Translate

Monday 28 December 2015

அல்லாஹுவை படைத்தது யார்.?







சகலத்தையும் படைத்தது அல்லாஹ் என்றால் அல்லாஹுவை படைத்தது யார்..?

இது வழக்கமாக நாத்திகர்கள் கேட்கும் கேள்வி..!!

1) இப்படிக் கேட்டால் ஆத்திகர்கள் பதிலில்லாமல் தடுமாறுவார்கள் என்பது அவர்களது எண்ணம். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது பகுத்தறிவற்ற, சிறுபிள்ளைத் தனமான கேள்வி.!

2) இஸ்லாத்தின் இறையியலை புரிந்தவர்கள் இவ்வாறு கேட்கவே மாட்டார்கள். பிரபஞ்சத்திற்கு அப்பாலுக்கும் அப்பாலுள்ள..பிரபஞ்ச நியதிகளையெல்லாம் படைத்த- அந்த நியதிகளுக்கும் அப்பாற்பட்ட ஆதியும் அந்தமுமில்லாத இறைவனை தான், முஸ்லிம்கள் நாங்கள் அல்லாஹ் என்று அழைக்கிறோம்.

பார்க்க: திருக்குர்ஆன் 2:255 / 112:1-4

3) அழகான ஒரு ஓவியத்தை பார்க்கிறோம். அந்த ஓவியம் தானாக உருவானதல்ல. அதனை திறமையானதொரு ஓவியன் தான் வரைந்திருக்க முடியும் என்று நம்புகிறோம். அந்த ஓவியனை சந்திக்கிறோம். அவனும் தானாக உருவானவனல்ல. மற்றெல்லோரையும் போல அவனுக்கும் பெற்றோர் இருப்பதை அறிந்துக் கொள்கிறோம். இப்படியாக ஒன்றுக்கு மற்றொன்று நதிமூலம், ரிஷிமூலம் என்று செல்வதை காண்கிறோம்.

உலகத்தை பார்க்கிறோம். அனுபவிக்கிறோம். அது தானாக உருவானதல்ல என்று மனிதப் பகுத்தறிவும், விஞ்ஞானமும் சொல்கிறது. அதன் காரண கர்த்தா, சகல வல்லமையுடன் ஒருவன் இருக்கிறான்..என்று பகுத்தறிவு தீர்மானிப்பது இயல்பு.

ஆனால் அதற்கும் மேலே அந்த காரண கர்த்தா எவ்வாறு தோன்றியிருக்க முடியுமென்பதை அறிய வேண்டுமானால், மற்ற உலகப் பொருட்களை எல்லாம் காண முடிவது போல, அவனையும் காண முடிந்தால் தானே அது சாத்தியப்படும்.? நமது புலனறிவுக்கு எட்டாத தூரத்தில் இருந்துக் கொண்டு அனைத்தையும் ஆட்டுவிப்பவனை எவ்வாறு துரும்பிலும் துரும்பான மனிதன் ஆராய முடியும்.?

4) உலகத்தை பார்க்கிறோம். அதன் நன்மை-தீமைகளை அனுபவிக்கிறோம். அதன் காரணமாக அதன் தன்மைகளை ஆராய்ந்தறியும் தேவை நமக்கிருக்கிறது. இயற்கை நியதிகளில் உழலும் நாம், அதற்கும் அப்பாற்ப்பட்ட இறைவனின் ஆதியந்தத்தை பற்றி அறிவதால் என்ன லாபம்..? அறியாததால் என்ன நட்டம்..? அல்லாஹ் ஆதியும் அந்தமுமில்லாதவன் என்ற செய்தி மனிதனுக்கு வந்தப் பிறகு மேற்கொண்டு அதனை குறித்து அறிந்துக் கொள்வதற்கான தேவை மனிதனுக்கு எங்கே இருக்கிறது.?

No comments:

Post a Comment