Translate

Tuesday, 27 October 2015

மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் 1.25 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது..!



அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் 1.25 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது..


அமெரிக்காவில் இனவெறி நீங்க வெள்ளையர்கள் இஸ்லாத்தை ஏற்பதே தீர்வு என்று மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் ஏலத்தில் சுமார் 1.25 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது .. இந்திய மதிப்பில் சுமார் 9 கோடிகள் ஆகும்.. 



இக்கடிதம் மால்கம் எக்ஸ் ஹஜ் சென்ற பொழுது மக்காவில் இருந்து 1964 எழுதப்பட்டதாகும்.. மக்காவுக்கு செல்லும் வரை நேசன் ஆப் இஸ்லாத்தின் தவறான வழிகாட்டுதலில் இஸ்லாம் என்பது கருபர்களுக்கான மார்க்கம் என்ற தவறான சிந்தனையில் இருந்ததாகவும் .. மக்காவில் பல இன , நிற , கலாட்சார மக்களை பார்த்த பொழுது அவர்களுக்குள் எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் இறைவன் ஒருவனே அவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற சகோதரத்துவத்தின் படி மக்களின் வாழ்வியலை அமைக்க சிறந்த ஒரே வழி இஸ்லாம் தான் என்றும் அது முதல் வெள்ளையர்களுக்கு எதிரான கட்டுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திய மால்கம் எக்ஸ் ... அமெரிக்காவில் இனவெறியும் நிறவெறியும் நீங்க ஒரே தீர்வு இஸ்லாம் தான் என்று பிரகடனப்படுத்திய முதல் கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.. 


ஆறு பக்கங்களை கொண்ட இந்த கடிதத்தில் இஸ்லாத்தை பற்றிய , ஹஜ்ஜில் தான் பார்த்த சகோதரத்துவத்தை பற்றி முழுமையாக மால்கம் எக்ஸ் விவரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

நன்றி: Nsa khadir.


1 comment: