மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறலாம்.
ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் 'ஜான் நம்ஸ்லே' வெளியிட்ட 'தி எலமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 இல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.
எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:
1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.
No comments:
Post a Comment