Translate

Thursday 26 May 2016

பைபிளில் ஆபாசம் -1



இறை வேதம் என்பது அனைவரும் படித்து அதன் படி ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும். தந்தையும் மகளும், தாயும் மகனும், அண்ணணும் தங்கையும், ஒன்றாக அமர்ந்து படிக்க வெட்கப்படும் அளவுக்கு ஆபாசம் மலிந்துள்ள நூல் நிச்சயம் கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது. இதைச் சாதாரண அறிவு படைத்தவரும் நாகரீக உணர்வு உள்ளவரும் அறியலாம்.

(கத்தோலிக்க பைபிளிலும் புரோட்டஸ்டண்டு பைபிளிலும் பின்வரும் கதை இடம் பெற்றுள்ளது என்றாலும் எளிமையான தமிழ் நடையைக் கருதி இதை மட்டும் கத்தோலிக்க பைபிளில் இருந்து தருகிறோம்)

[][]



விபச்சார சகோதரிகள்…!

"ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; ‘மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னி கொங்கைகளைப் பிறர்தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர்ஓல்லா, தங்கையின் பெயர்ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர்புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும் ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன. ஓல்லா என்னுடையவளாய் இருந்தும்,விபச்சாரியானாள்; அசீரியர்ள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி,தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்;ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள். அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடல்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி,தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள். ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே-அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்- அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர்புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாலால் கொன்று போட்டனர்;அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.

அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும் தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள். இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும்,வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள். கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள். பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள். இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம்மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்;

அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர்உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்…!"

(எசக்கியேல் 23ஆம் அதிகாரம்)



-என்று இந்த வேசிகளின் ஆபாசக் கதையை வேதத்தில் கூற வேண்டிய அவசியம் என்ன? இதைத் தாயும் மகனும் அல்லது தந்தையும் மகளும் சேர்ந்து படிக்க இயலுமா? தேவாலயங்களில் கிறித்தவ மதகுருமார்கள் இதைப் படிக்கத் துணிவார்களா? கிறித்தவ நண்பர்களே! சிந்திக்க மாட்டீர்களா?



[][]



தந்தையும் குமாரத்திகளும்…?

"பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த பவயதானால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதாமய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.!"

(ஆதியாகமம் 19:31-37)



[][]



அண்ணனும் தங்கையும்….?

"தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர்தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார்வரும் போது,நீ, என் சகோதரியாகிய தாமார்வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன் கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர்அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார்வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார்தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி,அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்;பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல,அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார்தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில்,அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர்என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார்என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான்.!"

(இரண்டாம் சாமுவேல் 13:1-15)



[][]



மாமனாரும் மருமகளும்….?

"சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனையாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைப்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்கப் போகிற வழியிலே ஏனாயீம் ஊருக்கு வெளியே சந்தியில் உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அவள் வழியில் இருந்த இடமாய்த் திரும்பி, அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னோடு சேர இடம் கொடு என்றான். அதற்கு அவள்: நீர்என்னோடு சேருகிறதற்கு எனக்கு என்ன தருவீர்என்றாள். அதற்கு அவன், நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்று சொல்ல, அவள், நீர்அதை அனுப்பும் அளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவள்: உம் முத்திரை மோதிரமும் உமது தாழ்வடமும் உமது கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து அவளோடு சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பந்தரித்து, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து தன் கைப்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள்.!"

(ஆதியாகமம் 38:14-19)


[][]



மைத்துனனும் மைத்துனியும்….?

"அப்பொழுது யூதா ஓனானைப் பார்த்து, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து,அவளை மைத்துனச் சுதந்திரமாய்ப் படைத்து, உன் தமயனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனின் மனைவியைச் சேரும் போது தன் தமயனுக்குச் சந்ததி உண்டாகாதபடி தன் வித்தைத் தரையிலே விழ விட்டுக் கொடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வையில் தீயதாயிருந்ததினால் அவனையும் அவர்அழித்துப் போட்டார்.!"

(ஆதியாகமம் 38:8-10)



[][]



தாவீதும் அடுத்தவர் மனைவியும்….?

"ஒரு நாள் சாயங்காலம் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரமனை மாடியின் மேல் உலாவிக் கொண்டிருக்கும் போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை மாடியின் மேலிருந்து பார்த்தான். அந்த ஸ்திரீ மிகுந்த அழகுள்ளவள். தாவீது ஆள் அனுப்பி, அந்த ஸ்திரீ யார்என்று விசாரித்தான்; அவள் எலீயாமின் குமாரத்தியும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாளே என்றார்கள்.அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்த போது, அவளோடு சயனித்தான்; அவள் அப்போது தான் தன் தீட்டு நீங்கி, சுத்திகரித்துக் கொண்டிருந்தாள்; பின்பு அவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, தான் கர்ப்பவதி என்று தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பினாள். அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு என்று யோவாப்பினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடம் அனுப்பினான்……. தாவீது அவனைப் போர்க்களத்துக்கு அனுப்பிக் கொல்லச் செய்தான்.!"

(இரண்டாம் சாமுவேல் 11:2-18)


[][]



கிழவனும் குமரியும்…..?

"தாவீது ராஜா வயது முதிர்ந்தவனான்; போர்வைகளினால் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை. அப்பொழுது அவன் ஊழியர்அவனிடம் வந்து: கன்னிகையான ஒரு வாலிபப் பொண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவது நலம்; அவள் ராஜா சமூகத்தில் நின்று ராஜாவுக்குப் பணிவிடை செய்து,ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உமது மடியிலே படுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள். அப்படியே அவர்கள் இஸ்ரவேலின் நாடெங்கும் அழகான ஒரு வாலிபப் பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு,அவளை ராஜாவினிடம் கொண்டு வந்தார்கள்."

(முதலாம் ராஜாக்கள் 1:1-3)


[][]


இப்படி முறையற்ற ஆண், பெண் தொடர்புக் கதைகள் மட்டுமின்றி பெண்களைப் பச்சையாக வர்ணிக்கும் கவிதைகளும் கூட பைபிளில் காணப்படுகின்றன. இறை வேதத்தில் இத்தகைய வர்ணனைகள் இருக்கலாமா? அதன் அவசியம் என்ன? என்பதை கிறித்தவ நண்பர்களே நடுநிலையோடு சிந்தியுங்கள்!



[எ]        "மனோகரமான அன்பே! உனது அழகை என் சொல்ல! நீ எத்தனை இனிமை.!"

[எ]         "பனை போல் உயர்ந்தாய்; ஸ்தனங்கள் குலைகளாம்.!"

[எ]         "பனை மரத்திலேறி மடல்கள் பிடிப்பேன் என்றேன்.!"

[எ]         "உன் ஸ்தனங்கள் திராட்சைக் குலைகளைப் போன்றவை.!"

[எ]         "உன் சுவாச வாசனை கிச்சிலிப்பழம் போலும்.!"

[எ]         "உன் வாய் உத்தம திராட்சரச மரம்.!"

[எ]         "அந்த ரசம் என் வாயிலே மெதுவாயிறங்கும்.!"

[எ]         "உதட்டையும் பற்களையும் அது நனைக்கும்.!"

[எ]         "நான் உரியேன் காதலர்க்கு, அவர்ஆசை என் மேலாம்.!"

[எ]         "வாரும், என் காதலரே, வயல் வெளிக்குச் செல்வோம், கிராமங்களிலே ராத் தங்கிடுவோம்.!"

[எ]         "காலையில் எழுந்து திராட்சத்தோட்டம் சென்று, திராட்சை தளிர்த்ததா, அதன் பூ மலர்ந்ததா, மாதளை பூத்ததா என்று பார்த்திடுவோம்; அங்கே என் அன்பை உமக்கு அளித்திடுவேன்;"

[எ]         "காதற்பழங்கள் வாசனை வீசும்;"

[எ]         "புதியவும் பழையவும் அரிய பல்கனிகள் நமது வாசல்கள் அண்டையிலுண்டு என் காதலரே! உமக்கென்றே அவை வைத்தேன்.!"

[உன்னதப் பாட்டு 7:6-130]


[][]



[எ]         "ஆ! நீர் என் தாயின் பாலுண்ட என் சகோரனாயிருப்பின் எத்தனை நன்றாம்.!"


[எ]         "நான் உம்மை வெளியே கண்டு முத்தமிட்டாலும் எவரும் என்னை நிந்தனை செய்யார்.!"

[எ]         "என் தாய் வீட்டுக்கழைத்துப் போவேன், நீர் எனக்குப் போதிப்பீர், நீர்குடிப்பதற்கு நான் மணமுள்ள ரசமும், மாதளம்பழ ரசமும் தருவேன்.!"

[எ]         "அவர் இடக்கை என் தலைக்கணையாக அவர் வலக்கை என்னைத் தழுவிக் கொள்ளுமே.!"

[உன்னதப் பாட்டு 8:1-3]


[][]



[எ]         "நமக்கு ஓர் இளைய தங்கை உண்டு, அவளுக்கு இன்னும் ஸ்தனங்கள் இல்லை,"

[எ]         "அவளைப் பெண் பேச வரும் நாளிலே நாம் அவளுக்கு என்ன செய்வோம். அவள் மதிலாயின் வெள்ளி முடியதின் மேல் அமைப்போம்; வாசலாயின் அதற்குக் கேருரப் பலகை வைத்தடைப்போம். நான் மதிலே, என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவர் கண்களிலே கடாட்சம் பெறலானேன்.!"

(உன்னதப் பாட்டு 8:8-10)


[][]



[எ]         "உன் உதடு சிவப்பு நூல், வாயும் இனிமை,"

[எ]         "முக்காட்டினுள் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்."

[எ]         "உன் கழுத்து தாவீதின் கோபுரமே போலும்,"

[எ]         "ஆயுத சாலையாய்க் கட்டியது அக்கோபுரம்;"

[எ]         ''இவையெல்லாம் பராக்கிரமமுள்ளவர் கேடயங்கள்."

[எ]         "உனது இரு ஸ்தனங்கள் லிலி மலர் மேயும் இள வெளிமான் இரண்டாம், இரட்டை மான் குட்டிகளாம்."

[உன்னதப் பாட்டு 4:3-5]

[][]



[எ]         ''குலமகளே, பாதரட்சையிட்டு நீ நர்த்தனம் செய்கின்ற அழகை என் சொல்ல.!''

[எ]         ''உனது இடுப்பின் உருண்டை வடிவம் கை தேர்ந்தவன் செய்யும் கழுத்தணி போன்றதே.!''

[எ]         ''உன் மடி வட்ட கலசமாம், அதிலே இனிய ரசம் என்றும் வற்றாதாகும்;''

[எ]         ''உன் வயிறு லிலி சூழ் கோதுமை அம்பரம்.!''

[எ]         ''உன் ஸ்தனமிரண்டும் இள வெளி மானிரண்டாம்,''

[உன்னதப் பாட்டு 7:2-4]


[][]



உன்னதப்பாட்டு நெடுகிலும் இப்படிக் கொச்சையான வர்ணனைகள் ஏராளம்.! கிறித்தவ நண்பர்களே.! இந்தப் போதனைகள் மனிதனை நல்வழிப்படுத்துமா.? அவனைத் தவறான உறவுக்கு இழுத்துச் செல்லுமா.? தகாத முறையில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் அடைவதற்குத் தந்திரமான வழிகளைக் கற்றுத் தருவதாக இந்த வசனங்கள் இல்லையா.? இதன் பிறகுமா, பைபிளை இறை வேதம் என்கிறீர்கள்.?

இறை நேசன்


[][][]

No comments:

Post a Comment