Translate

Saturday, 30 April 2016

இஸ்லாத்திலிருந்து வெளியேறும் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களா??




இஸ்லாத்திலிருந்து வெளியேறும் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களா.?


----------------------------------------------------------------------------



*இஸ்லாம் மனிதனுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது; மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை! 

[திருக்குர்ஆன் 2:256] "மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமில்லை.." 


[திருக்குர்ஆன் 
18:29] "நீர் கூறுவீராக: உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள இது சத்தியமாகும்; ஆகவே, எவர் நாடுகிறாரோ அவர் விசுவாசிக்கட்டும்; இன்னும் எவர் நாடுகிறாரோ அவர் நிராகரித்துவிடட்டும்.." 


[திருக்குர்ஆன் 
10:99] "மேலும் உமது இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவருமே முற்றிலும் விசுவாசித்திருப்பாரர்கள்; எனவே மனிதர்களை_ அவர்கள் விசுவாசிகளாகிட வேண்மென்று நீர் நிர்பந்திருக்கிறாரரா?" 


இந்த வசனங்கள் மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்பதை தீர்க்கமாக தெரிவிக்கின்றன!

. . . .


*ஒருவர் குழப்பம் விளைக்காமல் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் தண்டனை இல்லை!


[திருக்குர்ஆன் 
4:137]"நிச்சயமாக விசுவாசங்கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னரும் நிராகரித்து, பின்னரும் நிராகரிப்பை அதிகப்படுத்தி கொண்டனரே அத்தகையோர்_ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டுபவனாகவும் இல்லை." 

இந்த வசனத்தின்படி, சிலரை பற்றி இறைவன் கூறும் போது, 2 தடவை இஸ்லாத்திருந்து வெளியேறியோர் என்கிறான்! 

இஸ்லாத்திலிருந்த வெளியேறிய ஒரே காரணத்துக்காக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் 2வது தடவை இஸ்லாத்திலிருந்து வெளியேற முடியுமா?? 


Saheeh Bukhari (tamil) Book 29 Number 1883, (english) 1784 & Muslim 1383 


"ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறுநாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கபட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கிவிடுங்கள்! என்று கேட்டார். நபி (ஸல்) 3 முறை அதை மறுத்தார்கள். "மதீனா உலையை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்று திகழ்வார்கள்."

இங்கே இஸ்லாத்திலிருந்து வெளியேறிய அந்நபரை நபி கொல்ல கட்டளையிடவில்லை! 

இதன்படி இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒரே காரணத்திற்காக எவரும் கொல்லப்படுவதில்லை!! 

. . . . .

*இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவரை கொல்ல வேண்டுமானால், அந்த நபர் இஸ்லாமிய ஜமாத்தில் பிரிவினையை ஏற்படுத்தியவராக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் செய்தவராக இருக்கவேண்டும்!! 

¤ஒரு முஸ்லிமை மூன்று காரணங்களுக்காகவே தவிர கொல்லக்கூடாது. அதில் மூன்றாவது

(والتارك لدينه المفارق للجماعة)

மார்க்கத்தை விட்டு வெளியேறி ஜமாத்தில் பிரிவினையை ஏற்படுத்தல். 

(அறிவிப்பவர் ஆயிஷா (r).  
Muslim 1676 (eng))


இதன்படி கூட்டமைப்பை பிரித்து மேயும் முர்தத்தையே கொல்ல வேண்டும்  என்று இதன் மூலம்  விளங்கலாம்..!!


¤இதே போன்ற செய்தியில் ஒரு முஸ்லிமை கொல்லும் மூன்றாவது காரியம்! 

(رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله)

ஒரு மனிதர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் யுத்தம் செய்தல். 

(Sunan Nasai book 37 number 4048 Sunan abu dawud book 38 number 4339) 


இவற்றின்படி ஒரு மதம் மாறியவரை கொல்ல வேண்டுமானால், அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக யுத்தம் செய்தவனாக இருக்க வேண்டும்!! 


மதம் மாறிய ஒரே காரணத்துக்காக ஒருவரை கொல்ல முடியாது! அவர் கொல்லப்பட வேண்டுமானால், அவர் கூட்டமைப்பில் பிரிவினை ஏற்படுத்துபவராகவோ அல்லது இஸ்லாத்திற்கு எதிராக யுத்தம் பண்ணுபவராக இருக்க வேண்டும்!! 

. . . . . .


*இஸ்லாத்திலிருந்து வெளியேறி அதோடு நின்றுவிடாமல் இவற்றை செய்த ஒருவருக்கு , ஒரு முஸ்லிம் அடைக்கலம் கொடுத்தால் அவரும் பாதுகாக்க படுவார்!! 


(كان عبدالله بن سعد بن أبي سرح يكتب لرسول الله <صلى > فأزله الشيطان فلحق بالكفار فأمر به رسول الله <صلى> أن يقتل يوم الفتح فاستجار له عثمان بن عفان فأجاره رسول الله <صلى>) 


அப்துல்லாஹ் பின் ஸஅது பின் அபூஸர்ஹ் இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு எழுதி கொண்டிருந்தார். ஆனால் ஷைத்தான் அவரை வஞ்சித்துவிட அவர் நிராகரிப்போரிடம் இணைந்து கொண்டார். மக்கா வெற்றியின் நாளில் அல்லலாஹ்வின் தூதர் அவரை கொன்றுவிடும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் உஸ்மான் பின் அப்பான் அவருக்காக அபயம் தேடினார். எனவே அல்லாஹ்வின் தூதர் அபயம் வழங்கினார்கள்.

(sunan abu dawud book 38 number 4358) 


இதன்படி கொல்லப்பட வேண்டிய இஸ்லாத்திலிருந்து வெளியேறியவருக்கு ஒரு முஸ்லிம் அபயம் கொடுத்தாலும் அபயம் பெறுவார் என்று இதன் மூலம் விளங்கலாம்!! 

. , . . .



*இஸ்லாத்தை ஏற்பது போல அதை நிராகரிக்கவும் ஒருவருக்கு சுதந்திரமுண்டு! 

*ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒரே காரணத்திற்காக அவரை கொல்வதற்கு குர்ஆனோ ஏற்றுகொள்ளத்தக்க சரியான ஹதீஸ்களோ கூறவில்லை.

*ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி அதோடு நின்றுவிடாமல் இஸ்லாத்திற்கெதிராக யுத்தம் செய்தாலோ அல்லது கூட்டமைப்பில் பிரிவினை ஏற்படுத்தினாலோ அப்போது அவர் கொல்லப்பட வேண்டியவர்! 


*இப்படிப்பட்ட மதம் மாறியவனுக்கு ஒரு உண்மையான முஸ்லிம் அபயம் கொடுத்தால் அவன் பாதுகாக்கப்படுவான்!!

- - - - 

 நபியவர்கள் காலத்தில் 
இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவப்பட்டிருந்தது. 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க பல நிராகரிப்போர் நேரம் பார்த்து காத்திருந்தனர். இஸ்லாத்திலிருந்து வெளியேறி இஸ்லாமிய அரசின் எதிரிகளோடு சேருவார் என்றால், எதிரகளுக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன. இப்படிபட்ட துரோகிகளை கொல்வது மிக சரியானதே! 


இதை அமெரிக்கா, இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளன!!


உதாரணமாக அமேரிக்காவில் வாழும் ஒருவன் அமெரிக்காவை தாக்க அதன் எதிரிகளுக்கு இரகசியங்களை வழங்கினால் அவனை அமெரிக்கா என்ன செய்யும்?
 

இந்தியாவின் இரகசியங்களை தீவிரவாதிகளுக்கு ஒரு படைவீரன் வழங்கினால் அவனை என்ன செய்வார்கள்??


இதை இஸ்லாம் செய்தால் தவறாம்.. இந்த நாடுகள் செய்தால் நியாயமாம்!!


நன்றி: இஸ்லாமும் கிறிஸ்தவமும். 



[][][]

No comments:

Post a Comment