Translate

Tuesday, 27 October 2015

அவமானத்தால் தலை குனிகிறேன் - ஆர்.எஸ்.எஸ் குறித்து கடற்படை முன்னாள் தளபதி!


அவமானத்தால் தலை குனிகிறேன் - ஆர்.எஸ்.எஸ் குறித்து கடற்படை முன்னாள் தளபதி! 
.
திங்கட்கிழமை, 26 October 2015 18:44 பகுதி: இந்தியா 
.
புது டெல்லி : சமீப காலமாக தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ராம்தாஸ் இந்திய ஜனாதிபதி, பிரதமருக்கு திறந்த மடல் எழுதியுள்ளார்.
.
இந்திய கடற்படையின் முன்னாள் தளபதியும் அமைதிக்கான மாக்சாசே விருது வாங்கியவருமான அட்மிரல் லக்ஷ்மி நாராயண் ராமதாஸ் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 பக்க திறந்த மெடல் ஒன்றை எழுதியுள்ளார். அம்மடலில் இருந்து சில முக்கிய பகுதிகள் பின் வருமாறு:
.
"கனத்த இதயத்தோடு இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். சுதந்திரம் கிடைத்த சில நாட்களிலேயே 14 வயதில் இந்திய ராணுவத்தில் இணைந்து 45 ஆண்டுகள் பணியாற்றி கப்பற்படை தளபதியாக ஓய்வு பெற்றவன் எனும் அடிப்படையில் இந்தியா சந்தித்த பல்வேறு மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன்.
.
இக்கடிதத்தை எழுதும் நானும் இந்து நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவனே. எனக்கு தெரிந்த இந்து மதம் அன்பாலும் பிறரை மதிக்கும் தன்மையாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்டது. வன்முறையையும் எதையும் சகித்து கொள்ள முடியா இன்றைய இந்துத்துவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது நான் அறிந்த இந்து மதம்.
.
எண்பது வயதாகும் முதியவனாகிய நான் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலால் அவமானத்தால் தலை குனிகிறேன். இந்திய ராணுவத்தில் போர்கப்பல்களிலோ, போர் விமானங்களிலோ அல்லது காலாட்படையிலோ இந்து, முஸ்லீம், கிறித்துவர் எனும் வேறுபாடு பார்க்கப்பட்டதில்லை. அப்படியிருக்கையில் ஏன் மே 2014க்குப் பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்?
.
இன்று ஒவ்வொரு முஸ்லீமும் தன்னுடைய நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளது வேதனைக்குரியது. குறிப்பாக அவர்களின் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அவர்கள் எதை உண்ண வேண்டும் என்பதற்கான உரிமையும் மறுக்கப்படும் சூழலிலும் இது தொடர்கிறது. தெளிவான திட்டமிடப்பட்ட கூட்டு கலவரங்கள் கவலையளிக்கும் செயலாகும்.
.
இந்து ராஷ்டிராவைக் கட்டமைக்கும் ஓரே நோக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை இந்து அமைப்புகளும் செயல்படுவது கவலைக்குரியது. மேலும் இதற்கு அரசு தரப்பில் கவலையளிக்கிறது, வேதனை தருகிறது என்று எளிதான பதில்களைச் சொல்வதன் மூலம் தன் கடமையிலிருந்து அரசு நழுவுகிறது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களும் இவ்வாறே பேசுவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல.
.
இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் நெருப்போடு விளையாடுகிறோம் என்பதை உணர வேண்டும். முஸ்லீம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் ஏற்கனவே ஒடுக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது நமக்கான வரமாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் நாம் இவர்களின் செயல்பாடுகளால் பிற நாடுகளால் ஃபாசிஸ்டுகளாக பார்க்கப்படுகிறோம்.
.
இந்திய ஜனாதிபதி, பிரதமர் இருவரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பதவியேற்றுள்ளீர்கள். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியுள்ள படி ஒவ்வொரு மனிதனின் பேச்சுரிமை, வழிபாட்டுரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம். இவ்வரசு அவ்வாறு செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் எனக்கும் உண்டு.
இப்போதே இதை தடுக்கா விட்டால் பிறகு எக்காலத்திலும் தடுக்க முடியா அளவு மோசமாகி விடும் என்பதைச் சொல்லி கொள்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்."
.

****************************
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை.
. 
(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. 
.
தலித் பகுஜன் மக்களை உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.
.
இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.
.
சுற்றறிக்கையிலிருந்து . . . . ( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர்களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.
.
பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களி டையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல்மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.
.
சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும். ஒரு ரத்ததான முகாம் நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
.
தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.
.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக்கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும். 
.
நமது கட்டளைப்படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை படிக்கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத் தப்பட வேண்டும்.
.
கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண்டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.
.
முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர் ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.
.
இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும். 
.
தாழ்த்தப்பட்டவர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள பேக்லாக் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள், அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
.
சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்பவர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.
.
இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவியுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
.
யோகீந்தர் சிக்கந்த்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
.


நன்றி : Tamilselvan Sp



No comments:

Post a Comment