Translate

Tuesday, 27 October 2015

பாபர் மசூதிக்காக போராடிய ஹிந்து சகோதரர் அக்க்ஷய் பிரம்மச்சாரி..!



பாபர் மசூதியை மீட்க முஸ்லிம்கள் மட்டும் போராடவில்லை. மாறாக பல ஹிந்து சகோதர்களும் தங்களால் ஆன மட்டும் பார்ப்பனீய இயக்கவாதிகளின் சூழ்ச்சிகளை எதிர்த்து போராடினர் . அவர்களில் ஒருவர் தான் அக்க்ஷய் பிரம்மச்சாரி. பாபர் மசூதி விவகாரத்தில் இசுலாமியர்களுக்காக குரல் கொடுத்த காந்தியவாதி.அன்று பார்ப்பனீய இயக்கத்தின் ஊதுகுழலலாக செயல்பட்ட உ.பி.காங்கிரசில் எழுந்த நியாயக்குரல் அக்ஷய் பிரம்மச்சாரியினுடையது மட்டுமே.


இவர் பாபர் மசூதி பிரச்சினையை சட்டத்தின் மூலம் தீர்க்க அரும்பாடுபட்டார். ஆனால் அன்று நீதிபதியாக இருந்த நாயர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதை பிறகு தெரிந்துகொண்டார். பின்பு இவர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபை ரவுடிகள் இவரை அடித்துத் துரத்தினர்.

ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதிலும் எடுத்து செல்லவும், பிரதமரிடம் கூட கொண்டு செல்லும் அளவுக்கு உறுதி காட்டினார். அப்போதைய பிரதமர் நேரு இவரை லால் பகதூர் சாஸ்திரியை பார்க்க சொன்னார். உத்தரப்பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரி, அயோத்தியில் பிரச்சினை ஏதும் இல்லை என்று சட்ட சபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.

ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சிவரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் நியாயம் பெற்றுத் தர முடியவில்லை.

பாபர் பள்ளிவாசலை இடித்த கருப்பு தினம் (டிசம்பர் 6) நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் தருணத்தில் இம்மனிதரை நினைவுகூர வேண்டும்.

நன்றி - இணையம்.


வரலாற்று திரிபு..திட்டமிட்டு மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்..!



வரலாற்று திரிபு ..திட்டமிட்டு மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்..


1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்…! இதுவே பெரிய யுத்தம்..! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ்-உத்-தௌலா. நமது வரலாற்றாசியர்களின் வாதப்படி ‘முதல்ல்ல்ல்ல் இந்திய சுதந்திரப்போர்’ எப்போதாம்..?

1857..? ஏன்..? ஏன்..? ஏன்..? ஏன்…?
ஏன்… இந்த வரலாற்று திரிபு..???

எல்லாம் அவாளால் எழுதப்பட்ட அவர்களுக்கு சாதகமான வரலாற்று கிறுக்கல்கள்..திட்டமிட்டு மறைக்கப்பட்ட திட்டமிட்டு மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் சுதந்திர போராட்ட தியாகங்கள்..

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்..

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய்உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து,ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.

ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய ரத்தம்.. வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தம்தான். அதன் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால்.

நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது. இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா. ஆப்கானியப்படைவீரர் அலிவர் திகான் கி.பி. 1726ல் துருக்கியிலிருந்து இந்தியா வந்து வங்காளப் படையில் சேர்ந்தார். பின்பு 1740ல் வங்காளத்தின் நவாப் ஆனார். அவருக்குப்பின் 24 வயதான அவரது பேரர் சிராஜ்-உத்-தௌலாவங்காள நவாபாக ஆனார்.

சிராஜ்-உத்-தௌலா மற்ற நவாப்கள் போலல்லாமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர்களை கலங்கடித்த மாவீரராவார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிராஜுத்தெளலாவின் புகழ் வடக்கே மிக விரைவாக பரவியது. 1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம்.

இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா. ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது.

கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த கீழறுப்பு வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். 1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழது விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார். கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்.

நன்றி: Nsa Khadir.

சகோதரி கீதாவை காப்பாற்றிய பாகிஸ்தானிய குடும்பம்!




காது கேட்காமல் வாயும் ஊமையாகிப் போய் தனது சிறு வயதில் தவறுதலாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி பாகிஸ்தான் சென்று விட்டார் சகோதரி கீதா. அவரை 14 வருடங்களாக தனது வீட்டிலேயே தனது மகளைப் போல பாவித்து அவரது விலாசத்தையும் கண்டு பிடித்து தற்போது இந்தியாவில் அவரது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வந்துள்ள அப்துல் சத்தார் குடும்பத்துக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக!
அந்த பெண் கீதாவின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் அவர் வழிபடும் தெய்வங்களின் படங்களை ஒரு ரூமில் வைத்து அவருக்கு சகல சௌரியங்களையும் செய்து கொடுத்துள்ளது அப்துல் சத்தார் குடும்பம். 'இந்த மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை' என்ற குர்ஆனின் வசனத்தை செயல்படுத்திக் காட்டியுள்ளது இவரது குடும்பம்.
இதனிடையே கீதாவை இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த எதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையான 'டான்' வெளியிட்ட செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிதியை அறக்கட்டளை நிறுவனர் அப்துல் சத்தார் எதி பணிவுடன் மறுத்துவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவரது மகன் அன்வர் காஸ்மி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாக அந்தப் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்துத்வாவாதிகளே!
இனியாவது அப்துல் சத்தாரைப் போன்று மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். மாட்டை காட்டி மனிதனைக் கொல்லும் மிருக புத்திக்கு இனியாவது விடை கொடுங்கள்.

நன்றி:  சுவனப் பிரியன். 

அவமானத்தால் தலை குனிகிறேன் - ஆர்.எஸ்.எஸ் குறித்து கடற்படை முன்னாள் தளபதி!


அவமானத்தால் தலை குனிகிறேன் - ஆர்.எஸ்.எஸ் குறித்து கடற்படை முன்னாள் தளபதி! 
.
திங்கட்கிழமை, 26 October 2015 18:44 பகுதி: இந்தியா 
.
புது டெல்லி : சமீப காலமாக தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ராம்தாஸ் இந்திய ஜனாதிபதி, பிரதமருக்கு திறந்த மடல் எழுதியுள்ளார்.
.
இந்திய கடற்படையின் முன்னாள் தளபதியும் அமைதிக்கான மாக்சாசே விருது வாங்கியவருமான அட்மிரல் லக்ஷ்மி நாராயண் ராமதாஸ் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 பக்க திறந்த மெடல் ஒன்றை எழுதியுள்ளார். அம்மடலில் இருந்து சில முக்கிய பகுதிகள் பின் வருமாறு:
.
"கனத்த இதயத்தோடு இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். சுதந்திரம் கிடைத்த சில நாட்களிலேயே 14 வயதில் இந்திய ராணுவத்தில் இணைந்து 45 ஆண்டுகள் பணியாற்றி கப்பற்படை தளபதியாக ஓய்வு பெற்றவன் எனும் அடிப்படையில் இந்தியா சந்தித்த பல்வேறு மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன்.
.
இக்கடிதத்தை எழுதும் நானும் இந்து நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவனே. எனக்கு தெரிந்த இந்து மதம் அன்பாலும் பிறரை மதிக்கும் தன்மையாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்டது. வன்முறையையும் எதையும் சகித்து கொள்ள முடியா இன்றைய இந்துத்துவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது நான் அறிந்த இந்து மதம்.
.
எண்பது வயதாகும் முதியவனாகிய நான் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலால் அவமானத்தால் தலை குனிகிறேன். இந்திய ராணுவத்தில் போர்கப்பல்களிலோ, போர் விமானங்களிலோ அல்லது காலாட்படையிலோ இந்து, முஸ்லீம், கிறித்துவர் எனும் வேறுபாடு பார்க்கப்பட்டதில்லை. அப்படியிருக்கையில் ஏன் மே 2014க்குப் பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்?
.
இன்று ஒவ்வொரு முஸ்லீமும் தன்னுடைய நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளது வேதனைக்குரியது. குறிப்பாக அவர்களின் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அவர்கள் எதை உண்ண வேண்டும் என்பதற்கான உரிமையும் மறுக்கப்படும் சூழலிலும் இது தொடர்கிறது. தெளிவான திட்டமிடப்பட்ட கூட்டு கலவரங்கள் கவலையளிக்கும் செயலாகும்.
.
இந்து ராஷ்டிராவைக் கட்டமைக்கும் ஓரே நோக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை இந்து அமைப்புகளும் செயல்படுவது கவலைக்குரியது. மேலும் இதற்கு அரசு தரப்பில் கவலையளிக்கிறது, வேதனை தருகிறது என்று எளிதான பதில்களைச் சொல்வதன் மூலம் தன் கடமையிலிருந்து அரசு நழுவுகிறது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களும் இவ்வாறே பேசுவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல.
.
இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் நெருப்போடு விளையாடுகிறோம் என்பதை உணர வேண்டும். முஸ்லீம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் ஏற்கனவே ஒடுக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது நமக்கான வரமாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் நாம் இவர்களின் செயல்பாடுகளால் பிற நாடுகளால் ஃபாசிஸ்டுகளாக பார்க்கப்படுகிறோம்.
.
இந்திய ஜனாதிபதி, பிரதமர் இருவரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பதவியேற்றுள்ளீர்கள். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியுள்ள படி ஒவ்வொரு மனிதனின் பேச்சுரிமை, வழிபாட்டுரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம். இவ்வரசு அவ்வாறு செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் எனக்கும் உண்டு.
இப்போதே இதை தடுக்கா விட்டால் பிறகு எக்காலத்திலும் தடுக்க முடியா அளவு மோசமாகி விடும் என்பதைச் சொல்லி கொள்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்."
.

****************************
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை.
. 
(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. 
.
தலித் பகுஜன் மக்களை உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.
.
இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.
.
சுற்றறிக்கையிலிருந்து . . . . ( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர்களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.
.
பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களி டையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல்மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.
.
சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும். ஒரு ரத்ததான முகாம் நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
.
தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.
.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக்கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும். 
.
நமது கட்டளைப்படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை படிக்கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத் தப்பட வேண்டும்.
.
கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண்டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.
.
முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர் ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.
.
இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும். 
.
தாழ்த்தப்பட்டவர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள பேக்லாக் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள், அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
.
சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்பவர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.
.
இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவியுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
.
யோகீந்தர் சிக்கந்த்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
.


நன்றி : Tamilselvan Sp



மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் 1.25 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது..!



அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் 1.25 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது..


அமெரிக்காவில் இனவெறி நீங்க வெள்ளையர்கள் இஸ்லாத்தை ஏற்பதே தீர்வு என்று மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் ஏலத்தில் சுமார் 1.25 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது .. இந்திய மதிப்பில் சுமார் 9 கோடிகள் ஆகும்.. 



இக்கடிதம் மால்கம் எக்ஸ் ஹஜ் சென்ற பொழுது மக்காவில் இருந்து 1964 எழுதப்பட்டதாகும்.. மக்காவுக்கு செல்லும் வரை நேசன் ஆப் இஸ்லாத்தின் தவறான வழிகாட்டுதலில் இஸ்லாம் என்பது கருபர்களுக்கான மார்க்கம் என்ற தவறான சிந்தனையில் இருந்ததாகவும் .. மக்காவில் பல இன , நிற , கலாட்சார மக்களை பார்த்த பொழுது அவர்களுக்குள் எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் இறைவன் ஒருவனே அவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற சகோதரத்துவத்தின் படி மக்களின் வாழ்வியலை அமைக்க சிறந்த ஒரே வழி இஸ்லாம் தான் என்றும் அது முதல் வெள்ளையர்களுக்கு எதிரான கட்டுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திய மால்கம் எக்ஸ் ... அமெரிக்காவில் இனவெறியும் நிறவெறியும் நீங்க ஒரே தீர்வு இஸ்லாம் தான் என்று பிரகடனப்படுத்திய முதல் கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.. 


ஆறு பக்கங்களை கொண்ட இந்த கடிதத்தில் இஸ்லாத்தை பற்றிய , ஹஜ்ஜில் தான் பார்த்த சகோதரத்துவத்தை பற்றி முழுமையாக மால்கம் எக்ஸ் விவரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

நன்றி: Nsa khadir.


காயிதே மில்லத் ஒரு மதவெறியர்..! எச்.ராஜாவின் உளறலும் கிருஷ்ணமூர்த்தி அய்யரின் வாக்குமூலமும்..



காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜாவின் உளறலும் கிருஷ்ணமூர்த்தி அய்யரின் காயிதே மில்லத் பற்றிய வாக்குமூலமும் .. 


காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.


அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. 

பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர். 

காயிதே மில்லத் வாழ்ந்த குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு எதிரில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

காயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என்கிறார். அறிந்த கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்ன சொல்கிறார்?

''எங்களுக்குள் அந்த இந்து-முஸ்லிம்கிற ஃபீலிங்சே கிடையாது. 

நான் பிராமினா இருந்தா கூட Im very much attached with Qaide Millath. அந்த மாதிரியே பழகிட்டேன் அவர்கிட்ட. அதனால அவர் வீட்டில எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் இருந்தது. So, He was very helpful எனக்கு. 

காயிதே மில்லத் எனக்கு உதவி செய்தது போல் வேறு யாரும் இங்கு இருக்கிறவர்கள் எனக்கு உதவி செய்யல. அதனால அவரை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவர் இறந்தபோது அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

ஒரு அன்கான்சியஸ் ஸ்டேஜுக்கே வந்துவிட்டேன்.''

கிருஷ்ணமூர்த்தி அய்யரின் இந்த வாக்குமூலம் ஒன்று போதும்; காயிதே மில்லத் யார் என்பதை உலகம் உணர்வதற்கு!

----ஆளூர் ஷாநவாஸ்

பார்ப்பனீய வியாதிகளுக்கு மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்வது ஒருகாலமும் பிடிக்கப்போவதில்லை .. காரணம் கேடுகெட்ட அரசியல்..


நன்றி: Nsa Khadir. 



Sunday, 25 October 2015

ஆர்.எஸ்.எஸ்-இன் தேசபக்தி இலட்சணம்..!!!


தேசபக்திக்கு உதாரணமாக தங்களை கட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் தேசபக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நடக்கும் காலகட்டத்தில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டி, ஆங்கிலேயர்களின் காலை நக்கிப் பிழைத ஆர்.எஸ்.எஸ் கும்பல், தங்களது பழைய வரலாறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து, தங்களது இந்திய துரோகத்தை,மோசடிகளை மறைத்து  இந்தியாவின் தேசபக்தர்களாக வேஷம் கட்டி வருகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்தபோது, இந்து இளைஞர்களை ஆங்கிலேய இராணுவத்தில் சேர்த்த பாவிகள், இவர்கள்.! ஆர்.எஸ்.எஸ். காவிக்  கும்பலின் ராணுவ வீரர்களைக் கொண்டே ஆங்கிலேயர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி  வந்தார்கள்.

அதுமட்டுமில்லை, ஆங்கிலேயர்களை வெளியேற்ற 1942-யில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை காங்கிரஸ் ஆரம்பித்து, கம்யுனிஸ்டுகள்,  முஸ்லிம்லீக் போன்ற அமைப்புகள் ஆதரித்து, போராடிய போது,  இந்த காவி துரோகிகள் சுதந்தியதுக்காக  போராட வில்லை அந்நியர்களை எதிர்க்கவில்லை! மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வாக்கர்  இந்து இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்தினார். எங்கே தங்கள் பிள்ளைகள் காங்கிரசில் சேர்ந்து, ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி, சிறைக்கு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் பார்ப்பனர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்.(பார்ப்பனர்களுக்கு  என்னே.. தேசபக்தி !)

எப்போதும் தங்களது நலனை மட்டுமே பெரிதாக நினைக்கும் பார்ப்பன கும்பல் இன்று தேசபக்திக்கு சொந்தகாரர்கள் போல போடும் வேடமும் அடிக்கும் கூத்தும், ஆர்ப்பட்டமும், நடிப்பும் சொல்ல தரமற்றது. வேட்கக்கேடானது.

இந்தியாவில் எல்லோரும் சுதந்திரத்திற்காக போராடிய போது,சிறை பட்டபோது, செக்கிழுத்து,கல்லுடைத்து கஷ்டப்பட்டபோது ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது வாழ்வை, வசதியை இழந்தபோது, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஆங்கிலேயரை   பயன்படுத்தி  தங்கள் சொந்த நலனை, வியாபரத்தை நடத்தினார்கள்.

'டிரெவர் டிரைபர்க்' என்ற பத்திரிக்கையாளர் அதனை  எழுதியுள்ளார்.

"அதே நேரத்தில் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டீஷ்  ராணுவத்துக்கு வேண்டிய  ராணுவ எந்திரங்களை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் டுகளை எடுத்தனர்.1943-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது,  இருந்த உணவுப் பொருள்களை எல்லாம்  இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாரிக் கொண்டு போய், பிரிட்டீஷ் ராணுவத்தினருக்கு கொடுத்தனர். பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் கொடுமைக்கு உள்ளாயினர். இந்த காண்ட்ராக்டு காரர்களிடம் பணம் ஏராளமாக வர ஆரம்பித்தது பிரிட்டீஷ் ராணுவ நிதிக்கு பணத்தை அள்ளி வீசினர்.( அப்போதுதானே காண்ட்ராக்டு கிடைக்கும் } ஆர்.எஸ்.எஸ்செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அரசாங்கம்  பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்துக் காட்டுகிறது..!" என்று டிரெவர் டிரைபர்க் அவரது  FOUR FACES OF SUBVERSION என்ற நூலில்( பக்கம்-27) எழுதி  உள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் விசுவாசம் காட்டி  இந்திய சுதந்திரத்துக்கு இடையுறாக ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் சேர்த்தும்,காண்ட்ராக்டு எடுத்தும், கூட்டிகொடுத்தும்,  காட்டிகொடுத்தும்  துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்  இன்று தேச பக்தர்களாக,சுதந்திர போராட்ட வீரர்களாக, தேச தலைவர்களாக,  தங்களை கூசாமல் சொல்லி கொள்ளுகிறார்கள்!   ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் ஆங்கிலபக்தியை  இன்று, இந்திய தேசபக்தியாக  சொல்லி  ஏமாற்றுவதை என்னவென்று சொல்வது? 

SOURCE: