பவுல் கூறுகின்றார் :
"தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது. சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?" - ரோமர் 3:4-7
பவுல், தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக்கொள்கின்றாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக புனித வேதமாக இடம்பெற்றுள்ளது.
பவுல் கூறுவதைக் கேளுங்கள் :
"நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேத்தில் நான் உடன் பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். "- 1 கொரிந்தியர் : 9:19-23
தான் ஒரு தந்திரக்காரன் என்று பவுல் ஒப்புக்கொள்வதையும் பாருங்கள் :
"அப்படியாகட்டும். நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை. ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்." - 2 கொரிந்தியர் 12:16
பைபிள் என்பது மனிதனின் கற்பனையிலும் கட்டுக்கதையிலும் உருவானது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன், வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்று இவ்வளவு தெளிவாகப் பவுலே வாக்குமூலம் தருகின்றார். கிறிஸ்தவ நண்பர்களே.. மேலே உள்ள பைபிளின் இந்த வாசகத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்று கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்துவிடுகின்றதல்லவா?
கர்த்தருக்காக பொய் சொல்லலாம் என்றும் கர்த்தருக்காக பச்சோந்திதனமாக எல்லாருக்கும் எல்லாமுமாக நடக்கலாம் என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள் அனைத்தும் கர்த்தரின் மூலம் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு தான் எழுதப்பட்டது என்று எப்படி நம்ப முடியும்.? இந்த புதிய கிறிஸ்தவமதத்திற்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவே சொல்லாத - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான, பழைய ஏற்பாட்டிற்கு எதிரான பல புதிய கொள்கையை இயேசு எனக்கு நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன அனைத்தும் பச்சைப் பொய் தானே?
இயேசு எனக்கு அதியசமான முறையில் காட்டியளித்தார். அதன் மூலம் அவர் என்னை தெரிந்தெடுத்துக்கொண்டார் என்று பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொன்ன சம்பவத்திலும் அதற்கு பிறகு சீஷர்களை சந்தித்தாக சொல்லப்பட்ட சம்பவத்திலும் எப்படிப்பட்ட பொய்கள் மலிந்து கிடக்கின்றது என்பதை சென்ற பதிவுகளில் நாம் எடுத்துக்காட்டினோம். நாம் எடுத்துக்காட்டிய அத்தனையும் உண்மை என்பது இந்த பவுலின் கூற்றின் மூலம் நிரூபணமாகின்றதல்லவா?
இதன் பிறகும் கூட பைபிளை இறைவேதம் எனவும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு எங்கேனும் இடமுண்டா?
மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள் :
"என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும் என்னைச் சகித்துமிருககிறீர்களே." - 2 கொரிந்தியர் 11:1
"பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம். அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மை பாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப் போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மை பாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்." - 2 கொரிந்தியர் 11:16,17
மேன்மை பாராட்டி, புத்தியீனனாயினேன். நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக் கொள்ளப்பட வேண்டியதாயிருந்ததே. - 2 கொரிந்தியர் 12:11
இவையாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும் பேசுவது ஆண்டவரல்லர், தம் தைரியத்திலேயே பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக்கொள்கிறார் பவுல். அந்த புத்தி கெட்ட உளறல்களும் பிறரது வற்புறுத்தலுக்காகவும் தன் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாகவும் - அது இடம்பெற்ற புத்தகம் இறைவேதமாகவும் இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளது. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிளை இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்? எங்களையும் நம்பச் சொல்கின்றீர்கள்?
மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள் :
''மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது'' - 1 கொரிந்தியர் 7:12
''அன்றியும் கன்னிகைகளைக் குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.'' - 1 கொரிந்தியர் 7:25
''ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்து விட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும், தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.'' - 1 கொரிந்தியர் 7:40
''பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன்.'' - பிலமோன் - 1:19
இந்த வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வருவதென்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டுப் பவுல் என்ற சவுல் தமது சொந்த சரக்குகளைக் கலந்து வேதம் என்று அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்துப் புது மார்க்கம் கண்டார் என்பதை தவிர வேறன்ன?
பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவை இவர் செய்தார். இவற்றையெல்லாம் இறைக் கட்டளைப்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார்.
இப்படியெல்லாம் இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர் அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குகமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்:
''பின்பு அவர்கள் அவனைநோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாய் கூட்டங்கூடுவார்கள்.ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும். அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகெண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும். அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும்சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும்வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.'' - அப்போஸ்தலர் 21:20-26
பைபிள் என்பது பவுலும் அவரது கூட்டாளிகளின் சொந்தத் தயாரிப்பு என்பதும் அதில் கூறுகின்ற போதனைகளில் அவருக்கே உறுதி இல்லை என்பதும் கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும் மோசேயின் நியாயப்பிரமாணங்களை இவர் அலட்சியப் படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா?
பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கையில் கிறிஸ்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.
இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவர்களில் பலர் நாங்கள் பரிசுத்த ஆவியின் உதவியால் நொண்டியை குணமாக்குகின்றோம், குருடர்களை பார்வையுடையவனாக்குகின்றோம், நோயை குணப்படுத்துகின்றோம் என்று பச்சையாக பொய் சொல்லி பல அப்பாவிகளை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதையும் அன்றாடம் பார்க்கின்றோம். இன்னும் சில போதகர்கள் தன்னை இயேசு ஒரு பெரிய கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கச் சொல்லியுள்ளார் என்றும் வேறு ஒருவர் இயேசு தன்னை டிவி சேனல் தொடங்க சொல்லியுள்ளார் என்றெல்லாம் புளுகுவதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய் சொல்வது தவறல்ல, அது நன்மையான ஒன்றே என்ற பவுலின் மேற்கூறப்பட்ட வசனங்களை வைத்தே அவர்கள் இப்படியெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.
ஒரு குருடனையே நொண்டியையோ அதிசயம் செய்து குணமாக்குகின்றேன் என்று ஒருபுறம் மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபுறம் இதே கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்காக மருத்துவமணைகளை நடத்துவது ஏன்? மக்களை ஏமாற்றத்தானே? அப்படி குருடனை குணமாக்குகின்றேன் - நொண்டியை நடக்க வைக்கின்றேன் என்று சொல்லக்கூடியவர்கள் தாங்கள் செட்டப் செய்து வைத்துள்ளவர்களைத்தான் குணமாக்குவதாக தங்களது நிகழ்ச்சிகளில் காட்டுவார்களே யொழிய நாம் ஒருவரைக் கொடுத்து இந்த நொண்டியை குணமாக்குங்கள், இந்த பார்வையுடையவனை பார்வையடையச் செய்யுங்கள் என்று சொன்னால் அவர்களால் முடியுமா? (இதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களிடமும் சவாலாகவே கேட்கின்றோம்) ஆனால், முடியாது! காரணம் அவை அனைத்து மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களால் சொல்லப்படும் பச்சைப் பொய்! இதை மறுக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் பிறகு எதற்கு MBBS, MD, மருத்துவ கல்லூரி, மருத்துவ படிப்பு? இவற்றை எல்லாம் விட்டு விட்டு கிறிஸ்தவ போதகராக மாறி இந்த வேலையை செய்யத் தொடங்கி விடலாமே!
உண்மை இவ்வாறிருக்க இதையும் மீறி இன்றும் இவற்றை இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கிறிஸ்தவத்தின் பக்கம் எப்படியாவது அழைத்தால் அது தவறல்ல என்று பவுல் சொன்ன மேற்கூறப்பட்ட வசனங்கள் தானே அடிப்படை?
அது மட்டுமல்ல பல முஸ்லீம்கள் கிறிஸ்தவராக மாறினர், முஸ்லீம் போதகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார், ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து அதிசயமாக சந்தித்து அவருக்கு நீங்காத நோயை நீக்கினார், அதனால் அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்று இன்றைய கிறிஸ்தவர்கள் தங்கள் தளங்களில் எதையாவது எழுதிவைப்பதற்குக் காரணம் கர்த்தருக்காக பொய் சொல்லி கிறிஸ்தவத்திற்கு மகிமை ஏற்படுத்தலாம் என்ற பவுலின் இந்த வசனங்கள் தானே?
மொத்தத்தில் கிறிஸ்தவ மிஷி'நரி'களின் இந்த எல்லாவிதமான ஏமாற்று செயல்கள் அனைத்திற்கும் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லலாம் -அதனால் நாம் பாவி என்று தீர்க்கப்படமாட்டோம் - இது போல் நான் பலருக்கும் அவர்கள் போலவே வேடமிட்டு நடித்துள்ளேன் - நானே நம்பாதவற்றை நான் நம்பியது போல் அவர்களை ஏமாற்றினேன் - என்னை நீங்களும் பின்பற்றுங்கள் - என்று இன்றைய கிறிஸ்தவமதத்தின் சொந்தக்காரரான பவுல் சொன்ன இந்த தவறான உபதேசங்கள் தானே?
இவற்றைத் தான் பவுல் மற்றொரு வசனத்தில் மிகத் தெளிவாக சொல்லுகின்றார் :
''இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோசப்படுகிறேன், இன்னமும் சந்தோசப்படுவேன்."- பிலிப்பியர் : 1:18
இப்பொழுது உண்மை புரிகின்றதா? எப்படியாவது - பொய்யைச் சொல்லியாவது - வஞ்சகம் செய்தாவது - கிறிஸ்தவத்தைப் பரப்பியாக வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுகின்றார் என்றால் என்ன அர்த்தம்? சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!
இப்படி புதுமார்க்கம் கண்ட பவுலை எப்படி பரிசுத்த ஆவியால் பேசக்கூடியவர் என்றும், அவர் எழுதியதெல்லாம் புனித புத்தகம் என்றும் நம்ப முடியும்? யோசிக்க வேண்டாமா கிறிஸ்தவர்களே! இந்த பவுல் சொன்ன புதிய மார்க்கத்தை - பொய்யான போலியான மார்க்கத்தை விட்டு வெளியேறி சத்திய இஸ்லாத்தின் கருத்துக்களை சற்று ஆய்வு செய்யுங்கள்! சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!
[][][]
No comments:
Post a Comment