“துருக்கனுக்கு ராமன் துணை.. '' இந்த வார்த்தைகளில் முடியும்படியாக, ஒரு பாடலை இப்போதே இந்த மேடையில் பாடுங்கள்.! ”
இப்படி ஒரு இஸ்லாமியப் புலவரிடம் சொன்னால், என்ன தான் செய்வார் அவர்..?
இப்படி ஒரு சோதனை ஏற்பட்டது , 1950 களுக்கு முன் வாழ்ந்த செய்குதம்பிப் பாவலர் என்றொரு தமிழ்ப் பெரும் புலவருக்கு..!
ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவராம் இவர்...!
ஒரு இலக்கிய மேடையில் , செய்குதம்பிப் பாவலரிடம் 'துருக்கனுக்கு ராமன் துணை' என்று ஈற்றடியைக் கொடுத்துப் பாடச் சொன்னாராம் ஒரு விஷமம் பிடித்த புலவர்...!
[ “துருக்கர்” என்றால், இஸ்லாமியர் என்று பொருள்படும் ]
ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்களைச் செய்யும் செய்குதம்பிப் பாவலரே, இந்த சமயத்தில் செய்வதறியாது திகைத்துப் போனாராம்...!
காரணம், அவர் ஒரு இஸ்லாமியர் ..!
'துருக்கனுக்கு ராமன் துணை ' என்று அவரைப் பாடச் சொன்னால்..?
"என்ன பாடப் போகிறார்?" என அவையில் இருந்தோர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க ,
கேள்வியின் விஷமத்தைப் புரிந்து கொண்டாராம் செய்குதம்பிப் பாவலர்...!
சற்றே யோசித்து ஒரு வெண்பாவினை விறு விறுவென்று பாடி முடித்தாராம்...!
அதன் முடிவு இப்படி இருந்ததாம் ..!
“.............................பரதன் லட்சுமணன் சத்
துருக்கனுக்கு ராமன் துணை.”
பாடச் சொன்ன விஷமக்காரர் மட்டும் அல்ல... கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருமே ஆனந்த ஆரவாரம் செய்து , செய்குதம்பிப் பாவலரை சிறப்பாகப் பாராட்டினார்களாம்...!
வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது தான் ,
நமது திறமை நமக்கே புரிகிறது...!
# இந்திய அரசு 2008 ஆம் ஆண்டு செய்குத்தம்பி பாவலரின் நினைவாகச் சிறப்புத் தபால் தலை வெளியிட்டிருக்கிறது..!
# இன்று [13.2.2016] செய்குத்தம்பி பாவலரின் நினைவு தினம்..!
No comments:
Post a Comment