Translate

Monday, 22 February 2016

முஸ்லிம் பெண்ணால் தொடங்கப்பட்ட உலகின் முதல் பல்கலை கழகம்.





உலகிலேயே பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக பெண்களை அனுமதித்தது முஸ்லிம்களே..! 

முஸ்லிம்களின் ஆட்சி நிலவிய காலப்பகுதியின் போது தான், கி.பி 841 இல், உலகின் முதல் பல்கலைகழகத்தையும் நிறுவி அங்கே விஞ்ஞானம் உட்பட ஏனைய பாடங்களையும் பெண்கள் கற்பிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த உலகின் முதல் பல்கலைக்கழகமும் முஸ்லிம் பெண் ஒருவராலேயே தொடங்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளில் கி.பி 1821 ஆம் ஆண்டுக்குப் பின்பு தான்- அன்றைய பெண்சமூகம் செய்த தொடர் போராட்டத்தின் விளைவாக, பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளின் காரணமாக, முஸ்லிம் பெண்களுக்கு எந்த வித போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தேவைப்படவில்லை. ஆணாயினும் பெண்ணாயினும் இஸ்லாத்தில் கல்வி கற்பது கட்டாயக் கடமை என்று முஹம்மது நபியவர்கள் வலியுறுத்தியதன் காரணமாக முஸ்லிம் சமூகத்தில், ஒரு பெண்ணே பல்கலை கழகத்தை நிறுவவும், அங்கே பெண்கள் விரிவுரையாளர்களாக பணியாற்றவும் முடிந்தது. அந்த வகையில் முஸ்லிம் சமூகம் பெருமிதம் கொள்கிறது.

தகவல்: Muhammadh Zayn



[] [] [] 

No comments:

Post a Comment