Translate

Saturday, 19 September 2015

கத்னா-விருத்தசேதனம்-மார்க்கல்யாணம்-கவரடைப்பு..!




இஸ்லாமிய மார்க்கத்தில் விருத்தசேதனம்..! 


கத்னா, சுன்னத் என்று இஸ்லாமிய மரபில் அழைக்கப்படுகிற விருத்தசேதனம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட இயற்கை வழி முறையாகும்.

“விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளை களைவது, அக்குள் முடிகளை களைவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையை கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விசயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்..!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி-5889,5891,6297 முஸ்லிம்-377,378 மற்றும் திர்மிதி, நஸயி, அபூதாவூத் இப்னு மாஜா, அஹ்மத், முஅத்தா, மாலிக்.

கத்னா செய்தல் இஸ்லாத்தில் கட்டாயக் கடமை என்று சொல்வதற்கில்லை. கத்னா செய்யாமலும் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிமாக இருக்க முடியும். ஆயினும் கத்னா செய்வது  நபியவர்களால் வலியுறுத்தப்பட்ட தாகும்.

முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் பெரும் பாட்டனாராகிய இப்ராஹீம் (அலை) அவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்றுவரை கத்னா செய்துகொள்வது வழக்கில் உள்ளது.  நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்து குறைஷியரும் மதீனா பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவந்த யூதர்களும் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையோராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்று நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

"(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் என்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்..!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்கள் புகாரி 3356, 6298, அஹ்மத்.


யூதர்களிடம் விருத்தசேதனம்..! 

பைபிள் பழைய ஏற்பாடு கத்னா செய்வதை ஒரு உடன்படிக்கையாக சொல்கிறது. (பார்க்க: ஆதியாகமம் 17:10-14 )

10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.

11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக் கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.

13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப் பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.

14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப் படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்..என்றார்.!

யூதர்கள் இன்றைக்கும் இதனை பின்பற்றியே ‘BRIT MILAH’ – Covenant of Circumcision  என்று அழைக்கிறார்கள்.!



  JEW'S BRIT MILAH CEREMONY..




   A Brit Milah Kit..



இயேசுவின் விருத்தசேதனம்..


இயேசுவின் விருத்தசேதனம் என்பது லூக்கா நற்செய்தியின்படி இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஆகும். இதன் படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு விருத்தசேதனம் செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலேமுக்குக் அவரை கொண்டு சென்றார்கள். இந்த நாளிலேயே அவருக்கு இயேசு என்னும் பெயரும் இடப்பட்டது.

இந்த நிகழ்வு கிறித்தவக்கலையில் 10ஆம் நூற்றாண்டு முதல் இடம்பெறத் துவங்கியது. முதலில் 
இயேசுவின் வாழ்க்கைச் சக்கரத்தில் ஒரு பகுதியாக மட்டுமே சித்தரிக்கப் பட்டாலும், பின்னாட்களில் இந்த நிகழ்வே தனி கருப்பொருளாக மாறியது. இந்த நிகழ்வு இயேசுவின் விருத்தசேதன விழா என்னும் பெயரில் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் ஜனவரி1 அன்றும், கத்தோலிக்க திருச்சபையில் ஜனவரி3 அன்றும் விருப்ப நினைவு நாளாக, ஜனவரி3 அன்று இயேசுவின் திருப்பெயர் எனவும் கொண்டாடப்படுகின்றது.

Circumcision of Christ  





பைபிளில் விருத்தசேதனம்..!

பழைய ஏற்பாட்டில்..

ஆதியாகமம் 17:10-14 /ஆதியாகமம் 34:14-16 / யோசுவா 5:4-8 /லேவியராகமம்12:3 /யாத்திராகமம் 12:44 /நியாயாதிபதிகள் 14:3 /எரேமியா 9:25-26.

புதிய ஏற்பாட்டில்..

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:8 /லூக்கா 21:59 / லூக்கா 2:21/யோவான் 7:22-23 /பிலிப்பியர் 3:5 / அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:3 /அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:46 /அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:5.

இயேசு கிறிஸ்துவிற்கு முன்னால் யூதர்கள் மத்தியிலும் இன்றைய கிறிஸ்துவ மதத்தின் ஸ்தாபகர் பவுலுக்கு முன்னால் இயேசுவின் காலத்திலும் விருத்தசேதனம் என்பது இறைவனோடு கொண்ட உடன்படிக்கையாகவும் தூய்மைக்கான அடையாளமாகவும் இருந்து வந்தது. பவுலடிகள், தான் ஸ்தாபித்த கிறிஸ்துவ மதத்தை யூத சனங்களை தாண்டி மற்றவர்களிடமும் பரப்பிட எண்ணம் கொண்டார். அதற்கு விருத்தசேதனம் ஒரு தடையாக இருக்கலாகாது என்று கருதி.. விருத்தசேதன நியமத்தை தளர்த்திக் கொண்டார் என்பதை பவுலும் மற்றவர்களும் எழுதின நிருபங்களில் காண முடிகிறது.

பிற்காலத்தில் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இஸ்லாத்தை போதித்த பொழுது பாட்டனார் இப்ராஹீம் (அலை) அவர்களது வழிமுறையான விருத்தசேதனத்தையும் வலியுறுத்தினார்கள். முஸ்லிம்களும் முழுக்க முழுக்க விருத்தசேதனம் செய்து வந்த நிலையில், யூதர்களில் சிலர் தற்பொழுது அதன் முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டார்கள் என்று அறிகிறோம்.!

கலாச்சாரத்தின் அடிப்படையில் விருத்தசேதனம்..!

"மதக்கடமை என்ற முறையில் மட்டுமல்லாமல் கலாச்சார முறையிலும் சில இடங்களில் விருத்தசேதனம் கடைபிடிக்கப் படுகிறது. குறிப்பாக நைஜீரியாவில் உள்ள சில குழுக்கள், அர்கம்லேண்ட், ஆஸ்திரேலியாவின் மத்திய மற்றும் மேற்கு பாலைவனங்களில் உள்ள பழங்குடிகள் ஆகியோரிடமும் விருத்தசேதன பழக்கம் உள்ளது. மேலும் பசிபிக் தீவுக் கூட்டங்களான பிஜி, வனுவாட்டு, பெந்தேகொசுடு தீவுகள் மற்றும் பாலினேசியன்  தீவுகளான சமோவா, தொங்கா, குவாம், வடக்கு மரியானா தீவுகள், நியுவே, திகோபியா ஆகியவற்றில் உள்ள மக்களாலும் விருத்தசேதனம் கடைபிடிக்கப்படுகிறது. ஆணிலிருந்து பெண் தன்மையை நீக்கும் சடங்காக விருத்தசேதனம், மேற்கு ஆப்பிரிக்க தோகன் மக்களால் கருதப்படுகிறது.


மதுரை வட்டாரத்திலுள்ள 'பிறமலைக்கள்ளர்' சமூகத்தில் விருத்தசேதனம் 'கவரடைப்பு' அல்லது 'கவரடப்பு' என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. தற்காலத்தில் இது 'மார்க்கல்யாணம்' என வழங்கப் பெறுகிறது. தமிழ்ச் சமுதாயத்தில் பலசமூகங்களில் இருந்த இந்தப் பழக்கம், பிறமலைக்கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது..!"           
SOURCE:

தமிழ்நாட்டில் 'மார்க்கல்யாணம்'எனும் பெயரில் நடத்தப்படும் விருத்தசேதனம்..!





பாலாறுபட்டியில் ஊருக்கு வெளியே மரத்தடியில் காவிவேட்டி, கையில் கம்பியுடன், ‘யாராவது வருகிறார்களா.?’ என்று ரோட்டில் கண் வைத்துக் காத்திருக்கிறார்கள், சிறுவர்கள். பைக்கில் வருபவரைப் பார்த்ததுமே கம்பியை வைத்து வழிமறிக்கிறார்கள்.! “காசை எடு..இது கள்ள நாட்டு வழக்கம்..!" என்கிறார்கள் கோரஸாக, விஷயம் தெரிந்த உள்ளூர்க்காரர்கள் சிரித்தபடி காசு கொடுக்கிறார்கள். ஊருக்கு புதியவர்களோ, ‘இது என்ன நவீன பிச்சையா.. இல்லை வழிப்பறியா..?’ எனப் புரியாமல் தடுமாறுகிறார்கள்.

“எங்க சாதி வழக்கப்படி 1௦ வயசுப் பையன்களுக்கு மார்கல்யாணம் (சுன்னத்) செய்வாங்க.. மார்கல்யாணம் செய்றவங்க, ஒரு வாரம் ஊருக்கு வெளியே தங்கணும். அந்த சமயத்தில் வழியில் போற வர்றவங்க கிட்ட வழிப்பறி செய்றது மாதிரி பணம் வாங்குவோம். அந்தப் பணத்தில் கோவிலுக்கு எண்ணை வாங்கி ஊத்துவோம். மீதி பணத்துக்கு காவி வேட்டி எடுத்து கட்டுவோம்..!” என்றார்கள் ஊர்மக்கள். ‘இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள சுன்னத் வழக்கம், பிறமலைக் கள்ளர் சமூகத்தினரிடம் எப்படி வந்தது..?’ என்று கேட்டால், ”எப்படி வந்ததுனு தெரியல.பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறோம். மார்கல்யாணம் பண்ணும்போது சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புவோம்.அவுங்க சீர் செய்வாங்க.!” என்றார்கள்.

இது குறித்து, சமூகஅறிஞர் தொ.பரமசிவனிடம் கேட்டோம்.

”உலகத்தில் பல பழங்குடிகளிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, யூதர்களிடம் இருந்தது. தமிழ்
சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்த இந்தப்பழக்கம், பிறமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில் மார்கல்யாணத்தை ‘கவரடைப்பு’ எனச் சொல்வார்கள். இந்த வழக்குச் சொல்லும் தற்போது மறைந்து விட்டது, என்றார்..!”

-இரா.முத்துநாகு

SOURCE:
9 நவம்பர் 2011 ஆனந்தவிகடனில் வெளிவந்த செய்தி.. 


கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காடு இதிகாசம்' எனும்  நூலில்..அவரது வரிகளில்..!

"ஆணுக்குன்னு உண்டான 'அந்த' உறுப்புல மேல் தோல மட்டும் எடுத்துவிட்டுட்டா நாளப்பின்ன நல்லது. 'அங்க' அழுக்குச் சேராது. சிக்கலான இடம் பாருங்க; சீக்கு வராது. ஒரு வயசுப் பயலுக்கு ஒரு நாவிதரு அந்தத் தோல வைத்திய முறைப்படி நீக்கிவிடற வைபவந்தான் 'மார்க்க கல்யாணம்'. அதைத்தான் நம்ம ராவுத்தமாருக 'சுன்னத்'துங்கிறாக..!''

(கள்ளிக்காடு இதிகாசம். பக்கம்:280)

விருத்த சேதன பரவல்..!


பொதுவாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், இஸ்ரேலிலும் அதிக அளவில் விருத்தசேதனம் செய்யப்படுகின்றது.

2006ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கை, உலக அளவில் 30 முதல் 33 சதவிகித ஆண்கள் விருத்தசேதனம் செய்துக் கொள்வதாக கூறுகின்றது. மேலும் இதன் கணக்கீடுகள் விருத்தசேதன பழக்கமானது கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இறங்குமுகமாகவும், தென் ஆப்பிரிக்காவில் ஏறுமுகமாகவும் உள்ளதை சுட்டிக் காட்டுகின்றது. நாடுகள்வாரியாக விருத்தசேதனத்தின் பரவல் பின்வருமாறு உள்ளது.       
              
நாடுகள் வாரியாக விருத்தசேதன பரவல். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வரைபடம்..!


  
SOURCE:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 

ஆய்வுகள்..!
           
மருத்துவ அறிவியல் என்றால் என்னவென்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத் தந்த வாழ்வியலை பின்பற்றி கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதை கடைப் பிடித்தும் வருகின்றனர்.

இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான American Academy Of Pediatrics என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமி, கத்னா செய்வதால் அதிக மருத்துவ பயன்கள் உள்ளன என்று 2012 இல் தான் ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளது.


AAP கூறும் பயன்களில் ஒரு சில:


எளிதான சுகாதாரம்:

கத்னா செய்த ஆணுறுப்பை மிக இலகுவாக சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக் கொள்ளமுடியும். அழுக்குகள், நுண்கிருமிகள் ஆண்குறியின் நுனியில் சேர்வதைத் தடுத்துக் கொள்ளமுடியும். அதற்காக தனியொரு அக்கறை எடுத்துக் கொள்ள தேவையில்லை. சர்வ சாதாரணமாகவே சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் கத்னா செய்த ஆணுறுப்பைப் பராமரித்துக் கொள்ளமுடியும்.

சிறுநீர்ப் பாதை நோய் தொற்று குறையும் வாய்ப்பு:

சிறுநீர்ப் பாதையில் நோய்தொற்று வரும் வாய்ப்பு, கத்னா செய்யாத ஆண்களுடன் ஒப்பிடும் போது கத்னா செய்த ஆண்களுக்கு மிகமிகக் குறைவு. சிறுவர்களுக்கு Phimosis எனும் ஆணுறுப்பின் முன்தோல் இறுக்கம் ஏற்பட்டு, அதனால் கழிக்கும் சிறுநீர் சிறிது தங்கிவிடும். இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த Phimosis நோய் காரணமாக சிறுநீர் பாதையில் தொற்று வரும் ஆபத்து அதிகம். சில சமயம் சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தோற்று, கிட்னி பாதிப்பை ஏற்படுத்தலாம் இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு வருவது கிடையாது.

பால்வினை நோய் வரும் ஆபத்து குறைகிறது:

கத்னா செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பு மிக குறைவு. இதை ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வும், CDC Math Model என்னும் அமெரிக்க ஆய்வும் உறுதிப்படுத்துகின்றது.

ஆணுறுப்பில் வரும் பிரச்சினைகள் குறைவு:

கத்னா செய்யப்படாத ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுக்க முடியாமல் போகும் நிலை வருவதால், ஆண்குறியின் முன்தோல் அழற்சி, ஆண்குறியில் அழற்சி வரலாம். தோலின் கீழ் மாவு போன்ற அழுக்கு சேர்ந்து, கட்டி போன்று உருவாகலாம்

கத்னா செய்த ஆண்களுக்கு ஆண்குறி கேன்சர் என்பது அறவே வராது.

கத்னா செய்த ஆண்களின் மனைவியருக்கு Cervical Cancer எனும் கருப்பைவாய் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதற்கு காரணம், கத்னா செய்த ஆண்களுக்கு HPV என்னும் Human Pappiloma Virus தொற்று வரும் வாய்ப்பே இல்லை. இந்த HPV என்னும் வைரஸ் கிருமி தான் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. மேலும் கத்னா செய்த ஆண்குறியில், Smegma எனும் மாவு போன்ற அழுக்கு சேராததால், ஆண்குறியில் வரும் நோய்த்தாக்கம் குறைவு. இதை இன்னொரு ஆப்பிரிக்க ஆய்வு உறுதிப்படுத்துகிறது. Prostate Cancer எனும் ஆண் இனபெருக்க உள்ளுறுப்பில் வரும் புற்று நோய், கத்னா செய்த ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிக குறைவு என்று இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

கத்னா குறித்து மேலும் சில மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வு முடிவுகள். புதிய ஆய்வு ஒன்று கீழ்க்கண்டவாறு உறுதிப்படுத்துகிறது:


கத்னா செய்வதால், ஆணுறுப்பில் உள்ள பாக்டீரியா Ecosystem எனப்படும் உயிர் பொருட்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் முறை,அதிகளவில் மாறுகிறது. நோயை உருவாக்கும் பாக்டீரியா எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. அதிலும் குறிப்பாக ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் பாக்டீரியாவான Anaerobic வெகுவாகக் குறைகிறது. அதனால் ஆணுறுப்பில் வரும் நோய்த் தொற்று குறைகிறது.

(தகவல் Journal mBio ஏப்ரல் 16, 2012)

இதே தகவலை இன்னொரு ஆய்வும் உறுதி செய்கிறது.

அமெரிக்க ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளர் Lance Price, "ஒரு பாறையைப் புரட்டிப் போடுவதால் Ecosystem மாற்றுவதைப் போல கத்னாவினால் ஆண்குறி பாக்டீரியா Ecosystem மாற்றம் அடைகிறது..!" என்கிறார்.("From an ecological perspective, it's like rolling back a rock and seeing the ecosystem change.!").

இதேபோல உகாண்டா நாட்டில், Lance Price மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் கத்னா செய்த ஆண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில், "கத்னாவினால் நீக்கப்பட்ட தோலின் கீழ் பகுதியிலுள்ள நுண்ணுயிரிகளில் Biodiversity மிக குறைவாக உள்ளது, மிக நல்ல விஷயம். கத்னாவினால் நீக்கப்படும் நுண்ணியிரிகள் தான் ஆண்குறியில் அழற்சியை ஏற்படுத்துவதற்கு மூலக்காரணம்.!" என்று கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே குழந்தை மருத்துவதிற்கான மிகப் பெரிய அமைப்பான AAP, கடந்த 13 ஆண்டுகாலமாக கத்னாவினால் ஏற்படும் நன்மைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு தான், பலவித ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தி ஒப்புக் கொண்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

உலகிலேயே ஆப்பிரிக்காவில் தான் கத்னா குறித்து அதிக ஆய்வுகள் நடத்தப் பட்டன. 2005 இல் தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கத்னா செய்யப்பட்ட ஆண், HIV Positive என்னும் எய்ட்ஸ் நோய் தொற்றுள்ள பெண்களோடு உடலுறவு கொண்டபோது, அவர்களுக்கு அந்தப் பெண்களில் இருந்து வரும் HIVவினால் ஏற்படும் AIDS நோய் தொற்று, 63 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் கத்னா செய்த ஆண்கள் பாதுகாப்பாக எந்தப் பெண்ணுடனும் தகாத உடலுறவு கொள்ளலாம் என்று கருதக் கூடாது. இது ஒரு ஆய்வறிக்கை தான். இஸ்லாம் விபச்சாரத்தை அறவே தடுக்கிறது..வெறுக்கிறது.!


கத்னாவிற்கு எதிராக, அதன் எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு வாதம் கத்னா செய்த ஆண்களுக்கு உடலுறவின் போது அதிக உடலுறவு சுகம் கிடைக்காது என்பது. ஆனால் இந்த வாதத்தையும் பல ஆய்வுகள் பொய் என்று உறுதி செய்து விட்டன.


கத்னா செய்யப்பட்ட ஆண்களின் ஆணுறுப்பின் நுனிப்பகுதி, சிறுவயதில் இருந்தே, வேஷ்டி, ஜட்டி அல்லது பேன்ட் போன்றவற்றின் மீது உரசி பழக்கப்பட்டு போவதால், உடலுறவின் போது பெண்ணுறுப்பில், ஆணுறுப்பை வைத்தவுடன் அதிக உணர்ச்சி கூச்சத்தால் ஏற்படும் Premature Ejaculation எனப்படும் ‘முன்கூட்டியே விந்து வெளியாதல்’ எனும் நிகழ்வு, கத்னா செய்த ஆண்ககளுக்கு ஏற்படாது. இதனால் அவர்களுக்கும் அவர்களது மனைவியருக்கும் நீண்ட நேர உடலுறவு மற்றும் உடலுறவில் ஏற்படும் உச்சகட்டத்தை அடையமுடியாமல் போகும் ஏமாற்றம் ஆகியன ஏற்படாது.

‘சுன்னத் செய்வதன் நன்மைகள்.’
By: டாக்டர் த.முஹம்மது கிஸார்.
Thanks

OnlinePj.com


பெண்களுக்கு கத்னா உண்டா..?


ஷாபிஇமாம் உள்ளிட்ட பலர், ஆண்களும் பெண்களும் கத்னா செய்வது கடமை என்கின்றனர். அபூஹனீஃபா இமாம், மாலிக் இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக, நவவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பெரும்பாலானவர்கள் பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாக இல்லை. பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டியெடுப்பதை தான் பெண்களின் கத்னா என்கின்றனர்.!

உம்முஅதிய்யா(ரலி) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார். அவரிடம், " ஓட்ட நறுக்கி விடாதே..! மேலோட்டமாக நறுக்குவாயாக..! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் உள்ளது.      

حدثنا سليمان بن عبد الرحمن الدمشقي وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا حدثنا مروان حدثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية أن امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه وسلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود روي عن عبيد الله بن عمرو عن عبد الملك بمعناه وإسناده قال أبو داود ليس هو بالقوي وقد روي مرسلا قال أبو داود ومحمد بن حسان مجهول وهذا الحديث ضعيف
(அபூதாவூத் 4587)


இதில் இடம் பெறும் முஹம்மது இப்னு ஹஸ்ஸான் என்பவர் யாரென்று தெரியாதவர். இப்னுஅதீ, பைஹகீ, அபூதாவூது ஆகியோர் இதனை உறுதிப்படுத்துகின்றனர். இதே ஹதீஸ் பைஹகீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

17338 - وأخبرنا أبو علي الروذباري أنبأ أبو بكر بن داسه ثنا أبو داود ثنا سليمان بن عبد الرحمن وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا ثنا مروان ثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية : أن امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه و سلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود محمد بن حسان مجهول وهذا الحديث ضعيف
سنن البيهقي الكبرى 8 /324]


இந்த ஹதீசும் முஹம்மத் பின் ஹஸ்ஸான் என்பவர் வழியாக அறிவிக்கப்படுவதால், இதுவும் பலவீனமான தாகும். இதே ஹதீஸ் ஹாகிமிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது..!

 6236 - ما حدثناه أحمد بن سلمان الفقيه ببغداد ثنا هلال بن العلاء الرقي ثنا أبي ثنا عبيد الله بن عمرو عن زيد بن أبي أنيسة عن عبد الملك بن عمير عن الضحاك بن قيس قال : كانت بالمدينة امرأة تخفض النساء يقال لها : أم عطية فقال : لها رسول الله صلى الله عليه و سلم اخفضي و لا تنهكي فإنه أنضر للوجه و أحظى عند الزوج
تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص [5 /264]  

இதன் அறிவிப்பாளரான அலா என்பவர் இட்டுக் கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸ் தான். இதே கருத்தில் பஸ்ஸார், அபூநயிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

8881 - وعن ابن عمر قال : دخل على النبي صلى الله عليه و سلم نسوة من الأنصار فقال : ص . 311
 يا نساء الأنصار اختضبن غمسا واخفضن ولا تنهكن فإنه أحظى عند أزواجكن وإياكن وكفر المنعمين
 قال مندل : يعني الزوج
 رواه البزار وفيه مندل بن علي وهو ضعيف وقد وثق وبقية رجاله ثقات
مجمع الزوائد [5 /310]


இந்த ஹதீஸில் முன்தில் இப்னு அலி என்பார் இடம் பெறுகிறார். அவர் பலவீனமானவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். கத்னா ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்ற ஹதீஸ் அஹ்மத் நூலில் இடம் பெற்றுள்ளது.


 حدثنا سريج حدثنا عباد يعني ابن العوام عن الحجاج عن أبي المليح بن أسامة عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال الختان سنة للرجال مكرمة للنساء 

இதன் அறிவிப்பாளர் ஹஜ்ஜாஜ் என்பார் பலவீனமானவர். தனது ஆசிரியரை விட்டுவிட்டு ஆசிரியரின் ஆசிரியர் பெயரைப் பயன்படுத்தக் கூடியவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.



பைஹகீயிலும் இது இடம் பெற்றுள்ளது. இது இப்னு அப்பாஸின் சொந்தக்கூற்று என்பதே சரியான முடிவு என்று அவரே கூறுகிறார்..!

 أخبرنا أبو بكر بن الحارث الفقيه ، أنبأ أبو محمد بن حيان ، ثنا عبدان ، ثنا أيوب الوزان ، ثنا الوليد بن الوليد ، ثنا ابن ثوبان ، عن محمد بن عجلان ، عن عكرمة ، عن ابن عباس ، عن النبي صلى الله عليه وسلم قال : " الختان سنة للرجال , مكرمة للنساء " هذا إسناد ضعيف , والمحفوظ موقوف *

இந்த ஒரே கருத்தில் வருகின்ற எந்தவொரு ஹதீஸும் விமர்சனத்துக்கு உட்படாமல் இல்லை. அதனால் பெண்கள் கத்னா செய்வது இஸ்லாமிய வழியல்ல என்பதை உணரலாம்.

மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை இறைவன் வழங்கியுள்ளான். அந்த உணர்வைக் கொண்டே உலகம் நிலை பெற்றுள்ளது. அவர்கள் உடலுறவின் மூலம் அந்த இச்சையைத் தணித்துக் கொள்கின்றனர்.

பெண்களுக்கு கத்னா செய்வதால் அவர்கள் அந்த பாக்கியத்தை இழந்து விடுகின்றனர். இல்லறத்தில் அவர்கள் பூரணதிருப்தியை அடைவதில்லை. அடையவும் முடியாது.

ஆண்களுக்கு கத்னா செய்வது அவர்களின் அந்த உணர்வுக்குத் தடையாக இராது. அதற்கு உறுதுணையாக இருக்கும். இதற்கு மேல் விளக்கமாக இதை எழுத இயலாது.

இறைவன் எந்தநோக்கத்திற்காக பிறப்புறுப்புகளை அமைந்துள்ளானோ அந்த நோக்கத்தில் பெரும்பகுதி பெண்களுக்கு கத்னா செய்வதால் அடிபட்டுப் போகின்றது.


இறைவன் வழங்கிய பாக்கியத்தை அழித்துக் கொள்வது என்ற அடிப்படையில் பார்க்கும்போது பெண்களுக்கு கத்னா செய்வது கொடூரமானது என்று அறியலாம்.
(பி.ஜெனுலாபிதீன் அவர்கள், அல்ஜன்னத் இதழில் எழுதியது..)

சில கேள்விகளும்..அதற்கான பதில்களும்..! 

Q.சிறு குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வது என்பது மனித உரிமை மீறல் இல்லையா..?

A.பிறக்கும் பொழுது தாயின் தொப்புள் கொடியை கதறகதற அறுத்து தான் மருத்துவமனைகளில் குழந்தையை வெளியேற்றுகிறார்கள். அதுவும் தவறு என்று சொல்ல வேண்டியது வருமே.!   


Q. ஆணுறுப்பின் நுனித் தோலை இறைவன் ஏன் படைக்கவேண்டும்.. பிறகு நீக்க சொல்ல வேண்டும்..? Why did He create the foreskin which covers the tip of the penis and ordered us to cut it?
A. தின்று விட்டு வீசியெறிந்து விடுகிற வாழைபழத்தை, தோலுடன் ஏன் அவன் படைக்க வேண்டும்..? கிட்டத்தட்ட அதே காரணம் தான் இதற்கும்.!

தாயின் கருவறையில் வளருகிற ஆண் குழந்தைக்கு இந்த ‘கவரிங்’ அவசியம் தேவைப்படுகிறது. தாய்,சேய் இருவருக்கும் அங்கே உயிரியல்ரீதியாக கேடேதும் நேராமல் இருப்பதற்காக பாதுகாப்பு கவசமாக இந்தத் தோல் படைக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தை பிறந்தப் பிறகு அந்த தோல் பல ஆபத்துகளை விளைவிக்கும் என்பதால் முஸ்லிம்களால் அது நீக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் தெரிந்துக் கொள்ள Sheikh Muhammad Amin Sheiko என்பாரது விளக்கத்தை படித்துப் பார்க்கலாம்.!         




Q. ஆண்குறியின் நுனித்தோலுடன் இயற்கையே படைத்துள்ள பொழுது.. செயற்கையாக அதனை நீக்கி மாற்றம் செய்வது மூலமாக இயற்கைக்கு  விரோதமாக நடக்கலாமா..? அத்தகைய விருத்தசேதனத்தை வலியுறுத்துகிற இஸ்லாத்தை  இயற்கை மார்க்கம் என்று கூறலாமா..?

A. மனிதன் இயற்கையாக நிர்வாணியாக பிறக்கிறான். செயற்கையாக ஆடை தயார் செய்து உடுத்துகிறோம். மிருகங்கள் கூட பலவித திறமைகளுடன் பிறக்கின்றன. மனிதன் முட்டாளாக.. நீச்சல் கூட தெரியாதவனாக பிறக்கிறான். செயற்கையாக அவனுக்கு கல்வி புகட்டப்படுகிறது.

இயற்கையாக முடி வளருகிறது..நகம் வளருகிறது.. அதையெல்லாம் அவ்வபோது வெட்டி செயற்கையாக சீர்திருத்திக் கொள்கிறோம். இயற்கையாக அசுத்தம் அடைகிறோம். செயற்கையாக தூய்மை படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

மிருகங்கள் காயம்படாமல் நடக்க, ஓட இயற்கையாகவே குழம்புடன் பிறக்கின்றன.. நாமோ செயற்கையாக மிதியடிகளை தேடிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. 
  
மனிதனைப் பொறுத்தவரை எது இயற்கை.. எது செயற்கை..?

சீர்திருத்தம் இல்லாத காடு போல வளர கடமை பட்டது மிருகம். தன்னை சீர்திருத்திக் கொண்டு அழகான தோட்டமாக மலர வேண்டியவன் மனிதன்.!


தொகுப்பு: பூமராங் 


SOURCES:



http://www.bbc.co.uk/religion/religions/judaism/jewishethics/circumcision_1.shtml



https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

http://www.who.int/hiv/topics/malecircumcision/en/


 http://www.scientificamerican.com/.../male-circumcision.../



http://mbio.asm.org/content/4/2/e00076-13




 http://www.onlinepj.com/kel.../Viruthasethanam-Saivathen/...

Wednesday, 16 September 2015

உடல் ஊனமுடன் பிறந்த மகனை 63 ஆண்டுகள் பராமரித்த தாய், தன்னுடைய 101 வது வயதில் மரணமடைந்தார்.!




அன்னையின் அன்புக்கு-தியாகத்திற்கு ஈடு இணையுண்டா, இந்த உலகில்..?


உடல் சிலிர்க்கிறது.. கண்ணீர் திரள்கிறது.. இந்த அன்புத் தாய்க்காக பிரார்த்தனை கரம் உயர்கிறது..! 

மலேசியாவில், KUALA NERANG எனும் பகுதியில் வாழ்ந்து வந்தவர் தான் மெலியா தியா (Meliah Md Diah) என்ற இந்தத் தாய். இவரது கணவரான சவுத், இருபது வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவரது மற்ற மூன்று குழந்தைகளும் (இரண்டு ஆண், ஒரு பெண்) சிறு பிராயத்திலேயே இறந்துப் போயின.! இறுதியில் வாய் பேசாத, நடக்க இயலாத முழு உடல் ஊனங்களை கொண்ட மகனான அப்துல் ரஹ்மான் சவுத்’துடன் வாழ்க்கையில் தனித்து விடப்பட்டார்.!




சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அன்பு மகனை தழுவியிருப்பது போன்ற இந்தத் தாயின் படம் சமூக வலைதளங்களில் பதிவேற்றப் பட்டு பல லட்சக்கணக்கான விருப்பங்களை பெற்றது.





‘’எனது மகன், இந்த நிலையிலும் எனக்கு சுமையல்ல. அவனை நான் மிகவும் நேசிக்கிறேன். குழந்தை பருவத்திலிருந்தே அவனை குளிப்பாட்டவும், உடை மாற்றவும், உணவு ஊட்டவும் செய்து வருகிறேன். எப்பொழுதும் அவனோடு இருப்பதையும், அவனை நன்றாக கவனித்துக் கொள்வதையுமே விரும்புகிறேன்..!” என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.

எவ்வித கசப்புணர்வுமின்றி இறைவனின் அந்த விதியை ஏற்றுக் கொண்டு, எப்பொழுதும் இறுதி வரை தன்னுடைய மகனை கவனிக்கத் தக்க வகையில் தனக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து வந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இத்தகைய மனித மாண்புமிக்க இந்தத் தாயின் மறுமை பேறுகளுக்காக பிரார்த்தனை செய்வோம்.!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..! 


SOURCES:




இந்து ராஜ்ஜியமாக மாற நேபாள பாராளுமன்றத்தில் எதிர்ப்பு..!



‘ஹிந்து நேஷனல் டெமாக்ரடிக் பார்டி'( Hindu National Democratic Party )என்ற இந்துத்துவா அமைப்பு நேபாளத்தை 'இந்து ராஷ்ட்ராவாக' அறிவிக்கச் சொல்லி கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஒட்டி பேரணியும் நடத்தியது. நேபாள பாராளுமன்றத்தை நோக்கி கோஷங்களை எழுப்பிச் சென்றது. ஆனால் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்துத்துவா கோரிக்கைக்கு ஆதரவு இல்லை. மூன்றில் இரண்டு சதமான உறுப்பினர்கள் தங்கள் நாடு 'இந்து ராஷ்ட்ராவாக' மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். முடிவில் இந்துத்துவாவாதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மத சார்பற்ற நாடாகவே இனி நேபாளம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்துத்துவவாதிகளுக்கு.. ஞே..! 


SOURCE:


http://timesofindia.indiatimes.com/world/south-asia/Nepal-to-stay-secular-proposal-for-a-Hindu-nation-rejected/articleshow/48959256.cms


Tuesday, 15 September 2015

தீரர் திப்பு சுல்தான் - ஃபாசிஸ்ட்டுகளுக்கு நேற்று-இன்று-நாளைய குலை நடுக்கம்






'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. 

'''இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியா வில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர் களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (179092) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்ன னால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ''30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது'' என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலே யருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

''ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதார ணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், பிளாசிப் 'போரில்' பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, ''இப்போது நாம் 'தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்'' என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று,பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத் தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல் தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். ''திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்'' என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒருஇளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ''அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது'' என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்தபிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று,'குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு 'மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியா விலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு ''உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்'' என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், 'பென்சன் ராஜாக்கள்' என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங் களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்÷ணாட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்றசூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

''எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்'' என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக் கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

''ஏழைகளையும், விவசாயிகளை யும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்'' என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்குஉரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்கா விலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்க வில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப் பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியா ளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

''அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5மூ பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகி யிருந்தன் உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட் களுக்கு நிகராக இருந்தன் முதலாளித் துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்க ளையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந் ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றி யிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வ வாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத் தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெ னியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, ''மக்களின் ஆரோக்கியத் தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?'' என்ற கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

''எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி'' என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். ''எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது'' என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிட மிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமை களாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. ''விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்'' என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிக ளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

''தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்'' என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதி களிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

''ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்'' என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடு கிறான்: ''சிவில் நிர்வாகமாக இருக்கட் டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற் காக இங்கே சலுகை காட்டப்படுவ தில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.''

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: ''இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்.'' ''தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.'' இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

''நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத் தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.'

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. ''விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்'' என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்விஇருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். 'சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந் தால்? 'உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளை யரிடம் தோற்றவுடன் ''ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்'' என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. ''மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்'' என்று பதறுகிறான் அவருடைய பணியாள். ''முட்டாள்... வாயை மூடு'' என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! ''ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்'' என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

''நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.''

''மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா'' .

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.


SOURCE

http://kulasaivoice.blogspot.in/2015/08/1.html


[][][]

Monday, 14 September 2015

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது ஆடையே காரணம்! – சர்வே தகவல்!





பிரேசில் நாட்டில் நடந்த கருத்து கணிப்பு ஒன்றில் பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது உடல் தெரியமளவிற்கு அணியப்படும் ஆடையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பொருளாதார ஆராய்ச்சிக்கான அரசு அமைப்பு சர்வே ஒன்று நடத்தியது. கடந்த 2013ம் ஆண்டு மே மற்றும் ஜூனிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் 3,810 பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலும் பெண்கள். உடல் தெரியும் வகையில் ஆடை அணிவது கற்பழிப்பிற்கு வழிவகுக்கிறது என்று 65 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் தெரிந்திருந்தால் கற்பழிப்பு சம்பவங்கள் குறையும் என்று 58.5 சதவீதத்தினர் கூறியுள்ளனர். இந்த சர்வே முடிவு அந்நாட்டில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களது புகைப்படங்களை எடுத்து அதனை ஆன்லைனில் அனுப்பியுள்ளனர்.

சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களில் குறைந்த ஆடை அல்லது ஆடைகளின்றி, நான் கற்பழிக்கப் படுவதற்கு தகுதியானவளல்ல என்ற வாசகங்களை தாங்கியபடி நிற்கின்றனர். பேஸ்புக் வழியே கற்பழிப்புக்கு எதிரான ஆன்லைன் எதிர்ப்பு போராட்டத்தை பத்திரிக்கையாளரான நானா குயிரோஸ் நடத்தியுள்ளார்.இதற்கு பல வழிகளில் இருந்தும் அவருக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து அவர் கூறுகையில், ஆச்சரியப்பட தக்க விசயம் என்னவெனில், பிரேசில் விழாக்களில் ஆடைகளின்றி நடப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பிரசார போராட்டத்திற்கு ஆண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் கற்பழிப்புக்கு எதிரான வாசகங்களான கற்பழிப்பிற்கு எந்த பெண்ணும் தகுதியானவர் அல்ல என்பதை தெரிவிக்கும் வாசகங்களுடன் தங்களது புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த கருத்து கணிப்பு குறித்து பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் கூறும்போது, வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள அரசாங்கம் மற்றும் சமூகம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை ஆய்வு முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிரேசில் சமுதாயம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: