Translate

Tuesday 23 February 2016

ஹஜருல் அஸ்வத்தை [ கறுப்புக் கல்லை] சுற்றி வருவது மூட நம்பிக்கையில்லையா.?






Pravin Vinu இன் கேள்வி: 

கருங்கல்லை ஏன் சுத்துறீங்கன்னு கேட்டால்,  அது கருங்கல்லுதான்'ன்னு எனக்கே திருப்பி சொல்றீங்க.. அது கருங்கல்லுன்னு எனக்கு தெரியாதா..? அதை ஏன் சுத்துறீங்க..?
முகமது சுத்துனாரு அதனால சுத்துறோம்'ங்கிறீங்க.. இதுக்கு பேர்தான் மூடநம்பிக்கை என்று நாங்கள் சொல்கிறோம். 

---------------------------------------------------------
---------------------------------------------------------
பதில்: 

உண்மையில் மூடநம்பிக்கை என்பது என்ன.?

அனாமதேயமாக யாரோ, எவரோ செய்த எந்தவித அர்த்தமுமில்லாத விசயங்களை புனிதப் படுத்துவது.. புனிதமாக கருதப்படும் அவை மனிதனுக்கு நன்மையோ தீமையோ செய்து விடும் என்று கருதுவது.. ஆகியவை தான் மூட நம்பிக்கை..

கருங்கல்லை சுற்றுவது உள்பட உள்ள முஸ்லிம்களின் ஹஜ் கிரியைகள்.. முஹம்மது அவர்கள் செய்தார்கள்.. தன்னைப் பின்பற்றுபவர்களை செய்யச் சொன்னார்கள். பகுத்தறிவு மார்க்கத்தை தந்த நபிகளாரை தங்களுடைய ஆன்மீக வழிகாட்டியாக, தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டப் பிறகு, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்வது தான் நல்ல முஸ்லிம்களுக்கு அழகு..

தன்னுடைய நோயை தீர்ப்பார் என்று நம்பினால் மருத்துவர் சொல்வதையெல்லாம் அனுசரிப்பது தான் நல்ல நோயாளிக்கு அழகு.!

அப்படியானால் அந்த ஹஜ் கிரியைகள் எதற்காக..?

கடவுள்களை ஒன்று படுத்தினால் தான் மனிதன் ஒன்று பட முடியும் என்ற தலையாய கொள்கையை-தத்துவத்தை கொண்டிருக்கிற மார்க்கம் இஸ்லாம். அந்த இறை ஏகத்துவத்தை நிலை நாட்ட.. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மூடநம்பிக்கைகளை எல்லாம் அடித்து நொறுக்கியவர் இப்ராஹீம் அவர்கள். அந்த இப்ராஹீம் தனிமனிதராக இருந்து மக்களின் மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றையும் தன்னுடைய அயராத உழைப்பால், தளராத உறுதியால் போக்கி மக்களை சீர்திருத்தம் செய்தார்கள்.

அத்தகைய அவர்களை நினைவு கூறும் விதமாகத் தான் ஹஜ் கிரியைகள் யாவும் அமைந்திருக்கின்றன. இப்ராஹீம் அவர்களை பின்பற்றி முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறை ஏகத்துவத்திற்காக, மனித குல ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்ற மகத்தான சிந்தனை அங்கே தோற்றுவிக்கப் படுகிறது.

மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக நடைபெறும் உறுதியேற்பு நிகழ்ச்சிகள் எப்படி மூடநம்பிக்கை என்றாகும்.?

-பூமராங் 


[] [] []

No comments:

Post a Comment