Translate

Sunday, 12 October 2014

இந்த உலகத்தின் சாபக்கேடு, நாத்திகம்..!



இந்த உலகத்தின் சாபக்கேடு, நாத்திகம்..!

கால் போன போக்கில், மனம் போன போக்கில் வாழ முற்படுவதே நாத்திகம்..! தான் எனும் அகம்பாவமும், மனோ இச்சையை வழிபடுவதால் தோன்றும் சுயநல உணர்வும் மனிதனை கீழ்நிலைக்குத் தள்ளி மிருகமாக்கி விடுகிறது..!

ஒருவனது உள்ளத்தில் நாத்திக எண்ணம் குடிகொண்டு விட்டால், அவன் பிசாசாக மாறிவிடுகிறான். அதன்பிறகு அவனைப் பொறுத்தவரை விபச்சாரத்திற்கும் சமூக ஒழுக்கத்துடன் புரிகின்ற திருமணத்திற்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது.!! திருடிய காசில் வாங்கின ரொட்டிக்கும், நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த காசில் வாங்கின ரொட்டிக்கும் வித்தியாசம் ஒன்றும் தோன்றாது..!

உண்மையில் நாத்திகர்கள் என்போர் யார்..? யாரெல்லாம் தங்களை நாத்திகர்கள் என்று விளம்பரப் படுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் மட்டுமா நாத்திகர்கள்..?

இல்லை.. கண்டிப்பாக இல்லை..!

ஒருவகையில் தங்களை வெளிப்படையாக நாத்திகர்கள் என்று கூறிக் கொள்பவர்களை கூட ஓரளவுக்கு பாராட்டி ஏற்றுக் கொள்ளலாம்.! ஆனால் வெளியே பலர் பார்க்க பழுத்தப் பழமாக ஆன்மீக வேடமிட்டுக் கொண்டு.. ரகசியமாக பஞ்சமாபாதகங்கள் புரிய கொஞ்சமும் அஞ்சாமல் திரிகிறார்களே..வெளியே ஆத்திகர்களாகவும் உள்ளே நாத்திகர்களாகவும் இருக்கிறார்களே..அவர்களே மிக்க ஆபத்தானவர்கள்..!! 

உண்மை ஆன்மீகமான இஸ்லாத்தைப் பொறுத்தவரை.. முஸ்லிம் பெயரை சூட்டியிருந்தாலும், இஸ்லாம் கூறும் அத்தனை வழிபாடுகளையும் விழுந்து, விழுந்து செய்தாலும்.. எண்ணங்களைப் பொறுத்தே கூலி கிடைக்கும்..

படைத்த ஏக இறைவனை நம்புவதும், அவனது கட்டளைகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கீழ்படிவதும், மறுமையில் அவனது சந்திப்பை நம்புவதும் தான் ஒருவனை முஸ்லிமாக ஆக்கும். அஃதல்லாமல் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்து விடுவதாலோ, முஸ்லிம் சமூகத்திலிருப்பதாலோ அவன் இறைவனிடத்தில் ஒருகாலும் முஸ்லிமாகி விட மாட்டான்.!


அதனால் தான் நபிகள் நாயகம் அவர்கள், 

“விபச்சாரி மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக்கொண்டு விபச்சாரம் செய்வதில்லை. மது அருந்தும் போது மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக் கொண்டு மது அருந்துவதில்லை. திருடுகிற பொழுது மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக் கொண்டு திருடுவதில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, கொள்ளையடிக்கும் போது மூமினாக (இறை விசுவாசியாக) இருந்துக் கொண்டு கொள்ளையடிப்பதில்லை..!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..

அறிவிப்பவர்; அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி-5784, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயி, இப்னு மாஜா.
...................................................................
...................................................................

நாத்திகம் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு..!

[][][]

No comments:

Post a Comment