Translate

Wednesday 6 January 2016

முகம்மது பின் துக்ளக் பற்றின தகவல்கள்





டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார்.


1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் அரசாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை என்பதாலும் அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது.

அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.

உண்மையில் துக்ளக் கோமாளி அல்ல பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டான்லீலேன் பூல் அவர்களது வார்த்தைகளில் அவரது எண்ணங்களும் செயல்களும் முன்னோடித் தன்மை கொண்டவை. அவர் புத்திக் கூர்மை படைத்தவர் மற்றும் சிந்தனையாளர்.

அவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் அவர் வல்லுநராகத் திகழ்ந்தார்.

இந்தியக் கல்வியில் இலத்தினாகக் கருதப்பட்ட பாரசீக மொழியில் அவர் கவிதை எழுதி வந்தார்.

அவரது உரைநடையும் ஒப்பற்றது. மேடைப்பேச்சிலும் வல்லவர். 

தத்துவஞானி - குறிப்பாக கிரேக்க தத்துவ ஞானத்தை நன்கு கற்றிருந்தார். கூடவே தர்க்க இயலும் (லாஜிக்) கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஞானம் உள்ளவர்.

சமகாலத்துப் பேரறிஞர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சப்பட்டனர். 
அக்காலத்தில் பிரபலமாகி இருந்த கையெழுத்துக் (குர்ஆன் போன்ற நூல்களை அழகிய எழுத்துக்களில் நகல் எடுப்பது) கலையிலும் வல்லவர்.

அவரது அழகுணர்வு அவரது முத்திரையுடன் வெளியிடப்பட்ட நாணயங்களின் வாயிலாகப் புலனாகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் அக்காலத்திய கலாசாரத்தின் சிறப்பு அம்சங்களை அவரிடம் காணமுடிந்தது. அவரது மேதா விலாசத்துடன் அவரது நினைவாற்றலும் போற்றக்கூடியதே. 

அதே போல் அவரது நெஞ்சுறுதி - தளராத அயராத உறுதிபடைத்த உள்ளம் அவருக்கு இருந்தது.

தலைநகரை மாற்றியது, நாணயப் புழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தது - எல்லாமே நல்ல திட்டங்கள் தான்.

ஆனால் மக்கள் அவரது திட்டங்களை ஏற்கும் நிலையில் இருந்தார்களா என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. மாற்றங்களை மக்கள் எளிதாக ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்குப் புரியாமல் போய்விட்டது.

மத்திய கால இந்திய வரலாற்றில் ஏனைய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய விஷயத்தில் அவர் ஒரு முன்னோடி. அவரது ஆப்பிரிக்க நாட்டின் (மொராக்கோ) தூதரான பிரசித்தி பெற்ற இபன்பட்டூட்டா துக்ளக்கின் சபையை அலங்கரித்தார்.

தலைநகரை மாற்றியது பற்றிச் சில வார்த்தைகள் துக்ளக்கின் சாம்ராஜ்யம் வட திசையில் இமயமலையிலிருந்து தென் திசையில் மதுரை வரையிலும், மேற்குத் திசையில் பெஷாவரிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் பரவி இருந்தது.

ரயில்வேக்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலம் அது. மாட்டு வண்டிகளும் குதிரைகளும்தான் பயணச் சாதனங்கள். 
அத்தகைய சூழலில் புவியியல் அடிப்படையில் நாட்டுக்கு மையமான ஒரு இடத்தைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது புத்திக் கூர்மைக்கும் ராஜதந்திரத்திற்கும் ஒரு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும்.

நாம் முன்பே குறிப்பிட்டபடி மக்கள் அதை ஏற்கவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் மற்றொரு காரணம். அதனால் முயற்சி தோல்வியுற்றது.

இதில் கோமாளித்தனம் என்ன இருக்கிறது?

நன்றி: கீற்று.

மேலதிக வாசிப்பிற்கு..

No comments:

Post a Comment