ஒளரங்கசீப் - மக்கள் நலன் விரும்பும் ஒரு ஆட்சியாளர் பொய்களின் மூலம் கொடூரமானவராக மாற்றப்பட்ட கொடுமை ..??
இன்றுவரை பார்ப்பனீய இயக்கங்கள் ஒளரங்கசீப்பை பற்றி குறிப்பிடும் போது அவர் கொடூர மன்னர் கோவிலை இடித்தார் என்று கீறல் விழுந்த ரெகார்டை ஓட்டுவார்கள்.. உண்மையில் ஒளரங்கசீப் கோவிலை உடைத்தாரா ? உண்மை தான் .. கோவிலை மட்டுமில்லை . மசூதியையும் ஒளரங்கசீப் உடைத்துள்ளார்.. அதை போல பல கோவில்களுக்கு மானியங்களும் கொடுத்துள்ளார் , மேலும் ஹிந்துக்களின் பல புனித கடமைகளுக்கு முந்தைய அரசுகள் விதித்திருந்த பல வரிகளையும் நீக்கிய மன்னர் தான் ஒளரங்கசீப் ..
கோவிலை இடித்தார் என்று கூறும் பார்ப்பனீய இயக்கங்கள்.. எதற்காக ஒளரங்கசீப் கோவிலை இடித்தார்..? என்ற உண்மையை மக்கள் மன்றத்தில் எப்படி கூறாமல் மறைக்கிறார்களோ அதை போன்ற நிலை தான் ஒளரங்கசீப் மசூதியை உடைத்த வரலாற்றையும், ஹிந்து சமூக மக்களுக்கு மானியங்களையும் கொடுத்த வரலாற்றையும் மறைத்து வருகின்றனர். ஏன் மதச் சம்பிரதாயம் என்ற பெயரில் பெண்கள் சதி என்ற உடன்கட்டை ஏறுதல் போன்ற பல செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவரும் ஒளரங்கசீப் தான்.. இந்த உண்மைகள் எல்லாம் மக்களுக்கு தெரியும் பட்சத்தில் ஒளரங்கசீப் கொடூர மன்னர், ஹிந்து மக்களுக்கு எதிரான மன்னர் என்ற வாதத்திற்கு பலம் இல்லாமல் போய்விடும் அல்லவா..? அதனால் தான் இப்படியான கேடுகெட்ட நிலைகள். இதன் விளைவு ஒரு சிறந்த மன்னராக மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யாத மக்கள் மனங்களில் நினைவு கூற வேண்டிய ஒளரங்கசீப் என்ற மனிதர் இன்று பார்பனீய இயக்க கூட்டங்களால் இகழப்படும் மன்னராக உள்ளார்.
மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்களை பற்றிய சிறு குறிப்பு..
கோவிலை இடித்தாரா ?
காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒளரங்கசீப் இடித்தார் என்று ஒரு வரலாற்றுப் புரளியைக் கிளப்பிவிட்டார்கள். அப்படி கோயிலை இடிக்கும்படி உத்தரவிட்டது உணமைதான். பொய்யைவிட மோசமானது பாதி உண்மையை சொல்வது என்று சொல்வார்கள். அதுபோல்தான் இந்த சம்பவமும். கோயிலை இடிக்கச் சொன்னார் என்று சொல்கிறார்களே.. அது எதற்காக..? என்கிற வரலாற்று உண்மையை ஏன் மறைக்கிறார்கள்.? அந்தக் கோயில் இடிக்கப் பட்டதற்குக் காரணமாக கூறப்படும் சம்பவம் என்னவென்றால், ஒரு இந்து குறுநில மன்னரின் ராணிகள் காசியில் குளிக்க வந்தார்கள். அந்த ராணிகளுள் ஒருவர் இருண்ட இடத்தில் கோயிலுக்குள் வைத்து மானபங்கப் படுத்தப் பட்டார். (அண்மையில் காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்கிற பூசாரி கூட கோயில் கருவறைக்குள் வைத்து ஒரு பெண்ணிடம் கசமுசா செய்த காட்சிகளால் வலைதளங்கள் நாறினவே அதுபோல் ஒரு செய்கைதான் இது.) இந்த சம்பவத்தால் காசி விஸ்வநாதர் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக இந்துக்கள் ஒன்றுகூடி மன்னர் இடம் முறை இட்டனர். இதனால் காசி விஸ்வநாதர் உடைய விக்கிரகம் அங்கிருந்து அகற்றப் பட்டது; கோயில் இடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்துக்களின் கோரிக்கைக்கு மன்னர் செவி சாய்த்ததால் நடந்ததே தவிர மன்னரின் விருப்பத்துக்கு அல்லது கொடுங்கோல் முறைக்கு உட்பட்டது அல்ல.
மசூதியும் இடித்தார் ?
கோல்கொண்டா என்கிற பகுதியை ஆண்ட மன்னன் தானக் ஷா, அரசுக்கு வரிகட்டாமல் பல வருடங்கள் டிமிக்கி கொடுத்து வந்தான். மன்னர் பலமுறை கேட்டும் வரிகளைக் கட்டாமல் ஒரு முட்டாள்தனமான வேலை செய்தான். அதாவது ஒரு பள்ளிவாசலைக் கட்டினான். அந்தப் பள்ளிவாசலில் ஓரிடத்தில் தான் கட்டவேண்டிய வரிக்குரிய செல்வத்தைப் புதைத்து வைத்தான். இதை ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் ஒளரங்கசீப் அந்த பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்கினார். புதைத்து வைத்திருந்த செல்வம் மீட்கப்பட்டு அரசாங்க கஜானாவில் சேர்க்கப் பட்டது. கோயில் இடிக்கப் பட்டது பற்றி கொடி நாட்டிப் புலம்புவோர் இந்த பள்ளிவாசல் இடிக்கப் பட்டது பற்றி ’பேச்சு மூச்சையே காணோம்.’
கோவில்களுக்கு மானியம் வழங்கியவர்..!
தமிழ்நாட்டில் குமரகுருபரர் என்பவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. சைவ சமயத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் பரப்பியவர்களில் அவர் முக்கியமானவர். குமரகுருபரர் வாழ்ந்து பணியாற்றிய காலம் ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலமே ஆகும் (1625-1688). குமரகுருபரர் கேட்டுக் கொண்டதன் பொருட்டு, காசியில் சைவ மட ஆலயங்களை நிறுவ ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன. அதே போல பல்வேறு மானியங்களும் வழங்கப் பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக் கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவமும் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடை படுத்தவில்லை. (பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802)
சதி என்னும் உடன்கட்ட ஏறுதல்..!
ஒளரங்கசீப் இந்திய மண்ணில் புரையோடிப் போய் இருந்த புண்களை அகற்றுவதில் முனைப்புக் காட்டினார். இது புரோகிதக் கும்பலுக்குப் பிடிக்கவில்லை. உதாரணமாக, இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும் போதே அதே நெருப்பில் இறந்தவரின் மனைவியும் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் இந்துக்களிடையே நிலவி வந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்று அழைக்கப் பட்டது.
ஒரு முறை போர்க்களத்தில் இறந்த ஒரு இந்து சமுதாயத்தைச் சார்ந்த வீரரின் உடலை எரித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவனது மனைவியை அந்த நெருப்புக்குள் குதிக்கச் சொல்லி கூடியிருந்த கூட்டத்தார் கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீரனின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த மாமன்னர் ஒளரங்கசீப் அந்த செயலை இரும்புக் கரம் கொண்டு தடுத்தார். மன்னர் தங்களின் மத விஷயத்தில் தலையிடுவதாக அங்கிருந்தோர் கூச்சலிட்டனர்; வாதம் செய்தனர். ஆனால் மன்னர் உறுதியாக இருந்து, அந்த மனைவியை உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார். இனி இந்தக் கொடுமைகள் மொகலாயப் பேரரசில் எங்குமே இருக்கக் கூடாது என்று உடனே உத்தரவும் பிறப்பித்தார். இதற்காகவும் ஒளரங்கசீப் மத விஷயங்களில் தலையிடுவதாக பழி தூற்றப் பட்டார்.
ஹிந்துக்களுக்கு ஜிஸ்யா வரி..!
ஒளரங்கசீப் மீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச்சாட்டு அவர் முஸ்லிம்களுக்கு ஜக்காத் போல முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்கிற வரியை விதித்தார் என்பதாகும் உண்மையில் இந்த வரி விதிக்கப் பட்டது இந்துக்களின் கோயில்களை நிர்வாகம் செய்வதற்கே ஆகும். இந்த வரி செலுத்துவதில் இருந்து முதியோர், பிச்சைக்காரர்கள், பாதிரியார்கள், அர்ச்சகர்கள், உடல் ஊனமுற்றோர், இராணுவத்தில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு விதிவிலக்கும் தரப்பட்டு இருந்தது.
அந்த ஜிஸ்யா வரியை அரசுக்கு வருமானமாக அவர் ஒருபோதும் விதிக்கவில்லை. இந்த வரியும் கூட ஏற்கனவே ஆண்ட மொகலாய மன்னர்களால் விதிக்கப் பட்டதுதான். இன்று கோயில்களில் உள்ளே நுழைவதற்கு சீட்டுகள், தரிசன சீட்டுக்கள், தனிவழி சீட்டுகள், அர்ச்சனை சீட்டுகள் என்றெல்லாம் அவர்கள் நம்பும் கடவுளைக் காண்பதற்கு வகுப்பு மற்றும் வரிசைவாரியாக கட்டணம் வசூலிக்கிறார்களே, அது மட்டும் சரியாகுமா? இந்தக் கட்டணங்கள் வசூலிப்பது கோயில்களை நிர்வாகம் செய்வதற்கு என்று சொல்பவர்கள் இதையே ஒளரங்கசீப் நாடு முழுவதற்கும் மொத்தமாக அமுல படுத்தினால் அதை எதிர்த்து வரலாற்றில் சேற்றை அள்ளி அவர் மீது பூசுவது ஏன்?
ஹிந்து சமூக மக்களுக்கு பல வரிகளை நீக்கியவர்..!
உண்மையில் ஒளரங்கசீப் அவர்கள், ஏற்கனவே இந்துக்கள் மீது சுமத்தப் பட்டிருந்த பல வரிகளை ரத்து செய்தார் என்பதே உண்மை. இதை வரலாறு மறைத்து வைத்து இருக்கிறது. இதோ அந்தப் பட்டியல் :-
இந்துக்கள் தங்களின் வாழ்வில் ஒருமுறையாவது காசி சென்று அங்கு ஓடிக் கொண்டிருக்கும் கங்கை நதியில் நீராடி வந்தால் பாவங்கள் நீங்கி விடுமென்பது அவர்களின் நம்பிக்கை. ஒளரங்கசீப்புக்கு முந்திய மொகலாயர்களின் ஆட்சியில் இவ்விதம் காசி செல்வதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் வரி செலுத்த வேண்டியது இருந்தது. இந்த வரியை நீக்கியவர் ஒளரங்கசீப் ஆவார்.
அதே கங்கையில் இறந்தவர்களின் அஸ்தி என்கிற சாம்பலைக் கரைப்பது என்பதும் அதற்கான கங்கைக்கரையில் சடங்குகள் செய்வதும் இந்துக்களின் பழக்கம். இதற்கும் வரி இருந்தது, இந்த வரியையும் நீக்கியவர் சாட்சாத் ஒளரங்கசீப்பே.
புனித நதிகளில் மீன் பிடிப்பதற்கும், பசு மாடுகளில் பால் கறந்து விற்பதற்கும், பெரும்பான்மை இந்துக்கள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் விற்பதற்கும், சிலவகைப் பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரிகள் இருந்தன. அந்த வரிகள் அனைத்தும் ஒளரங்க சீப் உடைய ஆட்சியில்தான் ரத்து செய்யப் பட்டன.
மாட்டின் சாணத்தைத் தட்டி சுவர்களில் ஒட்டிக் காய வைத்து அதை எரிபொருளாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இந்த எரிபொருள் சமைப்பதற்கும் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்பட்டன. இதற்கு ஏற்கனவே வரி இருந்தது. இந்த வறட்டி வரியை விரட்டி அடித்தவர் ஒளரங்கசீப் ஆவார். இதனால் பல கோடி இந்துக்கள் பயன் பெற்றனர்.
ஏதாவது ஒரு அசாதாரணமான சந்தர்ப்பத்தில் ஜாதியில் கீழ்த்தரமான ஒரு விதவைப் பெண்ணை ஒரு உயர்சாதி ஆண் தொட்டு விட்டாலோ, பட்டு விட்டாலோ, திருமணமே செய்து கொண்டாலோ, அதற்காக வரி செலுத்த வேண்டி இருந்தது. இந்த வரியையும் ஒழித்துக் கட்டி விதவை மணத்தை இந்து சமூகத்தில் ஊக்குவித்தவர் ஒளரங்கசீப்.
இந்துக்களின் கோயில் திருவிழா மற்றும் பண்டிகைகளின் போதும் மக்கள் அதிகமாகக் கூடும் சந்தைகளிலும் கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் கட்டிக் கொண்டிருந்த உள்ளூர் வரிகளையும் ரத்து செய்தார்.!
50 ஆண்டுகள் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆட்சி செய்த ஒரு மன்னர் தான் நினைத்திருந்தால் மற்ற முகலாய மன்னர்களை போல சுகபோக வாழ்கையில் வாழ்ந்து இறந்திருக்கலாம்.. ஆனால் தனது வாழ் நாள் முழுவதையும் எளிமையுடனும், மக்கள் நலன் பேணும் ஆட்சியாளராகவே வாழ்வை அமைத்திருந்தார். அது மது உள்ளிட்ட மக்களை அழிக்கும் வஸ்துக்களை தடை செய்ததில் இருந்து, வெள்ளத்தால், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரி ரத்து செய்ததில் இருந்து, பல செயல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம் .
ஒளரங்கசீப் தான் இறக்கும் முன் தன் கைகளால் குல்லா தைத்ததற்கு கூலியாக 4 ரூபாய், 2 அணாகளும், திருக்குர்ஆனிலிருந்து பிரதி எடுத்ததற்காக 305 ரூபாயும் சொந்த சம்பாத்தியமாக இருந்தது. அதனை தன்னுடைய மரணத்திற்குப்பிறகு 'ஏழைகளுக்குச் செலவிட்டு விடுங்கள்' என்றார். "எனது கல்லறை மிகவும் எளிமையாக வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும், சுற்றி பசுமை செடிகள் இருக்க வேண்டும். எவ்வித அழகோ ஆடம்பரமோ, இசையோ இருக்கக்கூடாது..! என உயிலில் எழுதியிருந்தார்.- இப்படி நேர்மையுடன நடந்த ஒரு மனிதரை தான் வரலாற்று திர்புகளின் மூலம் தூற்றுகிறார்கள் சிலர்..
வரலாற்று பக்கங்களில் இருந்து ஔரங்கசிப் பற்றி இன்னும் பல நல்ல செயல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.. ஆனால் என்ன இந்த உண்மைகள் எல்லாம் நம்மில் பலருக்கும் தெரியாது.என்பதே உண்மை.. காரணம் எந்த ஒரு கேடுகெட்ட ஊடகமும் ஔரங்கசிப் நல்லவர் என்று கூறவில்லை .. மாறாக பொய்களின் மூலம் ஒரு நல்ல ஆட்சியாளரை மக்கள் வெறுக்கும் ஒரு நபராக காட்சிபடுத்தியத்தில் வெற்றி பெற்றுவிட்டன என்பதே. .. நாமும் அவர்கள் கொடுக்கும் பொய்யான இருட்டடிப்புக்களின் மூலம் வரலாற்றை மறந்த சமூகமாகவே உள்ளோம்..
No comments:
Post a Comment