Translate

Sunday 6 September 2015

இந்திய தேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்மணி..!


ஒரு நாட்டின் தேசிய கொடி என்பது குறிப்பிட்ட நாட்டின் தனித்தன்மையை-இறையாண்மையை-சுதந்திரத்தை பிரதிபலிக்கும் முக்கிய குறியீடாக-பிரதித்துவப் படுத்தும் புனித அடையாளமாக கருதப்படும். ஆரம்ப காலங்களில் யுத்தக் களங்களில் மாத்திரம் பயன்பட்டு வந்த இந்தக் கொடிகள், பின்பு ஒவ்வொரு நாட்டின் தேசிய சின்னங்களாக பரிணாமம் அடைந்தன.

தேசிய கொடியை அந்தந்த நாட்டு அறிவார்ந்தோர், தலைவர்கள் கூடி மிக கவனமாக ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த அடிப்படையில் பல வகை ஆலோசனைகள், மாற்றங்களுக்குப் பிறகு தெரிவு செய்யப்பட்டதே, நம்முடைய மூவர்ண தேசியக் கொடி..!


இன்றைய நம்முடைய தேசியக் கொடியை வடிவமைத்தது யார் என்று கேட்டால், பலரும் தவறாக பிங்காலி வெங்கையா (PINGALI VENKAYYA:1878-1963) என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கொடியை வடிவமைத்தவர், ஒரு இஸ்லாமியப் பெண்மணி.! அவரின் பெயர் ஸுரியா தியாப்ஜி (SURAYYA BADRUDDIN TYABJI). அதற்கு யோசனை தந்த அவரது கணவரின் பெயர் பத்ருதீன் பைஸ் தியாப்ஜி ICS (BADRUDDIN FAIZ TYABJI-ICS) ஆவார்..!






இந்த 'பத்ருதீன் பைஸ் தியாப்ஜியாரெனில்.. இந்திய தேசிய   காங்கிரசை நிறுவிய ஐவரில் ஒருவரான பெரியவர் பாரிஸ்டர் பத்ருதீன் தியாப்ஜி அவர்களின் பேரன்..! (தாத்தாவிற்கும் பேரனுக்கும் ஒரே பெயர்..!)

பெரியவர் பாரிஸ்டர் பத்ருதீன் தியாப்ஜி: 1844 – 1906


காங்கிரசை நிறுவிய மற்ற நால்வர்,  ஆலன் அக்டேவியன் ஹியூம்வில்லியம் வெட்டர்பன்ஒமேஷ் சந்திர பானர்ஜிதாதாபாய் நவ்ரோஜி ஆகியோர்.  பெரியவர் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜியின் காலம் : 1844 – 1906. பத்ருதீன் பைஸ் தியாப்ஜியின் காலம்:1907-1995 அவரது  மனைவியான ஸுரியா தியாப்ஜியின் காலம்: 1919-1978.

கொடியின் வரலாறு இது தான்..!

பிப்ரவரி 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ (Clement Attlee:1883-1967) அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் (Mountbatten: 1900-1979) , பாகிஸ்தான்  இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தங்களது திட்டத்தை காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட்  15 இல் ஆட்சி மாற்றம் நிகழப்   போவதாகவும் தெரிவிக்கிறார்.

அத்துடன் வைஸ்ராய் மவுன்ட் பேட்டன்இந்தியா மற்றும்  பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு கொடிகளிலும்தங்களது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சின்னமான யூனியன் ஜாக்கை நீல நிற  பின்புலத்தில், சிகப்பு வெள்ளையில் ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறியை சேர்த்து, அதனை தத்தம் கொடிகளின் மூலையில் பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். (ஆஸ்திரேலியாநியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல! )


ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் சின்னம்.! 




ஆனால் அவரது  அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த இரு தரப்பினரும் தங்களுக்கென தனித்துவமான ஒரு கொடியை வடிவமைத்துக் கொள்ள முனைகின்றனர். அதில் முக்கியமாக ஆக்கிரமிப்பு சக்தியான பிரிட்டிஸாரின் 'யூனியன் ஜாக்' சின்னம் அறவே இருக்கக் கூடாதென்றும் முடிவு செய்கின்றனர்.!

ஜூன் 23, 1947 : இந்திய தரப்பில் கொடியை வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. அதன் தலைவராக Dr. ராஜேந்திர பிரசாத் அவர்களும், உறுப்பினர்களாக Dr.அபுல் கலாம் ஆசாத், மூதறிஞர் ராஜாஜி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, K. M.பணிக்கர், K. M.முன்ஷி, Dr.B. Rஅம்பேத்கர், S. N.குப்தா, பிராங்க் அந்தோணி, சர்தார் உஜ்ஜல் சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
(Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்டசுதந்திரம் வாங்க போராடிய இந்திய தேசிய காங்கிரஸ் கொடியையே நமது நாட்டின் தேசிய கொடியாக அங்கீகரிக்க வேண்டுமென்ற வாதம் பரவலாக வலுப்பெறுகிறது..!


பிங்காலி வெங்கையா வடிவமைத்த கொடிகளின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் வில்லை.! 


இந்நிலையில்ஆர்.எஸ்.எஸின் தலைவர் சாவர்கர் மும்பையில் இருந்துமுக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு அவசர தந்தி அடித்து,  கொடி முழுக்க காவி நிறத்தில் இருக்க வேண்டும் என்றும், வேறு எந்த சின்னம் பொறித்தாலும் அதில் இராட்டை சின்னம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்..!


வேறு சிலர்புலிச்சின்னம் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள்  ஏற்றிய கொடியைத் தான் தேசிய கொடியாக கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.



இப்படியாக அனைவரின் கருத்துக்களையும் நியமிக்கப்பட்ட அட்ஹாக் கமிட்டி அமைதியாக கேட்டு பரிசீலனை செய்து வந்தது.

இந்நிலையில் தான்கமிட்டி தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களை பத்ருதீன் பைஸ் தியாப்ஜி அவர்கள் சந்தித்துஅவரின் எண்ணப்படி தேசிய கொடி இருக்க வேண்டிய வடிவமைப்பை எடுத்து சொல்கிறார். தலைவருக்கு அது மிகவும் பிடித்துப் போய் விடவேஅதனை காந்திஜியிடம் தெரிவித்து ஒப்புதலை பெற்று வருமாறு அனுப்பி வைக்கிறார்.  காந்திஜியிடம்இராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்பட வேண்டியதற்கான காரணத்தை இப்படி விவரிக்கிறார்பத்ருதீன் பைஸ் தியாப்ஜி.

 கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட நம்முடைய இந்திய தேசிய கொடியினை இருபக்கத்தில் எங்கிருந்து பார்த்தாலும்இடம் வலம் மாறாமல் கொடி ஒரு போலவே தெரியவேண்டும். அதற்கு அசோக சக்கரம்தான் சரியாக இருக்கும். 'இராட்டை சின்னம்  அது போல அமையாது..!''



இதனை கூர்ந்து கேட்டு, ஆமோதித்த காந்திஜி அவர்கள்அவரையே உடன் ஒரு மாதிரி கொடியை தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு பணிக்கிறார்.

உடனே காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய் தன்னுடைய மனைவியான ஸுரியா தியாப்ஜியிடம் தந்து தன்னுடைய எண்ணப்படி தேசிய கொடியை வரைந்து தர சொல்கிறார், பத்ருதீன் பைஸ் தியாப்ஜி.


தேர்ந்த வண்ணத்தூரிகையாளரான ஸுரியா தியாப்ஜி அவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இன்றைக்கு நாம் கண்ணார கண்டு மகிழ்வது போன்ற ஒரு கொடியை அழகுற வரைந்து வர்ணம் தீட்டி கணவரிடம் தருகிறார்..!


அதனை கண்டு திருப்தியுற்று மெத்த பாராட்டிய காந்தியடிகள் அவர்கள், அந்தக் கொடிக்கு இசைவு தந்ததும்,1947 ஜூலை 17 அன்று அதற்காக அமைக்கப்பட்ட அட் ஹாக் கமிட்டியினரால் வெளியிடப் பட்டதே, இன்றைக்கு பட்டொளி வீசி பறக்கும் நம்முடைய இந்திய தேசியக் கொடி..!



நமது கொடியின் பரிணாமப் பயணம்..!

முகலாயர் காலத்து கொடி.



அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர் கொடி.!



1857இல் இறுதி மொகலாய மன்னர் பகதூர்ஷா ஜாபர், வெள்ளையருக்கெதிராக உயர்த்தி பிடித்த கொடி.!



1905இல் சகோதரி நிவேதிதா வடிவமைத்த கொடி.


1906 இல் கல்கத்தாவில் உருவான கொடி.
இந்தியாவின் சுதந்திர போர் இருபதாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் உக்கிரமடைந்த வேளையில்அதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினை சார்ந்த தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் தமக்கென ஒரு கொடியையும் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு கொடியாக இருக்க வேண்டும் என கருதி வங்காளத்தில் சுசிந்தர பிரசாத் போஸ் என்பவரால் வங்காளத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தில் இந்தியாவில் முதன்முதலாக மூவர்ணக்கொடி இடம் பெற்றதாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன. நடுவில் மட்டும் சீக்கியர்களுக்காக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது. இந்தக் கொடி 1906 ஆகஸ்ட் 1இல் Parsee Bagan Square (Green Park) இல் ஏற்றப் பட்டது.


இம்மூவர்ணக்கொடியில், அன்றைய 8 மாகாணங்களை குறிக்கும் வகையில் காவியில் நீள்வாக்காக 8 நட்சத்திரங்களும்மஞ்சளில் வங்காள மொழியில் வந்தே மாதரமும்பச்சையில் ஒரு சூரியன், சந்திரன் அதன் மீது ஒரு நட்சத்திரத்தோடு அமைந்திருந்தது.





1907ல் முதலாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில்பாரிசில்,மேடம் பிக்காய்ஜி காமா என்பவர் இந்தியாவின் மூவர்ணக்கொடியில் சில மாற்றங்களோடு உருவாக்கிய கொடியை ஜெர்மனியில் சோஷலிச மாநாட்டில் வெளியிட்டார். அந்தக் கொடிமுதலாம் உலகப்போருக்குப்பின் பெர்லின் கமிட்டி கொடி என அழைக்கப்பட்டது. 



இதே காலகட்டத்தில் தோன்றிய வேறு சில கொடிகள்..!




1917இல் திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் உருவாக்கிய கொடி.

Annie Besant and Tilak hoisted the flag during the Home Rule Movement with an addition in the left hand corner (the pole end), the stamp of the UnionJack.!


காந்தியின் வருகை:
மகாத்மா காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடியின் பல மாற்றங்களை கொண்டு வந்தார், 1921 ஆம் ஆண்டு ஒரு புதிய வடிவில் கொடி உருவாக்கப்பட்டது. அக்கொடியில் இந்தியாவின் சிறுபான்மையினரின் மத அடிப்படையில் வெள்ளை(கிறித்துவம்)பச்சை(இஸ்லாம்)காவி(இந்து) என வரிசையாகவும் நடுவில் இராட்டையும் இடம் பெற்றதுஅது அப்போதைய ஐயர்லாந்து நாட்டின் கொடியை ஒத்ததாக இருந்தது. இது பல அரசியல் காரணங்களால் இந்திய காங்கிரஸ் மற்றும் பெருவாரியான சுதந்திர போராட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா அவர்கள்.!


1931 இல் பிங்காலி வெங்கையா அவர்களால் மீண்டும் மற்றொரு கொடி உருவாக்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸால் பல்வேறு சுதந்திர போராட்டக் களங்களில் பயன்படுத்தப்பட்டது.



அன்றைக்கு காங்கிரசிலிருந்து பிரிந்த சிலர், 1939 இல் உருவாக்கி பயன்படுத்திய கொடி.!



மதம் சார்ந்த ஒற்றை நிறக்கொடி:

இதனிடையே ஆரஞ்சு (ஆக்கர்) நிறத்தில் இடது மூலை உச்சியில் ராட்டையுடன் மதரீதியாக ஒரு கொடி உருவாக்கப்பட்டது. அது இந்திய தேசிய காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது.!



இறுதியாக, பத்ருதீன் பைஸ் தியாப்ஜி ICS அவர்களின் யோசனையின் பேரில் ஸுரியா தியாப்ஜி அம்மையார் வடிவமைத்து அளித்த இன்றைய இந்திய தேசியத்தின் கொடி.!



ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)






No comments:

Post a Comment