Translate

Sunday 14 February 2016

கோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் -ராஜேஸ்வரி






அகில இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு 'எனக்குத் தெரிந்த இஸ்லாம்' என்கிற தலைப்பில் கேரளாவைச் சார்ந்த 'ஃபோரம் ஃபார் ஃபெய்த் அண்ட் ஃப்ராட்டர்னிடி' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய கட்டுரைப் பொட்டியில் மூன்றாவது பரிசை வென்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி. 

பேனா முனை பொல வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் சான்றிதழ், புத்தகங்கள் மற்றும் 25000 ரூபாய் ரொக்கமும் அடங்கிய பரிசு இது.

ராஜேஸ்வரிக்கு இயல்பிலேயே இஸ்லாம் மதத்தின் மீது ஈடுபாடு உண்டு. 

'நான் பிறந்தது: வளர்ந்தது மன்னார்குடி. அங்கு முஸ்லிம்கள் அதிகம். என்னோட சின்ன வயசுத் தோழிகள் எல்லோருமே முஸ்லிம் பெண்கள் தான். அவங்களோட பழக்க வழக்கங்கள் பலவும் என்னை ரொம்பவும் ஆச்சரியப்படுத்தியிருக்கு. பாட்டி சொல்லப் போற கதைக்கு காத்துக் கிடக்கிற பேரப் பிள்ளைங்க மாதிரி அவங்க மதத்தைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு நான் ஏங்கின நாட்கள் கூட உண்டு' என்று நிறுத்தியவர்,

'அப்படி இருந்த எனக்கு இந்தப் போட்டி என் ஆர்வங்களைப் பதிவு செய்றதக்கான வாய்ப்பா அமைஞ்சுது. ஒரு சிறு தவறும் நேர்ந்து விடக் கூடாதுங்கிற கவனத்தோட பல புத்தகங்களைப் படிச்சு நிறைய பேர் கிட்ட கேட்டு விசாரிச்சு, கட்டுரையை எழுதி அனுப்பி வெச்சேன்' என்றார் புன்னகையுடன்.

'ஏக இறைவன், சமத்துவம், சகோதரத்துவம், ஜாதி, இன பெதமின்மை என்று கோடி நன்மைகளை கூட்டித் தொகுத்துத் தருது இஸ்லாமியர்களின் வேத நூலான குர்ஆன். பெண்களுக்கு மேன்மையானதொரு இடம் கொடுத்திருக்கு இஸ்லாம்' என்று ராஜேஸ்வரி இஸ்லாம் பற்றி விவரித்துக் கொண்டே போகிறார். 

வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி......

நன்றி: அவள் விகடன்.

நன்றி :
https://www.facebook.com/photo.php?fbid=808814855913401&set=a.147814378680122.29325.100003546834175&type=3&theater

No comments:

Post a Comment