Translate

Sunday, 29 May 2016

மதம் மாறினால் மரண தண்டனையா?





இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது சட்டமா...? இது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன..?ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக,



''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர் (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)

இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை. ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா... கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா... அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன. 

உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..? மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன? இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும். மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியல்ல. ஹதீஸ்களில் வரும் வாசகங்களை மட்டும் கருத்தில் கொண்டு எந்த சட்டமும் வகுக்க முடியாது. மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இந்த மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும். மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும், அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும். உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணியவில்லை. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.

وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاء فَلْيُؤْمِن وَمَن شَاء فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا


(நபியே!) நீர் கூறுவீராக "இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அல் குர்ஆன் 18:29)

இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..

ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்தவர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய சட்டமாக இருக்க முடியும்?

إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ

எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள். (அல் குர்ஆன் 3:90)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில், இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.

إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ


எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். 
(அல் குர்ஆன் 3:91)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான். ஈமான் கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.." என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை விளங்கலாம்.


இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற "ஆழமான ஆய்வற்ற கருத்தால்" இஸ்லாம் குறித்து பலர் (குறிப்பாக மாற்று மதத்தவர்கள்) தவறான நம்பிக்கையை கொண்டு விடுகிறார்கள். சிந்தனை ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்களை வென்றெடுக்க வந்த ஒரு மார்க்கத்தில், "இஸ்லாத்தை விட்டு வெளியேறினால கொல்லப்பட வேண்டும்" போன்ற தவறான ஆளுமைச் சட்டங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அளவிலான உரிமைகளில் ஒன்று இஸ்லாத்தில் கடைசி வரை நீடிப்பது சம்பந்தப்பட்டதாகும். அறிவார்ந்த முறையில் இஸ்லாத்தை விளங்கி ஏற்பதுதான் இஸ்லாம் மக்களுக்கு முன் வைக்கும் அறிவுரையாகும். விளங்கி ஏற்றப்பின் அதிலிருந்து வெளியேறினால் அது இறைவனையும் இறைவனின் மார்க்கத்தையும் கேலி செய்வதாகி விடுவதால் இதன் தண்டனையை மதம் மாறியவர்கள் மரணத்திற்கு பிறகு நிரந்தரமாக சுவைப்பார்கள். மாறாக "மதம் மாறியதற்காக" அவர்களுக்கு தண்டனை வழங்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை. நாம் முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அடுத்த வசனங்களையும் படியுங்கள்.

إِنَّ الَّذِينَ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّمْ يَكُنِ اللّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلاً


எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)

இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்......... இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். 

*நம்பிக்கைக் கொள்கிறார்
*பிறகு மறுக்கிறார்
*மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
*அதையும் மறுத்து வெளியேறுகிறார்

பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது. 'கொல்லப்பட வேண்டும்" என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.

كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ


அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
(அல் குர்ஆன் 3:86)


இந்த வசனத்தையும் ஊன்றி கவனிப்போம். ஈமான் கொண்டு நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் அதை தெளிவாக இறைவன் சொல்ல வேண்டிய இடம் இது. ஆனால் கொல்லப்படுவதைப் பற்றி சொல்லாமல் அவர்கள் நேர்வழிக்கு அப்பாற்பட்டவர்கள், இறைவன் அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான் என்று எச்சரிக்கிறான். அதாவது இஸ்லாத்தை ஏற்று பிறகு வெளியேறினால் நீ உயிரோடு இருக்கலாம் உனக்கு வாழ்நாள் அவகாசம் அளிக்கபட்டாலும் அடுத்து நீ நேர்வழிப் பெறும் வாய்ப்பு இல்லை என்பதை இந்த வசனம் கூட்டிக் காட்டுகின்றது.

இந்த மார்க்கம் மனிதர்கள் மீது திணிக்கப்படுவதற்காக அருளப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள இன்னும் ஆதாரங்களைப் பார்த்து விட்டு நாம் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள "கொல்லப்பட வேண்டும்" என்ற ஹதீஸின் விளக்கம் என்னவென்பதை காண்போம்.


இஸ்லாத்தை ஏற்று பின்னர் அதிலிருந்து விலகியவர்களை கொல்ல வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை சொல்லி வருகிறோம். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்துமே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தை மறுக்கின்றது.

அடுத்த வசனம்.

لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ


(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது (அல்குர்ஆன் 2:256)

மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படையை விளக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரித்தறிவிக்கப்பட்டு தெளிவாகி விட்டதால் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமுமில்லை என்பது இந்த வசனம் முன் வைக்கும் அறிவார்ந்த வாதம்.

இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவரை "நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் கொல்லப்படுவாய்" என்று மிரட்டுவது அவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் வைக்கும் காரியமாகும். பிறரது மிரட்டலுக்கு பயந்து, கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இஸ்லாத்தில் இருப்பவர்களால் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் எப்படிப்பின்பற்ற முடியும். 

உயிருக்கு பயந்து நிர்பந்தமான நிலையில் இஸ்லாத்தின் உள்ளே இருக்கும் ஒருவரிடம் இஸ்லாம் எந்த மாற்றத்தையும் செய்து விடப் போவதில்லை. நேர்வழியையும், வழிகேட்டையும் பிரித்தறிவித்து விட்டு இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை என்று இறைவன் குறிப்பிட்டு விட்டதால் அவன் மார்க்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை.மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்ற சட்டமே ஒருவர் வெளியேறினால் வெளியேறிக் கொள்ளலாம் என்ற அனுமதியை முன் வைக்கின்றது. அவரை கொல்லும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் - நயவஞ்சகர்கள் - என்று இஸ்லாம் இவர்களை அடையாளப்படுத்துகின்றது. இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரைக் கூட நபி(ஸல்) அவர்கள் "கொன்றார்கள்" என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அப்படியானால்,

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய ஹதீஸின் விளக்கம் தான் என்ன..?மதம் மாறினால் மரணதண்டனை பொது சட்டமா? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 4

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போதுவான ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது "இது ஒரு முரட்டு மார்க்கம்" என்ற பழிசொல்லிலிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுகின்றது.உபதேசம், பிரச்சாரம் செய்வதில் கூட நளினத்தை, இலகுவை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு மார்க்கத்தில் மனிதனின் சிந்தனை சுதந்திரமும், வாழ்வியல் சுதந்திரமும் வலுக்காட்டாயமாக அகற்றப்பட்டு இருக்குமா என்பதை "கொல்லப்பட வேண்டும்" என்ற கருத்துள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து எந்த ஒரு வசனத்தையும் முன் வைக்க முடியாதவர்கள் - கொல்லப்படுவதை மறுக்கும் வசனங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் - ஹதீஸ்களின் பக்கம் திரும்பி "ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கின்றது" என்று தங்கள் வாதத்தை வைக்கத் துவங்கி விடுகின்றார்கள்.ஹதீஸ்களிலிருந்து ஒரு வாதத்தை நாம் எடுத்து வைக்குமுன் ஒன்றை மிக ஆழமாக நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், குர்ஆனை விளக்குவதற்கும், குர்ஆனாக வாழ்வதற்கும் தான் அனுப்பப்பட்டார்களே தவிர குர்ஆன் வேறு, தான் வேறு என்று வாழ்ந்துக் காட்டுவதற்காக அல்ல. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பு "நபி(ஸல்) குர்ஆன் விளக்கவுரையாகவே வாழ்ந்துள்ளார்கள்" என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்லி விடுகின்றது. எனவே குர்ஆனுக்கு முரண் பட்டு ஒரு கருத்தை நபி(ஸல்) சொல்லி இருப்பார்கள் என்று நாம் கற்பனைக் கூட செய்யக் கூடாது.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை நபி(ஸல்) பொதுவான கருத்தாக வைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்த கருத்தை குர்ஆன் அடியோடு மறுக்கின்றது.அப்படியானால் கொல்லப்பட வேண்டும் என்ற ஹதீஸின் நிலவரம் என்ன..?


மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 5

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொது சட்டமல்ல. இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இஸ்லாதத்தை விட்டு வெளியேறியதற்காக எந்த இஸ்லாமிய அரசாங்கமும் மரண தண்டனை விதிக்காது - விதிக்கக் கூடாது.நபி(ஸல்) காலத்தில் இத்தகைய எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. அப்படியானால் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டவர்களைக் கொல்லுங்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதே என்ற சந்தேகம் இப்போது மி்ச்சமிருக்கின்றது.

‏ابن عباس ‏ ‏فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏من 
بدل دينه فاقتلوه

[ஆன்லைனில் இந்த ஹதீஸை பார்க்க]

''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் - புகாரி)

‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث ‏ ‏الثيب ‏ ‏الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.


3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன்(அப்தல்லாஹ் - முஸ்லிம்)

(ஆன்லைனில் இந்த ஹதீஸின் மூலம்)

‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان ‏ ‏محصن ‏ ‏يرجم ‏ ‏أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ‏ ‏ينفى من الأرض

''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)


மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.

புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.

//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல. வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும். இதை தெளிவாக்கும் விதமாகவே "அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்" என்று நபி(ஸல்) குறிப்பிடுகிறார்கள்.

நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன.

மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி) என்று நபி(ஸல்) கூறி இருக்க மாட்டார்கள். நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான்.நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

"நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது. நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو


قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا ‏ ‏بويع ‏ ‏لخليفتين فاقتلوا الآخر منهما
ஹதீஸ்களை கவனமாக ஆராயும் போதும், அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதும் இந்த முடிவுக்கே நம்மால் வர முடிகின்றது.

குழப்பம் ஏற்படுத்துதல் என்று ஒன்று நடக்கவில்லை என்றால் அவரும் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவர்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கான குர்ஆன் வசனங்களை நாம் முந்தைய தொடர்களில் பார்த்தோம்.

குழப்பம் கொலையைவிட கொடியது. 

குழப்பம் கொலையை விட பெரியது என்று குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ள போது குழப்பம் செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை விளங்கலாம். குழப்பம் ஏற்படுத்தும் தனி மனிதனின் உயிரை விட நாட்டு மக்களின் நிம்மதியும், அமைதியும் முக்கியம் என்பதால், இஸ்லாமிய அரசுகள் இதை செயல்படுத்தும்.அல்லாஹ் எல்லாவற்றையும் நுணுககமாக அறிபவன் என்பதை நம்புகிறோம்.


நன்றி :
http://www.thuuyavali.com/2012/12/blog-post_11.html



[][][]

Saturday, 28 May 2016

பசும்பொன் முத்துராமலிங்க தேவரும்-ஆயிஷா பீவி அம்மாளும்






தேவர் இனத்தில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியப்பா தேவர் என்பவர் மக்கா மாநகருக்குச் சென்று இஸ்லாத்தைத் தழுவினார். ஆலியப்பா தேவர் மீண்டும் தாயகம் திரும்பி தமது தேவர் இனமக்கள் பெரும்பாலானோரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். அப்படி இஸ்லாத்தில் இணைந்தவர்கள்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள்.

எனது ஊருக்கு அருகில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர். முஸ்லிம் பெருமக்களால் "தேவர் மகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

தேவர் பெருமகனாரும் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். அதற்கு முக்கியக் காரணம் உண்டு. தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பாலைக் குடித்து வளர்ந்தார். அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும்வரை அதை மறக்கவில்லை.

காமராஜர் முதலமைச்சர் ஆனவுடன் ஒரு வழக்கில் தேவரய்யா அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார். அந்தப் பிடிவாரண்டிலிருந்து தப்பிக்க தேவர் மகன் சில காலம் தலைமறைவாக வாழ்ந்தார். அந்தத் தருணத்தில்தான் அவருக்குப் பாலூட்டிய கமுதி ஆயிஷாபீவி அம்மாள் இறந்துவிட்டார். ஆயிஷாபீவியை எப்படியும் தேவரய்யா பார்க்க வருவார் எனப் புலனாய்வுத் துறை போலிஸôர் (சி.ஐ.டி.) கமுதியை முற்றுகையிட்டனர்.

நடு இரவில் ஒரு வில்லு வண்டியில் நீண்ட ஜிப்பா, அடர்ந்த தாடி, தலையில் சிவப்பு துருக்கிக் குல்லாவுடன் ஒருவர் வந்து இறங்கி ஆயிஷாபீவியின் உடலைப் பார்த்துவிட்டு மறுகணமே அடுத்த வில்லு வண்டியில் ஏறித் தலைமறைவானார். முஸ்லிம் பெரியவர் வேடத்தில் வந்தவர் தேவரய்யாதான் என அவர் தப்பிச் சென்ற பின்புதான் புலனாய்வுத் துறை போலிஸôருக்குத் தெரியவந்தது.

தமக்குப் பாலூட்டி வளர்த்த ஆயிஷா பீவீக்கு, தமக்கு ஆபத்து சூழ்ந்திருப்பதை அறிந்திருந்தும் தேவர் மகன் அவர்கள் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வந்து மரியாதை செலுத்தினார் என்ற வரலாற்றை நான் அந்த விழாவில் உணர்ச்சி ததும்ப எடுத்துச் சொன்னதும், தேவர் இன மக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தேவரய்யாவைப் பற்றி எங்களுக்கே இன்று வரை தெரியாத வரலாற்றைச் சொன்னதற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்து என்னைக் கட்டித் தழுவினார்கள்.

("சரித்திரச்சாலையின் 
சந்திப்புகள்' என்ற நூலில் ஆசிரியர்

"முஸ்லிம் குரல்' ஹாஜி.எஸ்.எம். கனிசிஷ்தி)

{}{}{}

Thursday, 26 May 2016

வேதங்களும் கீதையும் இறைவேதங்களாக இருக்க முடியுமா?




வேதங்களும் கீதையும் இறைவேதங்களாக இருக்க முடியுமா?

---------------------------------------------

கேள்வி: இந்தியாவில் உள்ள இந்துமத வேதக் கிரந்தங்களை இறைவேதங்கள் என்று அங்கீகரிக்க முடியுமா?

மறுமொழி: வேதம் என்பதன் மொழிக் கருத்து விஞ்ஞானம், அறிவு என்பதாகும். ஆயினும், ஆன்மிக அறிவு என்பதே அதன் பிரதான கருத்தாகும். வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்றே நம்பப்படுகின்றது. மாறாக, அவை இறைவனால் உருவாக்கப்பட்டன என்று சில மத அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும், வேதங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவை என்பதற்கு எந்த அறிகுறியும் இந்த வேதங்களில் காணப்படவில்லை. இவ்வாறு எந்த இந்துவேதக் கிரந்தங்களும் கூறவுமில்லை.

வரலாற்றில் வாழ்ந்து சென்ற எல்லா மனித சமூகங்களுக்கும் இறைதூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்றும் அவர்கள் இறைதூதை அந்த மக்களிடத்தில் எடுத்துக் கூறினார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. எனவே, ஆரியர்களிடத்திலும் இறைதூதர்கள் அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் இறைதூதை அந்த மக்களிடத்தில் சமர்ப்பித்திருப்பார்கள். எனவே, இந்து வேதக் கிரந்தங்களில் உள்ளவை இறைதூதின் செய்திகளாக இருக்கக் கூடும் என்ற சாத்தியப்பாட்டை முற்றாக நிராகரிப்பதோ புறக்கணிப்பதோ நியாயமல்ல. அவற்றின் மூல ஊற்றுக்கள் இறைதூதர்களின் செய்திகளாக இருந்திருக்க முடியும்.

ஆயினும், இன்று கிடைக்கப்பெறும் ரிக், யஜுர், சாமம், அதர்வம் ஆகிய நான்கு இந்து வேதங்களை இறைவேதங்களாகக் கருத முடியாது. இவை மனிதர்களின் இடைச்செருகல்களுக்கு உட்பட்டு இவற்றின் மூல போதனைகள் திரிபடைந்து போயுள்ளன. இதனால் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்ற நிலையை அவை இழந்து விட்டன.

இந்து மதத்தைச் சேர்ந்த இந்து வேதங்களை விசுவாசிக்கின்ற இந்துமத அறிஞர்கள் இந்த விடயத்தை தமது நூற்களில் தெளிவாக்கியுள்ளனர். கலாநிதி ராதா கிருஷ்ணன் எழுதுகிறார்:

‘‘ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபோது தமது பூர்வீக பூமியிலிருந்து தாம் மிகவும் பெறுமதிமிக் கவையாகக் கருதிய தெய்வீக கானங்களைத் தம்மோடு எடுத்து வந்தனர். தாம் வந்து சேர்ந்த புதிய தேசத்தின் அதிகமான மக்கள் பல்வேறு தெய்வங்களை வழிப்படுவதை அவர்கள் கண்டனர். எனவே, தமது மதக் கோட்பாடுகளைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற உணர்வினால் இவற்றைச் சேகரித்து வைத்தனர். இக்கருத்தே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதர்வ வேதத்திற்கு நீண்ட காலமாக வேதம் என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. ரிக் வேதத்திற்கு அடுத்ததாகவே இதன் அந்தஸ்து இருக்கிறது. ரிக் வேதத்தைப் போலவே வெவ்வேறு தனியான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது இருக்கிறது. இந்த வேதம், பின்னர் உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் சிந்தனை மனோபாவத்தைப் பிரதிபலிக்கின்றது. புதிய தேசத்தின் புதிய கடவுள்களையும் தேவதைகளையும் உள்ளடக்கி அவற்றோடு சமரசம் செய்து தாம் அடக்கியாள முற்பட்டவர்களின் நம்பிக்கைகளையும் தம்மோடு சேர்த்துக் கொண்டனர்.’’

(பாரதிய தர்ஷணம்: மாத்ரூபூமி பப்ளிசிங் ஹவுஸ், கோழிக்கோடு, பக்கம்: 44-45)

கடவுள் பற்றிய கோட்பாடு வேதங்களில் பலமான மாற்றங்களுக்கு உட்பட்டது என்று கலாநிதி ராதா கிருஷ்ணன் கூறுகிறார்:

‘‘ரிக் வேதத்தில் 10,472 பாடல்களும் 1,017 சூக்தங்களும் 8 அஷ்டங்களும் 10 மண்டிலங்களும் உள்ளன. பத்தாம் மண்டிலம் பிற்காலத்தில் சேர்க்கப் பட்டதாகத் தெரிகிறது. வேதப் பாடல்கள் உருவானபோது அந்தக் காலப் பகுதியில் இருந்த சிந்தனையின் தாக்கம் அதில் பிரதிபலிப்பதைக் காண முடியும். ஆதியில் இருந்த பக்திபூர்வமான இயல்பு மாறி பிற்காலத்தில் ஏற்பட்ட நோய் கலந்த சிந்தனைகள் இவற்றில் ஊடுருவி விட்டன என்று தோன்றுகிறது. படைப்புக்களின் ஆரம்பம் பற்றிய விடயங்களில் இத்தன்மை தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தத்துவ விவாதங்களுடன் அதர்வ வேத காலத்தில் உள்வாங்கப் பட்ட மூட மந்திரங்களும் இதில் சேர்ந்துள்ளன. வேத கால ஆரியர்களின் ஊகங்களின் பாற்பட்டு புனையப் பட்ட பாடல்களில் பிற்காலத்தில் நுழைந்த மூட நம்பிக்கைகள் இந்த பத்தாவது மண்டிலத்தில் சேர்ந்திருப்பது தமது சமகால மக்களின் சமய நம்பிக்கைகளினால் ஆரியர்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதையே காட்டுகிறது.’’ (மேற்படி நூல் பக்கம்: 47)

இறைவேதமொன்றிற்குப் பொருத்தமில்லாத சாதி வேறுபாடு என்னும் கோட்பாடு ரிக் வேதத்தில்கூட நுழைந்து விட்டிருப்பதைக் காண முடியும்.

‘‘ப்ராஹ்மனோஷ்ய முஹமாஸீத்

பாஹு ராஜ்ன்யூ க்ரூதஹ்

ஊரு ததஸ்ய்ய யதைவஷ்யஹ்

பத்பியாம் ஸுரூத்ரோ அஜாயத’’ (ரிக் வேதம் 10:90:12)

பொருள்: கடவுளின் முகத்திலிருந்து பிராமணர்களும் அவனின் கரங்களிலிருந்து சத்திரியர்களும் முதுகிலிருந்து வைஷ்யர்களும் பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர்.

ரிக் வேதத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிமுகத்தில் என்.வீ. கிருஷ்ணவாரியார் கூறுகிறார்:

‘‘வேதங்களின் பூரணமான பகுதிகள் இன்று கிடைக்கக் கூடியதாக இல்லை. கிடைக்கக்கூடியவற்றில் பல பிற்கால சேர்க்கைகளாக உள்ளன. மேலும் அபத்தமான கருத்துக்களும் சிக்கலான கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளன.’’

கலாநிதி எஸ். ராதா கிருஷ்ணன் தனது Indian Religions என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

‘‘வேதங்கள் தவறுக்குட்படாதவையாகவோ எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவோ இல்லை.’’ (பக்கம்: 22)

ஆச்சார்யர் நரேந்திர பூஷான் எழுதுகிறார்:

‘‘படிப்படியாக பல்வேறுபட்ட நூற்களும் கிளைகளும் உருவாகி பின்னர் அவை ஒன்றாகச் சுருங்கின. சில பிராமணர்களை வேதத்தில் உட்படுத்தின. பிராமணியம் வேத சூத்திரங்களுடன் ஒன்றாகக் கலந்தபோது வியாசர் பின்னர் அவற்றை மீள வரையறுக்க வேண்டி வந்தது. வியாசர் வேதத்தைப் பிரித்தெழுதியதாகக் கூறப்படுவது இக்காரணத்தினாலாகும். வேத சூத்திரங்களுடன் பிராமணியக் கொள்கைகள் கலந்திருப்பதனால் தூய வேத வசனங்களை அடையாளம் காண்பது கடினமான ஒன்றாக மாறிய ஒரு காலம் இருந்தது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்கின்றோம்.

(வேத இலக்கிய வரலாறு பக்கம்: 51-53)

ரிக் வேதம் பத்தாம் மண்டிலத்தின் பத்தாவது சூத்திரத்தில் வருகின்ற ஒரு சம்பவம் தெய்வீக வேதம் ஒன்றுக்கு முற்றிலும் பொருத்தமற்றதாகும். இந்த சூத்திரத்தில் ஒரு பெண் தனது சகோதரனைத் தன்னோடு தவறாக நடந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறாள். அவளின் மொழியும் ஆசை வார்த்தைகளும் ஒரு தெய்வீக நூலுக்கு முற்றிலும் ஒவ்வாதவையாக உள்ளன.

இதேபோல் சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்து ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் வந்துள்ளவை முற்றிலும் பிழையானவையாகவும் அதீத கற்பனைகளாகவும் உள்ளன. எனவேதான் பிரசித்திபெற்ற தலைசிறந்த இந்து மத அறிஞர்கள் பலர் இத்தகைய அபத்தமான விடயங்கள் வேதத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

சுவாமி நித்தியான சத்தன்யா யாதி எழுதுகிறார்:

‘‘குரூரமான படுகொலைகளை வேத மந்திரங்கள் அனுமதிப்பதுடன் அவை மிகவும் விரும்பப்படுபவை என்றும் குறிப்பிடுகின்றன. வேதத்தில் இவை கண்டு கொள்ளப்படாதவை என்று மூடி மறைக்க முடியாது. ஓர் இந்துமத அறிஞரைப் பொறுத்தவரை இத்தகைய அபத்தமான மந்திரங்களும் இந்துக்களின் புனித வேதத்தில் இருக்கின்றன எனச் சொல்வது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாகும். ஆயினும், சிலர் வரலாற்று உண்மைகளைப் புறக்கணித்து இந்து மந்திரங்கள் நியாயமானவை என்று வாதிக்கிறார்கள். உண்மையில் இவை வேதங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியவையாகும். இவர்களின் இச்செயல் மன்னிக்கப்பட முடியாதது.’’

(குருகுலம் மாசிகை, இந்திய மறுமலர்ச்சியின் வரையறைகள் பக்கம்: 212, மலையாளம்)

சுருங்கச் சொன்னால், இன்று வேதங்களை நம்புகின்ற இந்து பக்தர்கள்கூட இவ்வேத நூற்கள் முற்றிலும் தெய்வீகமானவை என்று வாதிக்கவில்லை. பல விடயங்கள் இவற்றோடு சேர்க்கப்பட்டுள்ளன. பல விடயங்கள் இவற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பல தலையீடுகளுக்கு வேதங்கள் உட்பட்டுள்ளன. இதில் வியப்படைய எதுவுமில்லை. ஏனெனில், இந்து வேதங்களின் வரலாறு யாருக்கும் தெரியாது! அவை எந்தக் காலங்களில் அறிமுகமாகின என்பதில் பலத்த கருத்து வேறுபாடு உண்டு. கி.மு. 6000, கி.மு. 4500, கி.மு. 3000, கி.மு. 1500 என்று பல்வேறு அபிப்பிராயங்கள் உண்டு. ஆயினும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னரே அவை நூலுருவாக்கப்பட்டன என்ற கருத்தில் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். வேதங்கள் அருளப்பட்டதற்கும் அவை தொகுக்கப்பட்டதற்கும் இடையே உள்ள இந்த நீண்ட இடைவெளி காரணமாக அவற்றில் பல்வேறு புதிய விடயங்கள் சேர்வதற்கும் அவற்றின் கருத்துக்கள் மாற்றமடைவதற்கும் இடமுண்டாகியது.

கலாநிதி ராதா கிருஷ்ணன் எழுதுகிறார்:

‘‘ஆசிரியர்கள் தம்மோடு எடுத்து வந்த நம்பிக்கைகளும் கிரியைகளும் இந்திய மண்ணில் வளர்ந்து நிலை நின்றன. இந்தப் பாடல்கள் உருவாகி நூலுருப் பெறுவதற்கு ஒரு நீண்ட காலம் எடுத்திருக்க வேண்டும்.’’

(இந்தியத் தத்துவம் பாகம்: 1 பக்கம்: 66)

வேதம் அருளப்பட்ட பண்டைய மொழி இன்று வழக்கில் இல்லை. வேதகால மொழியிலிருந்து இன்றைய சமஸ்கிருதம் வேறுபட்டதாகும். இந்த விடயத்தைப் பல்வேறு அறிஞர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆசாரியர் நரேந்திர பூஷானும் இதில் உடன்படுகிறார்.

உலகில் வேறு எந்தக் கலப்புக்களில் இருந்தும் முற்றிலும் தூய்மையான ஒரு நூல் இருக்குமென்றால் அது புனித அல்குர்ஆன் ஒன்று மாத்திரமே ஆகும். மனிதத் தலையீட்டிலிருந்து அது முற்றிலும் பாதுகாக்கப்பட்டது. அருளப்பட்ட காலம் முதல் இன்றுவரை அதன் வரலாறு தெட்டத் தெளிவானதாகும். இந்தக் காரணத்தால் இன்று கிடைக்கக் கூடிய ஒரே ஒரு தெய்வீக நூல் அல்குர்ஆன் மாத்திரமே ஆகும். அது முன்னைய எல்லா தெய்வீக நூற்களையும் உண்மைப்படுத்துகிறது.

கேள்வி: பகவத் கீதையும் தெய்வீக நூலாக இல்லை என்பதுதான் தங்களது அபிப்பிராயமா?

பதில்: இன்றுள்ள இந்து வேதங்கள் மனிதத் தலையீட்டுக்கு உட்பட்டுள்ளன என்ற விடயத்தை கலாநிதி ராதா கிருஷ்ணன், என்.வீ. கிருஷ்ணவாரியார், நரேந்திர பூஷான், சத்தியரக்த படேல் போன்ற இந்து மத அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மகாபாரதத்தில் குருஷேத்திர மைதானத்தில் கௌரவர்களுடன் யுத்தம் செய்ய வரும் பாண்டவ வீரன் அர்ஜுணனுக்கு யுத்த களத்தில் தனது சகோதரர்களான உறவினர்களைக் கொல்ல வேண்டி வருகிறதே என்று கடும் துக்கம் தோன்றுகிறது. அப்போது அர்ஜுணனின் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்கு உபதேசித்தவையே கீதை என்றும் நம்பப்படுகிறது. கீதை உட்படவுள்ள மகாபாரத காவியத்தை உருவாக்கியவர் வியாச முனிவர் ஆவார். ஸ்ரீ கிருஷ்ணன் கடவுளின் அவதாரம் என்றும் அதனால் கீதை, பகவத் கீதை என்றும் கூறப்படுகிறது. எனினும், கடவுள் ஒருபோதும் மனித உருவில் அவதாரம் எடுப்பதில்லை என்ற விடயத்தை தலைசிறந்த இந்து மத அறிஞர்களும் மறுசீரமைப்பாளர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

ஸ்ரீ வாக்படா நந்த குரு, கடவுள் அவதாரம் எடுப்பதில்லை என்ற விடயத்தை ஆணித்தரமாகத் தெளிவு படுத்தியிருக்கிறார்.

(வாக்படா நந்தனின் பூரண விளக்கவுரை, பக்கம் 357-359, 751-752 மாத்ருபூமி பிரசுராலயம், கோழிக்கோடு)

கடவுள் அவதாரம் எடுப்பதில்லை என்பதை கீதை கூட எடுத்துக் கூறுகிறது.

‘‘அவஜானந்தி மாம் மூடா

மானுஷம் தனு மா சரிதம்

பரம் பாவமஜானந்தோ

மம பூத்த மகேஷ்வரம்

மோகாஷா மோக கர்மான்னோ

மோகஞானா விசேத்தஸஹ்

ராக்ஸி மாஸுரிசைவ

ப்ரக்ரூதீம் மோகினீம் சிரிதாஹ்’’

பொருள்: என்னுடைய மகத்துவத்தையும் எல்லாவற்றினதும் எஜமானத்துவத்தையும் அறியாத மூடர்கள், மனித உருவில் நான் வருவதாகக் கூறி என்னை இழிவுபடுத்துகிறார்கள். ராட்சகர்களினதும் அசுரர்களினதும் தன்மைகளைப் பெற்ற இவர்கள் தங்களது செயல்களையும் அறிவுகளையும் பயனற்றதாக ஆக்கிக் கொள்கின்றனர். (பகவத் கீதை 9: 1112)

ஸ்ரீ கிருஷ்ணனை கடவுள் என நம்புவது முற்றிலும் பிழையானதாகும் என்று இச்சூத்திரம் எடுத்துக் கூறுகிறது. கடவுள் மனித உருவில் அவதாரம் எடுப்பதில்லை என்பது இங்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணன் சிலவேளை ஓர் இறைத் தூதராக இருந்திருக்க முடியும். ஆயினும் அவர் ஓர் இறைத்தூதர் என்பதற்குரிய தெளிவான சான்றுகள் இதுவரை கிடைக்க வில்லை. கீதையின் தெளிவான, உறுதியான வரலாறு கிடைக்கக் கூடியதாக இல்லை. அது மகாபாரத யுத்த சமயத்தில் எழுதப்பட்டது என்றும் அதற்கு முன்னர் என்றும் பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. கி.மு. 5 முதல் கி.பி 4 வரையான காலத்தைப் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. கலாநிதி ராதா கிருஷ்ணன் இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

‘‘பகவத் கீதையை மகாபாரதத்துடன் அதன் ஒரு பகுதியாக இணைக்கும்போது எந்தக் காலத்தில் அது உருவாகியது என்பதைக் குறித்து எம்மால் உறுதியாகக் கூற முடியாதுள்ளது. பல்வேறுபட்ட காலப்பகுதியின் உருவாக்கங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.’’

(இந்தியத் தத்துவம் பாகம்: 1 பக்கம்: 524)

தொடர்ந்து எழுதுகிறார்:

‘‘கீதையின் ஆசிரியர் அக்காலத்தில் நிலவிய பல்வேறு சிந்தனைகளை சேகரித்துத் தொகுத்திருப்பது தெரிகிறது. இதனை ஒரு தெய்வீக நூலாக அவர் கருதவில்லை. இது தத்துவத்தின் மூலம் மதத்தின் பாடங்களையும் ஒழுக்கத்தின் பாடங்களையும் உள்ளடக்கியுள் ளது. எனவே, இது ஒரு தெய்வீக நூலன்று. ஆயினும், அது பழக்கவழக்கங்களின் தொகுப்பாக உள்ளது.’’ (மேற்படி நூல்: 519)

சுருக்கமாகச் சொன்னால், கீதை தெய்வீகத் தூதின் பல சிந்தனைகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கக் கூடும். எனினும், அது ஒரு தெய்வீக நூலல்ல. கீதை தன்னை ஒரு தெய்வீக நூலாக எங்கும் குறிப்பிடவுமில்லை.

மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரகுன்னு

தமிழில்: ஜே. இஸ்ஹாக்



[][][]

ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்.!




- அபு இப்ராஹீம்


(ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் - யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட. ஆனால் கிறிஸ்தவர்களின் புனித வேதமான பைபிள் அப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கின்றதா? என்று பார்த்தோமேயானால், அதில் ஆபாசமான கருத்துக்களும் - அசிங்கமான வர்ணனைகளும் நிறையவே காணப்படுகின்றன. எங்கும், எல்லோராலும் - குடும்பத்துடன் படிக்கமுடியாத - ஒன்றுக்கும் உதவாத - எப்பயனுமற்ற பல வசனங்கள் நிறையவே காணப்படுகின்றன. அவற்றை விவரிக்கும் ஒரு முயற்சியாகத்தான் 'ஆபாசம் நிறைந்த பைபிள்' என்றத்தலைப்பில் நாம் தொடர்ந்து எழுத இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்...)

பைபிளின் எசேக்கியேல் ஆகாமமும் - விபச்சார சகோதரிகளும்...!

ஒரு இறைவேதம் என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சரியான உதாரணம் 'பைபிள்' என்றால் மிகையாகாது. காரணம், ஒரு இறைவேதத்தில் இருக்கக்கூடாத - இருக்கமுடியாத அத்தனை பலவீனங்களும் ஒரு சேர இருக்கக்கூடிய வேதமாகத்தான் இன்றைய 'பைபிள்' இருக்கின்றது என்பது தான் நிதர்சனமான உன்மை. (இதன் முழுவிளக்கமும் பல தலைப்புகளில் எமதுதளத்தில் வரும் இன்ஷாஅல்லாஹ்)

அக்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதத்தை பொருப்புடன் பாதுகாத்து - அதை பின்பற்றி வாழவேண்டியவர்கள் - அதற்கு மாற்றமாக எவர்கள் மூலமாக அவ்வேதங்கள் வழங்கப்பட்டதோ, அந்த தீர்க்கதரிசிகள் மீதே அபாண்டமான பழிகளை சுமத்தி அவர்களை பற்றி தரக்குறைவாகவும் ஆபாசமாகவும், அருவறுப்பாகவும் அந்த வேதங்களிலேயே திரித்து எழுதியதோடு மட்டுமல்லாமல், அவற்றில் கடவுளின் பெயராலேயே தங்களது சொந்த சரக்குகளை உள்நுழைத்ததால் தான் - இன்றைய பைபிள் பல தவறுகளை தண்னுல் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாகவேண்டும். அதன் தொடர்ச்சிதான் அதனுள்ளே பதிந்துள்ள ஆபாசமான கருத்துக்களும் அசிங்கமான வர்னணைகளும்...

பைபிளில், அதன் எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப்போக்கில் இறைவசனங்களுடன் தங்கள் சொந்தச்சரக்குகளைச் சேர்த்தது மட்டுமல்லாமல், அதைகடவுளே சொன்னார் என்று கடவுளின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட வசனங்கள் ஏராளம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இரண்டு விபச்சார சகோதரிகளின் செயல்பாடுகள் பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகின்றது.

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள. அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது. அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள். இவைகளே அவர்களுடைய பெயர்கள். அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம். அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள். நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள். தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை. அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள். ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள். அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள். அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள். அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள். தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று. மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள். அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன். அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள். சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள். அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள். அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள். அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள்.கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள். எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தானங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம் பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய். ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள். அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள். உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள். அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள். அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள். இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன். நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னை வெறுப்பாய்நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள். அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும். ...நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
- எசேக்கியேல் 23 : 1 - 49

பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு - குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கடவுள் இவ்வுலகமக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்? எதுவும் கிடையாது.

ஒரு வாதத்திற்காக கடவுள் விபச்சாரிக்கு கொடுத்த தண்டனையை விளக்க வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம்.

இவ்வாறு இரு சகோதரிகள் விபச்சாரம் புரிந்தனர். அதனால் இப்படிப்பட்ட தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று சொன்னால் நியாயம். ஆனால் இந்த பைபிளின் இறை (?) வசனங்களில் வருவது என்ன?

ஒருவன் ஒருத்தியிடம் விபச்சாரத்திற்கு சென்றால் என்ன செய்வான்? எதை அமுக்க வேண்டுமோ, அதை அமுக்குவான். எதை தொட வேண்டுமோ அதை தொடுவான். இதை கூட நான் சொல்வதற்கு சற்று கூச்சப்படுகின்றேன். ஆனால் கடவுள் இந்த அசிங்கமான - ஆபாசமான வர்ணனைகளை தான் இந்த பைபிள் எழுத்தாளருக்கு சொன்னாராம்.. '

'அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது'

உடலுறவு என்றதும் வேறு என்ன செய்வார்கள்? அது என்ன ஸ்தானங்கள்??? அப்படிஎன்றால் என்ன? அவளுடைய 'கன்னிமையின் கொங்கைகள்' என்றால் என்ன?

6.4.1980ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க பைபிளிலும், ஆங்கில பைபிளிலும் எல்லோருக்கும் புரியும்படியாகவே மொழிப்பெயர்த்துள்ளனர்.

'அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன. கன்னிக் கொங்கைளைப் பிறர் தொட்டு விளையாடினர்'

...their breasts pressed, and there they bruised the teats of their virginity. (k j v)

இங்கே எப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர் என்பதை கவனியுங்கள். பெண்ணின் அந்த மர்ம உருப்பை 'தொட்டு விளையாடினராம்' எந்த அளவுக்கு இந்த ஆபாசக்கதையை'தூக்கலாக' சொல்ல வருகின்றனர் பார்த்தீர்களா?

பெண்களின் அந்தரங்கமான 'அந்த குறிகள்' குறித்து சொல்லுவதன் மூலம் கடவுள் சொல்லவரும் உபதேசம் என்ன? புனித வேதத்தில் வரும் இந்த ஆபாச வர்னனைகளை எந்தச் சர்சியிலாவது அல்லது பொது மேடையிலாவது விளக்கமுடியுமா? அடுத்து பாருங்கள்...

...தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்...

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

...சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள்...

இப்படிப்பட்ட ஆபாச வர்ணனைகள் மூலமாகத்தான் இந்தச் சம்பவத்தை கடவுள் விளக்கியிருப்பார் என்று கிறிஸ்தவர்களே நம்புகிறீர்களா?

அவர்களுடைய (ஆண்களுடைய) 'நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுபடுதல்' என்றால் என்ன? அதற்கு அடுத்த இடத்தில் சொல்லப்படும் 'அவள் அண்டையில் சிநேக சம்போகம்' என்றால் என்ன?

அவர்களுடைய வாலிபத்திலேயே சயனித்து (உடலுறவு கொண்டு) என்றும் கடவுள் விளக்குகிறார். இந்த விளக்கம் எதற்கு? வாலிபத்தில் சயனிக்காமல் 100 வயது கிழவியியானப்பிரகா சயனிக்க முடியும்?

'அவளை நிர்வானமாக்கினார்கள்...' என்று கடவுள் சொல்கிறார். நிர்வானமாக்காமல் ஒரு பெண்னுடன் உடலுறவா? என்னே விளக்கம், என்னே விளக்கம்...! பைபிளில் எல்லாவற்றிற்கும் விளக்கம் இருக்கிறது என்பதன் அர்த்தம் ஒருவேளை இது தானோ!

அதற்கு அடுத்து கடவுள் சொல்கிறார், 'ஜாதி லிங்கம்'மாம். அது என்ன கிறிஸ்தவ சகோதரார்களே 'ஜாதி லிங்கம்?' லிங்கம் என்றால் ஆணின் 'அந்த' உருப்பு என்று கேள்விப்படடிருக்கிறோம். அது என்ன - ஜாதி லிங்கம்? அடுத்து மற்றொரு இடத்தில் சொல்லப்படுகிற 'புருச சரூபம்?' என்றால் என்ன?

இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளைத்தான் கடவுள் தனது தீர்க்கதரிசிகளுக்குச் சொன்னதாக பைபிளில் - அதுவும் புனிதத்துவம் நிறைந்த (?) பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. இது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்கள் இல்லையா? இதில் உச்சகட்ட வர்ணனை என்னத்தெரியுமா?

இப்பெண்களோடு விபச்சாரம் செய்தார்களே - அந்த ஆண்களின் 'அந்த' உறுப்பின் அளவு குறித்த கடவுளின் வர்ணனைத்தான் உள்ளதிலேயே ஹைலைட் வர்ணனை:

'கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்குஅவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்'

இதை 6.4.1980ல் வெளியிடப்பட்ட நம்ம ரோமன் கத்தோளிக்க பைபிள் மொழிப்பெயர்ப்பாளர்கள் கொஞ்சம் தெரிவாகவே மொழிபெயர்த்துள்ளனர். (படிப்பபவர்களுக்கு 'அந்த' அளவு பற்றித் தெளிவாகப் புரியவேண்டும் என்பதற்காக) :

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...'

இந்த பைபிள் எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு மற்ற மிருகங்களின் உருப்புக்களைக்குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? எந்த மிருகத்தின் 'அந்தக்குறி' ஆண்களின் மர்ம உருப்புக்கு ஒத்திருக்குமோ அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள் இந்த பைபிளல் எழுத்தாளர்கள். சகோதரர்களே! இந்த அளவுக்கு மிக மோசமாக, ஒரு விபச்சாரர்களின் ஆண்குறியின் அளவும், அதன் பிறகு அவர்களுக்கு வந்த விந்துக்களின் அளவும் சொல்லவேண்டியதன் அவசியம் என்ன? இந்த ஆண்குறி 'அளவு' குறிப்பு மூலம் கடவுள், மக்களுக்கு சொல்ல வரும் உபதேமென்ன? இந்த வசனங்களை உலகில் எந்த சர்ச்சிலாவது படிக்க இயலுமா? யாராவது தங்கள் குடும்பத்தோடு படிக்க முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்தவ சகோதரார்களே!

அடுத்து இந்தப் கதையில் குறிப்பிடப்படும் விபச்சாரப் பெண்கள் யார்? அதையும் கடவுளே சொல்கிறார்:

'அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்'

'அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்'

6.4.1980ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க பைபிளில் இப்படி குறிப்பிடப்படுகிறது :

'அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர், புதல்வியரைப் பெற்றார்கள்'

இந்த விபச்சாரிகளெல்லாம் கடவுளின் மனைவிகளாம்? அவர்கள் கடவுளுக்கு புதல்வரையும் புதல்வியரையும் பெற்றார்களாம். இதை வேறுயாரும் அல்ல. கடவுளே சொன்னாராம். இந்த பைபிள் எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட ஆபாசவர்னணைகளை கடவுள் சொன்னதாக இட்டுக்கட்டி வந்தவர்கள் கடைசியில் கடவுளின் பெயரிலேயே இப்படிப்பட்ட அபாண்டங்களை எழுத மணம் வந்தது எப்படி? கடவுளின் பெயரால் அசிங்கங்களையும் அபாண்டங்கiயும் எழுதப்பட்ட பைபிளை எப்படி இறைவேதம் என்று நம்ப முடியும்? பைபளில் உள்ள சம்பவங்கள் எப்படி உன்மையாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்த விபச்சாரிக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்ன?

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள். அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன் :

இப்படி எல்லேரையும் வரவழைக்கும் கடவுள் அவர்கள் மூலம் இந்த விபச்சாரிகளுக்கு என்ன தண்டனைவழங்குவார்? அதையும் பைபிளே சொல்கிறது :

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னை வெறுப்பாய்நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு,உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள். அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

இது தான் கடவுள் அந்த விபச்சார பெண்களுக்கு வழங்கிய தண்டனையாம். ஓரு விபச்சாரியை தண்டிக்க பல விபச்சாரகர்களை உருவாக்கினார் கடவுள் என்கிறது பைபிள். இவையெல்லாம் கடவுளின் பெயரால் கட்டவிழ்துவிடப்பட்ட பொய்கள் இல்லையா? கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள். இந்த விபச்சாரிக்கு இந்த தண்டனை என்றால் - இந்த விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்தார்களே அந்த 'நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும்'என்று வருகிறதே அந்த விபச்சாரர்களுக்கு என்ன தண்டனை?

இவர்கள் மீண்டும் அவளை 'அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்.' என்கிறது பைபிளின் புனித சட்டம். அதன் பிறகு என்ன நடக்கும்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன். ஹ! ஹ! ஹ! என்ன அற்புதம்! என்னே அற்புதம்? இது தான் பைபிளின் கடவுள் வழங்கும் குற்றவியல் தண்டனையோ?

இப்படிப்பட்ட ஆபாசமான அசிங்கமான விபச்சாரக்கதைகள் மூலம் கடவுள் என்ன சொல்லவருகின்றார்? இதை எப்படி கடவுளின் வேதம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? கடவுளின் பெயரால் பச்சைப் பொய்களை எப்படி இட்டிக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.

இந்த ஆபாச வர்னணைகள் அசிங்கமாக இல்லையா? இப்படியா கடவுள் சொல்லியிருப்பார்? அந்த விபச்சாரகர்களுக்கு கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இப்படிப்பட்ட அசிங்கமான தண்டனையால் - கடவுள் நம்பிக்கைக்கே பாதகம் ஏற்பட்டுவிடாதா? கிறிஸ்தவ சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்.

நாம் மேற்கூறியுள்ள பைபிள் வசனங்கள் உன்மையில் கடவுளால் அருளப்பட்டிருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது.

காரணம் ஆபாசமான - அருவருக்கத்தக்க வகையிலான இப்படிப்பட்ட வர்ணைகளை மனிதனே உபயோகப்படுத்தக்கூடது என்று சொல்லும் கர்த்தர் மனிதர்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டிய தனது வேதத்தில் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார். அதுவும் ஆண் உருப்புக்களின் அளவுகள் குறித்து சொல்லும் அளவுக்கௌ;ளாம் கடவுள் வரம்பு மீறி இந்த புனித (?) வசனங்களை அருளியிருக்கமாட்டார் என்பது தான் எதார்த்தமான உன்மை.

அடுத்த காரணம்: யூதர்களுக்கு கடவுளால் சொல்லப்பட்ட குற்றவியல் சட்டத்தின்படி ஒரு பெண் விபச்சாரம் புரிந்தால் அவள் ஊரார் முன்னிலையில் கல்லெறிந்துக் கொள்ளப்படிவேண்டும் என்பது சட்டம். (பார்க்க : உபாகமம் 22:21-24) ஆனால் இந்த விபச்சாரிக்கு - எந்தக் கடவுள் அந்தச் சட்டத்தை சொன்னாரோ - அதே கடவுள் வேறு ஒரு தீர்ப்பை - அதுவும் மிக அசிங்கமான - ஆபாசமான - அருவருக்கத்தக்க தீர்ப்பை அளித்ததாக சொல்லப்படுகின்றது. எனவே இந்த வசனங்கள் கண்டிப்பாக கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பது நிதர்சனம்.

அடுத்து பைபின் வசனங்களின் படி கடவுள் என்பவர் ஒருவரே. அவருக்கு இணையாக யாரும் கிடையாது என்கிறது. (பார்க்க உபாகமம் 6: 4) ஆனால் இந்த விபச்சாரிகள் கடவுளுக்கு மனைவியாக இருந்து பிள்ளைகளையும் பெற்றதாக கூறுகிறது. இதை கடவுளே சொன்னார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது கடவுளின் பெயரால் சொல்லப்படும் பச்சைப்பொய் என்பதற்கு இதுவே ஒரு சான்று.

கடவுள் கொள்கைக்கும் - கடவுளின் வசனங்களுக்கும் நேர்முரனானது என்ற இந்தச் சாண்றுகளே - கடவுளால் இந்த பைபிள் வசனங்கள் அருளப்பட்டிருக்காது என்பதற்கும் - இடையிலே யாரே சில தீயவர்கள் உள்நுழைத்துள்ளார்கள் என்பதற்கும் போதுமானது.

இதைக்குறித்துத்தான் இறைவன் தனது இறுதித் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான் :

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (அல்குர்ஆன் 2:75)

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே! திருக்குர்ஆனை எடுத்துக்கொள்ளுங்கள். உலகம் முழவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் முழுகுர்ஆணையும் மணனம் செய்தவர்கள் (ஹாஃபில்கள்) இருப்பார்கள். லட்சக்கனக்கான மக்கள் கூடக்கூடிய மக்கா நகரிலும், இன்னும் உலகம் முழவதும் உள்ள பள்ளிவாசல்களில் நாள் தோறும் திருக்குர்ஆன் தொழுகையில் ஓதப்படுகின்றது. புனித ரமலான் மாதங்களில் உலகம் முழவதும் உள்ளப் பள்ளிவாசல்களில் முழக்குர்ஆனையும் ஓதி தொழுகை நடத்தப்படுகிறது. உலகம் முழவதும் உள்ள அனைவரும் நாள்தோறும் பொருளறிந்துப் படிக்க வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இறைவசனங்களும் அதன் கட்டளைகளும் எங்கே! உங்கள் புனிதவேதமான பைபிளின் புனித (?) வசனங்கள் எங்கே!

இப்படிப்பட்ட ஆபாச வசனங்களை கடவுள் சொல்லியிருப்பாரா அல்லது சாத்தானின் தூண்டுதலால் எழுதப்பட்டாக இருக்குமா? சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்.

இது போன்ற இன்னும் பல அபத்தமான - ஆபாசமான பைபிள் வசனங்களை தொடர்ந்து விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்.


[][][]

பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 2)

யாரிந்த பவுல்-2 


சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைலீசியாவிலுள்ள (இன்றைய துருக்கி) டார்சஸ் நகரில் பிறந்தவர். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இயேசுவை இவர் நேரில் சந்தித்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. பிறப்பிலேயே யூதரான பவுல் இளமையிலேயே எபிரேயு மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

இவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறியதாக அப்போஸ்தலர் நடபடிகள் கூறுகின்றது. (அபபோஸ்தலர் 23:6, 26:5) இந்த பரிசேயர் என்பவர்கள் யார்? அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? என்பதை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது:

'பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர். ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.' பார்க்க : விக்கிபிடியா 

இந்த பரிசேயர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்என்று இயேசு தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் உபதேசித்தார். குறிப்பாக அவர்கள் எந்த செய்தியைக் கொண்டுவந்தாலும் அதிலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பார்க்க : (மத்தேயு 16:5-12, மாற்கு 8:14-21)

எந்த பரிசேயரைக் குறித்தும் அவர்கள் சொல்லும் செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு எச்சரித்தாரே, அதே பரிசேயரைச் சேர்ந்த பவுல் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் கேட்டோமேயானால் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையுமே ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் செய்தியில் பொய் மலிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தையும், அவரின் கொள்கைகளையும் இயேசுவின் பெயராலேயே எப்படியெல்லாம் சீரழித்தார் என்பதற்கு இன்றைய பைபிளே சரியான சான்று.

பவுலின் ஆரம்பக் காலம் :
யூத மதத்தவரான பவுல் இயேசுவிற்கு பிறகு அவர் போதித்த இறைக்கோட்பாட்டிற்கும் அதை பின்பற்றியவர்களுக்கும் எதிரானவராக இருந்தார் என்று அப்போஸ்தல நடபடிகள் குறிப்பிடுகின்றது.

சவுல் வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்தீரிகளையும் இழுத்துக் கொண்டு போய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:3)

இந்தச் சவுல் என்னும் பவுல் இயேசுவைப் பின்பற்றியவர்களை துன்புறுத்தி வந்தான். அவர்கள் தமஸ்குவிற்கு தப்பிச் சென்ற பிறகும் அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக தலைமை குருவிடம் அதிகார கடிதம் வாங்கிக் கொண்டு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகள் கூறுகின்றது.

சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்தீரிகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களை கட்டி எருசலேமுக்கும் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிரூபங்களைக் கேட்டு வாங்கினான்.(அப்போஸ்தலர் 9:1-2)

இப்படி உன்மையான இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பல துன்பங்களைக் கொடுத்து பலரை கொலை செய்யவும் துடித்த யூதரான பவுல், திடீரென ஒரு அதிசயமான (?) சம்பவத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டாராம். சூழ்சிகளுக்குப் பெயர் பெற்ற யூதர்களும் - இயேசுவால் மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்களும் எப்படி எல்லாம் சத்தியத்தை சீரழிப்பதற்காக பொய் சொல்லத் துணிவார்கள் என்பதற்கு பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையே சரியான சான்று.

இயேசுவை பவுல் ஏற்றுக்கொண்டது எப்படி?
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை கொலைசெய்துக்கொண்டிருந்த பவுல் தீடீரென இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன? அவர் எப்படி ஏற்றுக்கொண்டார்? என்பதை பவுலின் நன்பரான லூக்கா அப்போஸ்தலரின் நடபடிகள் என்றப் புத்தகத்தில் ஒரு பொய்யானக் கதையை சொல்லி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார் :

அவன் பிரயாணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த போது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் : ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே : முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர் 9:3-9)

அதாவது இயேசுவின் உன்மையான சீடர்களை துன்புருத்துவதற்காக தேடியவனாக தமஸ்காவுக்கு பயனம் செய்துக்கொண்டிருக்கும் வழியில் இந்த சம்பவம் (?) நடந்ததாக இந்த வசனங்களின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது.

இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது பற்றி சொல்லப்படும் இந்த சம்பவம் அவரும் அவரைச் சார்ந்தவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொய் என்பதற்கு அவர்களாளேயே எழுதப்பட்ட மற்ற மற்ற வசனங்களில் வரும் முரண்பாடுகளே சரியான சான்று.

இந்த அப்போஸ்தலர் 9:3-9 வசனங்களின் இடையே சில விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும்:

ஒன்று, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். என்பதன் மூலம் திடீரென வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் தரையிலே விழுந்தானாம்.

இரண்டு, நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். என்பதன் மூலம் பவுல் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டனத்துக்குச் சென்றதும் சொல்லப்படும் என்று இயேசு கூறினாராம்.

மூன்று, அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். என்பதன் மூலம் பவுலுடன் கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம் ஆனால் ஒருவரையும் காணவில்லையாம்.

நான்காவது, அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்பதன் மூலம் பவுல் மட்டும் கீழே விழுந்ததால் மற்றவர்கள் அவரை கைலாகு கொடுத்து கூட்டிக்கொண்டு போனார்கள் என்கிறார்.

இவற்றுக்கெள்ளலாம் நேர் முரணாக அதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் மற்ற மற்ற இடங்களில் இதே சம்பவத்தை பற்றி எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள்:

அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது : சவுலே. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் : ஆண்டவரே நீர் யார் என்றேன். அவர் : நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப்போஸ்தலர் 22:6-10)

இந்த வசனத்தில் அதே சம்பவத்தை சொல்லிவிட்டு என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. (அப்போஸ்தலர் 22:9) என்று சொல்லப்படுகின்றது. ஆனால் முன்பு நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா? அல்லது கேட்கவில்லையா? வெளிச்சத்தைக் கண்டார்களா? அல்லது காணவில்லையா? இந்த ஒரே சம்பவத்தை ஒரே புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் (?) எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதியுள்ளார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவை எல்லாம் உன்மையாக இருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும்?

அடுத்து, இந்த இரண்டு வசனங்களில் வரும் சம்பவங்களும் ஒன்றுக்கொண்று நேர் முரணாக இருக்க, அதே பவுல் இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது பற்றி அதே அப்போஸ்தலர் என்ற புத்தகத்தில் மூன்றாவதாக மற்றோர் இடத்திலும் பவுல் சொல்வது போல் சொல்லப்படுகின்றது. அந்த இடத்தில் இந்த இரண்டு வசனங்களுக்கும் நேர் முரனாக சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.

'இப்படிச் செய்து வருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும் போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்த போது : சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்ப்பபடுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்' (அப்போஸ்தலர் 26:12-14)

முதல் அறிவிப்பில் பவுலை மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்பொழுது அவனோட கூட பிரயானம் பன்னியவர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம். ஆனால் ஒளியையோ அல்லது வேறு யாரையுமோ பார்க்கவில்லையாம்.

இரண்டாவது அறிவிப்பிலும் பவுலை மட்டுமே அந்த ஒளி சுற்றி பிரகாசித்தாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்போது அவனோட கூட பிரயானம் பன்னினவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயம் அடைந்தார்களாம். ஆனால் சத்தத்தையோ கேட்கவில்லையாம்.

மூன்றாவது அறிவிப்பில் பவுலையும் பவுலோடு கூட பிரயானம் பண்ணினவர்களையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டார்களாம். இவற்றில் எது சரி? முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? அல்லது மூன்றாவது அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா? அல்லது அவனோடு கூட பிரயானம் பண்ணிவர்கள் அனைவரும் சேர்ந்து கீழே விழுந்தார்களா?

இது மட்டுமல்ல முதல் அறிவிப்பில் பவுல் மட்டுமே கீழே விழுந்ததால், அவனை மற்றவர்கள் கைலாகு கொடுத்து தூக்கி விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மூன்றாவது அறிவிப்பில் எல்லோருமே கீழே விழுந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் முதல் அறிவிப்பின் படி கைலாகு கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பது எப்படி சரியாகும்?

முதல் இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்று முரணாயிருக்க அந்த இரண்டிற்கும் நேர்முரணாக இந்த மூன்றாவது அறிவிப்பு எந்த அளவுக்கு முரணாக இருக்கின்றது என்று கவனித்தீர்களா சகோதரர்களே?

இது மட்டுமல்லாமல் இதே கதையில் வேறு சில முரண்பாடுகளையும் பாருங்கள்.அப்போஸ்தலர் 9: 5-10 மற்றும் 22:10-15ம் வசனத்தின் படி பவுல் என்ன செய்யவேண்டும் என்பதை தமஸ்காவுக்கு போனதும் சொல்லப்படும் என்று இயேசு சொன்னதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அப்போஸ்தலர் 26:16-18 ம் வசனங்களில் அதே இடத்திலேயே அவரை புறஜாதியருக்கு பிரச்சாரம் செய்ய நியமித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எது சரி? பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா? அல்லது பட்டனத்திற்கு சென்றதும் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டதா?

இப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா? அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம்? இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டுமா?

உன்மையில் சொல்லவேண்டும் என்றால் பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த பவுலும் இவரைச் சார்ந்தவர்களும் தங்கள் மனம்போன போக்கில் எழுதிய புத்தகங்களை தான் இன்றைய கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதிக்கொண்டிருக்கின்றனர்.


[][][]

பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1)

யாரிந்த பவுல்.. 


இன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்...

கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களுக்கு ஆசிரியர் என்று நம்பப்படுபவர்...

இயேசுவே அறியாத பல புதிய கொள்கைகளை அவரின் பெயராலேயே போதித்தவர்...

இவர் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமோ அதன் கொள்கைகளோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மதத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்...

இயேசு, சத்தியத்தை உரத்து போதித்தார் என்பதன் காரணமாக யூதர்களின் கொலை வெறிக்கு ஆளாகி (பைபிளின் படி) சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக - அந்த பாவத்தைப் போக்கும் வகையில், இயேசு நமக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்டார் என்று சொல்லி, அந்த கொலை சம்பவத்தை தியாகத்தின் சின்னமாக மாற்றி பிரச்சாரம் செய்தவர் ...

முன்னர் உள்ள தீர்க்கதரிசிகளும் இயேசுவும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டையோ அல்லது அதன் கட்டளைகளையோ நாம் பின்பற்றத் தேவையில்லை, அது பலவீனமடைந்துவிட்டது, அது பயனற்று போய்விட்டது என்று போதித்தவர் ... அவற்றில் தடுக்கப்படவைகளை அனுமதித்தவர்... அவற்றில் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதை செய்யலாம் என்று போதித்தவர்...

இவர் எதை போதித்தாரோ அதுதான் இன்றைய கிறிஸ்தவமதத்தின் ஆணிவேர், அது தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின்தலையாய கொள்கை, இவர் சொன்ன கொள்கைகளை நம்பாதவன் கிறிஸ்தவனே அல்ல, அவன் இரட்சிப்பை பெற முடியாது - அவன் நித்திய ஜீவனை அடைய முடியாது என்று சொல்லப்படும் அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் அவர் யார்? என்றால்,



அவர் தான் கிறிதவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படும் புனிதப் பவுல் !

இப்படி சொன்னது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் அது தான் மறுக்கமுடியாத சத்தியமான உன்மை!

இவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் தனது 'THE 100' என்ற புத்தகத்தில் சொல்லும்போது,

'புதிய கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் முன்னனியில் இருந்தவர். பிற கிறிஸ்தவ எழுத்தாளரையும் சிநிதனையாளரையும் விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியவராவார்' என்கிறார். மற்றோர் இடத்தில்,

'கிறிஸ்துவத்தின் முக்கியமான அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு இயேசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்' என்கிறார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பவுலைப் பற்றிக் கூறும் போது :

எழுத்தாளர்களின் ஒரு அங்கம், உதாரணத்திற்கு W. Wrede அவர்களைப் போன்றவர்கள் பவுலை கடுமையாக எதிர்க்கின்றார்கள். கிறிஸ்தவ மதத்தின் இரண்டாவது நிறுவனர் என்று ஆகும் அளவுக்கு பவுல் அதை மாற்றி விட்டார் என அவர்கள் கருதுகின்றனர். உண்மையைச் சொல்லப் போனால், அவர் தான் சர்ச்சினுடைய கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரே ஆவார். அந்த சர்ச்சினுடைய கிறிஸ்தவமோ இயேசு போதித்த கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானதாகும். நீங்கள் இயேசுவைப் பின்பற்றலாம் அல்லது பவுலைப் பின்பற்றலாம். ஆனால் இருவரையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள்.

தலைசிறந்த கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மாக்கினோன் பகிரங்கமாக உன்மைகளை ஒப்புக்கொள்கின்றார் :

'அவர் போதித்த கருத்தோட்டஙகள் அவரிலிருந்து உதித்தது தான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவருக்கு இயேசு நேரடியாகப் போதித்தார் என்று அவர் கூறினாலும் அவர் போதித்தது இயேசுவின் போதனைகளுக்கு ஒத்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. அதே நேரத்தில், நியாயப் பிரமாணம் பற்றி இயேசுவின் கொள்கை பவுலின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, தான் இயேசுவிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்றேன் என்று பவுல் கூறுவது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தான் இருக்கின்றது' என்று கூறுகின்றார்.

இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின் சீடர்களுக்கோ சொந்தமானதல்ல. (இது குறித்து மேலும் விரிவான கட்டுரை விரைவில் இன்ஷா அல்லாஹ்) மாறாக இவரும் இவரைச்சார்ந்தவர்களும் எழுதியதே. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இவரும் இவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்தியதே புதிய ஏற்பாடும், அதைச் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் இன்றைய கிறிஸ்தவ மதமும்.

பவுலின் நன்பரான லூக்காவால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் - அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் பற்றி கூறும் - Acts of Appostle - என்ற புத்தகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் பவுலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. Acts of Appostle என்ற ஆகாமம் இயேசுவின் சீடர்களின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறப்படும் புத்தகம் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் 28 அதிகாரங்கள் உள்ள புத்தகத்தில் 9 முதல் 28 வரையிலான அதிகாரங்கள் - கிட்டத்தட்ட 19 அதிகாரங்கள் - பவுலின் செயல்பாடுகள் பற்றித்தான் பேசுகின்றது. இந்த புத்தகத்தை அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் என்று குறிப்பிடுவதை விட பவுலின் செயல்பாடுகள் என்று குறிப்பிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லலாம், என்கிற அளவுக்கு அந்த புத்தகத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பவுலும் பவுலைச் சார்ந்தவர்களும் எதை எல்லாம் எழுதிவைத்தார்களோ அவை அனைத்துமே வேதவாக்கியம் என்ற சாயத்தை பூசி அவை அனைத்தும் கடவுளால் அருளப்பட்டது என்று சான்றிதழ் கொடுத்தவரும் இவரே. அதனால் தான் புதிய ஏற்பாட்டாளர்கள் எதை எழுதிவைத்தாலும் எப்படி எழுதி வைத்திருந்தாலும், அது எந்த அளவுக்கு முரண்பாடாகவும் குழப்பமானதாகவும் அறிவுக்கு பொருந்தாததாக இருந்தாலும், ஏன் இயேசுவின் வார்த்தைகளுக்கும் அவரது போதனைகளுக்குமே நேர் முரணாக இருந்தாலும் அவை அனைத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் அப்படியே கண்மூடி பின்பற்றுவதற்கு காரணம், பவுல் 2 திமோத்தேயு 3:16ன் மூலம் 'அவை அனைத்து வேதவாக்கியங்கள்' என்று கொடுத்த சான்றிதழே.

பவுலும் அவர் சொன்ன கொள்கைகளும் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிற அளவுக்கு அம் மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் பவுல் என்பவர் யார்? அவர் இயேசுவின் சீடரா? அல்லது இயேசுவின் உறவினரா? அல்லது இயேசு வாழ்ந்த காலத்தில் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு உதவி செய்தவரா? உன்மையில் அவர் யார்?


யார் இந்த பவுல்? (பாகம் 2) படிக்க இங்கே அழுத்தவும்

கிறித்துவத்தில் ஷியாக்களின் தக்கியா.. [பவுலும் கிறிஸ்தவமும்]



பவுல் கூறுகின்றார் :

"தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது. சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?" - ரோமர் 3:4-7

பவுல், தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக்கொள்கின்றாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக புனித வேதமாக இடம்பெற்றுள்ளது.

பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

"நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேத்தில் நான் உடன் பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். "- 1 கொரிந்தியர் : 9:19-23


தான் ஒரு தந்திரக்காரன் என்று பவுல் ஒப்புக்கொள்வதையும் பாருங்கள் :

"அப்படியாகட்டும். நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை. ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்." - 2 கொரிந்தியர் 12:16

பைபிள் என்பது மனிதனின் கற்பனையிலும் கட்டுக்கதையிலும் உருவானது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன், வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்று இவ்வளவு தெளிவாகப் பவுலே வாக்குமூலம் தருகின்றார். கிறிஸ்தவ நண்பர்களே.. மேலே உள்ள பைபிளின் இந்த வாசகத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்று கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்துவிடுகின்றதல்லவா?

கர்த்தருக்காக பொய் சொல்லலாம் என்றும் கர்த்தருக்காக பச்சோந்திதனமாக எல்லாருக்கும் எல்லாமுமாக நடக்கலாம் என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள் அனைத்தும் கர்த்தரின் மூலம் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு தான் எழுதப்பட்டது என்று எப்படி நம்ப முடியும்.? இந்த புதிய கிறிஸ்தவமதத்திற்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவே சொல்லாத - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான, பழைய ஏற்பாட்டிற்கு எதிரான பல புதிய கொள்கையை இயேசு எனக்கு நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன அனைத்தும் பச்சைப் பொய் தானே?

இயேசு எனக்கு அதியசமான முறையில் காட்டியளித்தார். அதன் மூலம் அவர் என்னை தெரிந்தெடுத்துக்கொண்டார் என்று பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொன்ன சம்பவத்திலும் அதற்கு பிறகு சீஷர்களை சந்தித்தாக சொல்லப்பட்ட சம்பவத்திலும் எப்படிப்பட்ட பொய்கள் மலிந்து கிடக்கின்றது என்பதை சென்ற பதிவுகளில் நாம் எடுத்துக்காட்டினோம். நாம் எடுத்துக்காட்டிய அத்தனையும் உண்மை என்பது இந்த பவுலின் கூற்றின் மூலம் நிரூபணமாகின்றதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறைவேதம் எனவும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு எங்கேனும் இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

"என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும் என்னைச் சகித்துமிருககிறீர்களே." - 2 கொரிந்தியர் 11:1

"பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம். அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மை பாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப் போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மை பாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்." - 2 கொரிந்தியர் 11:16,17

மேன்மை பாராட்டி, புத்தியீனனாயினேன். நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக் கொள்ளப்பட வேண்டியதாயிருந்ததே. - 2 கொரிந்தியர் 12:11

இவையாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும் பேசுவது ஆண்டவரல்லர், தம் தைரியத்திலேயே பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக்கொள்கிறார் பவுல். அந்த புத்தி கெட்ட உளறல்களும் பிறரது வற்புறுத்தலுக்காகவும் தன் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாகவும் - அது இடம்பெற்ற புத்தகம் இறைவேதமாகவும் இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளது. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிளை இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்? எங்களையும் நம்பச் சொல்கின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள் :

''மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது'' - 1 கொரிந்தியர் 7:12

''அன்றியும் கன்னிகைகளைக் குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.'' - 1 கொரிந்தியர் 7:25

''ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்து விட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும், தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.'' - 1 கொரிந்தியர் 7:40

''பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன்.'' - பிலமோன் - 1:19

இந்த வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வருவதென்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டுப் பவுல் என்ற சவுல் தமது சொந்த சரக்குகளைக் கலந்து வேதம் என்று அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்துப் புது மார்க்கம் கண்டார் என்பதை தவிர வேறன்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவை இவர் செய்தார். இவற்றையெல்லாம் இறைக் கட்டளைப்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார்.

இப்படியெல்லாம் இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர் அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குகமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்:

''பின்பு அவர்கள் அவனைநோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாய் கூட்டங்கூடுவார்கள்.ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும். அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகெண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும். அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும்சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும்வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.'' - அப்போஸ்தலர் 21:20-26

பைபிள் என்பது பவுலும் அவரது கூட்டாளிகளின் சொந்தத் தயாரிப்பு என்பதும் அதில் கூறுகின்ற போதனைகளில் அவருக்கே உறுதி இல்லை என்பதும் கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும் மோசேயின் நியாயப்பிரமாணங்களை இவர் அலட்சியப் படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கையில் கிறிஸ்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவர்களில் பலர் நாங்கள் பரிசுத்த ஆவியின் உதவியால் நொண்டியை குணமாக்குகின்றோம், குருடர்களை பார்வையுடையவனாக்குகின்றோம், நோயை குணப்படுத்துகின்றோம் என்று பச்சையாக பொய் சொல்லி பல அப்பாவிகளை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதையும் அன்றாடம் பார்க்கின்றோம். இன்னும் சில போதகர்கள் தன்னை இயேசு ஒரு பெரிய கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கச் சொல்லியுள்ளார் என்றும் வேறு ஒருவர் இயேசு தன்னை டிவி சேனல் தொடங்க சொல்லியுள்ளார் என்றெல்லாம் புளுகுவதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய் சொல்வது தவறல்ல, அது நன்மையான ஒன்றே என்ற பவுலின் மேற்கூறப்பட்ட வசனங்களை வைத்தே அவர்கள் இப்படியெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

ஒரு குருடனையே நொண்டியையோ அதிசயம் செய்து குணமாக்குகின்றேன் என்று ஒருபுறம் மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபுறம் இதே கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்காக மருத்துவமணைகளை நடத்துவது ஏன்? மக்களை ஏமாற்றத்தானே? அப்படி குருடனை  குணமாக்குகின்றேன் - நொண்டியை நடக்க வைக்கின்றேன் என்று சொல்லக்கூடியவர்கள் தாங்கள் செட்டப் செய்து வைத்துள்ளவர்களைத்தான் குணமாக்குவதாக தங்களது நிகழ்ச்சிகளில் காட்டுவார்களே யொழிய நாம் ஒருவரைக் கொடுத்து இந்த நொண்டியை குணமாக்குங்கள், இந்த பார்வையுடையவனை பார்வையடையச் செய்யுங்கள் என்று சொன்னால் அவர்களால் முடியுமா? (இதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களிடமும் சவாலாகவே கேட்கின்றோம்) ஆனால், முடியாது! காரணம் அவை அனைத்து மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களால் சொல்லப்படும் பச்சைப் பொய்! இதை மறுக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் பிறகு எதற்கு MBBS, MD, மருத்துவ கல்லூரி, மருத்துவ படிப்பு? இவற்றை எல்லாம் விட்டு விட்டு கிறிஸ்தவ போதகராக மாறி இந்த வேலையை செய்யத் தொடங்கி விடலாமே!

உண்மை இவ்வாறிருக்க இதையும் மீறி இன்றும் இவற்றை இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கிறிஸ்தவத்தின் பக்கம் எப்படியாவது அழைத்தால் அது தவறல்ல என்று பவுல் சொன்ன மேற்கூறப்பட்ட வசனங்கள் தானே அடிப்படை?

அது மட்டுமல்ல பல முஸ்லீம்கள் கிறிஸ்தவராக மாறினர், முஸ்லீம் போதகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார், ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து அதிசயமாக சந்தித்து அவருக்கு நீங்காத நோயை நீக்கினார், அதனால் அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்று இன்றைய கிறிஸ்தவர்கள் தங்கள் தளங்களில் எதையாவது எழுதிவைப்பதற்குக் காரணம் கர்த்தருக்காக பொய் சொல்லி கிறிஸ்தவத்திற்கு மகிமை ஏற்படுத்தலாம் என்ற பவுலின் இந்த வசனங்கள் தானே?

மொத்தத்தில் கிறிஸ்தவ மிஷி'நரி'களின் இந்த எல்லாவிதமான ஏமாற்று செயல்கள் அனைத்திற்கும் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லலாம் -அதனால் நாம் பாவி என்று தீர்க்கப்படமாட்டோம் - இது போல் நான் பலருக்கும் அவர்கள் போலவே வேடமிட்டு நடித்துள்ளேன் - நானே நம்பாதவற்றை நான் நம்பியது போல் அவர்களை ஏமாற்றினேன் - என்னை நீங்களும் பின்பற்றுங்கள் - என்று இன்றைய கிறிஸ்தவமதத்தின் சொந்தக்காரரான பவுல் சொன்ன இந்த தவறான உபதேசங்கள் தானே?

இவற்றைத் தான் பவுல் மற்றொரு வசனத்தில் மிகத் தெளிவாக சொல்லுகின்றார் :

''இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோசப்படுகிறேன்,  இன்னமும் சந்தோசப்படுவேன்."- பிலிப்பியர் : 1:18

இப்பொழுது உண்மை புரிகின்றதா? எப்படியாவது - பொய்யைச் சொல்லியாவது - வஞ்சகம் செய்தாவது - கிறிஸ்தவத்தைப் பரப்பியாக வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுகின்றார் என்றால் என்ன அர்த்தம்? சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

இப்படி புதுமார்க்கம் கண்ட பவுலை எப்படி பரிசுத்த ஆவியால் பேசக்கூடியவர் என்றும், அவர் எழுதியதெல்லாம் புனித புத்தகம் என்றும் நம்ப முடியும்? யோசிக்க வேண்டாமா கிறிஸ்தவர்களே! இந்த பவுல் சொன்ன புதிய மார்க்கத்தை - பொய்யான போலியான மார்க்கத்தை விட்டு வெளியேறி சத்திய இஸ்லாத்தின் கருத்துக்களை சற்று ஆய்வு செய்யுங்கள்! சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!



[][][]