வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரமடைவதற்கு முன்னாள் வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது. இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னனியாகக் கொண்டதாகும்.
கலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் சரியாக இனம் கண்டு தாக்கவேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்கள் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து என்று தாக்காமல் விட்டுவிடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொன்று போடவும் வந்தே மாதரம் என்பது உருவாக்க்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
இந்த நாவலுக்கு முன் வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்பட்டதில்லை. கலவரத்தின்போது இந்துக்கள் வந்தே மாதரம் சொல்வதுபோல் முஸ்லிம்களும் சொல்லிவிட மாட்டார்களா என்றால் வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்தக் கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர். ஏனெனில் வந்தே மாதரத்தின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை(Only One God)க்கு எதிரானதுஎன்பதால், முஸ்லிம்கள் இதைச் சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.
வந்தே மா தரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன.
வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம் – வணங்குகிறோம் – வழிபடுகிறோம் என்பது பொருள்.
மா என்றால் தாய் என்று பொருள்.
தரம் என்றால் மண் என்பது பொருள்.
அதாவது தாய்மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பது மொத்த வார்த்தையின் பொருளாகும்.
வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்துகொள்ள அகராதியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பாரதியார் தனது பாட்டில் இதன் அர்த்தத்தைத் சொல்லித் தந்துவிடுகிறார்.
வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.
இது பாரதியார் பாட்டின் முதல் வரிகள்.
எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பதுதான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியார் பொருள் சொல்லிவிட்டார்.
Source:
No comments:
Post a Comment