Translate

Friday, 11 September 2015

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள்..?




வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னாள் வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது. இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னனியாகக் கொண்டதாகும்.

கலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் சரியாக இனம் கண்டு தாக்கவேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்கள் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து என்று தாக்காமல் விட்டுவிடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொன்று போடவும் வந்தே மாதரம் என்பது உருவாக்க்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த நாவலுக்கு முன் வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்பட்டதில்லை. கலவரத்தின்போது இந்துக்கள் வந்தே மாதரம் சொல்வதுபோல் முஸ்லிம்களும் சொல்லிவிட மாட்டார்களா என்றால் வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்தக் கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர். ஏனெனில் வந்தே மாதரத்தின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை(Only One God)க்கு எதிரானதுஎன்பதால், முஸ்லிம்கள் இதைச் சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

வந்தே மா தரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன.

வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம் – வணங்குகிறோம் – வழிபடுகிறோம் என்பது பொருள்.

மா என்றால் தாய் என்று பொருள்.

தரம் என்றால் மண் என்பது பொருள்.

அதாவது தாய்மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பது மொத்த வார்த்தையின் பொருளாகும்.

வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்துகொள்ள அகராதியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பாரதியார் தனது பாட்டில் இதன் அர்த்தத்தைத் சொல்லித் தந்துவிடுகிறார்.

வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.
இது பாரதியார் பாட்டின் முதல் வரிகள்.

எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பதுதான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியார் பொருள் சொல்லிவிட்டார்.


Source:


பேராசிரியர் பெரியார் தாசன் (எ) டாக்டர் பேராசிரியர் அப்துல்லாஹ்..!


"அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்..!"



சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார். 
  
சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.
பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.

ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.

பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.

இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

‘தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது’ எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.

‘பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார். 
இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தவரை பார்ப்பதற்காகச் சென்ற போது, சிறப்புப் பிரிவுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என மறுத்தது மருத்துவமனை நிர்வாகம். உடனே படுக்கையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் அவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து நீண்ட நேரம் எம்மோடு உரையாடினார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.

2001 ஆம் ஆண்டிலிருந்தே அவரை நான் நெருக்கமாக அறிவேன். அவரிடம் மணிக்கணக்கில் உரையாடிய மிகச் சிலரில் நான் ஒருவன். அவரை அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நேர்காணல்கள் செய்துள்ளேன்.

ஒவ்வொருமுறையும் அவரை சந்திப்பதற்காக பச்சையப்பன் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள கேண்டீனில் அமர்ந்தே பேசுவோம். கடைசியாக அவரிடம் மருத்துவமனை கேண்டீனில் அமர்ந்துதான் பேசினேன்.

இனி எங்குமே அவருடன் பேச முடியாது!

BY: ஆளூர் ஷாநவாஸ்

#############

Sunday, 6 September 2015

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்மணி..!


ஒரு நாட்டின் தேசிய கொடி என்பது குறிப்பிட்ட நாட்டின் தனித்தன்மையை-இறையாண்மையை-சுதந்திரத்தை பிரதிபலிக்கும் முக்கிய குறியீடாக-பிரதித்துவப் படுத்தும் புனித அடையாளமாக கருதப்படும். ஆரம்ப காலங்களில் யுத்தக் களங்களில் மாத்திரம் பயன்பட்டு வந்த இந்தக் கொடிகள், பின்பு ஒவ்வொரு நாட்டின் தேசிய சின்னங்களாக பரிணாமம் அடைந்தன.

தேசிய கொடியை அந்தந்த நாட்டு அறிவார்ந்தோர், தலைவர்கள் கூடி மிக கவனமாக ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த அடிப்படையில் பல வகை ஆலோசனைகள், மாற்றங்களுக்குப் பிறகு தெரிவு செய்யப்பட்டதே, நம்முடைய மூவர்ண தேசியக் கொடி..!


இன்றைய நம்முடைய தேசியக் கொடியை வடிவமைத்தது யார் என்று கேட்டால், பலரும் தவறாக பிங்காலி வெங்கையா (PINGALI VENKAYYA:1878-1963) என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கொடியை வடிவமைத்தவர், ஒரு இஸ்லாமியப் பெண்மணி.! அவரின் பெயர் ஸுரியா தியாப்ஜி (SURAYYA BADRUDDIN TYABJI). அதற்கு யோசனை தந்த அவரது கணவரின் பெயர் பத்ருதீன் பைஸ் தியாப்ஜி ICS (BADRUDDIN FAIZ TYABJI-ICS) ஆவார்..!






இந்த 'பத்ருதீன் பைஸ் தியாப்ஜி' யாரெனில்.. இந்திய தேசிய   காங்கிரசை நிறுவிய ஐவரில் ஒருவரான பெரியவர் பாரிஸ்டர் பத்ருதீன் தியாப்ஜி அவர்களின் பேரன்..! (தாத்தாவிற்கும் பேரனுக்கும் ஒரே பெயர்..!)

பெரியவர் பாரிஸ்டர் பத்ருதீன் தியாப்ஜி: 1844 – 1906


காங்கிரசை நிறுவிய மற்ற நால்வர்,  ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகியோர்.  பெரியவர் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜியின் காலம் : 1844 – 1906. பத்ருதீன் பைஸ் தியாப்ஜியின் காலம்:1907-1995 அவரது  மனைவியான ஸுரியா தியாப்ஜியின் காலம்: 1919-1978.

கொடியின் வரலாறு இது தான்..!

பிப்ரவரி 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ (Clement Attlee:1883-1967) அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் (Mountbatten: 1900-1979) , பாகிஸ்தான் – இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தங்களது திட்டத்தை காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட்  15 இல் ஆட்சி மாற்றம் நிகழப்   போவதாகவும் தெரிவிக்கிறார்.

அத்துடன் வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா மற்றும்  பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு கொடிகளிலும், தங்களது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சின்னமான யூனியன் ஜாக்கை நீல நிற  பின்புலத்தில், சிகப்பு வெள்ளையில் ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறியை சேர்த்து, அதனை தத்தம் கொடிகளின் மூலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல…! )


ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் சின்னம்.! 




ஆனால் அவரது  அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த இரு தரப்பினரும் தங்களுக்கென தனித்துவமான ஒரு கொடியை வடிவமைத்துக் கொள்ள முனைகின்றனர். அதில் முக்கியமாக ஆக்கிரமிப்பு சக்தியான பிரிட்டிஸாரின் 'யூனியன் ஜாக்' சின்னம் அறவே இருக்கக் கூடாதென்றும் முடிவு செய்கின்றனர்.!

ஜூன் 23, 1947 : இந்திய தரப்பில் கொடியை வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. அதன் தலைவராக Dr. ராஜேந்திர பிரசாத் அவர்களும், உறுப்பினர்களாக Dr.அபுல் கலாம் ஆசாத், மூதறிஞர் ராஜாஜி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, K. M.பணிக்கர், K. M.முன்ஷி, Dr.B. R. அம்பேத்கர், S. N.குப்தா, பிராங்க் அந்தோணி, சர்தார் உஜ்ஜல் சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
(Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய இந்திய தேசிய காங்கிரஸ் கொடியையே நமது நாட்டின் தேசிய கொடியாக அங்கீகரிக்க வேண்டுமென்ற வாதம் பரவலாக வலுப்பெறுகிறது..!


பிங்காலி வெங்கையா வடிவமைத்த கொடிகளின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் வில்லை.! 


இந்நிலையில், ஆர்.எஸ்.எஸின் தலைவர் சாவர்கர் மும்பையில் இருந்து, முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு அவசர தந்தி அடித்து,  கொடி முழுக்க காவி நிறத்தில் இருக்க வேண்டும் என்றும், வேறு எந்த சின்னம் பொறித்தாலும் அதில் இராட்டை சின்னம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்..!


வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள்  ஏற்றிய கொடியைத் தான் தேசிய கொடியாக கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.



இப்படியாக அனைவரின் கருத்துக்களையும் நியமிக்கப்பட்ட அட்ஹாக் கமிட்டி அமைதியாக கேட்டு பரிசீலனை செய்து வந்தது.

இந்நிலையில் தான், கமிட்டி தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களை பத்ருதீன் பைஸ் தியாப்ஜி அவர்கள் சந்தித்து, அவரின் எண்ணப்படி தேசிய கொடி இருக்க வேண்டிய வடிவமைப்பை எடுத்து சொல்கிறார். தலைவருக்கு அது மிகவும் பிடித்துப் போய் விடவே, அதனை காந்திஜியிடம் தெரிவித்து ஒப்புதலை பெற்று வருமாறு அனுப்பி வைக்கிறார்.  காந்திஜியிடம், இராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்பட வேண்டியதற்கான காரணத்தை இப்படி விவரிக்கிறார், பத்ருதீன் பைஸ் தியாப்ஜி.

 “கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட நம்முடைய இந்திய தேசிய கொடியினை இருபக்கத்தில் எங்கிருந்து பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி ஒரு போலவே தெரியவேண்டும். அதற்கு அசோக சக்கரம்தான் சரியாக இருக்கும். 'இராட்டை சின்னம்’  அது போல அமையாது..!''



இதனை கூர்ந்து கேட்டு, ஆமோதித்த காந்திஜி அவர்கள், அவரையே உடன் ஒரு ‘மாதிரி கொடியை’ தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு பணிக்கிறார்.

உடனே காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய் தன்னுடைய மனைவியான ஸுரியா தியாப்ஜியிடம் தந்து தன்னுடைய எண்ணப்படி தேசிய கொடியை வரைந்து தர சொல்கிறார், பத்ருதீன் பைஸ் தியாப்ஜி.


தேர்ந்த வண்ணத்தூரிகையாளரான ஸுரியா தியாப்ஜி அவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இன்றைக்கு நாம் கண்ணார கண்டு மகிழ்வது போன்ற ஒரு கொடியை அழகுற வரைந்து வர்ணம் தீட்டி கணவரிடம் தருகிறார்..!


அதனை கண்டு திருப்தியுற்று மெத்த பாராட்டிய காந்தியடிகள் அவர்கள், அந்தக் கொடிக்கு இசைவு தந்ததும்,1947 ஜூலை 17 அன்று அதற்காக அமைக்கப்பட்ட அட் ஹாக் கமிட்டியினரால் வெளியிடப் பட்டதே, இன்றைக்கு பட்டொளி வீசி பறக்கும் நம்முடைய இந்திய தேசியக் கொடி..!



நமது கொடியின் பரிணாமப் பயணம்..!

முகலாயர் காலத்து கொடி.



அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர் கொடி.!



1857இல் இறுதி மொகலாய மன்னர் பகதூர்ஷா ஜாபர், வெள்ளையருக்கெதிராக உயர்த்தி பிடித்த கொடி.!



1905இல் சகோதரி நிவேதிதா வடிவமைத்த கொடி.


1906 இல் கல்கத்தாவில் உருவான கொடி.
இந்தியாவின் சுதந்திர போர் இருபதாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் உக்கிரமடைந்த வேளையில், அதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினை சார்ந்த தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் தமக்கென ஒரு கொடியையும் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு கொடியாக இருக்க வேண்டும் என கருதி வங்காளத்தில் சுசிந்தர பிரசாத் போஸ் என்பவரால் வங்காளத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தில்,  இந்தியாவில் முதன்முதலாக மூவர்ணக்கொடி இடம் பெற்றதாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன. நடுவில் மட்டும் சீக்கியர்களுக்காக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது. இந்தக் கொடி 1906 ஆகஸ்ட் 1இல் Parsee Bagan Square (Green Park) இல் ஏற்றப் பட்டது.


இம்மூவர்ணக்கொடியில், அன்றைய 8 மாகாணங்களை குறிக்கும் வகையில் காவியில் நீள்வாக்காக 8 நட்சத்திரங்களும், மஞ்சளில் வங்காள மொழியில் வந்தே மாதரமும், பச்சையில் ஒரு சூரியன், சந்திரன் அதன் மீது ஒரு நட்சத்திரத்தோடு அமைந்திருந்தது.





1907ல் முதலாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில், பாரிசில்,மேடம் பிக்காய்ஜி காமா என்பவர் இந்தியாவின் மூவர்ணக்கொடியில் சில மாற்றங்களோடு உருவாக்கிய கொடியை ஜெர்மனியில் சோஷலிச மாநாட்டில் வெளியிட்டார். அந்தக் கொடி, முதலாம் உலகப்போருக்குப்பின் பெர்லின் கமிட்டி கொடி என அழைக்கப்பட்டது. 



இதே காலகட்டத்தில் தோன்றிய வேறு சில கொடிகள்..!




1917இல் திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் உருவாக்கிய கொடி.

Annie Besant and Tilak hoisted the flag during the Home Rule Movement with an addition in the left hand corner (the pole end), the stamp of the UnionJack.!


காந்தியின் வருகை:
மகாத்மா காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடியின் பல மாற்றங்களை கொண்டு வந்தார், 1921 ஆம் ஆண்டு ஒரு புதிய வடிவில் கொடி உருவாக்கப்பட்டது. அக்கொடியில் இந்தியாவின் சிறுபான்மையினரின் மத அடிப்படையில் வெள்ளை(கிறித்துவம்), பச்சை(இஸ்லாம்), காவி(இந்து) என வரிசையாகவும் நடுவில் இராட்டையும் இடம் பெற்றது, அது அப்போதைய ஐயர்லாந்து நாட்டின் கொடியை ஒத்ததாக இருந்தது. இது பல அரசியல் காரணங்களால் இந்திய காங்கிரஸ் மற்றும் பெருவாரியான சுதந்திர போராட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா அவர்கள்.!


1931 இல் பிங்காலி வெங்கையா அவர்களால் மீண்டும் மற்றொரு கொடி உருவாக்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸால் பல்வேறு சுதந்திர போராட்டக் களங்களில் பயன்படுத்தப்பட்டது.



அன்றைக்கு காங்கிரசிலிருந்து பிரிந்த சிலர், 1939 இல் உருவாக்கி பயன்படுத்திய கொடி.!



மதம் சார்ந்த ஒற்றை நிறக்கொடி:

இதனிடையே ஆரஞ்சு (ஆக்கர்) நிறத்தில் இடது மூலை உச்சியில் ராட்டையுடன் மதரீதியாக ஒரு கொடி உருவாக்கப்பட்டது. அது இந்திய தேசிய காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது.!



இறுதியாக, பத்ருதீன் பைஸ் தியாப்ஜி ICS அவர்களின் யோசனையின் பேரில் ஸுரியா தியாப்ஜி அம்மையார் வடிவமைத்து அளித்த இன்றைய இந்திய தேசியத்தின் கொடி.!



ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)