பாபர் மசூதியை மீட்க முஸ்லிம்கள் மட்டும் போராடவில்லை. மாறாக பல ஹிந்து சகோதர்களும் தங்களால் ஆன மட்டும் பார்ப்பனீய இயக்கவாதிகளின் சூழ்ச்சிகளை எதிர்த்து போராடினர் . அவர்களில் ஒருவர் தான் அக்க்ஷய் பிரம்மச்சாரி. பாபர் மசூதி விவகாரத்தில் இசுலாமியர்களுக்காக குரல் கொடுத்த காந்தியவாதி.அன்று பார்ப்பனீய இயக்கத்தின் ஊதுகுழலலாக செயல்பட்ட உ.பி.காங்கிரசில் எழுந்த நியாயக்குரல் அக்ஷய் பிரம்மச்சாரியினுடையது மட்டுமே.
இவர் பாபர் மசூதி பிரச்சினையை சட்டத்தின் மூலம் தீர்க்க அரும்பாடுபட்டார். ஆனால் அன்று நீதிபதியாக இருந்த நாயர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதை பிறகு தெரிந்துகொண்டார். பின்பு இவர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபை ரவுடிகள் இவரை அடித்துத் துரத்தினர்.
ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதிலும் எடுத்து செல்லவும், பிரதமரிடம் கூட கொண்டு செல்லும் அளவுக்கு உறுதி காட்டினார். அப்போதைய பிரதமர் நேரு இவரை லால் பகதூர் சாஸ்திரியை பார்க்க சொன்னார். உத்தரப்பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரி, அயோத்தியில் பிரச்சினை ஏதும் இல்லை என்று சட்ட சபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.
ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சிவரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் நியாயம் பெற்றுத் தர முடியவில்லை.
பாபர் பள்ளிவாசலை இடித்த கருப்பு தினம் (டிசம்பர் 6) நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் தருணத்தில் இம்மனிதரை நினைவுகூர வேண்டும்.
No comments:
Post a Comment