Translate

Monday, 15 February 2016

மன்னர் ஷெர்ஷா சூரி




இந்தியா ஒரு காலத்தில் பல குறுநில மன்னர்களால் ஆட்சிசெய்யப்பட்ட ஒரு பரந்து விரிந்த பகுதி. அன்று இந்தியா என்ற ஒரு முழு அடையாளம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொறு காலகட்டத்திலும் இன்றைய பரந்த இந்திய நிலப்பரப்பு பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பின் மீண்டும் சிதைந்து பல குறுநில மன்னர்களின் கைகளுக்கு மாறும். பின் மீண்டும் பெரும்பாலான பகுதியை ஒரு பெரிய மன்னன் ஆட்சி செய்வான். இப்படித் தொடர்ந்த இந்திய வரலாற்றில் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக்குப் பின் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா தான் இன்றைய இந்தியா. இந்தியா மட்டும் அல்ல தற்போதைய பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானின் ஒரு பகுதியும் பரந்த இந்திய தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 

பாபரின் ஆட்சி முதலில் டெல்லியில் 1526ல் துவக்கப்பட்டது. அன்று டெல்லி அதை சுற்றியுள்ள பகுதிகள் பாபரின் கட்டுப்பாட்டில் வந்தது. அதில் பீகார் பகுதியும் ஒன்று. அந்த பீஹாரின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தான் ஷெர்ஷா சூரி. பாபரின் மரணத்திற்குப் அவரது மகன் ஹுமாயூன் 1530ல் ஆட்சிக்கு வந்தார். ஹுமாயூனுக்கும் ஷெர்ஷாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஷெர்ஷா தனது பீஹார் பகுதியை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். அதன்பின் 1539ல் ஏற்பட்ட சௌஷா யுத்தத்தில் ஹுமாயூன் ஷர்ஷாவிடம் தோற்றுப் போனார். பின் முழு முகலாய சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றினார் ஷெர்ஷா சூரி.

இந்த இடத்தில் சில செய்திகளை நாம் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். இந்திய வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்படும் வரலாறுகளில் ஷெர்ஷாவின் வரலாறு குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்று மோசடியாளர்களுக்கு இவரது குறுகிய கால ஆட்சியும் இவர் முகலாய வம்சத்தைச் சேராதவர் என்பதும் ஒரு மிகப்பெரிய வரப்பரசாதமாக ஆனது. எளிதில் இவரை ஓரங்கட்ட அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை, இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி என்று வரலாற்றில் குறிப்பிடுவார்கள். ஷெர்ஷா மட்டும் ஆப்கானியாவார். இவரது வம்சத்தில் வேறுயாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆட்சி செய்யவில்லை. மேலும் இவருக்கு பிறகு இவரது மகன் ஆட்சிக்கு வந்து சில காலங்களிலேயே மீண்டும் அவரிடமிருந்து ஹுமாயூன் ஆட்சியை கைப்பற்றி விடுவார். எனவே பாபர், ஹுமாயூன், அக்பர்... என்று தொடரும். இடையில் மிகச் சாதுர்யமாக ஷெர்ஷா விடுபட்டுவிடுவார் இல்லை விட்டு விடுவார்கள்.

வரலாற்று மோசடியாளர்கள் ஷெர்ஷாவின் வரலாற்றை மறைக்க முற்படுவது ஏன்? 

இன்றைய ஒருங்கினைந்த இந்தியாவின் பெரும் பகுதிகளை ஒருங்கிணைத்த பெருமை ஷெர்ஷாவையே சாரும். கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் அதாவது பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் உள்ளிட்ட பெரும் பகுதியை வென்று ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் ஷெர்ஷா. இந்த வெற்றி அவரை பல வழிகளில் சிந்திக்க தூண்டியது. இதை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்கள் எனலாம். 

முறைப்படுத்தப்பட்ட சாலைகள் 


முதலில் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்யவும், மக்களை எளிதில் சந்திக்கவும் ஏதுவாகவும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவு படுத்தவும் அனைத்து பகுதிகளையும் சாலையால் இணைத்தார். சாலையோர சிற்றுண்டி, இளைப்பாறும் மண்டபங்கள், கிணறுகள், மரங்கள் நடுதல் மற்றும் தூரத்தை கணக்கிட மைல்கல்கள் ஆகியவை இவரது காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இன்றும் டெல்லி மற்றும் பாகிஸ்தானில் இவரால் உருவாக்கப்பட்ட பெரும் சாலைகள் கிரேன்ட் டிரங்க் ரோடு (Grand Trunk Road) என்ற பெயரிலும். ஷெர்ஷா சாலை என்ற பெயரிலும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




நிலப்பகிர்வு மற்றும் பட்டா முறை

முந்தைய ஆட்சிக் காலங்களில் நிலப்பரப்பு மக்களுக்கு சொந்தமானதாக இல்லை. அரசுக்கும் பெரும் நில பிரபுக்களுக்குமே சொந்தமானதாக இருந்தது. அந்த நடைமுறையை மாற்றி தன் ஆட்சியின் கீழ் இருக்கும் அனைத்து நிலத்தையும் அளந்து (servey) அதற்கு ஒரு எண் வழங்கப்பட்டு (Survey No) அந்த நிலத்தை மக்களுக்கு பிரித்துக் கொடுத்து அதை அரசாங்கம் பதிவு செய்து கொண்டு அந்த நிலத்தில் இருந்து வரும் விளைச்சலில் அரசுக்கு வரி செலுத்தும் நடைமுறையை உருவாக்கினார். இவரால் உருவாக்கப்பட்ட அந்த நடைமுறைதான் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் மழை இல்லாமல் அல்லது வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கும் போது அரசாங்கம் என்ற முறையில் மக்களுக்கு மானியங்களை வழங்கி முன்னோடியாக திகழ்ந்தவர், இது போன்ற காலங்களில் மக்களின் கடன் தள்ளுபடி செய்து எதிர்கால அரசியலுக்கு வித்திட்டவர் இந்த மா மன்னன்.

இந்தியாவில் மாநிலங்களும் மாவட்டங்களும்

அதே போல் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்ய ஆளுநர்களை நியமிப்பது வழக்கம். ஆனால் இவர் பெரும் நிலப்பரப்பை இரண்டாக பிரித்தார். சர்கார் என்ற மாநிலம், அதற்கு உள்ளே மாவட்டம், இந்த மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இதன் நிர்வாகிகள் 2 வருடத்திற்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் ஊழல் மற்றும் ஆதிக்கம் செலுத்துவதில் இருந்து தடுத்தார். ஷெர்ஷாவுக்கு முந்தைய மன்னர்கள்கூட தங்களது பிரதேசங்களை ஆள ஆளுநர்களை நியமித்திருந்தனர். ஆனால் ஷெர்ஷா உருவாக்கிய ஆளுநருக்கான வரையறைகள் தான் இன்றுவரை பல்வேறு பரிணாமங்களுடன் நீடித்து நிற்கிறது. 

காவல் துறையும் நீதித்துறையும்

இந்திய தேசத்தில் முதல் முதலில் இராணுவத்தை எல்லைப் பாதுகாப்புக்கு என்றும் மற்ற உள்ளுர் பிரச்சனைகளை கவனித்துக் கொள்ள நவீன காவல் படையை உருவாக்கியவர் ஷெர்ஷா தான். அதுதான் இன்றைய காவல் துறையின் அடித்தளம். 

அதோடு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கு ஒரு நீதிபதி மற்றும் ஒரு பொருளாளர் இருப்பார்கள். அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம மக்களின் பிரச்சனையை இவர்கள் கவனித்துக் கொள்வார்கள். மேலும் இவர்கள் மாநில நிர்வாகத்தின் கீழ் செயல்படுவார்கள் என்ற நிர்வாக விதியை வகுத்து செயல்படுத்தினார். 

இப்பொழுது தெரிகிறதா.? இந்திய காவல் துறையையும் நீதித்துறையையும் உருவாக்கியவன் யாரென்று.? 

ஒரு காலத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டு இருந்த சமூகத்தில் நீதிமன்றங்களை அமைத்து நீதித்துறையை செயல்படுத்தினார். இன்றளவும் இந்திய நீதித்துறையில் சில அரபி மற்றும் பார்சி சொற்கள் பயன்படுத்தப்படுவதை அறிவீர்கள். உதாரணத்திற்கு கைது, ஜாமீன், வக்கீல், வாய்தா போன்ற சொற்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. 

வர்த்தகம் மற்றும் சுங்கம் 


ஒரு அரசாங்கம் தனது வளர்ச்சிக்கு தேவையான எல்லா அம்சங்களும் பெற்று திகழவேண்டும். இவருக்கு கிடைத்த வாய்ப்பை இவர் எப்படி பயன்படுத்தி இருக்கிறார் பாருங்கள். ஷெர்ஷாவை பொருத்தவரை அரசாங்கத்திற்கு ஒரு வருமானம் இருந்தால் தான் ஒரு அரசு மக்களுக்கு தேவையானதை செய்யவும் திறம்பட செயல்படவும் முடியும். அதற்கு அவர் வழி வகுத்தார். அதன் ஒரு வழிமுறையாகத்தான் நிலத்தை மக்களுக்கு கொடுத்து அதிலிருந்து ஒரு வரியை விதித்தார். பின் வர்த்தகத்தை மேம்படுத்த சாலைகள் ஏற்படுத்தினார். அதன் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தேவையான அடிப்படை பொருட்களை கொண்டு செல்ல வழிவகை செய்தார். பின் தன் ஆட்சிக்கு வெளியில் இருந்து வரும் பொருட்களுக்கு சுங்க வரியை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் ஷெர்ஷா தான்.


நாணயம் (ருபியா)





நாணய முறை இந்தியாவில் முஹம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்தே நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தாலும், பின்னாளில் அது நடைமுறையில் இல்லாமல் போனது. அதற்குப் பின் நாணயத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து, அச்சிட்டு அதற்கு ருபியா என பெயரும் இட்டது இவரது அட்சிக் காலத்தில் தான். அது தான் இன்று ருபாய் என்று தமிழிலும் ருபீ என்று ஆங்கிலத்திலும் மாறியுள்ளது. இந்த நாணயம் இன்றவும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மொரிசியஸ், நேபால், இந்தோனேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ருபாய் என்றே அழைக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் துறையின் முன்னோடி

உலகில் பல ஆண்டுகளாக தூதர் மூலம் செய்திகளை மற்ற அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்கும் முறை இருந்து வந்துள்ளது. அதோடு புறாக்களை கொண்டு தூது விடுவது என்பன போன்ற நடைமுறைகள் ஒரு குறிப்பிட்ட சிலரால் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த சேவை மக்களுக்கு பயன்படவில்லை. பின்னாளில் குத்புதீன் அய்பக் (1206-1210) என்ற அரபு ஆட்சியாளர் இந்தியாவில் இந்த அஞ்சல் முறையை நடைமுறைப் படுத்தினார். அவர் தூதர்கள் மூலம் செய்திகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பறிமாற்றம் செய்யப்பட்டது. பின் அலாவுதீன் கில்ஜி 1296ல் குதிரைகள் மற்றும் மனிதர்களை கொண்டு செயல்பாட்டை விரிவுப்படுத்தினார். அதன்பின் இந்த முறை நடைமுறையில் இல்லாமல் போனது.

இதை ஷெர்ஷா சூரீ மீண்டும் கையில் எடுத்து தம்மால் அமைக்கப்பட்ட வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலான மிக நீண்ட கிரேன்ட் டிரங்க் சாலையில் குதிரைகளை கொண்டு முறைப்படுத்தினார். இதன் மூலம் அரசு செய்திகள் மாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நடைமுறை 1672ல் தென் இந்தியாவில் மைசூர் மன்னர் ஹைதர் அலியால் விரிவுபடுத்தப்பட்டது. பின் 1688ல் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியால் பாம்பே, கல்கத்தா மற்றும் மதராஸில் அலுவலகங்கள் அமைத்து நடைமுறைப் படுத்தப்பட்டது, பின் 1774 முதல் விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

மற்ற சாதனைகளும் மரணமும்

தனது மிகக்குறைந்த ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவின் நிர்வாக முறையை அமைத்துத் தந்த ஷெர்ஷா நீதியை நிலைநாட்டியதிலும் முன்னோடியாக திகழ்ந்தார். நீதி மன்றங்கள் அமைத்து பாரபட்சம் இல்லாத நீதியை நிலை நாட்டினார். ஒரு பெரிய நாட்டை நிர்வாகம் செய்ய தேவையான அடிப்படை அம்சங்களை அழகாக கட்டமைத்து கொடுத்துச் சென்றார். இவருக்குப்பின் வந்த அக்பர் உட்பட ஆங்கிலேயர்கள் மற்றும் இன்றைய இந்திய அரசும் அதில் ஒருசில தேவைான மாறுதல்களுடன் அப்படியே பின்பற்றி வருவது அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதற்கான சான்றுகளாக  இன்றளவும் நிற்கிறது.

1540ல் ஷெர்ஷா மரணித்து விடுகிறார். அவரது மகன் ஜலால் கான் ஆட்சிக்கு வருகிறார். அவரது பெயர் வரலாற்றில் இஸ்லாம் ஷா சூரி. இவரும் தனது திறமையின்மை காரணமாக 1545ல் ஹுமாயூனிடம் ஆட்சியை இழந்துவிடுகிறார். பின் மீண்டும் மொகலாய ஆட்சி தொடர்கிறது.

இறுதிச் சுருக்கம்

ஆட்சிமுறை நிர்வாகத்தை வகுத்தது ஆங்கிலேயர்கள் தான் என்று இன்றும் சில மக்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் ஒரு முஸ்லீம் இந்தியாவை உருவாக்கினான் என்றால் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியுமா.? அதனால் தான் இவரது வரலாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. மக்களுக்கு முன் மறைக்கப்படுகிறது. காந்தியை கொன்றது யார் என்பதயே மறைத்த கும்பலுக்கு சுமார் 600 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை மறைக்க சொல்லவும் வேணுமா.?

இந்தியாவில் ஆட்சியாளர்களாக இருந்த முஸ்லீம்கள் மக்களுக்கான ஆட்சி செய்து வந்தனர். அந்த வரலாற்றைத் தான்  திருத்தி பெரும்பான்மை சமூகத்தின் எதிரிகளாக முஸ்லிம்களை  தற்பொழுது காட்டிக்கொண்டும் இருக்கின்றனர். முஸ்லீம் அட்சியாளர்களின் அரசவைகளிலும், போர் தளபதிகளாகவும் மற்றும் முக்கிய நிர்வாகிகளாகவும் எத்தனையோ  பெரும்பான்மை சமூக மக்கள் இருந்துள்ளது வரலாற்று உண்மை. அதேபோல் இன்றைய குருட்டுத்தனமான வாதமும் அன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சிமுறையில ஒத்துப் போகவில்லை.

1. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது (
இந்தியாவை
800 வருடங்கள் ஆட்சி செய்த  முஸ்லிம்கள் அன்றும் இன்றும்  சிறுபான்மையினரே)


2. தீவிரவாதத்தை ஆதரிக்கிறது இஸ்லாம் (இன்றை விட மிக வீரியமான இஸ்லாமிய சிந்தனை நிலவிய காலத்தில் ஆட்சித்தலைவர்களால் ஒரு அசம்பாவிதம் கூட வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை)


3. ஜிஸ்யாவரி விதித்தனர் (முஸ்லீம்களுக்கு ஜகாத் வரி போல முஸ்லீம் அல்லாத மக்களுக்கு விதிக்கப்படும் வரிக்குப் பெயர் ஜிஸ்யா வரி, ஏதே முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டும் வரி விதித்தது போல் கதை கட்டுவார்கள்)


4. பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக நடந்துகொண்டார்கள் (அப்போது ஏன் ஒரு சுதந்திரப் போராட்டம் கூட முஸ்லீம்கள் ஆட்சியில் நடைபெற வில்லை? பல்வேறு கோவில்களுக்கு நிலம் மற்றும் நிதி வழங்கியதற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளனவே? அனைத்தும் ஆதிக்க சக்தியின் திட்டமிட்ட சதி என்பதைதான் நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது . )

நன்றி: 
ஆக்கம்: அபூ அஸ்ஃபா, 
புதுவலசை










No comments:

Post a Comment