Translate

Monday, 1 September 2014

இஸ்லாம் = ஆத்ம சமர்ப்பணம்..!

‘’ ஓம் அஸதோ மா ஸத்கமய

தம ஸோ மா ஜ்யோதிர்கமய

ம்ருத் யோர் மா அம்ருதம் கமய..’’


(சாந்தோத்யோப நிஷத்தின் துவக்கம்- ஆத்ம சமர்ப்பணம்)







"ஓம்..பரபிரம்மமே..பரம்பொருளே..ஹிர்ணய கர்ப்பனே..இரண்டாவது இல்லாத ஏகனே, பரலோகத்தில் இருக்கிற பரம பிதாவே, மோசேயின் இயேசுவின் கர்த்தாவே.. சர்வலோக இரட்சகனே..சர்வேஸ்வரனான அல்லாஹுவே..!"


‘’ நீ எங்களை அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!’’

‘’ நீ எங்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு..பிரகாசத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!’’


‘’ நீ எங்களை அழிவிலிருந்து, சர்வ நாசத்திலிருந்து, சாவிலிருந்து என்றென்றைக்கும் நிலையான நித்தியத்திற்கு, சாகாமைக்கு அழைத்துச் செல்வாயாக..!’’


இஸ்லாம் = ஆத்ம சமர்ப்பணம்


இந்த பிரார்த்தனையை நெஞ்சில் சுமக்காத ஆத்திகனோ,  நாத்திகனோ.. அவன் மேல் ஜாதியோ, கீழ் ஜாதியோ.. வெள்ளையனோ, கருப்பனோ.. அல்லது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சொல்லுங்கள், பார்ப்போம்..!    
             

Friday, 29 August 2014

இறை ஏகத்துவத்தின் பால் அழைப்பு..!








"வேதமுடையோரே..! 


* நாம் அல்லாஹுவைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது.! 

* அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது.!

*அல்லாஹுவையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக்      கூடாது..!


என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்..! 


என்று (நபியே) கூறுவீராக..! 


அவர்கள் (இதனை) புறக்கணித்தால் நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்..! எனக் கூறி விடுங்கள்..! "          




 -திருக்குர்ஆன் - 3:64. 

Saturday, 23 August 2014

படைத்தவனின் இயற்கை மார்க்கம்..!






" ஏனைய எல்லா மார்க்கங்களையும் விட, 


(அது இந்து மதம், கிறித்துவ மதம், 

புத்த மதம், இன்னும்..

கம்யுனிஸம், கன்ஃபூஸியிசம், 

நாத்திகம் எதுவாக இருந்தாலும், 

அவற்றையெல்லாம் விட..! ) 


மேலோங்கச் செய்வதற்காக.. 


அவனே தனது தூதரை நேர் வழியுடனும், 

உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்..! 


அல்லாஹ் கண்காணிக்க போதுமானவன்..! "  



- திருக்குர்ஆன் - 48:28