Translate

Saturday, 30 January 2016

பலதார மணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை..!







நான்கூட தலைப்ப படிக்கும்போது கொஞ்சம் மட்டமா நினைச்சுட்டேன். ஆனால் முழுவதையும் படித்தபின்தான் இதன்பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு தேசத்தின் சோகத்தை உணரமுடிந்தது.

--------------------


ஒவ்வொரு இளைஞனும் குறைந்தபட்சம் இரு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறைத்தண்டனை. இப்படி ஓர் சட்டத்தை இயற்றியிருக்கிறது எரித்திரியா நாட்டு அரசு. மேலோட்டமாக பார்க்கும்போது இது நகைப்பான விஷயமாகத் தோன்றும். ஆனால் வலி மிகுந்த உத்தரவு இது. சோகத்தின் வெளிப்பாடு.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது எரித்திரியா நாடு. இந்நாட்டின் தெற்கே எதியோப்பியாவும், மேற்கே சூடானும் தென் மேற்கில் சிபூட்டியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கில் செங்கடல் உள்ளது.

அண்டை நாடான எத்தியோப்பியாவால் பல ஆண்டுகளாக அடிமைப்படுக்கிடந்த தேசம் எரித்தியா. விடுதலை பெற நீண்டகாலம் போராடியது இந்த நாடு. 1993 ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில்எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாற வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனாலும் விடுதலை முழுமையாக கிடைக்கவில்லை. பிறகும் போராட்டம் நடக்க.. சுதந்திர தேசம் மலர்ந்தது.

ஆனால், இந்த, சுதந்திரமும் எளிதாக கிடைத்துவிடவில்லை. மீக நீண்ட ஆயுதப்போராட்டம். அதன் விளைவாக, ஏராளமான இளைஞர்களின் உயிர் பறிபோனது.

இதனால், நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனது. கிட்டதட்ட ஒன்றரை லட்சம் போராளி இளைஞர்களை காவு கொண்டது விடுதலை போராட்டம்.

ஒரு புறம், பெண்களுக்கு மணமகன் கிடைக்காத நிலை. மறுபுறம், எதிர்கால சந்ததி அருகிவிடுமோ என்கிற அச்சம்.

ஆகவேதான், ஒரு ஆண், குறைந்தபட்சம் இரண்டு திருமணங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கிறது அந்த நாடு. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களுக்கு நிதி உதவி அளிப்பதாக ஏற்கெனவே அறிவித்தது. ஆனால், இருதார மணங்கள் எதிர்பார்த்ததைப்போல நடக்கவில்லை. ஆகவே, இரண்டு மணம் புரியாதவர்களுக்கு சிறைத்தண்டனை என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.


@@

விடுதலைப்போராட்டத்தின் வலியை முழுமையாக அனுபவித்துள்ள எரித்திரியா நாடுதான், தமிழ் ஈழத்தை அங்கீகரித்த உலகின் ஒரே நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 27 January 2016

கோவை புரட்சியில் தூக்கிலிடப்பட்ட 38 முஸ்லிம்கள்!





(படத்தில் உள்ளது இந்திய சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பாடுபட்ட இந்திய இஸ்லாமிய தலைவர்கள்)

1800 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் திண்டுக்கல் காட்டுப் பகுதியிலிருந்து 5 புரட்சிப் படைப்பிரிவினர் ஆங்கில ராணுவ மையங்களைத் தாக்கிட கோவைக்குச் சென்று அதற்காக ஆயத்தமானார்கள். திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின் துவக்கப்பட்ட புரட்சியின் ஆரம்பக் கட்டம் இதுவாகும். எல்லா புரட்சியாளர்களும் ஆயுதம் தாங்கியிருந்தனர். அவர்களது பயணம் ரகசியமாக இருந்தது. திப்பு சுல்தான் படையில் போர் வீரர்களாகவும் தளபதிகளாகவும் பணியாற்றியவர்களும் விவசாயிகளும் இந்தப் புரட்சிப் படையில் இருந்தனர்.

இந்தப் புரட்சிப் படைக்கு ஹசம், அப்பாச்சிக் கவுண்டர், சாமையா ஆகியோர் தலைமையேற்று கோயம்பத்தூரை நோக்கி வழி நடத்திச் சென்றனர். இஸ்லாமிய தலைவர்கள் இந்த வீரர்களுக்கு உரிய ஆணையை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.


அரவாக்குறிச்சியைச் சேர்ந்த கௌரவக் கவுண்டரும், ஓசூரைச் சேர்ந்த புத்தே முஹம்மதுவும் தாராபுரத்தை நோக்கி புரட்சிப் படையை வழி நடத்திச் சென்றனர்.

இச்சப்பட்டியைச் சேர்ந்த ருனவ்னுல்லா கான் தலைமையில் புரட்சிப் படையின் இரண்டாவது அணி காங்கேயத்தை நோக்கிச் சென்றது.

1800, ஜூன் 3ஆம் நாள் கோவை நகரின் முக்கிய இடங்களிலெல்லாம் ஆங்கிலேய எதிரிகளை தாக்குவதற்கு புரட்சிப் படையினர் தயார் நிலையில் இருந்தனர்.

நன்கு ஆலோசிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த கோயம்புத்தூரின் ராணுவ கோட்டையை முற்றுகையிடும் திட்டம் ஆங்கிலேயருக்கு இரகசிய ஒற்றர்கள் மூலமாக தெரிந்தது. ஒரு சில இடங்களில் புரட்சிப் படைகள் தாக்குதல் நடத்தின. மற்ற பகுதிகளில் புரட்சிப் படையினர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டனர்.

கோவைப் புரட்சித் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தேசியப் புரட்சிவாதிகளுக்கு உயர்ந்த அளவு தண்டனை வழங்குமாறும் பிடிபட்டவர்கள் அனைவரையும் இராணுவ முறைப்படி ஒரே விசாரணை நடத்தி அதில் எது அதிக அளவு தண்டனை என்று கலெக்டர் கருதுகிறாரோ அந்த தண்டனையையோ அல்லது மரண தண்டனையோ உடனடியாக வழங்கிடுமாறு கவர்னர் எட்வர்ட் கிளைவ் சேலம் கலெக்டருக்கு ஆணை பிறப்பித்தார். கவர்னரின் ஆணைக்கினங்க சேலம் மாவட்டக் கலெக்டர் வில்லியம் மாக்ஸிலியார்டு கோவைப் புரட்சியாளர்கள் 42 பேர்களை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்த 42 பேரில் 38 பேர் முஸ்லிம் வீரர்கள். 4 பேர் இந்து வீரர்கள். அனைவருக்கும் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.

பல பகுதி மக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக தாராபுரத்தில் 8 பேரையும் சத்திய மங்கலத்தில் 7 பேரையும் கோயம்புத்தூரில் 6 பேரையும் மற்றவர்களைப் பல்வேறு புரட்சி மையங்களிலும் பொது இடங்களிலும் வைத்து காட்டுமிராண்டித் தனமாக தூக்கிலிட்டுக் கொன்றனர் ஆங்கிலேயர்கள்.

கோவைப் புரட்சியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம்கள்:

1.ஷம்னஸ்கான்

2.மொஹைதீன் கான்

3.தாராபுரம் சையது இமாம்

4.மான் கான்

5.பீர் சாஹிப்

6.ஷேக் மியான்

7.கோவை கலீஃபா அமீர்தான்

8.ருனா முஸ்டாஹ் கான்

9.குலாம் பாய் ஹைதர் கான்

10.ஜமாஷ் கான் அலி சாஹிப்

11.கொடிக்கால் ஷேக் அலி

12.செவான் கான்

13.அலி சாஹிப்

14.முடா சாஹிப்

15.முஹம்மது சாஹிப்

16.மிர் கமருத்தீன் கான்

17.ஷேக் மொஹைதீன்

18.கமருத்தீன்

19.சோலை மலை ஜமீன்தார்

20.ஃபதே முஹம்மது

21.ஷேக் மதார்

22.ஷேக் புத்தீன்

23.குலாம் உசேன் ஷேக் அலி

24.பீர் முஹம்மது

25.குலாம் அலி

26.சோட்டா அப்துல் காதர்

27.முஹம்மது ஷெரீஃப்

28.ஷேக் மீரா

29.ஷேக் முஹம்மது திவாஹர்

30.பீர் முங்கப்பா அலி

31.சையது மொஹர்தீன்

32.ஹைதர்கான்

33.மொஹிர்தீன் கான்

34.ஷேக் முஹம்மது

35.தீதார் ஷேக் இமாம்

36.பீனா ஷேக் மியான்

37.ஓசூர் புத்தே முஹம்மது

38.ருவைனுல்லா கான்

தகவல் உதவி
விடியல் வெள்ளி
ஆகஸ்ட்-செப்டம்பர்-2008

இத்தனை பேர் விடுதலைப் போரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். நமது வரலாற்று பாடநூல்களில் இந்த செய்தியை நாம் என்றாவது பார்த்திருக்கிறோமா?

'நாங்கள் இனி வெள்ளையருக்கு எதிராக போராட மாட்டோம்' என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் 'விடுதலை போராட்ட வீரர்கள்' என்று நாட்டில் வலம் வருகின்றனர். உண்மையிலேயே இந்த நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை இழந்த சமுதாயம் துரோகி பட்டம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளது.

நமது நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினத்தில் தூக்கிலிடப்பட்ட அந்த வீர புருஷர்களை நினைவு கூர்வோம்.

.


Tuesday, 19 January 2016

கல்லறைக் கல்லை அகற்றியது யார்.?


WHO MOVED THE STONE..?

நம் அனைவரினதும் மதிப்புக்குரிய இயேசு கிறிஸ்து அவர்களை சிலுவையில் அறைந்து கொலை செய்து அடக்கம் செய்யப்பட்டதாக (?) நம்பப்படும் குகையின் கல்லறைக்கல் அகற்றப்பட்டது தொடர்பாகவும் அதனுடன் சம்மந்தப்பட்ட நம்பிக்கையின் உண்மைத்தன்மையினை பைபிள் ஒளிியில் பாருங்கள் !

கடந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் மத ஆராய்ச்சியாளர்களையும் வல்லுனர்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கிய ஓர் கேள்விதான் இது..! உண்மையாக பைபிளை சிந்திப்பவர்கள் மாத்திரமே நல்லுணர்ச்சி பெறுவார்கள்..! நம்புவதுதான் நம்பிக்கையில்லை..நம்ப வேண்டியதை நம்புவதுதான் நம்பிக்கை..!

"கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது, அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். (மாற்கு 16: 3, 4).

யார் அகற்றியிருப்பார்???
இந்த வினாவுக்கு விடை காண நுழைந்த பிரபல பைபிள் ஆராய்ச்சியாளர் பிரான்க் மோரிசன், நம்முடைய இந்த வெளியீட்டின் தலைப்பைக்கொண்ட சுமார் 192 பக்க அனுமானங்களால் கோர்க்கப்பட்ட ஓர் புத்தகத்தை எழுதினார். 1930 தொடக்கம் 1975 காலப்பகுதியில் சுமார் 11 பதிப்புகளையும் தாண்டிய அந்த நூலில் “கல்லறைக் கல்லை புரட்டியது யார்” என்ற வினாவுக்கு பதிலளிப்பதில் தோல்வியையே கண்டார். (Faber and Faber, London).தன்னுடைய நூலின் 89ம் பக்கத்தில் “எனவே, காலியாய் இருந்த கல்லறை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நாங்கள் விடப்பட்டிருக்கிறோம்” என்று தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பில் ஆறு அனுமானங்களைக் கொண்டு தன்னுடைய நூலை தொடர்கிறார். அவற்றுள் முதன்மையாக, “ஆர்மத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு எனும் சீடர் இரகசியமாக இயேசுவின் உடலை எடுத்து பிறிதொரு மிக பொருத்தமான ஓய்விடத்திற்கு மாற்றியிருக்க கூடும்” என்று தனது நூலில் பதிவு செய்கிறார் பிரான்க் மோரிசன்.யோசேப்பு “சில பிரத்தியேக காரணங்களுக்காக இயேசுவின் உடலை இடம் பெயர்த்திருக்க கூடும்.!" என அறிவிக்கிறார் !

புனித பைபிள் பிரகாரம், வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையன்று, மகதலேனா மரியாள் இயேசுவுடைய கல்லறைக்குச் சென்றார் என்று யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் பதிவு செய்திருக்கிறார்:

"வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து…" (யோவான் 20:1)
இந்த இடத்திலிருந்து பரிசீலனையை ஆரம்பிக்கலாம்.சிந்தனையை தூண்டக்கூடிய சில வினாக்களை தொடுப்பதனூடாக பல வருட காலமாக இருக்கும் மிகப் பிரதானமான சர்ச்சைக்கு விடை காண முடியும் !

கேள்வி 1
₹₹₹₹₹₹:
மகதலேனா மரியாள் ஏன் இயேசுவினுடைய கல்லறைக்குச் செல்ல வேண்டும்?
பதில்:
₹₹₹₹
சுவிசேஷம் எழுதிய ஆசிரியர்கள் “இயேசுவுக்கு அபிஷேகம் செய்ய (To Anoint)” அல்லது சுகந்தவர்க்கமிடும்படி (வாசனைப்பொருட்களைக் கொண்டு உடலில் பூசுவதற்கு) மரியாள் அங்கு சென்றார் என குறிப்பிடுகின்றனர். அடக்கம் செய்யப்பட்ட உடலில் எவ்வாறு அபிஷேகம் செய்யலாம் என்ற சந்தேகம் வருவதை இவ்விடத்தில் யாராலும் மறுக்க இயலாது. எனவே இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை அறிந்து கொண்டால் விளக்கம் தானாக புரியும்.

அபிஷேகம் செய்தல் (To Anoint) அல்லது சுகந்த வர்க்கமிடுதல் என்று தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் “MASAHA” என்ற ஹீப்ரு வார்த்தை உள்ளது – தடவுதல், தேய்த்தல், அல்லது உருவுதல் என்று இச்சொல்லை மொழிபெயர்க்கலாம். இதுவே அரபியிலும் பயன்படுத்தப்படுகிறது
இவ்வாறு பௌதீக ரீதியாக அபிஷேகம் செய்தல், தடவுதல், தேய்த்தல், அல்லது MASSAGE செய்தல் என்று பொருள்படும் சொல் மரணித்து அடக்கம் செய்யப்பட்டிருக்கும் (?) உடல் தொடர்பில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கும்?
சிலுவையில் மரித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் (?) இயேசுவின் உடலை “தடவி அபிஷேகம் செய்ய அல்லது சுகந்தவர்க்கமிட” மகதலேனா மரியாள் அங்கு சென்றிருக்கிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

கேள்வி 2:
₹₹₹₹₹₹₹
யூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்த வர்க்கமிடுவார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 3:
₹₹₹₹₹₹₹
முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்தவர்க்கமிடுவார்களா?
பதில்: இல்லை.

கேள்வி 4:
₹₹₹₹₹₹₹
கிறித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்தவர்க்கமிடுவார்களா?

பதில்: இல்லை.இல்லை! இல்லை! இல்லை ! என்பதே அனைத்து மார்க்கத்தாரிடமும் இருந்து கிடைக்கும் பதில்.

இங்கு நாம் ஒரு பொதுவான விடயத்தை கவனிக்க வேண்டும். அதாவது ஒரு மனிதன் மரணித்து மூன்று மணித் தியாலங்களில் உடல் கலங்களில் இரசாயன மாற்றம் நிகழ ஆரம்பித்துவிடும். உடற்கலங்கள் பிரிந்து வேறாக்கப்பட்டு, உடலில் விறைப்புத் தன்மை அதிகரிக்கும் நிலை உருவாகும்.மேலும், மூன்று நாட்களில் உடற்பாகங்கள் அழுகும் நிலையை அடைய துவங்கும். இவ்வாறான நிலையில் உள்ள உடலை எம்மால் தடவி அபிஷேகம் செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முற்பட்டால் உடல் துண்டு துண்டாகி உடையக்கூடிய நிலையில்தான் இருக்கும் அல்லவா?

கேள்வி 5:
₹₹₹₹₹₹₹
மூன்று நாட்கள் கழிந்து அழுகும் நிலையை அடைந்த உடலை சுகந்தவர்க்கமிடும் நோக்குடன் மகதலேனா மரியாள் அங்கு சென்றிருப்பார் என்பது அர்த்தமுள்ள வாதமாக இருக்குமா?

பதில்: மரித்த உடலுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்தவர்க்கமிட்டு அபிஷேகம் செய்தல் என்பது எவ்வித அர்த்தமுமில்லாத வாதமாகத்தான் இருக்கும். ஆனால், உயிருடன் உள்ள ஒருவருக்கு வாசனைத்திரவியங்கள், அல்லது மருந்துப் பொருட்கள் மூலம் சுகந்த வர்க்கமிட சென்றிருப்பார் என்றால்தான் இவ்விடத்தில் அர்த்தமுள்ள ஒரு வாதமாக இருக்கும். மேலும், இயேசுவை அடையாளம் கண்ட பின்னர் மரியாள் வெளிப்படுத்தும் பாவனைகளைக் கொண்டும் இதை நாம் அறிந்துகொள்ளலாம். சிலுவையில் இருந்து அகற்றப்பட்ட உடலில் உயிர் இருந்ததை மரியாள் அறிந்திருக்கிறார். இயேசுவுக்கு இறுதிச்சடங்கு (?) செய்யப்பட்ட நேரத்தில் இயேசுவின் சீடர்களில் அங்கிருந்த ஒரேயொரு பெண்மணி இவர்தான். மற்றைய இருவரும் இயேசுவின் அந்தரங்க சீடர்களான யோசேப்பும், நிக்கொதேமுவும் ஆவார்கள். சுவிசேஷம் எழுதியவர்கள் வேண்டுமென்றே நிக்கொதேமு எனும் சீடர் தொடர்பான தகவல்களை மறைத்துள்ளார்கள். இயேசுவின் மீது மிக உயர்ந்த பற்றும், பாசமும் நிறைந்த இந்த தியாகியினைப் பற்றி பிரதான சுவிசேஷ ஆசிரியர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் அறியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவருடைய பெயர் கூட இந்த மூன்று சுவிசேஷங்களிலும் இடம்பெறவில்லை. திட்டமிட்டுத் தான் இந்த சீடருடைய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது என்று உலகின் மிகச் சிறந்த பைபிள் ஆசிரியர்களில் ஒருவரான Dr. Hugh S Schofield என்பவர் கூறுகிறார்.

இயேசுவின் அந்தரங்க சீடரான இவரைப்பற்றி உள்ள குறிப்புக்கள் பவுல் உருவாக்கிய கிறித்தவத்துக்கு எதிராக இருந்திருக்கும் போல…

சரி, மகதலேனா மரியாள் கல்லறைக்குச் சென்றபோது கல்லறையின் வாசற்கல் ஏற்கனவே உருட்டப்பட்டு இருப்பதையும், இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த துணி சுருட்டப்பட்டு கல்லறையின் (மலைக்குகையில் அமைந்த கல்லறை) சுவர் முனையில் இருப்பதையும் கண்டார். இந்தவேளையில் நமது அடுத்த கேள்வி எழுகிறது!

கேள்வி 06:
₹₹₹₹₹₹₹₹
கல்லறையின் வாசற்கல் ஏன் அகற்றப்பட்டிருந்தது?
இயேசுவின் உடலைச்சுற்றியிருந்த துணி சுருட்டப்பட்ட நிலையில் ஏன் இருக்க வேண்டும்?


பதில்: இரத்தமும் சதையும் உள்ள ஓர் பௌதீக உடலுக்குத் தான் குகையினை விட்டு வெளியேறுவதற்கு வாசற்கல் தடையாக அமையும். மேலும், துணியால் சுத்தப்பட்ட நிலையில் இருக்கும் போது நடமாடுவது அசாத்தியமாக இருக்கும். உயிர்த்தெழுந்த ஒருவருக்கு கல்லறையின் வாசலில் இருந்த கல்லை அகற்ற வேண்டிய தேவையுமில்லை, தன்னைச் சுற்றியிருந்த துணியை அகற்ற வேண்டிய தேவையுமில்லை. உயிர்த்தெழுந்தவர் நடமாடுவதற்கு எந்தவொரு பொருளும் தடையாக அமையாது; அது கல்லானாலும் சரி, இரும்புக்கூடானாலும் சரி !

எனவே கல்லறையில் வைக்கப்பட்ட மரித்த உடல் உயிர்த்தெழுந்து சென்றிருக்குமென்றால் இவ்வாறு கல்லறையின் வாசற்கல் அகற்றப்பட்டிருக்காது. மேலும் உடலை சுற்றியிருந்த துணியும் அகற்றப்பட்டிருக்காது.கல்லறையிலே இயேசுவைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த மரியாளை இயேசு பார்த்துக் கொண்டிருக்கிறார். பரலோகத்திலிருந்தல்ல… பூலோகத்திலிருந்து… !

மரியாளுக்கு மிக மிக அருகாமையில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இயேசுவின் அந்தரங்க சீடரான யோசேப்பு என்பவரால் இயேசுவுக்கென்று பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்லறையின் அருகாமையில் இருந்து மகதலேனாவை கண்காணிக்கிறார். இந்தக் கல்லறையும் இதனைச் சுற்றியிருந்த விவசாயத் தோட்டமும் யோசேப்புக்கு சொந்தமானதாகும். அவர் ஒரு வசதி படைத்தவராக இருந்த காரணத்தினால், போதுமான இடவசதியுள்ள ஓர் கல்லறையினை தன்னுடைய ஆஸ்தான போதகருக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கல்லறை தொடர்பில் பிரபல அறிஞர் Jim Bishop விளக்கும்போது, அந்தக் கல்லறை 5 அடி அகலத்தையும், 7 அடி நீளத்தையும், 15 அடி ஆழத்தையும் கொண்டிருந்தது என்று கூறுகிறார் (மலைக் குகையில் அமைக்கப்பட்டது என்பதைக் கருத்திற் கொள்க).நகருக்கு வெளியே 5 மைல்களுக்கு அப்பால் உள்ள தனது தோட்டத்தை கவனிப்பாரற்று யாரும் விடமாட்டார்கள். பராமரிப்பாளர்களையும், தோட்டக்காரர்களையும், காவலர்களையும் நிச்சயமாக பணித்திருக்க வேண்டும். இவ்வாறு தன்னுடைய செல்வாக்கு மிக்க சீடரின் தோட்டத்திலிருந்த குகையில்தான் இயேசுவுக்கான கல்லறை ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே மகதலேனா விசாரித்துக் கொண்டிருக்கையில் அவளிடமிருந்து ஏழு பிசாசுகளை இயேசு துரத்துகிறார். நன்றாக சிந்தியுங்கள், இயேசு எந்த வகையிலும் தனது பணியிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. கடவுளின் நாமத்தைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தியது அவர் இன்னும் மரணிக்கவுமில்லை, உயிர்த்தெழுந்து ஆவியாகி விடவுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறதல்லவா?

சிலுவைச் சம்பவத்துக்கு முன்னர் எவ்வாறு தன்னுடைய பணியினைச் செய்தாரோ அவ்வாறே சிலுவைச் சம்பவத்திற்கு பிறகும் நடந்துகொள்கிறார்.அந்த சந்தர்ப்பத்தில் அழுதுகொண்டிருந்த மரியாளிடம் இயேசு வந்து;

ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார்.
(யோவான் 20:15)

கேள்வி-07
₹₹₹₹₹₹₹₹
அவருக்கு தெரியாதா ஏன் அழுகிறாள் என்று? தன்னைக் குறித்துதான் அழுதுகொண்டிருக்கிறாள் என்பது அறிந்த பின்னரும் ஏன் இவ்வாறு ஓர் வேடிக்கையான கேள்வியை கேட்க வேண்டும்?
பதில்: இயேசு ஒன்றும் வேடிக்கையான கேள்வியைக் கேட்கவில்லை. மகதலேனா மரியாள் ஏன் அங்கு வந்தாள், யாரை தேடுகிறாள், எதற்காக அழுகிறாள் என அனைத்தையும் இயேசு அறிந்திருந்தார். அனைத்தையும் அறிந்திருந்தும் இவ்வாறு ஓர் அர்த்தமற்ற கேள்வியை இயேசு கேட்டிருப்பாரா?

பதில்;- இல்லை, அர்த்தமற்ற கேள்வியல்ல. உண்மையில், இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த நிலையிலும் தன்னுடைய சீடரிடத்தில் நகைச்சுவையாகவே யாரைத் தேடுகிறாய் என்று கேட்டிருக்கிறார். தன்னை அடையாளம் காணமுடியாமல் ஏமாந்துபோய் இருந்த மரியாளிடமே

ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார்.
(யோவான் 20:15)

அதற்கு மரியாள் இவ்வாறு பதிலளிக்கிறாள்.அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி:

ஐயா, நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்.
(யோவான் 20:15)
கேள்வி 08:
₹₹₹₹₹₹₹₹
இயேசுவை ஏன் தோட்டக்காரர் என்று எண்ண வேண்டும்? உயிர்த்தெழுந்தவர்கள் தோட்டக்காரர்களைப் போல் இருப்பார்களா???நாம் அனைவரும் உயிர்த்தெழும் நாளைப்பற்றி சிறிது கற்பனை செய்துபாருங்கள். அனைவரும் உயிர்த்தெழுந்த பின்னர் தோட்டக்காரர்களைப்போல் உருமாறியிருப்போம் என்றால் எவ்வாறு இருக்கும்??? எல்லா ஆண்களும் தோட்டக்காரர் உருவில் இருந்தால் ஒரு மனைவி தன்னுடைய கணவனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வாள்? தன்னுடைய மகனும் தோட்டக்காரனைப்போல் இருந்தால்? மருமகனும் தோட்டக்காரனைப்போல் இருந்தால்? தகப்பனாரும் தோட்டக்காரரைப்போல் இருந்தால்? கணவனும் தோட்டக்காரரைப்போல் இருந்தால்? எவ்வாறு நிலமை இருக்கும்??? குழப்பத்தின்மேல் குழப்பம் அல்லவா பிறக்கும்?இவ்வாறு தோட்டக்காரர் உருவில் அனைவரும் மாறியிருப்பார்கள் என்ற வாதம் அறிவுபூர்வமானதாக இருக்குமா? இல்லை ஒருபோதும் இல்லை. மரித்து உயிர்த்தெழுந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். எடுத்த எடுப்பிலே அடையாளம் காணக்கூடிய நிலையில்தான் நாம் அனைவரும் இருப்போம். எந்த வயதில், எந்த சந்தர்ப்பத்தில் மரித்தாலும் உயிர்த்தெழுதலின்போது அடையாளம் காணக்கூடியவர்களாகவே இருப்போம். அவ்வாறென்றால் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும் இயேசு மட்டும் ஏன் தோட்டக்காரரைப் போல் இருக்க வேண்டும்?

பதில்: ஏனேன்றால், இயேசு தோட்டக்காரரைப் போல் வேடமிட்டிருந்தார்.

கேள்வி 09:
₹₹₹₹₹₹₹₹
ஏன் தோட்டக்காரனைப்போல் வேடமிட்டிருக்க வேண்டும்?

பதில்: ஏனெனில், தன்னைக் கொல்லத் துடிக்கும் யூதர்களுக்கு அஞ்சிய காரணத்தினால் மாறுவேடமிட்டிருந்தார்.

கேள்வி 10:
₹₹₹₹₹₹₹₹
யூதர்களுக்கு ஏன் அஞ்ச வேண்டும்?

பதில்: ஏனெனில் அவர் மரிக்கவுமில்லை; உயிர்த்தெழவுமில்லை. அவர் மரித்து உயிர்த்தெழுந்திருந்தால், யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஏன்? ஏனெனில், உயிர்த்தெழுந்த ஒருவர் இன்னொருமுறை மரணிக்கமாட்டார். இதை யார் சொல்கிறார்? பைபிளே சொல்கிறது !

"அன்றியும், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத் தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே" (எபிரேயர் 9:27)

உயிர்த்தெழுந்தவர் இன்னொருமுறை மரணிக்கமாட்டார் என்பதை இயேசுவே மிகத் தெளிவாக கூறியதை இங்கு பதிவு செய்வது இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றைய தினம் அவரிடத்தில் மீண்டும் ஒரு குதர்க்கமான கேள்வியோடு வந்து; "ஏழு பேரை திருமணம் செய்து மரணித்த ஒரு பெண் உயிர்த்தெழும் நாளில் அவ்வேழு பேரில் யாருக்கு மனைவியாயிருப்பாள்?" என்று கேட்டார்கள்.
(பார்க்க: மத்தேயு 22: 23 – 28)

தன்னைச் சோதிக்க வந்தவர்களிடம் சுருக்கமான ஓர் பதிலைக் கூறிவிட்டு அவர்களை புறக்கணித்திருக்க முடியுமென்றாலும், இயேசு அவ்வாறல்லாமல், உயிர்த்தெழுந்தவர்கள் தொடர்பில் அழகான தெளிவான பதிலை வழங்குகிறார். "மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள், அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளான படியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்." (லூக்கா 20: 35, )
"அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் இறவா நிலையை அடைந்துவிடுவார்கள். இரண்டாவது தடவை மரணம் அவர்களை அணுகாது. பசியோ அல்லது தாகமோ இருக்காது. சிறிய சோம்பலோ அல்லது எந்தவொரு உபாதையோ இருக்காது. உயிர்த்தெழுந்தவர்கள் தேவதூதர்களுக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள்.உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்" 
(லூக்கா 20: 36)
உயிர்த்தெழுந்த ஒருவர் மரணத்தை குறித்து அஞ்ச வேண்டிய அவசியமோ அல்லது மறைந்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை. இயேசு உயிர்த்தெழுந்திருந்தால் அவர் தேவதூதருக்கு ஒப்பானவராக இருந்திருப்பார். மரணம் அவரை அணுகாது. அப்படியிருக்க அவர் ஏன் யூதர்களுக்கு அஞ்சி மாறுவேடம் அணிந்திருக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

சரி, மரியாள் அங்கு உயிருடன் உள்ள இயேசுவை தேடி வந்தாளா அல்லது இயேசுவின் பிரேதத்தை தேடி வந்தாளா அல்லது மரித்து உயிர்த்தெழுந்த ஆவியை தேடி வந்தாளா?

உயிர்த்தெழுந்த ஆவியையோ அல்லது பிரேதத்தையோ தேடி வரவில்லை என்பதை தோட்டக்காரரென்று எண்ணி இயேசுவிடம் மரியாள் கேட்கும் கேள்வியிலிருந்து நாம் அறியலாம். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: "ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்." 
(யோவான் 20:15)

கவனமாக நோக்குங்கள், மரியாள் தான் தேடிக்கொண்டிருப்பது அவரை என்று கூறுகிறாள், மாறாக பிரேதத்தை தேடிக்கொண்டிருந்தால் அதை எங்கு வைத்தீர்கள் என்று தான் கேட்டிருக்க வேண்டும். மேலும், அவரை நீங்கள் வைத்த இடத்தை சொல்லுங்கள் என்று கூறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.!
ஏனென்றால், இயேசுவின் பிரேதத்தை குறித்து கேட்டிருந்தால் அதை எங்கு புதைத்தீர்கள் அல்லது அடக்கம் செய்தீர்கள் அல்லது குறைந்த பட்சம் அதை எங்குவைத்தீர்கள் என்றாவது கேட்டிருக்க வேண்டும்...!

.தொடர்கிறது சம்பாசனை…

"நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன். என்று மரியாள் கேட்கிறாள்." (யோவான்20:15)

கேள்வி 11:
₹₹₹₹₹₹₹₹
அழுகும் நிலையிலிருக்கும் பிரேதத்தைக் கொண்டு செல்ல கேட்பதன் நோக்கம் என்ன?

பதில்:தன்னுடைய கட்டிலுக்கடியில் வைப்பதற்காக இருக்குமா? இல்லை அது அபத்தமாகும். அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக இருக்குமா?
இல்லை அது அர்த்தமற்றதாகும். ஒருவேளை அடக்கம் செய்வதற்காக இருக்குமா ? அவ்வாறென்றால் கல்லறையினை யார் வெட்டுவார்!!! இல்லை இல்லை. உண்மையில் உயிரோடு உள்ள இயேசுவை அழைத்துக்கொண்டு செல்வதுதான் மரியாளின் நோக்கமாகும்.

கேள்வி 12:
₹₹₹₹₹₹₹₹
தன்னந்தனியாக அவளால் எப்படி இயேசுவின் உடலை தூக்கிச் செல்ல முடியும்? பதில்: இறந்து அழுகிக்கொண்டிருக்கும் உடலைப்பற்றி மரியாள் சிந்திக்கவில்லை. உயிரோடிருக்கும் தன்னுடைய போதகரையே தேடுகிறாள். மரியாளொன்றும் கதைகளில் வரும் அசகாய பலம் படைத்த பெண் இல்லை, சுமார் 160 இறாத்தல் எடையுள்ள ஒரு மனிதரின் உடலையும் இன்னும் 100 இறாத்தல் கொண்ட வெள்ளைப்போளமும் கரிய போளமும் சேர்த்து (யோவான்19:39) சுமார் 260 இறாத்தல் எடைகொண்ட பொதியை சுமக்கும் அளவுக்கு ஓர் விசித்திர பெண்ணுமில்லை. ஒரு வாதத்திற்கு அவளால் சுமக்க முடியும் என்றாலும், அந்த உடலை தனியாக அடக்கம் பண்ணுவது எவ்வாறு அவளால் முடியும்? எங்காவது ஓர் இடத்தில் புகுத்தி வைக்க வேண்டுமானால் அது முடியும். என்றாலும், அடக்கம் செய்வதும் ஓர் குவியலில் புகுத்தி வைப்பதும் எந்த வகையிலும் தொடர்பில்லாத விடயங்களாகும்.கையோடு கைசேர்த்து அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைக்கவும், நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கக்கூடிய ஓர் சூழலை ஏற்படுத்தவும் தான் உயிருடனுள்ள இயேசுவை மரியாள் தேடுகிறாள்.தான் பேசிக் கொண்டிருப்பது தன்னுடைய போதகர் இயேசுதான் என்று மரியாளுக்கு ஒரு சிறிதளவும் சந்தேகம் வரவேயில்லை, தோட்டக்காரர் வேடமிட்டிருந்ததை

உண்மையில் இனங்கண்டுகொள்ளாமல் போய்விட்டாள். மரியாளின் நிலையை எண்ணி, இயேசு உள்ளுக்குள் புன்னகைத்திருக்க வேண்டும். நீண்ட நேரம் அவராலும் உண்மையினை அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அவளை நோக்கி மரியாளே! என்று அழைத்தார்.

ஒரே வார்த்தை. என்றாலும், அந்த ஒரு வார்த்தை அவளுக்கு போதுமாக இருந்தது.அவர்களுக்கிடையில் பரிமாறப்பட்ட இத்தனை வார்த்தைகளாலும் உணர்த்த முடியாததை இந்த ஒரு வார்த்தை உணர்த்தியது. ஒவ்வொருவருக்கும் தங்களின் நேசத்துக்குரியவரை அல்லது நெருக்கமானவரை அழைக்கும் தனியான தொனி இருக்கும். அந்த அழைப்பிலேயே அறிந்து கொள்வார்கள் தன்னை யார் அழைத்ததென்று. வெறுமனே ஒரு பெயரை அவர் உச்சரிக்கவில்லை. இயேசுதான் தன்னை அழைக்கிறார் என்று மரியாள் அடையாளம் காணவும் உடனே அதனை வெளிப்படுத்தவும் கூடிய வகையில்;-
ரபூனி (போதகரே) என்று மரியாளை அழைக்க வைத்தது இயேசுவின் வார்த்தையிலிருந்த தொனியாகும்.மரியாளின் வருகை குறித்து சிந்திப்பதற்கு இது மிகப் பொருத்தமான தருணம் ஆகும்.

தான் தேடி வந்தது ஆவியையோ அல்லது இறந்த உடலையோ அல்ல. மாறாக உயிருடன் உள்ள இயேசுவைத்தான் என்பது சந்தேகமில்லாமல் புலப்படும் தருணம் இதுதான். !

தோட்டக்காரர் வேடத்தில் இருந்தது இயேசு தான் என்பதை உணர்ந்த மரியாள் அவரை ஆவியென்று அஞ்சாமல் தன்னுடைய போதகர் தான் என்று நம்பி அவரை நோக்கிச் சென்று அவரை தொடுவதற்கு முயல்கிறாள். தன்னுடைய போதகருக்கு மரியாதை செய்ய நாடுகிறாள்.இவ்வளவு காலமும் ரத்தமும் சதையுமாக இருந்த தன்னுடைய போதகர் இன்று மரித்து உயிர்த்தெழுந்து ஆவியாய் நிற்கிறாரே என்பதை வெளிப்படுத்தும் எந்தவொரு அசைவும் அவளிடம் இல்லை. மரியாள் தேடியதும் உயிருடன் உள்ள மனித இயேசுவைத் தான். அவள் கண்டு கொண்டதும் உயிருடன் உள்ள மனித இயேசுவைத் தான். அதனால்தான் எந்த சலனமுமில்லாமல் போதகரே என்று அழைக்க முடிந்தது.இயேசுவை நோக்கிச் சென்ற மரியாளிடம் இயேசு…..

"என்னைத் தொடாதே, என்றார்." (யோவான் 20:17).
கேள்வி 13:
₹₹₹₹₹₹₹₹

அப்படியா? ஏன் தொடக்கூடாது..? தொட்டால் மின்சாரம் தாக்கும் நிலையிலா இருந்தார் இயேசுநாதர்?

பதில்: இல்லை. என்னைத் தொட வேண்டாம், தொட்டால் அது வலியை உண்டாக்கும். பௌதீக ரீதியாக தான் காயப்பட்டதாகவோ அல்லது வேதனைக்குள்ளாகியதாகவோ இயேசு வெளிப்படுத்தாவிட்டாலும், அன்போடும் அக்கறையோடும் அவரை தொடுவது கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ”என்னைத்தொடாதே” என்று இயேசு கூறியமைக்கு இன்னும் ஏதாவது காரணம் இருக்க முடியுமா? இயேசுவே தொடர்கிறார்…!

"நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை" 
(யோவான் 20:17)
கேள்வி 14:
₹₹₹₹₹₹₹
மரியாள் என்ன பார்வையற்றவளா ? ? தான் இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருந்த மனிதனை கண்ணால் பார்க்காமலா இருந்தாள் மகதலேனா? தன்னோடு பேசிக்கொண்டிருந்த மனிதர் இன்னும் மேலே ஏறிப் போகவில்லை. தனக்கு முன்தான் நிற்கிறார் என்பதை உணராமலா இருந்தாள் இந்த பெண் சிஷ்யை ?

பூமியிலே நிற்கும் ஒரு மனிதன் தான் இன்னும் ஏறிப்போகவில்லை என்று சொல்வது நேரடியாக புரிந்து கொள்ளும் வார்த்தைகளா? இவ்வாறு அர்த்தமற்று பேசியிருப்பாரா இயேசுகிறிஸ்து?

பதில்: பல்வேறுபட்ட இந்த வார்த்தைகள் மூலம் இயேசு கூறுவதெல்லாம் “தான் இன்னும் மரிக்கவுமில்லை; உயிர்த்தெழவுமில்லை” என்பதுதான்

அல்குர்ஆன் வருமுன்பே இந்த உண்மையை, இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் தனது சுவிசேஷத்தில் எழுதி விட்டார் ! இன்று பவுல் பரப்பிய ஒரு பொய்யின் மீதுதான் கிருஸ்த்துவம் நிலை நிறுத்தப் பட்டுள்ளது !


நன்றி: 
Tink Fair

Wednesday, 13 January 2016

அந்த நாள், மீனாட்சிபுரம் -ஆனந்த விகடன்





அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!...

திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!

அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!

இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!



மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…

”நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு. ‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க. நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.

”நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
—————————

மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.

மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.

”அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, ‘நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை ‘யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க ‘கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”

தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.

”நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்… ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, ‘நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. ‘உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், ‘ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!” என்கிறார் ஆறுமுகச் சாமி.

மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

‘பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி :ஆனந்த விகடன்

Friday, 8 January 2016

Tagore Wrote Indian National Anthem To Please The British -MARKANDEY KATJU


BY: MARKANDEY KATJU

There is a controversy as to whether the Indian national anthem "Jana Gana Mana" was written by Rabindra Nath Tagore in praise of God, or as sycophancy in praise of the British King George the fifth.
In my opinion the evidence is strongly in favour of the second view.
To explain, let me first quote the Engish translation of the song:
  • "Victory to thee,
  • O ruler of the minds of the people,
  • O Dispenser of India's destiny.
  • Thy name rouses the hearts of Punjab, Sindh,Gujarat and Maratha,Of the Dravida, Odisha and Bengal;
  • It echoes in the hills of the Vindhyas and Himalayas,
  • mingles in the music of Yamuna and Ganges and ischanted by the waves of the Indian Sea.
  • We get up with your blessed name on our lips,
  • We pray for your auspicious blessings,
  • Thou dispenser of India's destiny.
  • Victory, victory, victory to thee."
Now a few things must be noted about this song:
1.The song was composed at precisely the time of the visit of the British King George the fifth and Queen Mary in December, 1911.
2.The poem does not indicate any love for the motherland.
3. The "Adhinayak" (Lord or Ruler) is being hailed. Who was the ruler of India in 1911? It was the British, headed by their King-Emperor.
4. Who was the "Bharat Bhagya Vidhata" (dispenser of India's destiny) at that time ? It was none but the British, since they were ruling India in 1911.
5.The song was sung for the first time in India on the second day of the Calcutta Conference of the Congress party in December 1911. This conference was held specially to give a loyal welcome to King George the fifth, and to thank him for annulling the Partition of Bengal in 1905.
6. The agenda of the second day of the Calcutta Conference, in which the song was sung, was specially reserved for giving a loyal welcome to George the fifth, and a resolution was adopted unanimously that day welcoming and expressing loyalty to the emperor and empress.
7. It was only as late as in 1937, when he wanted to show himself as a patriot, that Tagore denied that he had written the song to honour the British king. The above facts almost conclusively prove that "Jana Gana Mana" was composed and sung as an act of sycophancy to the British king.
And we have proudly adopted this song as our national anthem?
Jai ho!
(Article first appeared on the writer's blog.)


Wednesday, 6 January 2016

முகம்மது பின் துக்ளக் பற்றின தகவல்கள்





டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார்.


1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் அரசாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை என்பதாலும் அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது.

அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.

உண்மையில் துக்ளக் கோமாளி அல்ல பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டான்லீலேன் பூல் அவர்களது வார்த்தைகளில் அவரது எண்ணங்களும் செயல்களும் முன்னோடித் தன்மை கொண்டவை. அவர் புத்திக் கூர்மை படைத்தவர் மற்றும் சிந்தனையாளர்.

அவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் அவர் வல்லுநராகத் திகழ்ந்தார்.

இந்தியக் கல்வியில் இலத்தினாகக் கருதப்பட்ட பாரசீக மொழியில் அவர் கவிதை எழுதி வந்தார்.

அவரது உரைநடையும் ஒப்பற்றது. மேடைப்பேச்சிலும் வல்லவர். 

தத்துவஞானி - குறிப்பாக கிரேக்க தத்துவ ஞானத்தை நன்கு கற்றிருந்தார். கூடவே தர்க்க இயலும் (லாஜிக்) கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஞானம் உள்ளவர்.

சமகாலத்துப் பேரறிஞர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சப்பட்டனர். 
அக்காலத்தில் பிரபலமாகி இருந்த கையெழுத்துக் (குர்ஆன் போன்ற நூல்களை அழகிய எழுத்துக்களில் நகல் எடுப்பது) கலையிலும் வல்லவர்.

அவரது அழகுணர்வு அவரது முத்திரையுடன் வெளியிடப்பட்ட நாணயங்களின் வாயிலாகப் புலனாகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் அக்காலத்திய கலாசாரத்தின் சிறப்பு அம்சங்களை அவரிடம் காணமுடிந்தது. அவரது மேதா விலாசத்துடன் அவரது நினைவாற்றலும் போற்றக்கூடியதே. 

அதே போல் அவரது நெஞ்சுறுதி - தளராத அயராத உறுதிபடைத்த உள்ளம் அவருக்கு இருந்தது.

தலைநகரை மாற்றியது, நாணயப் புழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தது - எல்லாமே நல்ல திட்டங்கள் தான்.

ஆனால் மக்கள் அவரது திட்டங்களை ஏற்கும் நிலையில் இருந்தார்களா என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. மாற்றங்களை மக்கள் எளிதாக ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்குப் புரியாமல் போய்விட்டது.

மத்திய கால இந்திய வரலாற்றில் ஏனைய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய விஷயத்தில் அவர் ஒரு முன்னோடி. அவரது ஆப்பிரிக்க நாட்டின் (மொராக்கோ) தூதரான பிரசித்தி பெற்ற இபன்பட்டூட்டா துக்ளக்கின் சபையை அலங்கரித்தார்.

தலைநகரை மாற்றியது பற்றிச் சில வார்த்தைகள் துக்ளக்கின் சாம்ராஜ்யம் வட திசையில் இமயமலையிலிருந்து தென் திசையில் மதுரை வரையிலும், மேற்குத் திசையில் பெஷாவரிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் பரவி இருந்தது.

ரயில்வேக்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலம் அது. மாட்டு வண்டிகளும் குதிரைகளும்தான் பயணச் சாதனங்கள். 
அத்தகைய சூழலில் புவியியல் அடிப்படையில் நாட்டுக்கு மையமான ஒரு இடத்தைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது புத்திக் கூர்மைக்கும் ராஜதந்திரத்திற்கும் ஒரு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும்.

நாம் முன்பே குறிப்பிட்டபடி மக்கள் அதை ஏற்கவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் மற்றொரு காரணம். அதனால் முயற்சி தோல்வியுற்றது.

இதில் கோமாளித்தனம் என்ன இருக்கிறது?

நன்றி: கீற்று.

மேலதிக வாசிப்பிற்கு..

ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தியது யார்?



ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர் ஜைனுல் ஆபிதீன் ஹஸன்!


இதுவரை எல்லோரும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற துடிப்பான முழக்கத்திற்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என நம்பியிருந்தார்கள். ஆனால், நரேந்திர லூதர் எழுதிய ‘LEGENDOTES OF HYDERABAD’ என்ற நூலில் இன்னொரு வரலாறு கூறப்பட்டுள்ளது.

நேதாஜியின் செயலாளரான ஜைனுல் ஆபிதீன் ஹஸன் என்பவர்தாம் ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் தெரிவித்தார் என்பதாகும்.

லூதரின் இந்நூலில் நேதாஜியுடனான பேட்டி, ஆவண ரீதியான ஆதாரங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து ’ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கம் எவ்வாறு உருவானது என்று விவரிக்கப்படுகிறது.

ஜைனுல் ஆபிதீன் ஹஸன், ஜெர்மனியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது நேதாஜிக்கு அறிமுகமானார்.

நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தபோது ஹஸனிடம், ராணுவத்தை சந்திக்கும்போது முழக்கமிட ஒரு வார்த்தை தேவை என்று நேதாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போழுது ஹஸன் கூறிய வார்த்தைதான் ‘ஜெய் ஹிந்த்’.

இவ்வாறு நாட்டின் அதிகாரப்பூர்வ முழக்கமாக ’ஜெய் ஹிந்த்’ மாறியது என்று இந்நூல் கூறுகிறது. 

- By Abdul Gafoor February 25, 2014 08:28

NEW DELHI: Many believe that Subhash Chandra Bose coined the slogan 'Jai Hind' but a book on legends and anecdotes of Hyderabad says it was first used by a man from that city who gave up his engineering studies in Germany to become Netaji's secretary and interpreter.

In his book " Lengendotes of Hyderabad", former civil servant Narendra Luther presents a number of interesting articles, based on documentary evidence, interviews and personal experiences, on the city that is much celebrated for its romantic origin and composite culture.

One interesting titbit is on the origin of the slogan 'Jai Hind'. According to the author, it was coined by Zain-ul Abideen Hasan, son of a collector from Hyderabad, who went to Germany to study engineering.

During World War II, Netaji had escaped to Germany to canvass support for an armed struggle to liberate India, Luther says.
"He addressed meetings of Indian prisoners of war and other Indians exhorting them to join him in his struggle. Hasan met him and inspired by his patriotism and spirit of sacrifice, he told him that he would join him after finishing his studies.

"Netaji taunted him that if he was worried about small things like these, he could not take up big causes. Stung by that rebuke, Hasan gave up his studies and became Netaji's secretary and interpreter," the book, published by Niyogi, says.

Hasan became a major in the INA and participated in the march from Burma (now Myanmar) across the Indian frontier. The army reached Imphal. It was severely handicapped in supplies and armaments and so had to retreat, the author says.

"Netaji wanted to introduce an Indian form of greeting for his army, and for independent India. Various suggestions came. Hasan suggested 'Hello'. Netaji snubbed him. Then he suggested 'Jai Hind'. Netaji liked it and it became the official form of greeting in INA and the revolutionary Indians. Later it was adopted as the official slogan of the country," he says.

The book mentions about 70 legends, anecdotes and personal accounts beginning from the beautiful rocks of the Deccan plateau to Bhagamati, to the developments during the era of Nizams and beyond.

There is another interesting incident mentioned in the book that is related to late chief minister T Anjaiah. Luther says during a concert in the early 80s, Anjaiah mixed up the name of legendary table player Allah Rakha Khan and called him 'Allah-Ho-Akbar'. This faux pas led the audience break into loud laughter.

"Anjaiah looked perplexed and asked, 'Have I said anything wrong?' One of his aides whispered into his ear, that he had not taken the correct name of the table maestro. Thereupon Anjaiah said, 'Oh, does it matter? After all Allah Rakha and Allah-Ho-Akbar are not very different," says the author, adding this led to more peals of laughter.

Other stories mentioned in the book include the much-debated tale of romance that gave birth to Bhagnagar, Stalin's orders on the red revolt and a dog made to sit on a throne by Sultan Tana Shah in recognition of it raising an alarm spotting an intruder.


நன்றி: