Translate

Friday 6 November 2015

ஆர்.எஸ்.எஸ் எனும் தேச துரோக அமைப்பு.




நேருவின் தலைமையில் நடந்து முடிந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பரிபூரண சுதந்திரமே காங்கிரசின் குறிக்கோள். இந்த இலட்சியத்தை அடையும் வரை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாக கொண்டாடுவதுஎன்று தீர்மானிக்கப்பட்டது.

இதை வரவேற்று, எழுத்து மூலம் சுற்றறிக்கை அனுப்பும் வழக்கமில்லாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, "இந்திய தேசிய காங்கிரஸ் நமது சுதந்திரக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதில் நமக்கு மகிழ்ச்சி. சுதந்திரக் கோரிக்கை வலியுறுத்தும் எந்த அமைப்பாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்புத் தருவதே நமது கடமை..!" என்று சுற்றறிக்கை அனுப்பியதன் நோக்கம் தங்களுக்கும் தேச பக்தி இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே.

இந்திய தேசிய காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் 26.01.1930 அன்று சுதந்திர நாள்கொண்டாடப்பட்டது. மக்கள் ஊர்வலாகச் சென்று தேசியக்கொடியாகிய மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால், அன்று ஊர்வலம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய பக்வா ஜந்தாகொடிக்கு வணக்கம் செலுத்தியது.நாட்டு மக்கள் ஏற்றுகொண்ட மூவர்ணக்கொடியை ஆர்.எஸ்.எஸ் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்து ராஸ்டிர விடுதலையை வேண்டிய ஆர்.எஸ்.எஸ், அனைத்து சமயங்களை சார்ந்தவர்களும் விடுதலை பெறுவதை விரும்பவில்லை.
1930-ல் சுதந்திர நாளை கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் அதன் பின்பு நாடு விடுதலை பெறும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று காங்கிரஸ் இயக்கத்தை போன்று சுதந்திர நாளை கொண்டாடவில்லை.

காந்தியடிகளின் தலைமையில் 1942 ஆம் ஆண்டு வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தை காங்கிரஸ் தொடங்கியது. நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டத்தில் பங்கேற்று இளைஞர்கள் சிறை கூடங்களை நிரப்பிய நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்த மகத்தான சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவில்லை.

காந்திய போர்களத்தில் ஆர்.எஸ்.எஸ் தீரத்துடன் நின்று போராடவில்லை என்பதை விட, வெள்ளையருக்கு ஆதரவாக பிரிட்டிஷ் இராணுவத்தில் இளைஞர்களை சேர்த்துவிடும் மலினமான தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது என்பது தான் அதிர்ச்சி தரக்கூடிய வரலாற்று உண்மையாகும். டிரேவர் டிரய்பர்க் என்ற பத்திரிக்கையாளர் இந்த தேச விரோதச் செயலை “FOUR PHASE OF SUBVERSION" என்ற நூலில் தெளிவாக இதனை விளக்குகிறார்.

பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு வேண்டிய இராணுவ எந்திரங்களை விநியோகிக்கும் ஒப்பந்தங்களை பெற்றனர்.
1943 ஆம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, இருந்த உணவுப்பொருள்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அள்ளிக்கொண்டு போய் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு கொடுத்தனர்.
பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் துன்புற்றனர். ஆர்.எஸ்.எஸ் ஒப்பந்தகாரர்களிடம் ஏராளாமாக பணம் குவிந்தது. பிரிட்டிஷ் இராணுவ நிதிக்கு அவர்கள் பணத்தை அள்ளி வீசினர். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தாள்களுக்கும் அதனுடைய மற்ற பத்திரிக்கைகளுக்கும் பிரிட்டிஷ் அரசு பிரதியுபகாரமாக பேருதவிகள் புரிந்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் அவற்றிற்கு வழங்கப்பட்டன..!”

இந்த நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்கேற்றவர்கள் என்ற மாயை உடைத்து காட்டுகின்றன. கோல்வால்கரின் தலைமையில் இயங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷ் அரசுக்கு இசைவாகவே நடந்து கொண்டது.
1942 ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை கொழுந்து விட்டெரிந்த விடுதலை வேள்விலிருந்து ஆர்.எஸ்.எஸ் விலகியே நின்றது. நாக்பூரில் தலைமையகத்தை உருவாக்குவதிலும், பயிற்சி முகாம்களை நடத்துவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்களை உருவாக்குவதிலும் விரோதங்களை வளர்ப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் முனைப்பு காட்டி வந்தன.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சராக இருந்த  அத்வானியும் தேச விடுதலை போரில் தியாகத் தழும்புகளை ஏற்றவர்கள் இல்லை. 1941-ல் பதினைந்து வயதிலேயே, வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய தேசிய காங்கிரஸ் மாணவர் அமைப்பில் தான் இணைந்து செயற்பட்டதாக வாஜ்பாய் சொன்ன போதிலும் அவர் ஆற்றிய சுதந்திர போராட்ட சரித்திரச் சாதனைகள் என்று எதனையும் குறிப்பிடுவதற்கு இல்லை.

வெள்ளையனே வெளியேறுஇயக்கம் 1942- ல் நடைபெற்ற போது வாஜ்பாயும் அவருடைய நண்பர்களும் அதில் பங்கேற்றுச் சிறை சென்றனர். அவர்கள் மீது வன்முறை சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.  புரட்சியாளர்வாஜ்பாய் அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள அதுவரை சிறை பிடிக்கப்படாத தன்னுடைய நண்பர்களின் பெயர் பட்டியலை பிரிட்டிஷ் காவல் துறையிடம் கொடுத்து தானும் மன்னிப்பு கேட்டு விடுதலையான வீர வரலாற்றுக்குரியவர். கோல்வால்கர் தொடங்கி வாஜ்பாய் வரை இந்திய விடுதலை போரில் எந்த மகத்தான பங்களிப்பையும் தந்துவிடவில்லை.

அடிமை இருளில் சிக்கிக் கிடந்த இந்தியத் தாயை விடுவிப்பதற்கு எந்த முனைப்பையும் காட்டாத இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், தாங்கள் இந்திய தாயின் துயர் துடைக்க வந்த தேசபக்திப் பாசறைகள் என்று தங்களுடைய தோள்களுக்கு தாங்களே மாலை சூட்டி கொளவது போலித்தனத்தின் மகுடம்


நன்றி:தமிழருவி மணியன், Inneram.com, 


1 comment: