக்கினார்.

திப்பு, தன் ஆட்சியில் அனைவருக்கும் உணவு, வேலை, வசிக்க இடம், ஆடை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்தினார்.

குடிமக்களின் ‘திப்பு’

ஃப்ரான்ஸ் மன்னராட்சியை எதிர்த்து ஜாகோபியன்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சியாளர்களுக்கு திப்பு ஆதரவுக்கரம் நீட்டினார். அதனால், ஜாகோபியன்கள் திப்பு சுல்தானுக்கு ‘குடிமக்களின் திப்பு’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தார்கள்.

மீண்டும் போர்

மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திப்புவினை எதிர்த்துப் போர் தொடுத்தனர். ஆங்கிலேயர்கள் படை திண்டுக்கல்லில் திப்புவின் படையுடன் கடுமையாக மோதினாலும், முடிவில் பின்னடைவைச் சந்தித்தது. திப்புவுக்குத் துரோகம் செய்த ‘ஹைதர் அப்பாஸ்’ தனது மனசாட்சி குத்தியதால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்டு போனார்.

கர்னல் ஃப்ளாயிட் தலைமையிலான படையுடன் திப்பு மோதினார். ஜெனரல் மெடோவ்ஸ் ஸ்ரீரங்கப்பட்டிணத்தை நோக்கி படை நடத்தினார். தோல்வியைத் தழுவினார். கார்ன்வாலிஸ் தலைமையிலான படை மைசூர் நோக்கிச் சென்றது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். திப்பு மக்களுக்கும், படை வீரர்களுக்கும் தினம் தினம் உற்சாக மூட்டினார். ‘தோல்வியைப் பற்றிய பயம் வேண்டாம். துணிந்து போரிடுவோம், தாய்நாட்டைக் காப்போம்’ என்று முழங்கினார்.

போரும்-அமைதியும்

எத்தனை காலம்தான் போர்-போர் என்று அறைகூவல் விடுப்பது? அமைதியை நாடினால் என்ன? ஆங்கிலேயர்களுக்கும், திப்பு சுல்தானுக்கும் ரமிர்சாதிக் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அது எப்படிப்பட்ட ஒப்பந்தம்? ஆங்கிலேயர்கள் பணம், தங்கம், வைரம் கேட்டதுடன், திப்பு ஆட்சியிலிருந்து பாதி மண்டலத்தையும் தரக் கோரினார்கள். அது மட்டுமா? திப்பு சுல்தானின் வீரப்புதல்வர்களான மூத்த மகன் அப்துல் காலிக் (எட்டு வயது), இளைய மகன் முய்ஸ்-உத்-தீன் (வயது ஐந்து) ஆகிய இருவரையும் பிணைக் கைதிகளாகக் கேட்டனர். கல்நெஞ்சக் கொடியவர்களான ஆங்கிலேயர்கள் உலக வரலாற்றில் குழந்தைகளைப் பிணைக் கைதிகளாகக் கேட்ட எதேச்சதிகார வன்னெஞ்ச மிலேச்சர்கள் ஆங்கிலேயர்கள் தான்.

ஒப்பந்தத்திற்கு அரசு கஜானாவில் உள்ளவை போதவில்லை என்பதால், பொதுமக்கள் தாங்கள் அணிந்திருந்த நகை, நட்டுகளை திப்புவிடம் அளித்து பாசமழை பொழிந்தார்கள்.

தோல்வியின் தொடக்கம்

ரிச்சர்ட் வெல்லஸ்லி 1799 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் சென்னை ஆளுநராக பதவியேற்றார். மைசூரை நோக்கி ரிச்சர்ட் வெல்லஸ்லி தலைமையில் இருபதாயிரம் பேர்களைக் கொண்ட பெரும்படை புறப்பட்டது. போர் கடுமையாக நடைபெற்றது. திப்புவின் படைத் தியாகம் செய்து போரிட்டது. ஆங்கிலேயர்களின் பீரங்கிகள், துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவற்றுடன் தாக்குபிடிக்க முடியாமல் திப்புவின் படை திரும்பத் தொடங்கியது.

ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது போர் தொடுத்தபோது, பீரங்கியால் கோட்டை மதில் சுவரைத் தாக்கி அழித்தனர். ராக்கெட்டுகளையும், பீரங்கிகளையும் பயன்படுத்தி திப்புவின் ஆயுதக் கிடங்கைச் சிதைத்தனர்.

வெள்ளைத் தளபதிகள் வெல்லஸ்லி, ஹாரிஸ், பெயர்ட் மூவரும் தலைமையேற்றனர். போர் நடக்கையில் யூனியன் ஜாக்கொடியை கோட்டை மீது ஏற்ற முயன்றவன் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

ஒப்புயர்வில்லாத் திப்பு

பிப்ரவரி 11, 1799 அன்று திப்பு காவல் கோபுரத்தின் மீது ஏறி நின்றார். போர்க்காட்சியை ஊன்றிப் பார்த்தார்! பின்பு, தனது வாளைச் சுழற்றி வீசி எறிந்தபடி போர்க்கள மண்ணில் பாய்ந்தார்! ரத்தம் பெருக்கெடுக்க அப்படியே கீழே சாய்ந்து விழுந்தார். போர் வீரர்களின் பிணக்குவியலுக்கு நடுவில் திப்புவின் உடல், கண்கள் திறந்திருந்தபடி கிடந்தது. அவரது உடலுக்கு அருகில் அவர் பொன்னே போல் போற்றிய குர்-ஆன் பிரதியொன்று கிட்டத்தில் கிடந்தது! இந்திய விடுதலை வரலாற்றில் திப்பு சுல்தானின் தியாகம் வீரத்தை நினைவூட்டும்! அவரின் விவேகம், ஞானத்தைப் பறைசாற்றும்! மொத்தத்தில், ஒப்புயர்வில்லாத் திப்பு என உலகம் ஒங்கிப் புகழ் ஏத்தும்!


[][][]

ஹிந்து சகோதரிகளுக்கு மேலாடை அணியும் உரிமையை பெற்று தந்த திப்பு சுல்தான்.



பெண்சமூகத்தில் திப்பு சுல்தான் நடைமுறைப் படுத்திய மற்றொரு சீர்திருத்தம் தான், பெண்களின் மேலாடை விஷயத்தில் தலையிட்டதாகும். இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது. அவ்வாறு நம்பூதிரிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது, மிகப் பெரிய மதவிரோதச் செயலாக நாயர் பெண்களும் இன்னபிற தாழ்த்தப் பட்ட பெண்களும் கருதி வந்தனர்.

அதனைக் குறித்து எழுத்தாளர் அனந்த கிருஷ்ணன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

"கீழ்ஜாதியினரில் ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது".

அப்போதைய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வேதங்களையும் உபயோகித்து கீழ்ஜாதி மக்களை அந்த அளவுக்குத் தவறான சிந்தனையில் உயர்ஜாதியினர் ஊற வைத்திருந்தனர். இடுப்புக்கு மேல் உடம்பை மறைக்காத பெண்களின் நடைமுறை, சாதாரண வாழ்க்கையை மிக அலங்கோலப்படுத்தும் என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்றும் திப்பு புரிந்து கொண்டார். அதன் காரணமாக, இத்தகைய ஜாதி சம்பிரதாயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் எல்லாப் பெண்களும் கட்டாயமாக தங்களின் மார்புகளை மறைக்க வேண்டும் என்றும் திப்பு சுல்தான் கண்டிப்பாக உத்தரவிட்டார். ஆனால், தன்னுடைய சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான முயற்சிகள் தாம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, தமது சீர்திருத்த முயற்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்மாறு செய்வது திப்புவுக்கு மிகக் கடினமானதாக இருந்தது.

தங்களின் கருத்துத் தெரிந்த காலம் முதல் தாங்கள் கடைபிடித்து வந்த ஆச்சார முறைகளை மீறுவதற்குக் கீழ்ஜாதி மக்கள் ஒருபோதும் தயாராகவில்லை. திப்புவின் சீர்திருத்தக் கட்டளைகள் அனைத்தும் அவர்களுக்கு மதமாற்ற முயற்சிகளாகவே உயர்ஜாதியினரால் திரித்துக் காட்டப் பட்டன. குறிப்பாக, இடுப்புக்கு மேல் உடம்பு முழுவதையும் மறைக்கும் விதத்திலான மேலாடை அணிவது, முஸ்லிம் பெண்கள் ஆடைக்கு ஒப்பானதாக இருந்ததால், அவ்வாறு மேலாடை அணிவதையே மதமாற்றத்திற்கு ஒப்பானதாக அவர்கள் கருதினர்.

அக்காலத்தில் மட்டுமன்றி தற்போதைய வரலாற்று ஆசிரியர்களிலும் பெரும்பாலோர், திப்பு இந்து மதச் சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்துவதுண்டு. ஆனால், வரலாற்றை நடுநிலையாக உற்று நோக்கினால், இக்குற்றச்சாட்டு அநியாயமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவரையும் சமமானவர்களாக ஆக்கி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குமான முயற்சியாகவே இருந்தன. அதற்கு, கி.பி. 1785இல் மலபார் கவர்னருக்குத் திப்பு எழுதிய கடிதம் ஆதாரமாகத் திகழ்கிறது.

திப்புவின் சீர்த்திருத்தக் கட்டளைகள் மதமாற்ற முயற்சிகளாகவும் இந்து மதத்தை அழிப்பதற்கான முயற்சிகளாகவும் திரிக்கப்பட்டதை அறிந்த திப்பு தன் நிலைபாட்டை மலபார் கவர்னருக்குக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:

"மலபாரில் சில பெண்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் திரிவதைப் பார்த்தபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அக்காட்சி வெறுப்பையும் நாகரீக, பண்பாட்டு சிந்தனைகளுக்கு எதிரான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சன்மார்க்க சிந்தனைக்கு நிச்சயமாக அது எதிரானதுதான். இப்பெண்கள் ஒரு தனிப்பட்ட பரம்பரையில் உள்ளவர்கள் எனவும் அவர்களின் சம்பிரதாயப்படி, அவர்கள் தங்கள் மார்புகளை மறைப்பது கூடாத காரியம் எனவும் நீங்கள் எனக்கு விளக்கமளித்தீர்கள். நான் அதனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்டகால சம்பிரதாயம் காரணமாகவா, அல்லது ஏழ்மையின் காரணமாகவா அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர்.?

ஏழ்மையின் காரணமாகவே அவர்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர் எனில், அவர்களுடைய பெண்கள் தங்களின் கவுரவத்திற்குக் களங்கம் ஏற்படாவண்ணம் கண்ணியமாக உடையணிவதற்குரிய உதவிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதற்கு மாற்றமாக நீண்டகால பழக்கமுடைய, கைவிடக் கூடாத சம்பிரதாயம் என்பது காரணம் எனில், அவர்களுடைய தலைவர்களிடையே நெருக்குதல் கொடுத்து இந்த (அரை நிர்வாணச்) சம்பிரதாயத்தை இல்லாமலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் மதத் தத்துவங்களுக்கு எவ்வகையிலும் கேடு விளைவிக்கா விதத்தில், சமாதானமான முறையிலான உபதேசத்தின் மூலமாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" (கேரள முஸ்லிம்களின் போராட்ட வரலாறு - பேராசிரியர்: கெ.எம்.பகாவுத்தீன், பக்கம் 118,119.)

சாதி மத பேதமின்றி மக்கள் நலனை மட்டுமே லட்சியமாக கொண்ட ஆட்சியாளராக திகழ்ந்த திப்பு சுல்தானை இன்றைய பார்ப்பனீய அடிமைகள் மதவெறியராக சித்தரிப்பது காலக்கொடுமை தான்.. என்ன செய்ய திப்பு சுல்தான் எதிர்த்தது பார்ப்பனியத்தை அல்லவா.? அதனால் அவர்கள் எதிர்ப்பது என்பது எதிர்பார்க்கும் ஓன்று தான்.

ஆனால் அதே நேரத்தில் எந்த சாதியத்தை எதிர்த்து மக்களின் நல்வாழ்வுக்காக போராடினாரோ அந்த மக்களும் கூட திப்பு சுல்தானின் உண்மையான வரலாற்றை தெரியாமல் இருப்பது வேதனையானது தான்.. எது எப்படியோ மால்கம் எக்ஸ் கூறியது போல வரலாற்றை மறந்த சமூகம் புதிய வராலாறை படைக்க முடியாது .. இது நம் சமூகத்துக்கு நன்கு பொருந்தும்..



[][][]

Saturday, 12 March 2016

பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு.?






எந்த ஒரு பொருளானாலும் அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருப்பது நியதி. இது பொருட்களுக்கு மட்டுமல்லாது உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான நியதி. இவ்வனைத்தின் உருவாக்கத்திற்கும் படைப்பாளன் ஒருவன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அப் படைப்பாளனுக்கு தொடக்கமும், முடிவும் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் படைப்பாளனுக்கு படைப்பாளன், படைப்பாளனுக்கு படைப்பாளன்,படைப்பாளனுக்கு படைப்பாளன்……. என்ற அர்த்தமில்லாத முடிவிலி ஆன ஒரு சங்கிலித் தொடர் ஏற்படும்.

எனவே, இதிலிருந்து நிச்சயமாக ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி புலனாகின்றது.

இப்பொழுது அவனை எவ்வாறு அறிந்து கொள்வது என்ற கேள்வி நம்மில் எழும். படைப்பாளனுக்கு மட்டும் தான் அவனது படைப்பினங்களைப் பற்றியும், அதன் உருவாக்கங்கள் பற்றியும், அப் படைப்பினங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கும், எவ்வாறு இருக்க வேண்டும் என்ற முழு அறிவும் இருக்கும். அவன் இவ்வுலகிற்கு தன் படைப்பினங்கள் பற்றியும்,அதன் உருவாக்கம், செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தினால் நம்மால் நிச்சயமாக நம்மையும், அண்டங்கள் அனைத்தையும் படைத்த இறைவன் இவன் தான் என்று எந்தவித மறுப்பும் இன்றி தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அல்குர்ஆன் படைப்பாளனைப் பற்றி என்ன கூறுகின்றது?

முஸ்லிம்களால் இறைவேதம் என்று நம்பப்படும் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அண்டங்கள் அனைத்தையும் படைத்த படைப்பாளனாகிய இறைவன் தன் படைப்பினங்களைப் பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும்,அதன் செயற்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக பேசுகின்றான்.

அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 30:11)

அல்லாஹ் தான் ஒன்றுமே இல்லாதிருந்த நிலையில் இப் பிரபஞ்சத்தை படைத்தவன் என்பது இந்த குர்ஆன் வசனத்திலிருந்து தெளிவாகின்றது. அல்லாஹ் இப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை குர்ஆனில் குறிப்பிடும்போது,

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து ”ஆகு‘என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன் 2:117)

இந்த குர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ் வானங்களையும், பூமியையும் எந்தவித முன்மாதிரி இன்றி படைத்ததாக குறிப்பிடுகின்றான். மனிதனால் சுற்றுப்புறச் சூழலை அறிந்து கொள்வதன் மூலம் வெறும் கருதுகோள்களையும், கோட்பாடுகளையும் மாத்திரமே உருவாக்க முடியும்.

வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக படைப்பாளனாகிய அல்லாஹ் திருமறைக் குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.

”பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்” என்று கூறுவீராக! 

நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். ”விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். ”விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று அவை கூறின.

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.(அல்குர்ஆன் 41: 9,10,11,12)

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.(அல்குர்ஆன் 7:54)

வானங்கள், பூமி மட்டுமல்லாது அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை.(அல்குர்ஆன் 50:38)

அல்குர்ஆன் வசனங்களின் படி பூமியைப் படைக்க இரு நாட்கள், அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்,வானங்களைப் படைக்க இரு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் அல்லாஹ் படைத்தான். கீழுள்ள அல்குர்ஆன் வசனங்களும் இதற்கு ஆதாரமாக உள்ளன.

(அல்குர்ஆன் 10:3, 11:7, 41:9, 10, 41:12, 25:59, 32:4, 57:4)

பிரபஞ்சம் தானாக உருவாகியதா?

சில விஞ்ஞானிகள் இப் பிரபஞ்சம் தானாக உருவாகியது என்ற கோட்பாட்டில் உள்ளனர். மேலும், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றும் இப் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளும் இயற்கையின் நிமித்தமே நிகழ்கின்றது என்றும் வாதிடுகின்றனர்.




அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான இறை வசனங்கள் சான்று பகர்கின்றன. அல்குர்ஆனிலுள்ள அறிவியல் வசனங்களை தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் உண்மைப்படுத்தி அல்குர்ஆன் இறைவேதம் தான் எனவும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் எனவும் எந்தவித சந்தேகமும் இன்றி தெளிவாக எடுத்தியம்புகின்றன.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா?

அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா?அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள். (அல்குர்ஆன் 52: 35,36)

படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கு அல்குர்ஆனில் நிறைய அறிவியல் சான்றுகள் காணப்படுகின்றன. இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் அச் சான்றுகள் உண்மைபடுத்துகின்றன. அவற்றில் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளான இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) பற்றியும், விரிவடையும் பிரபஞ்சம் பற்றியும் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே அறிவிக்கின்றது.

அல்குர்ஆன் இப் பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவு பற்றி என்ன கூறுகின்றது?

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். ”விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். ”விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று அவை கூறின.(அல்குர்ஆன் 41:11)

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

மேலுள்ள அல்குர்ஆன் வசனங்களின் படி வானங்கள், பூமி முன்னர் ஒரே பொருளாக இணைந்திருந்தன எனவும் அவை பிரிக்கப்படுவதற்கு முன் புகை மண்டலமாக இருந்து அதைத் தொடர்ந்து வானங்கள், பூமி, கோள்கள் உருவாக்கப்பட்டன என்றும் கூறப்படுகின்றது.

(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம். (அல்குர்ஆன் 51:47)

அல்குர்ஆன் இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி மட்டும் கூறாமல் அது விரிவாகிக்கொண்டே செல்கின்றது என்ற உண்மையையும் 1400வருடங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது.

நவீன விஞ்ஞான அறிக்கைகளின் படி இப் பிரபஞ்சம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒரு கட்டத்தில் இப் பிரபஞ்சமானது வெறும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. அதாவது இப் புகை மண்டலமானது ஓளி ஊடுருவ முடியாத,அடர்த்தியான வெப்ப வாயுக் கலவையாகும். இது விஞ்ஞானத்தின் பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய மறுக்க முடியாத உறுதியான நம்பிக்கையாகும். தற்போது விஞ்ஞானிகளின் அவதானிப்பின் படி மீதமுள்ள புகை மண்டலத்தின் மூலம் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன.

பூமியினதும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், பால்வெளிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வானத்தினதும் உருவாக்கத்திற்கு புகை மண்டலமே காரணம் எனவும் மேலும், இவை எல்லாம் ஒன்றாக ஒரு பொருளாக இருந்து வெடித்து சிதறி புகை மண்டலமாகி ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டு உருவாகின என்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது.

Dr. Alfred Kroner என்பவர் புகழ்பெற்ற புவியியலாளர்களில் ஒருவர் இவர் புவியியற் துறை பேராசிரியரும், ஜேர்மனியில் உள்ள புவியியற் துறை நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவர் கருத்து தெரிவிக்கையில்“முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இப் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம், விஞ்ஞானிகள் கடந்த காலங்களில் தான் இதனை மிகவும் முன்னேறிய தொழில் நுட்ப உதவியுடன் கண்டறிந்தனர்”. மேலும் அவர் தெரிவிக்கையில் “1400 வருடங்களுக்கு முன்னர் அணு இயற்பியல் பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பொருத்தவரை இது அவரது சொந்த கருத்தாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. உதாரணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆரம்பம் பற்றிய அறிவு எந்த மனிதனுக்கும் அறவே இல்லாத காலம் அது”. என்று கூறுகின்றார்.

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்.

California Mount Wilson ஐச் சேர்ந்த அமெரிக்க வான சாஸ்திரியான Edwin Hubbleஎன்பவர் 1929ம் ஆண்டில் வானியல் வரலாற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர். அவரது கண்டுபிடிப்புகளில் ‘பிரபஞ்சத்தின் விரிவடைதல்’ மிக பிரபல்யமான ஒன்று.




இவர் மிகப் பெரிய தொலைநோக்கி மூலம் வானத்தை அவதானிக்கையில் நட்சத்திரங்களும், பால்வெளிகளும் நம்மிலிருந்து மட்டும் விலகிச் செல்லாமல் அவை தனக்குத் தானே ஒவ்வொன்றிலிருந்தும் விலகிச் செல்வதை அவதானித்தார்.

இதிலிருந்து அவர் பெற்ற முடிவு இப் பிரபஞ்சத்தின் அனைத்திலுமுள்ள அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்வதால் இப் பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கின்றது.




இப் பிரபஞ்சம் விரிவடைதலைக் குறிப்பாக சொல்வதானால் ஒருவர் நேரத்தை நோக்கி பின்னோக்கியதாக நகர்ந்தால் அவர் இந்த பிரபஞ்சம் ஒற்றைப் புள்ளியில் (single point) உருவாக்கப்பட்டதை உணர்வார்.கணக்கெடுப்புகளின் படி இந்த ஒற்றைப் புள்ளியானது இப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை அம்சங்களினதும் பூஜ்ஜியத் தொகுதியையும் (zero volume)> முடிவிலா அடர்த்தியையும் (infinite desity) உள்ளடக்கி உள்ளது.

இப் பிரபஞ்சம் ஆனது இப் பூஜ்ஜயத் தொகுதியின் ஒற்றைப் புள்ளியிலிருந்து வெடிப்புக்குள்ளாகி தோன்றியது. இப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்திற்கான இம் மாபெரும் வெடிப்பானது ‘Big Bang’ எனும் பெரு வெடிப்புக் கொள்கையாக விஞ்ஞானிகளால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விளக்க நோக்கங்களுக்காகவே இத் தத்துவார்த்த வெளிப்பாடானது பூஜ்ஜியத் தொகுதி என்று அழைக்கப்படுகின்றது. அதாவது விஞ்ஞானத்தில் இந் நிலை மனித அறிவுக்கு ஒன்றும் இல்லாத நிலை (Nothingness) என்பதற்காகவே பூஜ்ஜயத் தொகுதி என்று அழைக்கப்படுகின்றது.

‘Big Bang’ பெரு வெடிப்புக் கொள்கையின் படி பிரபஞ்சமானது ஒரு பொருளிலிருந்து வெடிப்புக்குள்ளாகி பல பொருட்கள் உருவாகின என்பதாகும். இக் கொள்கை 20ம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அல்குர்ஆன் இதை 1400 வருடங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது. அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இந்த சான்று ஒன்றே போதுமானது.


[][][]

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்








அறிமுகம்


1857ல் நடந்த சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த புரட்சியில் ஈடுபட்ட, தலைமை தாங்கியவர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான விசாரணை பற்றி 1948ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு புத்தகம் எழுதினார். “இதே செங்கோட்டையில் 90 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர், இந்தியாவின் கடைசி மொகலாயச் சக்கரவர்த்தி” என்று அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். 1857ம் ஆண்டு நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு ஆதரவளித்ததாக அந்தச் சக்கரவர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இப்படி இந்திய விடுதலைப்போரில் பெரும் பங்காற்றி அதன் காரணமாகவே தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையிலேயே மரணமடைந்த மாவீரன் பகதூர்ஷாவின் 150வது நினைவு ஆண்டில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி மாத இதழில் 2012ம் ஆண்டை பேரரசர் பகதூர் ஷாவின் 150 நினைவு ஆண்டாக கொண்டாடுமா இந்திய அரசு.? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினத்தை பேரரசர் பகதூர்ஷா வின் 150வது நினைவு ஆண்டு என்ற நினைவலைகளுடன் கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் அன்னாரின் வாழ்க்கையை ஆதாரங்களுடன் வரலாற்று ஆவணமாக பதிவு செய்கின்றோம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரின் வாழ்க்கையும், வரலாறும்:

“சூரியன் எங்கள் ஆட்சிப் பரப்பில் மறைவதே இல்லை” என்று இறுமாப்பு கொண்ட ஏகாதிபத்திய இங்கிலாந்தின் ஆட்சியையே இந்தியாவிலிருந்து வேரொடு சாய்த்து விட முனைந்தது 1857ல் பேரரசர் பகதூர் ஷாவால் தலைமையேற்று நடத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர். ஆங்கிலேய ஆட்சியின் குரல்வளையை நெறித்து அதன் உயிர் தொண்டைக் குழிக்குள் அடைந்து திணறுமளவு எண்பத்தி இரண்டு வயது முதிய பேரரசர் பகதூர் ஷா அவர்கள் தாக்குதல் தொடுத்தார். இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும், மன்னர்களும் பேரரசர் பகதூர் ஷா அவர்களின் தலைமையில் கீழ் ஒன்றிணைந்து சுதந்திரப் போரில் பங்கெடுத்தனர்.

பேரரசர் அவர்களின் வாழ்க்கையையும், தேசத்திற்காக அவர் செய்த தியாகத்தையும் நினைவு கூற வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகன் மீதும் கடமையாகும்.

பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் அவர்களின் பரம்பரையும், பிறப்பும்:

மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கானின் வம்சாவழியைக் கொண்ட தைமூர் (1370-1405) என்ற இஸ்லாமிய பேரரசர் மத்திய ஆசியாவையே தன் ஆட்சிப் பகுதியாக கொண்டு அரசாண்டவர்.

அவரின் சீர்மிகு வம்சத்தில் தோன்றிய பேரரசர் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் (1526-30) நிறுவினார். அத்தகைய பேரரசர்களை கொண்ட பெரும் வம்சத்தில், அக்டோபர் 24ம் நாள், 1775ல் அடிமை இருளை விரட்டும் பேரொளியாக பேரரசர் அபு ஜாஃபர் சிராஜுத்தீன் முஹம்மது பகதூர் ஷா ஜாஃபர் அவர்கள் பிறந்தார்கள். இவரது தந்தை இரண்டாவது அக்பர் ஷா மற்றும் தாய் இந்திய ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த லால்பாய் ஆவார்கள். எனவே இவரது பிறப்பு இந்திய மண்ணோடும், கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

இவர் கல்வி ஞானத்தில் சிறந்தவராகவும், பாரசீகம், உருது, அரபி, பஞ்சாபி மற்றும் பிராஜ் மொழிகளில் பாண்டித்தியம் பெற்று அம்மொழிகளில் பல நூற்களையும் எழுதியுள்ளார். மேலும் இவர் மாபெரும் கவிஞராகவும், பல்வேறு கவிதைகளையும் எழுதியுள்ளார் இன்றும் இவரது கஜல் தொகுப்புகளான கவிதை நூல்கள் மேதைகளால் போற்றிப் புகழப்படுகின்றன.

இவரது அரசவை கல்விமான்களாலும், கவிஞர்களாலும் நிரம்பியிருந்தது. அன்றைய பெருங் கவிகளான காலிப், ஜாக் போன்றவர்கள் அரசவையை அலங்கரித்தனர்.

இளமையும், வாழ்க்கை முறையும்:

இளமை காலங்களில் வேட்டையாடுதல் போன்ற வீர விளையாட்டுகளில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். முதுமை காலங்களில் கூட இப்பழக்கத்தை விடாது கை கொண்டிருந்தார். இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கென தன் அரண்மனையில் தனிப் பரிசோதனைக் கூடமே அமைத்திருந்தார்.

1857 புரட்சி முடிவுற்ற பின் ஆங்கிலேயர் இவரது அறையில் செல்வமிருக்கும் என்று கொள்ளையிட முற்பட்ட போது அங்கு கண்ணாடிக்குப்பிகளில் பதப்படுத்தப்பட்ட மூலிகைகளும், மருந்துகளும் தான் அவர்களை வரவேற்றன.

இவருக்கும் கட்டிட கலையின் மீதும் தனிக் காதலிருந்தது. இவர் கட்டிய ஜாஃபர் மஹால் போன்ற சிறந்த கலைநயமிக்க கட்டிடங்கள் இந்திய கட்டக் கலைக்கு பெருமை சேர்த்தன.

ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வமுடையவராகவும், சூஃபிகளின் ஆன்மீக வழிமுறையை பின்பற்றி உலக ஆடம்பரங்களில் இச்சையின்றி, எளிமையை கடைபிடிப்பவராகவும், இறைவனை நேசிப்பதில் பேரார்வம் கொண்டவராகவும் இருந்தார். இவ்வான்மீக பலன் தான் பின்னாளில் மாபெரும் ஆங்கிலேயே சாம்ராஜ்யத்தை எதிர்க்கும் துணிவை அவருக்கு தந்தது.

அரசவையில் ஏதேனும் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் தனிமையிலிருந்து இறைவனை வழிபட்டு அவனிடம் பிரார்த்தித்து அவனது உதவியை கோருவார். பின்பு மனம் திருப்தியடைந்த பின்பே அரசில் முக்கிய முடிவுகளை அறிவிப்பார்.

இவர் உலகில் எந்தளவு பற்றற்று இருந்தார் எனில் 1857 புரட்சியின் தலைமை தேடி வந்து இந்தியாவின் அனைத்து மக்களும், செல்வமும் இவரின் தலைமையின் கீழ் வந்த சமயத்தில் இவர் இப்படி கூறினார்;

“அரியாசனத்தின் மீதோ, பணத்தின் மீதோ எனக்கு துளியும் காதலில்லை. நான் இவ்வுலகில் ஒரு ஃபக்கீரைப் போன்றவன்.

கல்வியின் தலைநகரம் தில்லி:

பேரரசர் பகதூர் ஷா ஆட்சியில் தில்லி கல்வியில் இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. இந்தியர்களை குறித்து தவறாகவே எழுதும் கர்னல் வில்லியம்ஸ்மன் கூட இவ்வுண்மையை ஒப்புக்கொண்டு இப்படி உரைக்கின்றார்.

“முகமதியர்களை விட கல்வியில் பேரார்வம் கொண்டு விசாலமாக கற்கும் சமூகம் உலகில் சில மட்டுமே. நமது இளைஞர்கள் கல்லூரிகளில் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளின் வாயிலாக இலக்கணம், பேச்சுத்திறமை மற்றும் தர்க்கக் கலைகளை கற்பது போல். இங்கு மாணவர்கள் அரபி மற்றும் பாரசீக மொழிகளில் இக்கலைகளை கற்கின்றனர்.

ஏழு வருடத்திற்கு பின்பு மதரஸா மாணவன் தான் கல்வி பயின்றதன் அடையாளமாக, மேற்கூறிய அனைத்துக் கலைகளையும் தலைக்குள் நிரப்பிய நிலையில் பட்டம் பெற்றதன் அடையாளமாக தலைப்பாகை அணிகிறான். இந்த இளம் ஆலிம் நமது ஆக்ஸ்போர்டு பல்கலை கழக மாணவனுக்கு இணையானவன். எல்லாவற்றையும் விட இவர்கள் கற்கும் கல்வி வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் ஒன்றாகும்.”

இப்படி எதிரிகள் கூட அன்றைய கல்வியின் மகிமையை உணர்ந்து போற்றுமளவு இருந்தது. இத்தகைய கல்விதான் ஆலிம்களை இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்து ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மக்களை கிளர்ந்தெழச் செய்யத் தூண்டியது. இதன் விளைவை உணர்ந்ததால் தான் புரட்சிக்கு பின்பு வெள்ளையர்கள் மதரஸா பாடத்திட்டத்தையே திருத்தி அமைத்து அதனை உயிரோட்டமின்றி செய்தனர்.

1857ல் முகலாய அரசின் நிலை:

கி.பி. 1526ம் ஆண்டு பேரரசர் பாபர் முகலாய ஆட்சியை இந்தியாவில் தோற்றுவித்தது முதல் அவ்வரசு சிறிது சிறிதாக வளர்ச்சி கண்டு பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் வடமேற்கு மாகாணம், மத்திய இந்தியா வட மற்றும் தென்னிந்தியா என்று மாபெரும் நிலப்பரப்பை தன் ஆட்சிப்பகுதியாக கொண்டிருந்தது.

ஆங்கிலேயர் கிழக்காசியாவில் வாணிபம் செய்ய “கிழக்கிந்திய கம்பெனி” என்ற நிறுவனத்தை துவங்கி முகலாய பேரரசிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்து வந்தனர். ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் முகலாய பேரரசரை சந்திக்க வந்தால் தலைசாய்த்து மரியாதை செய்வது மரபாக இருந்தது. ஆங்கிலேயர் தம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாணயம் அச்சடிக்கும் போது முகலாய பேரரசின் உருவத்தை பொறித்துத்தான் அச்சடித்தனர்.

ஆங்கிலேயர், தங்களின் நயவஞ்சக மற்றும் சூழ்ச்சிப் பண்பால், முஸ்லிம் நவாப்கள் மற்றும் பிற இந்திய சிறு அரசர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமைகள் மற்றும் முரண்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு ஆட்சியாளராக வீழ்த்தி தம் எல்லையை விரிவு படுத்தினர்.

இந்த நிலையில் 1765ஆம் ஆண்டு வங்காளத்தில் நடைபெற்ற (பக்கம் 3) போருக்கு பின்பு முகலாய அரசர் “ஷா ஆலம்” அவர்கள் ஆங்கிலேயருக்கு முதன் முறையாக அவர்களின் ஆட்சிப் பகுதியில் முகலாய அரசுக்கு கட்டுப்பட்டு வரி வசூலிக்கும் அதிகாரத்தை வழங்கினார்.

அதற்கு பின்பு அவர்கள் தாங்கள் பேரரசருக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதையே மறந்து சர்வதேச சட்டத்திற்கு எதிராக நயவஞ்சகத்தால் தம் எல்லையை விரிவுபடுத்தினர்.

அவுரங்கசீப் பின் மறைவுக்கு பிறகு தொடர்ச்சியான மராத்திய போர்களாலும், நவாப்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களாலும் பலவீனப்பட்டிருந்த முகலாய அரசு ஆங்கிலேயரின் நயவஞ்சகத்தையும், நவீன போர் முறையையும் எதிர்கொள்ள முடியாமல் தில்லிப் பேரரசு என்பது செங்கோட்டைக்குள்ளாக சுருக்கப்படடிருந்தது.

இச்சூழலில் தான் பேரரசின் இழந்த பெருமையை மீட்கும் முகமாகவும், இந்தியாவின் விடுதலைக்காகவும் முதல் சுதந்திரப் போரை வழி நடத்தினர்.

நீதியும், ஆட்சியும்:

பகதூர் ஷா அவர்கள் நீதியில் நிலைத்திருப்பவராகவும், மென்மையான இதயங்கொண்டவராகவும் இதே சமயம் அநீதியை காணும் பொழுது தன் சக்திக்குட்பட்டு அதனை தடுப்பவராகவும் இருந்தார். அநீதி இழைப்பது சொந்த மகனே என்றாலும் தண்டிக்க தவறியதில்லை.

1852ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகதூர் ஷா அரசவையில் வழக்கொன்று சமர்ப்பிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் பேரரசரின் ஒன்பதாவது மகனான மிர்சா சிஜ்ரி சுல்தான் ஆவார். குற்றம் என்னவெனில் அவர் தன் மனைவியை அடித்தது.

கோபத்துடன் மகனை அழைத்து தன் மகன் என்றும் பாராமல் அரசவையில் வைத்து 2 அல்லது 3 முறை கடுமையாக அடித்தார். உடனே மிர்சா கிஜ்ரி மன்னரிடம் மன்னிப்புக் கோரி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மீண்டும் அவ்வாறு நிகழாது என்று வாக்குறுதி அளித்த பின்பே மன்னர் அடிப்பதை நிறுத்தினார். பின்பு மகனை கடுமையாக எச்சரித்து மீண்டும் இவ்வாறு மனைவியிடம் கடுமையாக நடக்காது அவளுடன் நன்முறையில் இல்லறம் நடந்த ஆணையிட்டார்.

இப்படி பேரரசர் தன் மகனையே தண்டித்த பின்பு அவரது அரசில் எவருக்கேனும் பெண்களை துன்புறுத்த மனம் வருமா?

மத நல்லிணக்க நாயகன் பேரரசர் பகதூர் ஷா:

பேரரசர் பகதூர் ஷா அவர்கள் இந்தியாவின் அனைத்து மத,மொழி, இன மக்களையும் அரவணைத்துச் செல்பவராகவும், அவர்களின் பாதுகாவலராகவும் திகழ்ந்தார். இவரது மதநல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக இச்சம்பவத்தை நினைவு கூறலாம்.

1857 ம் ஆண்டு பேரரசரின் தலைமையை ஏற்று 80,000த்திற்கும் அதிகமான சிப்பாய்கள், ஜிஹாதிகள் மற்றும் சிவிலியன் மக்கள் தில்லியில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வந்தனர்.

அச்சமயம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இஸ்லாமியரின் தியாகத்திருநாளான “ஈதுல் அல்ஹா” வரவிருந்தது. புரட்சிப் படையில் இஸ்லாமியரும், இந்துக்களும் கலந்து ஒற்றுமையுடன் போராடி வந்தனர்.

இந்துக்கள் பசுக்களை தெய்வமாக வணங்குபவர்கள். இஸ்லாமியர்கள் தியாகத்திருநாளில் படைத்த இறைவனுக்காக ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்களை பலி கொடுப்பார்கள். இந்நிலையில் தியாகத்திருநாளில் மாடுகள் பலி கொடுக்கப்பட்டால் அது ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும், மேலும் பொது எதிரியை எதிர்த்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் இச்சமயம் நமக்குள் வகுப்புக் கலவரம் மூண்டால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்திடும் வாய்ப்புகள் இருந்தது.

அச்சமயம், சிலர் டெல்லி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பு பசுக்களை பலியிடப்போவதாகவும், அதனை தடுப்பவர்களை கொல்ல முனைவதாகவும் தகவல் பேரரசரை எட்டியது. மேலும், உயர் ஜாதி ஹிந்து சிப்பாய்கள் சிலர் மாட்டிறைச்சி வியாபாரம் செய்ததாக ஐந்து பேரை கொன்று விட்டனர் என்ற தகவலும் கிடைத்தது. இத்தகைய குழப்பமான சூழலில் பேரரசர் இப்படி ஒரு அரச உத்தரவைப் பிறப்பித்தார்.

“தில்லியில் மாடுகள் வெட்டப்படுவது மட்டுமல்ல, அவ்விறைச்சியை உண்பதையும் தடை செய்தார். தேச விடுதலைக்காக நாம் பேராடும் இவ்வேளையில் பிளவு ஏற்பட்டால் அது நம்மை பலவீனப்படுத்தி எதிரியை பலப்படுத்திடும் மேலும் இவ்வுத்தரவை எவரேனும் மீறுவார்கள் என்றால் அவர்கள் பீரங்கி முன்னால் நிறுத்தப்பட்டு சுடப்படுவார்கள். மேலும் இவ்வுத்தரவு 6 மணி நேரத்திற்குள் அமல்படுத்தப்படும்” என்றார்.

பல்லாயிரக்கணக்கான முஜாஹிதுகள் ஆயுதங்களோடு புரட்சிக்காக தில்லியில் குழுமியிருந்த போதும் தங்கள் சக போராளிகளான இந்துச் சிப்பாய்களின் மத உணர்வு புண்பட்டுவிடக்கூடாது என்று தங்களுடைய மத வழிபாட்டில் விட்டுக் கொடுத்துப் போனது இந்திய வரலாற்றில் அவர்களின் சகிப்புத்தன்மைக்கும், பேரரசர் பகதூர் ஷாவின் மத நல்லிணக்க ஆட்சிக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகவும் தற்கால இந்துத்துவவாதிகளின் பொய் பிரச்சாரங்களை தவிடு பொடியாக்கும் விதமாகவும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு கலவரம் ஏற்படும், அதனை பயன்படுத்தி நாம் போரில் வென்றுவிடலாம் என்று பகல் கனவு கண்ட ஆங்கிலேய போர்த் தளபதி தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகின்றார்.

“நல்ல முரண்பாடு, முகமதியர்கள் தங்களின் நம்பிக்கைக்காக போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் தியாகத்திருநாளில் முகமதிய பேரரசரின் ஆட்சியில் ஒருவர் கூட பசு பலி கொடுக்க அனுமதிக்கப்படவில்லை”

திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட புரட்சி:

சிலர், குறிப்பாக இந்துத்துவ பின்னணி கொண்ட வரலாற்றாசிரியர்கள் முதல் இந்திய சுதந்திர எழுச்சி தானாக எழுந்த ஒன்றென்றும், இஸ்லாமிய ஆலிம்கள் எவரும் அதற்கு காரணமில்லை என்று வரலாற்றை திரிப்பது மட்டுமல்லாமல் பேரரசர் பகதூர் ஷாவிற்கோ அல்லது அவரின் குடும்பத்தினர்க்கோ அதில் பங்கில்லை என்கின்றனர்.

ஷா வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் காலம் தொட்டு, அவரால் தோற்றுவிக்கப்பட்ட “மதரஸா இரஹிமிய்யா” கல்விச் சாலையை வழிநடத்திய அவரின் மகன் அப்துல் அஜீஸ் (ரஹ்), அவரின் சீடர் செய்யது அஹ்மது ஷஹீது (ரஹ்), என்று தில்லியின் அறிஞர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகவே வெள்ளையருக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழ தூண்டினர்.

மேலும் 1857 புரட்சிக்கு முன்பாக ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே (1852) ஆலிம்கள் இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிக்கு வித்திட்டனர்.

இதனை மோப்பம் பிடித்த தில்லி ஆங்கிலேய காவல்துறை மற்றும் உளவாளிகள் ஆங்கிலேய தலைமை நீதிபதி திரு. மெட்கல்புக்கு அறிக்கை அனுப்பினர். அவ்வறிக்கையில் ஆலிம்கள் மற்றும் முஜாஹிதுகள் ஆகியோரின் இரகசிய பணிகள் குறித்தும், தில்லியில் அவர்கள் கூடும் இடங்கள் குறித்தும், இந்தியாவெங்கும் பிற புரட்சியாளர்ளுடன் அவர்களின் தொடர்புகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் இவர்களின் அறப்போருக்கு பொருளுதவிகள் செய்து வந்த தில்லியிலுள்ள பெரும் வணிகரான ஷேக் ஹுசைன் பக்ஷ் என்பவர் மீது புகார் அளித்தனர். இத்தகவலின் அடிப்படையில் வெள்யைர் அதிகாலை நேரங்களில் சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனையிட்டும் ஆயுதங்களை கைப்பற்றியும் ஆலிம்களையும் பிற முஜாஹிதுகளையும் கைது செய்தனர்.

மேலும் பேரரசர் பகதூர் ஷா அவர்களின் மகன்களான மிர்சா முகல், அபுபக்கர் மற்றும் கிஜிரி சுல்தான் ஆகியோர் புரட்சிக்கு முன்பே ஆங்கிலேய படையில் பணியாற்றும் இந்திய சிப்பாய்களுடன் தொடர்பேற்படுத்தி புரட்சிக்கு திட்டமளித்தனர்.

எனவே ஆலிம்கள், முஜாஹிதுகள், பேரரசர் பகதூர் ஷா அவர்களின் குடும்பத்தினர் புரட்சியை திட்டமிட்டு கட்டமைத்தது மட்டுமில்லாமல் அதற்கு குறிப்பிட்ட கால நேரத்தையும் குறித்திருந்தனர் என்பதே உண்மை.

இதனால் தான் புரட்சி தோற்கடிக்கப்பட்ட பின்பு ஆங்கிலேயர் பேரரசர் ஜாஃபர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது ஆங்கிலேய அரசை வீழ்த்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் ஆரம்பம் முதல் இரகசியமாக கடைபிடித்தனர் என்றும், அது ஆசியா முழுவதும் தொடர்பு கொண்டிருந்தது என்பதாகும்.

புரட்சிக்கு வித்திட்ட காரணங்கள்:

அ) ஆங்கிலேயர் இந்திய தேசத்திற்கு எதிரானவர்கள்:

இந்தியர்கள் ஆங்கிலேயரின் மதம் மற்றும் கலாச்சாரத்தை இறுதி வரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே போல் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாணிபம் மற்றும் ஆட்சி நிர்வாகம் நடத்திய போதும் ஆங்கிலேயர் இந்திய கலாச்சாரத்தோடு இணையவேயில்லை. அவர்கள் இந்தியரை அடிமைகளாகவே பாவித்தனர்.

முகலாயரும் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்கள் தான். ஆனால் அவர்களின் வருகைக்கும் ஆங்கிலேயரின் வருகைக்கும் பெரிய வேறுபாடு உண்டு.

“முகலாயர்கள் இந்தியாவை ஆள்வதற்காக படையெடுத்து வந்தனர். பேரரசர் பாபர் தில்லியை ஆண்டு வந்த இப்ராஹீம் லோடியை வீழ்த்தி முகலாய ஆட்சியை நிறுவினார். ஆனால் ஆங்கிலேயர் வாணிபம் செய்வதற்காக இந்தியாவிற்குள் வந்து தம் நயவஞ்சகத்தனம் மற்றும் சூழ்ச்சியால் இந்தியாவை அடிமைப்படுத்தினர்.

முகலாயர்கள் மங்கோலிய வம்சத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் இந்தியாவிற்கு வருகை புரிந்த பின்பு இந்திய மண்ணோடும், கலாச்சாரத்தோடும் கலந்து போயினர். இந்திய பெண்களை திருமணம் செய்தும், இந்திய உணவு, உடை, பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டனர். பேரரசர் பகதூர் ஷா அவர்களின் தாய் லால் பாய் கூட இந்திய ராஜ்புத் வம்சத்தை சேர்ந்தவர்கள்தான்.

இப்படி புதிய இந்திய தலைமுறை உருவாகியது. அது முழுக்க இந்திய தன்மை கொண்டதாகவும், இந்திய கலாச்சாரத்தோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டதாகவும் இருந்தது. இதனால் தான் இந்தியர் ஆங்கிலேயரை அந்நியராக எண்ணியது போல் முகலாயரை எண்ணவில்லை அதன் காரணமாகவே இந்துச் சிப்பாய்கள் மற்றும் அரசர்கள் 1857ல் இந்திய விடுதலைப் புரட்சிக்கு பேரரசர் பகதூர் ஷாவை தங்களின் புரட்சிப் போராட்டத்திற்கு தலைவராக மனமுவந்து ஏற்றனர்.

இது தான் அன்றைய உண்மை நிலை. ஆனால், இன்று இந்துத்துவ பாசிச இயக்கங்கள் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் விதமாக முகலாயரை மட்டுமின்றி முகமதியர் அனைவரையுமே அந்நியர் போல் வரலாற்றைத் திரித்துக் கூறுகின்றனர். ஆனால் இவர்களின் மூதாதையர்கள் பேரரசர் பகதூர் ஷாவை தங்களின் தலைமையாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டனர்.

ஆ. அரசியல் காரணங்கள்

டல்ஹௌசி பிரபுவால் கொண்டு வரப்பட்ட “நாடு இழக்கும் கொள்கை” இந்திய அரசர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. வாரிசின்றி மரணிக்கும் மன்னனின் நாட்டை ஆங்கிலேயர் பிடுங்கிக் கொண்டனர்.

இராணுவத்தில் ஆங்கிலேய, இந்திய சிப்பாய் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பாரபட்சம் காட்டப்பட்டது. இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி சுபேதார் ஆகும். அந்த உயர்ந்த பதவிக்கு வழங்கப்ட்ட ஊதியம் புதிதாக படையில் சேர்ந்த ஆங்கிலச் சிப்õபாயின் ஊதியத்தை விடக் குறைவாக இருந்தது.

1856ம் ஆண்டு லார்டு கானிங் “பொதுப் பணிப்படைச் சட்டம்” அமல்டுத்தினார் தேவைப்பட்டால் இந்திய சிப்பாய்கள் கடல் கடந்து சென்று போரில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. இச்சட்டம் மேலும் 1857ம் ஆண்டு புதிய ரக என்ஃபீல்டு துப்பாக்கிகளுக்கு கொழுப்பு தடவிய புதிய தோட்டாக்கள் சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுவாகவே கடினமான கொழுப்புகள் பன்றி அல்லது பசுவின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்டுவதால் அதனை பற்களால் கடித்து தோட்டாவின் மேலுறையை அப்புறப்படுத்த ஆங்கிலேயத் தளபதிகள் ஆணையிட்டதற்கு கீழ்ப்படிய இந்தியச் சிப்பாய்கள் மறுத்துவிட்டனர். அது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக கருதினர்.

புரட்சி எரிமலை வெடிக்கின்றது

1857ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் மீரட்டின் 3ம் காலாட் படைப் பிரிவு கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மாட்டோம் என்று மறுத்துவிட்டது. எனவே அப்படைப்பிரிவின் சிப்பாய்களை கைது செய்து ‘மே’ ஒன்பதாம் தேதி கட்டளைக்கு கீழ்படிய மறுத்த சிப்பாய்களுக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர்.

புரட்சிக்கு தலைமை தாங்கிய ஆலிம்கள் மற்றும் அரசர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியாவெங்கும் ஒரே நேரத்தில் புரட்சி தொடங்குவதற்கு மே 31 ம் தேதி திட்டமிட்டு நிர்ணயித்திருந்தனர். ஆனால் மீரட்டில் சிப்பாய்களுக்கு 10 வருடம் தண்டனை கொடுக்கப்பட்டதால் அப்படைப்பிரிவு கோபம் கொண்டு மே 11ம் தேதியே ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி தொடங்கியது.

சிப்பாய்கள் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி ஆயுதங்களை கைப்பற்றி, தங்களை அடிமை போல் நடத்திய ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொன்றொழித்து தில்லிக்கு அணிவகுத்தனர். இவ்வாறாக மீரட்டில் புயல் கரையை கடந்து தில்லி நோக்கி நகர்ந்தது.

புரட்சியில் ஆதாயம் தேடும் புல்லுருவிகள்

இந்தியச் சிப்பாய்கள் கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த நிகழ்வு இந்தியாவெங்கும் இருந்த படைப்பிரிவுகளில் பெரும்பாலானவற்றில் நிகழ்ந்தது. இங்கு நாம் இந்துத்துவ உயர் சாதிப் பார்ப்பனர்களின் ஒரு பொய் கூற்றை இனம் கண்டு கொள்வது அவசியமாகும்.

வி.டி. சாவர்க்கர் (காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்) எழுதிய “1857 இந்திய சுதந்திரப் போர்” என்ற புத்தகத்தில் 1857ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி வங்காளத்திலுள்ள பாரக்பூர் என்ற இடத்தில் பிராமண சிப்பாயான மங்கள் பாண்டே என்பவர் கொழுப்பு தடவிய தோட்டாவைப் பயன்படுத்த எதிர்த்து தனது அதிகாரிகளை சுட்டு காயப்படுத்தினார். அவரை ஆங்கிலேயர் கைது செய்து தூக்கிலிட்டனர் இச்சம்பவம்தான் புரட்சிக்கே வித்திட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை மையமாக கொண்டே ஹிந்தி மொழியில் “மங்கள் பாண்டே” என்றும் ஆங்கிலத்தில் “தி ரைசிங்” என்றும் திரைப்படங்கள் வெளியாகி வரலாற்றை திரிக்க முயல்கின்றன.

இது குறித்து மாபெரும் வரலாற்று ஆசிரியரான அறிஞர் வில்லியம் டேல்ரிம்பிள் தனது நூலில் இப்படி விளக்குகின்றார்.

“மங்கள் பாண்டே நிகழ்வு புரட்சிக்கு வித்திட்டது என்பது சற்றும் பொருத்தமற்றது. அந்த நிகழ்வு நடந்தது மார்ச் 29ல் ஆனால் புரட்சி தொடங்கியதோ இரண்டு மாதம் கழித்து மே 11, 1857ல் ஆகும். உண்மையிலேயே மங்கள் பாண்டேயை தூக்கிலிட்டது தான் சிப்பாய்களை புரட்சி செய்ய தூண்டிதெனில் அவர்கள் ஏன் மங்கள் பாண்டேவை தூக்கிலிட்ட வங்காளத்திற்கு சென்று பழி வாங்காமல் ஆயுதங்களுடன் தில்லி சென்று பேரரசர் பகதூர் ஷாவை புரட்சிக்கு தலைமை தாங்க அழைத்தனர்?”

மேலும் புரட்சி ஐந்து மாதம் தில்லியில் மையம் கொண்டிருந்தது. ஆனால் எவரும் மங்கள் பாண்டே குறித்து பேசியதாகவோ எழுதியதாகவோ சான்றுகளில்லை.

எத்தனையோ தாழ்த்தப்பட்ட இந்திய சிப்பாய்கள் இத்தேசத்திற்காக உயிர் நீத்துள்ளனர். ஆனால் ஒரு பார்ப்பன சிப்பாய் தூக்கிலிடப்பட்டது தான் புரட்சியையே தூண்டியது என்பது புரட்சியில் தாங்கள் மட்டுமே ஆதாயம் தேட முயற்சிக்கும் இந்துத்துவ பார்ப்பனிய உயர் ஜாதியினரின் திட்டமிட்ட சதியாகும்.

புரட்சிக்கு பேரரசர் தலைமை ஏற்பு மீரட்டிலிருந்து கிளம்பிய புரட்சிப்படை தில்லிக்குள் 1857, மே 11ம் தேதி திங்கட்கிழமை நுழைந்தது. அன்று முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் 16ம் நாளாகும். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போராட்டமான பத்ரு போர் ரமலானில் தான் நடைபெற்றது. அத்தகைய புனித மாதத்தில் இந்தியாவின் சுதந்திரப் புரட்சி தொடங்கியது.

இந்திய முஸ்லிம்களை புத்தெழுச்சி பெறச் செய்தது. தில்லியின் பாதுகாப்பு பொறுப்பிலிருந்த வெள்ளையர் அனைவரையும் கொன்று மதியத்திற்குள் தில்லியை வெள்ளையரின் நிர்வாக வளையத்திலிருந்து முற்றிலும் விடுவித்தனர். பின்பு பேரரசரின் அரண்மனைக்கு சென்று புரட்சிக்கு அவரின் ஆசியும் அனுமதியும் கோரி விண்ணப்பித்து இந்திய விடுதலைப் போருக்கு தலைமை தாங்க கோரினர். இது குறித்து ஆங்கிலேய விசாரணை பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“பேரரசர் தன் அரியாசனத்தில் அமர்ந்தவுடன், படைத்தலைவர்களும், சிப்பாய்களும் அவர் முன் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்கள் தலைகளை சாய்த்து அவரின் பொற்கரத்தை தங்கள் தலையின் உச்சியில் வைத்து ஆசி வழங்குமாறு கோரினர். பேரரசரும் அவ்வாறே புரட்சிக்கு தன் ஆசியை வழங்கி தலைமை ஏற்றார்.”

உலக வரலாற்றில் இது ஓர் அதிசய நிகழ்வு ஹிந்து மற்றும் அனைத்து மத மொழி மற்றும் இன இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஒரு முகமதிய அரசரிடம் ஆசி பெற்று அவரின் தலைமையின் கீழ் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதும் புரட்சிக்காக தேச விடுதலைக்காக தன் இன்னுயிர் நீத்ததிலும் முகலாயர் எப்படி மத நல்லிணக்கத்துடன் ஆட்சி புரிந்தனர் என்பதிலும் அம்மக்கள் எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் இருந்தனர் என்பதும் தற்கால தலைமுறையினருக்கு படிப்பினையாக உள்ளது.

புரட்சியின் நாயகன் மிர்சா முகல்

இந்திய விடுதலைப் போர் குறித்து அறியும் நாம் இப்புரட்சியின் முக்கிய கதாநாயகன் ஒருவரை குறித்து அறிவது அவசியம். அவர் பேரரசரின் ஐந்தாவது மகனான மிசர் முகல் மிர்சா முகலின் தாய் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர் என்று வரலாறு பதிவு செய்துள்ளது அவரின் பெயர் “ஷரபுல் மஹல் சைய்யிதானி” என்பதாகும்.

உண்மையில் மிர்சா முகல் தான் புரட்சியை ஆரம்பம் முதல் இறுதி வரை வழி நடத்தியவர். புரட்சிக்கு முன்பே நாடெங்கிலுமுள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

அதனால் புரட்சிப் படை தில்லிக்குள் நுழைந்தவுடன் தங்களின் பிரதான தலைமை தளபதியாக மிர்சா முகலை நியமிக்கும் படி பேரரசரிடம் விண்ணப்பித்து அவரை தங்களின் தலைமை தளபதியாக ஏற்றனர். புரட்சி குறித்து கிடைக்கப் பெற்றுள்ள ஆவணங்களில் மிகுதியானவை மிர்சா முகலின் ஆணைகள், தீர்ப்புகள் மற்றும் கடிதங்கள் தான் என்று வில்லியம் டேல்ரிடார்லிம்பிள் கூறுகிறார்.

இவர் தளபதியாக பதவியேற்றவுடன் முதன்மையாக அரண்மனைக் காவலர்கள் மற்றும் சிப்பாய்களை கொண்டு தில்லி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினார்.

சிப்பாய்களுக்கு உணவு வழங்குவதற்காக நாடெங்கும் பணியாளர்கள் அனுப்பப்பட்டு உணவு சேகரிக்கப்பட்டு முறையாக வினியோகிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள எல்லா அரசர்கள், நவாப்கள் மற்றும் இன, மொழி, மதத் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இந்திய விடுதலைப் போரில் பங்கு கொள்ள அழைத்தார். எல்லாவற்றிக்கும் மேலாக இறுதி வரை புரட்சியில் பங்கு கொண்டு ஷஹீத் ஆனார்.

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையின் காவலர் பகதூர் ஷா:

இந்தியாவில் ஹிந்துமுஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படவிருந்த சமயங்களிளெல்லாம் உடனடியாக பேரரசர் அவர்கள் குறுக்கிட்டு அழகிய சமரச தீர்வை வழங்கினார்.

மே19 ம் தேதி தில்லியிலுள்ள மௌலவி ஒருவர் பள்ளிவாசலில் ஜிஹாதிய கொடி ஒன்றை ஏற்றி இப்புனிதப் போர் இஸ்லாமியருக்கு மட்டும் உரியது என்று சொந்தம் கொண்டாடினார். பேரரசர் உடனடியாக இக்கொடியை இறக்கச் செய்தார்.

இவ்விடுதலைப் புரட்சி ஆங்கிலேயருக்கு எதிராக ஹிந்து மற்றும் முஸ்லிம் அனைவரும் சேர்ந்து போரிடும் ஒன்றாகும். இது இஸ்லாமியருக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல, என்று தீர்ப்புச் செய்தார்.

இதே போல் மே 20 அன்று ஒரு மௌலவி பேரரசரை சந்தித்து தில்லியிலுள்ள இந்துக்கள் ஆங்கிலேயருக்கு உளவு தகவல்களை அளித்து மறைமுகமாக புரட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் அதனால் தில்லியிலுள்ள இந்துக்களுக்கு எதிராக போர் புரிய அனுமதி வேண்டினார். அதற்கு பேரரசர் கூறியதாவது.

“ஹிந்துக்களும், முஸ்லிம்களும் எனது இரு கண்கள் இவர்கள் இருவரும் இணைந்து இப்புரட்சியில் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். இப்புரட்சி முழுக்க ஆங்கிலேயருக்கு மட்டுமே எதிரானது. இது ஹிந்துக்களுக்கு எதிரான ஒன்றல்ல”

இன்று ஏகாதிபத்தியம், ஊழல், ஜாதி மற்றும் மதவாதத்திற்கு எதிராக போராடும் இந்திய தலைமுறையினர் மேற்கூறிய பேரரசரின் வழிமுறையை பின்பற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியம். மதவாதம் பேசி பிரிவினையை ஏற்படுத்தி வரும் இந்துத்துவ சக்திகளை மக்கள் ஒதுக்கினால் மட்டுமே வெற்றி நிச்சயம்.

போரிலும் மனித உரிமைக்கு போராடிய மாமன்னர்:

வெள்ளையருக்கு எதிராக பேரரசர் போர் தொடுத்திருந்த போதிலும் ஆங்கிலேய பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமான 42 பேர்களை சிப்பாய்களிடமிருந்து காப்பாற்றி தன் அரண்மனை சமையல் அறைக்கு அருகில் மறைத்துக் காப்பாற்றி வந்தார்.

சில நாட்களுக்கு பின் இவ்விசயம் கேள்விப்பட்டு ஆங்கிலேயரால் பாதிக்கப்பட்டச் சிப்பாய்கள், பேரரசரிடம் வருகை புரிந்து உடனே 42 பேரையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டினர். அவர்களை கொடுத்தால் நிச்சயம் கொலை செய்து விடுவர் என்று அஞ்சி பகதூர் ஷா மறுத்து விட்டார்.

ஆனால் ஆயுதமேந்திய சிப்பாய்கள் கோபம் தலைக்கேறி அவர்களை தராவிட்டால் பேரரசரின் பிரதமர் மற்றும் அரசவையில் சிலரை ஆங்கிலேயருக்கு உதவியதற்காக கொன்று விடுவதாக மிரட்டினர்.

இந்நிலையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களை தனித்தனியாக பிரியுமாறு கட்டளையிட்டார் பேரரசர். பின்பு ஹிந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களிடம் “உங்கள் மதம் மற்றும் மார்க்கம் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்ல அனுமதிக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர். சிப்பாய்கள் பதிலின்றி மௌனமாயினர். எனினும் சிறிது நேரத்தில் சிப்பாய்களுக்கு மத்தியில் ஒரு வதந்தி பரவியது.

அதாவது, இந்த ஆங்கிலேய கைதிகளை விட்டு விட்டால் பின்பு இவர்கள் நம்மை அடையாளம் காண்பித்து கொலை செய்யத் தூண்டுவர் அதனால் எவரும் மிஞ்சாமல் கொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இதனைச் கேட்டு பேரரசர் கண்ணீர் விட்டு அழுது அப்பாவிகளை கொல்ல வேண்டாம் என்று தடுத்தார். ஆனால் கோப வெறியில் இருந்த சிப்பாய்கள் அதற்கு செவி சாய்க்காது அவர்களை கொன்று விட்டனர். இது பேரரசருக்கு தீராத மனக்கவலையை உண்டு பண்ணியது. இதனால் புரட்சியின் இறுதி வரை பேரரசர் பாதிக்கப்பட்டிருந்தார்.

அன்று தில்லியில் குழுமியிருந்த 80,000த்திற்கும் அதிகமான சிப்பாய்கள் பேரரசரின் சொந்த படையை சேர்ந்தவர்கள் அல்ல. புரட்சிக்காக இந்தியாவெங்கும் இருந்து தில்லி வந்தவர்கள் ஆவர். எனவே ஆயுதமேந்திய அச்சிப்பாய்களை அவரால் தடுக்க இயலாமல் போனது. இது அவரின் உடல் மற்றும் மன நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது இப்படி போரிலும் மனித உரிமைக்கு போராடிய மாமனிதரானார் பேரரசர் பகதூர்ஷா.

புனித போராளிகளின் சாகசங்கள்.

அ. யுத்த தந்திரி பக்த் கான்

வடமேற்கு மாகாணத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வந்த போராளி பக்த்கான் அவர்கள் தன் நண்பரான மௌலவி சர்ஃப்ராஜ் அலி அவர்களின் அழைப்பை ஏற்று தனது 400 முஜாஹிதுகளை கொண்ட படையுடன் புரட்சியில் பங்கு கொள்ள தில்லி வந்தார். இவரது வருகை மற்ற புரட்சி வீரர்களுக்கு புத்தெழுச்சி வழங்கியது. இவரது திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக சிறிது காலம் ஒட்டுமொத்த புரட்சி படையின் பிரதான இராணுவ தளபதியாக பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பக்த் கான் பிரதம தளபதியாக பதவியேற்றதும் புரட்சிப்படையை மூன்று பாகங்களாக பிரித்தார். தினமும் ஒரு படைப்பிரிவு கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுள்ள ஆங்கிலேய படைகளை தாக்க வேண்டும் இப்படி சூழற்சி முறையில் தினமும் ஆங்கிலேயரை தாக்கி பேரழிவை ஏற்படுத்தினார்.

ஆ. தற்கொலை படைப் போராளிகள்

இத்தாத் அலிகான் மற்றும் மௌலவி நவ்ஜிஸ் அலி ஆகியோரின் தலைமையில் 2000 முஜாஹிதுகள் எதிரியை சந்தித்து இறக்கும் வரை போராடுவோம் என்றும் இனி வீரமரணம் எய்தும் வரை உணவு கூட உட்கொள்ள மாட்டோம் என்றும் சபதம் செய்து அச்சபதத்திற்கு ஏற்ப இறுதிவரை போராடி ஷஹீதுகள் (வீரமரணம்) அடைந்து வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தனர்.

இ. பெண் போராளிகள்

புரட்சியின் ஒரு கட்டத்தில் எதிரிகளின் ஆயுத மழைக்கு அஞ்சி புறமுதுகிட்டு ஓடிய போது ராம்பூரில் இருந்து புரட்சியில் கலந்துகொள்ள வந்திருந்த இரண்டு முதிய இஸ்லாமிய பெண்கள் கையில் வாளேந்தி புறமுதுகிட்டு ஓடும் சிப்பாய்களை பார்த்து

“கோழைகளே! இதோ எந்த குண்டு மழைக்கு அஞ்சி நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அதனை நோக்கி அச்சமின்றி நாங்கள் செல்கிறோம்.”

என்று சூளுரைத்து களம் சென்றனர். இதனைப் பார்த்து புறமுதுகிட்டு ஓடிய சிப்பாய்கள் நாணி தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் களம் திரும்பி போரிட்டனர். அப்பெண்மணிகள் குண்டு மழை பொழிந்த அக்களத்தில் புரட்சி வீரர்களை ஊக்கப்படுத்தியும் அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களை கொண்டு வந்து கொடுத்தும் உதவி செய்தனர். போரின் முடிவில் ஒரு பெண் சிங்கம் சிறைப்பட்டது மற்றொருவர் குறித்து தகவலில்லை. அவர் வீரமரணம் அடைந்திருக்க வாய்ப்புண்டு.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப வீர முஜாஹிதுகளின் சாகசங்களில் நாம் பார்த்தது அணுவளவே.

இறுதி கட்டப் போர்

தில்லியை முற்றுகையிட்டிருந்த ஆங்கிலேயருக்கு தினசரி படைகளும் ஆயுதங்களும் மற்றும் உணவு பொருட்களும் வந்து குவிந்த வண்ணமிருந்தன. சீச்கியர்கள் சொந்த தேச மக்களுக்கு எதிராக ஆங்கிலேயருடன் கூட்டு சேர்ந்து அவர்களின் படையில் இணைந்து போராடினர்.

முற்றுகை ‘மே’ 18ல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீண்டதால் புரட்சி படையினருக்கோ உண்ண உணவு கிடைக்கவில்லை. அரண்மனைக்கு வரும் குடிநீரை கூட தடுத்துவிட்டனர். மேலும் பீரங்கிப் படைகளை அதிகமாக வரவழைத்து அரண்மனையின் சுற்றுச் சுவர்களை தகர்த்தும், வெடி மருந்துகளால் செங்கோட்டையின் பிரதான வாயில்கள் அனைத்தையும் தகர்த்து தில்லிக்குள் நுழைய முற்பட்டனர்.

சிப்பாய்களுக்கு உணவு வழங்க பணமின்றி இறுதியில் பேரரசர் அரண்மனை குதிரைக் கடிவாளங்கள், நாற்காலிகள் மற்றும் சமையல் பாத்திரங்களை விற்று உணவு வாங்கி படை வீரர்களுக்கு வழங்கினார்.

எதிரிகள் கோட்டைச் சுவரை தகர்த்து முன்னேறுவதை அறிந்த மிர்சா முகல் மற்றும் பக்த் கான் ஆகியோர் தில்லி மாநகரையே ஆங்கிலேயருக்கு ஒரு பொறியாக மாற்றினர். தில்லியின் எல்லாப் புறமும் தடைகள், பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பு வலையங்களை ஏற்படுத்தி எதிரி உள்ளே நுழைந்தால் வளைக்குள் சிச்கிய எலியாக அவர்களை நசுக்கிட திட்டமிட்டனர்.

இதனை அறியாமல் ஆங்கிலேய இராணுவம் “நிக்கல்சன்” எனும் கொடும் ராணுவ தளபதியின் தலைமையில் தில்லிக்குள் நுழைந்தனர். சிறிது நேரத்திற்குள் தன் தவறை உணர்ந்து கொண்டனர். எங்கிருந்து குண்டுகள் வருகின்றன என்று தெரியாதளவு குண்டு மழைகள் ஆங்கிலேயரை துளைத்தன.

ஆங்கில தளபதி நிக்கல்சன் விலாவில் குண்டு பாய்ந்து சரிந்தான். நிக்கல்சன் புரட்சி தொடங்கியது முதல் படை நடத்தி வந்த ஆலிம்களையும், சிப்பாய்களையும், அப்பாவி பொது மக்களையும் விசாரணையின்றி கொடூரமாக வழியெங்கும் சுட்டுக் கொன்றவன். ஒரு ஊரின் நுழைவாயிலில் பல்வேறு தூக்கு மரங்களில் பலர் தூக்கிலிடப்பட்டிருப்பதை வைத்து அவ்வூருக்கு நிக்கல்சன் வந்து சென்றதை ஆங்கிலேயரே அறிந்து கொள்வர். அத்தகைய தீய சக்தி ஒருவன் ஓர் இளம் இஸ்லாமிய படை வீரனால் வீழ்த்தப்பட்டான்.

நிக்கல்சனின் வீழ்ச்சி படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு ஆகியவை ஆங்கிலேய தலைமை தளபதி வில்சன் அவர்களை போரிலிருந்து பின் வாங்கி விடலாம் என்று முடிவு கொள்ளச் செய்தது. ஆனால் பிற படைத்தளபதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டத்தை கை விட்டு தொடர்ந்து போர் புரிய முடிவு செய்தார்.

போராளிகள் தரப்பிலும் இழப்பு கடுமையாக இருந்தது. மறுநாள் ஆங்கிலேயர் தங்களின் படை பலத்தைக் கூட்டிக் கொண்டு புதிய கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி தில்லியில் ஓடும் நதியின் நிறம் சிவப்பாகுமளவு போராளிகளை கொன்று குவித்தனர்.

முஜாஹிதுகளுக்கு வாழ்வா சாவா எனும் மரணப் போராட்டம் எனவே மரணத்தை தேர்ந்தெடுத்து இறுதி வரை போராடி மறு உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வீரத்தியாகிகளாயினர்.

செப்டம்பர் மாதம் 19ம் தேதி 1857ம் ஆண்டு தில்லி வீழ்ச்சியுற்றது புரட்சி புகழுடன் தோற்றது.

தில்லியில் குருதிப் புனல்:

வெள்ளையர் தில்லிக்குள் நுழைந்தவுடன் கண்ணில் பட்ட அனைவரையும் கொன்று குவித்தனர். குச்சா சீலன் என்ற பகுதியில் மட்டும் 1400 பேரை ஒரே நேரத்தில் வெட்டிச் கொன்றனர்.

செப்டம்பர் 20ம் தேதி தில்லி ஜும்ஆ மஸ்ஜிதில் வெள்ளையர் வெற்றி நடனமாடினர். பேரரசரின் குடும்ப உறுப்பினர்கள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டனர்.

நவாப்கள் மற்றும் இளவரசர்கள் விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். தில்லியை கொள்ளையிட்டு அதன் பொக்கிஷங்களை கவர்வதற்கு தனிப்படை நியமிக்கப்பட்டது. இவர்கள் அரண்மனை மட்டுமின்றி தில்லியின் அனைத்து வீடுகளிலும் புகுந்து சூறையாடினர்.

எல்லா வீதிகளின் ஓரத்திலும் தூக்கு மேடைகள் நிறுவப்பட்டு ஆலிம்கள் மற்றும் இளைஞர்கள் விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். இப்படி கொலையை கலையாக செய்தனர்.

தில்லி புராதன பொக்கிஷமான செங்கோட்டை 90% இடிக்கப்பட்டது. புகழ் பெற்ற பள்ளிவாசல்களான ஃபதேஹ்பூரி மற்றும் ஜீனதுல் பள்ளிகள் ஏலத்தில் விற்கப்பட்டன. அதனை சுன்னாமாஸ் என்ற வணிகர் ஏலத்தில் எடுத்து தனது சர்க்கரை மண்டியாக பயன்படுத்தினார்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறினர். தில்லி முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டது பெண்களின் நிலையோ சொல்லி மாளாது. காலிப், பெண்களின் நிலை குறித்து இப்படி பதிவு செய்கிறார்.

“தில்லியின் பெண் முதியவளாக இருந்தால் விபச்சார தரகராகவும், இளையவளாக இருந்தால் விபச்சாரியாகவும் ஆக்கப்பட்டாள்” அவ்வளவு கற்பழிப்புகள், கொடுமைகள் இழைக்கப்பட்டன.

பேரரசரின் மகன்களில் சிறுவர்கள் இருவரை தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். பேரன்கள் மற்றும் உறவினர்களும் கொல்லப்பட்டனர் தேச விடுதலைக்காக முன்னின்று போராடியதால் பேரரசர் பகதூர் ஷா தன் ஆட்சி மகன்கள் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் தியாகம் செய்தார்.

பேரரசரின் கைதும், அநீதியான விசாரணையும்:

1857ம் ஆண்டு செப்டம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் ஹுமாயுன் கல்லறையில் வைத்து பேரரசர் ஹட்ஸன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மிர்சா முகல் மற்றும் இரண்டு இளவரசர்களை விசாரணையின்றி ஹட்ஸன் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவர்களின் நகைகளை அபகரித்து இறந்த உடல்களை நிர்வாணமாக்கி மக்களுக்கு காட்சிப் பொருளாக்கினான்.

பேரரசரை அவரின் அரண்மனையிலேயே ஒரு இருண்ட அறையில் சிறை வைத்தனர். அவர் மீது ராஜ துரோகம் புரட்சியாளர்களுக்கு தலைமை ஏற்றது மற்றும் படுகொலை நிகழ்த்தியது ஆகிய குற்றச்சாட்டை சுமத்தி இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர்.

நான்கு மாதத்திற்கு பிறகு ஜுன் 27ம் தேதி 1857ம் ஆண்டு விசாரணை துவங்கி மார்ச் 9ம் தேதி முடிவுற்றது முடிவில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி பேரரசர் பகதூர் ஷாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்தண்டனையை கழிக்க தகுந்த சிறைக்கு அவரை மாற்ற தீர்ப்புச் செய்தனர்.

முகலாய பேரரசர் பகதூர் ஷாவை கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவம் விசாரித்ததும், தண்டனை வழங்கியதும் சர்வதேச சட்டப்படியும் அன்று நடைமுறையில் இருந்த ஒப்பந்தங்களின் படியும் அநீதியாகும்.

ஏனெனில் 1599ல் இங்கிலாந்து பாராளுமன்றமும் ராணியும் தங்களின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வியாபாரம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வாங்கியிருந்தனர். கிழக்கிந்திய கம்பெனி என்பது சட்டப்படி ஒரு வியாபார நிறுவனமே; மாறாக, ஓர் அரசோ அல்லது அரசாள உரிமை பெற்ற ஒன்றோ அல்ல.

1765 ம் ஆண்டு ஆகஸ்டு 2 ம் தேதியில் தான் பேரரசர் பகதூர் ஷாவின் பாட்டனர் ஷா ஆலம் அவர்கள் கிழகிந்திய கம்பெனிக்கு வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையை வழங்கினார். அதுகூட தில்லி பேரரசுக்கு கீழ்ப்படிந்து தான் வரி வசூலிக்க அனுமதி தரப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி தன் நயவஞ்சகத்தால் நவாப்கள் மற்றும் இளவரசர்களை சூழ்ச்சியின் மூலம் வீழ்த்தி தன் நிலப்பரப்பை அதிகரித்தனர். எனவே கிழக்கிந்திய கம்பெனி செய்தது தான் இராஜ துரோகம், மேலும் ஒரு நாட்டின் அரசரை எப்படி ஒரு வணிக நிறுவனம் விசாரித்து தண்டனை வழங்க இயலும்?

மேலும் தேசமும் தேசத்தின் சொத்துக்களும் சட்டப்படி முகலாயனருடையது. எனவே பேரரசர் பகதூர் ஷா எப்படி இங்கிலாந்து நாட்டின் ராணிக்கு துரோகம் செய்ததாக இராஜ துரோக குற்றச்சாட்டு சுமத்த முடியும்?

இன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசங்கள் ஈராக்கின் மீது படையெடுத்து சதாம் உசேனை தூக்கிலிட்டது எப்படி சர்வதேச சட்டப்படி குற்றமோ அதைவிட பன்மடங்கு குற்றம் வணிக நிறுவனம் ஒன்று ஒரு பேரரசருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் இன்று போல் அன்றும் இந்த கொடுங்கோலர்களை எவரும் தட்டிக் கேட்கவில்லை. முந்நூற்றைம்பது ஆண்டுகள் இத்தேசத்தை ஆண்ட முகலாயரின் ஆட்சி இவ்வாறு அநீதியால் அழிக்கப்பட்டது.

பேரரசரின் புரட்சியின் விளைவுகள்:

முஸ்லிம்கள் புரட்சியை முன்நின்று நடத்தியதால் இஸ்லாமிய சமூகமே ஆங்கிலேயருக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது மதரஸாக்கள் புரட்சியின் மையமாக செயல்பட்டதால் பல மதரஸாக்கள் மூடப்பட்டன. புரட்சிக்கு வித்திட்ட பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு அரபி மொழியை அர்த்தமின்றி ஓதுவதற்கு ஏற்ப பாடத்திட்டங்கள்  வடிவமைக்கப்பட்டன.

ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம் மன்னர்களை தீயவர்களாகவும் அந்நியர் மற்றும் படையெடுத்து வந்தவர்கள் என்ற கருத்தைப் புகுத்தி பல இந்துக் கோயில்களை இடித்ததாக வரலாற்றை திரித்துக் கூறி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தனர். 1857க்கு பின் எழுதப்பட்ட பல வரலாறுகள் ஆங்கிலேயரின் பிரித்தாலும் சூழ்ச்சியின் விளைவே! அதன் தாக்கம் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வரை தொடர்ந்து இன்று வெளிப்படுகிறது.

அரசு வேலை வாய்ப்பு, இராணுவம் மற்றும் காவல்துறையில் முஸ்லிம்கள் முற்றாக தடை செய்யப்பட்டனர். எனினும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான விதை இப்புரட்சியின் மூலம் விதைக்கப்பட்டது.

தேசப்பற்றை மக்களிடையே விழித்தெழச் செய்து தேசிய இயக்கங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நீக்கப்பட்டு இந்தியா நேரடியாக ஆங்கிலேய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியர் அடிமை வர்க்கமல்ல அடிமைத் தளையில் அவர்களை வெகுநாள் வைத்திருக்க இயலாது என்பதை ஆங்கிலேயர் இப்புரட்சியின் மூலம் உணர்ந்தனர்.

பேரரசரின் சிறைவாழ்வும் மரணமும்

பேரரசர் 1858ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். நான்கு ஆண்டுகள் தனது ஆயுள் தண்டனையை கழித்து 1862ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி தனது எண்பத்தி ஏழாவது வயதில் இந்திய தேசத்தின் முதல் விடுதலைப் போரின் நாயகன் ஓர் சிறைவாசியாக அந்நிய தேசத்தில் மரணித்தார்.

இந்திய தேசத்தின் பெரும்பகுதியை தனது ஆட்சிப்பரப்பாக கொண்டு ஆண்ட முகலாய வம்சத்தின் இறுதி பேரரசர் தன் தேசத்தின் விடுதலைக்காக போராடி அந்நிய தேசத்தில் ஓர் சிறைவாசியாக மரணித்தார்.

அன்று மாலையே அவரது புனித உடலை விரைவாக ஆங்கிலேய அதிகாரி டேவிஸ் எவருக்கும் தெரியாமல் அடக்கம் செய்து அவரது உடல் உடனடியாக அழிய வேண்டும் என்று சுண்ணாம்புக்கல் கொண்டு மண்ணறை மூடப்பட்டது.

மேலும் அவரது கல்லறையை எவரும் அடையாளம் கண்டு விடக்கூடாது என்று தரையோடு தரையாக சமதளமாக்கப்பட்டது. 1991ம் ஆண்டு பர்மா நகராட்சியினர் சாக்கடைப் பணிக்காக நிலத்தை தோண்டிய போது தான் பேரரசரின் உண்மையான மண்ணறையை அடையாளம் கண்டனர்.

அவரின் உடலை விரைவாக மக்கிப்போகச் செய்த ஆங்கிலேயரால் அவர் விதைத்த புரட்சிப் போரின் சிந்தனையை இத்தேச மக்களிடமிருந்து அழிக்க முடியவில்லை. அதனால் தான் 1940களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வெள்ளையருக்கு எதிராக இந்திய தேசியப் படையை நிறுவி போர் தொடுக்கும் முன்பு பேரரசர் பகதூர் ஷாவின் மண்ணறைக்கு சென்று பிரார்த்தித்து ஆசி பெற்ற பின்பே நடத்தினார்.

“இத்தேசத்திற்காக பெரும் தியாகம் புரிந்த இம்மானிதரை இன்று இத்தேசம் மறந்தது இத்தேசத்தின் துரதிஷ்டமே. இவரது வரலாற்றை குறித்து ஆய்வு செய்த வில்லியம் டேல்ரிம்பிள் அவர்கள் இது குறித்து கூறுகையில்

“1857ம் ஆண்டு சிப்பாய் புரட்சி மற்றும் பேரரசர் பகதூர் ஷா குறித்த ஆவணங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. நான் சென்று தூசி தட்டி அதனை எடுத்துப் படிக்கும் வரை இத்தேசத்தின் ஒரு வரலாற்று ஆய்வாளர் கூட அதனைப் படித்து மக்களிடம் சமர்ப்பிக்காதது துரதிஷ்டமே”

சுதந்திரத்திற்கு பின் இவரது வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இத்தேசத்திற்காக முஸ்லிம்கள் சிந்திய இரத்தங்களும், இழந்த இழப்புகளும் இமயத்தையும் விஞ்சியவை.

ஆனால் முஸ்லிம்களின் தியாகத்தின் பயனை இன்று பிறர் அனுபவிக்கின்றனர்.

இளைய தலைமுறை தன் வரலாற்றிலிருந்து தன்னை எழுச்சிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று தேசம் ஏகாதிபத்திய சுரண்டல், ஊழல், ஜாதி மற்றும் மதவாதத்தால் அடிமைப்பட்டுள்ளது.

அதன் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து உண்மையான சுதந்திரக் காற்றை அனைவரும் ஜாதி, மத பேதமின்றி சுவாசிக்கச் செய்ய வேண்டிய கடமை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உண்டு.

இவன்

இப்னு முஹம்மது

குறிப்பு :

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எல்லா வரலாற்று நிகழ்வுகளும் ஆதாரப்பூர்வமானவை.

குறிப்புதவி நூல்கள் :

The Last mughal by william darlymple
Pritchett/Nets of Awareness.
Trial Evidences
NAM, Wilsan Letters
The Hindu , May 26, 2012
DVA 31 May 1857.



[][][]