அன்னையின் அன்புக்கு-தியாகத்திற்கு ஈடு இணையுண்டா, இந்த உலகில்..?
உடல் சிலிர்க்கிறது.. கண்ணீர் திரள்கிறது.. இந்த அன்புத் தாய்க்காக பிரார்த்தனை கரம் உயர்கிறது..!
மலேசியாவில், KUALA NERANG எனும் பகுதியில் வாழ்ந்து வந்தவர் தான் மெலியா தியா (Meliah Md Diah) என்ற இந்தத் தாய். இவரது கணவரான சவுத், இருபது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவரது மற்ற மூன்று குழந்தைகளும் (இரண்டு ஆண், ஒரு பெண்) சிறு பிராயத்திலேயே இறந்துப் போயின.! இறுதியில் வாய் பேசாத, நடக்க இயலாத முழு உடல் ஊனங்களை கொண்ட மகனான அப்துல் ரஹ்மான் சவுத்’துடன் வாழ்க்கையில் தனித்து விடப்பட்டார்.!
சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அன்பு மகனை தழுவியிருப்பது போன்ற இந்தத் தாயின் படம் சமூக வலைதளங்களில் பதிவேற்றப் பட்டு பல லட்சக்கணக்கான விருப்பங்களை பெற்றது.
‘’எனது மகன், இந்த நிலையிலும் எனக்கு சுமையல்ல. அவனை நான் மிகவும் நேசிக்கிறேன். குழந்தை பருவத்திலிருந்தே அவனை குளிப்பாட்டவும், உடை மாற்றவும், உணவு ஊட்டவும் செய்து வருகிறேன். எப்பொழுதும் அவனோடு இருப்பதையும், அவனை நன்றாக கவனித்துக் கொள்வதையுமே விரும்புகிறேன்..!” என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.
எவ்வித கசப்புணர்வுமின்றி இறைவனின் அந்த விதியை ஏற்றுக் கொண்டு, எப்பொழுதும் இறுதி வரை தன்னுடைய மகனை கவனிக்கத் தக்க வகையில் தனக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து வந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இத்தகைய மனித மாண்புமிக்க இந்தத் தாயின் மறுமை பேறுகளுக்காக பிரார்த்தனை செய்வோம்.!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..!
SOURCES:
No comments:
Post a Comment