Translate

Tuesday 27 October 2015

மாமன்னர் ஒளரங்கஜேப்'பின் நெஞ்சை உருக்கும் உயில்..!


'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்'.
'என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.
உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கூறப்பட்ட நபர் யார் என்று தெரிகிறதா ? முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்த ஒளரங்கசீப் தான். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ( 1657 – 1707 ) ஆட்சியை புரிந்தவர்.,ஆனால் இறுதி வரை ஆடம்பரத்தை விரும்பாத அரசு கஜானா பணத்தை பயன்படுத்தாத ஒரே ஒரு முகலாய மன்னராக இருந்தார்..இவரை தான் பொய்களின் மூலம் மக்கள் மனங்களின் மோசமான மன்னராக சித்தரித்து வருகின்றனர் பார்ப்பனீய இயக்கங்கள்...
நன்றி: Nsa Khadir .


No comments:

Post a Comment